இன்று திப்புவின் பிறந்தநாள்

Image may contain: one or more people

இந்தியாவில் முதன் முதலில் பிரிட்டிசார் முடிசூட்டிகொண்ட இடம் கல்கத்தா, அங்கிருந்தேதான் படை நகர்த்தலை தொடங்கினார்கள்.

எந்த இடத்திலும் அவர்கள் பெரிதாக திணறியதாக சரித்திரம் இல்லை, அசால்ட்டாக அடித்துவிட்டு, முன்னேறிகொண்டிருந்தார்கள், வடக்கே பெரும் எதிர்ப்புகள் அவர்களுக்கு அன்று இல்லை. அடிக்கவேண்டும், மிரட்டவேண்டும் அல்லது லஞ்சம் கொடுக்கவேண்டும் அவ்வளவுதான், கம்பெனி கொடி பறக்கும்.

இந்தியாவில் அவர்கள் சந்தித்த ஒரு பெரும் சவால் மாவீரன் ஹைதர் அலியும், அவரின் மகன் மைசூர் சிங்கம் திப்புசுல்தானும், உண்மையில் ஹைதர் அலி சாதாரண பணியாளர்தான், ஆனால் சீர்கெட்டு கிடந்த மைசூர் சாம்ராஜ்ய நிர்வாகத்தை, ஒரு நாட்டுபற்றாளனாய் நின்று காப்பாற்ற அரியணை ஏறி அதனை செய்தும் காட்டினார்.

ஆங்கிலேயருக்கு பெரும் சிம்மசொப்பணமாய் இருந்தவர் ஹைதர் என்றால், அவர்களுக்கு புலிசொப்பனமாக இருந்தவன் மாவீரன் திப்பு சுல்தான். அவனது ஆட்சி அப்படி, நிர்வாகம் அப்படி,எல்லாவற்றிற்கும் மேல் அவரது மதசகிப்புதன்மை அப்படி.

ஹைதருக்கு பின்னால் மைசூர் அவ்வளவுதான் என இளம் திப்புவினை எடைபோட்டு வந்தனர் வெள்ளையர்.
முதல் மைசூர்போரில் அடிபடும்பொழுதே ஆங்கிலேயருக்கு தெரிந்தது, “இவன் வேறமாதிரி” என்று, இரண்டாம் மைசூர் போரில் வெள்ளையனுக்கு திப்பு உயிர்பிச்சை அளித்தபொழுதே தெரிந்தது இவன் வெல்லமுடியாதவன் என்று.

அப்படித்தான் இருந்தார் திப்பு, பிரென்ஞ் மாவீரன் நெப்போலியன் தன் காலத்தில் ஒரு சகவீரனை மதித்து ராணுவ உதவி அளிக்க தயாராக இருந்தார் என்றால் அது திப்பு மட்டுமே, காரணம் வீரனின் பெருமை வீரனுக்குத்தான் தெரியும்.
ஆனால் ஐரோப்பாவில் பலபோர்களில் அவர் பிசியாக இருந்ததால் உதவிக்கு வரமுடியவில்லை.

கொஞ்சமும் சோர்ந்துபோகாத திப்பு சுல்தான் மூன்றாம் மைசூர் போரில், 500 அடிவரைபாயும் ஏவுகனைகளை பயன்படுத்தி ஆங்கிலேயரை அலறவிட்டார், உண்மையில் அந்தபோரோடு கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவினை விட்டே ஓடும் நிலைக்கு தள்ளபட்டது, திப்புவின் நிலை அப்படி.

படைகளால் வெல்லமுடியாத அம்மாவீரனை வேறுமாதிரி அடக்க எண்ணினர் வெள்ளையர், அதாவது அவன் இஸ்லாமியனாக இருந்தாலும் எல்லா மதங்களையும் நேசித்தார்,மதித்தார். புகழ்பெற்ற சிரிரங்கபட்டினம் ஆலயத்திற்கு அவர் அள்ளிகொடுத்த நகைகளும், சிலைகளுமே அதற்கு சாட்சி.

கிட்டதட்ட 200 இந்து ஆலயங்களுக்கு அவர் நன்கொடை அளித்ததும் வரலாறு. ஒரு மிக சமத்துவமான ஆட்சியினை செய்துகொண்டிருந்ததுதான் அவர் பலம், அவரது படையில் சரிக்குசரி இந்துக்களும் இருந்தனர்.

இங்குதான் வெள்ளையர் சிந்தித்து இந்து முஸ்லீம் வேற்றுமையினை வளர்த்தனர், பல வழிகளில் அவர் இந்துவிரோதி என சித்தரிக்கபட்டு, இறுதி போரில் தான் மிக நம்பிய தனது திவானால் வஞ்சகமாக வீழ்த்தபட்டார்.

சுருக்கமாக சொல்வதென்றால் திப்பு வீழ்ந்தபின் வெள்ளையன் வாய்விட்டு சொன்னான்” இனிமேல்தான் இந்தியா நமக்கானது”
இன்றுவரை அவர் கழுத்தில் பாய்ந்த குண்டினை செலுத்தியது வெள்ளையனா? என்ற சந்தேகம் உண்டு.

ஆனால் இந்த வெற்றியில் வெள்ளையன் ஒரு பாடம் படித்திருந்தான். இந்தியாவினை துப்பாக்கி முனையில் ஆள்வது கடினம், ஆனால் இந்து முஸ்லீம் பிரிவினையில் ஆள்வது மகா சுலபம்.

அந்த சிரிரங்கபட்டிண களத்தில் வெள்ளையன் படித்தபாடம்தான் பின்னாளில் 150 வருடம் அவன் இங்கு ஆளவும், இந்த தேசம் இன்று 3 ஆக உடையவும், இன்று முகநூல் வரை அந்த பிரிவினை வளர்ந்து நிற்கவும் காரணம்.

நிச்சயமாக திப்பு மாவீரன், இந்த மண்ணிற்கு கிடைத்தவரம். இன்றும் அவன் பயன்படுத்திய ஏவுகனையின் வடிவம் அமெரிக்காவில் உண்டு. ஏவுகனை உலகின் பிதாமகன் வான் ப்ரவுண் நெற்றியில் அடித்தார்போல் சொன்னார் ” நான் ஒன்றும் கண்டுபிடிப்பாளன் அல்ல, திப்புசுல்தான் எனும் இந்தியனின் கண்டுபிடிபினை மேம்படுத்தினேன்”.

அதனாலதான் அமெரிக்கன் அப்துல்கலாமினை அப்படி சொன்னான், இவர் “இரண்டாம் திப்புசுல்தான்”.

இன்று மனசாட்சியே இல்லாமல் அவரை திட்டி தீர்க்கின்றார்கள், அந்தோ பரிதாபம். இவர்களுக்கும் இறுதியுத்ததில் வெள்ளையருக்கு கதவினை திறந்துவிட்ட அந்த தேசதுரோகிக்கும் என்ன வித்தியாசம் இருக்கமுடியும்?

மாவீரன் மருதநாயகம், மாவீரன் திப்புசுல்தான்,சீக்கியர்களின் ரஞ்சித் சிங் இவர்கள் எல்லாம் வெள்ளையரை எதிர்த்த அடையாளம் அல்லவா? இவர்கள் இந்துக்கள் இல்லை என்றால் இந்தியர்கள் இல்லை என்பது நிச்சயம் கண்டிக்கதக்கது.

இங்கு மதத்தின் பெயரால் அட்டகாசம் செய்பவர்களுக்கு, அதனை பிழைப்பாக கொண்டு திரிபவர்களுக்கு எல்லா மதத்தினரையும், எல்லா ஆலயங்களையும் மிக சமமாக கருதி, குறிப்பாக இந்து ஆலய அடையாளங்களை பாதுகாத்த அந்த மாவீரனை பழிக்க ஒரு தகுதியும் இருப்பதாக உண்மையான தேச அபிமானிகள் நினைக்கவே மாட்டார்கள்.

சிலர் சொல்வார்கள் தஞ்சை பகுதி கால்வாய்களை உடைத்தான், இந்து மக்கள் என்பதால் உடைத்தான் என்றெல்லாம் கதையளப்பார்கள், அதன் உண்மை என்ன?

அக்காலத்தில் காவேரியில் வரும் வெள்ளம் தஞ்சை பயிர்களை அழித்தால் அதற்கு மைசூர் சமஸ்தானம் நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும், ஆம் அப்படியும் ஒரு காலம் இருந்திருக்கின்றது

திப்புவிற்கு வேலுநாச்சியார், மருதுபாண்டியர், கொங்குமண்டலம் எல்லாம் பெரும் ஆதரவு இருந்தது, தமிழகத்தை திப்புவிடம் இருந்து பிரிக்க வெள்ளையர் அந்த நஷ்ட ஈடு பிரச்சினையினை பெரிதாக்கினர்

தஞ்சைவாசிகள் அதிகபடியான நஷ்ட ஈடு வெள்ளையாரால் கேட்க வைக்கபட்டு பின் அதில் குழப்பங்களும் விளைந்தன, தஞ்சை மராட்டிய மன்னனும் அதற்கு துணை சென்றார்

இந்த சிக்கல்தான், இந்த நஷ்ட ஈடு பிரச்சினைதான் பின் மைசூர் அணை கட்டவும், ஒரு சொட்டு நீர் தஞ்சைக்கு வராமலும் போனதற்கு பிள்ளையார் சுழி

திப்பு தஞ்சை மக்கள் இந்துக்கள் என்பதால் காவேரியில் சர்ச்சை செய்யவில்லை. வெள்ளம் வந்தால் நான் பணம் தரவேண்டுமா என்றுதான் கேட்டுகொண்டிருந்தான்.

பெரும் வீரனாயினும், ஒரு பக்கபலம் இல்லாமல் போரிட்டான் திப்பு. மராட்டியர் உதவிக்கு வரவில்லை, மலையாள மன்னர்களும் உதவிக்கு வரவில்லை, அப்படி ஒற்றுமையாக வந்திருந்தால் அன்றே வெள்ளையன் கதை முடிந்திருக்கும், இந்திய வரலாற்றில் பெரும் தவறு இது.

தூரத்தில் நெப்போலியன் உதவ தயாராக இருந்தும், பக்கத்து நாட்டுகாரர்கள் முகம் திருப்பி வெள்ளையரோடு கைகோர்த்தார்கள் அல்லவா? இங்குதான் இந்தியாவின் தலைவிதி திருத்தி எழுதபட்டது.

அந்த தவறினை செய்துதான் இந்நாடு இப்படி பின் தங்கிவிட்டது, இன்னும் அவன் இஸ்லாம் என்றே சொல்லி அதே தவறினை செய்வீர்களாயின் இந்நாடு இன்னும் 100 வருடம் நிச்சயம் பின்னோக்கி சென்று, ஆப்கன் நிலையினைத்தான் அடையும்.

இவர்கள் சொல்வதனால் எல்லாம் அம்மாவீரனின் புகழ் மங்காது. இந்தியாவின் புலி என வெள்ளையன் எழுதிவைத்த சரித்திரமும். அவன் அடக்க சடங்குகளில் வெள்ளையர் காட்டிய உயர் மரியாதையும் காலத்தின் கல்வெட்டு பக்கங்கள்.

அவன் உருவாக்கிய அந்த ஏவுகனை அவனின் அறிவுதேடலுக்கு பெரும் சாட்சி, அவ்வளவு ஏன் அவர் இறந்த பின் அந்த வாளினை வீசிபார்த்தோர் ஆச்சரியத்தில் உறைந்தனர், அது பல மூலிகை இன்னும் பல உலோகளால் ஆன எடை மிக குறைந்த மகா உறுதியான வாள், அதிலே அவனின் ஆற்றல் தெரிந்தது.
திப்புசுல்தான் மங்கா புகழ்பெற்ற மாபெரும் உச்ச வரலாற்று நட்சத்திரம்,

அந்த வாள் பிரிட்டானியரால் லண்டன் கொண்டுசெல்லபட்டது பின் விஜய் மல்லையா ஏலத்தில் எடுத்து இங்கு கொண்டுவந்தார், மல்லையாவின் ஒரே உருப்படியான காரியம் அதுதான்.

(இனி மல்லையாவினை ஏலம் எடுத்துத்தான் இங்கு கொண்டுவரவேண்டும் என்பது வேறு விஷயம்)

இவர்கள் “வாள் வாள்” என கத்துவதால், அவனின் வாளின் பெருமை கூட குறைந்துவிடாது.

இன்று திப்புவின் பிறந்தநாள், அந்நியருக்கு மிகபெரும் சிம்ம சொப்பணமாய் விளங்கிய அந்த மாவீரனுக்கு, இத்தேசம் வெள்ளையனுக்கு கிடைக்காமல் இருக்க பெரும் எதிர்ப்பினை கொடுத்த அவனுக்கு வீர வணக்கம்

இந்தியா உள்ள அளவும் அந்த மாவீரனான‌ மைசூர் புலியின் பெயர் நிலைத்திருக்கும்.

(இதனை எழுதியதால் இன்று ஆர்.எஸ்.எஸ் வழங்கும் தினப்படி கிடைக்காதாம், அபராதமாக இன்னும் 3 நாட்கள் தரமாட்டார்களாம் சொல்லிவிட்டார்கள்)

 

கொடநாடு எஸ்டேட் 2000 ஆயிரம் ஏக்கராம் …

அமெரிக்காவில் மைக்கேல ஜாக்சன் பண்ணை வீடே ஆயிரம் ஏக்கர்தான்

கொடநாடு எஸ்டேட் 2000 ஆயிரம் ஏக்கராம்

ஜெயலலிதா அம்மா மைக்கேல் ஜாக்சனை விட அதிகமாக ஆடி சம்பாதித்திருக்கின்றது என நம்பிகொள்ள வேண்டியதுதான், எழுப்பியா கேட்க முடியும்?

இப்பக்கம் நோக்கினால் அடுத்த அதிர்ச்சி.

தினகரன் பண்ணை வீடு 100 ஏக்கர், ஜாஸ் சினிமா ஆயிரம் கோடி, எங்கு நோக்கினாலும் பென்ஸ் கார்கள்

இவர்கள் எல்லாம் எங்கு மைக்கேல் ஜாக்சன் போல ஆடினார்கள்? அல்லது எம்.எஸ் சுப்புலட்சுமி போல பாடினார்கள்? எந்த நாட்டில் கச்சேரி நடந்தது?

விழுந்து விழுந்து ரன் எடுக்கும் கோலிக்கும், ஓடி ஓடி கோல் அடிக்கும் மெஸ்ஸிக்கும் கூட இவ்வளவு சொத்துக்கள் வந்திருக்காது.

 
 

தினகரன் பல்கலை கழகம் மீது அப்படி என்ன கடுப்பு?

Image may contain: one or more people, wedding and outdoor

தினகரன் பல்கலை கழகம் மீது என்ன கடுப்பு என பலர் கேட்கின்றார்கள்

கிறிஸ்தவம் என்றால் என்னவென்று தெரியுமா? தெரியாவிட்டால் படியுங்கள் என்னிடம் கேட்கமாட்டீர்கள்

அந்தரத்தில் ஆடையின்றி உயிரிவிட்டு மதத்தை தொடக்கினார் இயேசு, அவரின் சீடர்கள் கால்நடையாக நடந்து மதத்தை வளர்த்தனர்

இந்நாட்டிற்கு அன்று முறையான கப்பல் இல்லை, வந்தால் திரும்புவோமா என தெரியாது, ஆனால் உடுத்த உடையுடன் வந்து பணியாற்றினர் அந்நாளைய போதகர்கள்

அதுவும் இங்கு வந்து தமிழ்படித்து தமிழராய் வேட்டி , தமிழரில் ஒருவராக வாழ்ந்து அவர்கள் பட்ட சிரமம் கொஞ்சமல்ல,

ஆனால் இவர்களோ லண்டன்காரர்களாக மாறிகொண்டிருக்கின்றார்கள்.

அவர்கள் தங்கள் சொத்துக்களை எல்லாம் விற்றுவிட்டு இங்கு கொண்டுவந்து கொட்டினார்கள், வேலூர் மருத்துவமனை , முல்லைபெரியார் அணை போன்றவை அப்படிபட்டவை

தன் சொத்தை எல்லாம் இந்நாட்டு எளிய மக்களுக்கு கொடுத்தவர் போக, பிச்சையெடுத்து ஏழைகளுக்கு உதவியோர் உண்டு

அன்னை தெரசா போன்றோர் அவ்வகை

இல்லாதவனுக்கு உழைக்க வேண்டும், அவனை அருகிருந்து காக்க வேண்டும், அவனில் ஒருவனாக வாழவேண்டும்

அதுதான் கிறிஸ்தவம்

மாறாக எனக்கு உருக்கமாக பேசதெரிகின்றது என்பதற்காக பேசிகொண்டும், வெள்ளையன் போல டை கோட் எல்லாம் போட்டு கொண்டும் லண்டனில் சென்று கிறிஸ்தவம் பேசி காணிக்கை பிரிப்பது என்ன வகை?

லண்டனில் யாருக்கு கிறிஸ்தவம் தெரியாது?

அன்று இந்தியர்களை தேடிவந்த ஐரோப்பியர் போல இன்று ஆப்ரிக்கர்களை தேடி செல்ல இவர்கள் தயாரா? இல்லை

மாறாக கல்லூரி கட்டுவது, கட்டங்கள் கட்டுவது எல்லாம் கடவுளுக்கு ஏற்புடையதா?

அப்படி என்ன வரம்பெற்றுவிட்டார்கள் இவர்கள்? அக்கால கிறிஸ்தவ புனிதர்களை விடவா தினகரன் கும்பல் அற்புதம் செய்துவிட்டது

பீட்டர் முதல் அந்தோணியார் வரை செய்யாத புதுமைகளா?

அவர்கள் காணிக்கை வசூலித்தார்களா? கட்டடம் கட்டினார்களா?

அவர்கள் இயேசு சொன்னதை அப்படியே செய்தார்கள், இயேசு என்ன சொன்னார் ” கடவுளிடம் நீங்கள் இலவசமாக பெற்றதை மக்களுக்கு இலவசமாக கொடுங்கள்”

அப்படி பெரும் அற்புதங்களை செய்த கிறிஸ்தவ மகான்கள் எல்லாம் பராரிகளாக, பரதேசிகளாக வாழ்ந்திருக்க இந்த தினகரன் குடும்பம் ஏதோ லண்டன் லார்டு குடும்பம் போல அழிச்சாட்டியம்

ஏதோ இயேசுநாதருக்கு வழியில்லாததாது போலவும், அவருக்கு இவர்களை விட்டால் யாருமில்லாது போலவும், அவர் இவர்களிடம் மண்டியிட்டு எனக்காக உழையுங்கள் என கேட்டுகொண்டது போலவும் இம்சைகள்

ஆயிரம் சர்ச்சைகள், அழிச்சாட்டியம் உண்டென்றாலும் பால் தினகரன் அன்று சொன்ன வார்த்தைகளுக்கு கடவுளே மன்னிக்கமாட்டார்

என்ன சொன்னார்?

தினகரன் இறந்திருக்கின்றார். அவரே வங்கி ஊழியர் அது போக ஏகபட்ட சொத்துக்களை கடவுள் பெயரால் சம்பாதித்திருந்தார்கள்

ஆனாலும் பால் தினகரன் சொன்னது “என் தந்தையின் அடக்க செலவுக்கு பணமில்லையே, நான் என்ன செய்வேன்?”

எப்படிபட்ட பெரும் பொய் இது, யாராவது ஏற்றுகொள்ள முடியுமா?

ஆனால் அதற்கும் கொட்டி கொடுத்த கூட்டம் உண்டு

இந்த நபர் எப்படிபட்டவர் என நீங்களே முடிவு செய்யுங்கள். இவர்கள் வாழ்வது கிறிஸ்தவ வாழ்க்கை அல்ல‌

தினகரன் என்றல்ல, அன்று இங்கு மெஷினரிகள் உன்னதமான நோக்கத்தோடு உருவாக்கிய கல்விநிலையங்கள் இன்று பெரும்பாலும் சிறுபான்மை போர்வையில் ஒளிந்துகொண்டு செய்யவே கூடாத அநியாயங்களை செய்கின்றன‌

இது கிறிஸ்துவே வெறுக்கும் வாழ்வு

அம்மா அம்மா என சொல்லி சசிகலா கோஷ்டி சுருட்டியதற்கும், ஜீசஸ் என சொல்லி இவர்கள் சுருட்டியதற்கும் ஒரு வித்தியாசம் காண முடியாது

 

சசிகலா குடும்பம் தப்புவது சிரமம் என செய்திகள்

Image may contain: 3 peopleஇந்த பச்சமண்ணுக்கு இன்று பிறந்தநாளாம்

ஆனால் நேற்றே பரிசு கொடுத்துவிட்டார்களாம்..


1990 95ல் சசிகலா பெரும் வில்லங்கத்தில் மாட்ட காரணமான விஷயம் அந்த வளர்ப்பு மகன் திருமணம்

அதில் வந்ததுதான் முதல் சிக்கல், அதனை தொடர்ந்து வழக்கு எல்லாம் வந்து, ஜெயாவும் தன் வளர்ப்பு மகனை போ சனியனே என விரட்டி, வழக்கில் தப்பமுடியாமல் இன்று சசிகலா உள்ளேயும், ஜெயா குற்றவாளியும் ஆனது எல்லோருகும் தெரியும்

அந்த வழக்கு நடந்துகொண்டிருக்கும் பொழுது, அதாவது 18 வருடம் இழுக்கும் பொழுது, குன்ஹாவினை சந்திக்கும் முன்னர் சசிகலா செய்த அடுத்த தவறு ஜாஸ் சினிமாவினை வாங்கியது

கடந்த அதிமுக ஆட்சியில்தான் அது வாங்கபட்டது, லீசுக்கு எடுத்தோம் என வெளியில் சொன்னாலும் உண்மையில் அது சசிகலா சொத்து

அது சர்ச்சையாகும் பொழுதே சசிகலா இன்னும் திருந்தவில்லை, இதனால் ஜெயா மிகபெரும் சிக்கலுக்கு உள்ளாவார் என பல குரல்கள் வந்தன.

அதுவும் எங்கோ பிசினஸ் பார்த்துகொண்டிருந்த விவேக் என்பவரை நிர்வாகியாக‌ வைத்து வாங்கி என்னவெல்லாமோ செய்தார் சசிகலா

அதுவும் ஐநாக்ஸ் திரையரங்குகளை வாங்கி குவித்துகொண்டே செல்வது திரையுலகத்தை கட்டுபடுத்தும் முயற்சி என்ற குற்றசாட்டு அன்றே இருந்தது, ஆக எல்லோரும் போட்டு சாத்தியிருக்கின்றார்கள்

விவேக் வெளிநாட்டில் தொழில் செய்திருக்கலாம், ஆனால் இந்திய யதார்த்தம் அதுவல்ல, அவரை போல ஆயிரம் விவேகமானவர்கள் உள்ள நாடு இது, விடுவார்களா?

இப்போது உள்ள சிக்கல்களில் மிகபெரிய சிக்கலாக உருவெடுத்திருப்பது ஜாஸ் சினிமா சொத்துதான்

இதில் சசிகலா குடும்பம் தப்புவது சிரமம் என செய்திகள் வருகின்றன.

ஒருமுறை பட்டும் கொஞ்சமும் திருந்தாமல் செய்த தவறில் மறுபடியும் சிக்கியிருக்கின்றது மன்னார்குடி குடும்பம்

டிரம்பின் அதிரடிகள் அப்படியே இருக்கின்றன

Image may contain: 4 people, people smiling, suit

டிரம்ப் ஒரு வழியாக தன் சுற்றுபயணத்தினை வெற்றிகரமாக வம்புகளுடன் நடத்திகொண்டிருக்கின்றார்

தென் கொரியா சென்ற டிரம்ப் வடகொரியா மக்கள் வாழ தகுதி இல்லா நாடு என்றார். அது இப்பொழுது அப்படியா இல்லை இனி அமெரிக்காவோடு போர் நடத்தி அந்நிலையினை எட்டுமா என தெரியவில்லை

அநேகமாக வருங்காலத்தில் அது மக்கள் வாழ தகுதியில்லா நாடாகும் என அவர் எச்சரித்ததாகவே விமர்சகர்கள் சொல்கின்றார்கள்

வடகொரியாவினை ஒட்டியபடி அமெரிக்க கப்பல்கள் டிரம்ப் பாதுகாப்பிற்காக செல்ல பல்லை கடித்தபடி இருக்கின்றார் வடகொரிய வெள்ளை தக்காளி

சீனாவிற்கு வந்த டிரம்ப் செய்திருப்பதுதான் உச்சகட்ட குசும்பு

அதாவது சீனாவில் டிவிட்டர் எல்லாம் அனுமதி இல்லை. மிகுந்த ஊடககட்டுபாடு கொண்ட நாடு அது, நம்ம ஊர் டிவிட்டர், பேஸ்புக், வாட்சப் சண்டை எல்லாம் வாய்ப்பே இல்லை

வேலை செய், அரசை பற்றி பேசாதே , வேலை செய்து சாப்பிடு அப்படியே செத்துபோ இல்லையென்றால் நீ சாக அரசு உதவும் என்ற உயரிய கோட்பாடு கொண்ட நாடு அது

அங்கு சென்ற டிரம்ப் நான் டிவிட்டரிலே இருப்பவன் நான் டுவிட் செய்ய வசதிகள் வேண்டும், பாதுகாப்பான இணையம் வேண்டும் என்றேல்லாம் கேட்டிருக்கின்றார்

வேண்டா வெறுப்பாக சீனாவும் அனுமதி வழங்கிவிட்டது

சீனாவில் இருந்து டிவிட் செய்கின்றேன் என டிவிட் செய்து, சீன அரசை கடுப்பாக்கியிருக்கின்றார் டிரம்ப்

அடுத்து பிலிப்பைன்ஸ் செல்வாராம்

எங்கு சென்றாலும் டிரம்பின் அதிரடிகள் அப்படியே இருக்கின்றன, பிலிப்பைன்ஸில் இனி என்ன சொல்கின்றார் என பார்க்கலாம்.


பிலிப்பைன்சுக்கு செல்ல இருக்கின்றார் டிரம்ப், முன்பு பிலிப்பைன்ஸ் அமெரிக்க நட்பு நாடு, இரண்டாம் உலகப்போரில் பிலிப்பைன்ஸை அமெரிக்காதான் ஜப்பானிடம் இருந்து விடுவித்தது அதிலிருந்து அமெரிக்க ராணுவதளம் பிலிப்பைன்ஸில் உண்டு

இப்பொழுது பிலிப்பைன்ஸ் சீனாவின் நட்பு நாடு அதனால் அந்த ராணுவதளத்தை காலி செய்யவேண்டும் என்பது சீனாவின் தூண்டுதல், இது அமெரிக்காவிற்கு சினம்

இப்படியாக ஒரு முறுகல் அரசியலில் டிரம்ப் பிலிப்பைன்ஸ் செல்ல இருக்கின்றார்

அங்கிருக்கும் அதிபர் கொஞ்சம் ஒருமாதிரியானவர், அதாவது தமிழிசை போல பேசிவிட கூடியவர்

ஒபாமா வருகையின் பொழுது அமெரிக்கர்கள் குரங்குகள் என சர்ச்சை ஏற்படுத்தியவர்

இப்பொழுது டிரம்ப் வரும் சமயம் ஒரு கூட்டத்தில் நான் 15 வயதிலே கொலை செய்தவன் என தமிழக சினிமா வில்லன் போல பேசியிருக்கின்றார்

டிரம்ப் வரும் நேரம் அவர் இப்படி பேசியிருப்பது அதிர்வுகளை கொடுக்கின்றது

இதற்கெல்லாம் அஞ்சுவாரா டிரம்ப், நெவர்


 

வாமணன் : நெப்போலியன் வரலாறு : 10

நெப்போலியன் கதை என்ன ஆனது? என ஒரு பயலும் கேட்கவில்லை, ஆனாலும் சொல்வது நம் கடமை

Image may contain: one or more people, people riding horses, horse and outdoor

நெப்போலியனின் வெற்றியில் ஐரோப்பா அதிர்ந்து கொண்டிருந்தது, மிக அசால்ட்டாக ஸ்பெயின், போர்சுக்கல் தவிர எல்லா நாடுகளையும் அமுக்கியிருந்தான். ஜெர்மன் அப்பொழுது இப்பொழுது போல் அல்ல, பிரஷ்யா என வேறு பெயரில் வேறு வடிவத்தில் இருந்தது

ரஷ்யாவும், ஆஸ்திரியாவும் நாம் நண்பர்களாக இருக்கலாம் “இந்த கோட்டை தாண்டி..” என சொல்லிவிட்டு அவனுக்கு அடங்கியே இருந்தன‌

அதாவது மோடிக்கு தமிழக பன்னீர்செல்வமும் பழனிச்சாமியும் அடங்குவது போல் அடங்கி இருந்தன‌

பிரிட்டனின் போர் அறிவிப்பில் இருந்தாலும் அதனால் நெப்போலியனை அசைத்துபார்க்க முடியவில்லை, வெற்றி மேல் வெற்றி பெற்று பெரும் பூதமாக மாறியிருந்தான்

அவன் மனதில் பிரிட்டனை போட்டு சாத்தவேண்டும் என்ற வெறி ஏற்பட்டிருந்தது, அதுவரை அவன் பெற்ற தோல்வி அந்த நெல்சனுடையது

எப்படியாவது பிரிட்டனை வென்று, அந்த நெல்சனின் இன்னொரு கண்ணை பிடுங்கி அவனை பிரான்சுக்கு இழுத்துவர உள்ளம் துடித்தது

கடுமையாக திட்டமிட்டான் நெப்போலியன் அவனின் மிரட்டலுக்கு ஸ்பெயின் வழிக்கு வந்தது ஸ்பெயின் பிரான்ஸ் கூட்டு கடற்படை உருவானது

இதுதான் ஆங்கில கால்வாயினை கடந்து பிரிட்டனை அடிக்க போகும் படை என்பதால் கவனமாக திட்டமிட்டான் நெப்போலியன்

இன்றுவரை பிரிட்டன் அசைக்கமுடியா சக்தியாக, வீழ்த்தமுடியா தேசமாக இருக்க அதன் நிலபரப்பும் காரணம், அது தீவுநாடு அதன் பலம் அது

சுற்றிலும் கடல் என்பதால் தன் கடற்படையினை அவ்வளவு பலமாக வைத்திருந்தது பிரிட்டன், பிரிட்டனின் சாம்ராஜ்யத்தின் அடித்தளம் அந்த கடற்படை

அதில்தான் பாய்ந்தான் நெப்போலியன், ஆங்கில கால்வாயில் கடும் சண்டை மூழ்ந்தது

ஆங்கில கால்வாய் என்பதுதான் ஐரோப்பிய கடலுக்கு வந்து பின் சூயஸை கடந்து ஆசியாவிற்கு வரும் வழி. ஆங்கில கால்வாயினை மட்டும் பிரிட்டனிடனிடமிருந்து பறித்துவிட்ட்டால் பிரிட்டனின் கதை முடிந்தது

அது வாஸ்கோடகாமா போல ஆப்ரிக்காவினை சுற்றி வருவதெல்லாம் முடியாத விஷயம்

அதன் முக்கியத்துவம் தெரிந்ததால் பிரிட்டனும் கடும் எதிர்ப்பில் இறங்கியது

நெப்போலியனின் முழு கவனமும் ஆங்கில கால்வாய் பக்கம் இருக்க, பிரிட்டன் தந்திரமாய் ஒரு காரியத்தில் இறங்கியது

அதனிடம் பணமும் இன்னபிற வசதிகளும் இருந்ததால் நெப்போலியனுக்கு அஞ்சி ஆதரவு தெரிவித்த ஆஸ்திரியா மற்றும் ரஷ்யாவினை மனம் மாற உதவின‌

அப்படித்தான், இப்பொழுது தங்களை காப்பாற்ற ஒரு சக்தி இருந்தால் பழனிச்சாமியும் பன்னீரும் யார் அழைத்தாலும் செல்லமாட்டார்களா?

அப்படி சரி நாங்கள் என்ன செய்யவேண்டும் என்றார்கள்

பிரிட்டன் வகுத்துகொடுத்த திட்டபடி ஆஸ்திரியாவும், ரஷ்யாவும் இணைந்து பிரான்சின் மேல் படையெடுக்க வேண்டும்

அப்படி செய்தால் நெப்போலியன் ஆங்கில கால்வாயினை விட்டுவிட்டு அலறி அடித்து பிரான்ஸ்கு திரும்புவான் எனும் நரிதந்திரம் அதில் இருந்தது, அப்படி நெப்போலியன் திரும்பும்பொழுது கடல் ரீதியாக அவனை வளைப்பதால் ஆஸ்திரிய ரஷ்யா வெற்றிபெறுவது எளிது சொல்லபட்டது

இந்த தகவல் நெப்போலியனுக்கு கிடைத்ததும் அவன் ராணுவ மூளை உஷாரானது

இரு எதிரிகளை இணையவிடுவது என்றுமே யுத்த பூமியில் ஆபத்து என்பது ராணுவ பாடம்

அவசரமாக பிரான்ஸுக்கு திரும்பிய நெப்போலியன் ரஷ்ய ஆஸ்திரிய படைகள் சேரவிடாமல் தடுக்க முயன்றான்

ஆஸ்திரியா நோக்கி சென்றான் “ஆஸ்ரலிட்ஸ்” எனும் இடத்தில் ஆஸ்திரிய‌ படைகளுக்கும் அவனுக்கும் சண்டை மூண்டது, அடித்த அடியில் ஆஸ்திரியா அவன் வசமானது

ஆஸ்திரியாவோடு கரம் கோர்க்க வந்த ரஷ்யா ஓடி திரும்பியது

நெப்போலியனுக்கு இது வெற்றி என்றாலும் ஆங்கில கால்வாய் யுத்தம் வெற்றி கொடுக்கவில்லை, அவன் படைகள் திரும்பின‌

அதாவது ஆங்கில கால்வாயினை தக்க வைக்க தந்திரமாக ரஷ்யாவினையும் ஆஸ்திரியாவினையும் இழுத்துவிட்டதில் அது வென்றது

ஆங்கில கால்வாய் போர் சொன்ன முடிவு நெப்போலியனுக்கு ஒன்றுதான், பிரிட்டனின் பணவரவு மிக அதிகம் அவர்களால் தொடர்ந்து போரிடமுடிகின்றது, அதனால் பிரிட்டனை போட்டு அடிக்க அதன் பணவரவினை குறைக்க வேண்டும், இன்னும் மிகபெரும் ராணுவம் வேண்டும்

ஆஸ்திரியா தன்னோடு வாலாட்டியதில் கடும் கோபமடைந்த நெப்போலியன் ஐரோப்பாவினை மொத்தமாக விழுங்கி நின்றான்

ரஷ்யா ஒரு ஒப்பந்தம் போட்டு என்னை விட்டுவிடு சாமி என ஓடிஓளிந்தது, ஆனால் வன்மம் குறையவில்லை இன்று இந்தியா சீன இடையே இருக்கும் ஒருமாதிரியான புரிதல் ரஷ்யாவிற்கும் நெப்போலியனுக்கும் இருந்தது

அன்று ரஷ்யாவினை ஆண்டது ஜார் மன்னர்கள்.

இப்பொழுது ஐரோபாவில் இரண்டே நாடுதான். ஒன்று நெப்போலியன் நாடு இன்னொன்று நெப்போலியனின் ஆளுமையினினை ஏற்றுகொண்டு அடிமையான நாடுகள்

ரஷ்யா தனி, பிரிட்டன் தனியாக ஒதுங்கி இருந்தன.

தான் வென்ற நாடுகளில் யாரை பதவிக்கு அமர்த்தலாம் என யோசித்தார், ஏற்கனவே பிரெஞ்ச் அதிகாரிகளாக யாரையெல்லாமோ அமர்த்தி கசப்பான அனுபவங்களை பெற்றவருக்கு அடுத்தவர்களை நம்ப முடியவில்லை

விளைவு தன் பரந்த குடும்பத்தின் உடன்பிறந்தோர் எல்லாம் அரசன் ஆனார்கள்

நெதர்லாந்து, போலந்து, பெல்ஜியம், ஹங்கேரி என வரிசையாக நெப்போலியனின் உடன்பிறந்தோரும் உறவினர்களும் மன்னரானார்கள்

அரசியல் அப்படித்தான், எப்பொழுது யார் முதுகில் குத்துவார்கள் என தெரியாததால் குடும்பத்தாரை நம்புதலே நலம்

வாரிசு அரசியலை விடநம்பிக்கைக்கு உகந்த அரசியல் ஏதுமில்லை, இல்லாவிட்டால் நெப்போலியனுக்கு டைரக்டர்ஸ் காட்டிய நன்றியினை விடுங்கள், கலைஞருக்கு ராமசந்திரனும் இன்னபிற தலைவர்களும் காட்டிய நன்றிகள் பெரும் உதாரணம்

வாரிசுகள் பதவியில் அமர்த்தினால் நாளை சிக்கல் என்றால் கண்கள் பனித்தன, இதயம் கனிந்தது என சொல்லிவிட்டு சமாதானம் ஆகலாம், அடுத்தவன் என்றால் விடுவானா?

அப்படி நெப்போலியன் குடும்பம் முழுக்க ஐரோப்பிய‌ மன்னார்குடி இல்லை மன்னர்குடி ஆயிற்று

ஐரோப்பாவின் மிகபெரும் சக்தியாக உயர்ந்து நின்றான் நெப்போலியன், அவன் கண்ணசைவில் ஆடியது ஐரோப்பா.

ஐரோப்பாவின் அமைதியினை தீர்மானிக்கும் சக்தியாக விஸ்வரூபமெடுத்து நின்றான் அவன்.

ஒரு சாதரண சிப்பாய் பிரான்சின் மன்னராகி, ஐரோப்பிய சக்கரவர்த்தியான அதிசயத்தை கண்டு வியந்து நின்றது உலகம்.

தன் வாழ்வின் ஒவ்வொரு நொடியினையும் தானே செதுக்கி உயர்ந்து நின்றான் நெப்போலியன்

ஐரோப்பிய சக்ரவர்த்தி ஆனபின் அவனுக்கும் போப்பாண்டவருக்கும் சர்ச்சை வலுத்தது, போப்பின் அதிகாரங்களை குறைத்தான் நெப்போலியன்

அவமானமடைந்த போப் இயேசுபாடுபட்ட சொரூபத்தின் முன் கதறிகொண்டிருந்தாரே தவிர ஒன்றும் செய்யமுடியவில்லை

சக்கரவர்த்தியானாலும் நெப்போலின் அதே எளிய வாழ்க்கையில் இருந்தான். ஒரு கட்டில் ஒரு மேஜை அறை நிறைய புத்தகம் என அவனது வாழ்வு மிக எளிமையாயிருந்தது

ஆனால் ஜோசபைன் ராணியாக திகழ்ந்தாள் அதனை அவன் கண்டுகொள்ளாவில்லை, அவளின் சிரிப்பு அவனுக்கு அவ்வளவு முக்கியம்

ஜோசப்பின் தங்கதட்டில் உண்டாலும் நெப்போலியன் அலுமினிய தட்டில்தான் உண்டான். அது எளிமையென்று அல்ல, அது அப்பொழுதுதான் கண்டுபிடிக்கபட்டிருந்தது

ஐரோப்பா முழுக்க ஆண்டாலும் பிரிட்டன் அவனுக்கு அடிபணியாதது அவனுக்கு பெரும் மனக்குறையாயிருந்தது, அவனுக்கு இருந்த இன்னொரு மனக்குறை ஜோசபைனுக்கும் அவனுக்கும் பிள்ளைகள் இல்லை

ஐரோப்பிய அரச வழக்கபடி ராணிக்கு குழந்தை இல்லாவிட்டால் அரசன் மறுமணம் செய்யவேண்டும்

எப்படியும் ஜோசபின் தனக்கொரு வாரிசு கொடுப்பாள் என நாட்களை நகர்த்தினான் நெப்போலியன், நாட்கள் மட்டும் நகர்ந்தன‌

பிரிட்டனை என்ன செய்யலாம் என கடுமையாக யோசித்தான் நெப்போலியன், முதலில் அதன் பொருளாதாரத்தை தகர்க்க திட்டமிட்டான்

ஒரு சுபதினத்தில் தன் ஆளுகைக்கு உட்பட்ட ஐரோப்பாவிலும் தனக்கு அடங்கி இருந்த நாடுகளிடமும் குறிப்பாக ஒப்பந்தம் போட்டுகொண்ட ரஷ்யாவிடமும் மிரட்டி சொன்னான்

பிரிட்டன் மீது பொருளாதார தடை விதிக்கபட்டிருக்கின்றது, அவர்களோடு யாரும் வியாபாரம் செய்ய கூடாது

கிராமங்களில் நாட்டாமை ஒரு குடும்பத்தை ஊரைவிட்டு ஒதுக்கி வைப்பார் அல்லவா? அப்படி

அதுவரை நெப்போலியன் படையெடுப்பான் நிச்சயம் ஒருநாள் லண்டனை நோக்கி வருவான் என எதிர்பாத்திருந்த, அவன் யுத்தம் மட்டுமே நடத்துவான் என எதிர்பார்த்த பிரிட்டன் மிரண்டது

தன் அடிமடியிலே கைவைத்த நெப்போலியனை இனி சும்மாவிட கூடாது என கிளம்பியது

நெப்போலியனின் தந்திர கணக்கிற்கு தந்திரத்தால் பதிலளிக்க திட்டமிட்டது பிரிட்டன்

அது செய்யும் நகர்வை பொறுத்து அடுத்த கட்ட காரியத்திற்கு இறங்க தயாராக இருந்தான் நெப்போலியன், எப்படியாவது பிரிட்டனை வென்று காட்டவேண்டும் என்ற வெறியில் வேங்கையாக சுற்றிகொண்டிருந்தான்

வாமணன் வருவான்…
 

விகடன் மறுபடியும் பெரும் சறுக்கலை சந்தித்திருக்கின்றது

இந்த விகடன் மறுபடியும் பெரும் சறுக்கலை சந்தித்திருக்கின்றது

ரஷ்ய புரட்சி நூற்றாண்டினையொட்டி தமிழகத்தில் இருக்கும் மார்க்ஸியவாதியான தியாகு என்பவரை பேட்டி கண்டிருக்கின்றார்கள்

தியாகு எப்படிபட்டவர் என்பதும், அவர் மரண தண்டனை வரை சென்றுவந்தவர் என்பதும் எல்லோரும் அறிந்தது

கவிஞர் தாமரைக்கும் அவருக்குமான சர்ச்சைகள் உலகறிந்தது, இன்னும் அவர் கவிஞருக்கு உருப்படியான தீர்வு கொடுக்கவில்லை

மார்க்சிஸம் பற்றி தியாகு பெரிதாக அறிந்திருக்கலாம், மார்க்ஸின் ஒவ்வொரு எழுத்துக்கும் அர்த்தம் புரிந்திரிக்கலாம், லெனினின் ஒவ்வொரு காலடிக்குன் அன்னாரிடம் விளக்கம் இருக்கலாம்

ஆனால் அப்படி வாழ்ந்தாரா? அண்டை நாட்டில் நடந்த போரில் ஏதும் மார்க்ஸிசம் பேசினாரா என்றால் சுத்தமாக இல்லை

ஒரே ஒரு கேள்வியினை அன்னார் எதிர்கொள்ள முடியாது

இவர் உண்மையிலே பொதுவுடமைவாதி என்றால், உண்மையிலே மார்க்ஸிஸவாதி என்றால் ஈழபிரச்சினையில் சேகுவேரா பாணியில் இருந்த பத்மநாபாவினை அல்லவா ஆதரித்திருக்க வேண்டும்

அந்த மனிதனே ஈழத்தில் வர்க்கபேதம் ஒழிந்து சோஷலிஸ்ட் தமிழீழம் உருவாக வேண்டும் என பாடுபட்டான்

ஆனால் தியாகு அவனை விட்டுவிட்டு பாசிஸ்ட் பிரபாகரன் பின்னால் சென்றதும் அவனை ஆதரித்ததும், இன்றுவரை அப்படி பெசிகொண்டிருப்பதும் என்ன வகை?

ஹிட்லர் எனும் பாசிஸ்டை ஒழித்து கட்டியது சமதர்ம சோவியத் யூனியன்

அந்த சோவியத்தின் புகழை சொல்ல, ஹிட்லரை போல பாசிஸ்டான பிரபாரகனின் பின்னால் சென்ற தியாகு எப்படி சரிவருவார்?

அந்த தியாகு தன் கொள்கையினையே மாற்றி பிரபாகரன் பக்கம் சாய்ந்த தில்லாலங்கடி

அவரை ஒரு மார்க்ஸியவாதியாக இந்த விகடன் பேட்டி எடுக்கின்றதாம்

இது பார்ப்பவர் கண்களில் எளிதாக தோன்றும் கேள்வி

ஆக தமிழகத்தில் யாருக்குமே அறிவில்லை, யாருக்குமே மார்க்ஸிஸம் தெரியாது அதனால் யாரையும் வைத்து பேட்டி எடுக்கலாம் என விகடன் நினைத்திருபது தெரிகின்றது

அப்படி இல்லாவிட்டால் பாசிஸ்ட் பிரபாரகன் பின்னால் சென்ற தியாகுவினை மார்க்ஸிஸ புரட்சிபற்றி பேச அழைத்திருப்பார்களா?