டெங்கு வந்தாலும் வந்தது, மருத்துவமனை எல்லாம் வசூல் மழை கொட்டுகின்றது.

டெங்கு வந்தாலும் வந்தது, மருத்துவமனை எல்லாம் வசூல் மழை கொட்டுகின்றது.

நிலவேம்பு விற்பபனை, பப்பாளி இலை, கொசுமருந்து, கொசுவலை என திடீர் வியாபாரம் பெருகிவிட்டது

சுகாதார துறை வேறு ஆங்காங்கு சோதனை செய்து தேங்கி நிற்கும் நீரை கண்டுவிட்டால் அந்த கட்டட உரிமையாளர்களிடம் கடும் வசூலில் இறங்கியிருக்கின்றது

இதில் எவ்வளவு வெள்ளை வசூல், எவ்வளவு கருப்பு வசூல் என ஒரு காலமும் தெரியாது. அந்த அபராத வசூல் கொட்டுகின்றது, இதுதான் சாக்கு என கறந்துவிடுகின்றார்களாம்

ஆக டெங்குவினால் பலருக்கு பணமழை கொட்டும் நேரமிது.

அரசு ஒருபக்கம் டெங்குவினை ஒழிக்க பாடுபடுவதாக சொன்னாலும், அது விரைவில் ஒழிந்துவிட கூடாது கடவுளே என சொல்லி வசூலிக்கும் கும்பல்களும் வந்துவிட்டன‌

டெங்கு என ஒருபக்கம் பயங்கர மிரட்டல் இருந்தாலும், இன்னொரு பக்கம் “காசுமேலே காசு வந்து கொட்டுகின்ற நேரமிது” என ஆட்டம்போடும் கும்பல்களும் உருவாகிவிட்டன‌

இதனையும் அரசு கட்டுபடுத்துவது நல்லது.

சுயம்வரம் என்றொரு படம்

Image may contain: 1 person, close-upசுயம்வரம் என்றொரு படம் ஓடிகொண்டிருக்கின்றது, செத்துபோன சிவாஜி பத்மினியினை தவிர எல்லோரும் நடித்திருக்கின்றார்கள்.

நட்சத்திர கூட்டம் இருந்தாலும் , நிலாவென மின்னுகின்றார் குஷ்பூ

அதுவும் குறத்தி வேடத்தில் அவர் வரும்பொழுது, வள்ளி இப்படித்தான் இருந்திருப்பார், முப்பாட்டன் கண்ட வள்ளி இப்படித்தான் இருந்திருப்பார் என சொல்ல வைக்கும் அழகு அது.

“குறத்தி பெண்” வேடத்தில் குஷ்பூவினை பார்ப்பதே கண் கொள்ளா காட்சி, ஆயிரம் கண்கள் வேண்டும், அந்த அழகினை பாடவே ஒரு பெரும் புலவர் வேண்டும்

இந்த “குறவஞ்சி” குஷ்பூவினை பாட அந்த திரிகூட ராசப்ப கவிராயனை எழுப்பவேண்டியதுதான், அவர் பாடி முடித்த பின்பு ஆயிரம் பொற்காசுகள் சங்கத்தின் சார்பாக வழங்கபடும்

 

அமித்ஷா மகன் விவகாரம் பற்றி ஒரு விவாதமும் நடத்த காணோம்

Image may contain: 1 person, sitting and indoorதந்தி டிவி முதல் புதிய தலைமுறை, நியூஸ் 7 என ஒரு பயலும் இந்த அமித்ஷா மகன் விவகாரம் பற்றி ஒரு விவாதமும் நடத்த காணோம்

அட பாஜகவிலிருந்து ஒருவனும் வருவதாக தெரியவில்லை. தடாலடி தமிழிசை கூட இந்த விஷயத்தில் குளோராபாம் குடித்த அளவிற்கு அமைதியாகிவிட்டார்

இந்த டிவிக்களின் பத்திரிகா தர்மம் உண்மையென்றால், எங்கள் தங்க தலைவி குஷ்பூவினை அழைத்து இந்த விஷயத்தை அலச சொல்லலாம்

தலைவி கேட்கும் கேள்வியில் அமித்ஷாவே இந்தியாவினை விட்டு ஓடிவிடுவார், அப்படி தெறிக்கவிடுவார் தலைவி

ஆனால் இந்த ஊடகங்கள் கள்ள மவுனம் சாதிக்கின்றன

ஏய் டிவி நாட்டாமைகளே, எங்கள் சிங்கத்திற்கு இதில் ஒரு வாய்ப்பினை கொடுக்காவிட்டால், இனி நீங்கள் இம்மாதிரி விவாதம் நிகழ்த்த தகுதியில்லாதவர்கள் என அர்த்தம்.

 

பெங்களூர் புறப்பட்டார் சசிகலா

Image may contain: 14 people, people standing

சசிகலாவின் நகர்வுகளை உளவுதுறை மிக துல்லியமாக கண்காணித்து முதல்வருக்கு அனுப்பியது : செய்தி

வடகொரிய உளவுதுறை தென்கொரிய ராணுவ கம்பியூட்டர்களில் ஊடுருவியிருக்கின்றது, இஸ்ரேலிய உளவுதுறை ஈரானின் அணுசக்தி விஷயத்தில் புகுந்து கலங்கடித்துகொண்டிருக்கின்றது

இன்னும் எத்தனையோ உளவுதுறைகள் பெரும் அசாத்தியங்களை நிகழ்த்துகின்றன‌

தமிழக உளவுதுறை வடிவேல் காமெடி போல ஓவர் ஓவர் என சொல்லிகொண்டு சசிகலாவினை சுற்றி வந்திருக்கின்றது.

ராம ஜெயம் கொலை வழக்கு முதல் எத்தனையோ மர்மங்கள் தமிழகத்தில் உண்டு, அவை எல்லாம் உளவுதுறை ஒத்துழைப்பின்றி மர்மம் விலக்க முடியாது

ஏராளமான பணிகள் அப்படி தமிழகத்தில் இருக்கும்பொழுது தமிழக உளவுதுறை இப்படி கடமையாற்றுகின்றது.

இன்னும் என்னென்ன அவமானம் தமிழக உளவுதுறைக்கு வந்து சேருமோ தெரியாது

அடுத்து தினகரன் தினமும் எத்தனை கப் காபி குடிக்கின்றார், எந்த சோப் உபயோகிக்கின்றார் என்ற அளவில் உளவுதுறை ஆப்பரேஷன்கள் இருக்கலாம்

வாழ்க தமிழக‌ உளவுதுறை.


மருத்துவமனையில் தன் கணவனை சந்தித்துவிட்டு சென்றிருகின்றார் சசிகலா

மர்மம் சூழ்ந்த சசிகலா ஜெயா உறவில், சசிகலாவின் இந்த சந்திப்பு சசிகலாவின் உண்மை முகமா, அல்லது ஜெயா இல்லா நிலையின் சூழலா என தெரியவில்லை

நடந்த விஷயங்கள் அப்படி.

என்னதான் நடராஜன் ஜெயாவினை முதல்வராக்கினாலும், ஜெயாவிற்கு அவரை அடக்கி வைக்கவேண்டிய அவசியமும் இருந்தது. நடராஜனின் நடவடிக்கைகளும் அப்படி இருந்தன‌

நான் நிழல் முதல்வர் என்பார், என்னால் ஆட்சி கலைக்க முடியும் என்பார், என்னை மீறி என்ன நடக்கும்? என்பார், டெல்லியில் சென்று நானே அதிமுக என்பார்

மறுநாளே ஜெயா ஆட்சிக்கு என்னால் ஆபத்தில்லை என்பார்

ஜெயா அவரை பல இடங்களில் ஓட அடித்திருக்கின்றார், நடராஜன் மீது அவருக்கு பல இடங்களில் வெறுப்பு இருந்திருக்கின்றது

ஏராளமான நேரங்களில் நடராஜன் தலைமறைவாகியிருக்கின்றார், தூங்காமல் அலைந்திருக்கின்றார், தவித்திருக்கின்றார், பயந்திருக்கின்றார்.

உச்சமாக நடந்ததுதான் செரீனா கஞ்சா விவகாரம்.

ஆக இப்படிஎல்லாம் ஜெயா நடராஜனை போட்டு சாத்தும்பொழுது சசிகலா ஜெயலலிதாவோடேதான் இருந்தார். தன் சொந்தங்களை எல்லாம் ஜெயா விலக்கிவைத்தபொழுதும் சசிகலா அங்கேதான் இருந்தார்

ஜெயா நடராஜனை கைதுசெய்ய சொல்லி உத்தரவு போட்டாலும், என்னை தொடமுடியுமா? தொட்டால் என்ன நடக்கும் தெரியுமா என நடராஜனால் மிரட்டவும் முடிந்தது, காவலர்களே அய்யா, தயவு செய்து கைதாகுங்கள் என கண்ணீர் விட்ட காலமும் உண்டு.

கைது செய்யபட்டாலும் இரு நாளில் அசால்ட்டாக கைவீசி வெளிவரும் நடராஜனை தமிழகம் கண்டுகொண்டுதான் இருந்தது.

அதாவது அந்த அளவு சசிகலாவிற்கும் அவருக்கும் தொடர்பும் இருந்திருக்கின்றது, இவ்வளவிற்கும் சசிகலா ஜெயா அருகிலேதான் இருந்தார்.

அப்படி எத்தனையோ சந்தர்பங்களில் நடராஜனை சந்திக்காமல், ஏறெடுத்தும் பார்க்காமல் ஆனால் தற்காத்துகொண்டும் இருந்த சசிகலாதான், இப்பொழுது அவரை ஓடிவந்து பார்த்து அழுதிருக்கின்றார்.

முன்பு ஏன் வரவில்லை, இப்பொழுது ஏன் ஓடிவந்தார் என்பதெல்லாம் வழக்கம் போல மர்மமே.

முன்பு வராமல் இப்பொழுது வந்த சசிகலாவினை அந்த நடராஜனின் கிட்னியோ கல்லீரலோ கணையமோ மன்னிக்கவே செய்யாது.

(அண்ணே…நடராஜனை சசிகலா சந்தித்துவிட்டார், செரீனா வந்தாரா? என ஒருவன் இன்பாக்ஸில் கேட்டுகொண்டே இருக்க்கின்றான்

டேய் யார பாத்துடா என்ன கேள்வி கேட்ட.. இவ்வளவு பேர் இருக்கும்பொழுது ஏண்டா என்ன பார்த்து மட்டும் கேட்ட, உன்ன விடமாட்டேன்டா)


ஏதோ அவர் சார்க் உச்சமாநாட்டிற்கு செல்பவர் போலவும், ஜி7 நாடுகள் கூட்டத்திற்கு செல்வது போலவும், வடகொரிய அதிபருடன் பதற்றமான பேச்சுவார்த்தைக்கு செல்வது போலவும் தமிழக மீடியாக்களில் செய்திகள் இப்படி வருகின்றன‌

“பெங்களூர் புறப்பட்டார் சசிகலா”

எதற்கு போகின்றார் என்பதுபற்றிமட்டும் சொல்லவே இல்லை? காவேரி மீட்கவா?

ஒரு பரோல் கைதி , மறுபடியும் சிறைக்கு செல்கின்றார் என சொல்லகூடவா இங்கு ஊடகங்களுக்கு தைரியமில்லை?

பூரா பயலும் ஜெயாடிவி போலவே செய்தி சொல்லி கொண்டிருக்கின்றான்


 

பிரதமர் மோடியை சந்தித்தார் துணை முதல்வர் ஓ.பி.எஸ்

Image may contain: 1 person, sitting“அட இரட்டை இலையினை எப்பவும் கொடுங்கங்க, இத படிங்க இதெல்லாம் நான் ரொம்ப விசுவாசமானவன்னு ஜெயலலிதா என்னை மும்முறை முதல்வராக்கிய கடிதமுங்க‌

என்னை முதல்வராக்கிட்டா, நா உங்களுக்கும் ரொம்ப விசுவாசமா இருப்பேனுங்க, அந்த பழனிச்சாமிக்கு விசுவாசம் கொஞ்சம் குறைவுங்க..

எசமான் உத்தரவு கொடுத்திட்டா நேரே அம்மா சமாதியில தியானத்த தொடங்கிரலாமுங்க..

ஏதோ பாத்து செய்ங்க, இது கூட முன்பு சசிகலாவிற்கு எழுதிகொடுத்த அடிமை சாசனமுங்க படிங்க‌

இத மாதிரி உங்களுக்கும் ஒண்ணு எழுதியிருக்கேன், வாசிக்கிறேன் கேளுங்க..”


டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்தார் துணை முதல்வர் ஓ.பி.எஸ்.

மாதம் மும்முறை பிரதமரை சந்தித்து அப்படி என்னதான் பேசுவார் இந்த ஒபிஎஸ்?

அதுவும் ஒரு பிரதமர், தமிழக துணைமுதல்வரை மட்டும் அடிக்கடி சந்திக்கும் அவசியம் என்ன?

ஒருவேளை இந்த கருப்புபண ஒழிப்பு முதல், ஜிஎஸ்டி வரை இந்த பன்னீர்தான் மோடிக்கு ஆலோசனை கொடுத்துகொண்டிருக்கின்றாரோ?

இருபெரும் அறிவாளிகள் அடிக்கடி சந்திப்பது கவனிக்கவேண்டிய விஷயம்தான். இருவரும் ஆலோசனைகளை பகிர்ந்து நாட்டை வளபடுத்தட்டும்

(இருவரும் யார் போடும் டீ சிறந்தது என பெட் கட்டி டீ போட்டு விளையாடுவார்களோ? )


 

மதுபான விலையேற்றத்தை ஏற்றுகொள்ள முடியாது : முக ஸ்டாலின்

மதுபான விலையேற்றத்தை ஏற்றுகொள்ள முடியாது : முக ஸ்டாலின்

வழக்கமாக வெளியிடும் அறிவிப்பு போல அறிவித்துவிட்டார்

மதுவிஷயத்தில் என்ன நடக்கின்றது?

திமுக, அதிமுகவினர் இருவருக்குமே மது ஆலைகள் உண்டு. இருவர் கம்பெனி சரக்குகள்தான் டாஸ்மாக்கில் விற்கபடுபவை

முன்பு விஜய் மல்லையா விற்றுகொண்டிருந்தார், இவர்கள் விற்க ஆரம்பித்தபின் அவர் தொழிலே படுத்து அவரும் அடுத்த நாட்டுக்கே ஓடிவிட்டார்

அதாவது விஜய் மல்லையா அளவிற்கு இந்த கட்சிக்காரர்கள் சம்பாதிக்க ஆரம்பித்தாயிற்று

விஜய் மல்லையாவினை சரித்ததில் தமிழக கட்சிகளுக்கு பெரும் பங்கு மறைமுகமாக உண்டு

இப்பொழுது டாஸ்மாக்கிற்கு வரும் சரக்கில் பெரும்பான்மை திமுக ஆலை சரக்கு, காரணம் சசிகலாவின் மிடாஸில் வாங்கினால் தினகரனுக்கு பணம் வரும், வந்தால் நாஞ்சில் சம்பத் எல்லாம் சவால் விடுவார்

இப்பொழுது தினகரன் பக்கம் அமைதியாக மிடாஸின் வருமானம் குறைந்ததுதான் காரணம்

இப்பொழுது திமுக மது ஆலைகளில் அடைமழை சீசன், அள்ளுகின்றார்கள்

இது தெரிந்தும் ஸ்டாலின் சீறுகின்றாராம், ஒருவேளை கொள்முதல் விலையினை உயர்த்தவேண்டும் என்ற கட்சிக்காரர்களின் முணுமுணுபின் எதிரொலியாக இருக்குமோ?

வாமணன் : நெப்போலியன் வரலாறு : 7

Image may contain: one or more people and people riding horses

ஜூன் 9, 1798ல் எகிப்தை குறிவைத்து தன் படைகளை நகர்த்தினான் நெப்போலியன் 29 வயதுதான் அவனுக்கு அப்போது.

ஜோசப்பினுடன் ஒரு பக்கம் தீரா காதல் என்றாலும் இன்னொருபக்கம் மிக நேர்த்தியான யுத்த நகர்வு இருந்தது. எகிப்திற்கு நிலம் வழியாக செல்ல அவனுக்கு ஐரோப்பாவில் தடையேதும் இல்லை, ஆனால் ஆசிய நுழைவாசலில் இருந்தது சிக்கல்

ஆம், ஆட்டோமன் துருக்கியர் அங்கு வலுவாக இருந்தனர். துருக்கி சிரியா இஸ்ரேல் அரேபியா ஆர்மீனியா என பரவி இருந்தது அவர்கள் சாம்ராஜய்ம், கிட்டதட்ட 500 வருடமாக அசைக்க முடியாத சக்தி அவர்கள், இரண்டாம் உலகபோரில்தான் அவர்கள் அரசு முடிவுக்கு வந்தது.

அவர்களை வெற்றிகொள்வது நடக்காத காரியம் என்பது அவனுக்கு புரிந்தது. நெப்போலியன் மாவீரன் என்பதில் சந்தேகமில்லை, ஆனால் மாவீரனுக்கும் விவேகம் வேண்டுமல்லவா? அது அவனுக்கு இருந்தது

அங்கு சிலநாட்கள் பணியாற்றிய அனுபவத்தில் அவன் அதனை உணர்ந்திருந்தான்

தரைபடை நடத்துவதில் தன்னிநகரில்லாதவன் நெப்போலியன் ஆட்டோமான் துருக்கியரை எதிர்க்க தயங்கினான், சிலுவை போர்களில் துருக்கியரிடம் ஐரோப்பியர் தோற்றதில் இருந்து அந்த பக்கமே எட்டிபார்ப்பதில்லை

இதனால் கடல்வழியே எகிப்துக்கு செல்ல ஆயத்தமானான், இத்தாலி அவன் கையில் இருந்ததால் அதன் அருகில் இருந்த மால்ட்டா வழியாக செல்ல முயன்றான்

மால்டா மீது யுத்தம் தொடுத்தான், வெறும் 3 வீரர்களை மட்டுமே இழந்து அத்தீவினை பிடித்தான், அது இலங்கை போல கேந்திர முக்கியத்துவம் வாய்ந்தது

கடற்போரில் அவன் பெற்ற முதல்வெற்றி அதுதான்.

அந்த உற்சாகத்தோடு எகிப்தின அலெக்ஸாண்டிரியா நகரை நோக்கி சென்றான், அது அலெக்ஸாண்டர் உருவாக்கிய அற்புத நகரம்

அந்த மாவீரன் உருவாக்கிய நகரத்தில்தான் நெப்போலியனும் கால்பதித்தான், யுத்தம் தொடங்கிற்று மம்லுக் எனப்படும் எகிப்து ஆட்சியாளர்களுடன் மிக கொடூரமான யுத்தம் நடந்தது.

அவர்களை நெப்போலியனின் படை வீழ்த்தியது, கிட்டதட்ட 5 ஆயிரம் மம்லுக் வீரர்கள் இறந்தனர். எகிப்து நெப்போலியன் வசமாயிற்று, அவன் இழந்தது வெறும் 300 வீரர்களே

அதாவது நெப்போலியன் எனும் தளபதி பிரென்ஞ் குடியரசு சார்பாக எகிப்தை வீழ்த்திகாட்டினான்.

ஜூலை 21 1798ல் எகிப்தில் வெற்றிகொடி நாட்டிய நெப்போலியன், அலெக்ஸாண்டிரியா நகரத்தை சுற்றிபார்த்தான் நெப்போலியன், அலெக்ஸாண்டரின் கலை மனமும் அவனின் பிரமாண்டமும் அவன் கண்முன் வந்துபோயின, அலெக்ஸாண்டர் மிக பெரும் திறமைசாலி, அற்புதமான ரசிகன், நிர்வாகி என வாய்விட்டு சொன்னான்.

அலெக்ஸாண்டிரியா அப்படி அவன் மனம் கவர்ந்தது.

கெய்ரோவில் நுழைந்தான் நெப்போலியன், எகிப்து என்றால் நைல் நதியும் பிரமீடுமே அடையாளம்.

இதில் பிரமீடு என்பது என்னதான் உலக அதிசயம் என்றாலும் அது கிட்டதட்ட தஞ்சாவூர் கோவில் சென்டிமெண்ட் கொண்டது. அதாவதுள், அதனை வெற்றிகொண்ட அரசர்கள், நான் அரசன் எனும் மமதையில் அங்கு நுழைந்தால் கொஞ்ச நாளில் இறந்துவிடுவார்கள் என்பது நம்பிக்கை

தஞ்சாவூர் கோவில் சென்டிமெண்டும் அப்படியானது, அரசு பதவியில் இருப்பவர்கள் நானே எல்லாம் எனும் அகங்காரத்தில் நுழைந்தால் அவர்களுக்கு சிக்கல் என்றும், பக்தர்களில் ஒருவராக வந்தால் சிக்கல் இல்லை என்பதும் அங்குள்ள நம்பிக்கை

சிலர் அரசு பதவியிலிருந்து அங்கு சென்றுவிட்டு பின் பதவிபறிபோன சம்பவங்கள் இன்றும் தமிழகத்தில் பிரபலம்

ஏன் இம்மாதிரியான நம்பிக்கைகள் என்றால், ராஜராஜ சோழனின் கனவு அவ்வாலயம். அன்று அது சோழ நாடு.

அக்கால பழக்கபடி ஒரு நாடு யுத்ததில் தோற்குமாயின் முதலில் இடிக்கபடுவது ஆலயங்கள், காரணம் கோவில் என்பது தங்க சுரங்கம், அக்கால மன்னர்கள் கொட்டியது அப்படி.

இதனால்தான் அக்கோவிலில் கால் வைக்கும் எதிரி மன்னர்கள் அழியட்டும் என்றொரு வேண்டுதலை அவன் வைத்ததாகவும் அது இன்றுவரை பலிப்பதாகவும் நம்பிக்கை.

எகிப்தியர்கள் மன்னனின் உடலை பாதுகாக்க பிரமீடுகளை கட்டினர், அவன் மீண்டும் உயிர்பெற்றுவருவான் என நம்பினர். அவன் சமாதியில் பொன் பொருள் எல்லாம் குவித்து வைத்தனர்.

மந்திர தந்திரங்களில் மிக பெரும் பெயர் பெற்றவர்கள் எகிப்தியர்கள், பைபிளின் யாத்திராமகம் தெளிவாக சொல்கின்றது, கடவுளுக்கே சவால் விட்ட மந்திரவாதிகள் அவர்கள்

அப்படிபட்ட எகிப்தியர்கள் ஏதோ சக்தியினை பிரமீடில் நிறுத்தியிருப்பதாகவும் அதனை கொள்ளையிடுபவர்கள் அழிவதாகவும் நம்பிக்கை

நெப்போலியன் அசாத்திய பிறவி, அவன் பிரமீடுகளை தோண்டி கொள்ளையிட உத்தரவிட்டாலும் வீரர்கள் அஞ்சினர்

அசால்ட்டாக சொன்னான் நெப்போலியன் “என்ன பிரச்சினை? ஓரிரவு முழுக்க நான் அங்கு தனியாக தங்குகின்றேன், நான் மறுநாள் வந்து உத்தரவிட்டால் நம்புவீர்களா”

ஆச்சரியத்தில் வியந்தனர் வீரர்கள், சவாலை துணிந்து எடுத்த நெப்போலியன் அவர்களுக்கு அதிசயமாக தெரிந்தான்

ஒரு மாலையில் தனியாக சென்று பிரமீடு ஒன்றில் படுத்துகொண்டான், உள்ளூர் எகிப்தியர்கள் நெப்போலியனின் வீரர்களிடம் கேட்டார்கள், “

பெட்டி தயார் செய்யலாமா? எளிதுதான் 3 அடி உயரத்தில் செய்துவிடலாம்”

ஆனால் மறுநாள் காலையில் அசால்ட்டாக வந்தான் நெப்போலியன், அனைவருக்கும் ஆச்சரியம். எகிப்தியர்களுக்கோ மகா நடுக்கம், “இவன் கடவுளாக இருப்பானோ? பாரோ ஆக்கிவிடலாமா?”

அங்கு என்ன நடந்தது என கேட்டார்கள், அமைதியாக சொன்னான் நெப்போலியன், “நான் கண்ட அனுபவம் மகா வசித்திரமானது, சொன்னால் யாரும் நம்பமாட்டார்கள். ஆனால் விசித்திரமான சக்திகள் நிலவுவது உண்மை”

அதன் பின் அவன் அதிகம் பிரமிடு புதையலை தேடவில்லை, அவன் வீரர்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக எடுத்துவந்தார்கள்.

அதில் அவன் ஜோசபைனுக்கு எதுவும் எடுத்து வைக்கவில்லை, ஆனால் அங்கிருந்து காதல் ரசம் சொட்ட சொட்ட கடிதம் மட்டும் எழுதிகொண்டிருந்தான்.

அதே நேரம் எகிப்து நமது, இனி இங்கிருந்து செங்கடல் வழியாக சென்று பிரிட்டிசாரை நடுங்க வைக்கலாம், திப்பு சுல்தானுக்கு உதவலாம் என திட்டம் தீட்டிகொண்டிருந்தான் நெப்போலியன்

நெப்போலியன் எகிப்தை பிடித்துவிட்டான், வலுவான கப்பல்படையோடு நகர்கின்றான் என்றதுமே பிரிட்டன் தவித்தது, அவனை தடுக்காவிட்டால் அது பிரிட்டனின் வியாபாரம் முதல் இந்திய ஆக்கிரமிப்பு வரை எல்லாவற்றையும் பாதிக்கும் என கருதியது

நெப்போலியனும் திப்பு சுல்தானும் இணைவதை தடுக்க அது மிக அவசர திட்டம் தீட்டியது

காரணம் இருவரும் இணைந்துவிட்டால் அவ்வளவுதான், மொத்த இந்தியாவும் திப்புவின் தலமையில் பிரான்சுடன் வியாபாரம் செய்யும் நிலைக்கு வந்திருக்கும். இருவரின் திறமைக்கு முன்னால் பிரிட்டன் படை நின்றிருக்க முடியாது

திப்பு இரு போர்களில் வெள்ளையனை கதறவிட்டு வெற்றிகொடி நாட்டியிருந்தார், அந்த நம்பிக்கைதான் நெப்போலியன் திப்புவினை உற்று நோக்க வைத்தது

இருவரும் கடிதம் எல்லாம் எழுதியிருந்தார்கள், நேரில் பார்க்காமலே இருவருக்கும் நட்பு இருந்தது

பிரிட்டன் அவசர கதியில் இயங்கியது, திப்பு அமைதியாக இருக்க கூடாது அவரை யுத்தத்தில் இழுத்து சாகடிக்கவேண்டும் அதே நேரம் நெப்போலியனும் யுத்த களத்தில் இருந்தாக வேண்டும், யாரை முந்தி கொல்லமுடியுமோ கொன்றுவிடலாம்

நெப்போலியனை எதிர்க்க அனுபவசாலியான ஒரு தளபதியினை அனுப்பினார்கள்

அவனால்தான் திப்பு சுல்தான் தலைவிதி, இந்திய தலைவிதி எல்லாம் மாறிற்று.

அவன் பெயர் ஹொராஷியா நெல்சன், பழுத்த அனுபவசாலி

40 வயது நெருங்கியிருந்தாலும் கடற்போரில் பெரும் அனுபவம் வாய்ந்தவன்

அந்த சிங்கத்தை நெப்போலியனை நோக்கி ஆகஸ்ட் 10 1798ல் ஏவியது பிரிட்டன்

இரு சிங்கங்களும் சந்தித்துகொள்ள நேரம் நெருங்கிற்று, ஏற்கனவே பிரிட்டனின் பலமிக்க கப்பல்படை மீது வெறுப்பில் இருந்த நெப்போலியனுக்கு இம்முறை வாய்ப்பு கிட்டிற்று

 

வாமணன் வருவான்…

 

அமித்ஷா மகன் பல்லாயிரம் கோடிகளை அமுக்கிவிட்டார் …

அமித்ஷா மகன் பல்லாயிரம் கோடிகளை அமுக்கிவிட்டார் என்றால் “ஏய் குழப்பவாதி , ஒழுங்காக பார் அது சில கோடிகள்..” என பொங்குகின்றார்கள்

ஆனால் திமுக 1 லட்சத்து 75 ஆயிரம் கோடி அடிக்கவில்லை, அதெல்லாம் முடியாது என சொன்னால் “அல்ல அல்ல, அது நிச்சயமானது , திமுக அவ்வளவு பெரும் தொகை அடித்தது உண்மை ” என சூடமேற்றி சத்தியம் செய்து பூக்குழி இறங்கவும் தயாராகின்றனர்

ஆக மற்ற கட்சிகள் மீது ஒரு பார்வை, திமுக என்றால் கசப்பான ஒரு பார்வை

ஏன் என்றால் திமுக கொடுத்த, கொடுத்துகொண்டிருக்கும் சவால் அப்படி.

யார் கனவிலோ மிரட்டும் சிங்கமாக திமுக இருப்பதுதான் இவற்றிற்கெல்லாம் ஒரே காரணம்.

பாசுமதி அரிசி விளைவிக்க தடை

Image may contain: foodபஞ்சாப் காஷ்மீர் போன்ற சில மாநிங்கள் தவிர வேறு மாநிலங்களில் பாசுமதி அரிசி விளைவிக்க தடை

மிளகு, சந்தணம் போன்ற இந்திய அடையாளங்களில் ஒன்று பாசுமதி அரிசி.

அது இமயமலை நீருக்கும் வட இந்திய மண்ணுக்கும் மட்டுமே நன்றாக விளையும் ரகம். கேரள மிளகு போல இமயமலை அடிவார, குறிப்பாக பஞ்சாப் பாசுமதிக்கு உலகெல்லாம் இன்றளவும் கடும் கிராக்கி.

இந்திய பாகிஸ்தானிய பாசுமதி அரிசிக்கு இருக்கும் கிராக்கி உலகில் எந்த நாட்டு அரிசிக்கும் இல்லை, தாய்லாந்து,வியட்நாம் பர்மா பாசுமதி எல்லாம் இவைகள் முன்னால் நிற்கமுடியாது

இப்பொழுது சிக்கல் என்னவென்றால் பாசுமதி அரிசி இந்தியா எங்கும் விளைவிக்கபடுகின்றது, அதில் பஞ்சாப் அரிசியினை தவிர மற்ற அரிசியில் குறிப்பிட்டதரம் இல்லை என்பதால் மேல்நாடுகள் வாங்க தயங்குகின்றன‌

அதற்காக குவியும் அரிசியினை ரேஷனில் பாஸ்மதி, சத்துணவில் பிரியாணி என கொடுக்கமுடியாதல்லவா? அதனால் மற்ற மாநிலங்கள் அதனை பயிரிட கூடாது என மத்திய அரசு சொல்கின்றதாம்

இது எப்படிபட்ட விளைவுகளை ஏற்படுத்தும் என்பது இனிதான் தெரியும், பிரச்சினை வெடித்தாலும் வெடிக்கலாம்

இதில் நம் தமிழக அழிச்சாட்டியங்கள் அற்புடமாக அட்டகாசம் செய்ய ஒரு வாய்ப்பு இருக்கின்றது

அதாவது பஞ்சாபிற்கு பாசுமதி என்றால் தமிழகத்திற்கு காவேரி கரையில் விளையும் பொன்னி, சீரக சம்பா போன்றவை மகா பிரசித்தி

பஞ்சாபிய பாசுமதி மற்ற மாநிலங்களில் விளைவிக்க கூடாது என்றால், எம் பொன்னி அரிசி மட்டும் கன்னடத்திலும் ஆந்திராவிலும் விளைய அனுமதிக்கலாமா? இது தமிழின துரோகம், ஆரிய சதி, மோடியின் இன ஒழிப்பு கொள்கை என இவர்கள் கிளம்ப வாய்ப்பிருக்கின்றது.

சந்தடி சாக்கில் இது கேரள மிளகு, அசாம் டீ என இன்னும் சில விவகாரங்களில் எதிரொலிக்கலாம்.

 

கனிமொழி மீது சுமத்தபட்டிருக்கும் குற்றசாட்டு

கனிமொழி மீது சுமத்தபட்டிருக்கும் குற்றசாட்டு, ராசாத்தி அம்மாள் மீது சொல்லபட்ட குற்றசாட்டு என்ன?

கலைஞர் டிவி தொடங்கபட்டு கொஞ்ச நாளைக்குள் 200 கோடி லாபத்தில், டிவி தொடங்கபட வாங்கிய கடன் அடைக்கபட்டது என்பது.

அதாவது அப்படி எல்லாம் வருமானம் வர வாய்ப்பே இல்லை, இதெல்லாம் முறைகேடு என சொல்லி பெரும் ஆர்பாட்டம் செய்து, வழக்குதொடுத்து அவரை சிறையில் அடைத்து இன்னும் தீர்ப்பு வரவில்லை.

குற்றசாட்டு என்பது மேற்கண்டதுதான்

ஆனால் பொத்தம் பொதுவாக ஸ்பெக்ட்ரம் ஊழல், கனிமொழியும் ராசாவும் 1 லட்சத்தி 75 ஆயிரம் கோடி எடுத்துவந்து கோபாலபுரத்தில் அடுக்கினார்கள் என பெரும் பழிகளை எல்லாம் கிளப்பிவிட்டார்கள். தமிழக மூலை முடுக்கெல்லாம் இது செய்தியானது

இதோ அமித்ஷா மகனின் கம்பெனி ஒருவருடத்தில் 16 ஆயிரம்மடங்கு லாபம் சுழற்றியிருக்கின்றது. அது பற்றி கேட்டால் அது வியாபாரம், தொழில் திறமை, இது கம்பெனியில் சுற்றிவந்த பணம் என என்னவெல்லாமோ சொல்கின்றார்கள்.

ஒரு விசாரணை , வழக்கு என ஏதுமில்லை அது தேவையே இல்லை என்கின்றது மத்திய அரசு.

கலைஞர் டிவி 200 கோடிரூபாய் கொடுத்து கடனை அடைத்தால் அது முறைகேடாம், ஆனால் அமித்ஷா மகன் கம்பெனி 16 ஆயிரம்மடங்கு லாபம் பணத்தினை கையாண்டால் அது தொழில் சாமார்த்தியமாம்.

ராசா அமைச்சராக இருந்தபொழுது கஜானாவிற்கு வரவேண்டிய 1.75 லட்சம் கோடி வரவில்லை, குறைவாக வந்தது அது ஊழல் , அதில்தான் கலைஞர் டிவி கடன் அடைக்கபட்டது என்றேல்லாம் கிளப்பினார்கள், கட்டுகதை மூட்டைகளை அவிழ்த்தார்கள்

ஆனால் இதோ பாஜக ஆட்சியில் அதே துறையில் கஜனாவிற்கு வரவேண்டிய 4 லட்சம் கோடியில் 10ல் ஒருபாகம் தான் வந்திருக்கின்றது, அதே நேரம் அமித்ஷா மகன் கம்பெனியில் பல்லாயிரம் கோடிகள் புரள்கின்றன.

இதைபற்றி எல்லாம் யாரும் பேசவில்லை, பேசமாட்டார்கள்.

கனிமொழி, கலைஞர் என்றால் குதியோ குதி என குதித்தவர்களை இந்த அமித்ஷா விஷயத்தில் காணவே இல்லை

இதுதான் பத்திரிகா தர்மம். வழக்கமாக அதிரடி காட்டும் சுப்பிரமணியன் சாமி எல்லாம் சத்தமே இல்லை.

கலைஞர் பாணியில் சொல்வதென்றால், “சூத்திரன் மீது ஏதோதோ சொல்லி கோட்டான்களாக கத்துவார்கள், ஆரிய சாதிக்கு ஒரு ஆபத்தென்றால் மனை விழுங்கிய மலைபாம்பு போல அமைதியாகிவிடுவார்கள்”

இந்த பெரும் அநியாயத்தை எல்லாம் எடுத்து சொல்லி தன் கட்சி மீதான களங்கத்தை துடைக்க வேண்டியது திமுககாரர்களின் கடமை

அவர்களோ இந்த செல்லூர் ராஜூ போன்றவர்களை கலாய்பதிலும், தலித் அர்ச்சகர் என வீரமணி பின்னாலும் சென்றுகொண்டிருக்கின்றார்கள்.

உடன்பிறப்புக்களே கலைஞர் வழியில் சிந்தியுங்கள், இந்த செல்லூர் ராஜூ, வீரமணி பின்னால் திரிந்தீர்கள் என்றால் அவர்களை போலவே ஆகிவிடுவீர்கள்.