தாஜ்மஹால் இந்திய அடையாளம் இல்லையா?

Image may contain: outdoor

தாஜ்மஹால் இந்திய அடையாளம் இல்லை என்பதால் அது சுற்றுலா பட்டியலில் இருந்து நீக்கபட்டது : உபி அரசு அறிவிப்பு

இந்த டெல்லி செங்கோட்டை சமுத்திர குப்தன் கட்டி வைத்ததா?

அசோகரின் சக்கரம் குறிப்பது என்ன? புத்தமதம் நேபாள இறக்குமதி அல்லவா? எடுத்துவிடலாமா?

மும்பையில் இன்றும் பல்லாயிரம் பயணிகளை தாங்கும் இன்றைய சிவாஜி ரயில் நிலையத்தை அன்றே விக்டோரியா டெர்மினல் என கட்டியது யார்?

நாடாளுமன்றத்தை கட்டியது யார்? அது என்ன இந்திய அடையாளமா?

இன்னும் ஏராளமான விஷயங்கள் ஆள வந்தவர்கள் கொடுத்தது, பண்டைய காலத்தில் இல்லா நுட்பம் வளர வளர பல கலைகோயில்கள் உருவாயின அதிலொன்று தாஜ்மஹால்

இந்நாட்டில் வாழ்ந்த எல்லோரும் இந்தியர்களே, இங்கு உருவாக்க பட்ட எல்லாம் இந்திய அடையாளமே

கம்போடியால் கட்டபட்ட அங்கோர்வாட் எனும் அதிசயம், கம்போடியாவின் பூர்வீகம் அல்ல, அதனை சுற்றுலா இடமாக அறிவிக்க மாட்டோம் என்றால் உலகம் நகைக்காதா?

அங்கோர்வாட்டை தவிர கம்போடியாவில் என்ன இருக்கின்றது?

தாஜ்மஹாலை தவிர அங்கு என்ன இருக்கின்றது?

இது தெரிந்ததால் என்னமோ அன்றே அதனை இடித்து லண்டன் தேம்ஸ் கரையில் அமைக்க துடித்தான் வெள்ளையன், பின் கர்சன் பிரபு அதனை காத்தார்

இவர்கள் இன்று செய்யும் அலப்பறை அன்று வெள்ளையன் செய்ய திட்டமிட்டது சரி என்றே எண்ண தோன்றுகின்றது.

எப்படிபட்ட பிரசித்தி பெற்றது தாஜ்மஹால்?

உலகபோர் காலங்களில் கருப்பு துணியால் மூடி அதனை காத்தான் வெள்ளையன் அதன் அருமை அவனுக்கு தெரிந்திருக்கின்றது

சுதந்திர இந்தியாவில் காந்தியினை கொன்றோம், இதோ தாஜ்மஹாலுக்கும் மிரட்டலாம்

ஆப்கனில் அதிசயமாக நின்ற பாமியான் புத்தர் சிலைகளை உடைத்த தாலிபன் காட்டுமிராண்டிதனத்திற்கும், சிரியாவில் கலை பொக்கிஷத்தை நொறுக்கிய ஐ.எஸ் இயக்கத்திற்கும் இந்த யோகி கும்பலுக்கும் என்ன வித்தியாசம்?

ஒன்றுமே இல்லை

ஒரு பைத்தியகார தனமான கூட்டத்தின் கையில் இத்தேசம் சிக்கினால் அது சுடுகாடாகிவிடும்

இருக்கும் மசூதியினை இடிப்போம், மசூதி போன்ற டூம் உடைய தாஜ்மகாலை புறக்கணிப்போம் என்பதெல்லாம் பைத்தியம் முற்றிய நிலை

இது மிக எளிதில் விட்டுவிட கூடிய விஷயம் அல்ல, இது மாபெரும் சிக்கலுக்கு வழிவகுக்கும்

தாஜ்மஹால் என்பது இந்திய சொத்து, அரசு அதனை காக்க எந்த எல்லைக்கும் செல்லவேண்டும், யோகி அரசுக்கு கடிவாளம் இடுவது நல்லது

இல்லையேல் ஆப்கன் தாலிபன் வரிசையில் இந்திய காவி பயங்கரவாதமும் இடம்பெற்றுவிடும், உலக அரங்கில் இந்தியா காட்டுமிராண்டிகள் நாடாகிவிடும்.

ஷாஜகான் தன் பெருமையாய் நினைத்த விஷயம் மூன்று

ஒன்று கோஹினூர் வைரம், இன்னொன்று அவன் மயிலாசனம், மூன்றாவது தாஜ்மஹால்

கோஹினூர் வைரத்தை மீட்கவேண்டும் என்ற கோஷம் நெடுநாளாக நீடிக்கின்றது, மயிலாசனம் ஈரானில் உண்டு அதனை மீட்கவும் நடவடிக்கை உண்டு

இன்று இந்த தாஜ்மஹால் விஷயத்தை கேள்விபட்டால் அந்நாடுகள் எல்லாம் வாய்விட்டு சிரிக்காதா? இனி திரும்ப தருமா?

சர்ச்சைகள் உண்டு என்றாலும் திப்பு சுல்தானின் வாளை மீட்டுவந்த அந்த விஜய்மல்லையா இவர்களை விட எவ்வளவோ பரவாயில்லை.

தாஜ்மஹாலையே புறக்கணிக்கும் இவர்களா இனி கோஹினூரையும், மயிலாசனத்தையும் தேடுவார்கள்???

 

யஷ்வந்த் சின்கா மர்ம காய்ச்சலால் நிரம்ப பாதிக்கபட்டுள்ளார் போலும்

இந்த யஷ்வந்த் சின்கா எனும் பாஜக தலைவர் மர்ம காய்ச்சலால் நிரம்ப பாதிக்கபட்டுள்ளார் போலும்

ஒரு மாதிரியாக பேசிகொண்டிருக்கின்றார், இந்தியாவில் எல்லாம் மோடியால் போயிற்று என்றார், இப்பொழுது காஷ்மீரை நாம் இழக்கபோகின்றோம் என சொல்லாமல் சொல்லிகொண்டிருக்கின்றார்

அதாவது காஷ்மீரிகள் தங்களை இந்தியராக எண்ணவில்லையாம், அந்த அளவிற்கு நிலமை கெட்டு போயிற்றாம்

காஷ்மீருக்கு இருக்கும் 370 சட்டபிரிவினை ரத்து செய்வோம் என அத்வாணி சொன்னபொழுது கைதட்டியவர் இவர்தான்

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து கொடுக்க கூடாது, தனி கொடி கூடாது என பாஜக அறிக்கை வாசித்தபொழுதெல்லாம் விசிலடித்தது இவர்தான்

அந்த பாஜகவின் சிக்கலான பேச்சுகள்தான் காஷ்மீரிளுக்கு பெரும் சினமூட்டின‌

அப்பொழுதெல்லாம் அமைதியாக இருந்த சின்கா, இப்பொழுது குதிப்பது சாட்சாத் உட்கட்சி தகறாறேயன்றி வேறல்ல அல்லது கருப்பு பணம் இழந்திருக்கலாம்

கட்சிக்கொரு பழனிச்சாமியும், பன்னீர்செல்வமும் எங்கு திரும்பினாலும் இருக்கின்றார்கள்.

மோடி என்னைவிட சிறந்த நடிகர் : பிரகாஷ் ராஜ்

மோடி என்னைவிட சிறந்த நடிகர் : பிரகாஷ் ராஜ்

அன்னாருக்கு என்ன ஆயிற்றென்று தெரியவில்லை, இப்பொழுதெல்லாம் அரசியல் நிறைய பேசுகின்றார்.

யார்தான் அரசியல் பேசவில்லை எல்லோருமே பேசுகின்றார்கள். பேசட்டும்

மோடி இந்நாட்டிற்கு ஏதோ செய்ய நினைக்கின்றார். அதன் விளைவுகள் பின்னர்தான் தெரியும் என்றாலும் சில விஷயங்களில் அவரது அணுகுமுறை நன்றாகத்தான் இருக்கின்றது.

சீனாவுடன் போரை தவிர்த்தது, பாகிஸ்தானை அமெரிக்காவிடம் இருந்து தனிமை படுத்துவதில் ஓரளவு வெற்றி பெற்றது. அரபு நாடுகள் எண்ணெய் சந்தையில் நாங்கள் வைத்ததுதான் சட்டம் என நிற்கும்பொழுது வரலாற்றின் முதல் முறையாக அமெரிக்காவிடம் எண்ணெய் வாங்கி அரபுநாடுகளை மிரள வைப்பது என பல விஷயங்கள் ஓகே தான்

இப்பொழுதெல்லாம் அவர் மீது வைக்கபடும் விமர்சனம், கருப்பு பண ஒழிப்பு தோல்வி என்பது, அதனால் பொருளாதாரம் படுத்துவிட்டது என்பது.

கருப்பு பண ஒழிப்பு என்றால் ரூபாய் செல்லாது என்றவுடன் பதுக்கிய எல்லோரும் கொண்டு கொட்டுவார்கள் என்பதல்ல, அவனவன் பதுக்கிய தொகையினை ஒருநாளும் சொல்லமாட்டான்

ஆக பதுக்கிய கருப்புபணம் செல்லாதது ஆகிவிட்டது. ஒருவன் 100 கோடி பதுக்கியிருந்தால் அவனுக்கு தன் தொழிலைபற்றி கனவு இருந்திருக்கும். 100 கோடி செல்லாது என்றால் அவன் அடுத்த முதலீடு எப்படி செய்வான்?

ஆக அந்த பணத்திற்கு எதிர்காலம் இல்லாதபொழுது அவனின் தொழில் பாதிக்கத்தான் செய்யும்.

முறையான பணத்தில் தொழில் நடந்திருந்தால் அத்தொழில் மோடி நடவடிக்கையால் ஏன் பாதிக்கபட போகின்றது?

இப்படித்தான் பல தொழிலகள் படுத்துவிட்டன, இன்னொன்று ஜிஎஸ்டி போன்ற வரிமுறை அறிமுகபடுத்தி கொஞ்சகாலம் ஒரு சிறிய குழப்பம் வரத்தான் செய்யும், அது யார் ஆண்டாலும் வரும்.

கவனித்தால் கருப்பு பணத்தில் புரளும் ரியல் எஸ்டேட் , இன்னும் பல தொழில்கள் மற்றும் சினிமாக்காரர்களின் குரல்தான் இதில் அதிகமாக கேட்கின்றது

பாதிக்கபட்டவன் கத்ததான் செய்வான், எவ்வளவு கத்துகின்றானோ அந்த அளவு கருப்பு பண ஒழிப்பால் பாதிக்கபட்டிருக்கின்றான் என அர்த்தம்.

 
 
 

ரஜினியின் கருத்தை வரவேற்கிறேன் : சீமான்

Image may contain: 1 personஅரசியலில் வெற்றி பெற சினிமா புகழ், பணம் மட்டும் போதாது என்ற ரஜினியின் கருத்தை வரவேற்கிறேன் : சீமான்

அதிமுக ஆட்டம் கண்டதில் இருந்து, பாஜக இரும்பு பிடி போட தொடங்கியதில் இருந்தே அங்கிள் சைமன் பல விஷயங்களை வரவேற்க தொடங்கிவிட்டார்

“ஏய் முழியாங்கண்ணா, நீர் நேரத்திற்கு ஏற்றபடி எப்படி எல்லாம் டைப் டைப்பாக முழியினை மாற்றுவீர் என்பது தெரியாதா?”

 ·


சிவாஜி நினைவக திறப்பு விழாவில் ஒ.பன்னீர் செல்வத்துடன் ரஜினி, கமலும் பங்கு பெற்றனர்

ஆக எல்லா சிறந்த நடிகர்களும் பங்குபெற்றிருந்தனர் என ஒரே வரியில் சொல்ல வேண்டிய விஷயம் இது.


மேட்டூர் அணை விவசாயத்திற்காக திறப்பு

மேட்டூர் அணை விவசாயத்திற்காக திறப்பு

காவேரி என சீறும் எவனையும் இப்பொழுது காணமுடியாது, சிலருக்கு கடும் வருத்தம் கூட இருக்கலாம்.

அது வராமல் இருந்தால் கன்னடன் ஒழிக, இந்தியா ஒழிக என குதிப்ப்பார்கள், வந்துவிட்டால் சத்தமே இருக்காது

இதில் கவனிக்கவேண்டிய விஷயம் , கல்லணை தாண்டி எவ்வளவு நீர் இனி வீணாக கடலுக்கு செல்லும் என்பதைத்தான். ஒரு சொட்டு நீர் கடலுக்கு சென்றாலும் அது நிச்சயம் தலைகுனிவுதான்.

எப்படியோ, காவேரி பிரச்சினையினை தீர்த்து வைக்கும் சக்தி வருணபகவானை தவிர யாரிடமும் இல்லை என்பது மட்டும் புரிகின்றது.

ஜெயாவினை பற்றி மகளிர் பேசினால் அதன் சக்தியே தனி

அப்பொழுது திருச்செந்தூர் பாராளுமன்ற தொகுதி இருந்தது. தொகுதிதான் திருச்செந்தூர், நெல்லை,கன்னியாகுமரி என பிரிந்திருக்குமே தவிர மக்களின் இயல்பு ஒன்றுதான்

வெங்கடேச பண்ணையார் என்கவுண்டர் நடந்தது, ஜெயா அரசால் செய்யபட்ட படுகொலை என்றே செய்திகள் சொன்னது. சாத்தான்குளம் இடைதேர்தலில் ஜெயாவின் வலதுகரமாக சுழன்ற வெங்கடேச பண்ணணையார்தான், பின்பு கொல்லபட வேண்டிய ஆபத்தானவன் என அதே ஜெயா ஆட்சியில் 
சுட்டும் கொல்லபட்டார்.

தென் மாவட்டங்கள் கொந்தளித்தபொழுது கலைஞரின் கணக்கு மிக கச்சிதமாய் இருந்தது. மனிதாபிமானம், இரக்கம், அரசியல் என எல்லாம் கலந்த கணக்கு அது. திமுக சார்பில் பண்ணையாரின் மனைவிக்கு சீட் கிடைத்தது.

கையில் குழந்தையோடு அவர் வீதிக்கு வந்த காட்சியில் தாய்குலமே கதறியது, அழுதது. தன் வீட்டு பெண்ணாகவே அவரை கட்டி அழுதனர். திருச்செந்தூரை தாண்டி பல தொகுதிகளில் அதன் தாக்கம் இருந்தது.

விளைவு தென்னகததில் அந்த பாராளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி பெரும் வெற்றி கிட்டிற்று

39 தொகுதிகளையும் திமுக அப்படி கைபற்ற, கலைஞரின் அந்த திட்டம் கைகொடுத்தது. அதுவரை கண்ணாமூச்சி காட்டிய தென்மாவட்டங்களில் திமுக அபாரவெற்றி பெற்றதற்கு பெரும் காரணம் ராதிகா செல்விக்கு பெருகியிருந்த அனுதாபம்

பெண்ணை கண்டவுடன் பெண்கள் மனதில் தானாக உருவான அனுதாபமும், உணர்ச்சியும் அப்படி திமுகவிற்கு ஆதரவாய் மாறின‌.

தாய்குலங்களின் வோட்டு திமுகவிற்கு விழுந்தால் அது எப்படி அசுரபலம் பெறும் என வரலாற்றில் காட்டிய தேர்தல் அது. சந்தேகமே இல்லை, அதுவரை அப்படி ஒரு வெற்றியினை திமுக பெற்றதில்லை.

இதனை கணித்த கலைஞர் அந்த ராதிகா செல்வியினை மத்திய அமைச்சராக்கி நன்றிகடனை செவ்வனே செய்தார், அது மிக குறிப்பிடவேண்டிய விஷயம்.

இந்த வரலாறு இப்பொழுது எதற்கு என்றால் விஷயமிருக்கின்றது

திமுக ஜெயா மர்மத்திற்காக கச்சை கட்ட தொடங்கியாயிற்று, முகஸ்டாலின் ஆ.ராசா என தொடங்கிவிட்டார்கள், நிச்சயம் இனி எல்லோரும் பேசுவார்கள்

திமுக கொஞ்சம் நுணுக்கமாக திட்டமிடலாம்

இறந்தது இரும்பு பெண் ஜெயலலிதா, அவர் மேல் தமிழக பெண்களுக்கு என்றுமே பாசமும் பிரமிப்பும் உண்டு. ஜெயா அரசியல் வெற்றிகளுக்கு அதுதான் அஸ்திவாரம்

அந்த பெண்ணுக்கான நீதி போராட்டத்தில் திமுக சார்பில் பெண்களை பேசவைக்கலாம், இன்னும் வலு கூடும்

அதிமுக போல சரஸ்வதியும், வளர்மதியும் கொண்ட கட்சி அல்ல திமுக. பெரும் அறிவார்ந்த பெண்மணிகள், சிந்தனையாளர்கள், தனி அடையாளம் பெற்றவர்கள் உண்டு.

தமிழச்சி தங்கபாண்டியன், Rajathi Salma போன்ற பெரும் பிம்பங்கள் உண்டு. அவர்கள் கலைஞரால் அடையாளம் காணபட்டவர்கள். திறமைக்கு குறைவிலாதவர்கள், சமூகத்தில் உயர்ந்த இடத்தில் இருப்பவர்கள்

இவர்களுக்காக பெரும் பெண்கள் வட்டம் வாசகர்கள், ரசிகர்கள், திமுகவினர் என்ற பட்டாளம் உண்டு.

அந்த பெண்மணிகள் மூலமாக ஜெயா மர்மத்தை திமுக முன்னெடுத்து சென்றால், அவர்கள் எல்லாம் தீவிரமாக பேசினால் எழுதினால் , அது தமிழக தாய்குலங்களிடம் எளிதில் சென்றடையும், மக்களுக்கு உண்மை நிலை தெரியவரும்.

திமுக தன் மகளிர் அணியினை வலுபடுத்தி களமிறக்கினால், பெரும் மாற்றம் நடக்கும். ஜெயா என்ற மகளிரின் தனி ஒரு அபிமானம் பெற்ற தலைவர் இல்லா நிலையில் திமுக அவர்களிடம் அபிமானம் பெற்றுகொள்வது சால சிறந்தது.

அது மகளிர் அணியினை முன்னிறுத்தாமல் முடியாது.

திமுக இதனை செய்தால் அது அடையபோகும் நலன்கள் பெரிது, கட்சிக்கு பெரும் அடையாளமும், தாய்குலங்கள் மத்தியில் பெரும் அபிமானத்தையும் பெற்று தரும்.

கலைஞர் தீவிர அரசியலில் இருந்தால் இதனைத்தான் செய்திருப்பார். இப்பொழுது கவனியுங்கள் ஸ்டாலின் குரல் வருகிறதேயன்றி, திமுக சார்பில் மகளிர் குரல்கள் இன்னும் வரவில்லை. கலைஞர் இருந்திருந்தால் பேசவேண்டியவர்களை பேச வைத்திருப்ப்பார்.

ஜெயாவினை பற்றி மகளிர் பேசினால் அதன் சக்தியே தனி.

இதெல்லாம் அவர்கள் கட்சி முடிவெடுக்க வேண்டிய விஷயம், ஆனால் செய்தால் தமிழகத்திற்கு மிக நல்லது நல்லது

தேசபிதா மகாத்மா காந்தி

Image may contain: 1 person, smiling, standing, shoes and outdoor

அந்த மோகன்தாஸ் புரிந்துகொள்ள கொஞ்சம் சிரமான மனிதர், உணர்ச்சிவசபடாமல் அமைதியான மனதோடு சிந்தித்தால் அவர் ஒரு அற்புதமான பிறவி, அதனால்தான் உலகம் அந்த மனிதனை மனிதருள் சிறந்தவர் என கொண்டாடிகொண்டிருக்கின்றது.

அவர்தான் தேசபிதா மகாத்மா காந்தி,

உண்மையில் காந்தி என்பது அவரின் குடும்பபெயர், பின்னாளில் பாரத பெயராக நிலைத்துவிட்டது.

கொஞ்சம் வளமான பிண்ணனி கொண்ட குஜராத்தி குடும்பம் அது, மாணவன் காந்தி ஒன்றும் படிப்பில் சூரர் அல்ல, சராசரிதான். பின்னாளில் 18ம் வயதில் லண்டனுக்கு வழக்கறிஞருக்கு படிக்க சென்றார், சுருக்கமாக சொன்னால் அன்றைய இந்தியாவின் பெரும் சிக்கல் அவருக்கு தெரியவில்லை, வளமான குஜராத் வணிக வாழ்வும், சொர்க்கபுரியான லண்டனுமே அவர் அறிந்திருத்த உலகம் அல்லது மானிடம்.

வக்கீல் தொழிலுக்காக சிங்கப்பூருக்கோ அல்லது வேறு நாடுகளுக்கோ சென்றிந்தால் கூட இன்று இந்திய லஞ்ச,கருப்பு,டாஸ்மாக் பணங்களில் சிரிக்கும் அவமானம் அவருக்கு வந்திருக்காது, ஆனால் தென்னாப்ரிக்கா அவரின் விதியினை மாற்றிற்று.

அந்த காலத்திலிருந்தே இனவெறிக்கு பெரும் எடுத்துகாட்டு தென்னாபிர்க்கா, மிக சமீபம் வரை இனவெறி சிக்கல் உண்டு என்றால் அந்தகாலம் எப்படி இருந்திருக்கும்?. அங்குதான் இனவெறியின், அடிமைதனத்தின் கோரமுகத்தினை நேருக்கு நேர் காண்கிறார், புத்தனுக்கு வந்த ஞானம்போல காந்திக்கும் வந்தது, களத்தில் குதித்தார்.

காந்தி பெரும் திறமையான வக்கீலோ அல்லது பெரும் அறிவுஜீவியோ அல்ல, ஆனால் அடுத்தவர் படும் வதைகளை காண சகிக்காமல் தானே அவர்களுக்காக போராட வந்த மனித நேய மிக்க சாதாரண மனிதர்.

தென்னாபிரிக்காவில் பல போராட்டங்களை முன்னெடுத்து அவற்றில் குறிப்பிடதக்க வெற்றியும் பெற்றார், வெற்றி என்றால் வெள்ளையனை விரட்டினார் என்பதல்ல, சில உரிமைகளை அங்கு சுரங்க அடிமைகளாய் இருந்த இந்தியருக்கு பெற்றுகொடுத்தார், இன்று அங்குள்ள சிறுபான்மை இந்தியருக்கு வோட்டு உரிமையாவது உள்ளதென்றால் அதற்கு காரணம் காந்தியே.

அப்படியே இந்தியாவிற்கு அவர் வந்தபின், இந்திய போராட்டகளம் வேறுமாதிரி திரும்பியது, ஒட்டுமொத்த 30 கோடி மக்களும் அவரை தலைவராக ஏற்றுகொண்டனர், அவர் சொன்ன திசையினை நோக்கி மொத்த இந்தியா ஓடியது, அவர் சுட்டுவிரலுக்கு கட்டுபட்டது, அதுவரை துப்பாக்கி முனையில் இந்தியாவினை அடக்கிய வெள்ளையனுக்கு இது மகா குழப்பமாக தோன்றிற்று.

காரணம் பிரித்தாளும் கொள்கை, மதவாதம்,சாதி என பல பிரிவினை மூலம் இந்தியாவினை ஆண்டுகொண்டிருந்த வெள்ளையனுக்கு முதல் முதலாக ஜாதி,மதம்,மொழி கடந்த ஒரே இந்திய தலைவனாக காந்தி உருவானதே அவர்களுக்கு அச்சம் கொடுத்தது.

காந்தியின் போராட்ட வடிவம் மகா வித்தியாசமானது, எதிர்யினை பயமுறுத்தி ஓடவிடுவது அல்ல அவர்பாணி. எதிராளியினை சிந்திக்க வைப்பது, அவன் மனதினை உருகவைப்பது, எல்லாவற்றிற்கும் மேலாக மக்களை ஒற்றைபுள்ளியில் குவித்து உரிமைகுரல் எழுப்ப வைப்பது.

அவரின் சித்தாந்தம் மகா எளிது, 30 கோடிமக்களை ஆள்வது வெறும் 1 லட்சம் பிரிட்டானியர், இந்த பொன்கொழிக்கும் நாட்டை அவர்களின் வியாபார தலமாக பார்க்கின்றனர், அந்த வியாபாரத்தில் அடித்தால் ஓடிவிடுவார்கள். மொத்தத்தில் நாம் அவர்களுக்கு ஒத்துழைப்பதுதான் தவறு. அவர்கள் பொருளை வாங்குவதுதான் தவறு, அவர்களின் சட்ட திட்டங்களை மதிப்பதுதான் தவறு.

அதன் அடிப்படையில் ஒத்துழையாமை இயக்கம், அந்நிய பொருள் பகிஷ்கரிப்பு, சட்ட மறுப்பு, என ஒவ்வொன்றாக நடத்தினார். இந்தியாவில் விளையும் உப்பிற்கு உங்களுக்கு வரியா? என அவர் சிந்திக்க சொன்னபொழுது மொத்த தேசமும் சிலிர்த்து எழுந்தது.

அதாவது அடிமைமட்ட மக்களுக்கு வெறியூட்டுவதற்கு பதிலாக அறிவூட்டினார். அதனை பொறுமையாக ஊட்டினார். துப்பாக்கி என்றால் வெள்ளையன் எளிதில் வென்றுவிடுவான், 300 ஆண்டு போராட்டம் அதனைத்தன் சொன்னது. ஆனால் அஹிம்சையினை எப்படி வெல்வது என்பதில் அவன் தடுமாறினான்.

நீங்கள் கொடுமை செய்தால் எங்களை நாங்கள் வதைத்துகொள்வோம், சாவோம். பிணங்களின் மீது ஆட்சிசெய்தால் இங்கிலாந்து அரசுக்கு என்ன வருமானம்? என்ற நுட்பத்தில்தான் வெள்ளையன் சிக்கினான்.

அப்படி அவர் புகழ்பெற்ற போராட்டங்களை நடத்தி பின் விடுதலையும் பெற்று கொடுத்து, பின் வரலாற்றில் அழியா இடம் பிடித்ததெல்லாம் வரலாறு. இந்தியாவில் அவர் மறக்கபடிக்கபடலாம், ஆனால் உலகெல்லாம் வாழும் மனிதர்கள் அவரை மறக்கமாட்டார்கள்.

உண்மையில் வெள்ளையன் காந்தியிடம் தோற்றான், உள்மனதில் பழிவாங்க திட்டமிட்டான். என்று அவர்கள் அரசியல் கொலையினை நேரடியாக செய்வார்கள்? சில சர்ச்சைகளை பயன்படுத்தி பாகிஸ்தானை பிரிக்கும் நிலைக்கு தந்திரமாக கொண்டு சென்றார்கள்.

எவ்வளவோ காந்தி மன்றாடியும், ஜின்னாவினை அவரால் சமாதானபடுத்த முடியவில்லை, விளைவு இந்திய பிரிவும், ரத்த ஆறும் ஓடவைத்து தந்திரமாக அவரை பழிவாங்கினான் வெள்ளையன்.

காந்தி ஒரு இந்து, ஆனால் உன்னதமான இந்து. பாகிஸ்தான் பிரிந்து சென்றபொழுதும் அதற்கு கொடுக்கவேண்டிய பணத்தை கொடுக்க சொன்னர். இந்தியாவிலே தங்கவிரும்பும் இஸ்லாமியருக்கு இது தாய்நாடு என அறிக்கையும் விட்டார், இதுதான் அவருக்கு “இந்து எதிரி” எனும் பெயரினை கொடுத்து உயிரையும் பறித்தது.

அந்த சூழ்நிலை அவருக்கு மகா சிக்கலனாது, அவர் பாகிஸ்தான் பிரிந்ததில் மனம் நொந்துகிடந்தார், அந்த பணத்தை தாமதம் செய்தாலோ அல்லது கலவரங்களுக்கு காரணம் பாகிஸ்தான் என அறிக்கை இட்டாலோ அவர் இந்துமத வெறியராக அறிவிக்கபட்டிருப்பார்.

அப்படி ஒரு நிலை வந்திருந்தால் இந்தியாவில் மீதமிருந்த சிறுபான்மை இஸ்லாமியரின் நிலை இன்னும் படுமோசமாக மாறி இருக்கும். உண்மையில் மதவெறியர்கள் அதனைத்தான் எதிர்பார்த்தார்கள், நடக்கவில்லை வெறுப்பில் துப்பாக்கியால் பழிவாங்கினார்கள் அதுவும் பல முயற்சிகளுக்கு பின்னால்.

50 ஆண்டுகாலம் வெள்ளையன் பாதுகாத்த காந்தியினை வெறும் 1 ஆண்டுக்குள் கொன்றது அவரது கனவான சுதந்திர இந்தியா, காரணம் மதவெறி.

காந்திமேல் சர்ச்சைகளும் உண்டு, அதாவது பகத்சிங்கினை காப்பாற்றவில்லை, அல்லது நேதாஜியினை அவர் பகைத்தார் என ஏராளம் உண்டு.
இது பகத்சிங்கையோ, அல்லது நேதாஜியினையோ அல்லது காந்தியினையோ புரிந்துகொள்ளா வகையில் பரப்பபடும் செய்தி. அதாவது மூவரும் வேறுவேறு வழி. தன்னை விடுவிக்க பிரிட்டிசாரிடம் முறையிட்ட‌ தனது தந்தையினையே கடுமையாக எதிர்த்தவன் பகத்சிங், காந்தி முறையிட்டாலும் அதனையேத்தான் சொல்லி இருப்பார்.

நேதாஜி வெளிநாட்டவர் உதவியுடன் ராணுவவழி சாத்தியம் என எண்ணியவர், இந்தியாவிற்குள் ஒரு குண்டு கூட அவரால் வெடித்தது இல்லை. காந்தியினை துரோகி என்றெல்லாம் அறிவித்தவரில்லை.

வன்முறைக்கு காந்தி எதிரி, வன்முறையால் அமைக்கபடும் எந்த அமைப்பும்,விடுதலையும் நிலைக்காது என்றவர், சோவியத் யூனியனை அப்படித்தான் சொன்னார், அது உடைந்தும் போயிற்று. இன்னொன்று தீவிரவாதிகளை காந்தி ஆதரித்தால் எண்ணற்ற இளைஞர்கள் ஆயுதம் ஏந்துவார்கள், பெரும் ரத்தகளறி ஏற்பட்டிருக்கும்.

மொத்தத்தில் இந்திய இளைஞர்களை துப்பாக்கி ஏந்தவிடாமல் அவர்களை காமராஜர்,நேரு,சாஸ்திரி என வருங்கால தலைவர்களாக மாற்றி காட்டிவர் காந்தி. ஒரு தலைவன் தன்னை நம்பிய மக்களை ஒரு சிராய்ப்பும் இன்றி காப்பாற்ற வேண்டும். காந்தி அதனைத்தான் செய்தார்.

இதுதான் காந்தியின் வெற்றி மாபெரும் வெற்றி.

உலகில் அகிம்சையால் சாதித்த நெல்சன் மண்டேலா, மார்டின் லுத்தர் கிங் போன்றவர்கள் அவர் வழியில் போராடியதால்தான் இன்றளவும் வரலாற்றில் நிலைத்திருக்கின்றார்கள். அவ்வகையில் லுத்தரின் புகழ்மிக்க போராட்டத்தின் பலனில் வந்த ஒபாமா. இன்று அமெரிக்க அதிபராக காந்தியை புகழ்கின்றார் என்றால் அது காரணமில்லாமல் இல்லை.

எந்த லண்டன் ஏகாதிபத்தியம் அவரை எள்ளி நகையாடி பின் அங்கிகரீத்ததோ அதே லண்டன் பாராளுமன்றம் அவருக்கு சிலைவைத்து வணங்குகின்றது.
ரத்தகளறிகள் மிகுந்த இவ்வுலகில் மகாத்மாவின் வழிதான் சிறந்தது என ஐ.நாவில் பான் கீ மூன் மேற்கோள் காட்டுகின்றார், இவை எல்லாம் காந்தியின் வெற்றி, உலகம் உணர்ந்துகொண்ட உத்தமனின் வெற்றி.

ஆனால் பாரத திருநாட்டில் நடப்பது என்ன?

மதவெறியின் உச்சத்தில், அதுவும் பெரும் ரத்தகளறி ஏற்படும் நோக்கில் இஸ்மாயில் என பச்சை குத்திகொண்ட கோட்சே, அவரை கொன்ற கோட்சே தியாகி ஆக்கபட்டுகொண்டிருக்கின்றார், இதை எல்லாம் குஜராத்தில் பிறந்தவராக அல்ல, இந்திய பிரதமராக கண்டிக்கவேண்டிய உச்சம் இங்கு அமைதி காத்துவிட்டு, ஐ.நாவில் “ஆமாம் காந்தி உத்தமர்” என கேமரா நோக்கி தலையாட்டுகின்றது.

காந்தி என்ன தலைமைக்கு ஆசைபட்டாரா? இல்லை தன் பிள்ளைகள் எல்லாம் இந்தியாவினை ஆளவேண்டும் என ஆசைபட்டாரா? தான் வெள்ளையனை எதிர்ப்பதால் தன் மகனின் லண்டன் படிப்பினையே தடுத்து தீரா குடும்பழி சுமந்தவர்.

உலக சரித்திரத்தில் சுதந்திர போராட்ட தலைமேற்று, அதில் வெற்றியும் பெற்று ஆனால் அதிகாரம் வேண்டாம் என ஒதுங்கிய ஒரு தலைவனை காட்டமுடியுமா? அமெரிக்காவின் வாஷிங்டன், ரஷ்யாவின் லெனின், சீனத்து மாசேதுங் என யார் போராட்ட‌ தலைவரோ அவர்கள் அதிபர் ஆனார்கள்.

ஆனால் பெரும் வெற்றிபெற்ற பின்னும் அரசியல் வேண்டாம், இந்திய மக்களுக்கு உழைக்க இன்னொரு வழி இருக்கின்றது என சொல்லிகாட்டிய உத்தமர் காந்தி.

காந்திக்கும் தமிழகத்திற்கும் உள்ள உறவு மகத்தானது, தென்னாபிரிகாவில் 16 வயதில் கடும் மனவுறுதியுடன் போராடி உயிர்நீத்த தமிழ்ப்பெண் தில்லையாடி வள்ளியம்மைதான் என்னை போராட தூண்டியவர் என சொன்னவர் காந்தி.
மதுரை பக்கம் தமிழ் விவசாயிகள் மேலாடை இன்றி உழைப்பதை கண்ட காந்தி எனது சகோதரர்கள் போலவே நானும் என மேலாடை துறந்தார் (அதன்பின் கோர்ட் என்ன? சட்டை கூட அணியவில்லை), புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு அழைத்தபொழுது, எனது சகோதரர்களான தாழ்த்தபட்ட மக்களை அனுமதிகாத ஆலயத்திற்குள் நுழையமாட்டேன் என சொல்லிய இடமும் தமிழகமே.

கள்ளுகடை எதிர்ப்பு என்றவுடன், பெரியார் போன்றவர்கள் தென்னந்தோப்பையே அளிக்கும் அளவிற்கு காந்திபாசம் இருந்த மண்ணில்தான் இன்று டாஸ்மாகை அடைக்கமாட்டோம் என ஆட்சியும் நடக்கின்றது.

அப்படியே காந்தி நினைவு மியூசியம் மதுரையில் அமைக்கபட்டது, புதிதாக ஒரு கட்டடம் கட்டினால்தான் என்ன? அதனை செய்யாமல் புகழ்பெற்ற ராணி மங்கம்மாளின் மாளிகை காந்தி மியூசியம் ஆயிற்று.

கன்னியாகுமரியிலே அவருக்கு மண்டபம் கட்டபட்டது, அதை மட்டும் உருப்படியாக செய்தார்கள் இல்லாவிட்டால் நிச்சயம் விவேகானந்தர் பாறை போல வேறு சர்ச்சைகள் அங்கு எழும்பி இருக்கும்.

இன்று காந்தி பிறந்த தினம், இந்தியாவினை சுற்றி பார்த்து மக்களின் மனதினை இந்தியாவின் உண்மையினை கண்டறிந்து சில கருத்துக்களை சொன்னவர் காந்தி, அது இக்காலமும் பொருந்தும்.

இந்தியாவின் முதுகெலும்பு கிராமங்கள் அதன் விவசாயம் முக்கியம். பெண் சுதந்திரமே இந்தியாவின் வளமான எதிர்காலத்து ஆதாரம் (காவல்துறை உயர்பதவி பெண் அதிகாரிகளே வாழமுடிவதில்லை). அந்நிய பொருளை விரட்டுவது மட்டுமே இந்திய பொருளாதாரத்தினை காக்கும் பெரும் ஆயுதம்.

முக்கியமான ஒன்று, மதவெறி எக்காலமும் இந்த மண்ணின் பெரும் நோய். சமத்துவ மதநோக்கம் கொண்ட இந்தியாவே உலக அரங்கில் ஒளிவீசமுடியும்.

இன்று இந்த தேசத்தை வளப்படுத்துவதாக சொல்லிகொண்டு உலகெல்லாம் ஓடுபவர்கள் நிச்சயம் செல்லவேண்டியது அந்நிய தேசம் அல்ல.
மாறாக சென்று ஞானம் பெறவேண்டிய இடம் சபர்மதி ஆசிரமம், காரணம் இந்தியாவினை ஒளிர செய்யும் ஒளியின் தீப்பொறி அங்குதான் இருக்கின்றது.

இந்தியாவில் இன்று காந்தி பிறந்த நாள் எப்படி அரசு சிறப்பிக்கின்றது என தெரியாது, ஆனால் உலகம் பெருமையாக நினைவு கூர்கின்றது, உலகெல்லாம் சிலை அமைக்கபட்டிருக்கும் ஒரே இந்திய தலைவர் எனும் வகையில் அவர் உலகத்தாரார் எல்லோராலும் நினைவு கூற படுகின்றார்.

காரணம் அவர் இந்து மத நெறியாளர்தான், ஆனால் சாதி இல்லை என சொன்ன புத்தன், தன்னை வதைத்துகொண்டு அகிம்சையாக போராடிய யேசு கிறிஸ்து என‌ எல்லா மதங்களின் உயர்ந்த தாக்கங்களும் அவரிடம் இருந்தது,

“வையகத்து வாழ்வாங்கு வாழ்ந்தவர் வானுறை
தெய்வத்துள் வைக்க படும்”

அதனால்தான் மகா ஆத்மா எனும் பட்டமும் அவருக்கு தேடி வந்தது.

அவரை மனமார நேசித்து இறுதிவரை ஒரு இந்திய காந்தியவாதியாக வாழ்ந்த காமராஜரும், இந்நாளில்தான் காலமானார்.

காந்தியும், கருப்பு காந்தியும், லால் பகதூர் சாஸ்திரியும் இந்திய வரலாற்றின் தூய அர்ப்பணிப்பு பக்கங்களின் கல்வெட்டுக்கள்

 

நியாயமான , தைரியமிக்க ஸ்டாலினின் கேள்விகளுக்கு வாழ்த்துக்கள்

Image may contain: 1 person, sitting and indoorஸ்டாலின் கடல் அலை போல தொடர்ந்து கேள்வி எழுப்புகின்றார்.

ஜெயலலிதா மர்மம் தொடர்பான விஷயத்தை அவர் இனி விடுவதில்லை என்றே தெரிகின்றது. அட்டகாசமான பார்மிற்கு வந்துவிட்டார்.

சீனிவாசன் முதல் ஆளுநர் வரை அவர் கேட்கும் கேள்விகளுக்கு பதில் இல்லை

உண்மையில் ஒவ்வொரு தமிழன் நெஞ்சிலும் எழும் கேள்விகள் அவை.

மருத்துவமனையில் இருந்தது ஒரு முதல்வர், அவரை சந்திக்க சென்றது ஆளுநர். அந்த ஆளுநர் தான் ஜெயாவினை பார்த்ததாக சொல்லியிருந்தார்.

இப்பொழுது அமைச்சரும் தினகரனும் ஜெயாவினை யாரும் பார்க்கவேயில்லை என சத்தியம் செய்கின்றார்கள்

ஸ்டாலின் மிக உரக்க இதற்கு ஆளுநர் மாளிகை பதில் என்ன என கேட்கும் கேள்விக்கு கைதட்டித்தான் தீரவேண்டும்

எதற்குடுத்தாலும், கேள்வியே இல்லை என்றாலும் தானாக பதில் சொல்லிகொண்டிருந்த தமிழிசை, பொன்னார், இன்னும் பலர் சத்தமேயில்லை

அதிமுக தரப்பும் அமைதி, இனி உலுக்கி கேட்டால் அழுதுவிடுவார்கள்.

ஜெயாமீது பெரும் அபிமானம் யாருக்கும் இல்லை. தன் கழுத்தில் தூக்கு கயிறினை மாட்டி பிடியினை அவர் சசிகலாவிடம் கொடுத்து கிட்டதட்ட 30 வருடங்கள் ஆகின்றது என்பது ரகசியமல்ல‌

ஆனால் ஒரு முதல்வரின் உடல் நிலையில் ஆளுநர் உட்பட எல்லோரும் பொய்சொன்னார்களா? எனும் கேள்வி எழும்பொழுது அது மிக மிக அபாயமானது, ஆபத்தனது, முடிவு தெரிந்தே ஆகவேண்டிய விஷயம்

அப்படி நியாத்தை கேட்டு, அரசை உலுக்கும் கேள்விகளை கேட்க தொடங்கும் மு.க ஸ்டாலினை வாழ்த்தததான் வேண்டும்

அன்றொருநாள் திமுக ஆட்சியில் ஜெயா சொன்னார்

“என்னை கொல்ல திமுக சதி செய்கின்றது, நான் இருக்கும் வரை தன் கனவு நிறைவேறாது என நினைக்கும் திமுக தரப்பு என்னை கொல்லபார்க்கின்றது எனக்கு உளவு தகவல் கிடைத்திருக்கின்றது” என்றேல்லாம் பேசினார்

ஜெயாவிற்கு இது புதிதல்ல, 1986 முதல் இதே அழுகைதான். ஒருமுறை ஒரு விபத்தில் சிக்கி கூட இப்படித்தான் புலம்பிகொண்டிருந்தார்

கலைஞரும் பல விபத்துக்களில் சிக்கியவர்தான், ஒரு கண்ணே பாதிக்கபட்டவர்தான், அதுபோக அவரை அடித்து சாக்கடையில் வீசிய சம்பவங்களும் உண்டு

ஆனால் யாரையும் குற்றம் சாட்டியவரல்ல அவர், அவர் தன்மை அப்படி

ஜெயா எப்படியென்பது சென்னரெட்டி விஷயத்திலே தெரிந்தது

ஒரு காலத்தில் தன் அருகிருபவர்களே அவர் கழுத்தில் கத்தி வைத்த நிலையில், திமுக மீது கொலை சதி என புலம்பிகொண்டிருந்த ஜெய்லலிதாவிற்கு இன்று திமுகவில் இருந்துதான் நியாய‌ குரல் வருகின்றது.

நாம் திமுக காரர் அல்ல. ஸ்டாலின் அனுதாபியும் அல்ல. ஆனால் ஸ்டாலினின் கேள்விகள் நியாயமானது. மொத்த மக்களின் கேள்விகள் அது

அதற்கு வலுசேர்ப்பது தமிழரின் கடமைதான், சந்தேகமேயில்லை.

நீ தமிழனாய் இருந்தால் அதனை செய் இதனை செய் என சில கும்பல்கள் சொல்லிகொண்டே இருக்கும். இப்பொழுது அவை ஒன்றுமே சொல்லாது

அதுவும் இலங்கைக்கு விசாரணை வேண்டும் என கேட்கும் சீமான் கோஷ்டிகள் ஜெயலலிதாவிற்கு சிபிஐ விசாரணை வேண்டும் என கேட்கவே கேட்காது.

ஏன் என்றால் அவர்களுக்கு படியளக்கும் நடராஜ சுவாமிகள் இப்போது சிகிச்சையில் இருக்கின்றார்

என்ன சிகிச்சை ?சிறுநீரகத்திற்கு காத்திருக்கின்றாராம்

நொடியில் லண்டன் டாக்டரை வரவழைக்க முடியும், நொடியில் 100 எம்.எல்.ஏக்களுக்கு கோடி கணக்கில் கொட்டி கொடுக்க முடியும் என்ற நிலையில் இருக்கும் குடும்பம், ஒரு சிறுநீரகத்திற்கு காத்திருக்கின்றதாம்

நம்ப முடிகின்றதா?

நம்பித்தான் ஆகவேண்டும், விசாரணை முடியும்வரை அவர் சிறுநீரகம் கல்லீரல் குடல் (இதயம் எப்பொழுதுமே இல்லை) என எதுவுமே இல்லாமல் வாழ்வார்.

ஆறுமுகசாமி விசாரணை முடிந்த மறுநிமிடம் நடராஜனுக்கு கிட்னி கிடைக்கும், அதுவரை எந்த உறுப்புமே இல்லாமல் அவரால் வாழ முடியும்.

அவர் வாழட்டும்.

நியாயமான , தைரியமிக்க ஸ்டாலினின் கேள்விகளுக்கு வாழ்த்துக்கள்.

 

கதரை பயன்படுத்துங்கள் : முதல்வர் பழனிச்சாமி

கதரை பயன்படுத்துங்கள் : முதல்வர் பழனிச்சாமி

காந்தி பிறந்தநாள் என்றால் இவருக்கு கதர் நினைவுக்கு வருகின்றது, சுதேசி கொள்கையாம்

எங்கே? இந்திய தயாரிப்பு காரில் செல்லட்டும் பார்க்கலாம், அப்படி ஒரு கார் இல்லையென்றால் இந்திய தயாரிப்பு மாட்டுவண்டியில் செல்வாரா?

இவர்கள் பயன்படுத்தும் ஒரே இந்திய தயாரிப்பு ரூபாய் நோட்டு மட்டுமே…

காந்தி மதுவிலக்கு வேண்டுமென்றார், அதனை ஏன் பழனிச்சாமி செய்யவில்லை?

மாபெரும் தலைவர்களின் மரண ரகசியம்

நேதாஜி, லால்பகதூர் சாஸ்திரி போன்ற மாபெரும் தலைவர்களின் மரண ரகசியமே இன்னும் வெளிவராத நாட்டில் அதனை தெரிந்துகொள்ள யாருக்கும் ஆசையில்லை, கேள்வியுமில்லை

ஆனால் ஜெயா சாவுக்கு நீதிவேண்டுமாம்

ஜெயா செத்தது மர்மமே, ஆனால் ஜெயா தான் மர்மமாக சாகும் சூழலை நிச்சயம் அவரேதான் ஏற்படுத்தினார். ஜெயா வழக்கு விசாரணையில் முதல் குற்றவாளி அந்த மரித்துபோன ஜெயலலிதாதாவே தான்.

ஜெயா விசாரணை சுத்த அரசியல். அது முடிவு தெரிந்தாலும் தெரியாவிட்டாலும் ஆக போவது ஒன்றுமேயில்லை. தான் இப்படித்தான் சாவோம் என தெரிந்தே இருந்தவர் ஜெயலலிதா

ஆனால் சாஸ்திரி சாவு இந்த நாட்டிற்கானது, இந்த தேசத்தின் அமைதிக்கும் வளப்பத்திற்கும் போராடும் பொழுது ஏற்பட்ட மர்ம சாவு

அந்த மர்மம் ஒருநாள் நிச்சயம் வெளிவந்தே தீரவேண்டும்.