தலைவி கோபுரம், நயன் ஒரு துரும்பு

தம்பி Babu Rao , Chandran Kannan காற்றில் பறக்கும் துரும்பு ஒரு நாளும் கோபுரத்தினை விட உயர்வானது ஆகாது

அப்படி அறம் படம் ஓடிவிட்டால் நயன் ஒன்றும் குஷ்பு ஆகிவிடமாட்டார்

தலைவி கோபுரம், நயன் ஒரு துரும்பு

அதனால் நீர் இப்படி குதிப்பது அறம் ஆகாது.


Image may contain: 1 personரைடுகளை குறித்து இந்த அம்மணியிடம் யாரும் கேட்கவுமில்லை, அம்மணி கருத்து சொல்லவுமில்லை

என்னாச்சி அம்மணி உங்களுக்கு?

ஒருவேளை இவரை பற்றிய ரகசிய ஆவணங்களும் அதிகாரிகளிடம் சிக்கியிருக்குமோ?

 

டிரம்ப் பாஜகவினருக்கு கொடுத்த இனிப்பான செய்தி

கொஞ்சகாலமாக இந்தியாவோடு நெருக்கம் பாராட்டும் அமெரிக்க அதிபர் டிரம்ப் ,பாஜகவினருக்கு இனிப்பான செய்தி கொடுத்துள்ளார்

மோடி தலமையில் இந்தியா வேகமாக வளர்ச்சிபெற்று வருவதாகவும், இந்தியா புதுவடிவம் பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அன்னார் இப்பொழுது முன்பு அமெரிக்கா பகிரங்கமாக தோற்ற வியட்நாமில் சுற்றுபயணத்தில் இருக்கின்றார்.

வியட்நாம் இந்தியா உறவு பலம்பெற்று வரும் நிலையில் , சீனாவுக்கும் வியட்நாமுக்கும் இடையில் முறுகல் வலுக்கும் நிலையில் டிரம்ப் இப்படி பேசியிருக்கின்றார்

இது சீனாவிற்கு எதிராக இந்தியாவினையும் வியட்நாமினையும் கொம்பு சீவும் முயற்சி என்றாலும் அமெரிக்க‌ அதிபர் ஒரு மாநாட்டில் இப்படி பேசியிருப்பது மோடி மீது சில நல்ல பார்வைகளை வீசியிருக்கின்றது

விஷயம் இன்னும் தமிழிசைக்கு தெரியாது போல, தெரிந்தால் சென்னை அமெரிக்க தூதரகம் முன்பு நன்றி ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கமாட்டாரா?

நாம என்னைக்கு சொன்னத செஞ்சோம்?

Image may contain: 2 people, people smiling, people sitting

“நாம என்னைக்கு சொன்னத செஞ்சோம்?

காஷ்மீர் 370 சட்டத்த ரத்து செஞ்சோமா இல்ல ராமர் கோவிலைத்தான் கட்டினோமா இல்ல பாகிஸ்தானோட சண்டைக்கு போனோமா?

இல்ல பசுமாட்டைத்தான் காப்பாத்திட்டோமா? கருப்பு பணத்தை முழுக்க ஒழிச்சோமா, ஆளுக்கு 15 லட்சம் கொடுத்தோமா?

ஒண்ணுமில்ல‌

இப்ப கூட பாருங்க குஜராத் தேர்தலுக்காக ஜிஎஸ்டி குறைச்சிருக்கோம், இனி பார்லிமெண்ட் தேர்தல் வரும்போது இன்னும் குறைப்போம்

நாம அப்படித்தான் பில்டிங் ஸ்ட்ராங்கு..பேஸ்மெண்ட் வீக்கு

இது தெரியாம நம்மள பார்த்து எல்லோரும் பயபடுறாங்க.

So Funny”

 

சர்ச்சுக்குள் இது இந்து தேசம் என பாடவேண்டும்

ஒரு கிறிஸ்தவ கூட்டத்திற்கு செல்லவேண்டும், சென்றால் பாடவேண்டும். அவர்கள் ஆதிகால கிறிஸ்தவசபை ஆதிகாலம் என்றால் 1950கள்

அப்பொழுது உள்ள தமிழ்பாடல்கள்தான் இங்கு பாடபடுகின்றன, பெர்க்மான்ஸ் இம்சைகள் எல்லாம் இல்லை

ஒரு புத்தகத்தை கொடுத்து உங்களுக்க்கு தெரிந்த பாடலை தெரிந்துவாருங்கள் என கொடுத்தார்கள், பாடலை பாடுவது சிக்கல் அல்ல அதன் அர்த்தத்தையும் சொல்லவேண்டும்

காரணம் அங்கு தமிழ்பேசுவார்களே தவிர, ஆழபொருள் தெரிந்தவர்கள் இல்லை என்பதால் பாடலை விளக்கியும் சொல்லவேண்டும்

அதில் அழகான பாடல்கள் இருந்தன, சமஸ்கிருதம் கலந்த அக்கால தமிழ் அது , அந்தபாடல் இப்படி வந்தது

“தாசரே இத்தரணியை அன்பாய் இயேசுவுக்கு சொந்தமாக்குவோம்” என தொடங்கிற்று, தாசர் என்றால் அடிமை , ஏ இயேசுவின் அடிமைகளே வாருங்கள் இந்த உலகினை இயேசுக்கு கொடுப்போம் என்ற வரி அது

பாடல் நன்றாகத்தான் சென்றுகொண்டிருந்தது, ஒரு வரி அடித்துபோட்டது

“இந்து தேச மாத சிரோன்மணிகளை விந்தை ஓளிக்குள் வரவழைப்போம்”

இதன் பொருள் என நோக்கினால், இந்தியாவில் உள்ள எல்லோரையும் மாதர் உட்பட‌ கிறிஸ்தவர்கள் ஆக்குவார்களாம், அதுவும் சிரொன்மணிகளையும் மாற்றிவிடுவார்களாம்

சிரோன்மணி என்றால், தலைக்கு மேல் கிரீடமோ, அதில் வைரமோ இல்லை ரிஷிபோல கொண்டை வைத்திருப்பவர்கள் என பொருளில்வரும், அதாவது உச்ச பீடத்தையே திருப்புவோம் என்பது

அது 1900களில் எழுதபட்ட பாடலாக இருக்கலாம், எந்த சிரோன்மணியினை திருப்பினார்கள் என தெரியாது. ஒருவேளை வைகோவாக இருக்கலாம்

அது விஷயம் அல்ல‌

ஆனால் பாடல் எழுதியவன் அழுத்தம் திருத்தமாக எழுதியிருக்கின்றான் “இந்து தேச மாத சிரோன்மணி” என சொல்லியிருக்கின்றான்

அதாவது இது இந்து தேசம் என அவனே எழுதியிருக்கின்றான்.

அந்த பாடல் இன்றும் இந்திய கிறிஸ்தவ சபையில் பாடபடுவதாக சொல்கின்றார்கள்

ஆக சர்ச்சுக்குள் இது இந்து தேசம் என சொல்லிவிட்டுத்தான் வெளியே இது மதசார்பற்ற நாடு என குதித்துகொண்டிருக்கின்றார்கள்

ரகோத்தமன் இந்த ரைடுகளை பற்றி…

இந்திய அளவில் புகழ்பெற்றவர் ரகோத்தமன். ராஜிவ் கொலைவழக்கினை விசாரித்து மிக துல்லியமான முடிவினை கொடுத்தது அவர்தான்

அவர் கரங்கள் இன்னும் சுதந்திரமாக செயல்பட்டிருக்குமானால் ராஜிவ் கொலையில் இருந்து வைகோ, சந்திராசாமி உட்பட பலர் தப்பியிருக்க முடியாது

திமுகவே தீரா சிக்கலில் மாட்டியிருக்கும்

அப்படிபட்ட ரகோத்தமன் இந்த ரைடுகளை பற்றி மிக அழகான கருத்துக்களை சொல்லியிருக்கின்றார்

“ஜெயா சாகும்பொழுது அருகிலே இருந்தது வெங்கைய நாயுடு, பன்னீரை முதல்வராக்கும் அளவிற்கு அங்கு மிக நெருக்கமாக இருந்தவர்

பாஜக அப்பொழுது அதிமுகவோடு நெருங்கித்தான் இருந்தது, இந்த சோதனை அப்பொழுதே செய்யபட்டிருந்தால் அரசியல் சாயம் விழுந்திருக்காது”

(அப்படியும் ரகோத்தமன் ஏன் ஜெயா இருக்கும்பொழுது ரைடு செய்யபடவில்லை என கேட்காதது வேறு விஷயம்)

ஆனால் ஆணித்தரமாக அடித்து சொல்கின்றார், சசிகலா கும்பல் சர்ச்சைகுரியது, இந்த ரெய்டை ஏன் காலம் தாழ்த்தவேண்டும் என தன் கருத்துக்களை சொல்கின்றார்

ஒரு விஷயம் கவனிக்கதக்கது

மிகபெரும் பதவியிலிருந்தவரும், பெரும் சாதனையினை செய்தவருமான ரகோத்தமன் இதுவரை அரசியல் பேசவில்லை

முதல் முறையாக அரசியல் பேசியிருக்கின்றார் என்றால், அவர் அரசியலுக்கு வரலாம் என சிக்னல் தெரிகின்றது

தமிழக பாஜகவிற்கும் இப்படிபட்ட ஆட்கள்தான் தேவை, உடனே இவரை இழுத்து உள்ளே போடுவது அதற்கு நல்லது

ரகோத்தமன் அரசியல் பேசுவது தமிழிசைக்கு எப்படிபட்ட எச்சரிக்கைகளை கொடுத்திருப்பது என்பது இனிதான் தெரியும்.

ஒரு வேளை உண்மையாக இருக்குமோ???

நாம் கணித்ததும் சில நேரங்களில் நடக்கத்தான் செய்கின்றது

நீங்கள் எம்மை பின் தொடர்பவர் என்றால் சமீபத்தில் நாம் ஒரு விஷயம் சொன்னதை நினைவுபடுத்தி கொள்ளுங்கள்

மெர்சல் படத்திற்கு பாஜக பொங்கியதை தொடர்ந்து, சிம்பு அவர்களை வம்புக்கு இழுக்கும் முயற்சியில் ஈடுபடலாம் அதன் மூலம் அவர் ஒரு பரபரப்பினை தேடிகொள்ளலாம் என சொல்லியிருந்தோம்

நம்பிய சில நடிகைகளை சிம்பு ஏமாற்றி இருக்கலாம், ஆனால் நம்மை போல அவர் அல்ட்ராசிட்டியில் நம்பிக்கை கொண்ட யாரையும் அவர் ஏமாற்ற மாட்டார்

ஆம், மோடியின் பணமதிப்பு நீக்க பிரச்சினையினை விமர்சித்து அவர் ஒரு பாடல் எழுதி பாடிவிட்டாராம்

அது பரப பரவ பாஜக முகாமில் எல்லோருக்கும் இறுதி சுற்று மாதவனாக முகம் இறுக்கமாகின்றது

ஆனானபட்ட விஜய், தினகரன் என எல்லோரையும் போட்டு அடிக்கும் எங்களிடமே உன் வேலையினை காட்டுகின்றாயே என வரிந்து கட்டுகின்றார்கள், சிம்பு வீட்டுக்கு போலிஸ் காவல் எல்லாம் போட்டாகிவிட்டது

பணமதிப்பு நீக்கம் ஒழிந்து ஒருவருடமாக இருந்த சிம்பு இப்பொழுது ஏன் பொங்குகின்றார்?

நயந்தாராவின் அறம் எனும் படம் அவருக்கு நல்ல பெயரை பெற்று கொடுத்தது என்கின்றார்கள், அதில் சிம்பு பாதிக்கபட்டிருக்கின்றாரோ என்னமோ?

விஷயம் சீரியசாகின்றது

எப்படியோ நாம் கணித்ததும் சில நேரங்களில் நடக்கத்தான் செய்கின்றது