பண்டிகை முடிந்து மறுநாள் வேலைக்கு செல்வது ..

Image may contain: 1 person, smiling, close-up

பண்டிகை முடிந்து மறுநாள் வேலைக்கு செல்வது வாழ்வின் மிக மிக கொடுமையான தருணம்

என்ன செய்வது? இவ்வுலகில் சில மதங்கள் இருப்பதுதான் காரணம்

மக்கள் மகிழ்ச்சியாக இருக்க இன்னும் சில மதங்கள் அவசியம்

நாம் பல மதம் பரப்ப முடியாது, ஒரே ஒரு மதம் மட்டும் தொடங்கி வருங்கால சந்ததி நம்மை வாழ்த்தும்படி செய்துவிடலாம்

விரைவில் குஷ்பூ மதம் தொடங்கி, “குஷ்பூ அவதார திருவிழா”, “குஷ்பூ தமிழகம் வந்த விழா” என சில பண்டிகைகளை வருங்காலம் கொண்டாட வழி செய்துவிட வேண்டும்

“குஷ்பூ மதம்” தொடங்கும் திட்டம் உடனே பரிசீலக்கிபடுகின்றது

ஶ்ரீவித்யா இறந்த நாள் இதே அக்டோபர் 19

Image may contain: 1 person, smiling, close-upதமிழகத்தில் எத்தனையோ நடிகைகள் வந்தார்கள், சிலர் தடம் பதித்தார்கள், சிலர் கோபுரம் ஏறினார்கள், சிலர் ஆறா வடுக்களை ரசிகர்கள் மனதில் விட்டு சென்றார்கள்

அந்த ஆறா வடுக்களில் ஒன்றுதான் நடிகை ஶ்ரீவித்யா

அமைதியான முகம், அதில் துருவென்று வரும் அந்த அற்புத கண்கள், புன்னகை சிந்தும் உதடு என மிக அற்புதமான அழகு அவர். குறிப்பாக அந்த கண்கள், அது மட்டுமே ஆயிரம் கதைகளை அட்டகாசமாக பேசும்

சினிமாவில் வாயினை விட கண்களால் அதிகம் பேசியவர் அந்த ஶ்ரீவித்யா

அவரின் தாய் வசந்தகுமாரி மிகபெரும் பாடகி, ஶ்ரீவித்யாயும் பாடகியாகத்தான் வாய்ப்பு இருந்தது, ஆனால் விதி அவரை நடனம் பயில வைத்து அப்படியே நடிகையாகவும் ஆக்கிற்று

நடிக்க வந்தபொழுது அவருக்கு 20 வயதுதான், ஆனால் அந்த வயதிலும் எந்த நடிகையும் எடுக்காத சவாலை எடுத்தார். ஆம் அன்றே ஏறக்குறைய சரிவயதுதுள்ள கமலஹாசனுக்கு தாயாக அன்றே நடித்தார்

Image may contain: 1 person, close-upஅந்த தைரியம் யாருக்கும் இல்லை, ஆனால் அதுதான் அவர் தனிபெரும் கதாநாயாகியாக வரமுடியாமல் கடைசி வரை தாய் , அக்கா, அண்ணி என வர காரணமும் ஆயிற்று

இல்லாவிட்டால் அவரின் தனிபெரும் அழகிற்கு மிக பெரும் கதாநாயகியின் இடத்தை அவரால் பெற்றிருக்க முடியும்.

எப்படிபட்ட அபூர்வ நடிகை அவர், குறிப்பாக அந்த கண்கள் அதில் எப்படிபட்ட உணர்வினையும் அவரால் காட்ட முடிந்தது, அன்பு பாசம் பரவசம் எல்லாவற்றையும் காட்டிய அந்த அழகிய கண்கள் அதிகம் காட்டியது சோகம் தான்

ஒரு கவிஞன் சொன்னான் “அவரின் விழிகள், சமுத்திர ரகசியங்கள் ததும்பும் அகன்ற விழிகள்”” என வர்ணித்திருந்தான், மிக அற்புதமான வரிகள் அவை

இரக்கமில்லாத கடவுள் அக்கண்கள் சோகமாகவே இருக்கவேண்டுமென்று படைத்தானோ என்னமோ, திரையில் சோகத்தை காட்டிய அக்கண்கள் நிஜத்திலும் சோகத்தையுமே காட்டியது

தமிழகம் அவரை அம்மா, அக்கா என வேடம் கொடுத்தே வைத்திருந்தது, சிவாஜி கணேசன் எனும் மாநடிகனையே அழபிறந்தவன் என காட்டிய தமிழகம் , ஶ்ரீவித்யா எனும் அற்புத கண்ணிலே நடிப்பை காட்டும் நடிகையினையும் அழபிறந்தவளாகவே காட்டிற்று

ஆனால் மலையாளம் அவரின் நடிப்பிற்கு சவால் கொடுத்தது, அதுவும் ரஸ்னா போன்ற படத்தின் சவாலான படங்களில் பின்னி எடுத்திருந்தார்

கேரளம் அவரை எவ்வளவு கொண்டாடியிருந்தது என்பதற்கு அவருக்கு அரசு மரியாதையுடன் அச்சுதானந்த மேனன் செய்த இறுதி மரியாதையும், உம்மன் சாண்டி போன்றோர் நேரில் சென்று செய்த அஞ்சலியும் சாட்சி

ஆம், தமிழகத்தில் அவர் இறந்திருந்தால் இங்கு அப்படியொரு மரியாதை கிடைத்திருக்காது, கேரளம் அவருக்கு கொடுக்க வேண்டிய மரியாதையினை கொடுத்திருந்தது

அந்த அற்புதமான அழகிய நடிகையின் கடைசி காலத்தை நினைத்தால் கண்கள் பனிக்கின்றது

அவ்வளவு சிரமபட்டிருக்கின்றார், கலங்கியிருக்கின்றார் என்கின்றார்கள்

அதாவது கவிஞனுக்கு அவன் கவிதை திறனே பலம், சிற்பிக்கு அவன் செதுக்கும் வித்தையே பலம், இசை கலைஞனுக்கு அவனின் இசைதான் பலம்

அந்த கலைதிறனை இழந்துவிட்டால் அது கிட்டதட்ட மரண கொடுமை, இதோ எழுத முடியா நிலையில் கலைஞரின் மனமும் மரணவலியில்தான் இருக்கும்

தலைசிறந்த ஓவியன் கைநடுங்கும் வியாதியில் சிக்கினால் என்னாகும்?

முதுமையால் வந்தால் கூட தெரியாது, கலைஞரை போல சமாதானம் சொல்லிகொள்ளலாம், ஆனால் இளமையில் வந்தால்..

ஆம் நடிகைக்கு அவள் அழகு முகம் தான் மூலதனம். அந்த அழகு அழிந்து தான் மூலையில் முடக்கபடுவது ஒரு நடிகைக்கு பெரும் வலி, உயிர் போகும் வலி

புற்றுநோயால் பாதிக்கபட்ட ஶ்ரீவித்யா அந்நிலையில்தான் தன் அழகினை இழந்து யாரையும் சந்திக்காமல் இருந்தார் என்கின்றது கடைசிகால செய்திகள்

ஆயிரம் சர்ச்சைகள் இருந்தாலும் ஜெயாவும் இம்மாதிரி சிக்கலில்தான் அப்பல்லோ படங்களை தடுத்திருக்கலாம் , அவரும் நடிகையாக இருந்து தன் முகத்தாலே மக்களிடம் அபிமானம் பெற்றவர். அழகில்லா தன் முகத்தை காட்ட அவர் விரும்பியிருக்க முடியாது

ஜெயா போகட்டும், ஶ்ரீவித்யாவினை பார்க்கலாம்

ஶ்ரீவித்யா வாழ்வு போராட்ட வாழ்வு, அவர் நடிகையானதில் தாய்க்கு விருப்பமில்லை ஆனாலும் போராடி நடிகையானார், பின் காதல் தோல்வி, பின் திருமண தோல்வி , சொத்துக்கள் கணவனின் கைக்கு சென்று சல்லி பைசா இல்லாமல் மறுபடியும் அவர் மலையாள திரையுலகிற்கு சென்று போரடிகொண்டுதான் இருந்தார்

எத்தனையோ போராட்டங்களில் வென்ற ஶ்ரீவித்யா, புற்றுநோயுடனான போராட்டத்தில் தோற்றுகொண்டே இருந்தார்

தன் சொத்துக்களை எல்லாம் ஒரு அறக்கட்டளைக்கு மாற்றியிருந்தா, பின் அவர் நோயுற்ற பொழுது , அவரின் அழகினை பாதிக்கா வகையில் செலுத்தபடும் ஒரு ஊசியின் விலை 1 லட்சம் என்றபொழுது அந்த அறக்கட்டளையின் உறுப்பினர்க்ளே அதை அனுமதிக்கவில்லை

ஶ்ரீவித்யா மனதை பாதித்த மிகபெரும் சம்பவம் என அதனைத்தான் சொல்கின்றார்கள்

ஒரு கட்டத்தில் யாரையும் அவர் பார்க்க விரும்பவில்லை, தன் களையிழந்த நோயுற்ற முகம் பத்திரிகையில் வருவதை கூட அவர் விரும்பவில்லை

அதே நேரம் தமிழகத்திலிருந்து யாரும் வலியசென்று பார்க்கவுமில்லை, கமலஹாசன் மட்டும் சென்றிருந்தார்

ஶ்ரீவித்யாவினை புற்றுநோய் எனும் அரக்கன் ஒடுக்கி உருமாற்றி வைத்திருந்த அந்த கோலத்தை கண்ட மிக சிலரில் கமலஹாசனும் ஒருவர்

அந்த ஶ்ரீவித்யா இறந்த நாள் இதே அக்டோபர் 19

தமிழகம் கிட்டதட்ட அவரை மறந்திருக்கலாம், ஆனால் தமிழ் சினிமாவின் ரசிகர்கள் ஶ்ரீவித்யாவினை மறக்க மாட்டார்கள்

குறிப்பாக அந்த கண்கள் யாராலும் மறக்க முடியாதவை

விதி அவரை நடிகையாக்கினாலும் தன் தாயின் சாயலில் “கற்பூர முல்லை” படத்தில் பாடகியாக நடித்திருப்பார்

அது சினிமா என்றாலும், அதில் வருவது போல பெரும் பாடகியாக வாழ்ந்திருக்க வேண்டிய ஶ்ரீவித்யா, நடிகையாகி பின் திருவனந்தபுரத்தில் மரித்ததெல்லாம் விதி

அவர் வந்த ஒவ்வொரு காட்சியிலும் அந்த கண்கள் ஏதோ ஒரு சோக ராகத்தை இசைத்து கொண்டே இருந்தது.

புன்னகை மன்னன் படத்தில் ஏதோ ஒரு காட்சியில் தேங்க்ஸ் என சொல்லி , கண்களிலும் உதட்டிலும் ஒரு அற்புதமான புன்னகை காட்டியிருப்பார்.

அப்படிபட்ட கண்களால் காட்டிய காட்சிகள் மூலம் எந்நாளும் தமிழ் ரசிகர்கள் மனதில் வாழ்ந்துகொண்டே இருப்பார்

அந்த விழியால் மொழி சொன்ன அற்புத நடிகைக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்.

 

எவ்வளவு நல்ல ஆடுகள் அவை..

அக்காலத்தில் குக்கர் கிடையாது, மைக்ரோ வேவ் இம்சைகள் கிடையாது, வெறும் மண்சட்டிதான் ஆனாலும் வெட்டிபோட்டால் ஆடு சமத்தாக வெந்திருக்கின்றது.

எவ்வளவு நல்ல ஆடுகள் அவை..

இப்பொழுது என்னதான் குக்கரில் வேகவைத்தாலும் அது வேக மறுக்கின்றது, இப்போதுள்ள ஆடுகள் எல்லாமே கள்ளமும் கபடும் நிறைந்த ஆடுகள் போல‌

இவ்வுலகில் மனிதர்கள்தான் மாறிகொண்டே வருகின்றார்கள் என்றால், ஆட்டுகறியுமா மாறிகொண்டே வரவேண்டும்?


நண்பர் Vivek Vivekanandam கொடுத்த பாதுஷா எனும் இனிப்பில் தொடங்குகின்றது தீபாவளி கொண்டாட்டம்

நண்பர் கோவைக்காரர், அதனால் கோவை மக்களின் இயல்பான நல்ல மனிதர், நல்ல மனிதர் என்பதை விட இப்படியான சமையல்களில் திடீரென அசத்துபவர்

சும்மா சொல்ல கூடாது, மிக கர்ம சிரத்தையாக , சிலை செய்யும் சிற்பிக்குள்ள பொறுமையும் ரசனையும் கொண்டு அதனை செதுக்கி செதுக்கி சமைத்திருக்கின்றார்

சுவை அள்ளுகின்றது

இனி நண்பர் எப்பொழுது இப்படியான நல்ல பதார்த்தங்களை செய்வார் என்பது எளிதாக கணிக்க கூடியது, மகா நல்ல மனிதர் எனினும் அவருக்கு ஒரு பலவீனம் உண்டு

அதாகபட்டது மனிதர் சிம்பு ரசிகர், வெறியர் இன்னபிற வகையறா, இனி சிம்பு படம் வரும்பொழுது இம்மாதிரி சுவை கொட்ட கொட்ட சமைப்பார் என்பது உறுதி

ஆனால் சிம்பு படம் இப்போதைக்கு வருவது போல் தெரியவில்லை என்பதால் இனி நெடுங்காலம் இந்த பாதுஷாவிற்கு காத்திருக்க வேண்டும்

நண்பர் கொடுத்த‌ இனிப்பான தொடக்கத்தோடு அழைத்திருக்கும் நண்பர்கள் வீட்டிற்கான தீபாவளி “பல்சுவை” பயணத்தினை சமூகம் தொடங்குகின்றது.


வீரப்பனால் யாருக்கு லாபம்?

Image may contain: 1 person, sitting, beard and outdoor

அன்று பெங்களூர் மிக மிக பரபரப்பாக இருந்தது, காரணம் மாநில சட்ட ஒழுங்கு பிரச்சினையை காக்கும் பொறுப்பு கூடுதலாக மத்திய அரசின் படைகளும் குவிக்கபட்டிருந்தன, காரணம் 1986ம் ஆண்டின் சார்க மாநாடு பெங்களூரில் நடைபெற்றது, சிங்களர்களின் “ராஜகுரு ஜெயவர்த்தனே” வருகிறார், புலிகளின் தலைவர் பிரபாகரன் தமிழகத்தில் இருக்கிறார், எப்படி இருக்கும் நிலமை?

காவல்துறையில் அந்த தீவிரபரபரப்பில் ஒரு கைதி கர்நாடக சிறையில் இருந்து தப்புகிறார், அவரைபற்றி அன்று அதிகம் யாருக்கும் தெரியாது, கன்னட எல்லையில் ஒரு கொலைகுற்றவாளி அவ்வளவுதான், ஆனால் அடுத்த 18 ஆண்டுகளுக்கு அவர்தான் மூன்று மாநிலங்களை ஆட்டுவித்தவர், பல கடத்தல்களில் ஈடுபட்டாலும் சந்தண கடத்தல் எனும் பட்டம் மட்டும் வீரப்பனுக்கு நிலைத்துவிட்டது.

இன்றும் அது தமிழகத்தின் மிக பின் தங்கிய பகுதி, ஆனால் இயற்கை செல்வம் குவிந்திருக்கும் மலைபகுதி, அங்கு மாடுமேய்க்கும் சாதாரண சிறுவன் தான் வீரப்பன், மலையூர் மம்பெட்டியானின் தீவிர ரசிகராகிரார், மாடுமேய்க்கும் கானகத்தில் சால்வை கவுண்டர் என்பவரால் தான் வேட்டைக்கு பழக்கபடுகின்றார்.

பெரிய படிப்பில்லை, துப்பாக்கி தோட்டாவோ அல்லது யானை தந்தமோ எண்ணித்தான் எண்ணவே கற்றுகொண்டார்.

யானை வேட்டைதான் அவரது விருப்பமான தொழில், ஆனால் சந்தண கட்டைகளின் மதிப்பு தெரியவருகிறது, அது ஒரு வரமான மலைபகுதி, உலகில் எங்கும் கிடைக்காத சந்தணம், ஒரு காலத்தில் மாமன்னன் சாலமோன் கூட சந்தணம் கிடைக்க ஆளனுப்பிய இடம்.

தென்னிந்தியாவின் இரு பெரும் அடையாளங்கள் மிளகும்,சந்தணமும். உலகில் எங்கும் விளையாத அல்லது விளைவிக்க முடியாத பொருள்கள் அவை, நமக்கு அது ஒரு வரம்.

வீரப்பன் சந்தண கடத்தல்காரராகிறார் கிட்டதட்ட 300 ஆட்களுடன் அவரது “சந்தண தொழிற்சாலை” அமோகமாக நடக்கின்றது.

வன அலுவலர்கள் அதனை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க தொடங்கிய காலத்தில் வீரப்பன் பெரும் கொலைகாரனாகிறார். வன அதிகாரி சிதம்பரம்,சீனிவாஸ் என அவ்விருவரும் கொல்லபட்டவிதம் தென்னகத்தை உலுக்கியது,

தொடர்ந்து அவர் செய்த போலீஸ்மீதான தாக்குதலில் 150 காவலருக்கு விண்ணக உயர்வு, ஏற்றுகொள்ளவே முடியாத கொடூரம்.

அதாவது காட்டில் மிருகங்களை கொல்லும் முறையிலே தன்னை பிடிக்க வருபவரையும் கொன்றார்.காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்க, இனி தொழிற்சாலை நடத்தமுடியாது என்பதால், 10பேராக குழுவை குறைத்துகொண்டு ஆள்கடத்தலில் ஈடுபட்டார், நட்சத்திர கடத்தலாக ராஜ்குமார், அதோடு விட்டாலும் பரவாயில்லை,

ஆனால் அவருக்கு தூபம் போட்ட தமிழ் தீவிரவாதிகளுடன் அவருக்கு தொடர்பு ஏற்பட்டபின்புதான் அவர் புத்தி மாறிற்றி

அதுவரை மான் கறி, ஆற்றுகுளியல் என ஹாயாக இருந்த வீரப்பனை அவர் என்னமோ பெரும் புரட்சியாளர் போலவும், ஈழத்து வீரப்பனான பிரபாகரன் அவரை சந்திக்க காத்து கிடப்பது போலவும் அவருக்கு போதை ஏற்றினர்

தன்னிலை மறந்தான் வீரப்பன்.

திடீர் புரட்சியாளரானார், காட்டிற்குள் கொடியேற்றினார், காவேரி நீருக்கு உத்தரவிட்டார், தமிழீழம் நிச்சயம் மலரவேண்டும் என்றார், தமிழகம் தனிநாடு ஆவதற்கு தனது ஆதரவு உண்டு என கருத்து தெரிவித்தார், யாரும் எதிர்பாராவிதமாக மாவோ காட்டுக்குள் இருந்து புரட்சிசெய்யவில்லையா? எனும் அளவிற்கு அவருக்கு ஏதோ ஒரு மரத்தடியில் ஞானம் வந்தது.

இறைவன் எல்லோருக்கும் ஒரு வட்டமிட்டிருப்பான், சிலருக்கு பெரிது,சிலருக்கு சிறிது, தாண்டினால் அவ்வளவுதான். தனக்கான வட்டத்தினின்று வீரப்பன் வெளியே வந்தவுடன் இனி தாமதிப்பதில்லை என களமிறங்கிய அரசுகள் அவரை முடித்துவிட்டது, அன்றைய ஜெயலிதாவின் அரசிற்கு அது பெரும் சாதனை. ஆ.எம் வீரப்பன் முதல் இந்த வீரப்பனும் அவருக்கு வில்லானாகிவிட்டான்

ஆயிரம் சர்ச்சைகள், எண்ணமுடியாத குடும்பங்களின் பாதிப்புகள், ஏராளமான உயிர்ப்பலிகள், அதிரடிபடை வீரப்பனை தேடி செய்த கொடூரங்கள் என மாபெரும் பிரளயத்தை அப்பகுதியில் நிகழ்த்த வீரப்பன் செய்த சாதனை என்ன?

நாட்டின் சொத்துக்கள கொள்ளை அடிப்பது இன்று “தொழில் வளர்ச்சி”. பெட்ரோல்,மணல்,மலை,நீர் என சகலத்தையும் கொள்ளை அடிக்கலாம். அரசாங்கதுக்கு சொந்தமான ஆற்றுநீரை அரசுக்கே விற்கலாம், உயிர்நாடியான பெட்ரோலை எடுத்து இஷ்டத்திற்கு தனியார் விற்கலாம், இதுதான் கசப்பான யதார்த்தம்.

இவை எல்லாம் எப்படி நடக்கின்றது?

அரசிடமிருந்து ஒரு லைசென்ஸ், கொஞ்சபேருக்கு வேலைவாய்ப்பு, பின்னர் மாபெரும் கொள்ளை, அதில் ஆங்காங்கு அதிகாரிகளுக்கு பங்கு. ஏதாவது பிரச்சினை என்றால் லைசன்ஸ் உரிமையை காட்டி நீதிமன்றம் செல்லலாம், இந்தியன் பீனல் கோடினை பீஸ் பீஸாக உடைத்து வெளிவரலாம்.

ஆனானபட்ட மணிரத்தினத்தின் குருபாய்(உண்மையில் அம்பானி) அப்படித்தான் வெளிவந்தார்கள், இன்னும் பலபேர் வருவார்கள்.

அல்லது பெரும் சட்டவிரோத காரியங்கள் செய்து பணத்தை குவித்துவிட்டால் போதும், சாதி, மதம் எதனையாவது சொல்லி சீட் வாங்கி, அப்படியே வோட்டை வாங்கி அமைச்சராகவும் ஆகலாம்.

அல்லது நன்கொடைகளை அள்ளிகொடுத்து, கட்சி என்ன? முதல்வரையே பின்னிருந்து இயக்கலாம். அதுதான் இந்திய தொழில்வளர்ச்சியின் இன்றைய நிலை.

பாவம் வீரப்பன், ஒருலைசன்ஸ் வைத்து கொண்டு, டெல்லிவரை ஆள்வைத்துகொண்டு, இரண்டு பத்திரிகைகளை. ஒரு தொலைகாட்சியினை, முகநூலில் 20 அல்லக்கைகளை கையில் வைத்துகொண்டு ஆள் வைத்து செய்யவேண்டிய சந்தண ஆலை வேலையை, தானே முன்னின்று செய்து ஒரு பாதுகாப்புமில்லாமல் ஓடி ஒளிந்து, இறுதியில் தோற்றும் போனார்.

ஒரு கட்சி,தொழிலதிபர் அடையாளத்தோடு செய்திருந்தால் நிச்சயமாக இன்று தென்மேற்கு தமிழகத்தில் வீரப்பனார் பெரும் அடையாளமாக இருப்பார்.

வீரப்பனார் சந்தண தொழிற்சாலை,வீரப்பனார் பொறியியல் கல்லூரி, வீரப்பனார் லாரி சர்வீஸ், வீரப்பனார் யானை நிலையம், வீரப்பனார் யானை சவாரி , வீரப்பனார் சினி புரடக்க்ஷன், வீரப்பனார் துப்பாக்கி சுடும் பயிற்சி நிலையம், வீரப்பனார் யோகா நிலையம், ஹோட்டல் வீரப்பா குரூப்ஸ் என மாபெரும் சக்தியாக வளர்ந்திருப்பார்.

ஆனால் விதி அது அல்ல, அவரை வைத்து எல்லோரும் சம்பாதிப்பார்கள் அவர் குடும்பத்தார் மட்டும் ஓடி ஓடி சாகவேண்டும் என்பது தலையெழுத்து.

அவருக்கு ஏன் அவ்வளவு பணம் வேண்டும் என கேப்டனே ஆர்.கே செல்வம‌ணி கோர்ட்டில் 100 பக்கம் பேசிவிட்டார். நாம் இங்கு எழுத வேண்டாம், எழுதினால் லியாகத அலிகான் கோபிப்பார், கோர்ட்டுக்கும் போவார்.

ஆனால் அந்த வீரப்பனை வைத்து தந்த,சந்தண வியாபாரிகள் ஒருபுறம், ஊடகங்கள் ஒருபுறம், பத்திரிகைகள் ஒருபுறம் என சம்பாதித்து தள்ளின, எல்லோருக்கும் பணம் கொட்டும் பொருளாக வீரப்பன் மாறினார். எத்தனை ஐ.எஃப்.எஸ் எத்தனை ஐ.ஏ.எஸ்,ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு இரண்டாம் வகுப்பினை தாண்டாத காட்டுவாசி தண்ணி காட்டினான் என்ற பொருளில் அவர் நல்ல விற்பனை ஆனார்.

உண்மையில் ஒரு கட்டத்தில் வீரப்பனை தேடுவதை போலீஸ் சலிப்பில் கைவிட்டது, காரணம் அவரின் படம் கூட அவர்களிடம் கிடையாது, அதை அப்படியே தொடர்ந்து ஒரு கிராமத்து விவசாயியாக மாறினால் கூட வீரப்பனை கண்டுபிடித்திருக்கமுடியாது.

ஆனால் அவரை படமெடுத்து உலகெங்கும் காட்டி, அவரது உரையை உள்துறை அதிகாரிகள் வரை கேட்க செய்து, பரபரப்பில் சம்பாதித்ததில் காவல்துறை சுதாரித்தது. வீரப்பனும் தம்ழ்தேசியவாதி அவதாரமெடுத்து முடிவினை மிகவிரைவாக தேடிகொண்டார்.

இந்த வீரப்பனால் யாருக்கு லாபம்?

பல நூறு கோடிகள் சம்பாதித்தார் என சொல்லபடும் வீரப்பனின் சொந்த குடிசைவீடு இடிந்து கிடக்கிறது, மூலக்காட்டில் 6 அடியில் கல்லறை இருக்கின்றது, உடன்பிறந்தோர் போலீசாலீசாரல் மறைமுகமாக கொல்லபட்டாயிற்று, அண்ணன் மாதையன் தூக்கு எதிர்நோக்கும் கைதி.

மனைவி இன்னும் காவல்துறையால் கண்காணிக்கபடுபவர், இரு மகள்களும் அனாதையாக அரசு காப்பகங்களில்தான் வளர்ந்தனர், சாதாரண படிப்புகளையே கஷ்டபட்டு கடந்தனர், தந்தை இல்லை அல்லது ஒரு பழி. தாய் சதா சர்வகால சிறைவாசி.

மகள் பருவவயதில் காதலிலும் விழுந்து, இன்று அந்த காதல் கசந்து தூக்கி எரியபடும்பொழுது ஏன் என்று கூட கேட்க யாருமில்லாத அப்பாவி அனாதை.

அந்த பெண்ணின் தந்தை தான் மூன்று மாநில அரசினை அச்சுறுத்தியவர், கோடிகளை எண்ணமுடியாமல் சம்பாதித்தார் என்றால் நம்பமுடியுமா?.

இதுதான் இந்தியா, எல்லா இயற்கைவள கொள்ளைகளும் முதலிலே தடுக்க ஆயிரம் வழி இருக்கும். ஆனால் செய்யவே மாட்டார்கள். எல்லைமீறி போனால் வீரப்பன் போல அவந்தான் காரணம் என முடித்து விடுவார்கள். அந்த தந்தமும்,சந்தன மரமும் எங்கு விற்பனையானது? யார் வாங்கினார்கள் என்று கூட ஒரு செய்தியும் வராது.

அவனால் கொல்லபட்ட அப்பாவி வன அதிகாரிகளுக்கும், காவல்துறையின் மிக சிறந்த அதிகாரிகளுக்கும், காவல்துறை ஊழியர்களையும் ஒரு கணம் நினைத்துபாருங்கள், அவர்களின் குடும்பத்தாரை நினைத்து பாருங்கள், அப்படியே வீரப்பன் பிள்ளைகள் நிராதரவாய் நிற்பதையும் நினைத்தால் மனம் கனக்கத்தான் செய்கிறது, தன்னிலை வீரப்பன் அறிந்திருந்தால் இவ்வளவு அழிவு வந்திருக்குமா?,

இந்த பரபரப்பான பெயர் இருந்திருக்காது,ஆனால் எத்தனை ஆயிரம் குடும்பங்கள் நிமதியாக இருந்திருக்கும். இறுதியில் வீரப்பன் என்னதான் சாதித்துவிட்டார்?

இன்று வீரப்பன் நினைவு நாள். பெரும் வரமான அந்த சந்தண காடும், யானை கூட்டமும் , அவனை பிடிப்பதற்காக உயிரைவிட்ட காவல் துறையினரின் சோகமும் நினைவுக்கு வருகின்றது.

கூடவே ஆற்றுமண்,குளத்து மண், கடல், கடற்கரை மண்,கிரானைட் மலை என சகல இயற்கை வளங்களும் கண்ணுக்குளே நிற்கின்றது.

சுட்டுகொல்லபட்டது இயற்கையினை சுரண்டிய கும்பலின் சாதாரண கூலியாள், ஆனால் முதலாளிகள் காலகாலத்திற்கும் மிக பாதுகாப்பாக வலம்வருவார்கள், அவர்களை நோக்கி எந்த தோட்டாவும் பாயாது , தோட்டா என்ன? சட்டம் கூட வளைந்து யோகாசனம் அவர்களுக்காக சொல்லிகொடுக்கும்.

இங்குள்ள யதார்த்தம் அது, அது புரியாமல் மூர்க்கமாய் கொலைகாரனாகி அழிந்துவிட்ட ஒரு அப்பாவிதான் அந்த வீரப்பன்

கிட்டதட்ட பிரபாகரனும் அப்படியே

வீரப்பன் சம்பாதித்த பலகோடிகளில் சல்லிகாசு கூட அவன் குடும்பத்திற்கு கிடைக்காமல் அக்குடும்பத்தை நடுதெருவில் விட்டது அவனால் சம்பாதித்த கும்பல்

பிரபாகரன் குவித்திருந்தல பல பில்லியன் டாலர்களில் ஒன்று கூட எடுக்க முடியாமல் குடும்பத்தோடு கொல்லபட்டான் பிரபாகரன், அவனால் சம்பாதித்தவர்களும் இன்றும் சம்பாதித்துகொண்டிருப்பவர்களும் வளமாக இருக்கின்றார்கள்

இந்த நரிகள்தான் அவன் வனகாவலன் என்றும் இவன் இனகாவலன் என்றும் மாபெரும் பொய்களை சொல்லிகொண்டிருக்கின்றது