“கருணாநிதி என்னை அடையாளம் கண்டுகொண்டார்” : ராமதாஸ் மகிழ்ச்சி

“கருணாநிதி என்னை அடையாளம் கண்டுகொண்டார்” : ராமதாஸ் மகிழ்ச்சி

கலைஞரை சந்தித்து நலம் விசாரிக்க‌ ராமதாஸ் சென்றிருக்கின்றார், அதனை தொடர்ந்து இப்படி பேசியிருக்கின்றார்.

கலைஞர் பிறவி அரசியல்வாதி அய்யா, யாரை கண்டுகொள்ள வேண்டும் என்பது அவருக்கு தெரியாதா?

இதனை நாகரீக சந்திப்பாக எடுத்துகொள்ள வேண்டும், ஏனென்றால் வானமும் பூமியும் உள்ளவரை திராவிட கட்சிகளோடு கூட்டணி இல்லை என சபதம் செய்திருக்கின்றார் மருத்துவர் அய்யா

மிஸ்டர் விஜயகாந்த், நீங்க எப்போ கலைஞரை சந்திக்க போறேள்???

செந்தமிழர் சீமான் கேக் வெட்டியபொழுது …

Image may contain: 3 people, people standing, people sitting and food

பழந்தமிழர் முறைப்படி, முப்பாட்டன் வழிப்படி, செந்தமிழர் சீமான் கேக் வெட்டியபொழுது எடுக்கபட்ட படம்.

அன்னார் தமிழர் முறைப்படி வேட்டி கட்டி மேல்சட்டை இல்ல்லாமல் சந்தணம் பூசி நிற்பதை நீங்கள் கவனித்தே ஆகவேண்டும்

இந்த டெல்லி அல்ட்ராசிட்டிகளுக்கு சொல்லிகொள்வதெல்லாம் இதுதான், தயவு செய்து திமுகவினை எதிர்க்க உருப்படியான ஆட்களை தயார் செய்யுங்கள்

இம்மாதிரி காமெடியனகளை எல்லாம் அனுப்பாதீர்கள்

இவர் எல்லாம் திமுகவின் எதிரி என சொல்லபடுவதை, திமுககாரன் அல்லாத எம்மாலே சகிக்க முடியவில்லை என்றால், திமுகவினர் நிலை எப்படி இருக்கும்?

 

கலைஞர் வீட்டு திருமணம்

கலைஞர் வீட்டு திருமணம் என எல்லா பத்திரிகையும் கலைஞரை காட்டுகின்றன, விக்ரமை காட்டுகின்றன‌

மணமக்களை காட்டுகின்றன, யாரெல்லாமோ வாழ்த்தினார்கள் என காட்டுகின்றன‌

ஆனால் அந்த மு.க முத்துவினை ஒரு பத்திரிகையும் காட்டவில்லை, அவர்தான் மணமகனின் தாத்தா

கலைஞரின் மூத்த மகனுக்கு இப்படி ஒரு சோகம் நிகழ்ந்துவிட்டது கால கோலம்

தன் கொள்கைபடி தன் மகனை வளர்க்க நினைத்து அவன் வாழ்வை தொலைத்தார் காந்தி

கலைஞரும் அதே தவறினை செய்திருக்கின்றார்

குழந்தைகளை அவரவர் இயல்பில் வளரவிடவேண்டும் என்ற உண்மையினை உலகிற்கு சொல்கின்றார் முக முத்து

மும்பையில் இருந்து ஒரு முழு நிலா

Image may contain: 1 person, close-up

“மும்பையில் இருந்து ஒரு முழு நிலா” என்றொரு புத்தகம் எழுத சங்கம் முடிவெடுத்திருக்கின்றது

விரைவில் எழுதி முடிக்கபட்டு வெளியிடபடும், இது சம்பந்தமாக தலைவியின் உதவியாளர், சமையல்காரர், நேற்று பேட்டியெடுத்த கார்த்திகை செல்வன் வரை நிறைய பேரை சந்திக்க வேண்டியிருக்கின்றது

பெரும் சுவாரஸ்ய வரலாறு தலைவி , அதனால் பல பாகங்களாக கூட புத்தகம் வெளிவரலாம்

தலைவி பெருமை எழுத இந்த உலகத்தின் மொத்த ஏடுகளும் போதாது, மொத்த கணிணி மெம்மரியும் தாங்காது

 

எம்.கே. தியாகராஜ பாகவதர்

Image may contain: 1 person, standing

1940களுக்கும் 1955களுக்கும் இடைபட்ட காலங்களை ஆட்டிவைத்தவர் அவர், அன்றே அரசியலில் சினிமா கலந்திருக்குமானால் ராஜாஜி, காமராஜர் என்ற தலைவர்கள் எல்லாம் காணாமலே போயிருப்பார்கள்.

சுமார் 20 ஆண்டு காலம் தமிழகத்தை கட்டிவைத்தவர்

எம்.கே. தியாகராஜ பாகவதர், தமிழ் சினிமாவின் கதல் வசூல் மன்னன். நாடக மேடையில் அவர் பாடிக் கொண்டே தோன்றும்போது, ரசிகர்கள் எழுப்பிய ஆரவார வரவேற்பு வேறெந்த நடிகருக்கும் கிடைத்ததில்லை. பாமரர்களும் கர்நாடக சங்கீதத்தை ரசிக்க முடியும் என்ற நிலையை உருவாக்கியவர்.

ஒரே சமயத்தில் நாடகம், சினிமா, இசை என்று மூன்று குதிரைகளில் ராஜ பவனி வந்த பெருமை பாகவதருக்கு
எம்.கே தியாகராஜ பாகவதர் பற்றி அவரது ரசிகர்களிடம் கேட்டால் அப்படி உருகி சொல்வார்கள்

அப்படி பெரும் கூட்டம் அவருக்கு இருந்திருக்கின்றது

அக்கால முடிதிருத்துவோருக்கும் இளைஞர்களுக்கும் வரும் தகராறே இப்படித்தான் இருக்குமாம்

“எனக்கு பாகவதர் மாதிரி முடிவெட்டணும்”

“அது அவர் முடிக்கு தான் வரும்,உங்க முடிக்கெல்லாம் வராது..சொன்னா கேளு இல்லண்ணா மொட்டை அடிச்சி விட்டுருவேன்”

இன்னும் சில வாலிபர்கள் கொஞ்சம யோசித்து அடிக்கடி முன் தலையை சுவரில் உரசிகொண்டே இருப்பார்களாம்.
காரணம் பாகவதருக்கு முன்நெற்றி வழுக்கை.

அக்கால கொண்டயிடும் (குடுமி) ஆண்களில், இவரைப்போல் கிராப் வெட்டி கிட்டதட்ட விகார‌ அலங்கோலமாகி பின் மொட்டையிட்டவர்களும் உண்டு

அக்கால எம்.ஜி.ஆர், கமலஹாசன்,இம்ரான்கான் போல இவருக்கும் எண்ணெற்ற பெண்கள் கடிதம் எழுதுவார்களாம், அவருக்காக காத்திருந்த பெண்கள் ஏராளம்.

ஒரு கலெக்டர் மகள் இவரிடம் பாடல் கற்றுகொள்ள ஏற்பாடு, முதல் நாள் பாடல் வகுப்பு முடியும் போது கலெக்டர் தலையில் இடிவிழுந்தது,
“எனக்கு பாகவதரை திருமணம் செய்து வைக்காவிட்டால் சாவுதான்” என்றாள் மகள்

உண்மையில், பாகவதரின் அந்த இமை அசைவில் இதயம் தொலைத்து, பித்துப் பிடித்து அலைந்த பெண்கள்தான் அதிகம்.

“பிராணநாதா! உம்மை நேரிலே ஒரே ஒருமுறை தரிசித்துவிட்டால் போதும். மறுநொடியே தற்கொலை செய்து கொள்ளக் கூடத் தயார்” என்கிற ரீதியில் பெண்களின் கடிதங்கள் பாகவதரை மொய்த்த நாள்கள் உண்டு

அந்த அளவிற்க்கு பார்ப்போரை வசீகரிக்கும் தோற்றமும், தெய்வீககுரலும் ஒருங்கே அமையப்பெற்ற தேவலோக மனிதனாகவே மக்களுக்கு தோன்றினார் பாகவதர்
அவருடைய ரசிகர்கள் பாகவதர் நடந்து வந்த பாதையில் உள்ள மண்ணை எடுத்துவைத்துக் கொள்வார்களாம்.

இன்னும் சில ரசிகர்கள் அவர் தொட்ட பொருட்களை முத்தமிட்டு மகிழ்வார்களாம். .

ரயிலில் பயணம் செய்ய நேர்ந்தால் ஆங்காங்கே பாகவதர் தரிசனம் கிடைத்தால் மட்டுமே ரசிகர்கள் ரயிலை செல்ல அனுமதிபபர்.அந்த அளவிற்க்கு பாகவதர் என்றால் அப்படி ஒரு மயக்கம்.ஒருசமயம் காரில் திருச்சியிலிருந்து புதுக்கோட்டை சென்று கொண்டிருந்தபோது, ரயில்வே கிராசிங் அருகே கார் நிற்க்க நேரிட்டது.பாகவதர் காரிலிருக்கிறார் என்பதை கேள்விப்பட்ட மக்கள் கூட்டம் அலைமோதியது.

ரயிலையே நிறுத்தி மன்மதலீலை பாடலை பாடினால் மட்டுமே ரயிலை போக அனுமதிப்போம் என்று தங்கள் ஆசையை பூர்த்தி செய்து கொண்டனர்.

வெள்ளைக்குதிரை, அதன் மேல் ஒய்யாரமாக பாகவதர். மந்தகாசப் புன்னகையோடு பவனி வர, பெண்கள் எல்லாம் வெட்கப்பட்டு ஓடுவர். அங்குள்ள ஒரு பெண்ணைப் பார்த்து பாகவதர் மன்மதனாகக் கண்ணடிக்க, அந்தப் பெண் மிரண்டு ஓடுவாள்.

இது ஹரிதாஸ் படத்தில் இடம்பெற்ற காட்சி.பார்த்து கொண்டிருக்கும் பெண்கள் சொல்லுவார்களாம் “பாகவதர பாத்து ஓடுதாபாரு நானா இருந்தா ஓடிப்போய் குதிரைமேல ஏறிருப்பேன்”

இன்னொரு படத்தில் “வதனமே சந்திரபிம்பமோ” பாடிகொண்டே 20 அடி தள்ளி நிற்கும் காதலிக்கு பறக்கும் முத்தம் கொடுப்பாராம், தியேட்டரில் ஆரவாரம் கூரை பிளக்குமாம்.. (அட பாவமே ஒரு பறக்கும் முத்தத்திற்கா…இது சன்னி லியோன் எல்லாம் தமிழில் நடிக்கும் காலமல்லவா நாம் எவ்வளவு கொடுத்து வைத்தவர்கள் 🙂 )

பாகவதர் தங்க தட்டுலதான் சாப்டுவாராம், பன்னீர்ல வாய் கொப்பளிப்பாராம், அரேபியா செண்ட் போடுவாராம், காஷ்மீர் குங்கும பூவுல தான் தூங்குவாரம் இன்னும் பல செய்திகள் வந்துகொண்டே இருந்தது.

திரையுலகம்,நாடக உலகம்,இசை உலகம் என மூன்று உலகங்களையும் ஆண்ட, தமிழக நெஞ்சங்களை எல்லாம் கொள்ளையடித்த அவரின் வாழ்வு ஒரு கொலைவழக்கில் தலைகீழானது. (இப்பொழுதெல்லாம் கொலை செய்து தப்புவது எவ்வளவு எளிது)

நீதிமன்றமும், பிரபல வக்கீல் எத்திராஜும் (எத்திராஜ் கல்லூரி நிறுவணர்) அவர் சொத்துக்களை எல்லாம் கரைக்க, மிக பெரும் சாம்ராஜ்ய சக்கரவர்த்தி போல வாழ்ந்த பாகவதர், மிக பரிதாபமாக குடிக்கு அடிமையாகி திருச்சி காவேரி ஆற்று கரையோரம் 50 வயதுக்குள்ளாக அனாதையாக செத்துகிடந்தாராம்.

சினிமா கலைஞர்கள் கோடியில் புரளமுடியும் என முதலில் நிரூபித்து காட்டிய , பெரும் ரசிகர் பட்டாளமும், கிட்டதட்ட அரசனுக்கு உண்டான வாழ்வும் வாழ்ந்த பாகவதர் கல்லறை திருச்சி சங்கிலியாண்டவர்புரத்தில் அனாதையாய் இருக்கின்றது

ஒரு நொடியில் மாறுவதுதான் வாழ்க்கை

நிலாவில் இனி யாரும் கால் பதிக்கலாம், ஆனால் ஆம்ஸ்ட்ராங்கின் இடத்தை யாரும் மறைக்கமுடியாது, அப்படி ஆயிரம் ஸ்டார்கள் வந்தாலும் பாகவதருக்கு இருந்த மவுசே தனி.

காலம் பொல்லாதது,கொடுமையானது,இரக்கமில்லாதது மிககொடூரமாக எதையும் செய்யும் என்பதற்கு பாகவதர் வாழ்வு பெரும் உதாரணம், நொடிப்பொழுதில் யாரையும் கோபுரத்திலும் வைக்கும், கொண்டாட வைக்கும், ஒரே நொடியில் குப்பைமேட்டிலும் வீசும்.

அப்படி கோபுரத்தில் வாழ்ந்து,குப்பை மேட்டில் வீசபட்ட உன்னத கலைஞர்களில் ஆண்களில் பாகவதரும் பெண்களில் சாவித்திரியும் மறக்கமுடியாதவர்கள்.

அந்த பாகவதரின் இறந்த நாள் இன்று அனுசரிக்கபடுகின்றது

தமிழகத்தின் முதல் சூப்பர் ஸ்டார் அவர்தான். பெரும் வாழ்க்கை தத்துவத்தை அனுபவித்து சொல்லி 49 வயதிலே விடைபெற்றவரும் அவர்தான்.

இவ்வளவு மக்கள் அபிமானமிக்க நடிகர்கள் அரசியலில் இருந்து தள்ளி இருந்திருக்கின்றார்கள். அதனால் அக்கால அரசியல் நன்றாய் இருந்திருக்கின்றது,

 

தினதந்திக்கு பவள விழாவாம் …

தினதந்திக்கு பவள விழாவாம்

அதன் சிறப்புகள், அது பாமரனையும் படிக்க வைத்தது, அது வாசிக்க வைத்தது என்றெல்லாம் பலபேர் கிளம்புவார்கள்

எமக்கு தெரிந்தது இதுதான்

தமிழ் சுத்தமாக கெட்டுபோக அந்த பத்திரிகை ஒரு காரணம், நாட்டுபற்று பற்றியெல்லாம் அதில் அதிகம் இருக்காது மாறாக எது இருக்க கூடாதோ அது நிரம்பி இருக்கும்.

“அழகி” எனும் அற்புத தமிழ்வார்த்தையினை உவ்வே வார்த்தையாக்கியதும் , இன்னும் பல தமிழ்வார்த்தைகளை சமூகம் அருவெறுப்பாக பார்க்க வைத்ததும் அதன் தமிழ்தொண்டு

தமிழகத்தில் சினிமா செய்திகள் நிரம்பிய குப்பையாக நாளிதழ்கள் வரும் கொடுமையினை தினதந்திதான் தொடங்கிற்று

புலிகளை பெரும் வீர்களாக, இல்லாத பொய்களை எல்லாம் சொல்லி அவர்களை தியாகிகள் ஆக்கியதில் தினதந்தியின் தேசதுரோகம் நிறைய உண்டு

சுருக்கமாக சொல்லலாம்

தமிழரை வாசிக்க வைத்ததே தவிர சிந்திக்கை வைத்த பத்திரிகை அல்ல அது. சினிமா செய்திகளை பிரமாண்ட செய்திகளாக்கியதை தவிர அதன் சாதனை என‌ ஒன்றும் சொல்வதற்கில்லை

சமூக கருத்துக்கள் இருக்காது மாறாக கலாச்சார சீரழிவு செய்திகளை பெரும் பரபரபாக்கி வெளியிடும் காரியத்தை தினதந்திதான் தொடங்கிற்று

தமிழை அது வளர்க்கவில்லை, மாறாக தமிழர் தமிழர் என சொல்லி சம்பாதித்துகொண்டது மட்டும் நிஜம்

ஆளும் கட்சிக்கு எப்படி ஜால்ரா அடிக்கவேண்டும் என பாடம் நடத்திய பத்திரிகை அது

அப்படி இப்பொழுது மோடி பஜனை நடக்கின்றது, பஜனை நடக்கும் இடத்திற்கு சாமி வராவிட்டால் எப்படி

பவளவிழாவிற்கு மோடி வருகின்றாராம்

ஆக 75 ஆண்டுகளாக தமிழை, தமிழகத்தை கெடுத்த பத்திரிகைகளில் முதலிடம் தினதந்திக்கு உண்டு

எனக்கு அரசியல் வராது என சொன்னார் அஜித்குமார்

எனக்கு அரசியல் வராது என சொன்னார் அஜித்குமார், ரசிகர்கள் தெரிவிப்பு

அதானே, அரசியல் என்றால் நன்றாக நடிக்க வேண்டும், உணர்ச்சி பொங்க பேச வேண்டும்

நடிக்கவே தெரியாத, பேசவும் சரியாக தெரியாத‌ தனக்கு அரசியல் சரிபட்டு வராது என அஜித் உணர்ந்து கொண்டதில் ஆச்சரியமில்லை


21,783 கோடியில், 111 அதிநவீன ஹெலிகாப்டர்களை இந்தியா வாங்கும் : நிர்மலா சீத்தாராமன்

ஆக மேக் இன் இந்தியா திட்டமெல்லாம் சும்மா கண் துடைப்புதான், அப்படித்தானே மேடம்?