தமிழ்பெண்கள் அழகா… மலையாள பெண்கள் அழகா

“தமிழ்பெண்கள் அழகா… மலையாள பெண்கள் அழகா” என விஜய்டிவியில் நடக்க இருந்த நீயா நானா நிகழ்ச்சி பொதுமக்கள் எதிர்ப்பு காரணமாக நிறுத்தபட்டது

இது என்ன கொடுமை? அந்த சுந்தர தெலுங்கு பெண்கள் மட்டும் என்ன பாவம் செய்தார்கள்? அவர்களை ஏன் சேர்க்கவில்லை

ஜெயபிரதா, சில்க், அனுஷ்கா, பிந்து என எத்தனை பெண்கள் அங்கிருந்து வந்தார்கள்

ஏன் அந்த டிடி கூட தெலுங்குபெண் என்கின்றார்கள், ஒருவேளை அது அழகு அல்ல என விஜய் டிவிக்கே தெரிந்திருக்கலாம்

தெலுங்கு பெண்கள்தான் இல்லை, இந்த‌ சிம்ரன், டாப்ஸி என அழகு புதையல்களை கொடுத்த பஞ்சாப் பெண்களும் பட்டியலில் இல்லை எனில் இக்கொடுமையினை எப்படி சகிப்போம்?

பொதுவாக விஜய்டிவி நடத்தும் எந்த குப்பை நிகழ்ச்சிகளையும் பார்ப்பதில்லை, ஆனால் எதிர்ப்பதுமில்லை அவர்கள் டிவி, அவர்கள் நிகழ்ச்சி

ஆனால் குஷ்பூ எனும் பேரழகி இருக்கும் சென்னையில் இருந்து கொண்டு தமிழ்பெண்கள் அழகா? கேரள பெண்கள் அழகா என கேட்க இவர்களுக்கு என்ன துணிச்சல்

“குஷ்பூ தவிர தமிழ்பெண்கள் அழகா? , மலையாள பெண் அழகா? ” என்றுதான் தலைப்பு இருந்திருக்க வேண்டும்

எப்படியோ விஜய்டிவி நிகழ்ச்சியினை நிறுத்திவிட்டதால் சங்கம் உருவிய வாளை உறையில் போட்டு அமைதியாகின்றது

இருந்தாலும் இப்படி ஒரு அறிவிப்பினை செய்த குற்றத்திற்கு தண்டனையாக அந்த கோபிநாத்தின் கோட்டை கழற்றி எரிக்கும் போராட்டம் நடத்த சங்கம் தயாராகின்றது

விரைவில் கோபிநாத் கோட் எரிக்கபட்டு எச்சரிக்கை போராட்டம் நடக்கும்

ஸ்பெயினின் கட்டலோனியா விவகாரம்

No automatic alt text available.

உலகெல்லாம் எல்லா நாடுகளிலும் பிரிவினை கோஷம் உண்டு, எந்த நாடும் தன் நாடு பிரிய அனுமதிக்காது.

ஒரு நாடு உருவாக பல காரணிகள் அவசியம், உள்நாட்டு சூழல், சர்வதேச நிலவரம் , உலக நாடுகள் ஆதரவு என ஏராளமான விஷயங்கள் உண்டு

நாடுகளும் தந்திரமானவை, அவற்றில் தனிநாடு கேட்கும் இனங்களும் விவேகமான நடவடிக்கை எடுத்தாலன்றி இலக்கினை அடைய முடியாது

அப்படி பல நாடுகள் தங்கள் நாட்டில் பிரிவினை பேசுபவர்களுக்காக சில தன்னாட்சி உரிமைகளை வழங்கும்

இது உங்கள் ஏரியா, இது உங்கள் உரிமை என சிலவற்றை கொடுப்பார்கள். தனிநாடு இல்லைதான் ஆனால் தனிநாட்டிற்கான முதல் படி அதுதான்

உலகில் இப்படி ஏராளமான பகுதிகள் உண்டு, ஈராக்கின் குர்துகள் உட்பட பல இனங்கள் தன்னாட்சியில்தான் வாழ்கின்றன, இப்பொழுது இன்னொரு இனத்தின் விஷயமும் உலகை உலுக்கின்றது

அது ஸ்பெயினின் கட்டலோனியா விவகாரம்

ஐரோப்பாவில் தனி இனத்திற்கான 100% சுத்தமான நாடு என எதுவுமில்லை. ஹிட்லர் அதற்கு ஆசைபட்டு நாசமாய் போனான், பல நாடுகள் பல இனங்களின் தொகுப்பாகவே வாழ்கின்றன அதிலொன்று ஸ்பெயினின் கட்டலோனியா.

அது சிறிய பகுதியாயினும் ஸ்பெயினின் பார்சிலோனா போன்ற புகழ்மிக்க பகுதி அங்குதான் இருக்கின்றது. ஒலிம்பிக் எல்லாம் அங்குதான் நடக்கும், அது போக கால்பந்தாட்ட அடையாளம் அது, மெஸ்ஸி கூட அங்குதான் விளையாடுவார்

எல்லாவற்றிற்கும் மேலாக குஷ்பூ சென்று சுற்றிபார்த்து படமெல்லாம் எடுத்த அழகு பூமி.

தன்னாட்சி பகுதியாக அறிவிக்கபட்டு இருக்க்கும் அப்பகுதியில் இப்பொழுது தனிநாடு கோஷம் எழுகின்றது. ஸ்பெயினின் பொருளாதார நெருக்கடி முதல் பல காரணம் என்கின்றன செய்திகள்

கட்டலோனியா அரசு வாக்கெடுப்பெல்லாம் நடத்திற்று, மக்களும் ஆதரித்தனர். ஆனால் ஸ்பெயின் அசைந்து கொடுப்பதாக தெரியவில்லை. இனி கட்டலோனியா அரச பிரதிநிதியினை விடுவதாக இல்லை எனும் அளவிற்கு சீறுகின்றது ஸ்பெயின்

ஆனாலும் தன்னாட்சி பிரதேசம் தனிநாடு ஆக என்ன தடை? என சில குரல்களும் கேட்கின்றன. பார்க்கலாம்

கவனியுங்கள், என்றோ ஸ்பானிய வல்லரசு உலகை மிரட்டும்பொழுது ஸ்பெயின் பெரும் சக்தியானது அப்பொழுது அதன் பகுதியானது கட்டலோனியா

ஆனால் தங்கள் அடையாளம் இழக்காவண்ணம் தன்னாட்சி பெற்றார்கள், உலகெல்லாம் பல இனங்கள் இப்படித்தான் முதல் படி பெற்று அதில் நின்று போராடுகின்றன.

நாங்கள் வீரமும் மானமும் மிக்கவர்கள், அடைந்தால் நாடு இல்லை சுடுகாடு என பிரபாகரன் ஸ்டைலில் கட்டலோனியா சென்றிருந்தால் இந்நேரம் இக்குரல் எழும்பியிருக்க முடியாது.

விவேகம் மகா அவசியம்

ஈழத்தில் இப்படியான அடித்தளத்தை அமைத்துகொடுக்கத்தான் இந்தியா விரும்பியது, அப்படி நடந்திருந்தால் பின்னொரு நாளில் ஈழகுரல் மிக வலுவாக அமைய அது மிக்க உதவியாயிருந்திருக்கும்

ஆனால் புலிகளால் எல்லாம் நாசமாயிற்று

இனி சில உரிமைகளை பெறவே முடியாத அளவு ஈழம் நாசமாயிற்று.

கட்டலோனியா, குர்து, பாலஸ்தீன் விவகாரங்களை எல்லாம் கவனித்தால் அவை எல்லாம் பல உரிமைகளை பெற்று, எல்லைகளை வகுத்து இதுதான் எங்கள் ஏரியா என உலக நாடுகள் ஒப்புகொள்ளும், சொந்த நாடும் ஒப்புகொள்ளும் வகையில் பலமாக இருக்கின்றன‌

ஈழத்தில் அப்படி ஏதுமில்லை, எந்த எல்லையும் வகுக்கபடவில்லை. புலிகளின் மேப்பினை சீமான் ஏற்றுகொள்ளலாம் உலகம் ஒப்பாது

ஈழவிடுதலையினை புலிகள் எந்த அளவு நாசமாக்கியிருக்கின்றார்கள் என்பது பல நாடுகளின் இனங்கள் போராடும் பொழுது கவனித்தால் புரிகின்றது.

இந்தியா எவ்வளவு அருமையான முயற்சி எடுத்திருக்கின்றது, அமைதி படை வீரர்களும் அருமை தலைவன் ராஜிவ் போன்றோர் உயிர் கொடுத்தெல்லாம் அதற்கு போராடியிருக்கின்றார்கள் என்பது புரிகின்றது

ஆக ஈழத்தை கெடுத்தது சாட்சாத் புலிகள், ஆனால் இங்கு சில கும்பல் இன்னும் இந்தியா, காங்கிரஸ், கலைஞர் என சொல்லிகொண்டே இருப்பான்

அவனை எல்லாம் மெர்சல் விவாதங்களில் கலந்துகொள்ள வைத்து சாகடிக்க வேண்டும்.

 

எச் ராஜா.. அன்புமணி… தமிழிசை…. ஸ்மூலி…..

இந்த எச்.ராசாவிற்கு மோடி ஆட்சிக்கு வந்ததும் உற்சாகம் தாளவில்லை, அதுவும் கலைஞரும் ஜெயாவும் இல்லா நிலையில் தானே தமிழக முதல்வர் போலவும், தமிழகத்தை காக்கும் பொறுப்பு தான் ஒருவனுக்கே இருப்பதாகவும் நினைத்து கொண்டார்

யாரையாவது வம்புக்கு இழுப்பது, யார் மீதாவது கல் வீசி சிரிப்பது என உற்சாகமாக சென்று கொண்டிருந்தது அவரின் தற்போதைய வாழ்வு

அப்படி சில இடங்களில் கல்வீசிய அவரை, விஷ வண்டு கூட்டில் கல் எறிந்து சிக்கலில் சிக்க வைத்திருக்கின்றார் தமிழிசை

இனி எச்.ராசாவிற்கு விழும் கொட்டுகளும் அவருக்கு வீங்க போகும் வீக்கமும் கொஞ்சமாக இருக்காது, குறைந்தபட்சம் கொஞ்ச நாளைக்காவது அவர் அமைதி காத்தே தீரவேண்டும்

ஆக அக்கா தமிழிசையின் திட்டம் மாபெரும் வெற்றி, மிஸ்டர் ராசா, அக்காண்ணா சும்மா இல்லை

அக்கா டா ….. ஒரிஜினல் தமிழச்சிடா


அன்புமணி அமைச்சராக இருந்தபொழுது மருத்துவ கவுன்சில் தலைவராக இருந்த ககன் தேசாய் பலநூறு கோடிகளை அடித்த நிலையில் அந்த்த துறை அமைச்சராக இருந்த அன்புமணி எவ்வளவு அடித்திருப்பார் : எடப்பாடி பழனிச்சாமி

இதற்கு அன்புமணி என்ன பதில் சொல்ல போகின்றார் என தெரியவில்லை, கலைஞராக இருந்தால் எப்படி கலாய்பார் தெரியுமா?

“சிறையில் இருக்கும் சசிகலாவே பல கோடி ரூபாய்கள் அடித்திருக்கின்றார் என சொல்லபடும் நிலையில், அவருக்கு கீழிருந்த இந்த பழனிச்சாமி எல்லாம் கை சுத்தமானவரா?

அந்த நெல்லுக்கு பாய்ந்த நீர் புல்லுக்கு பாயாமல் இருந்திருக்குமா?

இப்பொழுது கூட விஜயபாஸ்கரிடமிருந்து ஏராளமான பணங்களை வருமானவரித்துறை கைபற்றியது, அவரிடமே அவ்வளவு இருந்தது என்றால் முதல்வரிடம் எவ்வளவு இருந்திருக்க வேண்டும்

பழனிச்சாமி ஓதுவதெல்லாம் வேதம் ஆகுமா? உடன்பிறப்பே


பாஜகவிற்கு விஜயினை வளைக்கும் திட்டமில்லை : தமிழிசை

அதானே, ரஜினியினை வளைக்கும் முயற்சி இன்னும் முடியவில்லை என்பதால் விஜயினை எல்லாம் பாஜக முயற்சி செய்யாது என்கின்றார் தமிழிசை.

அதே நேரம் விஜயினை நொறுக்க பாஜக நினைக்கவில்லை என தமிழிசை சொல்லாததும் கவனிக்கதக்கது


இந்த ஸ்மூலி வந்தபின் ஏராளமான கல்பனா அக்காக்கள் உருவாகிகொண்டிருப்பதால், நமது சிரிப்பிற்கு உரியவரும் பெரும் நகைச்சுவை பாடகியுமான கல்பனா அக்கா இந்த சமூகத்தை விட்டு தூரமாக சென்றுகொண்டிருக்கின்றார் என்பதுதான் சோகம்

எனினும் ஒரு பாடலை எப்படி கொலையாய் கொல்லலாம் என கடும் ஆராய்ச்சியில் பாடும் ஸ்மூலி பாடகர்களுக்கு அவர்தான் முன்னோடி அதில் சந்தேகமே இல்லை


 

மெர்சல் படத்துக்க்கு ஏண்ணே இவ்வளவு அரசியல்வாதிகள் குதிக்கிறானுக‌?

Image may contain: 2 people, people smiling, outdoor and nature

“அண்ணே இந்த மெர்சல் படத்துக்க்கு ஏண்ணே இவ்வளவு அரசியல்வாதிகள் குதிக்கிறானுக‌”

அடேய் கோமுட்டி தலையா அவனுக இப்போ இருக்க நிலமையில நீ ஜிஎஸ்டி பற்றி பேசினாலும் குதிப்பானுகடா

அப்படியாண்ணே

ஆமாடா .. சும்மா பேசுடா

எப்படிண்ணே பேசுறது? எனக்கு ஜிஎஸ்டினா என்னெண்ணே தெரியாதண்ணே?

அடேய் இப்போ பேசுற எவனுக்காவது ஜிஎஸ்டின்னா என்னண்ணு தெரியுமா? சத்தியமா தெரியாதுடா. சிங்கப்பூர் மணி வேல்யூ என்ன? இந்திய மணி வேல்யூ என்ன? அது கூட தெரியாம அள்ளிவிடுறானுங்கடா, அவனுகளுக்கே 4 பேர் கூடும் போது உனக்கு கூட மாட்டானுங்களா

அப்போ பேசுறேண்ணே

பேசு

ஏய் மோடி அரசாங்கமே செவ்வாய் கிரகத்துல ஜிஎஸ்டியே கிடையாது ஆனா அங்கேயும் சூரியன் உதிக்குது, இங்க 60 % ஜிஎஸ்டி போட்டாலும் சூரியன் 6 மணிக்குத்தான் உதிக்குது

அப்படிதாண்டா தார் டின் மண்டையா..”

 

இந்த தேசபக்தர் இருக்கின்றாகளே….

இந்த தேசபக்தர் இருக்கின்றாகளே, இவர்கள் கில்ஜி முதல் திப்பு சுல்தான் வரை எல்லா இஸ்லாமிய ஆட்சியாளைரயும் திட்டுகின்றார்கள்

ஆனால் ஆங்கில கொடும் ஆட்சியாளரான ராபர்ட் கிளைவ் முதல் சாண்டஸ், டயர் , ஜாக்சன் போன்றவர்களை, கொடூர அந்தமான் சிறைச்சாலை வெள்ளை அதிகாரிகளை பற்றி எல்லாம் ஒரு வார்த்தையும் சொல்வதில்லை

உண்மையில் இந்நாட்டில் மதவெறியினை தூண்டியது இவர்கள்தான்

ஆனால் அவர்களை எல்லாம் விட்டுவிட்டு மத நல்லிணக்கத்தை தேடிய அக்பரையும், திப்புவினையும் திட்டுகின்றார்கள் ஏன்?

இந்நாட்டில் இந்து முஸ்லீம் பிரச்சினையினை கிளறினால் ஆளலாம் என சொன்னவன் அந்த வெள்ளை அதிகாரிகள் அல்லவா?

அவர்கள் இவர்கள் வழிகாட்டிகள்

பின் எப்படி அவர்களை திட்டுவார்கள்? மாறாக வணங்குவார்கள், இதன் பெயர்தான் தேசபக்தி

கண்ணம்மா கண்ணம்மா அழகு பூஞ்சிலை……

Image may contain: 1 person, smiling, text

ஒரு குழந்தை உருவாக 10 மாதம்

ஒரு பட்டதாரி உருவாக 4 வருடம்

ஒரு தலைவன் உருவாக ஒரு யுகம்

ஆனால் ஒரு குஷ்பூ உருவாக பல‌ யுகம் ஆகும்

அது ஏண்டா உங்களுக்கு புரியவே மாட்டேங்குது?

கண்ணம்மா கண்ணம்மா அழகு பூஞ்சிலை……

தியாகத்தின் ஒரே திருவுருமான பாகம்பிரியாளின் பிறந்த நாள்

இன்று எனக்கு தெரிந்த தியாகத்தின் ஒரே திருவுருமான பாகம்பிரியாளின் பிறந்த நாள்.

அதுவும் எனக்காக தன் வாழ்வினை தியாகம் செய்தவர் என்ற முறையில் நான் பெரும் நன்றியுடையவனாகின்றேன்

எனக்கு நன்றாக தெரியும், என்னோடு சராசரி பெண் வாழ்வது என்பது முடியவே முடியாத காரியம், ஏனென்றால் நான் அப்படித்தான். எதிலும் கவனமில்லை, எதுவுமே சீரியஸ் இல்லை என ஏதோ சித்தன் வழி செல்லும் ஒரு குழப்பாமான மனதிற்கு சொந்தகாரன்,

இதில் முன்கோபம் வேறு

அவளுக்கு எனக்கும் சுத்தமாக பொருந்தாது, பொருந்த வேண்டிய அவசியமும் அவளுக்கு இல்லை.

வசதியான வீட்டு ஒரே மகள் அவள், அவள் இடத்தில் யார் இருந்தாலும் என்றோ என் தலையில் கல்லை தூக்கிபோட்டுவிட்டு கிளம்பியிருப்பார்கள்.

அவ்வளவு அழிச்சாட்டியம் செய்திருக்கின்றேன்.

பாரதி மனைவியினை கண்டுகொள்ளவில்லை என்றால் அவன் அறிவாளி, அவனின் மனகொதிப்பு வேறு

ஆனால் இந்த மரமண்டையன் ஏன் அப்படி இருந்தான் என்றால் அவனின் பைத்திய்யக்கார மனம் அப்படி.

ஆனால் நான் மாறவே மாட்டேன் என தெரிந்தபின் அவள் எனக்காக மாறிகொண்டாள், பொருந்தவே பொருந்தாத இரு பிறவிகள் பொருந்திகொண்ட அதிசயம் அவளால் நடந்தது.

எத்தனையோ முறை வெட்டிகொண்டு ஓடும் முடிவின் நுனிக்கு வந்தும் மறுபடியும் இணைந்த காலங்கள் உண்டு,

இறைவன் என்னை கண்காணித்து கொண்டே இருந்திருக்கின்றான், எனக்கு அவள்தான் சரி என்பது அவனுக்கு தெரிந்திருக்கின்றது

அவ்வையார் சொல்வார் அல்லவா “இல்லாள் அகத்திருக்க இல்லாதது ஒன்றுமில்லை” என அப்படியாக, “நல்ல மனைவி கடவுளால் மட்டுமே கொடுக்கபடுவாள்..” என பைபிள் சொல்கின்றது அல்லவா? அப்படியாக கிடைக்கபெற்றவள்

வாழ்க்கை என்றால் என்னவென்று கொஞ்சம் கொஞ்சமாக புரிய புரிய அவளை புரிந்துகொள்ள முடிகின்றது

எனக்கு சகலமுயாய் இருக்கும் அவளை ஆண்டவன் ஆசீர்வதிக்கட்டும், அவள் இல்லையென்றால் கொஞ்சம் கூட என் உலகம் அசையாது

ஆம் எனக்கு டிரைவரும் அவளே, இன்றுவரை எனக்கு கார் ஓட்ட தெரியாது. அவள் நிழலாய் இருப்பதால் அதற்கொரு அவசியமும் வந்ததில்லை.

எல்லா பிரச்சினைகளிலும் இன்று என்னை காத்து நிற்கும் ஆணிவேர் அவள்தான். அதில்தான் என்னால் நிற்க முடிகின்றது.

எல்லா தெய்வங்களும் அவளை ஆசீர்வதிக்கட்டும், அவள் வாழ வாழத்தான் நான் வாழமுடியும்

இந்த முகநூலுக்கு என்னை அழைத்து வந்தது அவள்தான், இந்த கணக்கினை எல்லாம் அவள்தான் தொடங்கி கொடுத்தாள் , நான் படிப்பதையும் எழுதுவதையும் அவள் தடைசெய்ததுமில்லை

குஷ்பூ படத்தை என் அருகிருந்து பார்க்காததை தவிர எந்த சொல்லும் அவளை சொல்ல முடியாது.

என் உலகம் அவளால்தான் இயங்குகின்றது.

வாழ்க்கையில் எனக்கு கிடைத்த அந்த பொக்கிஷத்தின் பிறந்தநாளை உங்களோடு கொண்டாடுவதில் மகிழ்ச்சி.


வாழ்த்து மழையில் பாகம்பிரியாளை நனைய வைத்திருக்கும் உங்கள் அனைவருக்கும் கோடான கோடி நன்றி

உங்கள் வாழ்த்துக்களை எல்லாம் பார்க்கும்பொழுது “நீனும் ஏதோ உருப்படியாக செய்கின்றாய் போல..” என ஒரு பார்வை பார்த்துகொள்கின்றாள் அவள்.

உங்களுக்கெல்லாம் கோடான கோடி நன்றி, உங்களால் வீட்டில் மரியாதை கொஞ்சம் கூடியிருக்கின்றது

எல்லோரும் வாழ்த்துகின்றார்கள் என தோழர் Devi Somasundaram அவர்களும் வாழ்த்தியிருக்கின்றார்

“அம்மா மகமாயி, வாழ்த்துக்கு நன்றி. அவளிடம் நீ 10 நிமிடம் , வேண்டாம் ஒரு நிமிடம் பேசினாலும் அவள் பெண் உரிமை என்ன தெரியுமா? என சொல்லி என் கழுத்தை பிடித்து கோலாலம்பூருக்கு அப்பால் தள்ளிவிடுவாள்

உன்னை பற்றி நன்கு தெரிந்ததால் சொல்கின்றேன், அவள் உள்ளே உறங்கும் மிருகத்தை எழுப்பிவிடாதே தாயீஈஈஈ”