அவரவர் நினைத்தபடி எழுதவேண்டும் என எதிர்பார்க்கின்றார்கள்

எல்லோரும் அவரவர் நினைத்தபடி எழுதவேண்டும் என எதிர்பார்க்கின்றார்கள்

நீங்கள் நினைத்தபடியெல்லாம் நான் என் பக்கத்தில் எழுத உங்களுக்கு எதற்கு முகநூலில் வீணாக ஒரு பக்கம்?

அவர்களுக்கெல்லாம் சொல்லிகொள்வது ஒன்றுதான், உங்கள் ஐடி மற்றும் பாஸ்வேர்டை கொடுத்துவிடுங்கள், உங்கள் அக்கவுண்டில் நுழைந்து உங்களுக்காக எழுதிவிடுகின்றேன்


டாஸ்மாக்கில் மதுபானங்களின் விலை உயருகிறது: தமிழக அமைச்சரவை முடிவு

அதானே, இன்று சட்டமன்ற கூட்டமாமே உருப்படியாக ஒன்றும் அறிவிக்கமாட்டார்களே, இந்த மாபெரும் அறிவாளிகள் என்ன விவாதிக்க போகின்றார்கள்? என்ற எண்ணம் இருந்தது.

டாஸ்மாக் சரக்கின் விலையினை உயர்த்த கூட்டம் போட்டு விவாதித்தார்களாம், உருப்படுமா தமிழ்நாடு?

ஏன் இப்பொழுது டாஸ்மாக் விலையினை கூட்டவேண்டும்?

அப்பொழுதுதான் எம்.எல்.ஏக்களுக்கு 1 லட்சம் ரூபாய் சம்பளம் கொடுக்க முடியும்?

வோட்டு போட்டு ஒருவரை எம்.எல்.ஏ ஆக்கி, அவருக்கு 1 லட்சம் சம்பளம் கொடுக்க டாஸ்மாக் சரக்கினையும் வாங்கி குடிக்கும் தமிழக குடிமகனை போல உலகில் ஒரு நல்லவன் உண்டா?


Image may contain: 4 people, people smiling, indoor“கவலை படாத பங்காளி, சரக்கு விலை ஏற்றியது எல்லாம் பிரச்சினையே இல்லை, விலை ஏறிவிட்டது என்பதற்காக எவனும் குடிக்காமல் இருக்கபோவதில்லை

சிலர் குடிவிலை ஏறிவிட்டது என கத்துவான், தேர்தல் நேரத்தில் இலவச பாட்டில் கொடுத்தால் சத்தம் இல்லாமல் வோட்டு போட்டுவிட்டு செல்வான்,

எத்தனை எலெக்சன் பாத்திருக்கோம், Be Happy.. Smile Please !!!

 


 

அது என்ன குறிஞ்சி பூ?

Image may contain: 1 person, close-up

12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் அபூர்வ குறிஞ்சிமலர் பூத்தது : செய்தி

அது என்ன குறிஞ்சி பூ?

ஆயிரம் வருடத்திற்கு ஒருமுறை பூக்கும்

அற்புத பூ தமிழகத்தில் இருக்கின்றது

அதனைபற்றி ஒருவரும் பேசவில்லை

கோரிக்கையற்று கிடக்குதய்யா அற்புத அதிசய பூ

ஹஜ் பயணிகளின் மானியம் ரத்து செய்யப்படும் முடிவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்: சீமான்

ஹஜ் பயணிகளின் மானியம் ரத்து செய்யப்படும் முடிவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்: சீமான்

அவர்கள்தான் எதற்குமே இனி மானியமில்லை எனும் நிலைக்கு வந்தாயிற்றே, எல்லா மானியங்களும் வெட்டுபடும் பொழுது , ஹஜ் பயணிகள் மானியமும் ரத்தாகின்றது

செல்வத்திலும், எண்ணேய் பணத்திலும் கொழிக்கும் வளைகுடா நாடுகள் குறிப்பாக சவுதி தன் நாட்டுக்கு வரும் மக்களின் பயணத்திற்கு மானியம் கொடுத்தால்தான் என்ன?

இறைவன் கொடுத்திருக்கும் எண்ணெய் பணத்தினை, அவனின் புனித இடங்களை தரிசிக்கவரும் மக்களின் விமான செலவுக்கு கொடுக்க முடியுமா? என்றால் கொடுக்கலாம்தான். ஆனால் செய்யமாட்டார்கள்.

சரி இது மானியவெட்டு பிரச்சினை, எல்லா மானியமும் இனி வெட்டபடுமாம்

அப்படி இங்கு தங்கியிருக்கும் அந்நிய நாட்டு மக்களான ஈழமக்களுக்கான உதவிகளும் நிறுத்தபடலாம், போர் முடிந்தபின்னும் இலங்கை மக்களுக்கு இங்கு என்ன அவசியம்?

அது விரைவில் நடக்கும், ஆக அங்கிள் சைமன், எனர்ஜியினை வீணாக்கவேண்டாம், காரணம் ஓங்கி கத்த ஈழ அகதிகளுக்கான உதவிகளை நிறுத்தி இலங்கைக்கு அனுப்ப எப்பொழுதும் உத்தரவு வரலாம்..

கேரளாவில் தலித் அர்ச்சகராகிவிட்டாராம்…

கேரளாவில் தலித் அர்ச்சகராகிவிட்டாராம், தமிழகத்தில் ஆளாளுக்கு பொங்குகின்றார்கள்

அதில் திராவிடகழகத்தினரும், திமுகவினரும் பொங்குவதுதான் மகா ஆச்சரியம்

அதாவது ” கடவுள் இல்லை, அதை நம்பாதே, கடவுளை வைத்து பிராமணன் நம்மை எல்லாம் சிந்திக்கவிடாமல் ஏமாற்றுவான்..” என்பதுதான் அவர்களின் முழக்கம்

அந்த கோவிலில் எந்த சாதிக்காரன் அர்ச்சகராக இருந்தால் இவர்களுக்கென்ன?

அவர்களுக்கு பிராமணன் அர்ச்சகரானால் கோவிலில் இருப்பது கல்லாகிவிடுகின்றது, தாழ்த்தபட்டவன் அர்ச்சகரானால் தெய்வம் வந்துவிடுகின்றது.

தாழ்த்தபட்டவன் அர்ச்சகரானால் இவர்கள் எல்லாம் பெரியார் கொள்கைகளை துறந்துவிட்டு ஆலயபிரவேசம் செய்துவிடுவார்களா? அப்பொழுது கடவுள் நம்பிக்கை வந்துவிடுமா?

இப்படி எல்லாம் கேட்டால் நம்மை ஆரிய அடிவருடி என்பார்கள், சொல்லட்டும்

பெரியாரின் உண்மையான தொண்டர்களான திராவிட சிங்களுக்கு கோவில் என்பது ஏமாற்று கூடம், அந்த ஏமாற்று கூடத்தில் தலித்தும் ஏமாற்றவேண்டும் என்பதுதான் அவர்கள் சிந்தாந்தமோ என்னமோ.

இதனை நினைத்தாலே குழப்பம் தான் மிஞ்சும்

நெடுநாள் தமிழகத்தை ஆண்ட கலைஞருக்கு கடந்த முறைதான் இதனைபற்றி ஞானம் வந்தது, ஒரு சட்டத்தை அறிவித்துவிட்டு “பெரியார் நெஞ்சில் இருந்த முள்ளை எடுத்துவிட்டேன்” என்றார்.

அப்படியானால் பெரியாருக்கு பிராமண அர்ச்சகர்தான் விரோதியா , தலித் இருந்தால் பெரியார் ஆத்திகன் ஆகிவிடுவாரா என யார் கேட்பது?

பின் அது சம்பந்தமாக வழக்கெல்லாம் நடந்தது. பெரியார் நெஞ்சில் முள் மீண்டும் குத்தபட்டது

ஆகம விதிப்படிதான் அர்ச்சகர் நியமிக்கவேண்டும் என சொல்லியது உச்ச நீதிமன்றம்

இப்பொழுது கேரளாவில் தலித் அர்ச்சகர் நியமிக்கபட்டாயிற்று, அந்த ஆகம விதி ஆமை விதி எல்லாம் என்னாயிற்று என கேட்பவர் யார்?

இப்பொழுது இதனை சாக்காக வைத்து வீரமணி கும்பல்கள் காவடி எடுக்க தொடங்கிவிட்டன‌

பெரியார் அடிபொடிகளே, தலித் அர்ச்சகர் நியமிக்கபட்டால் பெரியார் கொள்கைகளை துறந்து நீவீர் ஆலயம் புக தயாரா? இல்லை அல்லவா?

பின் ஏன் இத்தனை ஆர்பாட்டம்? எந்த கோவிலில் எந்த சாமி இருந்தால் உங்களுக்கு என்ன? எந்த சாதி அர்ச்சகர் இருந்தால்தான் உங்களுக்கு என்ன?

பிரபாகரனின் உடலை பார்க்க வேதனையாக இருந்தது : ராகுல் காந்தி

பிரபாகரனின் உடலை பார்க்க வேதனையாக இருந்தது : ராகுல் காந்தி

“ஏ பிரபாகரா, உனக்கும் இரு பிள்ளைகள் உண்டு. அவர்கள் அமைதியான சூழலில் வளரட்டும். வருங்கால சந்ததி அமைதியாக உருவாகட்டும்

உன் அடத்தினால் ஒரு நன்மையும் விளையாது, அழிவு மட்டுமே மிஞ்சும். அது பல ஆறா காயங்களை ஏற்படுத்தும்” என கெஞ்சிய அந்த இந்திய ராணுவ தளபதி நினைவுக்கு வருகின்றார்.

நாட்டில் ஜிஎஸ்டி முதல், தமிழக டெங்கு வரை பிரச்சினை ஆட்டிபடைக்கின்றது

உருட்டுக்கட்டையால் தாக்கிய பன்னீர்செல்வம் ஆதரவாளர்! – நிலைகுலைந்த தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ

ராமசந்திரன் காலத்தில் இருந்தே அடிதடியில் அடக்கபட்டதுதான் அக்கட்சி, அவருக்கு பின்னரான காலத்தில் கூட ஜெயா எதிர்ப்பாளர்களான சாத்தூர் ராமசந்திரன் முதல் சந்திரலேகா என ஆசிட் ஊற்றபட்டது, சசிகலா புஷ்பா சாத்தபட்டது வரை எல்லாம் வரலாறு

இதில் பன்னீர் கோஷ்டியும், தினகரன் கோஷ்டியும் போட்டு தாக்குதல் நடத்துவதில் என்ன ஆச்சரியம்?

ஒரு பயலும் தப்பகூடாது, ம்ம் “அதிமுக சண்டை மைதானம் திறக்கபடட்டும்..”


நாட்டில் ஜிஎஸ்டி முதல், தமிழக டெங்கு வரை பிரச்சினை ஆட்டிபடைக்கின்றது

எவ்வளவோ சிக்கல்களும் பிரச்சினைகளும் அலசபடவேண்டிய பத்திரிகைகளில் இந்த ஆஸ்கர் விருதினை நொடியில் தவறவிட்டவரும், பாரத ரத்னா விருதுக்கு காத்திருப்பவருமாமான தாடி பாலாஜி என்பவர் பற்றிய செய்தியும் வருகின்றது.

இந்த சமூகத்திற்கு எவ்வளவு உயர்ந்த கருத்துக்களை சொன்னவரும், நாட்டிற்கு மிக உழைத்த அந்த தாடிபாலாஜி செய்தியினை அரைபக்கத்தில் விடும் பத்திரிகைகளை முழு பக்க செய்தியாக்காமல் விட்டதற்கும்

அந்த மாபெரும் தியாகியின் செய்தியினை பத்தில் ஒரு செய்தியாக சொல்லி ஒரே செய்தியாக சொல்லாத ஊடகங்களையும் வன்மையாக கண்டிக்கின்றோம்.

டெங்கு கொசு இம்சையில் இந்த கொசு இம்சையும் வேறு

பாஜகவிலும் ஒரு சசிகலா குடும்பம் இருக்கின்றது

Image may contain: 1 person, standingஅமித் ஷா மகனுக்கு எதிராக விசாரணை நடத்த வேண்டிய அவசியமில்லை: ராஜ்நாத் சிங்

ஆமாம், ப.சிதம்பரம் மகன் மீதான குற்றசாட்டு என்றால் அலறி அடித்துகொண்டு விசாரிக்கவேண்டும் . பிரியங்காவின் கணவன் என்றால் உடனே வழக்கு பதிய வேண்டும்

ஆனால் அமித்ஷா மகன் என்றால் விசாரணை இல்லையாம்

அமித்ஷா குடும்பம் சந்தேகத்திற்க்கு அப்பாற்பட்டது என இவரே சொல்லிகொள்கின்றார்.

அதனை விசாரணை நடத்தி நீதிமன்றம் சொன்னால் என்ன?

(மோடியினை காட்டி பல்லாயிரம் கோடி ஆட்டையினை போட்ட தகப்பனும் மகனும் இவர்கள்தான்

பாஜகவிலும் ஒரு சசிகலா குடும்பம் இருக்கின்றது )


 

பேசக்கூடிய பிரதமர் மோடி : அமித்ஷா பெருமிதம்

பேசாமல் ஒழுங்காக கடமையாற்றிய அந்த பிரதமர் நாட்டை வளர்த்ததற்கும், பேசி பேசியே நாட்டின் பொருளாதரத்தை நான் கெடுத்துவிட்டேன் என மோடி ஒப்புகொண்டதற்கும் வித்தியாசம் இல்லையா?

மோடி பேசிய அதிகபடியான வார்த்தை புதிய இந்தியா பிறக்கின்றது என்பதுதான், இப்பொழுது மோடியினை அப்படி பேசசொல்லுங்கள் பார்க்கலாம்

அது சரி மிஸ்டர் அமித்ஷா, அந்த பேசகூடிய பிரதமரை அழைத்துகொண்டு கேரளா பக்கமோ, தமிழ்நாடு பக்கமோ வந்து சென்றால்தான் என்ன?

மோடி அதிகம் பேசுவது இருக்கட்டும், மோடியினை காட்டி அமித்ஷா குடும்பம் பல்லாயிரகணக்கான கோடிகளை சுருட்டிவிட்டது எனும் செய்திகள் வரும் செய்திபற்றி மட்டும் அமித்ஷா பேசமாட்டார்


அமித்ஷா மகனின் திடீர் சொத்து அவரின் தனிபட்ட சம்பாத்யம், கட்சிக்கும் அதற்கும் தொடர்பில்லை என தமிழிசை சொல்வார் என ஆவலுடன் எதிர்ப்பார்த்திருக்கின்றோம்

எங்கள் கனவில் மண் அள்ளிபோட்டுவிடாதே தாயீ.. பிளீஸ்


தமிழகத்தில் விரைவில் பாஜக ஆட்சி அமையும் : பொன்னார்

மிஸ்டர் பொன்னார், இங்கு தமிழகத்தில் நடந்துகொண்டிருப்பது பாஜக ஆட்சிதான். அது கூட தெரியாமல் என்னமோ பேசிகொண்டிருக்கின்றீர் அய்யா..

இந்த கன்னியாகுமரி மாவட்டத்துக்காரர்களே ஒரு மாதிரிதான் போல‌

பொன்னார், தமிழிசை, நாஞ்சில் சம்பத் என அங்கிருந்துதான் வருகின்றார்கள்


குஷ்பூ சங்கத்திற்கு ஒரு “தியாக தலைவர்” கிடைத்துவிட்டார்

யாரோ ஒரு நண்பர் குஷ்பூ நினைவாக திருமணம் செய்யாமலே இருக்கின்றார் என்றொரு செய்தி படிக்க நேர்ந்தது.

இது முழுக்க அவரின் அறியாமை, அவருக்கு அன்று வழிநடத்த யாருமில்லை போல‌, இது காற்றை வெறும் கையில் பிடிப்பதற்கு சமம்.

ஆனாலும் குஷ்பூவினால் அவர் வாழ்க்கை பாழாயிற்று என்பது சங்கத்து உறுப்பினர்கள் நெஞ்சில் எல்லாம் ஈட்டியாக பாயும் வலி.

Pon Vimalaதலைவி குஷ்பூ யார் வாழ்வினையும் கெடுப்பவர் அல்ல, பாழக்குவர் அல்ல. இது நண்பருக்கு புரியவில்லை

அவரை உடனடியாக கண்டுபிடித்து சில விஷயங்களை சொல்லவேண்டியுள்ளது

அதாகபட்டது தலைவி ஒரு நிலா. அவரை ரசிக்கலாம் கொண்டாடலாமே தவிர ராக்கேட் ஏறி சென்றெல்லாம் பிடிக்க முடியாது.

தேவதைகள் யாருக்கும் சொந்தமாகா.

அவர் அவதார தேவதை, நாமெல்லாம் அற்ப மானிட பதர்கள், வழிபட மட்டுமே நமக்கு உரிமையுண்டே தவிர, சரிக்கு சரி அமர ஒரு காலமும் முடியாது.

இதனை எல்லாம் சொல்லி அவர் மனதை தேற்றி, முடிந்தால் தலைவி தலமையில் திருமணமும் செய்து வைக்க வேண்டும்.

பிறக்கும் பெண் குழந்தைக்கு குஷ்பூ என பெயரிடவும் வேண்டும்

அன்னார் பற்றிய செய்தி கிடைத்ததே தவிர, யார் என தெரியவில்லை. அதற்கென்ன இஸ்ரேலிய மொசாத்தின் காலில் விழுந்தாவது அவரை கண்டுபிடிக்கவேண்டும்

ஆனாலும் அவரின் தியாகத்தை நினைத்தால் கண்ணீர் வருகின்றது

உடனே கண்டுபிடித்து அவரை சங்கத்தில் இணைத்து இனி “தியாக தலைவர்” ஆக்கிவிட வேண்டியதுதான்.

எங்கள் சங்கத்திற்கும் ஒரு “தியாக தலைவர்” கிடைத்துவிட்டார். இந்த “உடன்பிறவா சகோதரிக்கு” கோட்டான கோடி நன்றி