தீராத விளையாட்டு பிள்ளை ஹாலிவுட் ஹார்வி வெய்ன்ஸ்டீன்

Image may contain: 2 people, close-upஇந்த பாவனா விவகாரம் கேரளாவினை புரட்டிவிட்டு தமிழகத்தில் லேசான புயலாக கடந்தது நினைவிருக்கலாம்

பாவனா வாய் திறந்தபின் ஆளாளுக்கு என்னை கையினை பிடித்து இழுத்தார்கள் என தொடங்கினார்கள், இப்பொழுது கூட நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் என்னமோ சொல்லியிருந்தார்

இந்த என்னை கையை பிடித்து இழுத்தார்கள் எனும் புயல் இப்பொழுது மையம் கொண்டிருக்கும் இடம் ஹாலிவுட்

அங்கும் ஒரு தயாரிப்பாளர் தீராத விளையாட்டு பிள்ளையாக இருந்திருக்கின்றார், நெற்றிகண் ரஜினியாக, மன்மத லீலை கமலஹாசனாக ஆடி தீர்த்திருக்கின்றார்

Image may contain: 2 people, people smiling, people standingஅவர் பெயர் ஹார்வி வெய்ன்ஸ்டீன், ஆனால் தொழிலில் கில்லாடி, அவர் தயாரித்த படம் ஆஸ்காரை எல்லாம் அசால்ட்டாக சில எண்ணிக்கையில் தட்டியிருக்கின்றன, கிட்டதட்ட 35 வருடமாக ஹாலிவுட்டில் மிக முக்கிய நபர்

அவர் மீதுதான் சர்ச்சை

முதலில் குற்றசாட்டை வீசியவர் உதட்டழகி ஏஞ்சலினா ஜோலி, என்னை ஹார்வி கையினை பிடித்து இழுத்தார் என ஜோலி தொடங்க, மற்ற நடிகைகள் எல்லாம் எங்களையும் இழுத்தார் என ஆரம்பித்துவிட்டார்கள்.

ஜோலியால் ஹார்வியின் சோலி சுத்தம்….

ஐஸ்வர்யா ராய் மேனேஜருக்கும் ஐஸ்வர்யா ராய்க்கும் என்ன பிரச்சினையோ தெரியவில்லை, சம்பள விவகாரமோ இல்லை ஐஸ்வர்யா போனஸ் கொடுக்காத பிரச்சினையோ மேனஜருக்கு கடுப்பு இருந்திருக்கலாம்

ஆமாம் அந்த ஹார்வி அப்படித்தான், என்னிடமே ஐஸ்வர்யா ராயினை தனியாக சந்திக்க நேரம் கேட்டார். நான் மறுத்துவிட்டேன் என சொல்லிவிட்டார்

மேனேஜர் செய்த காரியத்தால் ஐஸ்வர்யா ராயிடமும் சில விசாரிப்புகள். மேனேஜர் வாயினை மூட படாத பாடு படுகின்றார் ஐஸ்வர்யா ராய்

மற்ற ஹாலிவுட் இந்திய நடிகைகளான பிரியங்கா சோப்ரா, மல்லிகா ஷெராவத் எல்லாம் மகா அமைதி மற்றும் திகைப்பு.

சன்னிலியோன் போன்றவர்களுக்கு ஒரு கவலையும் இல்லை, எந்த சர்ச்சை வந்தால் அவர்களுக்கென்ன?

விஷயம் உலகெல்லாம் பற்றி எரிகின்றது, ஹார்வியின் ஆஸ்கர் விருதுகள் திரும்ப பெறபடலாம் என்கின்றார்கள்.

அவர் உறுப்பினராக இருந்த ஹாலிவுட் தயாரிப்பாளர் சங்கம் அவரை நீக்கிவிட்டது.

உச்சமாக அவரிடம் தேர்தல் நன்கொடை பெற்றிருந்த ஹிலாரி, “சே கிளிண்டன் எவ்வளவு நல்லவர் , ஐ லவ் யூ கிளிண்டன்” என சொல்லிவிட்டு அந்த நன்கொடையினை ஹார்வி முகத்தில் எறிந்துவிட்டார்.

ஹார்வி மனைவியும் அவரை பிரிந்துவிட்டார்

வழக்கு நடந்து குற்றம் நிரூபிக்கபட்டால் 30 ஆண்டு சிறை உறுதி என்கின்றது அமெரிக்க சட்டம்

பல்லாண்டு உச்சத்தில் இருந்த ஹார்வி, இப்பொழுது அதல பாதாளத்தில் இருக்கின்றார்

இது ஒருபுறம் இருக்க, இவர் நிச்சயம் வீடியோ எடுத்திருப்பார்? அதனை எப்படி ஹேக் செய்யலாம் என்றொரு கும்பல் தீவிரமாக அலைகின்றதாம்.

நல்ல வேளையாக நம் தங்க தலைவி ஹாலிவுட் எல்லாம் செல்லவில்லை, சென்றிருந்தால்….

ஏஞ்சலினா ஜோலியின் ரசிகர்கள் அமைதியாக இருக்கலாம், ஆனால் குஷ்பூ ரசிகர்கள் சும்மா இருப்பார்களா?

இந்நேரம் அந்த ஹார்வி 400 துண்டுகளாக சிதறியிருப்பார்.

அந்த கையினையும் அந்த நாக்கினையும் இழுத்து வைத்து 10000 துண்டுகளாக மறுபடியும் நறுக்கியிருப்பார்கள்

தலைவி ஹாலிவுட் செல்லாததால் இந்நேரம் ஹார்விக்கு உயிர்பிச்சை கிடைத்திருக்கின்றது.

 

பின்னூட்டமொன்றை இடுக