அண்ணே ரைடு எப்படின்னே?

பாஜக நண்பர் ஒருவர் அழைத்தார்

அண்ணே ரைடு எப்படின்னே?

மாலிக்காபூர் காலத்திற்கு பின் டெல்லியிலிருந்து பெரும் படை படையெடுத்து வந்தது இப்பொழுதுதான்

அப்படித்தாண்ணே, மோடி அரசு சும்மா இல்ல, ஒரு பய தப்பமுடியாது. ஒரு பைசா இருந்தாலும் விட மாட்டாரு

அப்படியா, இதில் அரசியல் இல்லையா?

சுத்தமா இல்லண்ணே, இத்தன வருஷமும் திராவிட கட்சி எப்படி எல்லாம் சுருட்டிருக்குண்ணு தெரியுதாண்ணே, காங்கிரஸ் கட்சி வோட்டுக்கு பயந்து சும்மா இருந்து, மோடி தைரியசாலிண்ணே

ஓஹோ

ஆமாண்ணே இன்னும் நிறைய இருக்கு, ஒண்ணு ஒண்ணா வரும்

வருமா?

ஆமா பாக்கத்தானே போறிங்க, எல்லார் முகமூடியும் கிழியும்ணே

அப்படியா?

ஆமாண்ணே ஒருத்தரையும் மோடி விடமாட்டாரு..

அந்த வானதி சீனிவாசன் குடும்பம் திடீர் சொத்து குவிச்சதா செய்தி வந்திச்சே அங்க எப்போ ரெய்டு?

அண்ணே சொல்லுங்க‌

அந்த வானதி சீனிவாசன், ஜக்கி சாமி ஆசிரமம்

அண்ணே கேக்கலண்ணே சிக்னல் பிராப்ளம்

அடேய் வா..ன..தி சீ..னி……வா..ச..ன் கேட்குதா

இல்லண்ணே கால் கட் ஆகுதுண்ணே , பைண்ணே”

Advertisements

சிறுநீரில் இருந்து யூரியா எடுக்க வேண்டும் : மத்திய அமைச்சர் நிதின் கட்காரி

மத்திய அமைச்சர் நிதின் கட்காரி சிறுநீரில் இருந்து யூரியா எடுக்க வேண்டும் என சொன்ன விஷயம் செல்லூர் ராஜூ போல விமர்சிக்கபடுகின்றது

அவர் சொன்னது வியப்பல்ல, அது உலகெல்லாம் நடக்கும் விஷயமே

அதாவது மேல் நாடுகளில் வீடுகளும் அதன் அமைப்பும் திட்டமிட்டு கட்டபடுவதால் மனித கழிவுகள் இந்திய வீடுகளை போல குழிக்குள் இறங்குபவை அல்ல, மாறாக தூரமாக ஆழ்பதிந்த குழாய் மூலம் கொண்டு செல்லபட்டு அவை சில வேலைகளுக்கு பின் உரம் ஆக்கபடும்

அது விவசாயத்திற்கு பயன்படுத்தபடும், வெளிநாட்டு உரம் என இந்தியா இறக்குமதி செய்த உரங்களில் அவைகளும் அடக்கம்

அதனைத்தான் கட்காரி சொன்னார்

ஆனால் அது இந்திய யதார்த்தற்கு சரிவராது, அவர்கள் புதிதாக உருவாக்கிய குடியிருப்பில் சாத்தியம், இங்கு வீட்டுக்கு வீடு இருக்கும் மூடிய கிணற்றுக்கு அது சாத்தியமில்லை

பழங்காலம் போல மண்சட்டி சேகரம் எல்லாம் இப்பொழுது வாயப்பே இல்லா விஷயம்

ஆக இந்தியாவில் புதிதாக உருவாக்கபடும் குடியிருப்புகளில் அதனை பரிசீலிக்கலாமே தவிர உடனடியாக சாத்தியமில்லை

அமைச்சர் சொன்னது மிக சரி, ஆனால் அதற்கான உட்கட்டமைப்பு நம்மிடம் உண்டா என்றால் இல்லை.


விவேக் வீட்டில் கள்ள துப்பாக்கி சிக்கியது

விவேக் வீட்டில் கள்ள துப்பாக்கி சிக்கியது, அவர் மாமனார் செம்மர கடத்தல் தொடர்புடையவர் என்பதால் இந்த விஷயம் விஸ்வரூபமாகின்றது : செய்தி

என்னது விவேக் மாமனார் செம்மரம் கடத்திய கும்பலா? என அதிர்ச்சி அடைய ஒன்றும் இல்லை

மன்னார்குடி குடும்பத்தில் நெல்சன் மண்டேலாவும், சே குவாரேயுமா சம்பந்தம் செய்வார்கள், செம்மரம் கடத்தும் கும்பல்தான் சம்ப்ந்தம் செய்யும்.

ஒரு ஒலிம்பிக் கிராமம் போல ஏகபட்ட உறவுகள் இருக்க, வெறும் 28 வயது பையனிடம் இவ்வளவு பொறுப்பினை கொடுக்கும் பொழுதே விவேக்கிற்கு புரிய வேண்டாமா?

இவைகளை எல்லாம் கையாள பக்குவம் போதாது, யாரும் சுமக்க முடியா பொறுப்பினை தனக்கு தள்ளுகின்றார்கள் என சுதாரிக்க வேண்டாமா?

பெரும் கிரினல்களான மன்னார்குடி மாபியாக்கள் விவேக் எனும் பாலகனை பலிகொடுக்கும் நேரமிது

தீர்ப்பு இதுதான் என முடிவெடுத்தபின் அதற்கேற்ற காட்சிகளை எழுதும் நாடு இது, இங்குள்ள யதார்த்தம் அப்படி

விவேக்கினை விடுவார்களா?

போகிற போக்கில் தாவூத் இப்ராகிம் சில நாள் விவேக் வீட்டில் விருந்தினராக தங்கியிருந்தான் என்ற அளவிற்கு செய்திகள் வரலாம்

நூல்களை அனுப்பிவைத்த அன்பருக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்

நடக்கும் சில விஷயங்களை நினைத்தால் எனக்கே வெட்கமாகவும் அச்சமாகவும் இருகின்றது

நானும் ஏதோ எழுத்தாளன் போல பல நண்பர்கள் புத்தகம் எல்லாம் அனுப்பி வைத்து உதவிகொண்டிருக்கின்றார்கள்

சமீபத்தில் சரவணன் எனும் நண்பர் அனுப்பியிருந்தார் அதனை வாசித்து முடிக்கும் முன் கு.பா.இளங்கோவன் எனும் பெரியவரும் சில புத்தகங்களை அனுப்பியிருந்தார்

ஒரு புத்தகத்தை கையில் எடுத்தால் வாசித்து முடிக்காமல் உணவோ நீரோ கூட அருந்தாமல் மூழ்கிவிடுவது வழக்கம், குஷ்பூவே வந்தாலும் பார்க்க தோன்றாது

ஆனால் கு.மா.பா இளங்கோவன் அவர் தந்தையின் பாடல்கள் என அனுப்பியிருக்கும் புத்தகம் சில பக்கங்களுக்கு மேல் நகர விடாமல் சிந்தனையினை திருப்புகின்றது

அவர் தந்தை கு.பா பாலசுப்பிரமணியம் எவ்வளவு பெரும் கவிஞராக இருந்திருக்கின்றார் என்பது அப்படி அதிர்ச்சி அளிக்கின்றது

தமிழக எஸ்டேட்டுகளும் பங்களாவும் எல்லாம் சசிகலா வம்ச‌ சொத்து என்பது போல எல்லா பழம் பாடலும் கண்ணதாசன், வாலி, பாபநாசம் சிவன், பட்டுகோட்டைக்கு சொந்தம் என்றே எண்ணியிருக்கினது தமிழகம்

ஆனால் காலத்தால் அழியா பாடல்களை கு.மா.பாலசுப்பிரமணியம் எழுதியிருக்கின்றார்

“மாசிலா நிலவே நம் காதலை மகிழ்வோடு..”

“யாரடி நீ மோகினி கூறடி என் கண்மணி..”

‘உன்னை கண் தேடுதே”

“ஆடாத மனமும் ஆடுதே..”

“அமுதை பொழியும் நிலவே..”

“சித்திரம் பேசுதடி என் சிந்தை மயங்குதடி”

ஜாணகியின் முதல் பாடலான “சிங்கார வேலனே தேவா..”

சந்திரபாபுவின் அடையாளமான “குங்கும பூவே”

இன்னும் காளிதாஸ் படத்தில் கண்ணதாசனின் சாயலில் வரும் “மலரும் வான் நிலவும்”

என பட்டியல் நீள்கின்றது, அக்கால சூப்பர்ஹிட் பாடலை எல்லாம் எழுதியிருக்கின்றார்

அந்த மாபெரும் கவிஞனின் மகன் எனக்கு மிக உற்ற முகநூல் நண்பராகி புத்தகம் எல்ல்லாம் அனுப்புகின்றார் எனும்பொழுது, பெரும் அறிஞர்கள் நிரம்பிய சபையில் ஒரு வீணாய் போன பரதேசியினை நுழைய சொன்னால் என்ன கூச்சம் இருக்குமோ அது நெஞ்சில் படர்கின்றது

எத்துணை பெரும் பாரம்பரியம் உள்ளவர்கள் எல்லாம் நண்பர்களாகியிருக்கின்றார்கள் என நினைக்கும் பொழுது மகிழ்வும் அச்சமும் மனதில் குடிகொள்கின்றது

அவர் கொடுத்த புத்தகங்களை வாசித்துகொண்டே அவருக்கு நன்றி நன்றி என சொல்லிகொண்டே இருக்கின்றேன்

அதில் ஒரு புத்தகம் திராவிட அழிச்சாட்டிய கும்பலால் எழுதப்ட்டிருக்கின்றது, பலவகை காமெடிகளை சீரிசயாக எழுதியிருக்கின்றார்கள்

பிராமண எதிர்ப்பு எனும் ஒற்றை பார்வையில் எழுதப்ட்ட அந்த பக்கங்கள் மத நம்பிக்கை தமிழர் வாழ்வில் எந்த அளவு ஆழபதிந்திருந்தது எனவும் மறைமுகமாக சொல்கின்றது, அதில் சறுக்குகின்றார்கள்

அவர்களுக்கு ஒரு பாயின்ட் கிடைத்துவிட்டதாம் அதாவது உ.வே.சாமிநாதய்யர் ஒரு இந்து வெறியராம். இந்துக்களை உயர்த்தாத புத்தகங்களை அவர் அச்சிக்கு கொண்டுவரவில்லையாம்

அதில் ஒன்று தொல்காப்பியமாம், தமிழர் பெருமை அதில் மதமின்றி இருக்குமாம். உவேசு அய்யர் எனும் மாமனிதன் ஜாதி மத வெறியனாம்

அட பதர்களா?

தொல்காப்பியரின் சில பக்கங்கள் குழப்பமானவை. உதாரணம் பாலை நிலமும் அதில் ஒட்டகமும் தமிழ்நாட்டில் உண்டு என எழுதிவைத்திரிந்தார்

தமிழகத்தில் வறண்ட நிலம் உண்டே தவிர பாலை இல்லை அதில் ஒட்டகமும் இல்லை. இதனால் அது கடும் குழப்பத்தை ஏற்படுத்திற்று

இம்மாதிரி சில விஷயங்கள் இருப்பதால் முழு தொகுப்பும் கிடைத்தபின் அச்சில் ஏற்றலாம் என்று எண்ணம் கொண்டிருந்த அய்யருக்கு அது கிடைக்காமல் போனதில் அது முடியாமல் போயிற்று

இது நடந்த உண்மை. ஆனால் இவர்கள் என்னவெல்லாமோ சொல்கின்றார்கள். இன்னும் என்னென்ன குழப்பம் எல்லாம் விதைத்து வைத்திருக்கின்றார்களோ தெரியாது

பெரும் முட்டாள் தலைமுறையினை பிராமண எதிர்ப்பு எனும் ஒற்றைபுள்ளியில் உருவாக்கும் திட்டம் இருந்திருக்கும் போலும்

அந்த புத்தகத்தை தொடர்ந்து படிக்க படிக்க சிர்ப்பு வருகின்றது, இப்படி எல்லாமா அபத்தமாக சிந்தித்து அதனை புத்தகமாகவும் எழுதுவார்கள்

போகட்டும், ஆனால் தமிழனுக்கு மதம் இருந்ததை ஒப்புகொள்கின்றார்கள்

தொடர்ந்து படிக்கின்றேன், இன்னும் வாசிக்க வேண்டியது இருக்கின்றது

என் மீதும் மரியாதை கொண்டு நூல்களை அனுப்பிவைத்த அன்பருக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்

தமிழன் ஆண்டாலும் நிலமை சரி இல்லை

தமிழக மீணவர்களை இந்திய கடற்படையே சுட்டுவிட்டதாக சில தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன‌

நிச்சயம் அம்மாதிரியான துப்பாக்கி சூடுகளை இந்திய பாதுகாப்புபடை செய்திருக்காது, செய்யவேண்டிய அவசியமுமில்லை.

தாங்கள் எச்சரிக்கை மட்டும் செய்ததாகவும் சுடவில்லை என்றும் காவல்படை தெரிவிக்கின்றது

சுட்ட காயமும் மீணவர்களிடம் இல்லை

தமிழரை நடுகடலில் கொன்றே தீரவேண்டும் என்ற அபத்த நோக்குடன் தாக்குதல் நடக்கவில்லை என்பது உறுதி

ஏதும் விவகாரம் கிடைக்காதா? ஏய் இந்தியமே என சீற முடியாதா என காத்துகிடந்தவர்கள் கிளம்பிவிட்டார்கள்

அந்த மீணவரிடம் இந்தியில் விசாரித்தார்களாம்

தமிழக வீரர்கள் காஷ்மீர் எல்லையில் நிற்கின்றார்கள், அங்கு எவனும் எல்லையில் சிக்கினால் தங்களுக்கு தெரிந்த மொழியில்தான் கேட்பார்கள்

எவனாது தமிழில் பேசி என்னை அடித்தான் என கிளம்புவானா? இல்லை

அப்படியாக இந்தி தவிர வேறுமொழி தெரியா வீரன் ஒருவன் விசாரித்திருக்கின்றான் என்கின்றது செய்தி

அதற்குள் இந்தி தெரியாமல் ஏன் கடலுக்கு வந்தாய் என போட்டு இந்திய ராணுவம் அடிக்கின்றது என வரிந்து கட்டி கிளம்பியாயிற்று.

இப்பொழுது ஆளாளுக்கு சொல்வார்கள் பாருங்கள்

“தமிழகத்தை தமிழன் ஆண்டாலும் நிலமை சரி இல்லை, இனி மீணவ தமிழன் ஆண்டால்தான் இதற்கு முடிவு வரும்”

செய்திகள் சில ….

தவறாக பொருள் சேர்க்கும் யாரும் தப்ப முடியாது: விவேக் ஜெயராமன் பேட்டி

இவர் சசிகலாவிற்கு சொல்கின்றாரா? இல்லை சிறையில் இருக்கும் தாய்க்கா? இல்லை தினகரனுக்கா?

மனிதர் தன் குடும்பத்தில் யாரையோ மறைமுகமாக எச்சரிக்கின்றார், அது யார் என்பதுதான் இப்பொழுது பெரும் கேள்வி.


லட்சுமி குறும்பட நடிகை லட்சுமிபிரியா தீவிர கமல் ரசிகை : செய்தி

ஒஹோ..

பின் லட்சுமி படம் எப்படி இருக்கும்? அப்படித்தான் இருக்கும். அதில் ஆச்சரியமில்லை.


கூடங்குளம் அணுவுலையில் பொருத்தபட்டுள்ள‌ 50% பொருட்கள் உள்நாட்டு தயாரிப்பு : செய்தி

வருடத்தில் 10 மாதம் முதல் அணுவுலை இயங்காமல் இருப்பதற்கும், இரண்டாம் அணுவுலை ராமர் கோவில் போல தொங்கலில் நிற்பதற்கும் காரணம் இப்பொழுதுதான் புரிகின்றது

இதில் உள்நாட்டு தயாரிப்பென்று பெருமை வேறு


கொடநாடு எஸ்டேட்டை, சசிகலா குடும்பம் மிரட்டி வாங்கியதாகவும், அதை மீட்க சட்ட ரீதியாகப் போராடுவேன் என்றும், அதன் முன்னாள் உரிமையாளர் பீட்டர் கிரேக் ஜோன் கூறியுள்ளார்.

மிஸ்டர் கங்கை அமரன் இவரோடு சேர்ந்து பையனூர் பங்களாவினை மீட்க போராடினால் என்ன?


இரு விஷயங்களுக்கு இன்னும் தமிழில் நல்ல புத்தகங்கள் இல்லை

Image may contain: 1 person, sitting and sunglassesஇரு விஷயங்களுக்கு இன்னும் தமிழில் நல்ல புத்தகங்கள் இல்லை

முதலாவது ஓட்டோமன் பேரரசு பற்றியது, இதுபற்றி Pa Raghavan போன்றோர் பத்தோடு பதினொன்றாக சொல்லியிருக்கின்றார்களே அன்றி அதன் முழு வரலாறு சொல்லபடவில்லை

உலகின் போக்கினை மாற்றி நின்ற மிகபெரும் சக்தி அது. அந்த பேரரசுதான் இன்றைய பல மாற்றங்களுக்கு காரணம்

அடுத்த விஷயம் இஸ்ரேலிய ராணுவ மேதை மோசே தயான்

நிச்சயம் அலெக்ஸாண்டர், நெப்போலியன் வரிசையில் மிக பெரும் ராணுவ மேதை அவர்

இஸ்ரேல் என்பது இன்றுவரை நீடிக்கவும், ஆரம்ப காலங்களில் அது அசாத்திய வெற்றிபெற்று தன் இருப்பை தக்க வைத்துகொள்ளவும் அவரே பிராதனம்

Image may contain: 1 personமிக சிறிய குழுவாக சென்று பெரும் ராணுவத்தை சமாளிப்பது எப்படி என அவர் நடத்திய யுத்தங்கள்தான் இன்றைய இஸ்ரேலுக்கு மட்டுமல்ல உலக நாட்டு ராணுவங்களையே ஆச்சரிபடுத்தும் விஷயம்

இவ்வளவிற்கும் போரில் ஒரு கண்ணை இழந்தவர்

17 நாடுகள் திரண்டுவந்து இஸ்ரேலை அடித்தபொழுததெல்லாம், தமிழகத்தின் அளவில் 10ல் ஒரு பங்கு கூட இல்லாத இஸ்ரேல் பலமுறை வெற்றிபெற இவரின் யுத்த வியூகமே காரணம்

இஸ்ரேலியருக்கு இவர் கிட்டதட்ட‌ அவர்கள் கண்ட மெசியாவின் சாயல்

இந்த மாவீரனை பற்றி யுத்த வித்தகனை பற்றி தமிழில் இன்னும் புத்தகம் வரவில்லை

வந்தால் பெரும் வரவேற்பு பெறும் என்பதில் சந்தேகமில்லை

Pa Raghavan போன்றோர் இவரை குறித்து புத்தகம் எழுதுவது அவர்களின் எழுத்து வரலாற்றில் பெரும் மகுடமாக சூட்டபடும், அவர்கள் முயற்சி எடுக்கலாம்

இந்த மாவீரனின் ஒற்றைகண் மூடி அவரின் மாபெரும் புகழுக்கு பின் உலக பிரசித்தம் ஆனது

இட்சாக் ரபீன், ஷிமான் பெரஸ்,எகுத் ஒல்மாட், பெஞ்சமின் நேத்தய்ன்யாகு எல்லாம் ராணுவத்தினராக உளவுதுறையிராக சாதித்துவிட்டு, யுத்தங்களில் உயிர்தப்பிவிட்டு அதன் பின் இஸ்ரேலிய அரசியல்வாதி ஆனவர்கள், அந்நாடு சாதிக்கின்றது

தமிழகமோ அண்ணா முதல் ஜெயா வரை சினிமாவில் நடித்துவிட்டு வந்தவர்களால் ஆளபட்டது, பின் எப்படி உருப்படும்? நாசமாகத்தான் போகும்

அதன் தொடர்ச்சியாக இப்பொழுது ரஜினி, கமல் எல்லாம் வந்திருக்கின்றார்கள், இன்னும் வருவார்கள் தமிழகத்தை நாசமாக்குவார்கள்

தமிழகத்திலும் பலர் ஐரோப்பிய இஸ்ரேலிய பாணியினை பின்பற்றுவார்கள்

சர்ச்சியில் விக்டரி சிம்பலைத்தான் ராமசந்திரன் இரண்டு விரலை காட்டி அது இரட்டை இலையாகவும் ஆனது

தமிழக சினிமாக்களில் கூட சிலர் ஒற்றைக்கண்ணை மூடி மோசே தயான் பாணியில் வருவார்கள்

இது பல சண்டைகாட்சிகளில் உண்டு

ரஜினியும் அதே மோசேதயான் போல ஒற்றைகண்ணில் பல சண்டைகளில் சில பாடல்களில் கூட வருவார்

என்ன செய்ய? இஸ்ரேலியருக்கு வாய்த்த மோசே தயான் அப்படி, நமக்கு வாய்த்தவர்கள் இப்படி

அண்ணாமலை படத்தில் கூட ஒரு பாடலில் ரஜினி குஷ்பூவுடன் மோஷே தயான் போல‌ வந்து ஆடிகொண்டிருந்தார்

அதற்காக அவர் மோசே தயான் ஆக முடியாது

ஆனால் குஷ்பு அந்த இஸ்ரேலிய யூத பெண்களை போலவே தெய்வீக அழகோடு இருந்தார்

விஷயம் குஷ்புவின் தெய்வீக அழகல்ல அது எல்லோருக்கும் தெரிந்தது

இந்த மோஷே தயானின் அற்புதமான வீரம் மிகுந்த யுத்த வரலாற்றை யாராவது தமிழில் எழுதி புத்தக கண்காட்சியில் வைத்தால் அது பெரும் வரவேற்பினை பெரும் என்பது உறுதி

சுவாரஸ்ய எழத்தாளர்கள் Pa RaghavanSaravanan ChandranMugil Sivaபோன்றோர் முயற்சிக்கலாம்