நமது பதிவுகள் எங்கெல்லாமோ செல்கின்றன

நமது பதிவுகள் எங்கெல்லாமோ செல்கின்றன, யாரெல்லாமோ எடுத்து போட்டுகொள்கின்றார்கள். நல்லது

அப்படியே இந்த குஷ்பூ பதிவுகளை யாராவது அவரிடம் சேர்த்தால் சங்கம் அவனுக்கு மிகுந்த நன்றியுடையதாக இருக்கும்

ஆனால் ஒருவருக்கும் எம் நன்றிக்குரியவனாக இருக்க விருப்பமே இல்லை என்பது மட்டும் புரிகின்றது.

காந்தி கொள்கைகளை பின்பற்றுவதால் தமிழகம் அமைதியாக உள்ளது : பன்னீர் செல்வம்

Image may contain: 2 people, close-up

காந்தி கொள்கைகளை பின்பற்றுவதால் தமிழகம் அமைதியாக உள்ளது : பன்னீர் செல்வம்

எவ்வளவு அருமையான வார்த்தைகள், அட பன்னீரும் இப்பொழுதெல்லாம் உண்மை பேசுகின்றார்.

பின்னே? அவரை முதல்வராகவும், இவரை துணை முதல்வராகவும் தமிழகம் மிக பெரும் சகிப்புதன்மையுன் பொறுத்துகொண்டிருக்கின்றது என்றால் அது காந்தி காட்டிய “அஹிம்சை” வழியாக அன்றி எதுவாக இருக்க முடியும்?

சத்தியசோதனை

 

ம.பொ.சிவஞானம் எனும் மயிலாப்பூர் பொன்னுசாமி சிவஞானம்

Image may contain: 1 person

தமிழுக்காக தமிழருக்காக‌ திமுக மட்டும் பாடுபட்டது என்பதே பெரிய பொய், அதனைவிட பெரும் பொய் சீமானின் கட்சியும் இன்னும் சில தமிழ் தேசிய அலப்பறை கட்சிகளும்.

ஆனால் தமிழுக்காக, தமிழருக்காக வாழ்ந்த மிக சிலர் உண்டு அதில் ஒருவர்தான் ம.பொ.சிவஞானம் எனும் மயிலாப்பூர் பொன்னுசாமி சிவஞானம்

கம்பராமாயணத்திலும், சிலப்பதிகாரத்திலும் அவ்வளவு ஆழ்ந்த அறிவு அவருக்கு இருந்தது. சிலப்பதிகாரத்தை அவர் சொல்லிய அளவிற்கு யாரும் சொல்லவில்லை இதனால்தான் “சிலம்பு செல்வர்” என அழைக்கபட்டார்.

திமு கழக தலைவர்கள் டமாரங்கள், ஆரவாரமாக தமிழ் ஒலி, இலக்கிய ஒலி எழுப்புவார்கள், எல்லாம் சும்மா. ஆனால் மபொசி போன்றோர் ஆலய மணி போன்றவர்கள். ஆனால் தமிழகம் டமார கூட்டம் பின்னால்தான் சென்றது

மபொ சிவஞானம் முதலில் காங்கிரசில்தான் இருந்தார், நாட்டுக்காக சிறை எல்லாம் அனுபவித்தார். பின்னாளில் காங்கிரஸ் எதிர்ப்பும், பிராமண எதிர்ப்பும் பேஷன் ஆகிவிட்ட காலம் அவரையும் இழுத்தது

அவரின் தமிழறிவும் தமிழுணர்வும் அப்படி இருந்தது, “தமிழரசு கழகம்” என ஒன்றை நடத்தினார்.

சென்னையினை தமிழகத்துடன் இணைத்த தீரமிகு போராட்டத்தின் காரணமே அந்த மபொசிதான், அவரின் போராட்டத்தின் விளைவே திருத்தணியும் தமிழகத்தோடு இணைந்தது

திருப்பதி முதல் திருவனந்தபுரம் வரை தமிழருக்கே என முழங்கிய முதல் மற்றும் ஒரே தமிழ் உணர்வாளர் அவர்தான். முழங்குதல் என்றால் கத்துதல் அல்ல‌

ஆதாரத்தோடும் வாதத்தோடும் பேசுவது.

அன்று காங்கிரஸ் அரசு அவருக்கு எதிர்ப்பாய் இருந்தது, திராவிட கட்சிகள் எல்லாம் திராவிடமே என மல்லாக்க கிடந்தன‌

அவருக்கு மட்டும் பெரும் ஆதரவு கிட்டியிருக்குமாயின் திருப்பதி முதல் திருவனந்தபுரம் வரை தமிழகத்தோடு இணைந்திருக்கும்.

தமிழக கிராம பாடல்களை மிகுந்த நுணுக்கத்தோடு ஆராய்ந்தார், அப்படி அவர் வெளிகொண்டுவந்ததுதான் கட்டபொம்மன் வரலாறு

அதுவரை கட்டபொம்மனை பற்றி யாருக்கும் தெரியவில்லை, அவன் பிரபலமில்லை. அப்படி ஒருவன் இருந்தான் போராடி செத்தான் என வெளிகொண்டுவந்தது ம.பொ.சி ஒருவர்தான்

இன்னும் ஏராளமான காரியங்கள் உண்டு

பாரதியாரை பற்றி பல நூல்கள் எழுதினார், பாரதி புகழ் இன்றுவரை நிலைத்து நிற்க அவரின் நூல்களும் காரணம்

இந்திய சுதந்திர தியாகிகளில் மிக உன்னதமான வ உ சிதம்பரனார் பற்றி பல நூல்களை எழுதி அவர் புகழை உயர பறக்க வைத்தவர் மபொசி.

வஉசிக்கு சிலை வைக்க அன்றைய காங்கிரசாரே தயங்கியதில் கடை கடையாக பிச்சையெடுத்து வ உசிக்கு சிலை வைத்த உத்தமன் மபொசி.

சிவாஜி நடித்த கப்பலோட்டிய தமிழன் திரைபடத்தை அவரே இயக்கினார்

வள்ளுவனை பற்றி, இராமலிங்க அடிகளாரை பற்றி அவர் எழுதிய அளவு யாரும் தமிழகத்தில் எழுதவில்லை

தமிழகத்தில் முதல் முதலாக சிலப்பதிகார விழாவினை நடத்திகாட்டியவர் மபொசி. இதற்கு பதிலாக அரசியல் காரணத்துடன் தொடங்கபட்டதுதான் உலக தமிழ்சங்க மாநாடுகள்

ஆக உலக தமிழ்சங்க மாநாடு நடக்க அடியெடுத்து கொடுத்தவரே மபொசிதான்

பெரும் ஆற்றலும், நுட்பமான தமிழுணர்வும் பெற்ற மபொசி ஏன் மற்ற திராவிட தலைவர்கள் போல பெரும் அடையாளம் பெறவில்லையென்றால் அவர் பகுத்தறிவு பேசவில்லை,பெரியார் வாழ்க ,அண்ணா வாழ்க, கலைஞர் வாழ்க என சொல்லவில்லை

அறிஞன் ராமசந்திரனை இதயகனியாக ஏற்கவில்லை, அரசியலுக்கே உரிய பல கோமாளிதனங்களை அவர் செய்யவில்லை.

இப்படிபட்ட படுபயங்கர பாவங்களை செய்ததால் அவர் புறக்கணிக்கபட்டார்

ஆனால் கலைஞருக்கு அவர் மீது உள்ளூர பாசம் இருந்தது. மபொசி கனவுகளான பூம்புகார் நிர்மானிப்பு, வள்ளுவர் கோட்டம், பாஞ்சாலங்குறிச்சி கட்டபொம்மன் கோட்டை எல்லாம் கலைஞர் கட்டினார்

அது ஆழமாக நோக்கினால் புரிய கூடியது.

தமிழக தலைவர்களில் மறக்க முடியாத மாமனிதர் மபொசி

இன்று அவரின் நினைவு நாள்

நரகாசுரன் முப்பாட்டன், இன்னும் யாரெல்லாமோ பாட்டன், நாங்கள் தமிழர்கள், நாங்கள் மட்டும்தான் தமிழர்கள் என குதிப்பவர்கள் யாரும் அவரை நினைக்க மாட்டார்கள்.

அவருக்கு அஞ்சலி செலுத்த கூட ஒரு பயலும் நினைப்பதில்லை

ஆனால் தமிழராக, தமிழ் இலக்கியவாதியாக, சொல்லும் செயலும் தமிழராக, எல்லை காத்த தமிழராக அவர் வாழ்ந்தார்

எல்லை காத்தவர் நிச்சயம் அவர்தான், சென்னையும் குமரியும் அவரால் இணைந்தன‌

ஆனால் சீமான் கோஷ்டியிடம் கேளுங்கள், எல்லை காத்தது வீரப்பன், மொழி காத்தது பிரபாகரன்

அந்த மூடர் கோஷ்டி அறிந்தது அவ்வளவுதான்.

தமிழரின் எல்லை காத்த தமிழன் நிச்சயம் மபொசி, தமிழர்கள் ஒருவனை தமிழுக்காகவும் , போராட்ட குணத்திற்காகவும் நினைக்கவேண்டுமென்றால் அதில் மபொசியும் இருப்பார்

அவர் இல்லையென்றால் சென்னை இன்று சந்திரபாபு நாயுடுவின் கீழ் இயங்கிகொண்டிருக்கும்

அங்கிள் சைமன் போன்றோர் இது தமிழர் மண் என பேசிகொண்டிருக்க முடியாது.

பிரபாகரனுக்கும், வீரப்பனுக்கும் அஞ்சலி செலுத்தும் தமிழகத்தில் எல்லை காத்த மபொசியினை நினைத்து பார்க்க யாருமில்லை,

அந்த அளவு குறுக்கு புத்தியுள்ள பைத்தியக்காரன் எல்லாம் தமிழுணர்வு, உணர்வாளன் என கிளம்பியிருக்கின்றான்.

நாம் நல்ல‌ தமிழர், நன்றி மிக்கோர் நல்ல இந்தியனாய். தமிழனாய் வாழ்ந்த அந்த மபொசிக்கு ஆழ்ந்த அஞ்சலி செலுத்துவோம்

சென்னையில் இருப்பவர்கள் கூடுதல் அஞ்சலி செலுத்தலாம்

 

தமிழகம் விழித்துகொள்ளட்டும், டெங்குவிலிருந்து விடுதலை பெறட்டும்

No automatic alt text available.

டெங்கு காய்ச்சல் வேகமாக பரவுகின்றதாம், அரசினை முழுமையாக சாட முடியாது. இதில் மக்கள் விழிப்புணர்வும் மகா அவசியம்.

காய்ச்சலில் டெங்கி மற்ற காய்ச்சலை விட கொடூரமானது, இதன் அபாயம் என்னவென்றால் இது முற்றிவிட்டால் மருந்தே இல்லை

டெங்கு உடலை பாதிப்பது எப்படியென்றால் ரத்தத்தில் உள்ள அணுக்களின் எண்ணிக்கையினை குறைக்கும், அது குறைய குறைய உடல் நலம் பாதிக்கும்

கடைசி கட்டத்தில் ரத்தம் கசிய எமன் தோன்றும் நேரம் வந்துவிடும்.

கடுமையான குறையாத காய்ச்சல், வாந்தி , தலைவலி தோலில் ஒரு மாதிரியான தடிப்பு இருந்தால் உடனே மருத்துவரை பார்ப்பது நல்லது, ரத்த பரிசோதனை செய்து முடிவினை தெரிந்து கொள்வது அதனை விட நல்லது.

டெங்கிக்கு என்று சிறப்பு மருந்து, சிகிச்சை ஏதுமில்லை என்பதுதான் சோகம். காய்ச்சலை குறைக்கும் மருத்துகளை கொடுத்து ரத்த அணுக்களின் எண்ணிக்கையினை அதிகபடுத்தித்தான் குணமாக்கலாம்.

டெங்கு கொடூரமான நோய்தான். ஆனால் ஆண்டவன் படைப்பில் ஒவ்வொரு நோய்க்கும் ஒரு பலவீனம் இருக்கும், அது டெங்குவிற்கும் உண்டு

அதாவது இது ஏடிஸ் எனப்படும் கொசு மூலம் மட்டுமே பரவும், டெங்கு கண்டவரை கடித்த ஏடிஸ் கொசு உங்களை கடித்தால் உங்களுக்கும் வரும், மற்றபடி தொற்றுநோய் வகையில் டெங்கு வராது.

ஏடிஸ் கொசுதான் டெங்கு காய்ச்சலின் மூலவர், பிதாமகன் எல்லாம். அவரின்றி பரவாது டெங்கு

அந்த ஏடிஸ் கொசுவிற்கும் சில நல்ல குணம் உண்டு, எல்லா நீரிலும் அது வளராது. நல்ல நீர் வேண்டும். நல்ல நீர் என்றால் குடிநீர் தொட்டி, பூந்தொட்டிகளில் தேங்கும் நீர், வீட்டு உபயோக நீரை சேர்க்கும் பாத்திரம் என எதுவாக இருந்தாலும் அதில்தான் வளரும்

நல்ல நீரை தேங்கவிடாமல் பார்த்துகொண்டால், சாக்கடை சேராமல் பார்த்துகொண்டாலே டெங்கு பரவாது.

ஏடிஸ் கொசுவின் இன்னொரு நல்ல குணம் அது அதிகாலையில் கடிக்கும் அல்லது மாலையில் கடிக்கும் என ஆய்வுகள் சொல்கின்றன, அம்மாதிரி நேரத்தில் கவனமாய் இருப்பது நல்லது.

டெங்கிக்கு முதல் தடுப்பு சுற்றுபுறத்தை நீர் தேங்காமல் பார்த்துகொள்வது, சென்னை போன்ற நெருக்கமான வீடுகள் உள்ள பகுதியில் மக்கள் இணைந்து செய்யாமல் இது சாத்தியமில்லை.

ஒருவர் சுத்தமாக வைக்க, அடுத்தவர் நீரை தேங்கவிட்டால் அவ்வளவுதான். ஏடிசுக்கு என்ன தெரியும்? அதற்கு எல்லோரும் ஒன்றுதான். இவர் சுத்தமாக வைத்திருந்தார் அய்யோ பாவம் என்றேல்லாம் அது பார்ப்பதில்லை.

டெங்கு அறிகுறி கண்டுவிட்டால் உடனே மருத்துவமனைக்கு கொண்டு செல்வதும் சால சிறந்தது, நோயாளியினை தனிமைபடுத்தி சிகிச்சையளிப்பது நல்லது

பப்பாளி இலை சாறும், நிலவேம்பு கஷாயமும் டெங்கி காய்ச்சலுக்கு சிறந்த மருந்து.

இன்றும் கிழக்காசியாவில் ஆண்டுக்கு ஆயிரகணக்கானோரை கொல்லும் கொடூர காய்ச்சல் அது. ஆனானபட்ட சிங்கப்பூரே அதனை வெல்ல முடியவில்லை, முடியவும் முடியாது

மிக மிக விழிப்பாக இருந்தால் அதனோடு ஆடும் கண்ணாமூச்சியில் ஜெயிக்கலாம், கொஞ்சம் அசந்து அது முதல் குத்து குத்தும்பொழுதே தெரிந்துகொண்டால் பிழைக்கலாம்

அசால்ட்டாக விட்டுவிட்டால் அது மாபெரும் வெற்றியினை தட்டி பறிக்கும்

இம்மாதிரி நோய்களை கட்டுபடுத்தவும், ஒழிக்கவும் மக்கள் ஒத்துழைப்பும் வேண்டும், சரியான முன்னேற்பாடுகளை செய்யாமல் அடிக்கும் கொசுமருந்து பலனில்லாதது.

அதே நேரத்தில் அரசும் முழு விழிப்புணர்வினை மக்களுக்கு கொடுக்க வேண்டும்

அரசு மட்டுமல்ல தனியார் மீடியாக்களும் இதனை அரசை குற்றம் சொல்லும் விஷயமாக கருதாமல், மக்கள் உயிர்காக்கும் விஷயமாக பொறுப்புணர்ச்சியோடு விழிப்புணர்வு தகவல்களை தரவேண்டும்.

தமிழ்நாட்டில் அரசியலுக்காக தொலைகாட்சி நடத்தபடும் சோகம் இருப்பதால் இதனை அவைகள் செய்யாது. ஆனால் நல்ல மீடியாக்கள் டெங்கு அபாயத்தை எடுத்து சொல்ல வேண்டும். அரசியலுக்காக அதனை செய்யாமலிருப்பது மகா பாவம்.

தொலைகாட்சியோ, எப்.எம் ரேடியோவோ எதுவாக இருந்தாலும் சரி, மக்களை காக்கும் தகவல்களை கொடுக்கட்டும்

தமிழகம் விழித்துகொள்ளட்டும், டெங்குவிலிருந்து விடுதலை பெறட்டும்

 

தினகரனை கைது செய்ய தனிப்படை அமைப்பு

மத்திய மாநில அரசுக்கு எதிராக துண்டு பிரசுரம் வழங்கியதால் தினகரன் மீது நடவடிக்கை , கைது செய்ய தனிபடை அமைப்பு : செய்தி

என்னது துண்டு பிரசுரம் கொடுத்ததற்கு கைதா?

இந்த சைமன், கவுதமன் எல்லாம் எவ்வளவு பகிரங்கமாக பேசிகொண்டிருக்கின்றார்கள்.

அதுவும் கவுதமன் பொதுசபையிலே தெற்கே காஷ்மீர் உருவாகும் என பேசியிருக்கின்றான்

அங்கிள் சைமன் அந்நியநாட்டு தீவிரவாதி படத்தையே பிடித்துகொண்டிருக்கின்றார், காஷ்மீரின் யாசிக் மாலிக்கை எல்லாம் அழைத்துவந்து இந்தியா சிதறும் என்றெல்லாம் மிரட்டியிருக்கின்றார்.

இவர்கள் மீது எல்லாம் நடவடிக்கை எடுக்காமல், தினகரனை மட்டும் தேடுவார்களாம்

தினகரன் மாநில மத்திய அரசை கண்டித்தார் என கைது செய்யும் முன் என்னவெல்லாமோ பேசும் இந்த பிரிவினைவாதிகளை பிடித்து அடைக்க்கவேண்டுமா வேண்டாமா?

ஆனாலும் மோடியினை, பழனிச்சாமியினை கண்டிப்பவர்களை சிறையில் அடைக்க்க வேண்டுமென்றால் இடம் இருக்குமா?

இந்தியா முழுக்க வேலி தான் போடவேண்டும்

நோபல் அறிவிப்புகள் வர தொடங்கிவிட்டன

நோபல் அறிவிப்புகள் வர தொடங்கிவிட்டன, ஜெயலலிதாவிற்கு நோபல் வேண்டும், ஆஸ்கர் வேண்டும், புலிட்சர் வேண்டும்

இன்னும் உலகில் உள்ள அத்தனை விருதும் வேண்டும் என கேட்ட அதிமுககாரன் ஒருவனிடமிருந்தும் சத்தமே இல்லை.

ஜெயாவிற்கு நோபல் இல்லை என்றால் இந்த உலகை அழித்துவிடுவோம், வடகொரிய அதிபரிடம் அணுகுண்டு கடன் வாங்கி வீசுவோம் என கிளம்புவார்கள் என எதிர்பார்த்தால் சத்தமே இல்லை.

கமல் குறித்து ரஜினி பேசியதின் அர்த்தம் என்ன‌ தமிழருவி மணியனின் விளக்கம்

கமல் குறித்து ரஜினி பேசியதின் அர்த்தம் என்ன‌ தமிழருவி மணியனின் விளக்கம்

அதாகபட்டது சிவாஜி மணிமண்டப விழாவில் ரஜினி கமலைபற்றி பேசினார், வழக்கம் போல தலையினை பிய்த்ததுகொள்ள வைக்கும் பேச்சு அது. சிவாஜி கணேசன் இருந்தால் “அட கொப்புரான. நீ ஏம்ப்பா தமிழ் படிச்சே” என அழுதிருப்பார்

அப்படி வழக்கம் போல பேசினார் ரஜினி

இதற்குத்தான் அர்த்தம் சொல்கின்றாராம் தமிழருவி

ரஜினி ஏதோ கம்பராமயாணம், குறள் போன்ற அழியா செய்யுளை அவ்வையார் பாணியில் சொல்லிவிட்டதை போல இவர் அதற்கு பொழிப்புரை எழுதிகொண்டிருக்கின்றார்

தமிழில்தானே சொன்னார் ரஜினி, அதில் என்ன உருப்படியாக இருந்தது? இதற்கு இவரின் அருஞ்சொற்பொருள் வேறு

மாணவர்களுக்கு நடிகர் சிவகுமார் அறிவுரை

Image may contain: 1 person, smilingஒரு நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு நடிகர் சிவகுமார் அறிவுரை சொல்லிகொண்டிருந்தார், நிகழ்ச்சி முடியும் பொழுது அறிவுரை பெற்றோருக்கு சென்றது

“பெற்றோர்களே, உங்க பையன் ஒரு பெண்ணை மனமார நினைத்தால் அவளுக்கே கட்டிவைத்துவிடுங்கள்

இன்னொரு பெண்ணை கட்டிவைத்தால் அவன் அவளோடு வாழமாட்டான் (சொல்லிவிட்டு முறைக்கின்றார்)

Image may contain: 1 person, smiling, close-upஅந்த பெண்ணும் மகிழ்ச்சியாக வாழமாட்டாள், இப்படி இருவர் வாழ்வும் பாழாகும் இதனை காணும் உங்கள் மனமும் நொந்து போகும்.

உங்கள் வறட்டு கவுரத்திற்காக பலபேர் வாழ்வை கெடுக்காதீர்கள். மகன் / மகள் விரும்பியது யாராயினும் சாதி, மதம், இனம் பாராமல் கட்டி வையுங்கள்”

எல்லாம் தமண்ணா அந்த கூட்டத்தில் இல்லை என்ற தைரியம்தான் வேறேன்ன?

அம்மணி மட்டும் அங்கு இருந்திருக்க வேண்டும், பிதாமகன் லைலா போல ஆடி தீர்த்திருப்பார்.

 

ஜெர்மானியர்கள் தடையாக இருந்த சுவரை இடித்தார்கள் இணைந்தார்கள்

Image may contain: one or more people, people standing, people walking, crowd and outdoorஇரண்டாம் உலகபோரில் பெரும் தோல்வி கண்டது ஜெர்மனி, அதன் பின் இரு நாடுகளாக பிரியும் படி கத்திவீசபட்டது.

மேற்கு ஜெர்மன், கிழக்கு ஜெர்மன் என பிரிக்கபட்டது. ஒன்றிற்கு அமெரிக்காவும் இன்னொன்றிற்கு சோவியத்தும் பொறுப்பேற்றன‌

பிரமாண்ட பெர்லின் சுவரும் கட்டபட்டது

மேற்கில் முதலாளித்துவமும், கிழக்கே கம்யூனிசமும் கொள்கையாக்கபட்டன‌

ஆனால் மக்கள் ஜெர்மானியர்களாகவே உணர்ந்தனர், வாய்ப்புக்காக காத்திருந்தனர். சோவியத் உடைய மக்கள் எழுந்தனர்

கிட்டதட்ட 45 வருட பிரிவினை இணைத்தனர், அந்த சுவரும் உடைபெற்றது

வரலாற்றில் பிரிக்கபட்ட நாடு இணைந்த அதிசயம் இதே அக்டோபர் 3ல்தான் நடந்தது

வரலாற்றினை கண்டால் சில நாடுகள் இப்படி இணைந்திருக்கின்றன‌

வட தென் வியட்நாமினை ஒரே வியட்நாம் ஆக்கினார் ஹோ சி மின்.

நாளையே அந்த வெள்ளை தக்காளி மாரடைப்பில் செத்தால் அல்லது டெங்கி காய்ச்சலில் செத்தால் வடகொரியா தென்கொரியாவும் இப்படி இணையாலாம்

ஜெர்மனிக்கு குறுக்கே சுவர் இருந்தது இணைந்துவிட்டார்கள், ஆனால் இந்தியா பாகிஸ்தானுக்கு இடையே என்ன சுவர் இருக்கின்றது?

ஆனால் மதம் எனும் வெறிபிடித்த மிருகம் காவல் இருக்கின்றது, மக்கள் இணைய விரும்பினாலும் அந்த மிருகம் விடாது, மக்கள் துணிந்தால் அவர்கள் ரத்தத்தை ஓடவிட அந்த மிருகம் கிளம்பும்.

ஜெர்மானியர்கள் தடையாக இருந்த சுவரை இடித்தார்கள் இணைந்தார்கள்

இந்தியாவிலோ மசூதியினை இடிக்கின்றார்கள், இப்பொழுது தாஜ்மகாலையே பார்த்து முறைகின்றார்கள் அந்த மிருகம் சாகாமல் பார்த்துகொண்டே இருக்கின்றார்கள்.

ஆனால் இளைய தலைமுறை மீது மீது நம்பிக்கை இருக்கின்றது, இரு தேசமும் மதவெறியால் நாசமானதை அவர்கள் கவனித்துகொண்டிருக்கின்றார்கள். அவர்கள் புதுபாதை காண கிளம்புகின்றார்கள்.

ஒருநாள் அம்மிருகம் சாகும், வருங்கால சந்ததி அதனை செய்யும், ஜெர்மனி போல இத்தேசமும் இணையும்


அனைத்து இந்தியர்களின் ஒற்றுமையால்தான் தூய்மை இந்தியாவை சாதிக்க முடியும் : மோடி

பின்னே? ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதன் தோழமைகள் மட்டும் என்ன சாதிக்க முடியும்?

 


தமிழக மக்கள் நடிகர்களுக்கு ஓட்டுப்போட மாட்டார்கள்: சீமான்

Image may contain: 3 people, people smilingதமிழக மக்கள் நடிகர்களுக்கு ஓட்டுப்போட மாட்டார்கள்: சீமான்

ஏம்பா, நீர் கூடத்தான் பல படங்களில் நடித்தீர், அப்படியானால் நடிகர் என்பதர்காகத்தான் ஒரு பயலும் வோட்டு போடவில்லையா?

நடிகனுக்கு விழாத வோட்டு இயக்குநருக்கு மட்டும் விழுமா அங்கிள்?

(இந்த படம் என்ன? பிரபாகரன் ஆட்சியில் ஈழத்தில் போலிஸ் கமிஷனாராக இருந்தபொழுது எடுத்ததா?)