விஜயின் கோபமே அவரது படங்களில் வெளிப்படுகிறது: விஜயின் தந்தை பேட்டி!

விஜயின் கோபமே அவரது படங்களில் வெளிப்படுகிறது: விஜயின் தந்தை பேட்டி!

அப்பொழுதே சொன்னோம், எஸ்.ஏ சந்திரசேகர் பெரும் திட்டத்தோடு காய் நகர்த்துபவர். இப்பொழுது கலைஞர் தளர்ந்த நிலையில், ஜெயா இல்லா நிலையில் விஜயகாந்த் போன்றோர் வலுவிழந்த நிலையில் தமிழகத்தில் விஜயினை பெரும் பிம்பமாக அவர் வளர்க்க நினைப்பார் என எப்போதே சொல்லியிருந்தோம்

மிக சரியாக வந்து நிற்கின்றார் பார்த்தீர்களா?

ஆனால் வந்ததும் காமெடி செய்துவிட்டார், அதாவது விஜயின் கோபம் அவரின் படங்களில் வெளிப்படுகின்றதாம்

அம்மா… புரட்சி தலைவி அம்மா.. என் படம் வெளிவர உதவுங்கம்ம்ம்ம்ம்மா என அவர் அழுதபொழுதே அவரின் சமூக கோபத்தை உலகம் தெரிந்துகொண்டது

இப்பொழுது விஷால் அலுவலகத்தில் ரைடு என சொல்லி உங்களை மறைமுகமாக எச்சரிக்கின்றார்கள் அல்லவா?

அதில் உங்கள் சமூக கோபம் நன்றாக தெரிகின்றது மிஸ்டர் சந்திரசேகர்.

 
 
 

ஜெயா ஆன்மா உங்களை ஆசீர்வதிக்கும்

என்ன சர்ச்சை இருந்தாலும், ஆயிரம் குறைகளை சொன்னாலும் கந்துவட்டி கொடுமையினை ஜெயா அடக்கி வைத்திருந்த விதம் பாராட்டுகுரியது.

தன் வாக்குவங்கி பாதிக்கபடும் எனினும் அவர் மிக துணிச்சலாக அதனை அடக்கி வைத்திருந்தார்

அதனால்தான் தமிழகத்தில் கந்துவட்டி கொடுமைகள் கட்டுபடுத்தபட்டிருந்தன‌, ஜெயாவினை நோக்கி சொல்லபடும் மிக சில‌ நல்ல விஷயங்களில் நிச்சயம் அதுவும் ஒன்று.

அவர் இல்லாத காலத்தில் அது முளைக்கின்றது, பலி வாங்குகின்றது

கந்துவட்டிக்கு பிராதான இடம் மதுரையும் அதற்கு தேற்கேயும் உள்ள பகுதிகள். அதுவும் நெல்லை மாவட்டம் மகா மோசம்.

உலகிலே கொடுமையான தொழில் வட்டி. ஹிட்லர் யூதர்கள் மேல் கொடூரமாக பாய அந்த வட்டிகொடுமைதான் காரணம்

எந்த தொழிலில் பணம் போட்டாலும் நஷ்டம் என்றால் ஒன்றும் செய்யமுடியாது, ஆனால் வட்டி தொழிலில் அடித்து பிடுங்கிவிடலாம். ஒரே முதலீடு மனசாட்சி இருக்கவே கூடாது

கடன் என்பது அவ்வளவு பொல்லாத விஷயம், அதுவும் நெல்லை பகுதியில் அது மெல்ல கொல்லும் விஷம்

கடந்த மாதம் வள்ளியூர் பக்கம் 5 லட்சத்திற்கு 15 லட்சம் வட்டிகட்டிவிட்டு இன்னும் கட்டமுடியாமல் ஒரு ஆசிரியர் உயிரிவிட்டார்

இதோ இன்று குடும்பமே தீகுளித்திருக்கின்றது, அதுவும் அந்த பிஞ்சுகள் கதறும்பொழுது நாமெல்லாம் தமிழர்களா? அதுவும் நெல்லையர்களா என நாணத்தால் தலை குனிகின்றோம்

பிஞ்சுகளை கொன்ற நல்லதங்காள் கதையினை நேரில் பார்த்தது போல் நெஞ்சம் கனக்கின்றது

இனியும் என்ன மரியாதை

அய்யா பழனிச்சாமி, ஜெயா வழியில் என்ன ஆட்சி நடத்துவீர்களோ தெரியாது. ஆனால் இந்த கந்துவட்டி கொடுமைக்கு மட்டும் அவர் வழியில் முடிவு கட்டுங்கள்

நிச்சயம் அது நற்பெயரை பெற்று கொடுக்கும்

உங்களை கெஞ்சி கேட்கின்றோம் மிஸ்டர் பழனிச்சாமி இன்னொரு உயிர் போகுமுன் விழித்துகொள்ளுங்கள்

அதற்கு முன் இந்த குடும்பத்திற்கு நியாயம் கொடுங்கள், 
அவர்களும் இம்மாநில அபலைகள். உங்கள் ஆட்சியில் நியாயம் கிடைக்கும் என நம்பி முடியாமல் நெருப்பு பக்கம் சென்றுவிடும் அளவு பாதிக்கபட்டவர்கள்

ஜெயாவின் கனவில் இதனையாவது நிறைவேற்றுங்கள் மிஸ்டர் பழனிச்சாமி, அந்த பிஞ்சுகளின் வேதனைக்காக‌ களமிறங்குங்கள்.

இன்னும் நெஞ்சத்தால் எரியும் எத்தனையோ பாதிக்கபட்ட மக்களுக்காக உருகி வேண்டுகின்றோம்

இதற்கொரு முடிவு கட்டுங்கள்.. ஜெயா ஆன்மா உங்களை ஆசீர்வதிக்கும்.

குஷ்பூவா? நயனா? நீங்களா? நாங்களா?

Image may contain: 1 person, close-up


ஒவ்வொரு நாளும் ஏராளமானோர் குஷ்பூ ரசிகர் சங்கத்தில் இணைந்துகொண்டே இருக்கின்றார்கள்

துபாய், லண்டன், கனடா, அமெரிக்கா, சிங்கப்பூர் என எங்கிருந்தெல்லாமோ வந்து சங்கத்தில் இணைகின்றார்கள்

இவை எல்லாம் உணர்த்துவது ஒன்றே ஒன்றுதான்.

இந்த உலகம் குஷ்பு ரசிகர்களால் நிரம்பியது


மிஸ்டர் கோபிநாத்,

நீங்கள் எல்லா தலைப்பிலும் நீயா நானா வைத்து நடத்தி முடித்துவிட்டு இப்பொழுது தலைப்பு கிடைக்காமல் தள்ளாடுகின்றீர்கள்

Image may contain: 1 person, smilingஇங்கே ஒரு பெரும் தர்மயுத்தம் நடக்கின்றது. அதாவது குஷ்பூ ரசிகர் சங்கத்திற்கும், நல்லி எலும்பு நயன் சங்கத்திற்கும் ஒரே கருத்து மோதல்

இதனை யார் தீர்த்துவைப்பார் என தெரியாமல் கலங்கி நின்றபொழுதுதான் நீங்கள் கேரள நாட்டிளம் பெண்களுடனே என பாட ஆரம்பித்தது தெரிந்தது

விடுவோமா?

வேலை வெட்டி இல்லாமல் குட்டி சுவரில் மல்லாக்க படுத்து நயன் என புலம்பிகொண்டிருக்கும் இந்த Babu Rao Chandran Kannan போன்றோரை ஒரு பக்கம் அழையுங்கள்

Periya Samy , Sadhu SadhathBilal Aliyar , Venkatesh Mothilal போன்றோருடன் சங்கம் ஒரு பக்கம் களமிறங்கும்

Image may contain: 1 person, textநிகழ்ச்சி நிச்சயம் மாபெரும் ஹிட் ஆகும் என்பது சொல்லி தெரியவேண்டியதில்லை

நிகழ்ச்சி முடிவில் அந்த எல்கேஜி பாய்ஸ் எமது சங்கத்தில் சரணடையும் விஷயமும் நடக்கும்

எங்கள் தர்மயுத்தம் வெற்றிபெறுவதை உலகமே பார்க்கும்.

ஏதோ உங்களுக்கும் குஷ்பூவால் தமிழக காங்கிரஸ் போல ஒரு திருப்பம் வரட்டும்

முடிந்தால் நடத்துங்கள்

அதற்கு முன்பு பாஷா ஸ்டைலில் இந்த நயன் கோஷ்டிகளுக்கு சவால் குடுக்கின்றோம்

டேய் எல்கேஜி பாய்ஸ்

குஷ்பூவா? நயனா?

நீங்களா? நாங்களா?

அண்ணாச்சி சும்மாதான் இருக்காரு, ரெடின்னு சொன்னா கோட் போட்டுட்டு வந்திருவாரு. முடிஞ்சா அண்ணாச்சி முன்னாடி விவாதத்திற்கு வாங்கடா பார்க்கலாம்

 

காசிமேட்டில் மீணவர்கள் போலிசார் மோதல்

காசிமேட்டில் மீணவர்கள் போலிசார் மோதல்

சீன இயந்திரத்தில் இயக்கபடும் படகுகள் தொடர்பாக மீணவர்கள் நடத்திய போராட்டம் கலவரமாக வெடித்திருக்கின்றது.

மீணவர்கள் மீது தாக்குதல் நடத்துவது ஒன்றும் அதிமுகவிற்கு புதிதல்ல‌

கல்பாக்கம் ராமசந்திரன் காலத்தில்தான் அணுவுலை வளாகமாக மாறிற்று, இன்னும் ஏராளமான சம்பங்களை சொல்லலாம்.

மெரீனாவினை சுத்தமாக்கி எனக்கு கல்லறை கட்ட போகின்றேன் என ராமசந்திரன் அங்கிருந்த மீணவ குப்பங்களை வால்டர் தேவாரம் தலமையில் அடித்துவிரட்டியது எல்லாம் பெரும் கொடுமை

கூடங்குள அணுவுலை விவகாரத்தில் ஜெயா காட்டிய கொடுங்கோலும் கொஞ்சமல்ல‌

இப்பொழுது காசிமேட்டிலும் அடிக்கின்றார்களாம்

ஆனாலும் மீணவ சமூக வோட்டு எங்கே விழும் என்கின்றீர்கள்? அதே அதிமுகவிற்குத்தான்

காரணம் படகோட்டி, மீணவநண்பன் எனும் மிகபெரிய தியாக திரைபடங்களை குல்லா ராமசந்திரன் அவர்களுக்காக நடித்து கொடுத்திருக்கின்றாராம்


டாஸ்மாக் ‘ரம்‘மில் தரம் இல்லை: ஆய்வில் அதிர்ச்சி தகவல்

இது இப்பொழுதுதான் தெரிந்ததா? ஆனாலும் இவ்வளவு லேட்டாக ஆராய்சி செய்ய கூடாது.

அது ரம் என கண்டறியபடுவதற்கே தனி ஆராய்ச்சி தேவைபட்டிருக்கும்,

டாஸ்மாக்கில் எல்லா சரக்கும் ஒரே போலத்தான் இருக்கின்றது என அனுபவஸ்த குடிமக்கள் பல்லாண்டுகளாக சொல்லிகொண்டே இருக்கின்றார்கள்.


 

மதுரை விமான நிலையத்தில் 10 கிலோ யுரேனியத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்…

  • மதுரை விமான நிலையத்தில் ரூ.25.5 லட்சம் மதிப்புள்ள 10 கிலோ யுரேனியத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்

இது மிக மிக சீரியசான பிரச்சினை

அந்த நபர் பெயர் முசோபர் கனி, இலங்கையிலிருந்து வந்திருக்கின்றார். அது இஸ்லாமிய பெயர் என்பதற்காக சொல்லவில்லை , இலங்கையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடமாடுவது ஒன்றும் ரகசியமல்ல‌

இது எவ்வகை யுரேனியம், செறிவூட்டபட்டதா இல்லையா? இவர் கடத்தியதன் நோக்கம் என்ன? யாருக்கு கொடுக்க இருந்தார் என்பதெல்லாம் விடை கண்டே ஆகவேண்டிய கேள்விகள்

யுரேனியம் கிடைத்தவுடன் அணுகுண்டு செய்ய முடியாது, அப்படி சாத்தியம் இருந்தால் பின்லேடன், ஐஎஸ் இயக்கம் எல்லாம் என்றோ செய்திருக்கும்

ஆனால் செறிவூட்டபட்ட யுரேனியமாக இருந்தால் கொஞ்சம் சீரியசான பிரச்சினை.

இது கடத்தலா? இல்லை வேறு கதிரியக்க பொருளை கடத்தும் முன்னோடி திட்டமா என்பதுதான் பெரும் புதிர்

ஊடகங்கள் மெர்சலை விட்டுவிட்டு மிக தீவிரமாக கிளறவேண்டிய விஷயம் இது.

ஆனால் காமெடியான விஷயங்களை சீரியசாகவும், மகா சீரியசான விஷயங்களை காமெடியாகவும் பார்க்கும் தமிழகத்தில் இவ்விஷயம் சாதாரணமாய் பார்க்கபடுவதுதான் பரிதாபம்

தீபாவளிக்கு மெகந்தி பூசிய மாணவிகள் மீது நடவடிக்கை : திருச்சியில் பரபரப்பு

தீபாவளிக்கு மெகந்தி பூசிய மாணவிகள் மீது நடவடிக்கை : திருச்சியில் பரபரப்பு

அதாவது அது கிறிஸ்தவ பள்ளியாம். எல்லா மத மாணவர்களும் படிக்கின்றார்களாம். இந்து மாணவிகள் தீபாவளிக்காக மெகந்தி வைத்துவிட்டு மறுநாள் பள்ளிக்கு சென்றதில் பள்ளியின் கட்டுபாடு நொறுங்கிவிட்டதாம்

இது மாணவர்களை தண்டிக்கும் அளவிற்கு சென்று, பின் பெற்றோர்கள் எல்லாம் வந்து விஷயம் பெரிதாகிவிட்டது.

இது மிக மிக வன்மையாக கண்டிக்கதக்க விஷயம்

அரசுக்கு மக்கள் கட்டும் வரியில்தான் இந்த பள்ளிகளுக்கு அரசு சம்பளம் கொடுக்கின்றது, எந்த சபையும் 100% சொந்த காசில் பள்ளி நடத்துவதில்லை அதெல்லாம் 100 ஆண்டுகளுக்கு முன்பே முடிந்துவிட்டது

அப்படி அரசு கல்விக்காக செலவழிக்கும் பள்ளியில், சிறுபான்மையினர் எனும் போர்வையில் ஒளிந்திருந்து, அதுவும் இந்நாட்டு பிஞ்சுகளிடம் துவேஷம் காட்டுவது ஏற்றுகொள்ள முடியாதது

அம்மாணவர்கள் பள்ளிக்குள் தீபாவளி கொண்டாடியிருந்தாலோ அல்லது மத்தாபூ கொழுத்தியோ அதிரசம் சுட்டோ அழிச்சாட்டியம் செய்தால் கண்டிக்கலாம்.

ஆனால் மெகந்தி வைத்து ஏன் தீபாவளி கொண்டாடினாய் என்பதெல்லாம் சுத்த வெறுப்பில் வரும் வார்த்தைகள்

இந்த பள்ளியின் தாளாளர் யார் என தெரியவில்லை, ஆனால் கிறிஸ்தவர்களாக இருக்க வேண்டும்

அவர்களுக்கு சொல்வது இதுதான் “சிறு குழந்தைகளை என்னிடம் வரவிடுங்கள்” என சொன்னவர் இயேசு.

சிறுவர்களுக்கு இடைஞ்சலாய் இருப்பவன் கழுத்தில் கல்லை கட்டி கடலில் தள்ளுவது நலம், கடவுள் அதனை வெறுக்கின்றார் என சொன்னவரும் இயேசு

குழந்தைகளை, சிறுவர்களை அவர் அவ்வளவு நேசித்திருக்கின்றார். கள்ளமில்லா அந்த உள்ளங்கள் அவருக்கு பிடித்தமானவை

அந்த குழந்தைகளின் உள்ளங்களை நீங்கள் காயபடுத்துகின்றீர்கள் என்றால், நீங்கள் கிறிஸ்துவினை சிலுவையில் அறைகின்றீர்கள், அவரை கொல்கின்றீர்கள் என்றே பொருள். யூதாஸுக்கும் உங்களுக்கும் வித்தியாசமில்லை

குழந்தைகளை குழந்தைகளாக பாருங்கள், செய்த பாவத்திற்கு இயெசுவிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு அக்குழந்தைகளை பள்ளியில் அனுமதியுங்கள்

இயேசு அப்பொழுதுதான் மகிழ்ச்சியடைவார்

இல்லையேல் கிறிஸ்துவிற்கு எதிராக பாவம் செய்த பழி உங்கள் தலைமேல் தங்கட்டும்.

ஏம்பா கோபிநாத், இந்த ஜெயா மரணம் இயற்கையானதா? செயற்கையானதா?

Image may contain: one or more people

ஏம்பா கோபிநாத்

இந்த ஜெயா மரணம் இயற்கையானதா? செயற்கையானதா?

இரட்டை இலையினை பழனிச்சாமி வெல்வாரா? தினகரன் வெல்வாரா?

சசிகலா வெளிவரும்பொழுது கட்சி இருக்குமா? இருக்காதா?

அறிவில் சிறந்தவர் பழனிச்சாமியா? இல்லை பன்னீர் செல்வமா?

டெங்கி ஒழிப்பில் முன்னால் நிற்பது மத்திய அரசா? மாநில அரசா?

ஸ்டாலினின் அரசியல் திமுகவிற்கு சாதகமா பாதகமா?

அன்புமணி அறிக்கைகளை அரசு கண்டு கொள்கின்றதா இலையா?

தமிழக காங்கிரஸ் தலைவராக குஷ்பூவினை நியமித்தால் கட்சி வளருமா இல்லை சரியுமா?

இப்படி எத்தனையோ தலைப்புகள் இருக்க , தமிழ்பெண் அழகா, மலையாளி பெண் அழகா என மார்க் போட கிளம்பினீராம் ஏன்?

நல்ல வேளையாக நிகழ்ச்சியினை நிறுத்தினீர் , இல்லையென்றால் ஷகிலா ரசிகர்கள் எல்லாம் எப்பக்கம் சரிய முடியும்? எவ்வளவு சிக்கலுக்கு ஆளாகியிருப்பார்கள்?