திருமணம் செய்ய நயன் தாரா முடிவு?

இயக்குநர் விக்னேஷ் சிவனை  ரகசிய திருமணம் செய்ய நயன் தாரா முடிவு? : செய்தி

அப்பாடா ஒருவழியாக‌ இந்த Babu Rao என்பவர் சயனைடை தேடியும், இந்த Chandran Kannan என்பவர் கடலை தேடியும் ஓடும் நேரம் வந்துவிட்டது.

ஆயினும் பென்ஸ்கார் வாங்க எவனோ ஒருவன் முகவரியினை அமலாபால் கொடுத்தது போல, தன் முகவரியினை திருமண பதிவு அலுவலகத்தில் நயன் கொடுக்க மாட்டாரா? என்ற கடைசி  நம்பிக்கையில் இன்னும் சயனைடை கடிக்காமல் இருக்கின்றார் Babu Rao

சர்தார் வல்லபாய் பட்டேல்

Image may contain: 1 person

இந்திரா காந்தியினை நினைவு கூறும் இந்நாளில் அந்த மாமனிதரையும் நினைவு கூறத்தான் வேண்டும். சுதந்திர இந்தியாவினை ஒரே இந்தியா ஆக்கிய அரும் மனிதர் அவர்.

சர்தார் வல்லபாய் பட்டேல்

காந்தி பிறந்த குஜராத்தில்தான் அவரும் பிறந்தார். மிக கடினமான சூழலில் வளர்ந்தார். இரவல் சட்டபுத்தகங்களிலே வழக்கறிஞனர் ஆன உழைப்பாளி அவர்.

காந்திக்கும் அவருக்கும் முதலில் பொருந்தவில்லை. அதற்கான சந்தர்ப்பம் ஒரு வறட்சியின் உருவில் வந்தது. குஜராத்தின் “கேடா” மாவட்டத்தில் கடும் வறட்சி, ஒன்றும் விளையவில்லை ஆனால் வரிகேட்டது பிரிட்டிஷ் அரசாங்கம்

விளைச்சல் இல்லை என சொன்ன விவசாயிகள் கதறல் அவர்களுக்கு கேட்கவில்லை, நிலத்தை ஜப்தி செய்ய வந்தார்கள், இங்குதான் பட்டேல் போராட வந்தார், அது வெற்றியும் ஆயிற்று

அதனை வாழ்த்த வந்த காந்திஜி கொடுத்ததுதான் சர்தார் பட்டம், சர்தார் என்றால் தலைவர் என பொருள்.

Image may contain: 5 peopleஅதன் பின் காந்தி பட்டேல் நட்பு வலுபெற்றது. காந்தியின் எல்லா போராட்டங்களிலும் பட்டேல் இருந்தார், எல்லா மாநாடுகளிலும் அவரோடு கலந்துகொண்டார், பல சிறைகளில் அடைக்கபட்டாலும் காந்தியோடு கலந்திருந்தார்

எரவாடா சிறையில் காந்தியினை மிக நன்றாக கவனித்துகொண்டவர் பட்டேல்

ஒருவழியாக சுதந்திரம் கிடைக்கும் காலம் நெருங்கிற்று, இந்திய வரலாற்றின் துரதிருஷ்டம், சுதந்திரம் பெற போராடியதை விட, பெற்றபின்புதான் சவால் அதிகம் இருந்தது

முதல் சிக்கல் அந்த ஜின்னா வடிவில் வந்தது, நேரடி நடவடிக்கை என அந்த ஜின்னா பொறுப்பே இல்லாமல் பாய, இந்தியாவில் ரத்த ஆறு ஓடிற்று

காந்தியின் பேச்சினை கொஞ்சமும் மதிக்காமல் தேசத்தை பிரித்துகொண்டு ஓடினார் ஜின்னா

காந்தி மனமொடிந்து இருக்க , நேரு அவர்களும் சகோதரரே எனும் மிகபெருந்தன்மையில் இருக்க, பட்டேலின் முன்னிலையிலே இத்தேசம் பிரிக்கபட்டது

காந்தி என்னமோ சொல்லி அழுதுகொண்டிருக்க, மிக தைரியமாக தன் அதிரடி கருத்தை இப்படி சொன்னார் பட்டேல்

“உடலில் வளர்ந்துவிட்ட கட்டி மற்ற உறுப்புகளை தாக்குமுன் அப்புறபடுத்தபடுவது போல, இத்தேசத்திற்கு வந்த ஆபத்தை வெட்டி எறிந்துவிட்டோம், இனி இத்தேசம் தன் வழியில் வளர்ச்சி நோக்கி செல்லட்டும்”

ஆம், அடம்பிடித்த ஜின்னாவினை இங்கே வைத்துகொண்டு சதா காலமும் சர்ச்சையினை வளர்ப்பதை விட, சனியனை அடித்து விரட்டுவது சரி என ஆணித்தரமாக சொன்னார் பட்டேல்

காந்தி பட்டேல் மோதல் தொடங்கியது, பட்டேல் ஆர்.எஸ்.எஸ் அனுதாபி எனும் சர்ச்சை எல்லாம் வந்தது, கொஞ்சமும அசரவில்லை பட்டேல்

காங்கிரசுக்கும், நாட்டின் பிரதமர் பதவிக்கும் ஒருவரே இருக்கவேண்டும் என்றார் காந்தி, ஆனால் காங்கிரஸ் பட்டேலின் கையில்தான் இருந்தது, அவருக்குத்தான் கட்சி ஆதரவு இருந்தது, நினைத்தால் நொடியில் பட்டேல் பிரதமராகியிருக்க நேரமது

ஆனால் விட்டுகொடுத்தார் பட்டேல், உள்துறை மற்றும் ராணுவ அமைச்சர் ஆனார். காந்தியின் சொல்லுக்கு வழிவிட்டார் பட்டேல். பாராட்டவேண்டிய குணம் அது.

இப்பொழுதும் காந்தி திருந்தியபாடில்லை, பாகிஸ்தானுக்கு கொடுக்கவேண்டிய 55 கோடி ரூபாயினை கொடுக்க சொன்னார், பட்டேல் மறுத்தார். அவர்கள் வெறிபிடித்த நிலையில் இருக்கின்றார்கள், இதனை கொடுத்தால் நம்மீதுதான் பாய்வார்கள், இது கொடுக்க வேண்டிய நேரம் அல்ல என மறுத்தார்

உண்ணாவிரதம் தொடங்கினார் காந்தி, இறுதியில் காந்தியின் பிடிவாதம் வென்றது, பட்டேலுக்கு மனம் சோர்ந்தது

ஆனால் குஜராத்தின் ஜூனாகத் சர்ச்சையில் அவர் கவனம் செலுத்தினார். அங்கு இஸ்லாமிய மன்னன் இருந்தான் அவன் பாகிஸ்தானோடு இணைய விரும்பினான், மக்களோ இந்தியாவோடு இணைய விரும்பினர்

பெரும் குழப்பம் ஏற்பட்டது, இறுதியில் பொது வாக்கெடுப்பில் மக்கள் தேர்வு இந்தியா என முடிந்தது, பாகிஸ்தானுக்கு பெரும் அவமானம் ஆயிற்று. ஜூனாகத் இந்தியாவோடு இணைந்தது, இதற்கு பெரும் காரணம் பட்டேல்

இங்கு சறுக்கிய பாகிஸ்தான் காஷ்மீரில் தேர்தல் என்றாலும் அம்மக்கள் மனம் இந்தியாவிற்குத்தான் செல்லும் என உணர்ந்தது, காரணம் மதவாத பாகிஸ்தானை இஸ்லாமியரில் பலரே விரும்பவில்லை, சோஷலிச இந்தியா , காந்தியும் நேருவும் வாழும் இந்தியா அவர்கள் விருப்பமானது

இதற்கு அஞ்சிய பாகிஸ்தான் காஷ்மீர் மீது படையெடுத்தது, மன்னன் ஹரிசிங் முதலில் இந்திய உதவியினை கோரவில்லை என்றாலும் பின் இறங்கி வந்தார், இந்தியா காஷ்மீரை மீட்டுதரவேண்டும் என்றார்

இந்தியாவோடு இணைய சம்மதம் என்றால் தயார் என சொன்னது இந்தியா, இந்தியா என்றால் பட்டேல், போரில் பாதி காஷ்மீர் இந்தியா வசம் ஆயிற்று, மன்னரும் கையெழுத்திட்டார்

பட்டேல் உறுதியாக சொன்னார், இதோ மன்னரின் ஒப்பந்தம் அதாவது முழு காஷ்மீரும் மன்னருடையது. மன்னர் இந்தியாவிற்கு தந்துவிட்டார், ஆக பாகிஸ்தான் தான் பாதி காஷ்மீரில் ஆக்கிரமிப்பு செய்திருக்கின்றது. நியாய நம்பக்கம் இருக்கின்றது, போர் மூலம் அதனை மீட்கலாம் என வாதிட்டார்

நேருவோ அமைதி பேர்வழி, பாகிஸ்தானிய சகோதரனிடம் பாதி காஷ்மீர் இருப்பதில் என்ன தவறு என்பது போல பேசிவிட்டு போருக்கு சம்மதிக்கவில்லை

ஐ.நா அது இது என என்னவெல்லாமோ சொல்லிகொண்டிருந்தார்.

“மிக பெரும் தவறு செய்கின்றீர்கள் நேரு, இது பிற்காலத்தில் தீரா தலைவலி கொடுக்கும்” என்ற பட்டேலின் எச்சரிக்கையினை புறக்கணித்தார் நேரு.

மனம் நொந்த பட்டேல் காந்தியினை சந்தித்து தான் அரசியலிலிருந்தும், உள்துறை அமைச்சர் பதவியிலும் இருந்தும் விலகுவதாக சொன்னார், காந்தி இதுபற்றி அடுத்தமாதம் பேசலாம் என சொல்லி சமாதான படுத்தினார்

காந்தியினை உயிரோடு சந்தித்த கடைசி பிரபலம் பட்டேல்தான்

கடும் அதிருப்தியில் சில இந்துக்கள் இருந்தபோது 1948 ஜனவரி 20ம் தேதி காந்தி மீது குண்டு வீசபட்டது , தப்பினார் காந்தி, அந்த குண்டை வீசிய மதனாலால் எனும் அகதியினை பிடித்து விசாரித்தார்கள், ஆனால் காந்தியினை கொல்ல பல குழுக்கள் அலைந்தது அப்போது யாருக்கும் தெரியவில்லை

அடுத்தம் 10ம் நாள் காந்தி கோட்சேவால் கொல்லபட்டார்

பழி எங்கு விழுதது என்றால் பட்டேல் மீது விழுந்தது, ஆம் ஆர்.எஸ்.எஸ் போன்ற அமைப்புகளை பட்டேல் கட்டுபடுத்தவில்லை, அவர்களுக்கு சாதகமாக நடந்தார். அவர்தான் கொலைக்கு பொறுப்பு என்றெல்லாம் கடும் குற்றம் சாட்டபட்டன‌

மனம் நொந்தார் பட்டேல், பாகிஸ்தான் மதவெறியில் பிரிந்தது போல இந்தியாவிலும் எறியும் மதவெறி அவருக்கு வேதனை கொடுத்தது

காந்தியின் கொலை அவர் மனதை பெரிதும் பாதித்தது , ஆனால் எந்த உணர்ச்சியும் வெளிகாட்டா இரும்பு மனிதர் அவர் அதனையும் காட்டிகொள்ளவில்லை

அடுத்து அவர் உயிரோடு இருந்தது 2 வருடங்களே

அந்த 2 வருடத்தில் பட்டேல் செய்ததுதான் உச்சபட்ச சாதனை

ஆம் 527 சமஸ்தானமாக இருந்தது பிரிட்டிஷ் இந்தியா, வெள்ளையன் வெளியேறியதும் பல தாங்கள் சுதந்திர நாடு என அறிவித்தன. அதில் ஜூனாகத் இந்தியாவோடு இணைந்தது, இன்னும் ஏராளமான பகுதிகள் குதித்தன‌

அவற்றை எல்லாம் இந்தியாவோடு சேர்த்தார், பேச வேண்டிய இடங்களில் பேசினார், மிரட்ட வேண்டிய இடங்களில் மிரட்டினார், அடிக்க வேண்டிய இடத்தில் அடித்தார்

பெரும் தொல்லை கொடுத்தது ஐதராபத் சமஸ்தானம், அதன் மன்னர் இணைய மறுத்தார், போருக்கு தயார் என்றார், பாகிஸ்தான் உதவிக்கு வரும் என்ற எண்ணம் அவருக்கு இருந்தது

அவருக்கு ஆதரவாக மேற்கு பாகிஸ்தான், கிழக்குபாகிஸ்தான் போல தெற்கில் ஒரு பாகிஸ்தான் வேண்டும் என்ற குரல்களும் எழும்பின‌

ஒருவித பரபரப்பு தொற்றிகொண்ட நேரமது, ஆனால் இந்திய படைகளுக்கு முழு உரிமை கொடுத்தார் பட்டேல் , போரில் சில அழிவுகளுடன் ஐதரபாத் இந்தியாவோடு இணைந்தது

தெற்கு பாகிஸ்தான் எனும் விஷ வித்து அன்றே பிடுங்கி தூர எறியபட்டது

இன்று நாம் காணும் சுதந்திர இந்தியாவின் முழு வடிவம் பட்டேல் எனும் இரும்பு மனிதன் கொடுத்தது

நேருவுக்கு ஏகபட்ட நல்ல குணங்கள் இருந்தாலும், பட்டேல் என்ற மாமனிதன் இல்லையென்றால் இத்தேசம் இந்த வடிவம் பெற்றிருக்குமா? என்பது சந்தேகம்

காரணம் நேரு பெருந்தன்மையான போக்கு கொண்டவர், அது தேசத்திற்கு சில பாதகங்களை கொண்டுவரத்தான் செய்யும், கொண்டு வந்தது

சீன யுத்தமே நேருவுக்கு உண்மையினை கற்று கொடுத்தது

பட்டேல் கொடுத்த எச்சரிக்கையிலேதான் போர்ச்சுகலின் கோவா, பிரான்சின் பாண்டிச்சேரி ஆகியவை பின்னாளில் நமக்கு கிடைத்தன, அதனை காண அவர் உயிரோடு இல்லை

ஆனால் அவர் இந்த அளவு அடித்து நொறுக்கி இந்தியாவினை ஒன்று சேர்க்கவில்லை என்றால் இந்த இணைப்புகள் இன்னும் தாமதமாகியிருக்கும்

ஆய்வாளர்கள் சொன்னபடி இந்தியாவின் பிரதமராக பட்டேல்தான் வந்திருக்க வேண்டும், அவர் இருந்திருந்தால் காஷ்மீர் உள்ளிட்ட பெரும் சிக்கல்கள் முளைத்தே இருக்காது

ஜூனாகத், ஐதராபாத் போல காஷ்மீரும் இன்று அமைதியாக இந்தியாவோடு இருந்திருக்கும்

பட்டேலின் நாட்டுபற்றும், அவரின் தியாக வாழ்வும் நெருப்பு போன்றது. அதில் ஒரு குறை சொல்ல முடியாது

நெருப்பில் ஏது மாசு?

நாட்டுபற்று மிக்க ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் மீது, காஷ்மீர் போரின் பொழுது நாட்டுபற்றை பேசிய அந்த ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தை அவருக்கு பிடித்திருந்தது

இந்திய பாகிஸ்தான் பிரிவினையின் பொழுது அகதிகளாய் ஓடிவந்தவர்களுக்கு முகாம் அமைத்து உதவிய அந்த ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தை அவருக்கு பிடித்தது

இது நாட்டுபற்று மிக்க எல்லோருக்கும் வரும் உணர்வு, பட்டேலுக்கும் வந்ததில் ஆச்சரியமில்லை, வராவிட்டால்தான் ஆச்சரியம்

ஆனால் காந்தி கொலைக்குபின் அவர் பார்வை மாறுபட்டது, அதன்பின் அவர் தீரா போராட்டம், உழைப்பு என பரபரப்பாக தேசத்திற்கு வடிவம் கொடுத்து கொண்டிருந்தார், ஆர்.எஸ்.எஸ் பக்கம் எல்லாம் செல்லவில்லை

இந்த நாட்டின் உண்மையான பாதுகாவலர்கள் ஐ.ஏ.எஸ் ஐபிஎஸ் அதிகாரிகள் என நம்பினார் பட்டேல், அவர்கள் பணி அரசியல்வாதிகள் குறுக்கிடாமல் நடந்தால் ஒழிய இத்தேசம் நன்றாக இயங்காது என்பது அவரின் கொள்கை

அது மகா உண்மையானதும் கூட‌

இத்தேசத்தின் உண்மையான சவால் சுதந்திரத்திற்கு பின்பே இருந்தது, இத்தேசம் இரண்டல்ல இரண்டாயிரம் துண்டாக உடையும் என உலகம் நம்பிகொண்டிருந்தது

அதனை எல்லாம் பொய்யாக்கி, இந்த மாபெரும் தேசத்தை அமைத்து கொடுத்த அந்த மாபெரும் மனிதனுக்கு இன்று பிறந்த நாள்

பிரதமராகும் வாய்பிருந்தும் கொஞ்சமும் சுயநலமின்றி உள்துறையில்தான் இத்தேசத்தை காக்கும் வாய்ப்பு உண்டு என சொல்லி ஏற்று அதனை சாதித்தும் காட்டியம் மாமனிதர் பட்டேல்

இத்தேசத்தின் சர்தார் எனும் சொல்லுக்கு மிக பொருத்தமானவர் அவர். ஆம் இத்தேசத்தின் தலைவன் அவரே தான்.

இத்தேசம் காலம் தந்த அந்த மாமனிதனை அவர் பிறந்தநாளில் வாழ்த்தி வணங்குகின்றது

 

அமெரிக்காவை விட கூடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது

Image may contain: 1 person, text

“மிஸ்டர் டிரம்ப்

அமெரிக்காவினை இந்த அமைச்சர் எப்படி கேவலபடுத்துகின்றார் பார்த்தீர்களா? இப்படி யாராவது அமெரிக்காவினை அசிங்கபடுத்தியிருக்கின்றார்களா?

எங்களுக்கென்னவோ நீங்கள் பதவிக்கு வந்தபின்புதான் இவர்கள் இப்படி எல்லாம் பேசுகின்றார்கள் என தோன்றுகின்றது

எவ்வளவு பெரும் அமெரிக்க அவமானமிது?

உடனே பின்லேடனை தூக்கிய ஸ்டைலில் வந்து இவர்களை தூக்கிகொண்டு செல்லுமாறு உங்கள் சீல் படைக்கு உத்தரவிடுங்கள்

இல்லாவிட்டால் டிரம்பினை விட நல்லாட்சியினை பழனிச்சாமி கொடுக்கின்றார் என்ற அளவு பேசுவார்கள், அதனை கேட்டு உங்களுக்கு மாரடைப்பு வரலாம், வடகொரிய அதிபர் எல்லாம் சிரிப்பார்

அதனால் உடனே ஏதாவது செய்து , இந்த அமெரிக்க அவமானத்தை களையுங்கள்”


அமெரிக்காவில் தேங்கும் அளவுக்குக் கூட சென்னையில் மழைநீர் தேங்கவில்லை: அமைச்சர் வேலுமணி

முதலில் இவரை கழுத்தை பிடித்து அமெரிக்க விமானத்தில் அங்கே அனுப்பி வைக்க வேண்டும்

எப்படிபட்ட பொய் இது?

மழைபொழிவு நன்கு கொண்ட நாடு அமெரிக்கா, ஆனால் ஒரு சொட்டு நீர் சாலைகளிலும் தெருக்களிலும் தங்காது அப்படி பார்த்து திட்டமிட்டு கட்டியிருக்கின்றார்கள், அதைவிட முக்கியம் பராமரிக்கின்றார்கள்.

சிங்கப்பூர் மிக சிறிய நாடு, ஒரே நகரம் சிங்கப்பூர் தலைநகரம் வால் நகரம் எல்லாம் அதுதான், அப்படி வைத்திருக்கின்றார்கள்

அமெரிக்கா மிகபெரிய நாடு, ஆனால் முக்கிய நகரங்களை மிக திட்டமிட்டு பராமரிக்கின்றார்கள், மிகுந்த தொலைநோக்கு கொண்டு செயல்படுகின்றார்கள், கிராமங்களும் மோசமல்ல‌

மிகபெரிய தேசம் என்பதால் மிக சில இடங்களில் சில சிக்கல்கள் இருக்கலாம், அவை எல்லாம் தொலை தூரபகுதிகள்

இங்கே சென்னை நிலவரம் என்ன? மகா முக்கியமான நகரின் நிலவரம் என்ன?

வாஷிங்டன்னையும் சென்னையினையும் ஒப்பிட்டு சொல்ல சொன்னால், சென்னையினையும் அமெரிக்காவில் கரடிகள் வாழும் காட்டையும் ஒப்பிட்டு சொல்லும் அமைச்சரை என்ன சொல்வது?

சென்னை நிலவரம் எப்படி என சொல்லி தெரிய வேண்டியதில்லை, பேருந்துகள் நீந்துவதும் இன்னும் எதுவெல்லாம் நீந்துவதும் ஒன்றும் ரகசியமல்ல‌

சென்னையில் இருக்கும் அமெரிக்க தூதர் இதனை கேட்டால் வாய்விட்டு சிரிக்க மாட்டாரா?

நாளை இன்னொரு விஷயத்தில் அமெரிக்க அளவிற்கு கூவம் மோசமில்லை என கூசாமல் சொன்னால் அமெரிக்கா பொறுக்குமா?

எப்படி இப்படி எல்லாம் இப்படி மகா பொய்களை சொல்கின்றார்கள் என தெரியவில்லை

ஒரு அமைச்சர் சிங்கப்பூர் அளவிற்கு டெங்கி இல்லை என்கின்றார், இன்னொருவர் அமெரிக்க அளவிற்கு இங்கு நீர் மேலாண்மை என்கின்றார்

முதல்வரோ ஸ்காட்லாந்து யார்டை விட தமிழக போலிஸ் பெஸ்ட் என்கின்றார்

ஆளாளுக்கு அள்ளி விடுகின்றார்கள்

இந்த சனியன்களுக்கு உலகம் என்றால் என்ன என்றே தெரியாது போல‌

போயஸ்கார்டனுக்குள் வளர்ந்த குஞ்சுகள் இப்படித்தான் இருப்பார்கள் போல‌

ஜெயாவிற்கு ஏன் நோபல் பரிசு கேட்டார்கள் என்பது இப்பொழுதுதான் புரிகின்றது, அவ்வளவு அப்பாவிகள் இவர்கள்

முதலில் ஒரு விமானத்தில் இவர்களை ஏற்றி உலகெல்லாம் அனுப்ப வேண்டும், நல்ல அனுபவத்தோடு அவர்கள் திரும்ப வந்தால் நல்லது

அந்த விமானம் மலேசிய விமானம் போல மர்மமாக ஒழிந்தால் இன்னும் ரொம்ப நல்லது.


 

மலேசியாவில் இருந்து மணல் இறக்குமதி செய்ய முடிவு

அந்த செய்தி விஸ்வரூபமாகின்றது

அதாகபட்டது, தமிழகத்தில் மணற்கொள்ளை உலகறிந்தது. எல்லா ஆறுகளும் சுரண்டபட்டாயிற்று, இனி சுரண்ட வழியே இல்லை

இனி மணல் வேண்டுமென்றால் சில அரசியல்வாதிகள் மண்டையினைத்தான் உடைக்க வேண்டும், அதுவும் களிமண் இருக்குமே தவிர, கட்டடம் கட்ட கூடிய மண் இருக்காது.

இந்நிலையில்தான் மலேசியாவில் இருந்து மணல் இறக்குமதி செய்ய கட்டடம் கட்டுவோர் முடிவெடுத்தனர், முதற்கட்டமாக 50 ஆயிரம் டன் மணல் தூத்துகுடிக்கு வந்திருக்கின்றது

தமிழக மணல் விலையில் இது பாதி என்பது குறிப்பிடதக்கது

இதனால் வீட்டு வேலை உட்பட கட்டட செலவுகள் கணிசமாக நிச்சயம் குறையும்

ஆனால் மணல் வியாபாரிகள் விடுவார்களா? அவர்கள் பிழைப்பில் மண் விழ விடுவார்களா?

இந்த மலேசிய மணல் , மண் வியாபாரத்தில் ஈடுபட்டிருக்கும் பலர் கண்களில் மணலை தூவியிருக்கின்றது அவ்வளவுதான் அரசியல் விளையாட்டு ஆரம்பமாயிற்று

தூத்துகுடி துறைமுகத்தை விட்டு மணலை எடுக்க முடியவில்லை

இதிலிருந்து என்ன தெரிகின்றது?

பதவியில் இருக்கும் பல அமைச்சர்களுக்கு மணல் வியாபாரம் இருக்கின்றது, மலேசிய மண் அதனை கெடுப்பதை அவர்கள் விரும்பவில்லை என்பது தெரிகின்றது

மொத்தத்தில் மண்வாரி இறைத்துவிட்டு மண்ணாய் போங்கள் என சொல்லிவிட்டு கிளம்பவேண்டிய விஷயமிது

பதிவிடுகின்றேன் என சொல்லி எல்லா இடத்திலும் வம்பிழுத்தாயிற்று

பதிவிடுகின்றேன் என சொல்லி எல்லா இடத்திலும் வம்பிழுத்தாயிற்று, இப்பொழுது கூட “கமுதி பஸ்ஸ்டாண்ட்டுக்கு வாடா..” என புறா விடு தூது எல்லாம் அனுப்புகின்றார்கள்

நாதக, திக, திமுக ஸ்டாலின் அணி, அதிமுக எல்லா அணி, பக்தாள், தலித் சங்கம், பிராமணாள் சங்கம் , தமிழிசை கோஷ்டி என ஒரு இடம் பாக்கியில்லாமல் பகை வந்தாயிற்று.

பிரிவினை கிறிஸ்தவர், இஸ்லாமியர், சில இந்துக்கள் எல்லாம் ஓன்றாக அடிக்க வரும் அற்புத காட்சியெல்லாம் தெரிகின்றது.

இதில் அஜித், விஜய், ராமசந்திரன் கோஷ்டிகளும் இணையலாம்

நம்மை போட்டு சாத்த மட்டும் இவர்கள் எல்லாம் ஓரணியில் திரளுவார்கள் போல, அவ்வளவு கோபம் இருப்பது போல் தெரிகின்றது.

ஊருக்கு வருவது பற்றி பலமுறை யோசிக்க வேண்டியிருக்கின்றது

என்ன செய்யலாம்? ஆம் அதேதான்

வியப்பும் திகைப்பும் நிறைந்த பயணம் மேற்கொள்ள வேண்டியதுதான்

கொழும்பு வழியாக பெங்களூர் வந்து, கன்னத்தில் மரு வைத்துகொண்டு, கூலிங் கிளாஸ் போட்டு கொண்டு, தலையில் தொப்பி போட்டு கொண்டு சென்னைக்கு வரவேண்டியதுதான்.

இதனை யாராலும் கண்டுபிடிக்க முடியாது.

இத்திட்டத்தை முன்பே சொல்லி வழிகாட்டிய அங்கிள் சைமன் வாழ்க‌


 கொசுறு
என்னுடைய திருமணத்தை பெரியார் சுயமரியாதை முறையில் நடத்தி வைத்தார், எனக்கு என்ன குறை? : கி.வீரமணி

 

அதானே, பெரியாரின் பல்லாயிரம் கோடி சொத்துக்கள் உங்களிடம் இருக்கும் வரை உங்களுக்கு என்ன குறை?

அந்த சொத்துக்களை விட்டுவிட்டு பகுத்தறிவு பேசுங்கள் பார்க்கலாம்?


 

குஷ்பு ரசிகர்கள் கொஞ்சம் அச்சத்திலே உள்ளனர்

Image may contain: one or more people and people sitting

சென்னை கடும் மழை அச்சமூட்டும் விஷயம்தான், குஷ்பு அங்கிருப்பதால் உலகெல்லாம் உள்ள ரசிகர்கள் கொஞ்சம் அச்சத்திலே உள்ளனர்

ஆனால் எவ்வளவு வெள்ளம் வந்தாலும், ரசிக கண்மணிகள் பாகுபலி பிரபாஸ் போல நின்றுகொள்வார்கள், அவர்கள் மேல் கால் வைத்து தலைவி அட்டகாசமாக வெள்ளத்தை கடந்து செல்லலாம் என்ற திட்டம் Sadhu Sadhath அவர்களால் கொடுக்கபட்டு சங்கத்தால் பரிசீலிக்கபடுகின்றது

ஒருவேளை நிலமை சிக்கலானால் அது நடைமுறைபடுத்தபடும் என சங்கத்து சார்பில் தெரிவிக்கபடுகின்றது

 

சென்னையில் மழை தொடங்கிவிட்டது

சென்னையில் மழை தொடங்கிவிட்டது, மக்கள் குழுக்களாக பிரிந்து ஒருவேளை பெருவெள்ளம் வந்துவிட்டால் எதிர்கொள்வது எப்படி என கிளம்பிவிட்டார்கள்

ஒரு தலைவன் இருந்து நடத்துவதாக தெரியவில்லை, மாறாக மக்கள் குழுக்களாக அதனை செய்கின்றார்கள், 2015 வெள்ள அனுபவ எச்சரிக்கை அவர்களை அதனை செய்ய வைக்கின்றது

உண்மையில் மகா ஆச்சரியமான விஷயம் இது, இந்நகரத்து யதார்த்தத்தை புரிந்துகொண்டார்கள், நமக்கு நாமே என கிளம்பிவிட்டார்கள்

மனிதநேயம், திட்டமிடல், தங்களை தற்காத்து கொள்ளும் துணிச்சல், மத இனங்களை கடந்து இயற்கை சீற்றத்தில் எப்படி நிற்க வேண்டும் என உலகிற்கே பாடம் நடத்துகின்றார்கள்

நிச்சயம் பாராட்டபட வேண்டிய விஷயம் இது

ஒன்று புரிகின்றது, ஒரு அரசு இருப்பதாகவோ அல்லது ஒரு மாநகராட்சி இருப்பதாகவோ யாரும் சட்டை செய்யவில்லை

அது மகா உண்மை என்பது போல அரசும் அதுபோக்கில் உறங்கிகொண்டிருக்கின்றது, உருப்படியான எந்த நடவடிக்கையும் காணோம், விடுமுறை அதனால் எல்லோரும் வீட்டில் முடங்குங்கள் என சொல்லிவிட்டு அவர்கள் போக்கில் இருக்கின்றார்கள்

மழை பெய்தால் விடுமுறை விடும் அளவிற்கு கட்டமைப்பு வசதிகள் உள்ளது என்பது மாபெரும் வெட்ககேடு, தலைகுனிவு.

மக்களோ கொஞ்சமும் முடங்காமல் நமக்கு நாமே என கிளம்புகின்றார்கள், எங்களை காப்பாற்றிகொள்ள்ளும் வழி எமக்கு தெரியும் என முந்தி நிற்கின்றார்கள்.

மாநில அரசுக்கு இதனை விட பெரும் அவமானம் ஏதுமில்லை,

கொஞ்சமேனும் சிந்திக்கும் திறனும் மான உணர்ச்சியும் இருந்தால் ஜெயா சமாதியில் விடியற்காலையில் ராஜினாமா கடிதம் எழுதி வைத்துவிட்டு எங்காவது ஓடிவிடலாம், அவ்வளவு பெரும் அவமானம் இது

இப்பொழுது ஆளும்வர்க்கத்திற்கு இந்த அவமானம் புரியாவிட்டாலும், மழை வலுத்து வெள்ளம் வந்தால், “மந்திரி சபையும் முதல்வரும் எங்களை தொடர்பு கொண்டால் மீட்டு வந்து தங்க இடமும் ,
உணவும் தருவோம்” என மக்கள் சொல்லும்பொழுது நிச்சயம் புரியும்

அதற்குத்தான் தயாராகின்றார்கள் சென்னை மக்கள்.

இந்த எழுச்சிமிக்க சென்னையினை இனி மழைவெள்ளம் என்ன? வட கொரிய அதிபர் கூட மிரட்ட முடியாது.

இந்தியா வந்தார் இத்தாலி பிரதமர் இன்னும் பிற…

இந்தியா வந்தார் இத்தாலி பிரதமர், இந்தியா இத்தாலி இடையே 6 ஒப்பந்தம் கையெழுத்தானது

இதனையே காங்கிரஸ் அரசு செய்தால் எல்லாம் இத்தாலி மாபியா சோனியா அட்டகாசம், இந்தியாவினை இத்தாலிக்கு வித்தாயிற்று, அது எப்படி இத்தாலியுடன் 6 ஒப்பந்தம்? என குதிப்பார்கள்

இது ஊழல், இந்தியாவினை இத்தாலிக்கு விற்கும் செயல், இது இத்தாலிகாரி சோனியாவின் திட்டம் என்றெல்லாம் கதறுவார்கள்

இதோ பாஜக அரசு அதனையே செய்கின்றது , ஏதும் ஒரு சத்தம் வருமா? ஒரு முணகல் வருமா? வராது


ஆளப்போறான் தமிழன் என்ற பாடலை கேட்டால், எங்கள் தலைவன் சீமானின் முகமே நினைவுக்கு வரும் : அங்கிளின் மங்கிகள்

கூடவே செருப்பும் வரும் ஜாக்கிரதை


ஹாவேர்டு தமிழ் இருக்கைக்கு 10 கோடி கொடுத்தது தமிழக அரசு

நல்லது, வெளிநாட்டில் தமிழ்வளர்ப்பது நல்ல விஷயம்

ஆனால் உள்நாட்டில் நடப்பது என்ன?

அந்த எம்ஜிஆர் நூற்றாண்டு விழா என்பதை “மாகோர..” நூற்றாண்டுவிழா என தமிழ்படுத்த கூடாதா?

தமிழ் வளர்ப்பை அங்கிருந்தே தொடங்குங்கள் பழனிச்சாமி, தமிழ் வாழும்.


குஷி படம் ஓடிகொண்டிருக்கின்றது

ஜோதிகாவின் இடுப்பினை அளந்துகொண்டிருக்கின்றார் விஜய், அதோடு விட்டாரா என்றால் இல்லை

கண்டபடி கட்டிபுடிடா என மும்தாஜோடு ஆட்டம் வேறு

இதெல்லாம் விஜயின் சமூக நோக்கு என எஸ்.ஏ சந்திரசேகர் சொல்லியிருக்கின்றார்

எப்படிபட்ட மிக உயர்ந்த சமூக நோக்கம்???


இந்திராவின் இந்தியா ‍ 03

Image may contain: one or more people and crowdஅந்த குழப்பான காலகட்டத்தில் சி.ஐ.ஏ தலமை செயலகமானது பாகிஸ்தான், பின்லேடனுக்கு வகுப்பு எடுத்துகொண்டே, இந்தியாவையும் குறிபார்த்தனர், இந்திரா அவர்களின் பெரும் எதிரியானார்.

இந்நிலையில் பொற்கோயில் சம்பவத்தால் சீக்கியர்கள் நொந்து போயினர், அது அவர்களின் ஆத்மா, அப்பொழுது ஒரு வதந்தி அல்லது தகவல் பரப்பபட்டது, கவனியுங்கள் லண்டனிலிருந்தும் அமெரிகாவிலிருந்தும் வந்து பொற்கோயிலில் பேசியவர்கள் பரப்பிய வதந்தி.

அதாவது இந்திரா பெரும் ராணுவ தாக்குதலுக்கு திட்டமிட்டு இருப்பதாகவும் , யுத்தத்தை சாக்காக வைத்து பஞ்ஞாபியரை அழிக்க போவதாகவும் வதந்தி இறக்கை கட்டி பறந்தது, அதாவது பாகிஸ்தான் ராணுவத்தினை உள்வாங்க விடுவாரம், பின்னர் விரட்டுகிறேன் என சகலத்தையும் அழித்துவிடுவாராம்.

கவனியுங்கள் இது முதலில்வந்த செய்தி, ஒரு வாரத்தில் ஜியா உல்கக் பாகிஸ்தான் எல்லையில் பஞ்சாபில் படைகுவிக்கிறார், போர் பரபரப்பு பற்றிகொள்கிறது.

இங்குதான் சீக்கிய சமூகம் அச்சத்தில் ஆழ்ந்தது, இந்திரா இனி தங்களை அழிக்காமல் விட மாட்டார் என பயத்தில் உறைந்தனர். இனி வாழ முடியாது என அவர்களுக்கு தோன்றிற்று, ஒரு கலாச்சாரமிக்க இனம் அழிவதை விட இருவர் அழிவது தவறில்லை என முடிவாயிற்று, பின்னர் நடந்த கொடூரம் உலகறிந்தது.

32 தோட்டாக்கள் இந்திரா மீது பாய்ந்தன.

அவரது பலமான உளவுதுறை அவருக்கு சீக்கிய காப்பாளர்களை மாற்ற சொன்னது, அப்படியானால் ராணுவத்து சீக்கியர்களை என்ன செய்வீர்கள் என கேட்டு மறுத்தார், இந்திரா

கிட்டதட்ட 7 முறை உயிர்தப்பிய இந்திரா, மெய்காப்பளரிடம் சிக்கினார். சஞ்சயின் மரணத்தின் பொழுதே கிட்டதட்ட மரணித்த இந்திரா, இம்முறை தப்பவில்லை.

ஒரு திட்டமிட்ட வதந்த்தி, அதற்கு வலுசேர்க்கும் படைகுவிப்பு என்ற மாயையில் நொந்திருந்த சீக்க்கிய சமூகம் சிக்கியதால் நிகழ்ந்த நிகழ்வு இது, பின்னாளில் அவர்கள் உண்மை உணர்ந்தனர். ஆக்கிரமிப்பு காஷ்மீர் பக்கம் இந்திய பார்வை இருந்ததே தவிர பஞ்ஞாப் எல்லையில் அல்லவே அல்ல.

சீக்கியருக்கு ஆபத்து என இறக்குமதியான வதந்தி, இப்படுகொலை மூலம் உண்மையானது கிட்டதட்ட 2000 சீக்கியருக்கு மேல் டெல்லியில் வன்முறையில் கொல்லபட்டனர்.

ஆனாலும் சீக்கிய இனம் உயர்வானது, சகல வலிகளையும் தாண்டி இன்னும் நாட்டிற்காக உழைக்கின்றது.

இந்திரா அமரர் ஆனார், இந்தியா பன்னாட்டுகம்பெனிகளின் வேட்டைகாடானது, தனியார் வங்கிகளை ஒழித்து வங்கிகளை தேசியமயமாக்கியவர் இந்திரா, இன்று இந்திய இன்சூரன்ஸ் கூட விற்பனை எனும் நிலை.

அண்டை நாடுகள் எல்லாம் ஆசுவாசமடைந்தன, சில திருமணவீடுகள் அல்லது மறைவு துக்கங்களில் எதிர் அரசியல்வாதிகள் எல்லாம் சந்திப்பார்கள், கேட்டால் நாகரீகம் என்பார்கள், ஆனால் அவர்கள் மனது ஆண்டவனுக்குத்தான் தெரியும்,

அப்படித்தான் இந்தியா மறைந்தபொழுது, எல்லா தலைவரும் வந்தார்கள்,சூத்திரதாரி பாகிஸ்தானின் இடி அமீன் ஜியா உல்கக் வந்தார், அஞ்சலி செலுத்திவிட்டு பாகிஸ்தானுக்கு திரும்பி சென்று சொன்னார்

“அல்லா இருக்கிறார், அமெரிக்கா இருக்கிறது, இந்திரா சாம்பலானார் இனி எனக்கென்ன கவலை”

இநதியாவும், அவர் உருவாக்கிய உளவுதுறையும் , இந்திரா உருவாக்கிகொண்டிருந்த புதிய இந்தியாவும் கதறி அழுதது.

திரு மு.க அன்று ஒரு அர்த்தமுள்ள வார்த்தை சொன்னார், அது நிதர்சனமான உண்மை

“இந்திய தீபகற்பம் இன்று கடலில் அல்ல கண்ணீரில் மிதக்கின்றது”

முற்றும்

 

இந்திராவின் இந்தியா 02

Image may contain: one or more people

அவர் பிரதமராகும் பொழுது இந்தியாவில் ஆங்காங்கு மாநில தேசியங்கள் வலுப்பெற்றன, அது இந்தியாவின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல என்பது ஒரு கூட்டாட்சி அமைப்பின் உச்சதலைவருக்கு தெரியாத விஷயமால‌, சமாளித்தார்.

தமிழகத்தில் திராவிடம், மும்பையில் மராட்டிய கோஷ்ம் என பல வகையான குரல்கள் உயர்ந்து கேட்டகாலம், காஷ்மீர் கேட்கவே வேண்டாம். இந்த வரிசையில் பஞ்சாப்பும் சேர்ந்துகொண்டது.

டெல்லி தமிழகத்தை வஞ்சிக்கிறது, தமிழர்களை அடக்கிஒடுக்குவதில் அதீத அக்கறை காட்டுகின்றது, என்றேல்லாம் பல குற்றச்சாட்டுகள் உண்டு, கொஞ்சம் பஞ்சாப்,காஷ்மீர்,வங்கம் பக்கம் சென்று வந்தோமானால் சில உண்மைகள் புரியும்.

அதாவது இந்தியா அப்படித்தான். பல இடங்களில் அதன் போக்கு வித்தியாசமானது, கடுமையானது. இல்லாவிட்டால் இந்தியா இருக்காது.

இந்தியாவிற்கு அதிகம் உழைக்கும் அல்லது உழைத்த இனம் என பஞ்சாபியரை சொல்லலாம், இன்றும் இந்தியராணுவத்தை தாங்கி நிற்பவர்கள், சகல துறைகளிலும் பங்கெடுப்பவர்கள், கடும் உழைப்பாளிகள். மேலாக இந்திய விசுவாசிகள்.

பெரும் சோக வரலாறு அவர்களுடையது, பாஞ்சாலிகாலத்திலிருந்து அதன் வளமைக்காய் தாக்கபட்டார்கள். பின்னாளில் இந்துவும் வேண்டாம், இஸ்லாமும் வேண்டாம் என அவர்களாக ஒரு சீக்கிய மதம் தொடங்கி அவர்களாக அவர்களின் கலாச்சாரத்தை காத்து வாழ்ந்து வந்தார்கள்.

பிரிவினை நடந்தபொழுது பாதி பஞ்சாப் பாகிஸ்தானுக்கு போயிற்று, ஒரு சராசரி சீக்கியனால் தாங்கி இருக்கமுடியும்? இன்னும் பிரிவினை கலவரத்தில் 10 லட்சம் பஞ்சாபியர் செத்தனர். பிரிவினை வலி அவர்களுத்தான் தெரியும்.

திடீரென தமிழகத்தை இரு நாடுகளாக பிரித்து ஒரு பக்கம் செல்ல விசா தொந்தரவும், உளவாளி முத்திரை சித்திரவதை மரணமும் அன்றாடம் நடக்குமென்றால் சென்னை டூ மதுரை பயணம் எப்படி இருக்கும்? எந்த குடும்பம் நிம்மதியாக இருக்கும்?, இது தான் பஞ்சாபியர் நிலை. ஏராளமான குடும்பங்களும், உறவினர்களும் எல்லைகோட்டுக்கு இங்கும் அங்கும் ஏக்கமாய் பார்த்துகொண்டே இருக்கும் நிலை.

இந்நிலையில் பஞ்சாபியர் மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கின்றனர், அதாவது பஞ்சாப் மொழி பேசுபவருக்கு தனி மாநிலம், சீக்கிய மதத்திற்கு ஒரு மத அந்தஸ்து என சில கோரிக்கைகள், ஆனால் டெல்லி காதுகொடுத்தே கேட்கவில்லை (நாம் கச்சதீவு, ராமேஸ்வரம் மீணவர், ராஜபக்ஸே,காவிரி,மீத்தேன் என கத்தினாலும் கேட்கின்றார்களா அப்படித்தான்) அவர்களும் அசட்டை செய்யபட்டார்கள்.

விளைவு அகாலிதளம் மகா மக்கள் ஆதரவு பெற்றது, இது இந்திராவை சிந்திக்கவைத்தது, அப்படியும் பஞ்சாப் மொழி மாநிலத்திற்கு பதிலாக பிஞ்சிபோன பஞ்சாபை மேலும் பிரித்த்து ஹரியான உருவாக்கபட்டு சீக்கியர்களின் கோபம் மேலும் அதிகமானது.

ஒரு கட்டத்தில் உலகநாடுகளையே அடக்கிய இந்திரா? சும்மா இருப்பாரா?, அதிசயமாக உள்நாட்டில் காங்கிரஸ் எதிர்ப்பு கட்சிகள் எல்லாம் பல மாநிலங்களில் உடைய ஆரம்பித்தன,

அந்த மாநிலத்தில் “அவர்” (அவர் என்பதும் மூன்றேழுத்து) இறந்தார் அதனால் அந்த கட்சி உடைந்தது என உங்கள் கொள்கை இருந்தால் உங்களை பார்த்து அமைதியாக புன்னகைக்கலாம், அவர் இருந்திருந்தாலும் அந்த கட்சி உடையத்தான் செய்திருக்கும்.

அவ்வாறாக அகாலிதளத்திற்கு எதிராக அவரும் அவரின் வாரிசு சஞ்சயும் கண்டெடுத்த ஒருவர்தான் பிந்திரன்வாலே.

காங்கிரஸ் மேடையில் சஞ்சாயால் அமரவைக்கபட்ட பிந்திரன்வாலே பின்னாளில் “புனித பூமி” (காலிஸ்தான்) அடையாமல் ஓயமாட்டேன் எனும் தீவிரவாதியானான் எப்படி கதர் பஞ்சாபி துப்பாக்கி எடுத்தார்?

அந்த காலம் அப்படி, அந்த பக்கம் ஆப்கனை விழுங்கி ரஷ்யா பாகிஸ்தானின் எல்லைக்கு வந்தது, இந்த பக்கம் இந்தியா, பாகிஸ்தான் அழுதால் நாட்டமைக்கு தாங்குமா? ஏராளமான பணமும் ஆயுதமும் பாகிஸ்தானுக்கு வந்தது, அவர்களால் பப்பாளி மரத்தில் ஏற்றபட்ட ஒரு அப்பாவி சீக்கியன் பிந்திரன்வாலே.

இது சுதந்திர‌ போராட்டம் என்றார் அவர், பல கொலைகள் அரங்கேறின. இந்துக்கள் குறிபார்த்து கொல்லபட்டனர்.(அப்பொழுதுதானே கலவரம் வரும்). ஊரை ரத்தகறை ஆக்கிவிட்டு பொற்கோயிலுக்குள் ஒளிந்தனர். பொற்கோயிலுகுள் சென்ற இந்திய ஜனாதிபதியே மயிரிழையில் உயிர்தப்பினார்.

துணிந்த இந்திரா ராணுவ நடவடிக்கை தொடங்கினார், பொற்கோயில் ரத்த்தால் கழுவபட்டது, தீவிரவாதம் முடித்துவைக்கபட்டது.

பொற்கோயிலில் ராணுவம் புகுந்தது ஒவ்வொரு சீக்கியனுக்கும் வலிதான், ஏற்கனவே இந்தியா தங்களை சரியாக அங்கிகரிக்கவில்லை எனும் கோபம் இருந்தது அது கூடிற்று. ஆனாலும் ஒரு சிறிய மகிழ்ச்சி இருந்தது.

அதாவது பிந்திரன்வாலே கூட்டத்தை பெரும்பான்மை சீக்கிய‌ மக்கள் ஆதரிக்கவில்லை, அவன் தொலைந்ததில் நிம்மதியான சீக்கியர்கள் ஏராளம்.

பின்னர் ஏன் படுகொலை நிகழ்ந்ததென்றால், அதுதான் உலக அரசியல். பொற்கோயில் சம்பவத்தில் சீக்கியர்களுக்கு கோபம் இருந்ததே தவிர அவரை கொலை செய்யும் அளவிற்கு அல்ல.

ஆனால் கோபத்தை கூடுதல் பயமும் கூட்டி, இனி இந்திரா இருந்தால் சீக்கியர் வாழ முடியாது என ஒரு பிம்பத்தை உருவாக்கியது பல வெளிநாட்டு சக்திகள்.

சுருக்கமாக சொன்னால் உயிரோடு வைத்து பிந்திரன்வாலேயால் செய்யமுடியாததை அவன் செத்தபின்னால் செய்தார்கள். அதற்கான சூழ்நிலையை உருவாக்கியது பாகிஸ்தானின் இடி அமீன் ஜியா உல் ஹக், திட்டம் கொடுத்தது ஒரு பெரிய கை.

அவர்களின் குறி இந்திய எல்லைகளில் பதற்றம் உண்டாக்குவது, அது முடிந்தது இந்திரா படுகொலையில்

வருவார்..