இந்திராவின் இந்தியா ‍ 03

Image may contain: one or more people and crowdஅந்த குழப்பான காலகட்டத்தில் சி.ஐ.ஏ தலமை செயலகமானது பாகிஸ்தான், பின்லேடனுக்கு வகுப்பு எடுத்துகொண்டே, இந்தியாவையும் குறிபார்த்தனர், இந்திரா அவர்களின் பெரும் எதிரியானார்.

இந்நிலையில் பொற்கோயில் சம்பவத்தால் சீக்கியர்கள் நொந்து போயினர், அது அவர்களின் ஆத்மா, அப்பொழுது ஒரு வதந்தி அல்லது தகவல் பரப்பபட்டது, கவனியுங்கள் லண்டனிலிருந்தும் அமெரிகாவிலிருந்தும் வந்து பொற்கோயிலில் பேசியவர்கள் பரப்பிய வதந்தி.

அதாவது இந்திரா பெரும் ராணுவ தாக்குதலுக்கு திட்டமிட்டு இருப்பதாகவும் , யுத்தத்தை சாக்காக வைத்து பஞ்ஞாபியரை அழிக்க போவதாகவும் வதந்தி இறக்கை கட்டி பறந்தது, அதாவது பாகிஸ்தான் ராணுவத்தினை உள்வாங்க விடுவாரம், பின்னர் விரட்டுகிறேன் என சகலத்தையும் அழித்துவிடுவாராம்.

கவனியுங்கள் இது முதலில்வந்த செய்தி, ஒரு வாரத்தில் ஜியா உல்கக் பாகிஸ்தான் எல்லையில் பஞ்சாபில் படைகுவிக்கிறார், போர் பரபரப்பு பற்றிகொள்கிறது.

இங்குதான் சீக்கிய சமூகம் அச்சத்தில் ஆழ்ந்தது, இந்திரா இனி தங்களை அழிக்காமல் விட மாட்டார் என பயத்தில் உறைந்தனர். இனி வாழ முடியாது என அவர்களுக்கு தோன்றிற்று, ஒரு கலாச்சாரமிக்க இனம் அழிவதை விட இருவர் அழிவது தவறில்லை என முடிவாயிற்று, பின்னர் நடந்த கொடூரம் உலகறிந்தது.

32 தோட்டாக்கள் இந்திரா மீது பாய்ந்தன.

அவரது பலமான உளவுதுறை அவருக்கு சீக்கிய காப்பாளர்களை மாற்ற சொன்னது, அப்படியானால் ராணுவத்து சீக்கியர்களை என்ன செய்வீர்கள் என கேட்டு மறுத்தார், இந்திரா

கிட்டதட்ட 7 முறை உயிர்தப்பிய இந்திரா, மெய்காப்பளரிடம் சிக்கினார். சஞ்சயின் மரணத்தின் பொழுதே கிட்டதட்ட மரணித்த இந்திரா, இம்முறை தப்பவில்லை.

ஒரு திட்டமிட்ட வதந்த்தி, அதற்கு வலுசேர்க்கும் படைகுவிப்பு என்ற மாயையில் நொந்திருந்த சீக்க்கிய சமூகம் சிக்கியதால் நிகழ்ந்த நிகழ்வு இது, பின்னாளில் அவர்கள் உண்மை உணர்ந்தனர். ஆக்கிரமிப்பு காஷ்மீர் பக்கம் இந்திய பார்வை இருந்ததே தவிர பஞ்ஞாப் எல்லையில் அல்லவே அல்ல.

சீக்கியருக்கு ஆபத்து என இறக்குமதியான வதந்தி, இப்படுகொலை மூலம் உண்மையானது கிட்டதட்ட 2000 சீக்கியருக்கு மேல் டெல்லியில் வன்முறையில் கொல்லபட்டனர்.

ஆனாலும் சீக்கிய இனம் உயர்வானது, சகல வலிகளையும் தாண்டி இன்னும் நாட்டிற்காக உழைக்கின்றது.

இந்திரா அமரர் ஆனார், இந்தியா பன்னாட்டுகம்பெனிகளின் வேட்டைகாடானது, தனியார் வங்கிகளை ஒழித்து வங்கிகளை தேசியமயமாக்கியவர் இந்திரா, இன்று இந்திய இன்சூரன்ஸ் கூட விற்பனை எனும் நிலை.

அண்டை நாடுகள் எல்லாம் ஆசுவாசமடைந்தன, சில திருமணவீடுகள் அல்லது மறைவு துக்கங்களில் எதிர் அரசியல்வாதிகள் எல்லாம் சந்திப்பார்கள், கேட்டால் நாகரீகம் என்பார்கள், ஆனால் அவர்கள் மனது ஆண்டவனுக்குத்தான் தெரியும்,

அப்படித்தான் இந்தியா மறைந்தபொழுது, எல்லா தலைவரும் வந்தார்கள்,சூத்திரதாரி பாகிஸ்தானின் இடி அமீன் ஜியா உல்கக் வந்தார், அஞ்சலி செலுத்திவிட்டு பாகிஸ்தானுக்கு திரும்பி சென்று சொன்னார்

“அல்லா இருக்கிறார், அமெரிக்கா இருக்கிறது, இந்திரா சாம்பலானார் இனி எனக்கென்ன கவலை”

இநதியாவும், அவர் உருவாக்கிய உளவுதுறையும் , இந்திரா உருவாக்கிகொண்டிருந்த புதிய இந்தியாவும் கதறி அழுதது.

திரு மு.க அன்று ஒரு அர்த்தமுள்ள வார்த்தை சொன்னார், அது நிதர்சனமான உண்மை

“இந்திய தீபகற்பம் இன்று கடலில் அல்ல கண்ணீரில் மிதக்கின்றது”

முற்றும்

 

இந்திராவின் இந்தியா 02

Image may contain: one or more people

அவர் பிரதமராகும் பொழுது இந்தியாவில் ஆங்காங்கு மாநில தேசியங்கள் வலுப்பெற்றன, அது இந்தியாவின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல என்பது ஒரு கூட்டாட்சி அமைப்பின் உச்சதலைவருக்கு தெரியாத விஷயமால‌, சமாளித்தார்.

தமிழகத்தில் திராவிடம், மும்பையில் மராட்டிய கோஷ்ம் என பல வகையான குரல்கள் உயர்ந்து கேட்டகாலம், காஷ்மீர் கேட்கவே வேண்டாம். இந்த வரிசையில் பஞ்சாப்பும் சேர்ந்துகொண்டது.

டெல்லி தமிழகத்தை வஞ்சிக்கிறது, தமிழர்களை அடக்கிஒடுக்குவதில் அதீத அக்கறை காட்டுகின்றது, என்றேல்லாம் பல குற்றச்சாட்டுகள் உண்டு, கொஞ்சம் பஞ்சாப்,காஷ்மீர்,வங்கம் பக்கம் சென்று வந்தோமானால் சில உண்மைகள் புரியும்.

அதாவது இந்தியா அப்படித்தான். பல இடங்களில் அதன் போக்கு வித்தியாசமானது, கடுமையானது. இல்லாவிட்டால் இந்தியா இருக்காது.

இந்தியாவிற்கு அதிகம் உழைக்கும் அல்லது உழைத்த இனம் என பஞ்சாபியரை சொல்லலாம், இன்றும் இந்தியராணுவத்தை தாங்கி நிற்பவர்கள், சகல துறைகளிலும் பங்கெடுப்பவர்கள், கடும் உழைப்பாளிகள். மேலாக இந்திய விசுவாசிகள்.

பெரும் சோக வரலாறு அவர்களுடையது, பாஞ்சாலிகாலத்திலிருந்து அதன் வளமைக்காய் தாக்கபட்டார்கள். பின்னாளில் இந்துவும் வேண்டாம், இஸ்லாமும் வேண்டாம் என அவர்களாக ஒரு சீக்கிய மதம் தொடங்கி அவர்களாக அவர்களின் கலாச்சாரத்தை காத்து வாழ்ந்து வந்தார்கள்.

பிரிவினை நடந்தபொழுது பாதி பஞ்சாப் பாகிஸ்தானுக்கு போயிற்று, ஒரு சராசரி சீக்கியனால் தாங்கி இருக்கமுடியும்? இன்னும் பிரிவினை கலவரத்தில் 10 லட்சம் பஞ்சாபியர் செத்தனர். பிரிவினை வலி அவர்களுத்தான் தெரியும்.

திடீரென தமிழகத்தை இரு நாடுகளாக பிரித்து ஒரு பக்கம் செல்ல விசா தொந்தரவும், உளவாளி முத்திரை சித்திரவதை மரணமும் அன்றாடம் நடக்குமென்றால் சென்னை டூ மதுரை பயணம் எப்படி இருக்கும்? எந்த குடும்பம் நிம்மதியாக இருக்கும்?, இது தான் பஞ்சாபியர் நிலை. ஏராளமான குடும்பங்களும், உறவினர்களும் எல்லைகோட்டுக்கு இங்கும் அங்கும் ஏக்கமாய் பார்த்துகொண்டே இருக்கும் நிலை.

இந்நிலையில் பஞ்சாபியர் மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கின்றனர், அதாவது பஞ்சாப் மொழி பேசுபவருக்கு தனி மாநிலம், சீக்கிய மதத்திற்கு ஒரு மத அந்தஸ்து என சில கோரிக்கைகள், ஆனால் டெல்லி காதுகொடுத்தே கேட்கவில்லை (நாம் கச்சதீவு, ராமேஸ்வரம் மீணவர், ராஜபக்ஸே,காவிரி,மீத்தேன் என கத்தினாலும் கேட்கின்றார்களா அப்படித்தான்) அவர்களும் அசட்டை செய்யபட்டார்கள்.

விளைவு அகாலிதளம் மகா மக்கள் ஆதரவு பெற்றது, இது இந்திராவை சிந்திக்கவைத்தது, அப்படியும் பஞ்சாப் மொழி மாநிலத்திற்கு பதிலாக பிஞ்சிபோன பஞ்சாபை மேலும் பிரித்த்து ஹரியான உருவாக்கபட்டு சீக்கியர்களின் கோபம் மேலும் அதிகமானது.

ஒரு கட்டத்தில் உலகநாடுகளையே அடக்கிய இந்திரா? சும்மா இருப்பாரா?, அதிசயமாக உள்நாட்டில் காங்கிரஸ் எதிர்ப்பு கட்சிகள் எல்லாம் பல மாநிலங்களில் உடைய ஆரம்பித்தன,

அந்த மாநிலத்தில் “அவர்” (அவர் என்பதும் மூன்றேழுத்து) இறந்தார் அதனால் அந்த கட்சி உடைந்தது என உங்கள் கொள்கை இருந்தால் உங்களை பார்த்து அமைதியாக புன்னகைக்கலாம், அவர் இருந்திருந்தாலும் அந்த கட்சி உடையத்தான் செய்திருக்கும்.

அவ்வாறாக அகாலிதளத்திற்கு எதிராக அவரும் அவரின் வாரிசு சஞ்சயும் கண்டெடுத்த ஒருவர்தான் பிந்திரன்வாலே.

காங்கிரஸ் மேடையில் சஞ்சாயால் அமரவைக்கபட்ட பிந்திரன்வாலே பின்னாளில் “புனித பூமி” (காலிஸ்தான்) அடையாமல் ஓயமாட்டேன் எனும் தீவிரவாதியானான் எப்படி கதர் பஞ்சாபி துப்பாக்கி எடுத்தார்?

அந்த காலம் அப்படி, அந்த பக்கம் ஆப்கனை விழுங்கி ரஷ்யா பாகிஸ்தானின் எல்லைக்கு வந்தது, இந்த பக்கம் இந்தியா, பாகிஸ்தான் அழுதால் நாட்டமைக்கு தாங்குமா? ஏராளமான பணமும் ஆயுதமும் பாகிஸ்தானுக்கு வந்தது, அவர்களால் பப்பாளி மரத்தில் ஏற்றபட்ட ஒரு அப்பாவி சீக்கியன் பிந்திரன்வாலே.

இது சுதந்திர‌ போராட்டம் என்றார் அவர், பல கொலைகள் அரங்கேறின. இந்துக்கள் குறிபார்த்து கொல்லபட்டனர்.(அப்பொழுதுதானே கலவரம் வரும்). ஊரை ரத்தகறை ஆக்கிவிட்டு பொற்கோயிலுக்குள் ஒளிந்தனர். பொற்கோயிலுகுள் சென்ற இந்திய ஜனாதிபதியே மயிரிழையில் உயிர்தப்பினார்.

துணிந்த இந்திரா ராணுவ நடவடிக்கை தொடங்கினார், பொற்கோயில் ரத்த்தால் கழுவபட்டது, தீவிரவாதம் முடித்துவைக்கபட்டது.

பொற்கோயிலில் ராணுவம் புகுந்தது ஒவ்வொரு சீக்கியனுக்கும் வலிதான், ஏற்கனவே இந்தியா தங்களை சரியாக அங்கிகரிக்கவில்லை எனும் கோபம் இருந்தது அது கூடிற்று. ஆனாலும் ஒரு சிறிய மகிழ்ச்சி இருந்தது.

அதாவது பிந்திரன்வாலே கூட்டத்தை பெரும்பான்மை சீக்கிய‌ மக்கள் ஆதரிக்கவில்லை, அவன் தொலைந்ததில் நிம்மதியான சீக்கியர்கள் ஏராளம்.

பின்னர் ஏன் படுகொலை நிகழ்ந்ததென்றால், அதுதான் உலக அரசியல். பொற்கோயில் சம்பவத்தில் சீக்கியர்களுக்கு கோபம் இருந்ததே தவிர அவரை கொலை செய்யும் அளவிற்கு அல்ல.

ஆனால் கோபத்தை கூடுதல் பயமும் கூட்டி, இனி இந்திரா இருந்தால் சீக்கியர் வாழ முடியாது என ஒரு பிம்பத்தை உருவாக்கியது பல வெளிநாட்டு சக்திகள்.

சுருக்கமாக சொன்னால் உயிரோடு வைத்து பிந்திரன்வாலேயால் செய்யமுடியாததை அவன் செத்தபின்னால் செய்தார்கள். அதற்கான சூழ்நிலையை உருவாக்கியது பாகிஸ்தானின் இடி அமீன் ஜியா உல் ஹக், திட்டம் கொடுத்தது ஒரு பெரிய கை.

அவர்களின் குறி இந்திய எல்லைகளில் பதற்றம் உண்டாக்குவது, அது முடிந்தது இந்திரா படுகொலையில்

வருவார்..

 

இந்திராவின் இந்தியா ‍- 01

Image may contain: 1 person, textநாளை அன்னை இந்திராவின நினைவுநாள், அப்படி ஒரு தலைவர் இனி வரமாட்டாரா என்பதுதான் இந்தியர்களின் ஏக்கம்

அவரின் நினைவுகளில் கொஞ்சம் சுற்றிவிட்டு வரலாம்

உலகம் அழாகன ஐம்பது அல்லது அறிவான பத்து என இந்தியபெண்களை பட்டியலிடும் ஆனால் உறுதியான இரும்பு பெண் என ஒரே ஒரு இந்தியபெண்ணை மட்டும்தான் சொல்லும் அதுதான் இந்திராகாந்தி.

இந்தியாவில் அவருக்கு முன்னும் பிரதமர்கள் இருந்தார்கள், இன்னும் வருவார்கள் ஆனால் அழிக்கமுடியாத முத்திரை பத்தித்தவர் அவர் ஒருவர்தான்.

மோதிலால்,ஜவர்லால்,மவுண்பேட்டன்,காந்தி,பட்டேல்,விஜயலட்சுமி பண்டிட் என சுற்றி, சுற்றி பெரும் அரசியல் ஜாம்பபான்களுடன் வளர்ந்தவர். அரசியல் காற்றைத்தான் அவர் சுவாசித்தார், அரசியலை பார்த்தபடியேதான் வளர்ந்தார்.

சீனாவின் துரோகம் நேருவிற்கு தாங்கமுடியாத வலி, அந்த சோகத்திலே இறந்தும்போனார். அதன் பின் வந்த இந்திரா பக்கத்துநாடுகளின் விஷயங்களை எல்லாம் அதிரடியாக கையாண்டதற்கு முதல்காரணம் துரோகி மாவோவும், ஏமாந்த நேருவும்.

இந்திரா இந்தியாவை ஆட்சிசெய்தவிதம் அனைவரும் அறிந்தது, அதனை மறுபடி விளக்கி சொன்னால், இதோ பாய்விரித்து படுத்துவிட்ட காங்கிரசை எழுப்பிவிட ஒருவன் வந்துவிட்டான் என அரசியலாக்குவார்கள், நமக்கு அவரின் அரசியல் வேண்டாம்,

இந்திராவின் பெரும் சாதனையான இந்திய உளவுதுறை வெற்றிகளை பார்ப்போம்.

இந்திய உளவுதுறை “ரா” அவர் காலத்தில்தான் தொடங்கபட்டது, அதுவரை இந்திய உளவு அமைப்பு இந்தியாவிற்குள் மட்டும் உளவுபார்க்கும் (தமிழக உளவுதுறை போல 🙂 ) , இந்திரா காலத்தில்தான் வெளிநாட்டு உளவு பார்க்கும் அமைப்பு கே.என்.காவ் தலமையில் தொடங்கப்ட்டது, அதன் பிராதான பாத்திரம் பி.ராமன் (இந்த தமிழர்தான் இந்திய உளவுதுறையின் பிராதான மூளை).

சில உணர்வாளர்கள் உண்டு, ஒரு நாள் நரசிம்ம”ராவ்” படத்தினை கடுமையாக திட்டிகொண்டிருந்தார்கள், விசாரித்ததில் ஈழகுழப்பத்திற்கு “ராவ்”வின் நடவடிக்கை காரணம் என எங்கோ படித்தார்களாம், அவர்கள் கண்ட “ரா” அப்படி.

சீனா இந்திராவின் முதல் எதிரி , காலம் மாறியது சோவியத் மாவோ தகறாறில் மாவோ தான் ஒரு கம்யூனிஸ்ட் என்பதையும் மறந்து அமெரிக்க பக்கம் சாய, இந்திரா ரஷ்ய பக்கம் சேர்ந்து அட்டகாசமான ஆட்டம் ஆரம்பித்தார்.

இந்திராவும் அமெரிக்க அதிபர் நிக்சனும் நடத்திய பனிப்போர் பிரமாதமானது, இனி ஒரு இந்தியபிரதமர் அப்படி சவால்விட‌முடியுமா என்றால் அது சந்தேகம். நிக்சனே வாய்விட்டு சொன்னார், “இந்திரா ஒரு அரசியல் சூனியக்காரி”

இந்திய உளவுதுறையின் பெரும் சாதனைகளில் ஒன்று வங்கப்போர், ஒரு பாகிஸ்தான் எல்லையே எந்நாளும் தொல்லை, இதில் கிழக்கில் ஒரு பாகிஸ்தான் என்றால் தாங்குமா? அவர்களுக்குள் பிணக்கு எழுந்தநேரம் முஜிபுர் ரஹ்மான் இந்தியாவின் செல்லபிள்ளையானார், குழப்பம் தலைதூக்க வைத்து இந்தியா ராணுவ நடவடிக்கை வரை வந்து, என்றும் பாகிஸ்தான் மறக்காதவாறு மரண அடிகொடுத்தது, பிண்ணனியில் இருந்தது ரா,

ராவின் அறிக்கைபெறும் தலைவர் பிரதமர் இந்திராகாந்தி

இந்திராவின் திறமையான ரா, மற்றும் அதிரடி ராணுவம் கொடுத்த அடியில்தான், பாகிஸ்தானுக்கும் அந்த வெட்டு தழும்பு, தினம் கண்ணாடி பார்த்து தடவி தடவி அழுகிறது அது.

அதோடு விட்டாரா பூட்டோவை கிட்டதட்ட மனோகரா சிவாஜி போல இழுத்து வந்து சிம்லா உடன்படிக்கை எனும் பாகிஸ்தான் தோல்வி பத்திரத்தில் கையெழுத்துவாங்கிய பெருமை அவருக்கே சேரும்.

பின்னர் எல்லையில் போக்கு காட்டிய சிக்கிம் மன்னரை மிரட்டி இந்தியாவோடு சிக்கிமை இணைத்ததில் ராவும் இந்திராவும் மகத்தான வெற்றி பெற்றார்கள்.

உச்சகட்டமாக நிக்சனின் எதிர்ப்பையும் மீறி, இந்தியாவில் “புத்தர் சிரித்தார்”, அந்த அணுகுண்டு சோதனைக்கு ஏன் அந்தபெயர்?, திபெத்தில் புத்தரை அழவைத்தார்கள் அல்லவா? சப்பைமூக்கர்கள், அந்த புத்தர் இந்தியாவின் அணுவலிமை கண்டு சிரித்தார். (காரணம் இல்லாமல் இந்தியா எந்தபெயரும் வைக்காது)

பின்னர் இந்திராவின் வரிசையில் பர்மா,மாலத்தீவு நாடுகளும் சேர்ந்தன, அல்லது நாங்கள் சமத்துபிள்ளை என ஓடிவந்து காலில் விழுந்தன. கிட்டதட்ட இந்திய துணைகண்டம் அதிகார உச்சம் பெற்றது.

இந்திய வலிமைய தாங்கமுடியாத நிக்சன் அரசாங்கம், பொருளாதார தடை எனும் இன்றைய அநியாயத்தை அன்று ரூபாய் மதிப்பு இறக்கம் என மறைமுகமாக பழிவாங்கிற்று, அதில் விழ ஆரம்பித்ததுதான் ரூபாயின் மாகாசரிவு.

அதனையும் சமாளித்தார் இந்திரா, தெற்கில் பெரும் ராஜதந்திரியான ஜெயவர்த்தனே. பாகிஸ்தான் வாழ்க,அமெரிக்க நிலைக்க என கோஷம்போட்டபொழுது ஈழபிரச்சினையில் தலையிட்டு அவரை கதறவைத்த வரலாறுகளும் உண்டு.

ஈழ தலைவர் அமிதலிங்கத்தை அழைத்து ஒரு குடியரசு விழாவில் தனதருகே அமரவைத்த அந்த‌ ராஜதந்திரம் ஒன்று போதும், எழுந்து நின்று கைதட்டலாம்.

(பின்னர் அமிர்தலிங்கம் எப்படி கொல்லப்ட்டார் என்பதும், இன்று அதே டெல்லியில் ராஜபக்சேக்கும் அவனது கொள்ளுதாத்தா தர்மபாலாவிற்கும் நடப்பதை நினைத்தால், அப்படியே அமேசான் காட்டுக்குள் ஓட தூண்டுகிறது)

இந்திய உளவுதுறைக்கு இரு பெரும் அவமானங்கள் உண்டு ஒன்று கனிஷ்கா விமானவெடிப்பை தடுக்கமுடியாமல் போனது இன்னொன்று ஈழபிரச்சினைய குழப்போ குழப்பு என குழப்பி தள்ளியது, இரண்டும் இந்திரா காலத்திற்கு பிந்தியவை.

இந்திராவின் காலத்தில்தான் “ரா” பெரும் நடவடிக்கைகளில் வெற்றிமேல் வெற்றிபெற்றது, அங்குதான் இந்திராவின் வலிமையும், அவரின் ஆளுமையும் தெரிகிறது.

இவ்வாறாக சர்வதேசத்தில் உயரபறந்த இந்திரா உள்நாட்டு மக்களால் கொல்லபடும் நிலைக்கு எப்படி தள்ளப்ட்டார் என்பதுதான் சோகமான வரலாறு
அதனை ஒரு இந்தியராக எல்லோரும் அறிந்துகொள்ளவேண்டியது.

வருவார்..

 

பேய் என பெய்யட்டும் மழை

கமலஹாசன் தேவர் மகன் என்றாலோ, சண்டியர் என படம் எடுத்தால் குதிக்கும் கிருஷ்ணசாமியினை தேவர் ஜெயந்தி அல்ட்ராசிட்டிகளில் காணவே முடியாது

மிஸ்டர் கி.சாமி? தமிழகத்தில் இருக்கின்றீரா இல்லையா?


ஸ்பெக்ட்ரம் தீர்ப்பு வர உள்ளது, திமுக ஒரு ஊழல் கட்சி : அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

இன்னும் வராத தீர்ப்பை விடுங்கள், வந்த தீர்ப்பு உங்கள் கட்சி தலைவி ஜெயலலிதா குற்றவாளி என்றும், நீங்கள் கும்பிட்ட சசிகலா அடுத்த குற்றவாளி என்றும் சொல்லிவிட்டதே அய்யா..

தீர்பளிக்கபட்ட அதிமுக ஊழக் கட்சியா, தீர்ப்பே வராத திமுகவா?

இவ்வளவு அறிவோடு இருக்கும் நீங்கள் தயவு செய்து இந்த பாழ்பட்ட தமிழகத்தில் இருக்காதீர்கள், உங்கள் அறிவுக்கு டிம்பிடம் அல்லது புட்டினீடம்தான் நீங்கள் இருந்தாக வேண்டும்


தமிழனுக்கு மதமில்லை என சொன்னவனில் பாதிபேர் முருக பக்தரான பசும்பொன் தேவருக்கு ஜே என சொல்லிகொண்டிருக்கின்றான்

மீதிபேர் மிக சிறந்த சிவபக்தனும், சிவனுக்கு பேராலயம் எழுப்பியவருமான ராஜராஜசோழனின் சதயவிழாவினை கொண்டாடிகொண்டிருக்கின்றான்.

இவை இன்றைய காட்சிகள்

நாளையே தமிழனுக்கு மதமில்லை, அது ஆரிய புரட்டு என கிளம்பியும் விடுவான் என்பது வேறுவிஷயம்.


ஊரில் இருந்து வரும் செய்திகளில் மழை பொழிகின்றது எனும் செய்தி கொடுக்கும் மகிழ்ச்சியினை எந்த செய்தியாலும் கொடுக்க முடியாது.

மழை அவ்வளவு மகிழ்ச்சியானது,

ஒரு துளி நீருக்கு வானத்தை பார்த்து நின்றோ அல்லது 800 அடி தோண்டி நின்றால் தவிர அந்த துயரத்தை உணரமுடியாது.

அங்கே மழையின்றி தவிக்கையில், மலேஷிய மழையினை ரசிக்க மனம் வரவில்லை.

இனி உற்சாகமாக ரசிக்கலாம்.

பேய் என பெய்யட்டும் மழை.


 

மதுரை விமான நிலையத்துக்கு தேவர் பெயர் சூட்ட நடவடிக்கை: மு.க.ஸ்டாலின்

Image may contain: sky and outdoor

மதுரை விமான நிலையத்துக்கு தேவர் பெயர் சூட்ட நடவடிக்கை: மு.க.ஸ்டாலின்

அதனை விட மகா முக்கியமான விஷயம் திருச்சி விமான நிலையத்திற்கு சந்தண கடத்தல் வீரப்பன் பெயரையோ அல்லது பூலன் தேவி பெயரையோ சூட்டுவது

காரணம், அப்படிபட்ட மகா கொள்ளைகாரர்கள் அங்குதான் இருக்கின்றார்கள், மிக பெரும் கொள்ளைகள் அங்குதான் நடக்கின்றன.

 

குஷ்பூ எந்த மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றார்

தலைவி எந்த மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றார் என்பது இன்னும் வெளியிடபடவில்லை

தமிழிசை போன்ற வெளிகட்சியினர், சில உட்கட்சியினர் இன்னும் ஏராளமான எதிரிகளை கொண்ட தலைவி குஷ்பு தங்கியிருக்கும் மருத்துவமனை ரகசியமாக‌ இருப்பது நல்லது என சங்கம் திருப்தி கொள்கின்றது

ஒருவேளை அந்த மருத்துவமனை பெயர் அறிவிக்கபட்டால், திரளும் கூட்டத்தினை கட்டுபடுத்தி தகுந்த பாதுகாப்பினை கொடுக்க வேண்டியது அரசின் கடமை என எச்சரிக்கின்றோம்.

தேவைபட்டால் வெளிநாட்டு மருத்துவம் அளிக்கவும் சங்கம் கோரிக்கை வைக்கின்றது.

தலைவி நலம்பெற்று திரும்பும் வரை, நீரும் அருந்தா உண்ணாவிரத்ததை சங்கத்தார் மேற்கொண்டு உலகெங்கும் பிரார்த்தித்து வருகின்றனர்.

மகா முக்கியமாக தலைவிக்கு வலிக்காமல் சிகிச்சை அளிக்கும்படி மருத்துவர்கள் கேட்டுகொள்ளபடுகின்றார்கள்

ராஜராஜ சோழன்

Image may contain: 1 person

எங்கோ பாய்ந்துகொண்டிருந்தது காவேரி, அதனை தஞ்சைக்கு திருப்பினான் கரிகாலன்

கரிகாலன் செய்து கொடுத்த அந்த பெரும் காரியத்தில் சோழநாடு செழித்தது, நிரந்தர செழிப்பு அது. அந்த செழுமை கல்வி, கலை, வீரம் என எல்லாவற்றிலும் தஞ்சையினை முன்னுறுத்தியது

அதனால் எழுந்த செழிப்பான சோழ நாட்டில் பிறந்தவன் தான் ராஜராஜ சோழன்

ஒரு நாட்டின் செழுமை எப்படி நல்ல விஷயமோ, அதன் ஆபத்தும் அதுவேதான். எப்பொழுதும் எதிரிகள் தனியாகவோ, கூட்டமாகவோ பாய கூடும்.

அந்த ராஜ ராஜன் இதில்தான் உருவானான். அக்காலம் பாண்டியர், சிங்களர் இன்னும் சாளுக்கிய மன்னர்கள் என பல அச்சுறுத்தல் இருந்த நேரம் ராஜராஜன் முடிசூடினான்

அவனிடம் அன்றே எல்லா படையும் இருந்தது, கப்பல் படை இருந்தது, நாவாய் படை என்று அதற்கு பெயர், இன்று உலகம் கொண்டாடும் நேவி எனும் வார்த்தை அதிலிருந்தே வந்தது

சோழ்நாட்டை காக்கவும், சைவ சமயத்தை பரப்பவும் பெரும் போர்களை அவன் தொடுத்தான். பாண்டிய நாடு முதல் சேரநாடு வரை அவன் கட்டுபாட்டில் இருந்தது

சேரநாட்டில் காந்தளூர்சாலை என்றொரு இடம் இருந்திருக்கின்றது, அங்கு பகைவரின் கப்பல்கள் எல்லாம் வந்திருக்கின்றன, அங்கு சென்று அந்த கடற்கலன்களை எல்லாம் அழித்திருக்கின்றான், இது அவனது மெய்கீர்த்தியில் இருக்கின்றது

பாண்டியரும் சிங்களரும் சேர்ந்து தொடுக்கும் போர் அபாயத்த்தில் இருந்து தப்பிக்க பெரும் கடற்படையுடன் சிங்கள நாட்டைதாக்கி இருக்கின்றான், அநுராதாபுரம் எனும் சிங்கள நகரம் அவனால் நொறுக்கபட்டிருக்கின்றது

வடக்கே கலிங்கம் வரை அவன் கைபற்றியிருக்கின்றான்.

No automatic alt text available.ராஜராஜன் காலம் புத்த மதத்தை வீழ்த்தி சைவ மதம் செழித்த காலம், தான் கைபற்றிய நாடுகளில் எல்லாம் சைவ மதம் வளர்த்திருக்கின்றான்

இன்றைய இந்தோனேஷியா , மலேசியா , கம்போடியா நாடுகள் அடங்கிய அன்றைய ஸிரி விஜயா நாட்டின் மீதும் தன் மகன் தலமையில் பெரும் போர் புரிந்து வென்று வெற்றிகொடி நாட்டி, சைவ மதம் வளர்த்திருக்கின்றான்

அவனது கடற்கலன்களும், அவனின் போர்முறையும் அவனுக்கு அப்படி பெரும் வெற்றிகளை கொடுத்திருக்கின்றன‌

உலகில் தோல்விபெறாத அரசர்கள் வரிசையில் ராஜராஜனின் பெயரும் உண்டு, ஆனால் மேல்நாட்டு வரலாற்று ஆய்வாளர்கள் அலெக்ஸாண்டர், சீசர் என வேறு வரிசை வைத்திருப்பார்கள் வைக்கட்டும்.

சிவன் மேல் தீராதபற்றுகொண்ட ராசராசன், தன் வெற்றிக்கெல்லாம் சிவனே காரணமென்றும், சிவனுக்கு காலத்தால் அழியாத ஆலயம் கட்டவும்ட் திட்டமிட்டான்.

ஆலய பணிகளில் சிவனடியாரான கரூர் சித்தரைத்தான் முன்னிறுத்தினான், அதுதான் அவன் அடியார்களை அற்புதமாக மதித்த விதம்.

பல நாடுகளில் திரட்டபட்ட செல்வமும், பல மன்னர்கள் கொடுத்த வரியும், அவன் அடிமைகளாக பிடித்த எதிரி நாட்டு வீரர்களும் அதற்கு பயன்பட்டன‌

காலத்தை வென்று நிற்கும் கற்காவியமான பெரிய கோவில் அவனால்தான் கட்டபட்டது, முழுக்க முழுக்க கல்லான் ஆன கோவில் அது.

இத்தனை பெரிய கற்களை எப்படி செதுக்கினார்கள், எப்படி கொண்டு வந்தார்கள், எந்த ஆயுதத்தால் செதுக்கினார்கள், எத்தனை பேர் வேலை செய்தார்கள் என்பதை கண்டவரும், எழுதி வைத்தவரும் எவருமில்லை, எல்லாம் யூகமே

ஆனால் அப்படி அற்புதமாக, பெரும் அதிசயமாக கட்டியிருக்கின்றான் என்பது நம் கண்முன்னே நிற்கின்றது

கற்தூண்கள் உச்சியில் பாரம் இல்லையென்றால் விலகிவிடும் என்பதற்காக பெரும் கல்லை உச்சியில் நிறுத்தி , ஆலயத்தை நிலைபெற்றிருக்க செய்வதில் நிற்கினது அவனின் கட்டட கலை அறிவு

ஆலய பாதுகாப்பும் அதுதான், எவனாவது அழிக்க முயன்றால் ஒரு தூணை தொட்டாலும் முடிந்தது விஷயம்.

அந்த கோவிலில்தான் அவன் ஒரு மூலையில் தங்கி அவை நடத்தியிருக்கின்றான், அக்கோவிலை சுற்றி இருக்கும் அகழி முதலானவை அதனைத்தான் சொல்கின்றன, அவனுக்கு எல்லாமுமாக இருந்தது அந்த ஆலயம், அவ்வளவு நேசித்திருக்கின்றான்

தன்வாழ்வின் மிகபெரும் வெற்றியாக அவன் அந்த அலயத்தைத்தான் கருதியிருக்கின்றான், அக்காலங்கள் வித்தியாசமானவை

அதாவது அந்நியநாட்டு படைகள் முதலில் தாக்குவது அந்த ஆலயத்தைத்தான், காரணம் இந்திய முறைபடி அளவுக்கு அதிகமான செல்வம் அங்குதான் சேர்ந்திருக்கும்

அதனை எண்ணித்தான், தன் காலத்திற்கு பின்பு என்றாவது எவனாவது அதனை அபகரிக்கும் எண்ணத்தில் வந்தால் அவன் அழிந்து போகவேண்டும் என்று சில வரங்களை அவன் ஆலயத்தில் நிறுத்தியதாக சொல்லபடுகின்றது

நம்பாதவர்கள் விட்டுவிடலாம், ஆனால் நானே அதிபதி என சொல்லி அங்கு சென்ற அரச பிரதிநிதிகள், ஏன் மக்களாட்சி பிரதிநிதிகள் , நாத்திகர்கள் எல்லாம் கடும் அனுபவத்தில் அதன் பின் உணர்ந்திருக்கின்றார்கள்

அப்படி தன் மூச்சே அந்த ஆலயம் என வாழ்ந்திருக்கின்றான் ராச ராசன்

அக்கோவில் சென்டிமென்ட் பிற்காலமும் தொடர்ந்திருக்கின்றது, நாயக்க மன்னர்கள் ஆட்சியிலும், மாராட்டியர் ஆட்சியிலும் ஆட்சியாளர்கள் அதனை ஒதுக்கியே வைத்திருக்கின்றார்கள்

Image may contain: sky and outdoorஎல்லா கோவிலிலும் உருண்டு புரண்ட நாயக்கர்கள் தஞ்சை ஆலயத்தில் ஒரு வகையான விலகலை கடைபிடித்திருக்கின்றார்கள்

பின் வவ்வால்கள் கூடாரமாக ஆகிய ஆலய பகுதிகளில் சில வாவ்வால் கழிவுகளால் ஆன சுவர்களால் பிரிக்கபட்டன, ஆம் வாவ்வால் கழிவு சுவராகும் அளவிற்கு கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டார்கள்.

வெள்ளையன் ஆட்சியில் இந்நாட்டிற்கு வந்த ஐரோப்பியன் ஒருவந்தான் உள்ளே புகுந்து தேடினான், அந்த வவ்வால் உருவாக்க்கிய சுவரை எல்லாம் இடித்து உள்சென்றான், பல கல்வெட்டுக்களை படித்தான்

அதில்தான் இக்கோவிலை கட்டியது ராஜராஜன் என்றிருந்தது, அதில் இருந்துதான் தமிழகம் அக்கோவிலை கட்டியது அவன் என நம்புகின்றது, அவன் ஆலய கல்வெட்டுகளே அவன் வரலாற்றினை சொன்னது.

அதுவும் இல்லையென்றால் அது ஏலியன்கள் கட்டிய ஆலயமாக மாறியிருக்கும்

அவன் மன்னர்களுக்கு எல்லாம் மன்னராக இருந்ததால் அவன் ராஜ ராஜன் என அழைக்கபட்டான், மற்றபடி அவன் இயற்பெயர் என்பது மிக சரியாக தெரியவில்லை.

(ராஜராஜன் வரலாறே இப்படி சிரமபட்டு வந்த நிலையில்தான் சிலர் அவன் எங்கள் சாதி எனவும் சொல்கின்றார்கள், அதனை விட அபத்தம் இருக்க முடியாது)

ஒரு விஷயம் உறுதியாக சொல்லலாம், தமிழர்களின் தனிபெரும் அரசன் ராஜராஜன், தமிழர்களின் தனிபெரும் அடையாளம் அந்த கோவில்

எகிப்தியருக்கு பிரமிடு போல, யூதர்களுக்கு சாலமோனின் ஆலயம் போல, தமிழரின் பெருமையினை சொல்வது அக்கோவில்

தமிழக அரசின் சின்னமாக நிச்சயம் அதுதான் அறிவிக்கபட்டிருக்க வேண்டும், ஆனால் பிற்காலங்களில் மாறிற்று. அதற்கு ஆயிரம் காரணங்கள்

தமிழகம் கண்ட அந்த தனிபெரும் அரசனுக்காக கலைஞர் கருணாநிதி ஆலயத்தில் சிலை நிறுவ விரும்பினார். கலைஞர் எது செய்தாலும் எதிர்ப்பது டெல்லியின் கொள்கை என்பதால் , அது தொல்பொருள் துறையின் கட்டுபாடு என சொல்லி மறுக்கபட்டது

அதனால் ஆலயத்தின் வெளியே அவன் சிலையினை நிறுவினார் கலைஞர்

தான் பெற்ற முடிகளை விட, தான் பெற்ற செல்வங்களை விட, தான் பெற்ற அரசுகளை விட தன்னால் கட்டப்ட்ட ஆலயமே சிறந்தது என உலகிற்கு தன் சிவபக்தியினை விட்டு சென்ற ராஜராஜன் அந்த சிலை வடிவில் அந்த ஆலயத்தை அனுதினமும் வணங்கிகொண்டே இருக்கின்றான்

ஐப்பசி மாதம், சதய நட்சத்திரத்தில் அவன் அவதரித்தான் என்கின்றது குறிப்பு

அப்படி இன்று அந்த தமிழகத்து அலெக்ஸாண்டருக்கு பிறந்தநாள்

அக்கால காவேரியும், செழித்த சோழநாடும், தென்கிழக்காசியா எங்கும் பறந்த சோழ புலிகொடியும் இன்னும் பிற காட்சிகளும் நினைவுக்கு வருகின்றன‌

அந்த மாபெரும் தமிழ் சாம்ராஜ்யத்தின் 
அடையாளமாக எஞ்சியிருப்பது இப்போது தஞ்சாவூர் ஆலயம் மட்டுமே.

வரலாற்றில் பெரும் அடையாளம் மிக்கவனும் , உலகின் மிக வலுவான கப்பல் படையினை முதலில் நிறுவியவனும், தென்கிழக்கு ஆசியாவினை ஆண்ட கடல்ராசனும் ஆன அந்த வீர தமிழனுக்கு பிறந்தநாள் மரியாதைகளை செலுத்துவதில் ஒவ்வொரு தமிழனும் பெருமையடைகின்றான்

 
%d bloggers like this: