வடதமிழ்நாடு வேண்டும்…

வடதமிழ்நாடு வேண்டும் என சிலர் கேட்க தொடங்கியிருக்கின்றார்களா, கேட்பவர்கள் பாமக என்பது சொல்லி தெரியவேண்டியதில்லை

அது வெகுநாட்களாக ராமதாஸ் எழுப்பிவரும் கோரிக்கை, இனி அதுவும் சாத்தியபடாது என்றால் தைலாபுரம் தோட்டத்தையாவது தனிமாநிலம் ஆக்க முடியுமா என்ற அளவு அவர் கோரிக்கை செல்லும்

அதை தவிர அன்புமணியினை முதல்வராக்க அவரிடம் எந்த வழியுமில்லை

ஆனால் தனி வடதமிழ்நாடு கேட்டுகொண்டிருக்கும் அந்த தமிழர்கள் யார் என்றுதான் தெரியவில்லை

வட தமிழ்நாடு என்னமோ வடை போல கிடைக்கும் என நினைத்துகொண்டிருக்கின்றார்கள்

ஒன்று நிச்சயம்

தனி தமிழ்நாடு அது இது என பேசிகொண்டிருந்தால் இப்படித்தான் வரும், காரணம் அன்றே பல துண்டுகளாகத்தான் தமிழகம் இருந்தது

எவண்டா அவன் “திராவிடத்தால் விழுந்தோம் உறவே” என சொல்லிகொண்டிருப்பது

திராவிடம் எதனை எல்லாம் காத்தது என்பது இனிதான் புரியும்

இப்போதைக்கு இந்த வடை தமிழர்கள் யார் என தேடிகொண்டிருக்கின்றோம்

மிஸ்டர் சைமன், உலகளாவிய அகண்ட தமிழகம் படைக்க நீர் கிளம்பியிருக்கும்பொழுது குறுக்கே கட்டையினை போடும் இவர்களை எல்லாம் ஒன்றும் சொல்லமாட்டீரா?

பத்மாவதி படத்திற்கு பாஜக எதிர்ப்பு

பத்மாவதி படத்திற்கு பாஜக எதிர்ப்பு

இப்பொழுதுதான் தமிழகத்தில் ஜிஎஸ்டி என சொல்லி மெர்சலை எதிர்த்தார்கள், இப்பொழுது பத்மாவதி படம் வந்தால் மதகலவரம் வரும் என அதனையும் எதிர்க்கின்றார்கள்

கலவரம் எல்லாம் இவர்கள்தானே ஏற்படுத்துவார்கள்? சினிமா என்று ஏற்படுத்திற்று?

எப்படியோ மெர்சலை ஹிட் ஆக்கியது போல , பத்மாவதி படத்தையும் மெகா ஹிட் ஆக்க பாஜக தயாராகின்றது

மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் படம் நிச்சயம் சூப்பர் ஹிட், விநியோஸ்தர்கள் நம்பி வாங்கலாம்

தீபிகா படுகோனையோ, படத்தையோ நம்பி அல்ல, நமது தமிழிசையினை நம்பி நிச்சயம் வாங்கலாம்

எடப்பாடி சில அமைச்சர்களை நீக்கலாம் : இன்றைய‌ செய்தி

Image may contain: 3 people, people smiling, people standing and indoor

“மிஸ்டர் எடப்பாடி, நான் வந்துட்டேன்னு சொல்லு,

திரும்ப வந்துட்டேன்னு சொல்லு

எப்படி போனாரோ நடராஜன் அப்படியே வந்துட்டார்ன்னு மோடிகிட்ட‌ சொல்லு

ஒரு பய நிம்மதியா இருக்க முடியும்?..”


எடப்பாடி சில அமைச்சர்களை நீக்கலாம் : இன்றைய‌ செய்தி

அந்த அமைச்சர்கள் எல்லாம் சேர்ந்து எடப்பாடி அரசையே நீக்கலாம் : நாளைய செய்தி 


 

வள்ளியூர் பக்கம் கொடுமுடியாறு அணை திறப்பு

Image may contain: mountain, sky, outdoor and nature

வள்ளியூர் பக்கம் கொடுமுடியாறு அணை திறப்பு, எம்.எல்.ஏ எம்.பி கலந்துகொண்டனர் : செய்தி

நெல்லை எம்பி என்றொருவர் உண்டு என்பதே அந்த படத்தினை பார்த்தபின்புதான் நினைவுக்கு வருகின்றது

அந்த அணை பல கோடி ரூபாய் மதிப்பில் கட்டபட்டதாக சொன்னார்கள், அந்த அணையின் அருகே இக்குளத்தால் 44 குளங்கள் பாசன வசதிபெறும் என அறிவிப்பு வேறு

அந்த வறண்ட பகுதிக்கு மிகபெரும் ஆறுதலாக அந்த அணை வரும் என எதிர்பார்ப்பு இருந்தது, ஆனால் பெரும் ஏமாற்றம்

உண்மையில் அந்த அணையின் கொள்ளளவு 1 குளத்திற்கு கூட காணாது, அந்த அணை போல 3 அணைகள் இருந்தால்தான் பிரதான குளமே நிரம்பும், மீதி இருக்கும் 43 குளங்கள் நிலை அவ்வளவுதான்

அக்காலத்தில் மழைபெயதால் எல்லா குளங்களும் நிரம்பிகொண்டுதான் இருந்தன, நீரை தேக்குகின்றோம் என இதனை கட்டினார்கள்

மழை வந்து தானாய் குளங்கள் நிறைய இந்த அணை எதற்கு? தேவையே இல்லை

எல்லா குளங்களும் போல அதுவும் நிறைகின்றது, எல்லா குளமும் போல அதுவும் காய்கின்றது, ஆக மலையில் ஒரு குளம் கட்டிவைத்து அழகு பார்க்கின்றார்கள்.

அது அரை ஸ்பூன் அளவு கூட தேக்கும் அளவில்லை, கொஞ்சமும் பிரயோசனமில்லை

இந்த அணையால் என்ன பிரயோசனம் என்றால் ஒன்றே ஒன்றுதான்

ஆம் அணை திறக்கின்றோம் என ஆளாளுக்கு வந்து நிற்கின்றார்கள் அல்லவா? அந்த ஒரு விளம்பரம்தான்

நமக்கு தெரிந்த அநியாயம் இது, தெரியாமல் இப்படி தமிழகமெங்கும் எப்படி எல்லாம் விளையாடி இருக்கின்றார்களோ தெரியாது

வெள்ளையனுக்கு பின் உருப்படியான அணைகளை கட்டியது காமராஜர், ஆழியாறு, வைகை , மணிமுத்தாறு எல்லாம் அந்த ரகம்

அதன் பின் ஒரு அணையும் உருப்படியில்லை, எல்லாம் சும்மா வெட்டிவேலை

அதற்காக வீணாக்கபட்டிருக்கும் மக்கள் வரிபணம் ஏராளம்

இந்த கொடுமுடி அணை போல இன்னும் 50 அணை இருந்தால் அல்லவா இந்த குளங்கள் பாசன வசதிபெறும் என்று கேட்டால், அப்படியா 50 முறை இந்த அணையினை திறந்து மூடுவோம் சரியா என்பார்கள்

அதற்கு மேலும் கேட்டால் அமெரிக்கா, சீனா விட மிக சிறந்த அணைகட்டை நாங்கள் கட்டியிருக்கின்றோம் என்ற பதில் வரும்

 

அமலாபால் கார்

Image may contain: 2 people, people smiling, text

“அண்ணே இந்த அமலாபால் கார் ஏதோ பாண்டிச்சேரிகாரன் பெயர்ல இருக்காம்ணே

அதுக்கென்னடா?

அதிலதாண்ணே சந்தேகம்?

என்னடா சந்தேகம்?

அண்ணே, கார் பாண்டிச்சேரிகாரன் பெயர்ல இருக்கு.. அந்த அமலா பால்………

டேய் அடுத்தால நீ என்ன கேக்கபோறேண்ணு தெரியும், ஓடிரு”

 

இந்துக்கள் அனைவரும் பூணூல் போட முடியுமா? : இயக்குனர் ரஞ்சித்

முஸ்லீம் அனைவரும் குல்லா போட முடியும்.கிறிஸ்துவர் அனைவரும் சிலுவை போட முடியும்.
இந்துக்கள் அனைவரும் பூணூல் போட முடியுமா? – இயக்குனர் ரஞ்சித்

எவனோ ரஜினியினை பொறுக்காதவன் மிக வஞ்சகமாக ரஜினியினை இவரிடம் சிக்க வைத்திருக்கின்றான்

சொல்ல முடியாது, தமிழகத்தில் அம்பேத்கரை தூக்கிபிடித்து பெரியாரை மறக்கடிக்க எங்கிருந்து யாரோ போட்ட திட்டத்தில் ரஜினியும் ரஞ்சித்தும் இணைந்திருக்கலாம்

இல்லாவிட்டால் கபாலியில் பட்ட அடிக்கு பின்னும் ரஜினி இவருடனே அடுத்தபடம் செய்ய வாய்ப்பே இல்லை

ரஞ்சித் எனும் அரைகுறையினை கவனித்து வருபவர்களுக்கு புரியும், அவர் அம்பேத்கரிசம் பேசுவாரே தவிர ஒப்புக்கும் பெரியாரை தொட்டே பார்ப்பதில்லை

அம்பேத்கரும் பெரியாரும் ஒரே அளவு, அவர் வடக்கே செய்ததை இங்கு பெரியார் செய்தார்

காவேரி நீர் நிரம்ப இருக்கும்பொழுது, கங்கை நீரைத்தான் தேடுவேன் என்பது என்ன மாதிரி விஷயம் என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள்

ஏய் திராவிட பூமியே விழித்துகொள்

நயவஞ்சகமாக அம்பேத்கரை உயர்த்தி, பெரியாரை மறக்கடிக்க நடத்தபடும் நாடகமே இந்த ரஜினி ரஞ்சித் கூட்டணி

திராவிடத்தில் குழப்பம் விளைவிக்கும் செயல் இது.

விரைவில் இந்த உண்மை உலகிற்கு தெரியவரும், தெரிய வைப்போம்

இதற்கு ரஜினியும் துணைபோவாரானால் அதற்கு அவர் கொடுக்கும் விலை மிக அதிகமாகவே இருக்கும்.

கத்தோலிக்க பாரம்பரிய கிறிஸ்தவர்களுக்கு ஆத்துமாக்கள் தினம், கல்லறை சிறப்பு நாள்

Image may contain: text

இன்று கிறிஸ்தவர்களுக்கு, அதாவது கத்தோலிக்க பாரம்பரிய கிறிஸ்தவர்களுக்கு ஆத்துமாக்கள் தினம், கல்லறை சிறப்பு நாள்.

பிரிவினைகளுக்கு இதெல்லாம் கிடையாது, பைபிளில் இல்லாத ஒன்றையும் கடவுளே சொன்னாலும் கவனிக்காத கூட்டம் அது

இன்று கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் தங்கள் முன்னோர்கள் மற்றும் உரித்தானவர்கள் கல்லறைகளுக்கு சென்று அஞ்சலி செலுத்துவார்கள், கத்தோலிக்க பீடம் சொல்லும் கட்டளை அது.

கிறிஸ்தவமரபு படி சிறிய பாவம் செய்தவர்கள் சொர்க்கம் செல்ல முடியாத நிலையில் இருப்பதாகவும், இங்குள்ளோர் அவர்களுக்காக ஜெபித்தால் அவர்கள் பரலோகம் செல்வார்கள் எனவும் சொல்லபடுகின்றது

இந்து தர்மம் சொல்லுமல்லவா? பூலோகத்தில் நீ ஏதாவது நன்மை செய்திருந்தால் அவர்கள் உனக்காக பிரார்த்திப்பார்கள், நீ செய்திருக்கும் நல்ல காரியத்திற்காக அவர்கள் உன்னை நினைவு கூற கூற நீ சொர்க்கத்தில் மிகுந்த நலமாய் இருப்பாய் என சொல்லும் அல்லவா? அதே தத்துவம் தான்

Image may contain: 1 person, standingபேரோளியான இறைவனோடு கலந்துவிட்ட ஆன்மாக்களை ஒளியோடு நினைவு கூறவேண்டும் என்ற தத்துவ அடிப்படையில் மெழுகுவர்த்தி ஏற்றபடுகின்றது

இந்நாளில் கிறிஸ்தவர்களும் மற்றவர்கள் பசியாற்றுவார்கள், இறந்தவர் நினைவாக ஒருவனுக்கு பசியாற்றினால், அந்த ஆன்மா மகிழ்வடையும், இவன் நினைவாக சிலர் பசியாறுகின்றார்கள் என்றால் இவன் ஏதோ உருப்படியாக வாழ்ந்திருக்கின்றான் என வானலோக அதிபதிகளும் மகிழ்வார்கள்

அந்த ஆன்மா இன்னும் மகிழும்

அதனால் இன்றும் கிறிஸ்தவ கிராமங்களில் இந்நாளில் கஞ்சி ஊற்றும் நிகழ்வுகள் உண்டு

இந்நாளை ஏன் கடைபிடிக்க வேண்டும்?

நலமாய் இருக்கும் ஒரு மனிதன் மருத்துவமனைக்கு சென்று ஒரு சுற்று சுற்றிவந்தால்தான் தான் எவ்வளவு ஆசீர்வாதம் பெற்றவன் என தெரியும்

மருத்துவமனை போதிக்கும் உண்மை அது

கல்லறைகளை சுற்றி வந்தால்தான், உலக வாழ்வு நிலையற்றது என்பதும், அகங்காரம் ஆணவம் எல்லாம் ஒன்றுமே இல்லை என்பதும், வெறும் மண்ணாக போகும் வாழ்வு இது என்பதும் புரியும்

மனிதனின் அகங்காரம் ஒழியும்

அதனால் இந்நாள் கட்டாயம் கடைபிடிக்கபட வேண்டியதே, யார் வேண்டுமானாலும் கடைபிடிக்கலாம்

எங்கள் ஊரின் கல்லறை தோட்டம் நினைவுக்கு வருகின்றது, என் கையினை பிடித்து வளர்த்தவர்களும், என்னோடு வளர்ந்தவர்களும், என்னை தொலைத்தே தீரவேண்டும் என பாகுபலி நாசராக அலைந்தவர்களும் அங்குதான் உறங்குகின்றார்கள்

தியாகம், வஞ்சகம், நட்பு, பொதுநலம், காதல், துரோகம் என எல்லாவற்றிற்கும் அக்கல்லறையில் எடுத்துகாட்டுகள் உண்டு

ஒவ்வொரு கல்லறையும் மனிதனின் ஒவ்வொரு குணத்தையும் காட்டிகொண்டே நிற்கின்றன‌

இருக்கும் போது மோதிகொண்டவர்கள், நான் யார் என சீறியவர்கள் எல்லாம் அங்கே ஒன்றாகத்தான் உறங்குகின்றார்கள்

வாழும்பொழுது பார்க்க முடியா சமத்துவம் கல்லறையில் தெரிகின்றது

இவ்வுலகம் ஒரு வாடகை பூமி, வந்து தங்கிவிட்டு முதலாளி கிளம்ப சொன்னதும் கிளம்பவேண்டியதுதான் எனும் தத்துவத்தை போதிக்குமிடம் மயான பூமி,

அதனால்தான் இந்துக்கள் சிவன் சுடலையாக மயானத்தில் ஆடுவதாக சொல்லி வைத்தார்கள், அவ்வளவு பெரும் தத்துவத்தை சொல்லும் இடமது,

ஏன் சொன்னார்கள்? ஏ மனிதா இதுதான் வாழ்க்கை இதுதான் உண்மை, அந்த உண்மையே சிவம் அவரிடம் சரணடைந்துவிடு

ஒருவன் உலகில் தங்கி இருந்த தற்காலிக அடையாளம்தான் இக்கல்லறைகள்

அந்த எல்லா ஆத்துமங்களுக்காகவும் இந்நாளில் இறைவனிடம் பிரார்த்திக்கலாம்.

எல்லா ஆன்மாக்களுக்கும் இறைவன் இளைப்பாறுதல் கொடுக்கட்டும்

வாழ்வில் கண்டு, இனி காணமுடியா எத்தனையோ முகங்கள் நினைவுக்கு வந்துகொண்டிருக்கின்றன‌ , குறிப்பாக சமீபத்தில் உதிர்ந்துவிட்ட அந்த மொட்டு

அதில் பெரும் சோகம் மனதை கனக்க செய்கின்றது.