பெட்ரோல் விலை மர்மம் என்ன ?

பெட்ரோல் விலை பீப்பாய்க்கு 140 டாலர் என உயர இருந்தபொழுதும் லிட்டர் 70க்கும் மேல், இப்பொழுது கச்சா எண்ணெய் விலை 50 டாலருக்கு இருக்கும்பொழுதும் அதே விலையா? மோடி அரசு மோசடி செய்கின்றது, அம்பானி கொள்ளை, அதானி கொள்ளை, மோடி நொள்ளை என பலர் சொல்லிகொண்டிருக்கின்றான்

விலைவாசி ஏற பல காரணம் இருந்தாலும், அது இறங்க பலர் ஒத்துழைப்பு அவசியம், இந்த பெட்ரோல் விஷயத்தில் என்ன நடக்கின்றது என்றால் இதுதான்

பெட்ரோல் விலை உச்சத்தில் இருந்தபொழுது சமாளித்தது மன்மோகன்சிங்கின் அசாத்திய திறமை. உண்மையில் அதுசாதனை, எப்படியோ திறமையாக சமாளித்தார்

ஆனால் மோடிக்கு வந்திருக்கும் சிக்கல் வேறுமாதிரியானது

அதாகபட்டது இந்த எண்ணெய் நிறுவணம் ஸ்டண்டர்டு ஆயில் என அழைக்கபட்ட காலத்தில் இருந்து அதில் இருப்பவர்களுக்கு கொள்ளை சம்பளம், இன்று இந்தியன் ஆயிலோ , பாரத் பெட்ரோலியமோ அதில் இருப்பவர்கள் சம்பளம் கொஞ்சமல்ல, கிட்டதட்ட அமெரிக்க ஐடி பணியாளருக்கு இருக்கும் சம்பளம்,

இன்னும் சலுகைகள், இன்னப்பிற படிகள், டீலர் கமிஷன் என ஏகபட்ட விஷயம் உண்டு

மத்திய அரசின் வரிதான் பெட்ரோல் விலையினை நிர்ணயிப்பது, அந்த வரிதான் அவர்களின் சம்பளத்தை நிர்னயிப்பது

இப்பொழுது பெட்ரோல் விலையிலை குறைக்க வரியினை குறைத்தால் என்னாகும்? அந்த பணியாளர்கள் சும்மா இருப்பார்களா?

பொங்குவார்கள், கொடிபிடிப்பார்கள், இப்பக்கம் டீலர் கொடிபிடிப்பார்கள், ஆறபோட்டு பேச இது சாதரண விஷயம் அல்ல. ஒரு நொடி பெட்ரோல் விநியோகம் நின்றாலும் தேசம் இயங்காது.

பெட்ரோல் விலை குறைந்ததால் நாங்கள் எங்கள் சம்பளத்தை குறைக்கின்றோம் என்றோ, எங்கள் கமிஷனை குறைக்கின்றோம் என்றோ டீலர்கள் சொல்லட்டும், நாளையே பெட்ரோல் விலை குறையும்.

இவர்கள் செய்வார்களா? யாராவது ஒருவர் செய்வார்களா?

மாட்டார்கள், அது நடக்க கூடிய விஷயமும் அல்ல. அப்படிபட்டவர்கள் காந்தி, வ உசி காலத்தோடு சரி.

இம்மாதிரி காரியங்களில் அரசு அதிரடியாக சம்பள குறைப்பு செய்தால் நாடு தாங்காது, மோடி அரசு மக்களை வறுமையில் தள்ளிவிட்டது, இதுவரை எல்லா அரசும் சம்பளத்தை கூட்டியது, முதன் முறையாக ஒரு அரசு சம்பளத்தை குறைக்கின்றது என பொங்குவார்கள்.

இதனை எல்லாம் அறிந்துதான் விலையினை குறைக்க முடியாமல் அரசு யோசிக்கின்றது.

மத்திய அரசினை நிலை இப்படி இருக்க, மாநில அரசு கடந்தமுறை பெட்ரோல் வரியினை உயர்த்தியது நினைவிருக்கின்றதா?

அதனை பற்றி எல்லாம் ஏன் இவர்கள் பேசபோகின்றார்கள்? பேசவே மாடடார்கள்.

யோசிக்க மாட்டார்கள், நாட்டுக்காக விட்டுகொடுக்கவும் மாட்டார்கள் ஆனால் கோஷமும் கேள்வியும் மட்டும் எழுப்புவார்கள்

எண்ணெய் நிறுவண ஊழியர் சம்பளத்தை குறைக்கமுடியுமா? இதோ இப்பொழுது தமிழிசையினை வேறு ஒரு பதவிக்கு அமர்த்தியாயிற்று, அவருக்கு சம்பளம் கொடுக்க வேண்டாமா? பின் எப்படி பெட்ரோல் விலை குறையும்?

லைக்கா தயாரிக்கும் படத்தினை இயக்க போகின்றார் சீமான்

லைக்கா தயாரிக்கும் படத்தினை இயக்க போகின்றார் சீமான்

லைக்கா நிறுவணம் ராஜபக்சேயுடன் நெருக்கமானது என முன்பு பல தகவல்களும் , சர்ச்சைகளும் வந்தது நினைவிருக்கலாம்.

லைக்கா சுபாஷ்கரனுக்கும் ராஜபக்சேக்கும் வியாபாரம் இருக்கலாம், ஆனால் சுபாஷ்கரன் ஒரு தமிழ்பிள்ளை என்பதற்காக அங்கிள் சைமன் இயக்க போகின்றார். எளிய பிள்ளைகளின் போராட்டம் இப்படித்தான் இருக்கும்.

சோனியா களத்தில் இல்லை, கலைஞரும் அமைதி அந்த நாசமாய் போன ராஜபக்சேவும் பதவியில் இல்லை. பின் அங்கிள் என்னத்தான் செய்யமுடியும்? யாரை திட்ட முடியும்?

ஆக தமிழகத்தில் நடந்துகொண்டிருந்த மாபெரும் புரட்சிக்கு சினிமா படபிடிப்பிற்காக கொஞ்சகாலம் விடுமுறை விடபட்டிருக்கின்றது.

ஆயிரம் பிரச்சினைகளுக்காக தமிழகத்தில் கத்திகொண்டிருந்த சீமான், இனி ஆயிரத்தி ஒன்றாவது பிரச்சினையாக ஆக்சன், கட் என கத்தபோகின்றார்.

சும்மாவே அந்த கத்து கத்தும் சீமான், நடிகரை எப்படியெல்லாம் கத்த வைப்பார்.

எதற்கும் அந்த நடிகர் தன் தொண்டையினை சில கோடிகளுக்கு இன்சூர் செய்து கொள்வது நல்லது.


அலறி அடித்து இருக்கைக்கு ஓடுவதன் பெயர் தற்காலிக வாபஸாம்

“அரசினை எச்சரிக்கின்றோம், அடுத்த தேர்தலில் நாங்கள் எங்களில் ஒருவரை நிறுத்தினால் கட்டாயம் வெல்வோம், அதன் பின் எங்களுக்கான உரிமையினை நாங்களே எடுப்போம்” : ஜேக்டோ ஜியோ

ஒஹோ.. நீங்களே நின்று நீங்களே வாக்களித்து நீங்களே வெல்வீர்களா? இப்படி ஒரு கனவா?

விவசாயி, மீணவன் அல்லது தொழிலாளி எல்லாம் இப்படி நிறுத்தினால் நீங்கள் தாங்குவீர்களா? அப்படி ஒரு பாமர தொழிலாளி வென்று வந்துவிட்டான் என்றால் உங்கள் நிலை என்னாகும் என்பதை கொஞ்சம் யோசித்துவிட்டு சவால் விடுங்கள்

(என்ன தைரியத்தில் இப்படி சவால் விடுகின்றார்கள்?, தேர்தலில் எல்லா வாக்குசாவடிகள், அலுவலகம், வோட்டு எண்ணுமிடம் என எல்லாவற்றிலும் நாம்தான் இருப்போம், கள்ளவோட்டு போட்டு, தில்லுமுல்லு செய்து ஜெயிக்கலாம் எனும் திட்டம் இருந்தாலும் இருக்கலாம்

தேர்தல் கமிஷன் இதனை கவனத்தில் கொள்வது நல்லது)


நாட்டின் பாதுகாப்பு குறித்து யாரும் அச்சம் கொள்ளத் தேவை இல்லை: நிர்மலா சீதாராமன்

நாட்டின் பாதுகாப்பினை குறித்து யாருக்கும் அச்சமில்லை, ஆனால் பாதுகாப்பு துறை அமைச்சர் குறித்துத்தான் அச்சமாக இருக்கின்றது.


ஐகோர்ட்டு எச்சரிக்கை எதிரொலி: அரசு ஊழியர்கள்- ஆசிரியர்கள் போராட்டம் தற்காலிகமாக வாபஸ்

அலறி அடித்து இருக்கைக்கு ஓடுவதன் பெயர் தற்காலிக வாபஸாம்.


 நீட் தேர்வு எழுதத் தயார் : தமிழிசை

எதற்கு எழுதவேண்டும், அது எழுதி என்னது ஆக போகின்றது?

இந்தம்மா இவ்வளவு அப்பாவியா? அவர்கள் சொன்னால் இவர் இப்படி கிளம்பிவிடுவாரா?

நாளை யாராவது எல்.கே.ஜி படிக்க தயரா என்றால் கூட யூனிபார்ம் போட்டு, இரட்டை சடை போட்டு, லாலிபாப் சப்பிகொண்டு , பின்னால் ஸ்கூல் பேக் போட்டுகொண்டு கிளம்பிவிடுவார் போல..


 

மகா விசித்திரமான மனிதர் சுப்பிரமணியன் சாமி

Image may contain: 1 person, close-upஇந்தியாவிற்கே, ஏன் உலகிற்கே மகா விசித்திரமான மனிதர் சுப்பிரமணியன் சாமி

முழுக்க தேவைபடும் அரசியல்வாதி என்று சொல்ல முடியாது, அதே நேரம் முழுக்க தேவையில்லாதவர் என்றும் சொல்லிவிட முடியாது.

சர்ச்சைகுரிய அரசியல்வாதிதான் ஆனால் சில விஷயங்களில் அவரின் அணுகுமுறை பாராட்டபட வேண்டியது.

புலிகளுக்கு எதிராக அவர் இன்றுவரை காட்டும் உறுதிக்கு வாழ்த்தலாம், 1991 முதல் 1996 வரையிலான ஜெயாவின் காட்டு தர்பாரை எதிர்த்த முதல் ஆள் சுப்பிரமணியன் சாமிதான்.

அதன் பின் அவர் தொடுத்த வழக்குத்தான் இன்று சசிகலாவினை உள்ளே தள்ளியிருக்கின்றது.

மதுரை அழகிரியினை எச்சரித்ததாகட்டும், ஸ்பெக்ட்ரம் விஷயங்களை வெளிகொண்டுவந்ததாகட்டும் சு.சாமி தனித்து நின்றார்.

கனிமொழி நீரா ராடியா டேப் விவகாரம் வரை அவர் வெளிகொண்டுவந்தது கொஞ்சம் அல்ல,

தமிழகத்தில் அரசியல் பிரளயங்களை நிகழ்த்தியவர்களில் சுப்பிரமணியன் சாமிக்கு எந்நாளும் இடம் உண்டு.

ராஜிவ் கொலை வழக்கிற்கு முன்பே புலிகளை கடுமையாக எச்சரித்தவர் சு.சாமி. ராஜிவ் கொலையில் சு.சாமிக்கு தொடர்பு என்பதெல்லாம் ஆதாரமில்லா விஷயங்கள். முன்பே சொன்னது போல புலிகள் எல்லோரையும் இழுத்துவிட போட்டிருந்த திட்டத்தின் பகுதி.

இப்படி பல விஷயங்களை சொன்னாலும் திடீரென சில பல்டியடித்து குழப்பி விடுவார், உதாரணம் தற்போதைய அவரின் சசிகலா ஆதரவு.

பழனிச்சாமியினை ஏன் அவர் சில நேரம் விமர்சிக்கின்றார் என்றால் சு.சாமி அப்படித்தான், அவருக்கு பதவியில் இருப்பவர்களை எப்பொழுதும் சீண்டியே பழக்கம். அவர்கள் உரசினால் அவர்களுக்கெதிரான ஆதாரங்களை தூக்கி வீசி திணறடிப்பார் என்பதால் பெரும்பாலும் மேல்மட்டங்கள் அவரை பகைக்காது

அதுதான் சு.சாமியின் பலம்

ஆனால் மோடி அரசினை அவர் இன்னும் விமர்சிக்காமல் இருப்பது ஆச்சரியம், இப்படி திடீரென பல்டிகளும் உண்டு.

அதாவது சு.சாமியினை முழுக்க நம்பவும் முடியாது, நம்பாமலும் இருக்க முடியாது. வினோதமானவர்.

காங்கிரசினை எதிர்த்து உருவான ஜனதாவினை,
, அது பலமிழந்து போனாலும் தனிமனிதனாக நடத்தி, பின் இன்று பாஜக பலம்வரும் வரை காத்திருந்து , பின் அதில் இணைந்துகொண்டு கடைசிவரை தன் நிலையில் நிற்கின்ற சாமியின் உறுதியும், சாதனையும் வாழ்த்துகுரியது.

முக்கியமான விஷயங்களை பேசுவாரே ஒழிய, சில்லறை விஷயங்களை பேசி சில விவகாரங்களை கிளப்பினார், பெரியாரை சீண்டினார் என்று எங்காவது கேட்டதுண்டா? இல்லை. அவ்வகையில் சு.சாமியினை பாராட்டலாம்

மதம், சாதி , இனம் இன்னபிற அரசியல் எல்லாம் அவரிடம் இல்லை என்பதும் இன்னொரு விஷயம், ஒரு வகையில் அவர் தேசியவாதி.

மிக நுட்பமான, தைரியமான அவரின் சில நடவடிக்கைகளுக்கு வாழ்த்து சொல்லித்தான் ஆகவேண்டும்

திமுக வலுவாக தொடுக்காத அதிமுக மீதான வழக்கினை அவர்தான் தொடுத்தார். அதிமுக கண்டுகொள்ளாத ஸ்பெக்ட்ரம் வழக்கினை அவர்தான் தோண்டினார்

திராவிட கட்சிகள் வளர்த்துவிட்ட புலிகளை முதன் முதலில் உயிருக்கு அஞ்சாமல் விமர்சித்தது அவர்தான்.

அதாவது தமிழ்நாட்டில் திமுகவும், அதிமுகவும் செய்ய தவறியதை அல்லது செய்ய விரும்பாததை எல்லாம் தைரியமாக அவர்தான் செய்தார்.

இப்படி சில காரியங்களை தைரியமாக செய்த சுப்பிரமணியன் சாமிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

 

இன்று புகழ்பெற்ற பொறியாளர் சர்.விஸ்வேசரய்யாவின் பிறந்தநாள்

Image may contain: 1 person, textஇன்று புகழ்பெற்ற பொறியாளர் சர்.விஸ்வேசரய்யாவின் பிறந்தநாள்.

இவரின் பிறந்த நாள்தான் இன்றுவரை இந்தியாவின் “இன்சினியர் தினம்”, வருங்காலத்தில் ராமேஸ்வரத்தில் ராமர்பாலம் கட்ட தொடங்கிய நாள் தெரிந்தால் இந்த நாள் மாற்றபடலாம்.

நல்லவேளையாக வால்மீகி அந்த நாள்,நட்சத்திரத்தினை குறித்துவைக்காமல் விட்டதால், இனி விஸ்வேசரயாவின் பிறந்தநாளுக்கு ஆபத்து இல்லை. ஆனால் இந்தியாவின் புகழ்மிக்க அணைகள்,தொழிற்சாலைகள் என சகலமும் கட்டியவர்.

காவேரி பிரச்சினைக்கு மிக அபாயகரமான திருப்பம் இவர் கொடுத்தது, அதாவது அது அருமையான திட்டம்தான், ஆனால் தமிழக போலி அரசியல்வாதிகளால் அது இன்று குப்புறகிடப்பது வேறுவிஷயம்.

பெரும் சிக்கல்கள் போராட்டம் என்றாலும் இன்னும் காவேரி சிக்கல் தீர்ந்தபாடில்லை , தமிழகத்திற்கு இது 
மாபெரும் அநீதி, பெரும் அக்கிரமம். ஆனால் இது ஒரு நாளில் தொடங்கிய பிரச்சினை அல்ல, வரலாறு பெரிது.

அகத்தியர் முனிவர் காலத்திலிருந்தே தமிழ்நாட்டை வளப்படுத்தியது காவேரி, சந்தேகமே இல்லாமல் சொல்லலாம், தென்னிந்தியாவின் மிக முக்கியமான நதி, அதுவும் தமிழகத்திற்கு 4000 ஆண்டுகளாக தாங்கி நிற்கும் ஆணிவேர்.

தமிழரும் கல்லணை என மிக அற்புதமான அமைப்பினை அமைத்து டெல்டா பகுதிகளை உருவாக்கினர், கல்லணை அமையாவிட்டால் தஞ்சாவூரும் இல்லை (மீத்தேனுக்கு பிரச்சினையே இல்லை), அது ராமநாதபுரத்தின் தொடர்ச்சியாக வறண்ட பகுதியாய் அமைந்திருக்கும், அப்பக்கம் வீராணம் ஏரியுமில்லை (ஊழலுமில்லை),

மொத்ததில் கல்லணை அமையாவிட்டால் டெல்டா ஒரு நேர்கோடு இருந்திருக்கும்.

இவ்வாறாக தமிழகத்தை செழிக்க செய்த காவேரியில் முதல் பிரச்சினை சாளுக்கிய மன்னர்கள் வடிவில் வந்தது, அதுவும் சோழர்களுக்கும் அவர்களுக்கும் வந்த தகறாறு, ஆனாலும் சோழர்கள் உச்சத்தில் இருந்த நேரம், சாளுக்கியரை அடக்கி காவேரியை மீட்டார்கள்.

அதன்பின் 700 வருடங்களுக்கு பிரச்சினை இல்லை, அங்கு விஜயநகரபேரரசு உதயமாகி, மொகலாயரையே விரட்டும் அளவிற்கு வலுவானபோதும் காவேரியில் கைவைக்கவில்லை, காரணம் எந்த அவசியமும் இல்லை.

பின்னாளில் நாயக்கர் தமிழகம் வர அதில் பிரச்சினை வர வாய்ப்பே இல்லாமல் ஆயிற்று. வைகை கரை,காவேரிகரை எல்லாமே நாயகர்கள்.மைசூரிலும் நாயக்கர்கள் ஒரு பிரச்சினையும் இல்லை.

கவனியுங்கள், மைசூரிலிருந்து வந்து மதுரையிலும், தஞ்சாவூரிலும் சம்மணம் போட்டு அமர்ந்துகொண்டார்கள் என்றால், நாம் இங்கு உருவாக்கி வைத்திருந்த நன்செய் நிலங்கள் அப்படி, மைசூர் பக்கம் அன்றெல்லாம் ஒன்றுமில்லை.

மதுரை நாயக்கருக்கும், தஞ்சாவூர் நாயக்கருக்கும் வாரிசுசண்டை ஆரம்பித்தபொழுது, தஞ்சாவூர் நாயக்கர்களுக்கு ஆதரவாய் சிவசேனை வந்தது, சிவசேனா என்பது பால்தாக்கரே அல்ல, மாமன்னன் சிவாஜியின் உறவினர் படை. காரணம் அவர்கள் வராவிட்டால் பிஜப்பூர் சுல்தான் தஞ்சாவூரில் அமர்ந்திருப்பார்.

இப்படியாக மராட்டியர் தஞ்சையை பிடித்ததும் , கொஞ்சம் உரசல் உருவாயிற்று. அது பின்னாளில் மைசூர் சமஸ்தானம் (அது திண்டுக்கல் வரை இருந்தது) சோழமண்டல மராட்டியர் பிரச்சினை என உருவாயிற்று.

விளைந்தால் பிரச்சினை இல்லை, ஆனால் வெள்ளத்தால் அழிந்தால் அதற்கு மைசூர் அரசு தண்ணீரை அழிப்பதற்காகவே அனுப்புகின்றது என சில சர்ச்சைகள் எழுந்தன, ஆடிமழையில் அந்த தண்ணீரை எங்கு வைப்பது என அவர்களுக்கும் தெரியவில்லை, இவ்வளவிற்கும் கொஞ்சம் விவசாயம் தொடங்கி மைசூர் சமஸ்தானம் பொருளாதாரம் உயர்ந்த நேரம்.

எப்படியோ இனி தஞ்சையில் வெள்ளத்தில் பயிர்கள் அழிந்தால் அதற்கு மைசூர் சமஸ்தானம் பொறுப்பு என ஒரு கருத்து உருவானது, மைசூர் மன்னர் நஷ்டஈடு தரவேண்டும் என்றெல்லாம் குரல்கள் வந்தன, அக்கால மைசூர் உடையார்களும் சில நேரங்களில் நெல்லாகவோ, விதை நெல்லாகவோ,பணமாகவோ கொடுக்க ஆரம்பித்தார்கள்.
இந்நிலையில் ஆங்கிலேயர் தஞ்சையை ஆளுகைக்குள் கொண்டுவந்தனர், மைசூர் சமஸ்தானம் அடங்க மறுத்தது, பழைய பிரச்சினையை பெரும் பிரச்சினையாக உருவாக்கினர் ஆங்கிலேயர்.

தஞ்சாவூரில் வெள்ளத்திற்கு மைசூர் அரசு நஷ்ட ஈடுகொடுக்கவேண்டும் என வாங்கியே கொடுத்தனர், தஞ்சை மக்களுக்கும் பொம்மை சாம்போஜிக்கும் ஏக மகிழ்ச்சி, விட்டால் பிரகதீஸ்வரர் ஆலயம் பக்கம் வெள்ளையருக்க்கு ஆலயமே எழுப்பியிருப்பர், ஏனோ செய்யவில்லை.

ஹைதர் அலி இதனை கண்டித்தார், திப்பு சுல்தான் இந்த இழப்பீட்டை கொடுக்க மறுத்தார். காவேரி பொதுவான நதி, வெள்ளம் என்பதை நாங்கள் என்ன செய்யமுடியும்? என மறுத்தார். ஆனாலும் திப்பு நஷட ஈடு கொடுத்தே ஆகவேண்டும் என பொங்கியபொழுது ஆத்திரபட்ட திப்பு படையினர் சில இடங்களில் தமிழக மதகுகளை சேதபடுத்தினர்.

அது இந்துகிராமங்களை திப்பு தாக்குகின்றார் என வெள்ளையரால் விபரீதமாக பரப்பபட்டன, திப்பு சுல்தான் ஒரு பெருந்தன்மையான மாவீரன், மைசூரின் ஒப்பற்ற புலி. வரலாற்று பெருந்தகையாளன்.

இப்படி இல்லாத பொய் எல்லாம் கூறி திப்புவை இந்து எதிரியாக்கி தனிமையாக்கி அழித்தனர் பிரிட்டிசார், பின் மைசூருக்கு உடையார் அரசன் ஆனார். யார் ஆண்டால் என்ன?, பின்புலம் பிரிட்டிசார்.

அப்பொழுதும் தஞ்சையில் வெள்ளமென்றால் மைசூர் பணம் கொடுக்கவேண்டும், இது மைசூர் மன்னருக்கு பெரும் தலைவலியாயிற்று.

“இது காவேரி ஆறு, அதுவும் 4 ஆறுகள் கூட சேர்ந்து தமிழ்கம் செல்கிறது, அங்கும் பவானி,அமராவதி,நொய்யல் என எல்லாம் கலந்துதான் திருச்சி வருகின்றது, அங்கு அழிவென்றால் நான் பணம் கொடுக்கவேண்டுமாம்?

முப்போகம் விளைந்தால் நமக்கா தருகின்றார்கள்?”
செயலற்ற நிலையில் கேட்டதை கொடுத்துவிட்டு அந்தபுரத்தில் அழுதுகொண்டிருந்த மன்னருக்கு, 1895ல் ஒரு இளைஞன் வேலைக்கு வந்தான்.

அப்பொழுதே சிவில் இன்சினியரிங் முடித்திருந்த பிராமண இளைஞன், பெரும் அறிவாளி, கட்டடகலை நிபுணர், எல்லாவற்றிற்கும் மேல் பெரும் நிர்வாகி.

“தனது வேலையில் கருத்தாக இருப்பவன், அரசனோடு பந்திக்கு அமர்வான்” என்பது யூதமொழி, அவனும் அப்படித்தான் விரைவில் திவான் ஆனார்.

மைசூர் சமஸ்தானம் தஞ்சாவூருக்கு வெள்ளநிவாரண நிதிகொடுத்து அழுதுகொண்டிருக்கும் பொழுது அவன் நிதானமாக திட்டமிட்டான்.

வீணாக செல்லும் நீருக்கு தஞ்சை மக்களுக்கு கப்பம் கட்டுவதை விட, நாமே அணைகட்டி விவசாயத்தை பெருக்கினால் என்ன?, அதுவரை அப்படி ஒரு திட்டம் மைசூருக்கு இல்லை, அவரை வினோதமான பார்த்தமன்னன் கேட்டார்? அது சாத்தியமா?

எனக்கு சாத்தியம் இல்லை என்றால் எவனுக்கும் சாத்தியமில்லை என்றான் அந்த இளைஞன்.

காவேரி பெரும் ஆறு ஆனால் அதோடு ஹேமாவதி,சிம்சா,அக்ராவதி,கபினி என பல சிற்றாறுகள் (நம்பியாறு போல) கலந்துதான் வெள்ளம் தமிழகம் செல்லும், முதலில் நாம் காவேரி குறுக்கே அணைகட்டினால் பாதிவெள்ளம் குறையும், அதாவது நஷ்டஈடு குறையும்.

அற்புதமான யோசனை சொன்ன இளைஞனை நம்பிக்கையாய் பார்த்தது மைசூர், அந்த இளைஞர் விஸ்வேசுவர அய்யர்.

கன்னடத்தின் அப்துல்கலாம் அல்லது லி குவான் யூ அவரின் அறிவுகூர்மையும், செயல்திறனும் அப்படி.

அற்புதமாக கட்டிகொடுத்த அணை கிருஷ்ணராஜ சாகர், மீதி நீர் தஞ்சை மக்களை அழிக்காமல் இருக்க வெள்ளையர் கட்டியது மேட்டூர் அணை.

அணைகட்டிவிட்டால் போதுமா? அந்த நீரை எப்படி விவசாயமாக்குவது, எப்படி தடுப்பணை கட்டுவது, உற்பத்தியை பெருக்குவது எப்படி என பெரும் அகராதி வகுத்தார் விஸ்வேசரையர்.

அவர் கொடுத்த அடித்தளத்தில்தான் மைசூர் விவசாயத்தில் செழித்தது, கர்நாடக பொன்னி, மைசூர் பருப்பு , இன்று தமிழகத்தை தாங்கும் காய்கறிகள் என கன்னடம் கொட்டி முழக்குகின்றது என்றால் அதற்கு காரணம் அவர்தான்.
முத்துபடத்தில் ரஜினி குதிரைவண்டியோடு பசுமைவயல்கள் வழியே மணிக்கணக்கில் செல்வாரல்லவா? அந்த பசும் வயல்கள் அவரின் உருவாக்கம்.

இன்று கன்னடத்தில் சிறிதும் பெரிதுமாக காணப்படும் 28 அணைகளுக்கும் அவரே முன்னோடி. கட்டடகலை அவருக்கு கைவந்தது,

கன்னட அடையாளமான விதான சவுதா, இன்னும் பல ஆலைகள் எல்லாம அவரின் டிசைன்.

அன்று மிகசிறிய ஊரான பெங்களூர் இன்று உலகின் முன்னனி நகரம் என்றால் அதற்கு அய்யரும் ஒரு காரணம். இந்தியாவின் ஒப்பற்ற இன்சினியரான அவரின் பிறந்தநாள்தான் இந்தியாவில் “இஞ்சினியர் தினம்”

இந்தியாவின் மிக சிறந்த கட்டட பொறியாளரில் அவரும் ஒருவர், ஐதரபாத் வெள்ளதடுப்பிற்கு அவர் போட்டு கொடுத்த திட்டம் இன்றும் பயன்படுகின்றது

பெரும் தொழிற்சாலைகளுக்கான நிர்மாணத்தை எல்லாம் அவர்தான் இந்தியாவில் செய்தார். மறக்க முடியா மாமனிதர் அந்த விஸ்வேசரய்யர்.

கிருஷ்ணராஜ சாகருக்கு முன்பே பிரிட்டிசாரோடு சேர்ந்து நிறைய அணைகட்டிய சாதனைகளை அவர் செய்திருக்கின்றார். நவீன‌ இந்திய அணைகட்டுகளின் பிதா மகன் அவர்.

அந்த அறிவாளியினை மிக சரியாக பயன்படுத்திகொண்டது கர்நாடகம், பின்னாளைய கன்னட எழுச்சிக்கு அவர் மிக பெரும் அடித்தளம் அமைத்தும் கொடுத்தார்.

தமிழகத்திற்கு அப்படி யாரும் கிடைக்காமலே போனதுதான் பெரும் சோகம், அதுவும் பின்னாளில் அய்யர்களுக்கு ஆகாத மாநிலமாகவே அறியபட்டது தமிழகம், பின் எங்கிருந்து வருவார்கள்?

ஆனால் அப்படி ஒரு அறிவாளி வராமல் இனி உருப்படாது தமிழகம்.

பொறியியல் கல்லூரி நிறைந்திருக்கும் தமிழகத்தில் இப்படி ஒரு தினம் இருப்பது தெரியுமா? கொண்டாடுவார்களா என்றால் கொண்டாட மாட்டார்கள்.

அதற்கு ஆயிரம் காரணங்கள். எப்படியாயினும் விஸ்வேஸரய்யர் இந்திய வரலாற்றில் முக்கியமான ஒருவர் என்பதில் சந்தேகமேயில்லை.

 

ஜாக்டோ ஜியோ அமைப்புகள் மீது அரசு மிக கடுமை காட்ட வேண்டிய நேரமிது

மிக பெரும் தொகையில் சம்பளம், வேலை நேரம் என்பது ஒரு நாளில் 5 மணிநேரமே இருக்கும், வாரம் இருநாள் விடுமுறை மற்றும் அரசு விடுமுறை.

இன்னும் சம்பளத்தோடு கூடிய ஏகபட்ட விடுமுறைகள் அவர்கள் எடுத்துகொள்ளலாம்.

காலாண்டு , அரையாண்டு, மேமாதம் என சம்பளத்தோடு கூடிய விடுமுறை. மற்ற அலுவலகர்கள் யாருக்காவது இப்படி உண்டா?

இவர்களுக்கு மட்டும் அந்த பெரும் சலுகை உண்டு.

சம்பளம் போக அந்த படி இந்த படி என பல சலுகைகள், இது போக தேர்வினை கண்காணிக்க தனி சம்பளம், விடைத்தாளை திருத்த தனி சம்ப்பளம்

தேர்வும் , விடைத்தாள் திருத்தலும் அவர்கள் பணிகளில் ஒன்று, அதற்கு ஏன் கூடுதல் சம்பளம்?

தேர்தல் காலங்களில் ஸ்பெஷல் சம்பளம், ஏன் அன்று பாடம் நடத்தவில்லை, வாங்கும் சம்பளத்திற்கு அரசுக்கு இன்னொரு பணி செய்கின்றோம் என என்றாவது நினைத்தார்களா? சுத்தமாக இல்லை.

இப்படியாக மிக மிக சுகமாக பணியாற்றும் அந்த ஆசிரியர்கள்தான் கொடிபிடித்து போராடுகின்றார்களாம். இன்னும் என்னவெல்லாமோ மிரட்டுகின்றார்கள்.

உண்மையில் இவர்களுக்கு தகுதிக்கு மீறி கொடுத்து கெடுத்து வைத்திருக்கின்றது அரசு.

சம்பளம் போதவில்லை என்றால் செல்லலாம், அதில் நாலில் ஒருபங்கு பெற்று மாங்கு மாங்காக உழைக்க பட்டதாரிகள் எல்லாம் வரிசையில் நிற்கும் மாநிலம் இது.

அங்கு இருந்துகொண்டு என்னை வேலையில் வைத்த அரசே எனக்கு இதெல்லாம் கொடு என மிரட்டுவது எப்படி நியாயம் என தெரியவில்லை

சொன்னால் உனக்கு என்ன தெரியும் வாழ்வில் செலவுகள் அப்படி, இப்படி என பொங்குகின்றார்கள், சிலர் அது எம் உரிமை என்று வேறு உரிமை குரல் எழுப்புகின்றார்கள்

ஏதோ ஆசிரியரின் குழந்தைகள் கற்க வழியின்றி இருப்பது போலவும், அவர்கள் வீட்டு அடுப்பில் பூனை தூங்குவது போலவும் பல ஆதரவு குரல்கள்.

அரசு மிக கடுமை காட்ட வேண்டிய நேரமிது.

அரசு சிக்கலில் இருக்கின்றது என சொல்லி சமாளிக்கலாம், ஆனால் எம்.எல்.ஏக்களுக்கு வெட்டியாக சம்பளத்தை ஏன் அதிகரிக்க வேண்டும்?

அதுதான் இந்த சிக்கலுக்கு முதல் காரணம்.

ஆக அரசை மிரட்டும் எம்.எல்.ஏக்களுக்கும் இந்த ஆசிரியர்களுக்கும் வித்தியாசமேயில்லை

எது எப்படி போனால் என்ன? மாநிலம் நாசமானால் என்ன? நமக்கு கொட்டிகொண்டே இருக்கவேண்டும் என்ற எண்ணம் வளருமானால் தமிழகம் நிம்மதியாய் இராது, பொறுப்பு எல்லோருக்கும் வேண்டும்

அவ்வளவு பொறுப்பு இருந்தால் இந்த அரசு எப்படி வந்திருக்கும்? இன்னும் எப்படி நீடிக்கும்?

எனினும் இந்த ஜாக்டோ ஜியோ அமைப்புகள் மீது மிக கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும், இவர்கள் எழுப்பும் கூக்குரல் நிச்சயம் அநியாயமானது, கண்டிக்கபட வேண்டியது.

 
 
 

இன்று திலீபன் உண்ணாவிரதம் தொடங்கிய நாள்.

Image may contain: 3 people, people sittingஇன்று திலீபன் என்பவர் இலங்கையில் அன்று உண்ணாவிரதம் தொடங்கிய நாள்.

அதனால் ஆரம்பித்தாயிற்று அங்கிள் கோஷ்டி. இந்தியா திலீபனை காப்பாற்ற தவறியது, இந்திய துரோகம், இந்தியா ஒழிக. ஹேய்ய்ய் இன்னபிற ஆட்டங்கள்.

திலீபனை காப்பாற்ற வாய்ப்பு இருந்தது, அவன் கேட்டது உடனே நிறைவேற்றபடும் கோரிக்கை அல்ல. அதற்கு சில அவகாசம் வேண்டும், அவனை உண்ணாவிரதத்தை கைவிடுங்கள் என்ற இந்தியாவின் வேண்டுகோரிக்கையினை புலிகள் கண்டுகொள்ளவே இல்லை

அன்று திலீபனின் சாவு அவர்களுக்கு வேண்டியிருந்தது, அதனை வைத்து மக்களை உணர்ச்சியூட்டும் அவசியம் இருந்தது, அதனால் அப்படி நகர்த்தினார்கள்.

இதோ வேலூர் சிறையிலும் முருகன் உண்ணாவிரதம் இருந்தார், மூன்றாம் நாளே நமது காவல்துறை தூக்கிபோட்டு மருத்துகொடுத்து காப்பாற்றவில்லையா? புலிகள் இதனை செய்திருக்கலாம்

காந்திய வழியிலோ, அஹிம்சையிலோ கொஞ்சமும் நம்பிக்கை இல்லாதவர்கள் புலிகள், பின்பு ஏன் இப்படியான காரியங்கள்

அப்படி காந்தி வழி என்றால், காந்தி தானே உண்ணாவிரதம் இருந்தார். தன் உயிரை கொடுக்க துணிந்தார். எவனையோ பிடித்து உண்ணாவிரதம் இருக்க வைத்துவிட்டு வெள்ளையனிடம் அவர் பேரம் பேசினாரா?

ஆனால் பிரபாகரன் அதனைத்தான் செய்தார், கேட்டால் காந்திவழி போராட்டமாம்.

தீலிபனை காக்கும் பொறுப்பு இந்தியாவினை விட புலிகளுக்கு இருந்தது, பிரபாகரன் ஒரு உத்தரவிட்டிருந்தால் திலீபன் எழும்பியிருப்பான்

ஆனால் அவனே தன்னை காப்பாற்ற கூடாது என எழுதியிருகின்றான் என சொல்லி, வந்த மருத்துவரை எல்லாம் திருப்பி அனுப்பினர் புலிகள்

திலீபனுக்கு நடந்தது திட்டமிட்ட கொலை, இந்தியாவிற்கு எதிராக அன்று ஏவப்பட்ட ஒரு தற்கொலைப் படை அவன்

இதே இலங்கையில் அன்று பல்கலைகழகத்தில் சிங்களனை எதிர்த்து உண்ணாவிரதம் இருந்தனர் சில மாணவிகள், இதெல்லாம் போராட்டம் அல்ல துப்பாக்கி தூக்குவதுதான் போராட்டம் என சொல்லி அவர்களை தூக்கி வந்து காப்பாற்றினர் புலிகள்

அவர்களில் ஒருவர்தான் பிரபாகரன் மனைவி மதிவதனி

அதாவது யார் உண்ணாவிரதம் இருக்கவேண்டும் , யார் சாக வேண்டும் என்பது பிரபாகரன் கையில்தான் இருந்திருக்கின்றது

அவர் நினைத்தால் திலீபனை காத்திருக்கலாம், ஆனால் சொன்னது என்ன?

” நீ முன்னால் போ, நான் பின்னால் வருகின்றேன்” என அவன் செத்தே தீரவேண்டும் என்ற முடிவோடு அனுப்பினார்

அதன்பின் கிட்டதட்ட 1 லட்சம் மக்களோடு பிரபாகரன் 22 வருடம் கழித்து திலீபன் சென்ற இடம் சென்றார், ஈழ தமிழருக்கு ஒரு தீர்வும் பெற்று தராமலே சென்றார்.

இதனை எல்லாம் மறைத்துவிட்டு சீமானின் தும்பிகள் தியாக தீபம் திலீபன் என சொல்லிகொண்டிருக்கின்றன‌

விகடன் போன்ற பத்திரிகையும் உண்ணா நோன்பின் மகத்துவத்தை உலகிற்கு சொன்னா திலீபன் என படுபயங்கர சதியினை சொல்கின்றன, பொறுப்பு என்பது கொஞ்சமும் இல்லை.

விகடனின் இந்த கபடம் பத்திரிகை துரோகம். தன் சொந்த நாட்டினை எதிர்த்து எங்கோ மோசடியாக உண்ணாவிரதம் என கொல்லபட்ட அந்நியநாட்டுக்காரன் ஒருவனை தியாகி என இந்திய பத்திரிகை எழுதுவதுதான் தேச துரோகம்.

பக்தாள் எல்லாம் இம்மாதிரியான தேசதுரோகங்களை எல்லாம் கண்டுகொள்ளவே மாட்டார்கள், அதுவும் “அவாள்” பத்திரிகை என்றால் ம்ஹூம்.