நான் இறக்கை விரித்து பறக்க இந்த முகநூல் நண்பர்களே காரணம்

சொந்த ஊர் என்பது யாராலும் மறக்க முடியாதது, திரும்ப திரும்ப நெஞ்சில் மோதும் நினைவு அலை அது.

அப்படி எங்கள் கிராமத்திற்கும் ஒரு முகநூல் பக்கம் உருவாக்கினார்கள், நெஞ்சில் தேங்கி இருந்த நினைவுகளை எல்லாம், அந்த ஊரின் வரலாற்றையும் , பல சம்பவங்களையும் அதில்தான் பதிந்திருந்தேன்

இது யாரோ குறுக்குமூளைக்காரன் மூளையில் விபரீத சிந்தனைகளை ஏற்படுத்திவிட்டது.

இவன் ஊரின் அமைதியினை குலைக்கின்றான், பெரும் கலவரத்திற்கு திட்டமிடுகின்றான், உடனே காவல்துறையில் சிக்க வைக்கவேண்டும் என சிலர் கிளம்பினார்கள்.

(இருப்பது 4 தெரு, மொத்த வீடு 45 அதில் பாதியில் ஆட்களே இல்லை, அந்த ஊரில்தான் நான் கலவரம் ஏற்படுத்துவேனாம், அவர்கள் கற்பனை அப்படி

அப்படிபட்ட பெரும் அறிவாளிகள் உள்ள ஊரில் அவதரித்திருக்கின்றேன்)

81 வயதான , இணையமே தெரியாத ஏன்? கண்பார்வை தெரியாத மூதாட்டி ஒன்றும், அந்த ஊரின் குளத்துகரை தவிர , 4 மாடுகளை தவிர ஏதும் அறியாத அப்பாவி முதியவர் ஒருவரிடமும் அக்கும்பல் முறையிட்டது

அவ்வளவுதான் எழுதபடிக்க தெரியாத அவர்கள் எம் பெற்றோரிடம் முறையிட்டனர், உன் மகன் ஏதோ எழுதிவிட்டான், ஊர் கட்டுபாட்டை மீறிவிட்டான் இனி உங்களை ஊரைவிட்டே ஒதுக்கிவிடுவோம், அன்னம் தண்ணி புழங்கமாட்டோம்

உன் மகன் ஒரு குதர்க்கவாதி, சமூக விரோதி இந்த மாபெரும் ஊரின் மகிமையினை கெடுக்க பிறந்த இழிபிறப்பு (ஊரில் மொத்தமே 4 வீடுதான்) என கடும் எச்சரிக்கை செய்தார்கள்

ஆம் முறையிட்ட இருவருக்குமே எழுதபடிக்க தெரியாது, இணையம் தெரியாது, ஒரு மண்ணாங்கட்டியும் தெரியாது , ஆனால் மிரட்ட மட்டும் தெரியும்

போனில் கதறினார் தாய், தந்தையின் அழுகுரல் அன்றுதான் ஒலித்தது, என்ன சொன்னாலும் கேட்கவில்லை

“நீ உருப்படமாட்டேன்னு தெரியும், ஆனால் இப்படி ஊரில் அடிபட்டு நாசமாய் போவாய் என தெரியாது, இனி நாங்கள் உயிரோடு இருக்கவேண்டுமானால் இந்த ஊரைபற்றி எழுதாதே..” என சத்தியம் வாங்கினர்.

அப்படி யாரையும் பழித்தோ, இழித்தோ ஒருவார்த்தையும் எழுதவில்லை. சிறுவயது நினைவுகளை பதிந்தேன் , தேடிபிடித்த வரலாறுகளை பதிந்தேன். என்ன குற்றம்? என கதறி நின்றாலும் கேட்பார் யாருமில்லை

உண்மையில் அது வலி, அந்த ஊர் தோன்றிய விதம் குறித்து பெரும் ஆராய்ச்சி செய்திருந்தேன், ஒவ்வொரு தெருவின் வரலாறும் வித்தியாசமாக இருந்தது

நாயக்க மன்னர்கள் காலத்தில் உருவான குளமும் ஊரும் அது, எங்களுக்கு முன்னால் தெலுங்கு மக்கள் வசித்திருக்கின்றார்கள், நாங்கள் அங்கு பின்னால் வந்தவர்கள்

அந்த ஊரில் ஆலயமும் அதன் வரலாறும் தேடி தேடி எடுத்தது, இன்னும் ஏராளமான விஷயங்களுக்கு எங்கெல்லாமோ தேடி எடுத்தேன்

ஆனால் கொஞ்சமும் கண்டுகொள்ளாமல், பெரும் பழிசுமத்தி விரட்டினார்கள், ஆறா ரணம் அது.

அத்தோடு அப்பக்கம் முடிந்தது, வெளியே வந்துவிட்டேன்.சொந்த ஊரைபற்றி எழுதாமல் என்ன எழுத்து என கொஞ்சகாலம் வனவாசமும் போய்விட்டேன்

அதன்பின் உலகமும் அரசியலும் சினிமா ரசனையுமாக பதிய ஆரம்பித்தேன், உண்மையில் இப்படி எல்லாம் எழுத முடியும் என்றோ, இத்தனை பேரை நண்பராக்க முடியும் என்றோ சத்தியமாக நினைத்ததில்லை

இப்பொழுது எனக்கே அச்சமாக இருக்கின்றது, நண்பர் கூட்டம் பெருகிவிட்டது, யார் யாரெல்லாமோ நம்மை கண்க்காணிக்கின்றார்கள், சிலர் பகிரங்கமாக, சிலர் ரகசியமாக‌

அப்படி நெல்லை மாவட்ட சன்டிவி நிருபரும் நம்மை கவனித்திருக்கின்றார். சமூகத்தின் பெரும் மதிப்பு மிக்கவர் அவர்

கடந்தவாரம் ஒரு நிகழ்வில் என் அன்னையினை சந்தித்திருக்கின்றார் , என்னை பற்றி விசாரித்திருக்கின்றார், நம் எழுத்துக்களை சொல்லியிருக்கின்றார்

இப்பொழுதுதான் இதய அறுவை சிகிச்சை செய்த தாய்க்கு பெற்ற வேதாளம் மறுபடியும் முருங்கை மரம் ஏறியதாக மயக்கம் வந்திருக்கின்றது.

ஆனால் அவர் நல்லவிதமாக சொல்லியிருக்கின்றார், நாம் மிக சிறந்த எழுத்தை கொடுப்பதாகவும் நாம் இந்தியா வரும்பொழுது அவசியம் சந்திப்பதாகவும், அந்த மிகசிறிய ஊரில் இருந்து ஒருவன் இப்படி எழுதுவது பெரும் விஷயம் எனவும் சொல்லியிருக்கின்றார்

திட்டியே தீர்க்கும் தந்தைக்கு அன்று கண்ணீர் கட்டிற்று

“நீ நல்லா எழுதிரியாம், எல்லோருக்கும் பிடிக்குமாம் ஆனா இந்த பாவிபய ஊருலதான் உன்ன புரிஞ்சிக்க யாருமில்ல, வெளியூரிலியாது ஆள் இருக்கு அத நினைச்சி சந்தோஷபட்டுக்க”

உண்மையில் மிக நெகிழ்ச்சியான விஷயம் அது. ஆக சிறந்த எழுத்துக்களை அந்த ஊருக்காகத்தான் எழுதினேன்

ஆனால் பன்றிமுன் போட்ட முத்தாகிவிட்டது போகட்டும்

என் மீது ஊரில் விழுந்த பெரும் கறையினை தீர்க்க உதவிய அந்த நண்பருக்கு மிக்க நன்றி, நிச்சயமாக அவர் நன்றிக்குரியவர்.

அப்படியே நடக்க முடியாத காலத்திலும் வீட்டிற்கு வந்து மிரட்டிய அந்த மூதாட்டிக்கும் அவர்களை தூண்டி விட்டவர்களுக்கும் நன்றி

இல்லாவிட்டால் அந்த 4 தெருக்களை மட்டும் எழுதி, உலகில் காணாமலே போயிருப்பேன்.

கவனித்துகொண்டிருந்த தெய்வம் பெரும் ஆறுதலை கொடுத்திருக்கின்றது.

தாயும் தந்தையும் நம்மை புரிந்துகொண்டபின் மனம் புத்தம் புது உற்சாகம் கொள்கின்றது,

பெரும் விலங்கொன்று தகர்ந்தது போலவும், பெரும் பாரம் இறக்கி வைக்கபட்டதை போலவும் உணர்கின்றேன்

கோழிகளோடு குப்பை கிண்டிகொண்டிருந்த கழுகொன்று தன் இறக்கை விரித்து பறக்க இந்த முகநூல் நண்பர்களே காரணம்

உண்மையில் மோடிக்குத்தான் வெற்றி

Image may contain: 1 person, suitImage may contain: 1 person, close-upஅந்த சோவியத் யூனியன்உலகை மிரட்டிகொண்டிருந்தது, உலகம் அது பெரும் சக்தி என நம்பியது. அந்த அளவு பணம், ஆயுதம்,விண்வெளி ஆராய்ச்சி என உலகை ஆட்டியது.

எல்லாம் கார்பசேவ் ஆட்சிக்கு வரும் வரைக்கும்.

கோர்பசேவ் உண்மையினை உணர்ந்தார். பிரஷ்ணோவ் காலத்திலே சோவியத்தின் பொருளாதாரம் ஓய்ந்திருந்தது. கார்பசேவ் ஆட்சிக்கு வரும்பொழுது ஒன்றுமேயில்லை. உண்ண உணவில்லாத நிலையில்தான் அத்தேசம் வறட்டு கவுரவத்திற்காக யுத்தமும், விண்வெளி, அணுசக்தி செலவுகளும் செய்துகொண்டிருந்தது.

கார்பசேவ் பல நடவடிக்கைகளை எடுத்தார், ஆனாலும் புரையோடிபோயிருந்த சோவியத்தி அவர் கொடுத்த பெரோஸ்திகா எனும் சீர்திருத்தம் எதிர்வினையாற்றியது, சோவியத் யூனியன் சிதறியது.

உண்மையில் அதன் உண்மை தன்மையினை உலகிற்கு சொன்னவர் கார்பசேவ், ஊதி பெரிதாக்கபட்டிருந்த அந்த பெரும் பிம்பத்தை அவரின் நடவடிக்கைகள் உடைத்து உண்மை முகத்தை காட்டின‌

உலகம் அந்த உண்மையினை உணர்ந்தது, ரஷ்யர்களும் உணர்ந்தனர். ஆயுதம் தூக்காமல் ரஷ்ய ராணுவமும் அமைதி காத்தது. ஆம் கார்பசேவ் செய்ததில் உண்மை இருந்தது

பின்பு நோபல் பரிசும் அவருக்கு வழங்கபட்டது.

100 ஆண்டுகளுக்கு முன்னால் உருவாக்க்கபட்ட சோவியத் யூனியன் இப்பொழுது இல்லை எனினும் அந்த புரட்சியின் 100 ஆண்டு கொண்டாட்டம் தொடங்க உள்ள நிலையில் கார்பசேவ் நினைக்கபடுகின்றார்

அவரை சோவியத் யூனியனை உடைத்தவர் என்றோ, துரோகி என்றோ, திறமையற்றவர் என்றோ யாரும் திட்டவில்லை, மாறாக உண்மையினை உணர்ந்துகொண்டார்கள்

இப்பொழுது இந்த கதை எதற்கு என்றால் விஷயம் இந்தியாவோடு பொருந்துகின்றது

கருப்புபணம் ஒழிக்க மோடி எடுத்த நடவடிக்கைகள் விமர்சிக்கபடுகின்றன, யாரால் விமர்சிக்கபடுகின்றன பெரும் பொருளாதார சக்திகள், தொழிலதிபர்கள் என பணம் புழங்கும் எல்லோராலும் விமர்சிக்கபடுகின்றன‌

இந்திய யதார்த்தம் என்ன?

சுதந்திரம் பெற்ற புதிதில் தேர்ந்த நடத்த காந்தியும் நேருவும் டாட்டா போன்றவர்களிடம் கையேந்தும்பொழுதே இத்தேசத்தில் பணக்காரர்களுக்கும் தொழிலதிபர்களுக்கு ஆதரவான சட்டமே இயற்றபட்டது. அந்நாளைய வளர்ச்சிக்கு அது தேவையும் இருந்தது

அந்த தொழில் வளர்ச்சியில் கருப்பு வெள்ளை என எல்லா பணமும் புகுந்து இந்திய தேச பொருளாதாரம் பெரும் பிம்பம் காட்டிற்று

தொழிலதிபர்களை, பணக்காரர்களை பகைத்துகொண்டு எந்த அரசும் ஆளமுடியாது என்பதுதான் இந்திய யதார்த்தம், காந்தி காலத்திலிருந்தே அதுதான்

மோடி சில நடவடிக்கை மூலம் அதனை மாற்ற முயன்றார், ஆனால் அவருக்கு ஒத்துழைப்பு எப்படி இருந்தது?

வங்கிகள் பெரும் தொழிலதிபருக்கும், அரசியல்வாதிகளுக்குமே ஒத்துழைத்தனர். எல்லோரும் கருப்பை வெள்ளையாக்குவதிலே குறியாயிருந்தனர், இதில் அதிகாரிகள், தொழிலதிபர்கள் என எல்லோரும் உண்டு

மோடிக்கு அரசு இயந்திரம் முழு ஒத்துழைப்பு வழங்கவில்லை, ஓரளவு வழங்கிய ஆதரவில்தான் இப்படி பொருளாதார தேக்கம் வந்து நிற்கின்றது.

கார்பசேவ் நொறுக்கிய சோவியத்தின் பொய் பிம்பம் போல, இந்திய பொருளாதாரம் பற்று உருவாக்கபட்ட மாய பிம்பமும், அதனை உருவாக்கி நின்ற கருப்பு பணமும் நொறுங்கி கிடக்கின்றது.

கருப்புபணம் ஒழிக்கும்பொழுது பொருளாதாரம் பாதிக்கபடுகின்றது என்றால் அந்நோக்கம் வெற்றிபெறுகின்றது என்றே அர்த்தம், அந்த அளவில் கருப்பு பண புழக்கம் இருந்திருக்கின்றது

பாதிக்கபட்டவர்கள் கையில் மீடியா இருக்கின்றது, இன்னு பல விஷயம் இருக்கின்றது, மோடி தோற்றுவிட்டார் என சொல்லிகொண்டே இருக்கின்றார்கள், சொல்லட்டும்

கார்பசேவ் நினைத்திருந்தால் சோவியத்தின் பிம்பத்தை தொடர்ந்திருக்கலாம், முரட்டு ஆட்சி நடத்தியிருக்கலாம், மோசடி வேலை செய்திருக்கலாம்

ஆனால் அவர் சீர்திருத்தம் செய்தார், மானியங்களை குறைத்தார், வெட்டி செலவுகளை குறைத்தார், இன்னும் என்னவெல்லாமோ செய்தார் நிலமை எல்லை மீறி போயிற்று

மோடி அப்படித்தான் மானிய ஒழிப்பு முதல் இன்னும் பல விஷயங்களை செய்கின்றார், கோர்பசேவின் பெரஸ்திகாவிற்கும் மோடியின் சீர்திருத்தங்களுக்கும் வித்தியாசமில்லை

பிரஸ்னோவ் செய்த தவறுகள், சோவியத் பொருளாதாரம் மானிய திட்டங்களாலால் நாசமானதை தடுக்கத்தான் கோர்ப்சேவ் திட்டமிட்டார்.

மோடியின் நடவடிக்கைகளும் அந்த கோர்பசேவினை ஒட்டித்தான் இருக்கின்றது, மோடிக்கு என்ன வந்தது? 5 ஆண்டுகள் பொம்மை போலிருந்து சென்றுவிட அவருக்கு முடியாதா?

ஆனால் கார்பசேவ் போல சவால் எடுக்கின்றார் அல்லவா? அது நிச்சயம் கவனிக்கதக்கது.

உலகம் உண்மையினை அன்று சொன்ன கார்பசேவினைத்தான் “உண்மையான ரஷ்ய புரட்சி” செய்தவர் என சொல்லி அவருக்கு நோபல் எல்லாம் கொடுத்தார்கள்.

அப்படி மோடியினை இந்தியர் திட்டிகொண்டிருந்தாலும் மோடி செய்திருப்பது மகா துணிச்சலான காரியமே. பொய்பிம்பத்தை நொறுக்கி போட்டிருக்கின்றார்

உண்மையில் மோடிக்குத்தான் வெற்றி.

இப்படி சொன்னால் நிச்சயம் பொங்கி வந்து சாடுவார்கள், கொதிப்பார்கள். ஆனால் உண்மை என்பது இதுதான்

 

கேரளா கோயில்களில் தலித் மற்றும் பழங்குடி மக்கள் பூசாரிகளாக தேர்வு

கேரளா கோயில்களில் தலித் மற்றும் பழங்குடி மக்கள் பூசாரிகளாக தேர்வு

கிட்டதட்ட 90 வருடங்களுக்கு முன்பு அந்த ஈரோடு சிங்கம் வைக்கம் கோவிலில் தட்டிய கதவு இப்பொழுது திறந்திருக்கின்றது.

இந்த செய்தி கேள்விபட்டவுடன் அந்த கிழவனும் வைக்கம் கோவில் போராட்டட்திற்காக அவன் கண்ட சிறையும் நினைவுக்கு வந்தே தீரும்


கோமாளி ராமசந்திரன்” புரட்சி தலைவராகவும்” , ஆட்டக்காரி ஜெயலலிதா “புரட்சி தலைவியாகவும்” கொண்டாட பட்ட கூட்டத்தில், ஒரு மர்மமான‌ கிரிமினல் “தியாக தலைவி” என கொண்டாடபடுவதில் என்ன ஆச்சரியம்?