ஏராளமான விஷயங்கள் அந்த திராவிட கோஷத்தில் உண்டு

திராவிடத்தை காக்க வந்தவரும், இந்தியா என ஒன்று இல்லை என ஒருகாலத்தில் சொன்னவரும், இந்து மதம் ஒழிக்கபடவேண்டியது என சொன்னவருமான அண்ணா எழுதிய நாடகம் “சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்”

அதனை காண சென்றது இந்தியாவில் திராவிடன் இணையமுடியாது என சொன்ன பெரியார், இந்து மதத்தின் விரோதியான பெரியார்

அந்த கணேசனின் நடிப்பில் சிவாஜியினை கண்டதாக அவனுக்கு சிவாஜி என்றே பெயரிட்டாராம் அந்த பெரியார்.

திராவிட நாடு மதமற்றது, இந்துக்களுக்கும் அதற்கும் சம்பந்தமே இல்லை என்றவர்களும் அந்த நாடகம் பார்த்துகொண்டிருந்தனர்

சிவாஜியின் இந்து ராஜியம் தஞ்சைவரை பரவியிருந்தது என்பதற்கும் கைதட்டிகொண்டனர். அதாவது தமிழத்தின் முக்கிய பகுதி வட இந்திய‌ இந்து அரசனின் கீழ் இருந்தது எனும் காட்சிக்கு விசில் அடித்தார்கள்.

தமிழனின் தலைமகன் என தன்னை சொன்ன அண்ணா ராஜராஜ சோழன் கதையினை எழுதவில்லை, ஆரியபடை கடந்த நெடுஞ்செழியன் கதையினை எழுதவில்லை மாறாக சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் என்று , இந்து மதத்தினை காத்த அந்த மாவீரனை பற்றி எழுதியிருக்கின்றார்

“இந்து மதமே ஒழிக்கபடணுமுனும்ணு சொல்றேங்க, ஆனா இந்த அண்ணாத்துரை அந்த இந்துக்களுக்காக பாடுபட்ட சிவாஜி கதையினை எழுதியிருக்காருங்க‌

அத என்னையே பாக்க சொல்றாருங்க, இதுல கணேசன்னு ஒரு பய மானமில்லாம நடிச்சிருக்காங்க‌

எழுதுவனுக்கு மானமில்லங்க, நடிச்சவனுக்கும் மானமில்லங்க” என பெரியார் சொல்லியிருந்தால் நன்றாகத்தான் இருந்திருக்கும்

ஆனால் சொல்லவில்லை

திராவிடமும், பகுத்தறிவும் வீரசிவாஜியினையும் அவன் கண்ட இந்து ராஜ்யத்தையும் ரகசியமாக ரசித்திருக்கின்றது

அதில் ஒரு கலைஞனுக்கு சிவாஜி என பெயரிட்டே தமிழகத்திற்கு தந்திருக்கின்றது.

இன்னும் ஏராளமான விஷயங்கள் அந்த திராவிட கோஷத்தில் உண்டு

திருவாரூர் தியாகராஜன் தன்னை முரசொலிமாறன் ஆக்கினார், இன்னும் பலர் அன்பழகன், நெடுஞ்செழியன் என தன்மான, சுயமரியாதை மிக்க பெயர்களை சூட்டிகொண்டனர்

ஆனால் ராமசந்திரன் மட்டும் ராமசந்திரனாகவே நீடித்தார்.

“நீ திராவிடன், இது பகுத்தறிவு இயக்கம், நாத்திக இயக்கம் ஆக கடவுள் பெயரை வைக்க கூடாது, மாறாக காத்தவராயன் என்றோ, காவுந்தியடிகள் என்றோ கோவலன் என்றோ மாற்றிக்கொள்..” என யாரும் சொல்லவே இல்லை

மாறாக ராமசந்திரன் ஆங்கிலத்தில் எம்ஜிஆர் என தன்னை சொன்னபொழுதும் கைதட்டிகொண்டிருந்தார்கள்

அன்றே ஒரு மாதிரி இயக்கமாகத்தான் இருந்திருக்கின்றது, கவனிக்கத்தான் யாருமில்லாமல் இருந்திருக்கின்றார்கள்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s