இதுதாண்டா மொசாத் : 03

Image may contain: 1 person, close-up

படம் :  அபு ஹாசன், எவ்வளவு வசீகரம் !

எகுத் ஒல்மார்ட் குழுவினர் அப்பார்ட்மெண்டினை நெருங்கும் நேரம், எங்கிருந்தோ வந்த இளைஞன் அவர்களிடம் விசாரிக்க ஆரம்பித்தான், கொஞ்ச நேரம் பொறுமையாக அவ்வை சன்முகி பாணியில் பதிலளித்து கொண்டிருந்தனர்.

அப்பொழுது யாரோ கொலை கொலை என கத்தும் சத்தம் கேட்டது, ஆம் போராளி தலைவர்கள், கருப்பு செப்டம்பர் சம்பவத்தில் தொடர்புடைய தலைவர்கள் செத்து கிடந்தனர்.

அவரசமாக வெளியேறிய ஒல்மார்ட் குழுவினர் சில குண்டுகளை வீசி புகையினை ஏற்படுத்தினர். மற்றவர்கள் எல்லாம் சுதாரித்தனர்

அதுவரை அங்கு ஹாய்,,டார்லிங், செல்லம் என பேசிகொண்டிருந்த மொசாதின் பெண் வேடமிட்டவர்களில் ஒருவர் நிலமையினை கண்டு தன் கைபையினை ஓங்கி தரையில் அடிக்க அங்கும் புகைமூட்டம்

மற்றவர்கள் எல்லோரும் சுதாரித்து ஓடினர்.

மற்றவர்கள் என்பது முன்பே மொசாத்தால் அனுப்பபட்டவர்கள், அதாவது எல்லா தாக்குதலிலும் மொசாத்தின் திட்டம் அப்படி. தகவல் ஒரு குழு தரும், இன்னொரு குழு முன்னே சென்று பதுங்கிகொள்ளும், கொல்லும் குழு இறுதியாக முகூர்த்த நேரத்திற்கு வந்து வாத்தியம் இசைக்கும்.

அந்த எல்லா மெம்பர்களும் (கிட்டதட்ட 10பேர் இருந்திருக்கலாம்) வீதிக்கு வர ,எங்கிருந்தோ வந்த கார்கள் அனைவரையும் அள்ளிபோட்டு, கும்ம்மிருட்டிலும் கடற்கரைக்கு சரியாக சென்றது.

அங்கிருந்த படகுகளில் ஏறி பத்திரமாக இஸ்ரேலை அடைந்தபொழுதுதான் லெபனானில் தெரிந்தது, கொல்லபட்டது பெரும் தலைகள் என.

இஸ்ரேலில் எகுத் ஓல்மர்ட் பெரும் ஹீரோவானார், வாழ்த்துக்கள் குவிந்தன, பின்னாளில் அரசியலில் அவர் பரிணமிக்க இதுதான் அடிப்படை சாதனை.

ஐரோப்பாவில் ஒருவரை கொல்வது எளிது, ஆனால் லெபானுக்குள் சென்று அசால்ட்டாக தூக்கினார்கள் அல்லவா? அங்குதான் மொசாத் குறித்த பயங்கர எச்சரிக்கை போராளிகளுக்கு வந்தது.

நிச்சயமாக இது பெரும் வெற்றி, துல்லியமாக நடந்த தாக்குதல்தான் ஆனால் மொசாத்தின் கூட்டம் மகிழ்ச்சியாக நடக்கவில்லை.

எல்லாம் சக்சஸ் எனிமும், மொசாத் தலைவர் அந்த கூட்டத்தில் சோகமாக கன்னத்தில் கை வைத்திருந்தார், மற்றவர்கள் கண்களில் அவமானம் பொங்கிற்று.

காரணம் கொல்லபட்டவர் அனைவரும் இரண்டாம் நிலை தளபதிகள், உச்ச தலைவர் ஒருவர் இருந்தார். அவர்தான் திட்டத்தின் சூத்திரதாரி.

அவர் சிக்காததுதான் மொசாத்திற்கு பெரும் அவமானமாக கருதபட்டது. அவர் அபு ஹாசன். சிரியா நாட்டவர், செல்லமாக சிகப்பு இளவரசர்.

காரணம் ஆள் அழகர் என்பது வேறு, வெறும் 30 வயதிலே இஸ்ரேலை அச்சுறுத்தினார். கிட்டதட்ட அமெரிக்காவிற்கு பின்லேடன் போல.

ஆனால் அபுஹாசன் வித்தியாசன்மானவர், லெபானானில் அமெரிக்கா செய்த பல நடவடிக்கைகளுக்கு அவர் ஆதரவளித்தார். அமெரிக்கா நம் நண்பன் ஆனால் இஸ்ரேல் எதிரி என்பது அவர் கொள்கை.

அவர் சிஐஏ உளவாளியாக டவுள் கேம் ஆடுகின்றார் என்ற தகவல் அந்தபொழுது, மொசாத் அதனை கேட்டு புன்னகைத்தது

அதற்கு வாய்ப்பும் இருந்தது, காரணம் உளவுதுறை உலகம் அப்படித்தான் யாரையும் நம்ப கூடாது என்பதே முதல்பாடம். அபு ஹாசன் அமெரிக்க கையாளாக இருக்க வாய்ப்பும் இருந்தது, இல்லாமலும் இருந்தது.

ஆனால் சிஐஏ லெபனானில் அன்று பெரும் நடவடிக்கைகளை செய்துகொண்டிருந்தது என்பது மட்டும் உண்மை, பின்பு ஹிஸ்புல்லா தலையெடுத்து அமெரிக்க உளவாளி, சிஐஏ அதிகாரி என தலைகளை எடுத்தபின்புதான் லெபனானில் அமெரிக்கா இல்லை.

அபு ஹாசனை பற்றி மைக்ரோ மீட்டர் தகவலும் மொசாத்திடம் இல்லை, அதுதான் அவர்கள் அவமானத்திற்கு காரணம்.

மொசாத் தீவிரமாக களமிறங்கியது, ஐரோப்பாவில் தொழில்முனைவோர் வேடத்தில் மொசாத் களமிறங்கியது.

தனி ஒருவன் படத்தில் யாரும் கேட்க கூடாத கேள்வி ஹீரோ எப்பொழுது தூங்குவார் என்பது. ஆனால் நிஜத்தில் அப்படி 24 மணிநேரமும் வெறியாக அலைந்து கொண்டிருக்கும் பொழுது மொசாத்தின் தலமையகத்திற்கு தகவல் வந்தது.

நார்வே நாட்டில் அபு ஹாசன் இருக்கிறார் உத்தரவு கொடுத்தால் மங்களம் பாடலாம், மொசாத் தாமதிக்குமா? உடனே கொடுத்தது உத்தரவு.

ஆனால் அபுகாசன் நார்வேயில் அல்ல, வேறு மறைவிடத்தில் இருந்தார்.

மாபெரும் சறுக்கலுக்கு தயாரானது மொசாத், ஆனைக்கும் அடி சறுக்கும் நேரமது..

தொடரும்…

 
 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s