சும்மா மோடிக்கு கருப்பு தினம் அது இது என வெறுப்பேற்றாதீர்கள்

சும்மா மோடிக்கு கருப்பு தினம் அது இது என வெறுப்பேற்றாதீர்கள்

இப்பொழுது ஒன்றும் கெட்டுவிடவில்லை, நோட்டுக்களை மாற்றிகொள்ள கொஞ்சம் குழப்பம் ஆனது மற்றபடி பணம் இல்லை என்றோ, பணத்தை தரமுடியாது என்றோ சொல்லவில்லை

ஆனால் இப்படியே திட்டிகொன்டிருந்தால் மோடிக்கு கோபம் வந்து பழிவாங்க நினைத்துவிட்டால் என்னாகும்?

நாட்டை திவால் ஆக்கிவிட்டால் முடிந்தது விஷயம், இந்திய பணம் குப்பை ஆகும், அடுப்பெரிக்க மட்டும் பயன்படுத்தலாம் கூடவே வங்கி பணங்கள் அவ்வளவுதான்

இது பல நாடுகளில் நடந்த விஷயம்

இந்தியாவில் அப்படி நடக்க எவ்வளவு நேரமாகும்? அதனால் மோடி எங்கள் பணத்தை எடுக்க எங்களை அலையவிட்டார், ஏடிம்மில் தூங்கினோம் என்ற கோஷத்தை உடனே நிறுத்துங்கள்

இல்லாவிட்டால் ஆத்திரத்தில் மோடி நாசமாக்குதல் என்றால் என்ன என இனி காட்டுகின்றேன் என தமிழிசையினை நிதியமைச்சராக்கிவிட்டால் என்ன செய்வீர்கள்?

நாடு திவாலாகும் , இந்திய பணம் நொடியில் குப்பையாகும், எவ்வளவு அழுதாலும் மிஞ்சாது

ஆக இருக்கும் 2 வருடத்தினையும் அவரை நிம்மதியாக கழிக்கவிடுங்கள், கோபபடுத்தாதீர்கள்

அதுதான் எல்லோருக்கும் நல்லது.

Advertisements

மல்லையா முதல் வைகோ வரை….

டிச. 18-ந்தேதிக்குள் ஆஜராகாவிட்டால் தேடப்படும் குற்றவாளியாக மல்லையா அறிவிக்கப்படுவார்: டெல்லி கோர்ட்டு

என்னது? இன்னும் மல்லையா தேடபடும் குற்றவாளி இல்லையா?

பின் என்ன சொல்லி லண்டன் கோர்ட்டில் வழக்கு நடந்தது? மல்லையா இல்லாமல் இந்தியா அழுகின்றது , உண்ணாமல் உறங்காமல் கதறுகின்றா என்றா வழக்கு தொடுத்தார்கள்?


நான் மதம் மாறவில்லை : வை.கோ

இவரையும் நம்ப முடியாது, அந்த மோகன் சி லாசரஸ் என்பவரையும் நம்ப முடியாது இரண்டுமே பிராடு வகையறா

ஆக இரண்டு பேருமே பொய் சொன்னாலும் ஆச்சரியபட ஒன்றுமில்லை

எனினும் வைகோ கிறிஸ்தவர் ஆனார் என பகிரங்கமாக சொன்ன மோகன் சி லாசரஸ், வைகோவின் பதிலால் என்ன ஆவார்?

இனி பைபிளின் அனைத்து சாப வசனங்களும் வைகோ மீது பொழியபடலாம்.


 

மோடிக்கு வழிவிட்டு மகா அமைதியாக ஒதுங்கிய அந்த அத்வாணிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Image may contain: 1 personநிச்சயம் அந்த ராம் ஜென்மபூமி எல்லாம் தொடக்கத்தில் பிரச்சினையே அல்ல‌

இஸ்லாமியர்கள் மசூதி அருகேத்தான் இந்து ஆலயமும் இருந்திருக்கின்றது, ஒரு சர்ச்சையுமில்லை

இந்நாட்டில் மதவிவகாரங்களை வெள்ளையன் கையில் எடுத்த நாளிலே அந்த ராம் ஜென்ம பூமி கிளப்பிவிடபட்டது

பின்னாளில் பாகிஸ்தான் பிரிவினைக்கு பின் அது அணைத்திருக்கலாம் ஆனால் அணையவிடாமல் காத்ததில் அத்வாணி பங்கு மகா முக்கியம்

பின்னாளில் அந்த மசூதி இடிக்கபட்டபொழுது அவரும் காரணம் என்ற சர்ச்சை இன்றுவரை உண்டு

அந்த பெரும் சர்ச்சையினை தாண்டி அத்வாணியிடம் ஒரு சில குணங்கள் உண்டு

முதலாவது சீனபோர் முதல் எல்லா விஷயங்களிலும் அவர் மிக உறுதியாக நாட்டுபற்றோடு நின்றார் அது மறக்கமுடியாதது, காஷ்மீர் பிரச்சினையில் அவரின் நிலைப்பாடு உறுதியானது

எந்த பிரிவினைவாதியினையும் அவர் ஆதரித்ததில்லை, எதிர்கட்சி காங்கிரசாயினும் ஈழவிவகாரத்தை எல்லாம் அரசியல் ஆக்கவில்லை. அது கவனிக்கதக்கது.

உயிருக்கு கடும் அச்சுறுத்தல் இருந்தாலும் அவர் எங்கும் அஞ்சியதாக தெரியவில்லை, தமிழகத்தில் கூட மயிரிழையில்தான் தப்பினார்

அத்வாணியிடம் இருந்த மிக நல்ல விஷயம் கட்சியில் எல்லோரையும் வளர்த்துவிடுவது

வாரிசு அரசியலோ இல்லை எல்லாம் தான் தான் என்ற ஒரு லகானோ அவரிடம் இல்லை

அப்படி அத்வாணி நினைத்திருந்தால் அந்த கட்சி வளர்ந்திருக்காது, மோடி அசுரபலத்தோடு வலம் வந்திருக்க மாட்டார்

அத்வாணி அரசியல் சர்ச்சைய்குரியது, ஆனால் நல்ல கட்சி தலைவன் எப்படி இருக்கவேண்டும் என்ற அந்த பண்புக்கு அண்ணா போலவே அத்வாணி பெரும் உதாரணம் என்பதை மறுக்க முடியாது

வெறும் சங்கமாக இருந்த பாஜகவினை இவ்வளவு பெரும் அசுர சக்தியாக்கிவிட்டு மோடிக்கு வழிவிட்டு மகா அமைதியாக ஒதுங்கிய அந்த அத்வாணிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

 

நாம பேசினால்தானே பிரச்சினை ஆகுது?

Image may contain: 3 people“நாம பேசினால்தானே பிரச்சினை ஆகுது? இனி எழுதி மட்டும் பார்ப்போம்?

இனி கலைஞர் வீட்டுக்கு போகவே மாட்டேன், கோபாலபுரத்தில் தாமரை மலரும்” “


என்ன யழவு லட்சுமிடா இது?

இதற்கும் பெண்ணியத்திற்கும் என்ன சம்பந்தம்?

இதெல்லாம் பெண்ணிய படம் என சொல்வனுக்கு, சன்னி லியோனும் , மியா கலிபாவும் உலகின் மிகபெரும் பெண்ணியவாதிகளாக இருப்பார்கள் போலிருக்கின்றது


பண மதிப்பு நீக்க கண்டன கூட்டத்தில் பங்கேற்று ஸ்டாலின் ஆவேசம் : செய்தி

அதாவது திங்கட்கிழமை மோடியினை சந்தித்தது கலைஞரின் மகன் ஸ்டாலின், இன்று சீறிகொண்டிருப்பது திமுக செயல் தலைவர்

நாளை மோடி கட்சியுடன் கூட்டணி கண்டால் அது கூட்டணி தலைவர் ஸ்டாலின்

இப்படி பல ஸ்டாலின்கள் தமிழகத்தில் இருக்கின்றார்கள்.


உள்ளாட்சி அமைப்புகள் அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தாமல் இருப்பதால் வடிகால்கள் பராமரிப்பில்லை , 
ஊருக்குள் வெள்ளம் வருகின்றது. உடனே உள்ளாட்ச்சி தேர்தல் நடத்த வேண்டும் : செய்தி

ஏற்கனவே உள்ளாட்சி தேர்தல் வைத்து அதில் பதவிக்கு வந்தவர்கள் ஓடைகளையும், குளங்களையும் ஆக்கிரமிக்க துணை போனதால்தான் ஊருக்குள் வெள்ளம் வந்த உண்மையினை சொல்ல ஒருவனுமில்லை


எமது பக்கம் சிரிக்க மட்டுமே (குஷ்பு பதிவுகள் தவிர)

கொஞ்சமேனும் நகைசுவை உணர்ச்சியே இல்லாமல், ஏதோ வடகொரிய அணு ஏவுகனையினை எதிர்கொள்ளும் ராணு வீரர்கள் போல இருக்கும் நபர்கள் தயவு செய்து வெளியேறவும்

இது வெறும் பொழுது போக்குதளம். இங்கு புரட்சி எல்லாம் சாத்தியமில்லை

ஒவ்வொரு விஷயத்திற்கும் பல கோணங்கள், ஒன்றிற்கும் மேற்பட்ட உண்மைகள் இருக்கும்

நாம் அதனைத்தான் விளையாட்டாக சொல்லிகொண்டிருக்கின்றோமே அன்றி நாம் மிக சீரியசான பத்திரிகையாளரோ அல்லது விமர்சகரோ அல்ல‌

மதவெறியும், கட்சி சார்பும் அறவே இல்லை ஆனால் நாட்டுபற்று உண்டு. சில உண்மைகளை சொல்ல அச்சமும் இல்லை அவ்வளவுதான்.

இதில் நீங்களாக ஒரு உருவத்தை கற்பனை செய்து நீ இப்படித்தான் இருந்தாக வேண்டும் என்றால் ஓடிவிடுங்கள்

இந்த சீரியஸ் மூஞ்சிக்காரர்கள் எல்லாம் இங்கு தேவையில்லை, சிரித்துவிட்டு கடந்துபோக விரும்புவர்கள் மட்டும் இங்கு இருங்கள்

காந்தி நேரு காமராஜர் எல்லாம் ஒன்றும் கிழித்துவிடாத நாட்டில் நாம் ஒரு புல்லும் புடுங்க முடியாது என்பது யாருக்கு தெரியாது

அதனால் எமது பக்கம் சிரிக்க மட்டுமே, (குஷ்பு பதிவுகள் தவிர)

கொஞ்சமேனும் நகைச்சுவையே இல்லாத ஜென்மங்கள் எல்லாம் ஓடிவிடுங்கள்

சக்திவாய்ந்த பெண்மணிகள் பட்டியலில் தலைவி பெயர் ஏன் இல்லை…

இந்தியாவின் சக்திவாய்ந்த பெண்மணிகள் பட்டியலில் தலைவி பெயர் இல்லை

ஏன் இல்லை? வானத்து நட்சத்திரங்களை எண்ணும்பொழுது சூரியனை மறந்துவிடுவது போல தவறவிட்டிருக்கின்றார்கள்.

அப்பட்டியலில் பிரியங்கா காந்தி பெயரும் இல்லை என்பது வேறு விஷயம்.

தலைவி பெயர் பட்டியலில் இல்லாதது சங்கத்தின் பொதுகுழுவில் விவாதிக்கபட்டு, “கருத்துகணிப்பில் சங்கத்திற்கு நம்பிக்கை இல்லை..” என தீர்மானம் நிறைவேற்றியாயிற்று

உலகின் சக்திவாய்ந்த பெண்களில் முதல் 100 இடத்தில் சிவ்நாடாரின் மகள் ரோஷினி நாடார்

Image may contain: 1 person, standing

உலகின் சக்திவாய்ந்த பெண்களில் முதல் 100 இடத்தில் இருக்கின்றார், HCL நிறுவண சிவ்நாடாரின் மகள் ரோஷினி நாடார் வந்திருக்கின்றார்.

அரசியல் , சினிமா அல்லாமல் ஒரு பெண் அந்த உயரத்தை தொட்டிருப்பது பெரும் விஷயம்.

இதனையெல்லாம் தென்னக நாடார் இம்சைகள் சொல்லுமா என்றால் சொல்லாது

ஒரு தாழ்த்தபட்ட இனத்திலிருந்து வந்த வாரிசு, அதுவும் பெண் மிகபெரும் உயரத்தை தொட்டதை எல்லாம் சொல்லமாட்டார்கள்

மாறாக கராத்தே செல்வின், வெங்கடேசன், ராக்கெட் ராஜா போன்ற ரவுடிகளின் படத்தை தூக்கிகொண்டு “நாடார் லே” என சொல்லிகொண்டிருப்பார்கள்

அதனை விட கொடுமை, சரத்குமாரை கொண்டாடிகொண்டிருப்பது காரணம் அவரும் நாடாராம்

இந்த ராமராஜன், சார்லி, குமரிமுத்துவினை எல்லாம் ஏன் விட்டுவிட்டார்கள் என தெரியவில்லை.

சிவநாடார் படித்திருக்கின்றார், பெரும் தொழிலை செய்தார் தன் மகளை தலை நிமிர வைத்திருக்கின்றார்.

(சிவநாடார் இந்தியும் படித்திருக்கின்றார் என்பது கூடுதல் தகவல்)

அப்படி இந்த இம்சைகளை பார்த்து “போங்கடா போய் புள்ள குட்டிகள படிக்க வைங்கடா” என சொன்னால் ஏதாவது தென்மாவட்ட பஸ் ஸ்டாண்டிற்கு வந்துவிட்டு போ பார்க்கலாம் என்பார்கள்