30 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில்தான்….

30 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில்தான் இந்திய அமைதிபடையுடன் புலிகள் மோத தொடங்கினர்.

முதல் நாளே புலிகளின் அனுதாபிகள் தமிழகத்தில் கத்த தொடங்கினர், அந்நாளைய முதல்வர் ராமசந்திரனிடமிருந்து பதிலே இல்லை

ராஜினாமா செய் என யாரும் ராமசந்திரனை கேட்கவுமில்லை, அவர் செய்யவுமில்லை, ராஜிவிற்கும் அவருக்கும் கூட்டணி எல்லாம் இருந்த நேரமது

இதற்கு இருமாதங்களுக்கு முன்புதான் டெல்லி அசோகா ஹோட்டலில் பிரபாகரன் முரண்டுபிடிக்க அவரை வழிக்கு கொண்டுவர ராமசந்திரனும் சென்றிருந்தார்

பின் “என்னை விட்டால் போதும் சாமி” என சொல்லிவிட்டு தமிழகத்திற்கு வந்துவிட்டார்.

அமைதிபடையினை எதிர்த்து ராமசந்திரன் ஒருவார்த்தையும் பேசவில்லை, பேசியிருந்தால் அது அன்று அமைதிபடையினை எதிர்த்த கலைஞரை ஆதரித்ததாகிவிடும் என்ற அரசியல் அதில் இருந்தது.

தமிழகமே பொங்கி நின்றபொழுதும் ராஜிவ்காந்தியுடன் தான் வலம் வந்தார் ராமசந்திரன்

அப்பொழுதெல்லாம் “ஏய் இனதுரோகி ராமசந்திரா..” என்றெல்லாம் யாரும் கேட்கவில்லை

ஈழதமிழருக்கு எதிராக ராமசந்திரன் செய்த இக்காரியங்களை எல்லாம் யாரும் பேசமாட்டார்கள், தமிழக நிலவரம் அப்படி.

ராமசந்திரனின் நூற்றாண்டு விழாவில் இந்த அவரின் பல்டிகளையும் சேர்த்துகொள்ளவேண்டும்.

இப்படி சொன்னால் பரபரப்பு வருமா?

தனியார் மருத்துவமனை செவிலியர்களுக்கும் அரசுக்கு ஈடான ஊதியத்தை வழங்க வேண்டும்: வேல்முருகன்

மனிதருக்கு பரபரப்பிற்கு ஏதாவது பேசிகொண்டே இருக்கவேண்டும் என்றொரு வியாதி வந்துவிட்டது.

இப்படி சொன்னால் பரபரப்பு வருமா?

வேண்டுமென்றால் தனியார் செவிலியர் வாங்கும் சம்பளம் போல அரசு செவிலியருக்கும் சம்பளத்தை குறைக்க வேண்டும் என சொல்லுங்கள்

அப்பொழுது ஒரு அதிர்வு உங்கள் உச்சிமண்டையில் தெரியும்

பாஜக பிரமுகரான வழக்கறிஞரை தாக்கிய சந்தாணம் தலைமறைவு

Image may contain: 1 personபாஜக பிரமுகரான வழக்கறிஞரை தாக்கிய சந்தாணம் தலைமறைவு

சந்தாணம் எத்தனை முறைதான் சினிமாவில் அடிவாங்கிகொண்டே இருப்பார், நிஜத்தில் தன்னாலும் அடிக்க முடியும், சினிமாவில் அது நடிப்பு என காட்ட நினைத்திருக்கின்றார்

ஏதோ பணம் சர்ச்சையில் ஒருவரை அடித்துவிட்டார். அவர் அடிவாங்கிய பின்புதான் தான் பாஜக பிரமுகர் என்பதை சொல்லியிருக்கின்றார், சந்தாணம் ஓடிவிட்டார்.

அது என்னவோ தெரியவில்லை தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் பாஜக பிரமுகர்களாக அலைகின்றார்கள், வரும் செய்திகளில் பாதி பாஜக பிரமுகர் செய்திதான்.

அதுவும் அடிவாங்கியபின் நான் பாஜக பிரமுகர் என சொல்பவர்கள் எண்ணிக்கை மிக அதிகம்.

இப்படி எங்கு பார்த்தாலும் பாஜக பிரமுகர்களாக அலையும் தமிழகத்தில் ஏன் அக்கட்சி ஒரு தொகுதி கூட பெறவில்லை என்பதுதான் ஆச்சரியம்

 

உங்களுக்கு என்னடா பிரச்சினை?

Image may contain: 1 personஅட பதர்களா

உஜ்ஜைனி மகா காளியும், கல்கத்தா உக்கிர காளியும் உங்கள் முப்பாட்டிகளில் வரமாட்டார்களா? சின்ன முப்பாட்டி, பங்காளி வகையிலாவது வருவார்கள் அல்லவா?

உங்களுக்கு காளி முப்பாட்டி என்றால், இந்தியா முழுக்க உள்ள காளிபக்தர்கள் உங்கள் சகோதரர்கள் அல்லவா? பின் ஏன் எதிர்ப்பு?

உங்களுக்கு என்னடா பிரச்சினை?

“அம்மா காளி, ஏதோ அறிவில்லா முட்டாளுக்கு ஒரு காலத்தில் நீர் நாக்கில் கீறி அவனை பெரும் அறிவாளி காளிதாசன் ஆக்கிவிட்டீராம்

இந்த பயல்களுக்கும் கீறிவிடும் தாயே, சும்மாவே நாக்கை நீட்டிகொண்டுதான் அலைவார்கள் அதனால் உனக்கு கீறுவது எளிது

நாக்கில் மட்டும் அல்ல, அதனை தவிர வேறுபல இடத்திலும் கீறிவிடு தாயே, அழிச்சாட்டியம் தாளவில்லை”

 

நூறு அடி உயரத்தில் பிரமாண்ட ராமர் சிலை : யோகி அரசின் அடுத்த திட்டம்

நூறு அடி உயரத்தில் பிரமாண்ட ராமர் சிலை : யோகி அரசின் அடுத்த திட்டம்

கோரக்பூரில் சாகும் குழந்தைகள் எண்ணிக்கை ஆயிரத்தை நெருங்குகின்றது, ஆம்புலன்ஸ் இல்லாத மருத்துவமனைகள் ஏராளம்

பிணத்தை கூட சுமந்து செல்ல ஆம்புலன்ஸ் இல்லா அவலம்

மொத்தத்தில் அடிப்படை வசதிகள் கூட இல்லா மிக பின் தங்கிய மாநிலத்தை மாற்ற வந்தவர் என்ன செய்கின்றார் பார்த்தீர்களா?

சாமியார்களை முதல்வராக‌ அமர்த்தினால் புத்தி இப்படித்தான் சாமிகளுக்கு சிலை, புனஸ்காரம் என செல்லும் போல‌..

இதில் இவர் அடுத்த பிரதமர் என கிளப்பிவிடுபவனை எல்லாம் இந்திய பெருங்கடலில் தள்ளுவது நாட்டுக்கு நல்லது.

தமிழகம் என்று ஒரே இனமாக இருந்தது?

No automatic alt text available.தமிழர்கள் சாதி மதம் இல்லாமல் ஒற்றுமையாக இருந்தார்களாம், பின் ஆரியர்கள் வந்து மதத்தை கொண்டுவந்தார்களாம்

இதில்தான் பல்லவர், இன்னபிற மன்னர்கள் எல்லாம் தமிழரை அடிமைபடுத்தினார்களாம்

பின் நாயக்கர்கள் வந்து பிரித்தார்களாம், கொடுமை படுத்தினார்களாம், அடிமைபடுத்தினார்களாம்

சாதியும், மதமும் இருக்கும் வரை தமிழன் பிரிந்தே இருப்பானாம். இல்லாவிட்டால் அவன் ஒற்றுமையில் உலகையே வெல்வானாம்

இப்படி ஒரு கும்பல் சொல்லிகொண்டிருக்கின்றது, முன்பே சொன்னது போல திருச்சி வளனார் கல்லூரியின் நக்சலைட்டுகள் தயாராகும் இடமான AICUF இதை கண்காட்சியாக சொல்லிற்றாம்

இந்த அரைகுறை பைத்தியங்களுக்கு ஒரே கேள்விதான்

தமிழகம் என்று ஒரே இனமாக இருந்தது?

முன்பே அது சேர,சோழ, பாண்டிய இனமாகத்தான் இருந்தது

இதில் கடையேழு வள்ளல், முதலேழு வள்ளல், கொங்கு, தொண்டை மண்டலம் என ஏகபட்ட சிற்றரசும் இருந்திருக்கின்றது, கிட்டதட்ட 25 நாடுகள் இருந்திருக்கின்றன‌

ஆக தமிழகத்தில் அன்றே பல அரசுகளும், அவற்றிற்கிடையே பெரும் போர்களும் நடந்திருக்கின்றன‌

புறநானூறு சொல்வதெல்லாம் என்ன?

தமிழர்களுக்கு இடையே நடந்த சண்டையினைத்தான் அவை வீர காவியமாக படைத்திருக்கின்றன‌

தஞ்சாவூர் கல்வெட்டே சோழன் பாண்டியரை அடக்கிய விதத்தைத்தான் சொல்கின்றது

50 மைலுக்கு ஒரு அரசன், அவனுக்கு 100 மனைவி. அந்த அரசர்களுக்கு இடையே சண்டை என்றுதான் தமிழகம் இருந்திருக்கின்றது

ஈழம் மட்டும் என்ன?

அங்கும் கண்டிக்கு ஒரு அரசன், யாழ்பாணத்திற்கு ஒருவன், வன்னிக்கு ஒருவன் என்றுதான் இருந்திருக்கின்றார்கள்.

இதில் தமிழகம் பெரும் ஒற்றுமையாக இருந்த நாடு போலவும், அந்நியன் எல்லாம் வந்து சாதி மதமாக பிரித்து அடிமைபடுத்தியது போலவும் ஏகபட்ட பில்டப்புகள்

இந்த மாதிரி உளறுபவர்களிடமும், நக்சலைட்டுகள், தீவிரவாதிகளை உற்பத்தி செய்யும் AICUF அமைப்பிடமும் மாணவர்களும் இளைஞர்களும் எச்சரிக்கையாய் இருப்பது நலம்

ஜாதி மதம் கடந்து தமிழராய் இணைவோம் என்பதெல்லாம் சுத்த அரசியல், அதெல்லாம் சாத்தியமே இல்லை என்பதைத்தான் பழம் வரலாறு சொல்கின்றது

8ம் அதிசயமாக அப்படி ஒன்று நடந்து, 9ம் அதிசயமாக சீமான் கோஷ்டிகளிடம் அதிகாரம் சிக்கி, 10ம் அதிசயமாக தனி தமிழ்நாடு உருவானாலும் அது துண்டு துண்டாய் நிச்சயம் உடையும். அதனைத்தான் இந்த நாசமாய் போகின்றவர்கள் விரும்புகின்றார்கள்.

கீழடியில் அகழாய்வினை நிறுத்திவிட்டார்கள்

Image may contain: outdoor

கீழடியில் அகழாய்வினை நிறுத்திவிட்டார்கள்.

இரண்டு ஆண்டுகளாக தோண்டினார்கள், அதில் கிடைக்கபெற்ற பொருட்களை ஆய்வுசெய்ததில் அது கிட்டதட்ட 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என தெரியவந்தபின் தோண்டுவதில் ஏனோ இவர்களுக்கு விருப்பமில்லை

மெதுமெதுவாக அமைதியாகி மொத்தமாக மூடிவிட்டார்கள்

இதில் ஏதோ பெரு மர்மம் உள்ளது என்பதும், எதனையோ சொல்ல விரும்பவில்லை என்பதும் உண்மை

ஆதிச்சநல்லூரிலும் இதே கொடுமைதான் அரங்கேறிற்று, அங்கு கிடைத்த பொருட்கள் கிட்டதட்ட 6 ஆயிரம் காலத்திற்கு முற்பட்டவை என செய்திகள் வந்தபின் அதனையும் நிறுத்தினார்கள்

இப்பொழுது கீழடியினையும் நிறுத்துகின்றார்கள்

கீழடி என்பது நிச்சயம் கண்ணகி காலத்தோடு தொடர்புடைய நகரமாமாகத்தான் இருக்கவேண்டும்

ஏன் மறைக்கின்றார்கள்? இதனால் என்ன லாபம் இவர்களுக்கு கிடைத்துவிடுகின்றது? என்பதுதான் தெரியவில்லை

தமிழரின் தனிபெரும் அடையாளமான இந்த இடங்களின் உண்மைகளை கண்டறிந்து உலகிற்கு சொல்லவேண்டியது தமிழக அரசின் கடமை

அதுவோ மத்திய அரசின் கால்களுக்கு அழுக்கெடுக்கும் வேலையினை செய்துகொண்டிருக்கும்பொழுது எந்த ஆய்வு நின்றால் அவர்களுக்கென்ன?

உலகில் மிகுந்த விலைமதிப்பில்லாதது பாரம்பரிய பெருமையும், அந்த பழங்கால பொக்கிஷமும்

அவை எல்லாம் காலத்தால் மட்டுமே கொடுக்க கூடியது, 3000 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ்முன்னோர்கள் நமக்காக விட்டுசென்றது

இதனை எல்லாம் நினைத்தாலே நெஞ்சம் பதறத்தான் செய்கின்றது, இவைகளில் எல்லாம் மாநில அரசு தன் உரிமைகளை வென்று பாதுகாக்க வேண்டும்

எவ்வளவு பெரும் பொக்கிஷத்தை கண் முன்னே மறைத்துவிட்டு, அந்த ராமசந்திரனுக்கு நூற்றாண்டு விழா , ஜெயாவிற்கு மணிமண்டம என பலகோடி ரூபாய்களை வீணாக செலவழிக்கின்றது தமிழக அரசு

அற்ப நடிகனுக்கெல்லாம் கோடிகணக்கில் செலவழிக்கும் தமிழகத்தில், எம்.எல்.ஏக்கள் லட்சகணக்கில் சம்பளம் வாங்கும் தமிழகத்தில், இன்னும் எங்கெல்லாமோ கருப்பு பணம் வெள்ளமாக பாயும் தமிழகத்தில்

தமிழனின் மிகபெரும் பாரம்பரியமான கீழடியினையும், ஆதிச்சநல்லூரையும் தோண்டிபார்க்க பணமில்லையாம்..

அது தனியார் நிலமாம் கொடுத்துவிட்டார்களாம், எவனோ ஒருவனுக்கு கல்லீரல் இல்லையென்றால் அதனை வாங்க கோடிகணக்கான பணம் எங்கிருந்தோ வருகின்றது, அரசும் அனுமதிக்கின்றது.

ஆனால் தமிழனின் தொன்மை காக்க அந்நிலத்தை கையகபடுத்த அரசுக்கு பணமில்லையாம், ஆனால் எம்.எல்.ஏ சம்பளம் எல்லாம் கூட்டி கொடுப்பார்களாம்.

கண்முன்னே மூடபடும் குழிகள் , தமிழனின் பெருமையினை கல்லறையில் அடக்கம் செய்யபடுவதையே கண் முன் நிறுத்துகின்றன, கண்ணீர்தான் வருகின்றது

மனம் நொந்துபோகும் நேரமிது.

 

பிறந்த தின வாழ்த்துக்கள் , வடிவேலு…

 

Image may contain: 1 person, standingஎங்கு வாழ்ந்தாலும், எப்படி வாழ்ந்தாலும், எல்லா தமிழர்களின் மனதிலும் ஒரு கிராமத்துக்காரன் வாழ்ந்துகொண்டே இருக்கின்றான்

கிராமத்து சாயல் உறங்கிகொண்டே இருக்கின்றது

அதனை சரியான கலைஞர்கள் திரையில் காட்டும்பொழுது அவன் அதனை கொண்டாடுகின்றான்.

மக்கள் அபிமானம் பெற்ற பெரும் நகைச்சுவை கலைஞரான வடிவேலு அப்படித்தான் மக்கள் மனதில் இடம்பிடித்தார்.
அவர் நகைச்சுவைகாட்சிகள் நடிப்பதை விட்டு 7 ஆண்டுகள் ஆகியிருந்தாலும் கூட இன்றும் பல டிவி சேனல்கள் அவரால்தான் வாழ்ந்துகொண்டிருக்கின்றன‌

குறிப்பாக ஆதித்த்யா சேனல் மீது அவர் வழக்கே தொடுக்கும் அளவிற்கு அவரை நம்பியே நடந்துகொண்டிருக்கின்றது.

இன்றும் முகநூலில் அதிகமாக பதிவிடபடுவது அவர் பாணி நகைச்சுவையும் அவர் படமுமே…

எல்லா இடங்களிலும் இன்னும் அவர் காமெடிதான் ஓடுகின்றது, அவ்வளவு ஏன் டாஸ்மாக்கில் கூட அவர் ஸ்டைலில்தான் பாட்டில் உடைத்து குடித்துகொண்டிருக்கின்றார்கள்.

புகழின் உச்சத்தில் சில அடிகளை தவறாக எடுத்துவைத்ததின் விளைவு, அரசியலும் சினிமாவும் கலந்த தமிழகத்தில் அவர் தடுமாறிவிட்டார்.

கலைஞர் அரசியல் வித்தியாசமானது, மக்கள் அபிமானம் பெற்றோர் யாராயினும் அருகில் அமர்த்திகொள்வார். ஆனால் அவர்களால் கலைஞரின் இலக்கினை பூர்த்தி செய்யமுடியாமல் போகும்போது அவர்களை தூக்கி எறியவும் அவர் தயங்குவதில்லை

பின்னாளில் இதனை வடிவேலு புரிந்துகொள்ளும் போது நிலமை எல்லை மீறி சென்றிருந்தது. அதுவும் கலைஞர் விஜயகாந்த் வீட்டு வாசலில் தவமிருந்தபொழுது வடிவேலு நிலை சொல்லி தெரியவேண்டியதில்லை

சினிமா உலகில் அரசியல் முத்திரை விழுந்தபின் ஒரு மாதிரியான விளைவுகள் வரும். காரணம் சினிமாவால் அமைந்த தமிழக அரசு எப்பொழுதும் அதன் மீது ஒரு கண் வைத்துகொண்டே இருக்கும், இன்னொன்று அரசியலை மீறி இனி சினிமா ஜெயித்துவிடாதவாறு பலகண்ணிகள் வைத்தாகிற்று

இவ்வளவிற்கும் முதல்வர் ஜெயலலிதாவே ஒரு கூட்டத்தில் “வடிவேலு மக்கள் சொத்து, மக்களை அவர் மகிழ்விப்பதை எனது அரசு ஊக்குவிக்கும் ” என பகிரங்கமாக பச்சைகொடி காட்டியும் நிலமை சுமூகமாக இல்லை.

சினிமா உலகில் ஒதுங்கிய அல்லது ஒதுக்கபட்டபின் மறுபடி விட்ட இடத்தினை பிடிப்பது பெரும் சவால்

எம்ஜிஆர் ஒருவர் செய்தார், அதன் பின் சந்திரபாபு, சாவித்திரி போன்ற யாராலும் அச்சாதனையினை செய்யமுடியவில்லை

ஆனால் வடிவேலுவிற்கு வாய்ப்பு இருக்கின்றது

அவரும் கொஞ்சம் மாறவேண்டும், ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்பதெல்லாம் விட்டு கொஞ்சம் இறங்கி வந்தால் இன்னும் நல்லது, அப்படி மாறி இருக்கின்றார் என்கின்றார்கள், பார்க்க்கலாம்

காரணம் தமிழன் தான் இழந்த கிராமத்து எளிய, யதார்த்த, வெகுளியான பாத்திரத்தினை அவனிடம் தேடுகின்றான், அந்த நடையில், அந்த பேச்சுமொழியில், அந்த ஸ்டைலில் தன் குடும்பத்தில், உறவினர்களில் ஒருவனாக , சொந்த கிராமத்துகாரனாக அழகாக வந்து ஒட்டிகொள்கின்றார் அவர்.

வடிவேலுவினை தவிர யாருக்கும் அது சாத்தியமில்லை
மலேசியாவில் எத்தனையோ திரைப்படங்களை பார்த்திருக்கின்றேன், பொதுவாக மக்கள் அமைதியாக படம்பார்ப்பார்கள், அதில் பெரும்பான்மையான மலேசிய தமிழர்களுக்கு தமிழ் எழுததெரியாது எனும் அளவிற்கு நிலை.

ஸ்டைலாக எத்தனையோ நடிகர்கள் வருவார்கள், படித்த பாத்திரம், அதிரடி பாத்திரத்தில் வருவார்கள், யார் முகத்திலும் சலனம் இருக்காது, ஒரு சொடுக்கு போடும் ஓசையும் கேட்காது

ஆனால் “அப்புறம்…..” என வடிவேலு திரையில் வந்துவிட்டால் போதும், அரங்கம் அதிரும், தானாக அவரை கைதட்டி வரவேற்பார்கள்

எப்படி என்றால்? அதேதான் அந்த தமிழக கிராமத்து மனம் அவர்களில் இருக்கின்றது, அவரை கண்டதும் அது அடையாளம் கண்டுகொள்கின்றது, நம்மில் ஒருவன்
மலேசியா என்றெல்ல, தமிழர்கள் வாழும் நாடெல்லாம் அவருக்கு வரவேற்பு அப்படி,

காரணம் அவர்களின் பூர்வீகம் எளிய, வெகுளியான கிராமம். அவர்களின் தாத்தா பாட்டி, அல்லது அம்மா அப்பா எளிய தமிழக கிராமத்துகாரர்கள்,
மனதில் எங்கோ ஒளிந்திருக்கும் அந்த கிராம நகைச்சுவையே, மக்களின் அந்த ரசனையேதான் வடிவேலுவின் வெற்றிக்கு பெரும் காரணம்

அன்றே நடிகர்களுக்கு சொன்னார் கண்ணதாசன் “கலைஞர்கள் எந்த கட்சியிலும் சேராமல் இருப்பது நல்லது”
ரஜினி அதனைத்தான் இன்றுவரை செய்துவருகின்றார் அவர் பட்டண வாழ்க்கைக்காரர், நகரத்து அரசியல் சூது தெரிந்திருக்கின்றது

வடிவேலு கிராமத்து எளிய கலைஞர், அரசியல் சேற்றில் சிக்கி விட்டு இப்பொழுதுதான் தெளிந்துகொண்டிருக்கின்றார்.

எத்தனை கனத்த கவலையுள்ள மனமாக இருந்தாலும் அவரின் காட்சிகளை கண்டுவிட்டால் மனம் எளிதாகிறது, கிராமத்து உறவுகளுடன் கலந்துவிட்ட ஒரு திருப்தி கிடைத்துவிடுகின்றது

ஒன்று மகா நிச்சயம், அவருக்கு இன்னும் கடும் வரவேற்பு இருக்கின்றது, ஒரு ரவுண்ட் அல்ல பல இன்னிங்க்ஸ்கள் அவர் ஆட்டத்தை காண மக்கள் ரெடி
நிச்சயம் வருவார், அதே வடிவேலுவாக வருவார், காத்திருப்போம்.

ஆயிரம் இயக்குநர்கள், இசை அமைப்பாளர்கள் ஹீரோக்கள் வருவார்கள் போவார்கள், ஆனால் கிராமத்து கதைகளுக்கு ஒரே ஒரு பாரதிராஜாதான்

அப்படி அந்த எளிய வெகுளியான, ஜனரஞ்சகமான காமெடிகளுக்கு கிராமத்து பாமரனாக ஒரே ஒரு வடிவேலுதான்.

அவருக்கான ரசிகர் கூட்டம் அப்படியே இருக்கின்றது, அவருக்கான இடமும் அப்படியே காலியாகவே இருக்கின்றது அதனால் சொல்லலாம்

பழைய வடிவேலுவாக வாருங்கள் அய்யா, அப்படியே வரவேற்க தமிழகம் தயாராகவே உள்ளது
பிறந்தநாள் வாழ்த்துக்களோடு கை குலுக்கி வாழ்த்து தெரிவித்து, அப்படியே இழுக்கின்றோம்

வாருங்கள் அய்யா, இந்த கிராமத்தை தொலைத்துவிட்டு காங்கீட் காட்டு சந்துபொந்துகளில், அக்கம் பக்கம் யாரென்றே தெரியாத வாழ்க்கையில் வாழ்பவர்களுக்காவது வந்து,

கிராமத்து எளிய மனிதனை திரையிலாவது காட்டுங்கள், அது உங்களை தவிர யாருக்கும் சாத்தியமில்லை.

அந்த கலைஞனுக்கு இன்று பிறந்தநாள், அவருக்கு கலகலப்பான வாழ்த்துக்களை தெரிவித்து 
கொள்வோம்

ஜெயக்குமார் சாபம் சும்மா விடாது

 

Image may contain: 1 person, outdoor

பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அமெரிக்கருக்கு வழங்கபட்டது : செய்தி

என்னது? அமெரிக்கருக்கா?

பட்ஜெட்டை, பொருளாதார குற்றவாளியான ஜெயா சமாதியில் வைத்து ஆசிவாங்கிவிட்டு சட்டசபைக்கு சென்ற நிதியமைச்சர் ஜெயக்குமாருக்கு கொடுக்கபடாத நோபல் பரிசு இல்லாமலே போகட்டும்

ஜெயக்குமார் சாபம் சும்மா விடாது.


மலையூர் மம்பட்டியான், வீரப்பன் பயன்படுத்திய துப்பாக்கிகள் காட்சிக்கு வருகின்றன‌

இதனை விட கொடூரமானது போயஸ்கார்டன் வீட்டின் பொருட்கள், அதனை முதலில் காட்சிக்கு வைக்கவேண்டும்.


 
 

பரோலில் மகா உற்சாகமாக சுற்றி வருகின்றார் சசிகலா : செய்தி

பர்தா போடாமல் வெளிவருவதில் அவருக்கு அவ்வளவு உற்சாகம் போலிருக்கின்றது..


எம்.ஜி.ஆரின் அரிய புகைப்படங்களை அளிக்கலாம்: அரசு அறிவிப்பு

Image may contain: 1 person, smiling

எம்.ஜி.ஆரின் அரிய புகைப்படங்களை அளிக்கலாம்: அரசு அறிவிப்பு

அரசுக்கு மரியாதை கொடுப்பது நம் கடமை, கேட்டுவிட்டார்கள் இதோ கொடுத்துவிட்டோம்

இதனை விட ராமசந்திரனின் சிறப்பான படங்கள் கிடைத்தால் அரசுக்கு அனுப்பி வைத்து உங்கள் ஜனநாயக கடமையினை நிறைவேற்றுங்கள்Image may contain: 1 person, sitting

Image may contain: 1 person Image may contain: 1 person, smiling
Image may contain: 2 people, people smiling, sunglasses, flower and close-up
%d bloggers like this: