தமிழ் சினிமாவிற்காக ராகுல்காந்தி குரல்கொடுத்திருப்பது அவருக்கு கறையே..

ஆயிரம் சமாதானம், காரணம் சொன்னாலும் தமிழ் சினிமாவிற்காக ராகுல்காந்தி குரல்கொடுத்திருப்பது அவருக்கு கறையே..

யாரோ தவறாக வழிகாட்டி அந்த அப்பாவி ராகுல் சிக்கவைக்கபட்டிருக்கின்றார்.

ராகுல் இதற்கெல்லாம் வந்திருக்க கூடாது, நிச்சயம் கூடாது

இனியாவது அவர் விழித்துகொள்ளட்டும்,

விஜய் செய்திருப்பது பெரும் தவறு, இல்லாத பொய்களை அள்ளிவிட்டது பெரும் தவறு, சட்டபடி தண்டிக்க கூடிய விஷயம்

நிச்சயம் அந்த அட்லியினை பிடித்து 3 மாதம் சிறையில் தள்ளவ்வேண்டிய விஷயம் இது, பொய்யான செய்திகளை பரப்புதல் என்பது சாதாரணம் அல்ல‌

அப்படிபட்ட காரியத்திற்கு ராகுல் குரல்கொடுத்தார் என்பது நிச்சயம் பெரும் அவமானம்

அரசியல் கணக்கிற்காக குரல் கொடுப்பது எல்லாம் விஜய் குடும்பத்திடம் நடக்காத கதை, ஆனானபட்ட ஜெயலலிதாவே அவர்களிடம் பெப்பே வாங்கிய கோபத்தில்தான் படாதபாடு படுத்தினார்

எஸ்.ஏ சந்திரசேகரின் சூழ்ச்சியில் காங்கிரஸ் சிக்கிவிட கூடாது, அது காங்கிரசுக்கு நல்லது அல்ல‌

எப்படியோ அகில இந்திய காங்கிரஸின் தலைவர் ஒரு தமிழ் சினிமா சர்ச்சையில் வாலண்டியராக வந்து குதிக்கின்றார் என்பது அக்கட்சியின் தரத்தை குறைத்தே இருக்கின்றது

வாழ்த்துக்கள் ராஜாத்தி சல்மா அவர்களே…

Image may contain: 12 people, people smiling, people sitting

உலகெல்லாம் பெண்ணியம், இலக்கியம் பேசும் பெண்களில் பெரும் இடம் பெற்றிருக்கின்றார் Rajathi Salma

திமுக எப்பொழுதுமே பெரியார் கொள்கைகளுக்கு முன்னுரிமை கொடுக்கும் இயக்கம், அப்படித்தான் தமிழகத்தில் கவனிக்கபட்ட சல்மாவினை கலைஞர் கண்டெடுத்தார், திமுகவில் இணைத்தார்

அதன் பின் சல்மாவிற்கு பெரும் புத்துணர்ச்சி கிடைத்தது, அவரின் சிறகுகள் உயர விரிந்தன‌

உலகெல்லாம் சாதனை பெண்கள் கூடும் இடமெல்லாம் அவரும் அழைக்கபடுகின்றார், ஐரோப்பா அமெரிக்காவில் இருந்தெல்லாம் அவரை சந்தித்து அம்மாணவிகள் குறிப்பெடுத்து செல்கின்றார்கள்.

அவரது எழுத்துக்களை அந்த அளவு கொண்டாடுகின்றார்கள்.

மிகபெரும் இடத்திற்கு சென்றுகொண்டிருக்கும் சல்மாவின் வளர்ச்சியில் கலைஞருக்கும் பெரியார் கொள்கைகளுக்கும் பங்கு உண்டு

இப்பொழுது மோடி ஆட்சி, ஏதோ ஜிஎஸ்டி , கருப்பு பணா சறுக்கலில் மோடி கும்பல் கொஞ்சம் அடக்கிவாசிக்கின்றது இல்லையென்றால் இந்நேரம் பெரும் சிக்கலை உருவாக்கியிருக்கலாம்

அப்படி நடந்திருந்தால் சந்தேகமேயின்றி மலைலா, தஸ்ரிமா நஸ்ரின் அவளவிற்கு சர்வதேச கவனத்தை ஈர்த்திருப்பார். நல்ல வேளையாக மோடி அந்த வாய்ப்பினை வழங்கவில்லை

எனினும் கட்டுபாடு மிக்க சமூகத்திலிருந்து வந்து, தன் எழுத்தால் உலக பெண்களை கவர்ந்து, இன்று உலெங்கிலும் இருந்து பல நாட்டு மாணவிகள் வந்து கவுரவிக்கும் அளவிற்கு வளர்ந்திருக்கும் சல்மாவிற்கு வாழ்த்துக்கள்

இது பெரியார் பிறந்தமண், பாரதி உலாவிய மண், என கம்பீரமாக சொல்ல திமு கழகத்து பெண்மணி சல்மா ஒரு சாட்சி

அவர் இன்னும் நிறைய எழுத வாழ்த்துக்கள்..

 

உளறுகின்றார் நம் காமெடி ஸ்டார் தமிழிசை

மறுபடியும் பெரும் உளறலை உளறுகின்றார் நம் காமெடி ஸ்டார் தமிழிசை

அதாவது ஜெயா மரணம், டெங்கி எல்லாம் தாண்டி இந்த யழவு மெர்சல் விவகாரம் அரசியலாகிவிட்டது, ஜிஎஸ்டி விவகாரத்தில் காங்கிரஸ் விஜய்க்கு ஆதரவாக‌ வாய் திறக்கின்றது. சிதம்பரம் ராகுல்காந்தி எல்லாம் விஜய்க்கு கை கொடுக்கின்றார்கள்.

இதில் தமிழிசைக்கு கோபம் பொத்துவிட்டது,

பதிலுக்கு இப்படி திரைப்படங்களை நீங்கள் கண்டிக்காமல் விட்டதால்தான் நாடு சீரழிந்துவிட்டது என்றாவது சொல்லியிருக்கலாம், மாறாக உளறிவிட்டார்

ஆம், எம் தமிழினம் அழியும்பொழுது நீர் எங்கு சென்றீர் ராகுல் என கொதித்திருக்கின்றார்

நடப்பது மெர்சல் நாடகம், இதில் ஈழபிரச்சினை எங்கிருந்து வந்தது?

சரி ராகுல் தந்தையினை இழந்தவர் அமைதி காத்ததில் அர்த்தமுண்டு, முள்ளிவாய்க்கால் சம்பவம் நடக்கும்பொழுது தமிழிசை எங்கு சென்றார்?

டெல்லியில் பாஜக என்ன செய்தது?

ஆக இலங்கையில் என்னமும் நடக்கட்டும் என எல்லா கட்சிகளும் மவுனமாக இருந்தது உண்மை

இதில் இப்பொழுது திடீரென தமிழிசை சம்பந்தமில்லாமல் உளறுவது ஆச்சரியம்

இன்னும் என்னெவெல்லாம் ராகுலைபார்த்து தமிழிசை கேட்பாரோ தெரியாது, ஆனால் இப்படி எல்லாம் கேட்க வாய்ப்பு உண்டு

இந்திரா எமர்ஜென்சி கொண்டுவரும்பொழுது என்ன செய்தீர்கள் ராகுல்? சீனா யுத்தம் தொடுக்கும்பொழுது என்ன செய்தீர்கள் ராகுல்? மகாத்மா கொல்லபட்டபொழுது நீர் என்ன செய்தீர் ராகுல் என பல கேள்விகள் கேட்கபடலாம்

தமிழிசையின் இந்த கேள்வி பாஜகவிற்கு சங்கடம் ஏற்படுத்தும் கேள்வி, அப்படியானால் 7 ராஜிவ் கொலையாளிகளை பாஜக விட்டுவிடுமா? ஈழத்தில் இப்பொழுது பாஜக கிழிப்பதென்ன, ராஜபக்சேவினை போர்குற்றவாளி என மோடி சொல்லாதது ஏன்? என பல கேள்விகள் எழும்

7 கொலைகாரர் விடுவிக்கபட்டால் அது வடக்கே பாஜகவிற்கு கடும் நெருக்கடி கொடுக்கும்

இப்படியாக பாஜகவிற்கு பல சோதனைகள் வரும், ஏன் அப்படி சொன்னார் தமிழிசை?

ஒருவேளை தமிழிசை குமரி அனந்தனின் ஸ்லீப்பர் செல்லாக பாஜகவில் இருப்பாரோ?

திப்பு சுல்தானை கொலைகாரன் என மத்திய அமைச்சர் சொன்னதால் சர்ச்சை

திப்பு சுல்தானை கொலைகாரன் என மத்திய அமைச்சர் சொன்னதால் சர்ச்சை

மத்திய அமைச்சர்கள் இப்படி சொல்லாவிட்டால்தான் ஆச்சரியம், சொன்னால் அவர்கள் நார்மலாக இருக்கின்றார்கள் என்றுதான் அர்த்தம்

திப்பு சுல்தான் எப்படிபட்ட வீரன், மாவீரன் நெப்போலியனே மதித்த பெரும் வீரமன்னன் அவன். வரலாற்றில் நிலைத்துவிட்டவன்

அப்படிபட்ட மாமன்னனை பழிக்கின்றார்கள் என்றால் இவர்களுக்கு அந்த அளவு மதவெறி உச்சத்தில் இருக்கின்றது என பொருள்.

திப்புசுல்தானை இறுதிவரை வீழ்த்தமுடியா வெள்ளையன் கையாண்ட சதிகளில் ஒன்றுதான் இந்த பழிகளும், மத சர்சைகளும், அதை தொடர்ந்த்தே இத்தேசம் உடைந்தது

அதனையே இவர்களும் செய்தார்கள் என்றால், அது இந்நாட்டின் எதிர்காலத்திற்கு விடும் சவாலாகவே இருக்கும்

திப்பு சுல்தான் இந்தியாவின் மிக பெரும் அடையாளம் வரலாறு

திப்புவினை விடுங்கள் அமைச்சரே, இப்பொழுது ஆட்சியில் இருந்தாலும், வருங்காலம் எப்படி எழுதும் அமைச்சரே?

மோடி என்றொருவர் இருந்தார், குஜராத்தில் அவர் செய்த கொலைகள் ஏராளம், பின் பதவிக்கு வந்தார். மாட்டுகறி உண்டதற்காக அவர் கட்சியினர் பலரை கொன்றனர், இப்படியாக கொலைகார ஆட்சி நடத்தியவர்தான் மோடி

விவாதிக்க தமிழிசை தயாரா : சீமான் சீற்றம்

என்னுடன் ஜிஎஸ்டி பற்றி விவாதிக்க தமிழிசை தயாரா : சீமான் சீற்றம்

மிஸ்டர் சைமன் , ஜிஎஸ்டி பற்றி நல்ல விவரம் அறிந்த பொருளாதார வித்தகர்களுடன் விவாதிக்க நீர் தயாரா? அவர்கள் சொல்லும் கணக்கு புரியுமா?

சிக்கலான வரி கணக்குகளில் ஒரு புள்ளிக்கு உம்மால் விளக்கம் அளிக்க முடியுமா?

பொருளாதார விற்பனர்கள் இருவர் அதைபற்றி விவாதிக்கட்டும்

ப.சிதம்பரமும் அருண் ஜெட்லியும் அல்லது ப.சிதம்பரமும் ரகுராஜ் ராஜனும் விவாதித்தால் அது விவாதம்

தமிழிசை ஒரு அல்லக்கை, அந்த அல்லக்கையுடன் இன்னொரு அல்லக்கையான நீர் விவாதிப்பதில் என்ன இருக்கின்றது?

அந்த அம்மணிக்கும் GST புரியாது, உமக்கும் புரியாது இரு செவிடர்கள் பேசிகொண்டது போல இருக்கும் அது ஒரு விவாதமா? அதனை நாங்கள் பார்க்க வேண்டுமா?

அது சரி, இப்படி முன்பு ஏ ராஜாபக்சே, ஏ பொன்சேகா என்னோடு மோத தயாரா என்றெல்லாம் சொன்னீரே? அது என்னாயிற்று?

தரமா? எங்கே தமிழக காங்கிரசிலா?

Image may contain: 3 people


ஒரு வழியாக சுலோகம் ஒன்று சங்கத்தால் உறுதி செய்யபட்டிருக்கின்றது

இதுதான் இப்பொழுது சங்கத்து கோஷம், இதைத்தான் சங்கத்தார் உரக்க சொல்லவேண்டும் என முடிவு செய்யபட்டிருக்கின்றது

இதனை விட நல்ல சுலோகம் வந்தால் பின்பு பரிசீலிக்கபடும், தற்போது இதுதான் கோஷம்,

“சோற்றுக்கு உப்பு
தமிழத்திற்கு குஷ்பு”


தமிழக காங்கிரஸ் தலைவராக குஷ்பூவிற்கு தகுதி இல்லை, அவர் தலைவரானால் தமிழக காங்கிரஸின் தரம் குறையும், கட்சி அவமானபடும் என்றேல்லாம் சிலர் சொல்கின்றார்கள்

தரமா? எங்கே தமிழக காங்கிரசிலா?

அவமானமா? எது? அதிமுக, பாஜக என சுற்றி வந்த திருநாவுக்கரசரை தலைவராக்கியதை விடவா பெரும் அவமானம் காங்கிரசுக்கு வந்துவிட போகின்றது

தேய்பிறையாகி கிட்டதட்ட மறையும் நிலையில் இருக்கும் காங்கிரசினை பவுர்ணமி ஆக்கவேண்டுமென்றால் குஷ்பூ தலைவராகட்டும்

இதுதான் யதார்த்தம், சினிமாக்காரர்களால் சரிக்கபட்ட தமிழக காங்கிரஸ் சினிமா நடிகையால் பொற்காலத்தை அடையட்டும்.

இல்லை கோயம்பேடு கோவிந்தசாமி, அமிந்தகரை அய்யாசாமி போன்றவர்கள் தலைவர் என அறிவித்தால் காங்கிரசை காப்பாற்ற செத்துபோன காமராஜர் வந்தாலும் முடியாது

(“பெற்றால் உன்னை போல மகளை பெற்றிருக்க வேண்டுமம்மா.. எனக்கென்று ஒன்று வந்து பிறந்திருக்கின்றதே….” என “காங்கிரசின் தங்க மகளை” நோக்கும் குமரி அனந்தன்)


குஷ்பூ தமிழக காங்கிரஸ் தலைவராக வேண்டி பத்துமலை முருகன் கோவிலில் மண்சோறு உண்ண சங்கம் முடிவெடுத்திருக்கின்றது

வடபழனி கோவிலில் அங்க பிரதட்சனம் செய்ய Sadhu Sadhath தயார்

திருச்சி பக்கம் தீ மிதிக்க Periya Samy தயாராகின்றார்.

இன்னும் ஏராளமான ரசிகர்கள் கடும் வேண்டுதலுக்கு தயாராகின்றார்கள், அதில் சிலர் நாக்கு, விரல், கை கால் வெட்டுதல் அளவிற்கு கடும் தீவிரம்

அமெரிக்காவில் பெரும் ஆர்ப்பாட்டம் நடத்தி டிரம்பிடமும் ஐ.நா பொதுசெயலாளரிடமும் மனுகொடுக்கும் வேலையில் தீவிரமாக இருக்கின்றார் Venkatesh Mothilal

காங்கிரஸ் தலமை இதற்கு செவிசாய்க்காவிட்டால் வேண்டுதல்கள் இன்னும் படு பயங்கரமாக இருக்கும் என சொல்லிகொள்கின்றோம்.

சங்கம் ஒரு அளவுதான் பொறுமை காக்க முடியும்

ஒரு கட்டத்திற்கு மேல் பூக்குழியில் இறக்கபடுவது ரசிகர்களாக இருக்காது.


 

புல்டோசர் ஜனதா பார்ட்டி

தாஜ்மகாலை முறைக்க தொடங்கிவிட்டது பாஜக கோஷ்டி. நாளொரு தகவலை சொல்லிகொண்டே இருக்கின்றது

ஏற்கனவே இப்படி சொல்லி சொல்லித்தான் பாபர் மசூதியினை இடித்து தள்ளினார்கள்

எல்லாவற்றையும் இடிப்போம் என கிளம்பும் இது, புல்டோசர் ஜனதா பார்ட்டி போல..

தாஜ்மஹாலுக்கு இப்போது ஆபத்து இல்லை எனினும் அதனை கடும் காவலில் வைப்பது நல்லது, இவர்களுக்கு சிவசேனா பரவாயில்லை வெள்ளையன் கட்டிய ரயில் நிலையத்திற்கு சிவாஜி பெயரை வைத்துவிட்டு அமைதியாகிவிட்டார்கள், இடிக்க கிளம்பவிலை

சரி இது வட இந்திய பிரச்சினை

தென்னிந்தியாவில் சிக்கல் இல்லை, ஆனால் தமிழிசை அடிக்கடி ஜார்ஜ் கோட்டையில் காவிகொடி என சொல்லிகொண்டே இருக்கின்றார்

அக்கோட்டை மீது அவருக்கு ஒரு கண் இருப்பது தெரிகின்றது

அது நடக்கபோவதில்லை எனும் ஆத்திரத்தில் அந்நியன் கோட்டை இங்கே எதற்கு என கடப்பாரை தூக்கிவிடுவாரோ என்னமோ, கொஞ்சம் அச்சமாகத்தான் இருக்கின்றது.


கொசுறு

மோடி இருக்கும் வரை, அ.தி.மு.க., வை யாராலும் அசைக்க முடியாது : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

அட அமைச்சரே, அடிமை சாசனத்தை இப்படியா பகிரங்கமாக வாசிப்பது?

மோடியே வரும் வருடங்களில் இருப்பாரா இல்லையா என்பது தெரியாது, நாடெங்கும் அவ்வளவு அதிருப்தி நிலவுகின்றது

ஒருவேளை மோடி கவிழ்ந்துவிட்டால் என்ன செய்வீர்கள்? எமக்கு புரிகின்றது

நிச்சயம் சின்னமாவிடம் ஓடிவிடுவீர்கள்

ஆக இப்போதைக்கு நீங்கள் அதிமுக மோடி அணி, அதுதானே விஷயம். ஓகே


 

மெர்சல் படத்திலிருந்து ஜிஎஸ்டி விமர்சன காட்சிகள் நீக்கம்

மெர்சல் படத்திலிருந்து ஜிஎஸ்டி விமர்சன காட்சிகள் நீக்கம்

வெற்றி..வெற்றி..மாபெரும் வெற்றி என தமிழிசை கைதட்டும் நேரம்

ஆக தமிழிசைக்கு அஞ்சும் நிலைக்கு விஜய் சென்றுவிட்டார், இனி எவனாவது தளபதி தலைவலி என பேசட்டும் பார்க்கலாம்

ஆனாலும் அன்று பராசக்தி முதல் ராமசந்திரனின் பல இம்சை காட்சிகளை அனுமதித்த காமராஜர், பக்தவக்சலம் போன்றோரின் பெருந்தன்மை தெரியும் நேரமிது

அவர்கள் அன்றே இப்படி கழுத்தை நெறித்திருந்தால் இந்த ராமசந்திரன் எல்லாம் வந்திருக்க முடியுமா?

இருக்கட்டும்

“கலையின் வடிவம் சினிமா, அதுல என் கருத்துக்களை சொல்லி கொண்டே இருப்பேன், சினிமாவில் என்னை தடை செய்தால் நாடகம் நடிப்பேன், நாடகத்தை தடை செய்தால் தெருவில் நாடகம் போடுவேன், என்னடா செய்வீங்க டேய் .” என சவால்விட்ட எம்.ஆர் ராதாவும் நினைவுக்கு வருகின்றார்

அக்காலம் பெருந்தன்மையான ஆட்சியர் காலமாகவும், கலைஞர்களில் சமூக நோக்கம் கொண்டோர் இருந்த காலமாகவும் இருந்திருக்கின்றது.

ஏம்பா விஜய், நீர் உண்மையிலே நல்ல சமூக நோக்கம் கொண்ட நடிகர் என்றால், ராதா போல சவால்விடும் பார்க்கலாம்

கமல்ஹாசன் 8 அடி பாய்ந்தால், விஜய் 48 அடி பாய்வார் : நடிகை கஸ்தூரி

கமல்ஹாசன் 8 அடி பாய்ந்தால், விஜய் 48 அடி பாய்வார் -நடிகை கஸ்தூரி

தலைவா, மெர்சல் வெளிவரபட்ட பாட்டிலும், இப்பொழுது ஜிஎஸ்டி வசனங்களை நீக்க ஒப்புகொண்டிருப்பதிலுமே விஜயின் பாய்ச்சல் தெரிகின்றது.

மெர்சலுக்கு சர்சை என்றவுடன் கமல் பாட்டை மாற்றி பாடியதிலே அவரின் பாய்ச்சலும் புரிகின்றது

இன்னுமா இவர்களை பற்றி பேசுகின்றீர்கள் மேடம்?

வேண்டுமானால் இப்படி சொல்லுங்கள், விஜய் 48 அடி பம்மினால் கமல் 8 அடி பதுங்குவார். மிக சரியாக இருக்கும்

இந்த ஆண்டவன் இருக்கின்றானே, படு சோம்பேறி …

இந்த ஆண்டவன் இருக்கின்றானே, படு சோம்பேறி

என்றோ உலகில் படைத்த மீன் இனங்களை அப்படியே வைத்திருக்கின்றான், இன்னும் மாற்றவில்லை அதே மீன்கள் தான் வருகின்றன‌.

காய்கறி முதல் ஆட்டுகறி வரை அதேதான் வருகின்றது, ஒரே எரிச்சல். ஒரு மனிதன் புதிது புதிதாக உண்ண வேண்டாமா? அதில் ஏன் இந்த கடவுளுக்கு வஞ்சனை?

பரலோகத்தில் அவருக்கு என்னதான் வேலை? புதிது புதிதாக மீன் இனங்களை படைத்து சமுத்திரத்திற்கு அனுப்பினால்தான் என்ன?

இதை சும்மா விட முடியாது

எல்லா ஆலயங்களிலும் சென்று இதனை முறையிட்டு நியாயத்தை கேட்டுவிடவேண்டியதுதான்.

இப்படி ஒன்றுமே புதிதாக செய்யாமல் என்னதான் செய்கின்றான் அந்த சர்வேஸ்வரன்?