சமத்துவத்தையும், சம தர்மத்தையும் விரும்பும் எல்லோரும் கொண்டாடலாம்

No automatic alt text available.

அந்த அரேபியாவின் மக்கள் சிதறிகிடந்தனர், அவர்களை வழிநடத்தவோ அவர்களுக்கு நல்வழிபோதிக்கவோ யாருமில்லை. யூதர்கள் ஒருவித உயர் மனப்பான்மையில் அவர்களை தாழ்த்தித்தான் வைத்திருந்தனர். அம்மக்களை ஒருங்கிணைக்கவோ அந்த மூர்க்கமான சமூகத்தில் அமைதி கொண்டுவரவும் யாருமில்லை

இந்ந நிலையில்தான் இறைவனின் தூதனாக நபிபெருமான் அவதரித்தார், நிச்சயமாக அவர் அறிவிக்கபட்டு இந்த உலகிற்கு கொடுக்கபட்டவர்

அவர் இளமையிலே தனக்கான பாதையினை தேர்ந்தெடுத்தார், அந்த சமூகத்தின் தனக்கான தூயபாதையினை தேர்ந்தெடுத்தார், முதலில் அவரை விரட்டினாலும் பின் சமூகம் அவரை ஏற்றுகொண்டது

அவர் பின் அணிதிரண்டது, அந்த மக்களுக்கு நல்வழியினை போதித்தார், அம்மக்கள் அவரை கடவுளின் தூதராக எண்ணி அவருக்கு அஞ்சி நடந்தனர்

அவரிடம் மிக மிக நல்ல விஷயம் ஒன்று உண்டு, எந்த மதத்தையும் அவர் வெறுக்கவில்லை. யூதம் கிறிஸ்தவம் என எல்லாமதத்தின் கொள்கைகளையும் ஏற்றுகொண்டுதான் மார்க்கத்தை உருவாக்கினார்

யூதர்கள் அவரை விரட்டினார்களே ஒழிய அவர் யூதர்களை வெறுக்கவில்லை, மாறாக கடவுள் எல்லோருக்கும் பொதுவானவர் யூதர்களுக்கு மட்டுமல்ல என்பதில்தான் அவர் யூதர்களால் ஒரு மாதிரியாக பார்க்கபட்டார்

நிச்சயமாக சொல்லலாம், இவ்வுலகிற்கு மிக தேவையான , மானிடம் மானிடமாக வாழும் கருத்தைத்தான் அவர் சொன்னார், அதில் சில சர்ச்சைகள் வருமாயின் அது அவர் பின்னால் வந்தவர்கள் உருவாக்கிகொண்டதே தவிர நபிபெருமான் சொன்னது அல்ல‌

இந்த உலகின் பெரும் மாறுதல்களை கொண்டுவந்தவரகள் என்ற வரிசையில் நபிபெருமானுக்கு நிச்சயம் பெரும் இடம் உண்டு, அரபிய பகுதியின் தலைவிதியினையே மாற்றியவர் அவர்

அவரின் வழிவந்த கலீபாக்கள் ஐரோப்ப்பா முதல் இந்தியா வரை மிக பெரும் சாம்ராஜ்யத்தை நிறுவினார்கள், அது மிக பெரும் சொர்க்கமாக இருந்திருக்கின்றது, மிக மிக நியாயமான ஆட்சி இறைவன் பெயரால் நடந்திருக்கின்றது

பல்லாண்டுகள் அது நீடித்தும் இருக்கின்றது , அதன் மூலம் உலகெல்லாம் பரவியும் இருக்கின்றது

இஸ்லாம் என்ன கொண்டுவந்தது என கேட்டால் தயக்கமின்றி சொல்லலாம், அது சமத்துவத்தை கொண்டு வந்தது, சமதர்மத்தை கொண்டு வந்தது, ஆண்டவன் முன் எல்லோரும் சமம் எனும் ஒரே சிந்தனையினை கொண்டுவந்தது

இந்தியாவில் சாதி போன்ற கொடுமைகளை ஒழித்ததில் இஸ்லாமுக்கும் பங்கு உண்டு. இஸ்லாம் ஜாதியினை வென்றது ஒத்துகொள்ளத்தான் வேண்டும்

தமிழகத்தில் ஜாதி முன் தோற்ற மதம் எது தெரியுமா? அது கிறிஸ்தவம், அதனால் ஜாதியினை களைய முடியவே இல்லை ஆனால் இஸ்லாம் அட்டகாசமாக ஒழித்தது

கடவுளின் கடைசி தூதராக வந்து வாழ்ந்து போதித்த நபிபெருமானுக்கு பிறந்த நாளாக மிலாது நபி கொண்டாடபடுகின்றது

மிலாது என்றால் பிறப்பு என பொருள், நபி பிறந்த நாள் அது

கிறிஸ்மஸ் போலவே மிலாது நபி கட்டாயம் கொண்டாட வேண்டிய பண்டிகை அல்ல, கிறிஸ்துவும் நபியும் தங்கள் பிறந்தாளை கொண்டாட சொல்லவே இல்லை

ஆனால் நல்லவர்கள் பிறந்தநாளை கொண்டாடாவிட்டால் என்ன நன்றிகடன் என்ற வகையில் உலகம் கொண்டாடுகின்றது

மனிதனை மனிதனாக நேசித்த, கடவுளின் பால் மக்கள் மனதை திருப்ப உழைத்த, இந்த உலகம் மிக அமைதியாக வாழ பல உன்னத கருத்துக்களை சொல்லிவிட்டு சென்ற அந்த மாமனிதனின் பிறந்தநாளை இஸ்லாமிய பெருமக்கள் மட்டுமல்ல‌

சமத்துவத்தையும், சம தர்மத்தையும் விரும்பும் எல்லோரும் கொண்டாடலாம்

 

அகிலா என்பவரின் சிக்கல் பெரும் சிக்கலாகின்றது…

இந்த அகிலா என்பவரின் சிக்கல் பெரும் சிக்கலாகின்றது, சிலர் உச்சநீதிமன்ற தீர்ப்பினை விமர்சித்துகொண்டிருக்கின்றார்கள்

அவருக்கு பிடித்தமான மதத்திற்கு அவர் மாறியிருக்கின்றார், அப்பொழுதுதான் வழக்குகள் பாய்ந்திருக்கின்றன, வழக்கு நடந்துகொண்டிருக்கும்பொழுது இதோ என் கணவர் என்று ஒருவருடன் நீதிமன்றம் ஏறியிருக்கின்றார்

நீதிமன்றம் எந்த அடிப்படையில் வழக்கு தொடுக்கபட்டதோ அந்த அடிப்படையில் அவர் படிப்பினை தொடரலாம் என தீர்பளித்திருகின்றது, திருமணம் எல்லாம் அதற்கு பின்பு நடந்திருக்கின்றது

ஆனால் ஹதியாவோ நான் சுதந்திரமாக இல்லை, என சொல்லிகொண்டிருக்கின்றார்

பெரும் குழப்பமாகவும், ஒரு வித சிக்கலாகவும் நிலமை சென்று கொண்டிருக்கின்றது

இப்பொழுது அம்மணிக்கு என்ன சுதந்திரம் கெட்டுவிட்டது என தெரியவில்லை, படித்துகொண்டிருக்கும் பெண்ணுக்கு தொடர்ந்து படிக்க வாய்பளிக்கபட்டிருக்கின்றது படித்து முடித்து வந்து அடுத்த 
விஷயத்தை பார்க்கலாம்

இந்த வழக்கு கொஞ்சம் சர்ச்சையானது, அதாவது அந்த பெண் இஸ்லாம் மதத்திற்கு மாறிய பின்புதான் திருமணம் செய்திருக்கின்றார், ஆக இது மதத்திற்கு பின்பான காதல் என்ற வகையில் வருகின்றது

அப்பெண்ணிற்கு மதம் முக்கியமென்றால் மதத்தில் இருக்கலாம், காதல் முக்கியமென்றால் மதத்தை தூர எறிந்துவிட்டு இருவருமே புத்த மதத்திற்கொ இல்லை வேறு மதத்திற்கோ மாறி தொலையலாம்

இந்த சமூகத்தில் அதுதான் யதார்த்தம், இல்லாவிட்டால் அவர் கொஞ்சநாளைக்கு பரபரப்பு செய்தியாக இருப்பாரே அன்றி ஒரு நாளும் நிம்மதியாக இருக்க போவதில்லை

ஆனால் இந்திய குடிமகளாக அவரின் அடிப்படை உரிமைகளை காக்க நீதிமன்றம் செயல்பட வேண்டும் என்பதில் மாற்று கருத்தே இல்லை

இது மதசார்பற்ற நாடு என்பதால் யாரும் எந்த மதத்தையும் பின்பற்ற முழு உரிமை உண்டு. இந்நாட்டின் பலம் அது இன்னொரு வகையில் குழப்பமும் பலவீனமும் அதுவே

இங்கே இப்படி ஒரு சிக்கல் என்றால் வடக்கே ஒரு இந்துபெண்ணும் இஸ்லாம் பையனும் காதலிக்கின்றார்களாம், நீ இந்துவாக வா உன்னை ஏற்றுகொள்கின்றேன் என காதல் தியாகபோர் (அதாவது லவ்ஜிகாத்தின் எதிர்பதம்) நடத்துகின்றார் இந்த அம்மணி

அட இது புதுசா இருக்கே என மொத்த புது இந்தியாவும் ஆச்சரியத்தில் பார்த்துகொண்டிருக்கின்றது, எச்.ராசா வகையறா எல்லாம் “இந்துக்களுக்கு அறிவும் மானமும் வந்திருச்சி டோய்” என குதித்துகொண்டிருக்கின்றன‌

இன்னும் என்னென்ன விசித்திர மத விளையாட்டுகள் எல்லாம் இங்கு நடக்குமோ தெரியவில்லை

முதலில் இந்த காதல் என்பதே மகா அற்பமானது, அதில் மதத்தை கலந்து விளையாடுவது மகா அற்பமானது.

ஆனால் இதில் பாதிக்கபடுவது யாரென்றால் சாட்சாத் பெண்கள் தான், அறியா வயதில் அகிலா போல ஓடிவிடுகின்றார்கள்

அதன் பின் அங்கு தாய், இங்கு இவர்கள் என துடிக்கின்றார்கள். ஒரு கட்டத்தில் கசப்பு மறைந்து பாசம் ஓங்கினாலும் அங்கே இருந்து வர தாயினை அவர்கள் மதம் தடுக்கின்றது

இங்கே இருந்து செல்ல கணவனின் கண்டிப்பு தடுக்கின்றது

அங்கே தாயும், இங்கே மகளும் அழுது தொலைக்கின்றார்கள், சில இடங்களில் கண்கூடாக பார்த்திருக்கின்றோம்

இந்த காதலில் விழுந்து எதற்கோ துணிந்து மத சிக்கலில் மாட்டி கடைசி வரை கண்ணீரில் அழப்போவது பெண்கள்தான், மதங்கள் பெண்களுக்கு கொடுக்கும் பெரும் தண்டனை அது.

கம்யூனிச உலகிற்கு எவ்வளவு பெரும் இழப்பு இது????

சோவியத் கால விஷயங்களை படித்தால் சில விஷயங்கள் மகா ஆச்சரியமாக இருக்கின்றன, அந்த நாடு அப்படி இருந்திருகின்றது

நிலம் எல்லாம் அரசின் வசமம், ஒரு விவசாயி அரசிடம் அனுமதிபெற்று விவசாயம் செய்யலாம். ஆனால் நிலத்தை சொந்தம் கொண்டாடவே முடியாது

இது என் பூர்வீகம் எனக்கு தாருங்கள் என்றேல்லாம் கேட்கவே முடியாது, கேட்டால் தரவே மாட்டார்கள், உழைக்கலாம் அதோடு சரி

இதனை படிக்கும்பொழுது மகா ஆச்சரியமாக இருந்தது , இந்தியாவிலே இந்த சோவியத் வாழ்வினை நான் வாழ்ந்திருக்கின்றேன்

இந்த சோவியத் தத்துவத்தைத்தான் என் பெரியப்பனும் சொல்லிகொண்டிருந்தான், பாட்டனார் நிலத்தை பிரிக்கவே மாட்டேன் முடிந்தால் அதோ அந்த தொங்கல் வயலில் விவசாயம் செய், முடிந்தால் பிழைத்துகொள் , செத்தால் சந்தோஷம்

பாகபிரிவினை எல்லாம் ஒரு காலமும் நடக்காது என சொல்லிகொண்டிருந்தான்

இது பொது சொத்து நானே நிர்வகிப்பேன் உனக்கு அதோ ஒரு மூலை, அதில் முடிந்தால் வாடகைக்கு விவசாயம் செய், உரிமை எல்லாம் கிடைக்கவே கிடைக்காது என்பதே இரும்பு கொள்கை என நிலைத்து நின்றார்

எந்த சொத்து என்றாலும் இதேதான் அவரின் முடிவு, கத்தியும் கதறியும் மனிதர் அசைந்தார் இல்லை.

அம்மனிதனை நினைத்து முன்பெல்லாம் ஆத்திரம் வந்தது

இப்பொழுதுதான் புரிகின்றது, மனிதன் மாபெரும் கம்யூனிஸடாக வாழ்ந்திருக்கின்றான்

அந்த அளவு லெனினிய மார்க்சிய தாக்கம் அவனுக்குள் இருந்திருக்கின்றது, எப்படி என்றுதான் தெரியவில்லை படிக்காத மேதை போலிருக்கின்றது

ஒரு சிறிய கிராமத்தில் யாருக்கும் தெரியாமல் வாழ்ந்ததால் இந்த உலகம் மிக பெரும் கம்யூனிச சிந்தனையாளனை அடையாளம் கண்டுகொள்ளாமல் இருந்திருக்கின்றது

கம்யூனிச உலகிற்கு எவ்வளவு பெரும் இழப்பு இது????

லெனின், மாவோ, காஸ்ட்ரோ வரிசையில் வரவேண்டிய ஒரு பொதுவுடமைவாதி வள்ளியூர் பக்கம் ஒரு சிறிய கிராமத்தில் முடங்கியது வரலாற்று சோகம்.

முள்ளிவாய்க்கால்தான் நடக்கும்

ஒரு சிறிய தீவின் மிக சிறிய போராளி கூட்டத்தின் தலைவன், இந்தியா எனும் பெருநாட்டில் இருந்துகொண்டு எவ்வளவு தலைக்கணமான பேச்சு

இந்த தலைக்கணம்தான், இந்த மண்டைகர்வம் தான் அவ்வளவு அழிவுக்கும் காரணம்

ஏதோ நிதானமாக போகின்றாராம் இல்லாவிட்டால் இந்தியாவினையே அழித்துவிடுவது போல பேசிகொண்டிருக்கின்றா, அருகில் இருந்து வீரமணி ஆமாம் போடுகின்றார்

முரண்டு பிடித்தால் முரண்டு பிடிப்பாராம் பின் என்ன நடக்கும்?

முள்ளிவாய்க்கால்தான் நடக்கும்


http://www.newkuppilan.com/ பிரபாகரன் 80 களில் தமிழ்நாட்டில்…
YOUTUBE.COM


 

தன் பிள்ளையினை விட்டு விட்டு ஊரான் பிள்ளையினை….

என்னய்யா இது?

அங்கே ஒரு பெண் நானே மகள் என சொல்லிகொண்டிருக்க இங்கே 28 வயதில் சுதாகரன் என்பவரை தத்தெடுத்து வளர்த்திருக்கின்றது அந்த அம்மா, அவருக்கு உலகம் வியக்க ஒரு திருமணம் வேறு.

அதோடும் இல்லை இந்த விவேக் என்பவரை குழந்தையாய் இருந்தபொழுதே வளர்த்ததாம்

இது போக அம்மா என்னை வளர்த்தார்கள் என எல்லா அமைச்சர்களும்ம் சொல்லிகொண்டே இருக்கின்றார்கள்

ஆக தன் பிள்ளையினை விட்டு விட்டு ஊரான் பிள்ளையினை எல்லாம் ஊட்டி வளர்த்திருக்கின்றது

ஊரான் பிள்ளையினை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானாய் வளரும் என அப்பாவியாக நம்பியிருக்கிறது அந்த அம்மா

மோடி தன் காதுகளை பொத்திகொள்வார்

Image may contain: 1 person, glasses

ஏதோ காங்கிரஸ் ஆட்சியில் குஜராத் நாசமானதை போலவும், மோடி வந்துதான் அதனை காப்பாற்றியது போலவும் பிம்பம் காட்டிகொண்டிருக்கின்றார்கள்

அதில் ஒன்றுதான் இந்திரா மோர்பி பக்கம் வந்தபொழுது மூக்கை மூடிகொண்டு வந்தார் என்பது

அது ஆகஸ்டு 11/1979 அன்று பெரு வெள்ளத்தில் அப்பகுதி சிக்கி இருந்தது, பெரும் அழிவு கால்நடைகள் செத்து துர்நாற்றம் வீசியது

Image may contain: one or more people and people sittingஅதனை நேரில் காண சென்ற இந்திரா மூக்கை மூடிகொண்டார், அவர் என்ன யாராக இருந்தாலும் மூக்கை மூடத்தான் செய்வார்கள்

அப்படி இயற்கை சீற்றத்தால் நடந்த விஷயத்தை ஏதோ குஜராத்தினை காங்கிரஸ் நாற விட்டிருந்தது போலவும், இந்திராவே அங்கு வர விரும்பாதது போலவும், மோடிதான் அதனை காப்பாற்றியது போலவும் கட்டு கதைகள்

உண்மையில் குஜராத் மேம்பட்ட மாநிலம், அன்றே உழைப்ப்பும் அமைதியும் நிரம்பிய மாநிலம். அன்றே குஜராத் கப்பல்கள் ஆப்ரிக்கா எல்லாம் சென்றிருக்கின்றன, அங்கு தவித்துகொண்டிருந்த வாஸ்கோடகாமாவினை இங்கு அழைத்து வந்ததே குஜராத் கடலோடி என்கின்றது வரலாறு

அந்த அளவு தொழில் முனைவு மிக்கவர்கள்

அந்த குஜராத்தினை மோடி அல்ல லல்லு பிரசாத் அவரின் மனைவி அட அவ்வளவு ஏன்? நமது ஊர் பழனிச்சாமியிடம் கொடுத்தால் கூட நன்றாகத்தான் ஆள்வார்கள், அங்குள்ள யதார்த்தம் அது

சரி ஒரு வாதத்திற்கு குஜராத்தை மோடி முன்னேற்றினார் என வைத்துகொண்டாலும் கூட, 3 ஆண்டு ஆட்சியில் இந்தியாவினை என்ன செய்துவிட்டார்? ஏன் பெரும் முன்னேற்றம் என எதுவுமில்லை

இதனைபற்றி பேசினால் இந்திரா மூக்கை பொத்தினார் என கதையளக்கும் மோடி தன் காதுகளை பொத்திகொள்வார்

 

ஒரே ஒரு குஷ்பு

குஷ்புவின் பிள்ளைகள் அவரை போல் இல்லை என சிலர் சொல்லி சந்தோஷபடுகின்றார்களாம்

வரலாற்றில் சிலர்தான் பெரும் அடையாளமிடுவார்கள், அவர்களின் வாரிசுகள் அவர்களை போல வருவதே இல்லை, சாலமோன், ராஜேந்திரசோழன் போன்ற மிக சிலர் விதிவிலக்கு

அதிலும் சாலமோன் மகன் அவரை போலவா ஞானத்தோடு இருந்தான்? இல்லை

கிளியோபாட்ராவின் வாரிசுகளில் ஒன்றாவது அவளை போல் இருந்ததா?

கண்ணதாசனின் பிள்ளைகள் அவரை போலவா எழுதினார்கள்?

இல்லை, காரணம் தனித்த அடையாளத்தோடு அவர்கள் வரலாற்றில் நிற்க வேண்டும் என்ற விதி அவர்களுக்கு இருந்திருக்கின்றது

அட அவ்வளவு ஏன்? கலைஞரின் பிள்ளைகள் அவரின் ஆற்றலோடும் அறிவோடுமா பிறந்திருக்கின்றன? இல்லை

ஒரே சாலமோன், ஒரே கிளியோபாட்ரா ஒரே ஷேக்ஸ்பியர், ஒரே கலைஞர், ஒரே கம்பன், ஒரே கண்ணதாசன்

அவ்வகையில் ஒரே ஒரு குஷ்பு