மோடிக்கு வியூகம் வகுத்த அந்த கமிட்டிக்கு சல்யூட்

அனிதா தற்கொலை , நீட் தேர்வு, தமிழிசை & கோ விவகாரம், ஜிஎஸ்டி விவகாரம், திரையுலகினர் கொதிப்பு 
இன்னபிற ஏராளமான சர்ச்சைகள் மோடி அரசு மீது இருந்தன‌

நிச்சயம் அவர் சென்னை வரும்பொழுது அந்த பிரச்சினை வெடித்திருக்க வேண்டும், கருப்புகொடி காட்டபட்டிருக்க வேண்டும்

பெரும் எதிர்ப்புகள் கொடுக்கபட்டிருக்க வேண்டும், ஆனான பட்ட நேரு சென்னையில் உற்சாகாமாக கைகாட்டியபொழுது கருப்புகொடி காட்டி முகத்தில் அடித்த திராவிட கட்சிகள் உள்ள மாநிலம் இது

இந்திரா காந்தியினையே ரத்தம் சொட்ட அடித்துவிரட்டிய திராவிட பூமி இது

இதில் மோடி எப்படி மரியாதையாக வந்து போவது என யோசித்திருக்கின்றார்கள்?

கார்ட்டூன் பாலாவினை போட்டு சாத்தியதிலும், தமிழகத்து தென் மூலையில் ஒரு வழக்கறிஞரை போட்டு சாத்தியதிலும் இந்திய எதிர்ப்பாளர்கள், பிரிவினைவாதிகள், போராளிகள்
எல்லாம் அமைதி

ஒரு எதிர்ப்பு வந்ததா? அனிதா படம் எழும்பியதா? நெடுவாசல் விவகாரம் வந்ததா ஒன்றுமேயில்லை, உபயம் பாலா

அதன் பின் கலைஞரை சந்தித்ததில் மொத்த தமிழக கவனமும் எங்கோ போயிற்று.

கலைஞர் என்ற மனிதர் மோடிக்கு அட்டகாசமாக உதவியிருக்கின்றார்.

ஆக தன் மீதான சர்ச்சைகளை துடைத்தெறிந்து, அட்டகாசமாக தமிழகம் வந்துவிட்டு திரும்பியிருக்கின்றார் மோடி, எங்கும் எதிர்ப்பில்லை, ஆர்ப்பாட்டமில்லை

இவையெல்லாம் மிக துல்லியமான திட்டங்கள், மிக அழகான அரசியல் கணக்குகள்

அதனை வகுத்துகொடுத்த மூளை சாதாரணம் அல்ல, இன்னும் என்னென்ன திட்டங்களை எல்லாம் வைத்திருக்கின்றதோ தெரியவில்லை

மிகபெரும் தந்திரத்தோடு நகர்கின்றார்கள்

காங்கிரஸ் தமிழகத்தில் செய்ய தவறியதை எல்லாம், மிக கவனமாக செய்து காய் நகர்த்துகின்றது பாஜக‌

ஒரு வகையில் பார்த்தால் வீரமணி, சைமன், திருமுருகன் காந்தி முதல் வடை தமிழ்நாடு கேட்டவன் வரை பொடரியில் அடித்தது போல கம்மென்று இருக்கின்றார்கள், அது பாராட்டதக்கது

மோடிக்கு வியூகம் வகுத்த அந்த கமிட்டிக்கு சல்யூட்

ஓளிபடைத்த கண்ணினாய் வா வா வா..

Image may contain: 1 person, selfie

தெய்வங்கள் கண்மூடிய நேரத்தில் ஒரு தேவதை முகம் சோர்ந்த நேரம்

ஆண்டவா, இந்த முகத்தை பார்க்க உனக்கே வருத்தமாக இல்லை?

சோர்ந்துவிட்ட அந்த கண்களை கண்டு உனக்கு கண்ணீர் வரவில்லை?

எங்கள் சிங்கமே..

“ஓளிபடைத்த கண்ணினாய் வா வா வா..” என சங்கம் காத்திருக்கின்றது.

கெத்தாக வந்து போயிருக்கின்றார் மோடி

நேருவும், இந்திராவும் இன்னும் பல தேசிய கட்சி பிரமுகர்கள் அச்சத்தோடு வந்து அவமானபட்டு சென்ற தமிழகத்தில் , செய்யவேண்டியதை செய்துவிட்டு மிக கெத்தாக வந்து போயிருக்கின்றார் மோடி

இந்த காட்சி தமிழகத்திற்கு புதிது, நிச்சயம் புதிது

நேரு கருப்புகொடி காட்டி விரட்டபட்டார், இன்னும் பலர் தாக்கபட்டனர்

இந்திராவே ரத்தகாயத்தோடுதான் தப்பினார்

தமிழகத்தில் காங்கிரசை வளர்ப்பேன் என கிளம்பிய ராஜிவ் தமிழக மண்ணிலே கொல்லபட்டார்.

அதன் பின் எந்த பிரதமர் வந்தாலும் தமிழக முதல்வர்கள்தான் முன்னிறுத்தபடுவர், பாரத பிரதமர் அயல்நாட்டு தலைவர் போல் காண்பிக்கபடுவார்.

இங்குள்ள யதார்த்தம் அப்படித்தான் இருந்தது

அதில் கலைஞரும் ஜெயாவும் மகா வித்தகர்கள்.

கிட்டதட்ட 60 வருடங்களுக்கு பின் இந்திய பிரதமர் அவருக்கே உண்டான தனித்துவத்துடன் தமிழகம் வந்திருக்கின்றார்

கலைஞர் அமைதி, நடராஜனும் அமைதி

அதனால் திராவிட எதிர்ப்புமில்லை, நடராஜனுக்கு விசுவாசமான படையினரின் குரலுமில்லை

60 ஆண்டுகளாக இங்கு டெல்லிக்கு எதிராக‌ இருந்த ஒரு நெருப்பு அணைந்துவிட்டதை உணரமுடிகின்றது

கலைஞரை மோடி அமைதியாக சந்தித்துவிட்டு புன்னகைத்தபடி சென்றிருப்பது எப்படிபட்ட விஷயம், அதன் அர்த்தம் என்ன என்பதுவரலாறு படித்தோருக்கு தெரியும்.

நான் பிறந்ததற்கான காரணத்தை நிரூபிக்கும் நேரம் வந்துவிட்டது : கமலஹாசன்

நான் பிறந்ததற்கான காரணத்தை நிரூபிக்கும் நேரம் வந்துவிட்டது : கமலஹாசன்

முன்பு ராமசந்திரன் “நான் ஏன் பிறந்தேன்?” என்றொரு தொடர் எழுதினார், “ம்ம் அத உங்கப்பன்கிட்ட போய் கேளு..” என திமுகவினர் கலாய்த்துகொண்டிருந்தனர்

சிலர் “தமிழ்நாட்டை நாசமாக்க..” என உரக்க சொல்லிகொண்டிருந்தனர்.

இப்பொழுது அதெல்லாம் நினைவுக்கு வர கூடாது, கமலஹாசன் கலைதொண்டு செய்ய பிறந்தவர் என்றுதான் நம்பிகொண்டிருந்தோம்

கலைச்சேவைக்காக அவரின் தனிபட்ட வாழ்வில் கூட தியாகம் செய்தார் என நினைத்திருந்தோம்

ஆனால் அதெல்லாம் இல்லையாம், அவர் பிறந்த காரணம் வேறாம்

ஆக நான் அரசியலை குறிவைத்தே கனவோடு நடித்துகொண்டிருந்தேன் என சொல்லாமல் சொல்கின்றார் கமலஹாசன்

காந்தி தன் இறுதிக்காலம் வரை பாதுகாத்து வைத்திருந்த பொக்கிஷம் எது? 

காந்தி ஏழைபெண் கொடுத்த செப்பு காசினை இறுதிவரை தன்னோடு வைத்திருந்தார் : விகடன் செய்தி

அதாவது லட்சகணக்கில் எல்லோரும் கொட்டி கொடுத்தார்களாம், ஆனால் ஒரு மூதாட்டி கொடுத்த செப்பு காசு காந்தியினை கவர்ந்ததாம்

அவள் இருப்பதை எல்லாம் எனக்கே கொடுத்தாள் என சாகும் வரை கையில் வைத்திருந்தாராம்

இப்படி ஒரு சம்பவம் நடந்ததாக அவர் சொல்லவுமில்லை, எங்கும் கேள்விபட்டதுமில்லை

ஆனால் பைபிளில் ஒரு ஏழைபெண் செப்புகாசு காணிக்கை இட்டதை கண்டு இயேசு , “இவளே அதிகம் கொடுத்தவள் நீங்கள் எல்லாம் கிள்ளி கொடுத்தீர்கள், இவள் மொத்தமும் கொடுத்தாள்..” என சொன்ன வரி இருக்கின்றது

ஆக காந்திபற்றி எழுதுவதற்கு புதிதாக யோசியுங்கள், பைபிள் கதை எல்லாம் காந்தி வாழ்வில் நடந்தது என எழுதினால் விகடனின் தரத்தை பார்த்து உலகமே சிரிக்கும்

இப்பொழுது அப்படித்தான் சிரிக்கின்றது

இப்படியெல்லாமா கதை கட்டுவார்கள்?

ஏம்பா காந்தி காலத்தில் எங்கே செப்பு காசு இருந்தது? அதற்கு எங்கே மதிப்பு இருந்தது?

எவனோ பைபிளின் கதையினை எடுத்து காந்தி வாழ்வில் நடந்தது என சொன்னால் அப்படியே போட்டுவிடுவீர்களா?

ஏம்பா காப்பி அடிச்சவனே, அப்பட்டமாக பைபிள் செப்புகாசு என்றா எழுதுவாய்? கொஞ்சம் 1 அணா, 2 அணா என்றாவது எழுத கூடாதா?

காப்பியடிக்க கூட தெரியாதா?

2ஜி வழக்கு தீர்ப்பு தேதி மீண்டும் ஒத்திவைப்பு

2ஜி வழக்கு தீர்ப்பு தேதி மீண்டும் ஒத்திவைப்பு

ஹிட்லர் தன் இறுதிகாலத்தில் இருந்தான், ஆனால் ஜெர்மனிக்குள் புகுந்து அடிக்க நேசநாடுகளுக்கு அச்சம் இருந்தது. என்னிடம் அப்படி பெரிய குண்டு இருக்கின்றது, அதை வீசினால் 1 லட்சம் பேர் காலி, பிரிட்டன் மீது நாளை வீசுவேன், இன்றிரவு வீசுவேன் என மிரட்டிகொண்டிருந்தான்

அவன் தளபதி ஹிம்லரும், கோயபல்சும் ஹிட்லர் சொன்னதை பலமடங்காக பெருக்கி சொன்னார்கள்.

அவன் அக்குண்டை வீசும்வரை காத்திருப்போம் என எதிர்படைகள் காத்திருந்தன, அவனோ மிரட்டிகொண்டே இருந்தான் வீசவில்லை

இறுதியில் அந்த குண்டை ஹிட்லர் வீசும் நேரமும் வந்தது, லண்டன் மீது பறக்கும் குண்டு என வீசினான். பெரும் சேதாரமில்லை

இதுதானா? இதை வைத்துகொண்டா மிரடடினான் என உற்சாகம் பெற்ற படைகள் பெர்லினில் புகுந்தன, ஹிட்லர் ஒழிந்தான்

அப்படி இந்த டெல்லி இந்த தேதியினை ஒத்திவைக்கும் பொழுதெல்லாம் அங்கு ஒன்றுமே இல்லை என்பது மட்டும் புரிகின்றது

ஓரளவு விஷயம் இருந்தாலும் மோடி கலைஞரை சந்தித்திருக்க மாட்டார் என்பது விஷயம் அறிந்தவர்கள் சொல்லிகொண்டிருப்பது

ஆக ஹிட்லரின் அஸ்திரம் போல அங்கு ஒன்றுமே இல்லை, எல்லாம் மிரட்டல்

ஆனால் ஒரு தேதியில் அறிவித்துதான் ஆகவேண்டும் , அது புஸ்வானம் ஆகும் அதன் பின்புதான் இருக்கின்றது விஷய்ம். அதன் பின் இங்கு காட்சிகள் நிச்சயம் மாறும்.

ஹிட்லருக்கு நேர்ந்த கதி இங்கு சிலருக்கு அரசியலிலே ஏற்படலாம்.

தமிழிசை கலைஞர் வீட்டுக்கு சென்று ஒரு மாதிரி சிரிக்கும்பொழுதே இந்த ஒத்திவைப்பு வைபவம் நடக்கும் என்று பட்சி சொல்லியது

வைகோ கிறிஸ்தவராகிவிட்டார்…

வைகோ கிறிஸ்தவராகிவிட்டார், பிரபல போதகர் மோகன் சி லாரசஸ் சொன்னதாக செய்தி

இதனை இன்னும் மோகன் சி.லாரசஸ் மறுக்கவில்லை என்பது குறிப்பிடதக்கது

வைகோ வித்தியாசமான அரசியல்வாதி, இந்திய எதிர்ப்பு என்றே அவரின் அரசியல் அறியபட்டது. மிக பெரும் தலைவராக வந்திருக்க வேண்டிய கோப்பால்சாமி நாசமாய் போக ஒரே காரணம் அந்த இந்திய எதிர்ப்பு

இந்திய எதிர்ப்பாளர்கள் யாரின் கைகூலிகள் என்றால் இப்போதைக்கு இரண்டே பிரிவினர்தான்

ஒன்று சீன ஆதரவு மாவோயிஸ்டுகள். அவர்கள் நாங்கள் மாவோ என தைரியமாக சொல்லும் பிரிவினைவாதிகள்

இன்னொரு கோஷ்டிதான் வில்லங்கமானது, நாங்கள் பிரிவினை வாதி என வெளிப்படையாக சொல்லாது ஆனால் ஈழம், அது இது என எல்லா பிரிவினை கோஷ்டிகளையும் ஆதரித்து நாங்கள் இந்தியர்கள் ஆனால் சில உரிமைகள் .. என முணங்கிகொண்டிருக்கும்

இவர்கள் பெரும்பாலும் மேற்கத்திய நாடுகளால் இயக்கபடுபவர்கள் , இதில் சில மிஷினரிகளும் உண்டு, சில அரேபிய அமைப்புகளும் உண்டு.

அரேபிய அமைப்பை விடுங்கள், இப்பொழுது மிஷினரிகளை காணலாம்

வைகோ திருமுருகன் போன்றோர்கள்
அமெரிக்கா லண்டன் பறப்பதும், இந்திய எதிரிகளுக்கு அமெரிக்காவும் லண்டனும் ஆதரவு கொடுத்து பேச வைப்பது எல்லாம் மிஷினரி அரசியல்

விடுதலைபுலிகளுக்கு இந்த மெஷினரிகள் செய்த உதவியும், பின் அதில் ஜெகத் கஸ்பர் போன்ற சாமிகள் ஊடுருவியதும் உலககிற்கே தெரிந்தது

இந்த புலிகள் ஒழிந்து ஏற்பட்ட அழிவின் மத்தியில் இன்று இலங்கையின் வடக்கில் அல்லேலூயா கோஷ்டிகள் போடும் அலப்பறை கொஞ்சமல்ல, அவர்கள் எதிர்பார்த்தது அதனைத்தான்

நக்சலைட் பிண்ணணி இல்லா வைகோ எந்த இந்திய எதிர்ப்பு என நீங்களே யூகித்துகொள்ளுங்கள்

இதில் இவர் இப்பொழுது கிறிஸ்தவர் என ஒப்புகொண்டால் அது டூ லேட். என்றோ கிறிஸ்தவர் ஆகியிருக்கவேண்டியவர் வைகோ

ஒருவேளை உண்மையான திராவிட போராளியாக வைகோ இருந்தால், லாசரஸ் என்ன சொன்னவுடன் வைகோ ஓடிவந்திருப்பார்?

“பாவிகளை மீட்க இயேசு வந்தார்..” என லாசரஸ் சொன்னவுடன், முதல் பாவி நான் தான் என ஓடியிருப்பாரோ?


வைகோ மகன் , மருமகன் எல்லாம் அமெரிக்காவில் கிறிஸ்தவ ஊழியம் செய்கின்றார்கள், வைகோவும் அமெரிக்க சர்ச்சுகளுக்கு செல்வார் : மோகன் சி லாசரஸ்

அமெரிக்க சர்ச்சில் துப்பாக்கி சூடு, 26 பேர் பலி : நேற்றைய செய்தி

இந்த மனிதர் எங்கு கால் வைத்தாலும் இப்படித்தான் ஆகும் போல