ஒரு தமிழனுக்கு சிங்களன் குரல் கொடுக்கின்றான்

Image may contain: 1 person, smilingஇலங்கையில் தமிழனுக்கு ஒரு அநீதி நடந்திருக்கின்றது, இங்கு தட்டிகேட்பார் யாருமில்லை

அதாவது பந்துவீச்சில் சாதனை படைத்த தமிழன் முத்தையா முரளீதரன். அவர் விளையாண்ட காலம் எல்லாம் அவர் பந்து எதிரிக்கு சிம்ம சொப்பணம். இலங்கைக்கு உலக‌ கோப்பை பெற்று தந்ததில் முரளிதரனின் பங்கு அதிகம்.

இன்றும் அதிக விக்கெட்டுகள் வீசிய சாதனை அவர் வசமே இருக்கின்றது. அவரை முடக்கி ஷேன் வார்ணேயினை உயர்த்திவிடும் எல்லா ஆஸ்திரேலிய திட்டங்களும் தவிடுபொடியாயின‌

இந்த நூற்றாண்டின் மிக சிறந்த கிரிக்கெட்டர்களில் முரளிதரனும் ஒருவர் என்பதால் இலங்கை அரசு ஒரு கிரிக்கெட் மைதானத்திற்கு அவர் பெயரை அமைத்து கவுரவபடுத்தியது.

இப்பொழுது அந்த பெயரை நீக்கிவிட்டார்கள், சர்ச்சை வெடிக்கின்றது, ஆனாலும் வடக்கில் பெரும் சத்தமில்லை, இங்கு அங்கிள் சைமன் சத்தமும் இல்லை

காரணம் வெரி சிம்பிள்

ஒடுக்கபட்ட, தாழ்த்தபட்ட இந்தியா வம்சாவழியான மலையக தமிழரின் வாரிசு முரளிதரன். அதனால்தான் சிங்களன் அவரை கொண்டாடியது போல யாழ்பாணத்தார் கொண்டாடியிருக்க மாட்டார்கள், கவனித்தால் இது புரியும்

முரளிதரன் தமிழர் அல்லவா என கேட்டால் “அவர் எஸ்டேட் தமிழன்” என ஒரு மாதிரி சொல்லிவிட்டு கடந்துவிடுவார்கள்

ஜாதி, வர்க்க பேதம் என ஏராளமான காரணங்கள்

இதுவே யாழ்பாண ஆறுமுக நாவலரின் பெயரினை இலங்கை அரசு நீக்கியிருந்தால் இந்நேரம் யாழ்பாணம் அலறும், இங்கே சீமானும், வேல் முருகனும் கொக்கரிப்பார்கள்.

ஆனால் பெரும் கிரிக்கெட் அடையாளமாயினும் முரளிதரன் தாழ்த்தபட்ட தமிழக வகையறா அல்லவா? அதனால் அங்கு சத்தமே இல்லை

அட அங்குதான் சத்தமில்லை, ஒரு தமிழனுக்கு இழைக்கபட்ட அநீதிக்கு இங்கு தமிழரை காக்க வந்த ஈழ கோஷ்டிகளிடமும் சத்தமில்லை

காரணம் ஏன் என்றால் இவர்கள் அப்படித்தான், தங்களுக்கு ஏதும் தேறா இடத்தில் பேசமாட்டார்கள், இன்னொன்று யாழ்பாணத்தார் சொன்னால்தான் இவர்கள் பேசுவார்கள்

முரளிதரனுக்காக யாழ்பாணத்தார் பேசமாட்டார்கள் என்பதால் இவர்களும் மகா அமைதி

ஆக ஒரு சரித்திர தமிழனுக்கு இழைக்கபடும் அநீதிக்கு இங்கு குரலெழுப்ப யாருமில்லை,

ஆச்சரியமாக தமிழர் எதிர்ப்பு கொள்கை கொண்ட புத்த குருக்கள் எதிர்க்கின்றனர், முரளிதரன் தேசிய அடையாளம் அவர் பெயரை மறுபடியும் சூட்ட வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர்

ஆக ஒரு தமிழனுக்கு சிங்களன் குரல் கொடுக்கின்றான்.

முன்பொருமுறை கலைஞர் சொன்னார், “இப்போதுள்ள கிரிக்கெட் வீரர்களில் எனக்கு மிகவும் பிடித்தவர் தமிழன் முத்தையா முரளிதரன்”.. ஆம் அப்பொழுது சர்வதேச போட்டிகளின் ஒரே தமிழராக அவர்தான் ஆடிகொண்டிருந்தார்

அவர் நலமாக இருந்திருந்தால் நிச்சயம் குரல் எழுப்பியிருப்பார்.

ஒருவேளை கலைஞர் அப்படி சொன்னதில்தான் இந்த சீமான் கோஷ்டி அமைதியாக இருக்குமோ?

ஆனாலும் பாருங்கள் சைமன், நீங்கள் இருக்கும் பொழுது ஒரு சிங்கள புத்த குரு முரளிதரனுக்கு ஆதரவாக வந்து நிற்பது உங்களுக்கு எவ்வளவு பெரும் அவமானம்???

 

அங்கிள் சைமனின் அடிப்பொடிகளை அசைக்க முடியாது

நாங்கள் சிவசேனை மற்றும் பாஜகவின் தயாரிப்பேதான், அதனை நிரூபித்துகொண்டே இருப்போம் என செய்துகாட்டுபவர்களில் அங்கிள் சைமனின் அடிப்பொடிகளை அசைக்க முடியாது

அவ்வப்போது நிரூபிப்பார்கள், இப்பொழுது பெரியார் பக்கம் வந்துவிட்டார்கள்

அதாவது பெரியார் ஈழவிடுதலைக்கு உதவவில்லை, குமரி பிரிவினைக்கு உதவவில்லை, சென்னை போராட்டத்திற்கு உதவவில்லை , அதனால் அவர் தமிழின துரோகி என சொல்ல ஆரம்பித்தாயிற்று

தமிழக அமைப்பின் சாதிக்கு சற்றும் குறையாதது யாழ்பாண சாதிவெறி, இது பெரியாருக்கு தெரியாதது அல்ல, அதனால்தான் யாழ்பாண வர்க்கம் இங்கு ஆதரவு கேட்டபொழுது அவர் அமைதிகாத்தார்.

கேரள தமிழருக்கு பெரியார் குரல் எழுப்பவில்லை என சொல்பவர்கள், வைக்கம் போராட்டத்தினை அவர் நடத்தியதையும், அது பெரும் வெற்றிபெற்று மக்களுக்கு உரிமை கிடைத்த கதை எல்லாம் மறைக்கின்றார்கள்

வைக்கம் போராட்டத்திற்காக அவர் சிறை சென்ற கதை எல்லாம் மறந்துவிடுகின்றது.

பெரியாரை பற்றி புரிந்துகொள்ள கொஞ்சம் அறிவு வேண்டும், ஆம் அவர் தமிழ் வெறியர் அல்ல, தாழகிடந்த மக்கள் தென்னகம் எங்கும் எங்கெல்லாம் அடங்கி கிடந்தார்களோ அவர்களை எல்ல்லாம் சிந்திக்க செய்தார்

வாசிக்கும் பழக்கம் முதல், கேள்வி கேட்கும் பழக்கம் வரை அவர் தொடங்கி வைத்தார்

அந்த மனிதன் தென்னகத்து மக்களுக்கு பொதுவாக வாழ்ந்தான், அவன் மூட்டிய தீ அப்படி எரிந்தது. பெரியாரின் திராவிட கொள்கையினை தகர்க்கத்தான் மொழிவாரி பிரிவினை செய்தது டெல்லி.

அதாவது இனத்தால் திராவிடனானாலும், மொழியால் பிரிக்கலாம் என சொல்லி அடித்தார்கள்.

இந்த சூழ்ச்சியில் சிக்க விரும்பாத பெரியார் சில விஷயங்களில் அமைதி காத்தார், அது குமரியோ, சென்னையோ சர்ச்சை வரும்பொழுதெல்லாம் அது திராவிடத்தில்தானே இருக்கின்றது என அவர் சொன்னது இப்படித்தான்

அப்படி தனக்கு எதிராக தொடுக்கபட்ட ஆயுதத்தை அவர் அப்படி கையாண்டார்.

இதனை புரிந்துகொள்ள கொஞ்சம் அறிவு வேண்டும், அங்கிளின் தும்பிகளிடம் அதனை எதிர்பார்த்தால் எப்படி?

இம்மானுவேல் சேகரனுக்கும் அஞ்சலி, பசும்பொன் தேவருக்கும் அஞ்சலி, பச்சை தமிழன் காமராஜரும் வாழ்க, காரணம் எல்லோரும் தமிழர் ஹிஹிஹீஹ்ஹி என சொல்லிகொண்டிருக்கும் கும்பலிடம் என்ன எதிர்பார்க்க முடியும்?

“ஆமாம், நாங்கள் பாஜக தயாரிப்பேதான், அதனால்தான் யார் இலங்கை சென்றாலும் கத்துவோம். மோடியும் தமிழிசையும் சென்றால் கத்தமாட்டோம்.

புலி காசி ஆனந்தன் ஆர்.எஸ்.எஸ் அமைப்போடு கட்டி தழுவினாலும் சும்மா இருப்போம்.

எங்களுக்கு தேவை காங்கிரஸ் எதிர்ப்பு, திமுக எதிர்ப்பு என பகிரங்கமாக சொல்லுங்கள், அதனை விட்டு விட்டு ஏன் இப்படி சுற்றி வளைக்கின்றீர்கள்?”

காசுக்கு துணைபோகும் கூட்டம் எது?

” இந்து கோவில் ஆனால் நீ உள்ளே வர கூடாது, இது இந்துக்கள் கிணறு ஆனால் நீ நீர் எடுக்க கூடாது

நீனும் இந்து , நானும் இந்து ஆனால் ஒன்றாய் அமரவோ உண்ணவோ கூடாது.

நீ கீழாவனன் நான் மேலாவவன், என்னை கண்டால் 10 அடி தள்ளி நிற்கவேண்டும், மேலாடை அணிய கூடாது.

நீ படிக்க கூடாது, நீ சிந்திக்க கூடாது, விலங்குகளில் ஒன்றாய் நீ இருக்கவேண்டும்.

வாழலாம், ஆனால் நீ எப்படி வாழவேண்டும் என்பதை நானே சொல்வேன், முடிந்தால் இதற்கு கட்டுபட்டு வாழப்பார், இல்லை சாவு ,எங்காவது ஓடு

இப்படி இருந்த சமூகத்தில்தால் புத்தனும், மகாவீரனும் முதலில் தோன்றி விரட்டபட்டவர்களை அரவணைத்தார்கள்

ஆயினும் அவைகளால் நிற்க முடியவில்லை , மறுபடியும் அதே சூழல்

அப்பொழுதுதான் தங்களை மனிதர்கள் என ஒப்புகொண்ட ஒரே காரணத்திற்காக, அந்த ஒற்றை காரணத்திற்காகவே இஸ்லாமுக்கும், கிறிஸ்தவத்திற்கும் சிலர் சுயமரியாதை என தனியாகவும் கிளம்பினார்கள்

தங்கள் கண்ணீரை யார் தொட்டு துடைத்தார்களோ, தங்கள் காயங்களுக்கு யார் மருந்திட்டார்களோ அவர்களின் பின்னால் சென்றார்களேயன்றி காசுக்க்கும் பணத்திற்கும் யாரும் மாறவில்லை

ஏன் காசுக்கும் பணத்திற்கும் மாறியிருந்தால் இப்பொழுது நீங்கள் அதே காசுபணம் கொடுத்து மாற்றினால் என்ன?

அம்பானி தொழிலுக்கும், அதானி தொழிலுக்கும் ஆபத்து என ராமர்கோவிலையே காசுக்கு மறந்த கூட்டம்தான், கிறிஸ்தவனும் இஸ்லாமியனும் காசுக்கு மாறினான் என சொல்லிகொண்டிருகின்றது

கொத்தி விரட்டினால் ஓடத்தான் செய்வார்கள், கதற கதற அடித்தால் அவன் ஆறுதல் தேடி பறக்கத்தான் செய்வான்

தவறுகளை எல்லாம் சாதி பெயரால் இவர்கள் செய்வார்களாம், அந்த கொடுமை பொறுக்காமல் ஓடினால் அவன் காசுக்கு மாறியவனாம்

காசு கொடுக்கின்றான் என்றவுடன் மாட்டுகறி தின்னும் வெள்ளையனிடம் துரை, பிரபு, சுவாமி என குனிந்து நின்றது யார்?

தாழ்த்தபட்டவனிடம் காட்டிய தீண்டாமையினை எவனாது வெள்ளைக்காரனிடம் காட்டினானா?

காசுக்கு துணைபோகும் கூட்டம் எது?

இப்படி பேசினால் ஆயிரம் பேசலாம்.

அந்த கிழவனுக்கு 139 வயதாயிற்று

அந்த கிழவனுக்கு 139 வயதாயிற்று, அவன் போராட கிளம்பி கிட்டதட்ட 90 வருடமாயிற்று.

போராட்டத்தை முடித்தும் கிட்டதட்ட 45 வருடமாயிற்று.

ஆனாலும் அந்த கிழவன் பெயரை கேட்டவுடனே பலருக்கு எவ்வளவு வயிற்றேரிச்சல் வருகின்றது, எவ்வளவு அலறல் வருகின்றது?

கிழவன் அப்படி அடித்திருக்கின்றான் .

ஒரு பெரு மரம் இருந்திருக்கின்றது, அதில் மந்தி கூட்டம், கோட்டான் கூட்டமும் கொடுநாகமும் குழுமியிருந்திருக்கின்றன, தாங்கொணா துயரை எல்லாம் அவை கொடுத்திருக்கின்றன.

ஆத்திரமடைந்த கிழவன் கோபத்தில் தைரியமாக பொங்கிவிட்டான், அது பாம்பு அது புற்றில் இருந்தால் என்ன? பரமசிவன் கழுத்தில் இருந்தால் எனக்கென்ன? பாம்புக்கு அடி விழும்பொழுது அந்த பரமசிவனுக்கே அடிவிழுந்தால்தான் என்ன என எழும்பிவிட்டான்.

அந்த மரத்திலிருந்து அட்டகாசம் செய்த மந்திகளையும், நாகங்களையும் அடக்க அவன் அந்த மரத்தையே புடுங்கி எறிந்திருக்கின்றான் என்பது நன்றாகவே தெரிகின்றது

மறுபடியும் அந்த அட்டகாசத்தை தொடரவும், ஆட்டம் போடவும் அந்த மந்திகளும், நாகங்களும் புலம்பியபடியே மரத்தை நிமிர்க்க படாத பாடு படுகின்றன‌

நடக்குமா? அதன் ஆண்வேரையே கிழவன் தோண்டி எறிந்துவிட்டு போய்விட்டானே?

அந்த வயிற்றெரிச்சலில் அந்த மந்திகள், கோட்டான்களின் அலறல் அதிகமாகவே இருக்கின்றது.

நாங்கள் பாஜகவிற்கு அடிமை அல்ல : ஜெயகுமார்

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கத்தால் வாக்களித்த மக்கள் வேதனையோடு பார்க்கிறார்கள்: வானதி சீனிவாசன்

ஏம்மா, தகுதி நீக்கும் செய்யும் ஐடியா எல்லாம் இந்த பழனிச்சாமிக்கும், தனபாலுக்கும் உதிக்கவா செய்யும்?

இப்படி எல்லாம் ஆடும் அளவிற்கு அவர்கள் வொர்த் இல்லை, ஏதோ ஒரு சக்தி திட்டம் தீட்டி கொடுக்கின்றது அவ்வளவுதான்

அதனைத்தான் நாங்கள் வேதனையோடு பார்க்கின்றோம் தாயே…


தினகரனும், ஸ்டாலினும் நல்ல பாம்பு, சாரைப் பாம்பு மாதிரி பின்னிப் பிணைந்து இருக்கிறார்கள் அது மக்களுக்கு நன்றாக தெரியும். நாங்கள் தினகரனை ஒரு பொருட்டாகவே கருதவில்லை : ஜெயக்குமார்

ஓஹோ.. இதுதான் பாம்பின் கால் பாம்பறியும் என்பதோ?


சசிகலா குடும்பம் குறித்து மேலும் 89% உண்மைகளை வெளியிட நேரிடும் என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் எச்சரித்துள்ளார்.

தமிழக மக்களை பார்க்க‌ உங்களுக்கு எப்படி தெரிகின்றது பன்னீர்? எல்லோரும் கேணையர்களா என்ன?

அந்த 11% ரகசியத்தை எப்பொழுதையா சொன்னீர்?

முதலில் அந்த 11% ரகசியத்தை சொல்லுங்கள், 89% பின்னால் பார்க்கலாம்


பல ரகசியங்களை வெளியிடுவேன்: ஓ.பன்னீர்செல்வம்

இந்த ஒரு வசனத்தை வைத்து கொண்டே 8 மாதமாக அரசியல் செய்கின்றார் பன்னீர்

அன்று ராமசந்திரனை ரகசியமாக மிரட்டியே தனிகட்சி தொடங்க வைத்து , என்னவெல்லாமோ செய்து காட்சிகளை நடத்தியது டெல்லி.

அந்த கட்சி உருவானதும், அது வளர்ந்ததும் ஆட்சிக்கு வந்ததும் இன்றுவரை ரகசியமே.

பின்பு ஜெயலலலிதாவிற்கு சசிகலாவிற்கும் என்ன ரகசியம் என இன்றுவரை தெரியவில்லை, ஜெயா ஆன்மாவும் சொல்லவேயில்லை.

ஆனால் ஏதோ ரகசியமில்லாமல் இவ்வளவு பெரும் காரியங்கள் நடந்திருக்காது, அந்த உறவு தொடர்ந்திருக்காது.

ஆக ரகசியங்களாலே இயங்கிய கட்சியில் , இன்று பன்னீரும் ரகசியம் வெளியிடுவேன் என மிரட்டுவது ஒன்றும் ஆச்சரியமல்ல‌

இந்த ரகசிய கட்சியால், தமிழகம் நாசமாய் போனது மட்டும் ரகசியமே அல்ல….


நாங்கள் பாஜகவிற்கு அடிமை அல்ல, அவர்களோடு சேர்ந்து நலதிட்டங்களை தமிழகத்திற்கு கொண்டு வருகின்றோம் : ஜெயகுமார்

என்னென்ன நலதிட்டங்கள் கொண்டுவந்தீர்கள் என்பது நீட் தேர்விலே தெரிகின்றது, அப்படி நீங்கள் பாஜக அடிமை இல்லையென்றால் சட்டசபையில் பெரும்பான்மை நிரூபித்துவிடுங்கள் பார்க்கலாம்.

இரட்டை இலையினை மீட்டு, பாஜகவினை சேர்க்காமல் உள்ளாட்சி தேர்தலை நடத்திவிடுங்கள் பார்க்கலாம்.

அங்கொரு தமிழிசை, இங்கொரு ஜெயக்குமார்.


ரஜினியும் கமலும் ஒரே பக்கம் வரவேண்டும் : தமிழருவி மணியன்

மணிரத்தினமே அப்படி இருவரையும் இணைத்து படமெடுக்க முடியாமல் விட்டுவிட்டார் மிஸ்டர் மணியன்,

அந்த “சக்கரவர்த்தி” படத்தை மறுபடியும் நீர் தொடங்கபோகின்றீரா?


“சசிகலாவால் கிடைத்த முதல்வர், அமைச்சர் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தைக் கூட்டி மீண்டும் பதவிக்கு வர முடியுமா” : தினகரன் சவால்

மிஸ்டர் தினகரன். எம்ஜிஆர் தொடங்கிய கட்சியில் இருந்து கொண்டு, ஜெயா எனும் உருவத்தை தாங்கி பிடித்து கொண்டு அரசியல் செய்வதை விட்டுவிட்டு.

இருவரையும், இரட்டை இலையினையும் அதிமுகவினையும் தூர எறிந்துவிட்டு , புதிதாக கட்சி தொடங்கி நீங்கள் அரசியல் செய்ய முடியுமா? என மக்கள் சவால் விட்டால் என்ன‌ செய்வீர்கள்?


 

உலகம் பதை பதைப்பில் இருக்கின்றது

ஆறுமுறை அணுகுண்டு வெடிப்பினை தொடர்ந்து, நீண்ட தூர ஏவுகனை சோதனையிலும் முழுவெற்றி பெற்றது வடகொரியா

ஆனானபட்ட ஹிட்லரையே சமாளித்த அமெரிக்காவிற்கு வடகொரியா பெரும் சிக்கலாக உருவெடுத்திருக்கின்றது, இனி இன்னும் பொருளாதார தடைகளை இறுக்குவார்கள்

ஏற்கனவே ஒவ்வொரு பொருளாதார தடையின்பொழுதும் ஒரு ஏவுகனை + ஒரு அணுகுண்டு என சோதித்து வெறுப்பேற்றுவது வடகொரிய ஸ்டைல்

இப்பொழுது புதிய தடைவேறு

என்ன ஆயுதம் சோதனை செய்யபோகின்றார்களோ அல்லது எத்தனை நாள் பொறுப்பது என ஜப்பானை போட்டு அடிக்க போகின்றார்களோ என்னவோ, உலகம் பதை பதைப்பில் இருக்கின்றது

ஆனால் அந்த கிம் ஜூங் யுன் கொஞ்சமும் அசந்ததாக தெரியவில்லை.

ஐம் ரெடி.. ரெடி..ரெடி, ஆர் யு ரெடி..ரெடி..ரெடி என அமெரிக்காவினை நோக்கி பாடிகொண்டே இருக்கின்றார்.

சென்னை மும்பை நட்புறவின் அடையாளம் இந்த படம்

Image may contain: 3 people, people smiling

என்ன இருந்தாலும் மராட்டியர்கள் நன்றிமிகுந்தவர்கள், ஹேம மாலினியினை அங்கே வரவேற்று கொண்டாடி ஏற்றுகொண்டு மறக்காமல் குஷ்பூவினை தமிழகத்திற்கு அனுப்பிவிட்டனர்.

சென்னை மும்பை நட்புறவின் அடையாளம் இந்த படம்.

 

 

 

 

 


Image may contain: 4 people, people smiling, selfie and close-upதமிழக அரசியலில் வைஜெயந்தி மாலாவிற்கு பிரகாசமான எதிர்காலம் இருந்தது, ஆனால் தவறவிட்டார்.

தான் தவறவிட்ட வாய்ப்புகளை எல்லாம் குஷ்பூவும் விட்டுவிட கூடாது, அவர் அரசியலில் ஜொலிக்கட்டும் என வாழ்த்துகின்றார் வைஜெயந்திமாலா.

வைஜெயந்திமாலா விரும்பினால் குஷ்பூ ரசிகர் மன்றத்தின் சீனியர் பதவி அவருக்கு வழங்கபடும்..