ஆளுநருக்கு ஸ்டாலின் கண்டனம்

ஆளுநருக்கு ஸ்டாலின் கண்டனம், எல்லை மீறுகின்றார் என கொதிப்பு : செய்தி

இதுதான் கலைஞருக்கும் ஸ்டாலினுக்கும் உள்ள வித்தியாசம்

கலைஞராக இருந்தால் இப்படித்தான் சொல்வார்

“கவர்ணர் தமிழ்நாட்டின் மீது கொண்டிருக்கும் அக்கறையினை பாராட்டுகின்றேன், தான் ஆளுநராக இருக்கும் தமிழகத்தில் எல்லாம் முறையாக இருக்கின்றதா என அவர் அறிந்துகொள்ள துடிப்பது வரவேற்கதக்கது.

அதே நேரம் அவரே களமிறங்கும் அவசியம் வந்த பின், அந்த ஆட்சியினை ரத்து செய்துவிட்டு இந்த ஆய்வுகளை நடத்தினால் திமுக என்ன, மொத்த தமிழகமே வரவேற்கும்

இப்போது ஆளுநரின் இந்த நடவடிக்கையால் யார் தமிழகத்தை உண்மையில் ஆள்கின்றார்கள் என்ற குழப்பம் எல்லோரையும் போல எனக்கும் ஏற்பட்டிருக்கின்றது”

Advertisements

ஒரு விஷயம் பரவாலாக வருவதை கண்டிருப்பீர்கள்

ஒரு விஷயம் பரவாலாக வருவதை கண்டிருப்பீர்கள்

அதாவது இலங்கை மலையக மக்களின் தலைவராக இருந்தவரின் பெயரினை இலங்கை அரசு அகற்றிவிட்டதாம், உடனே இங்கு கொந்தளிக்கின்றார்கள், இது அநீதியாம்

அந்த அபலைகளை என்று இவர்கள் நோக்கினார்கள்?

சாதியால் ஒடுக்கபட்ட அவர்கள் யாழ்பாண மேலாதிக்கத்திடம் வாங்கிய அடி கொஞ்சமல்ல, சிங்கள அடக்குமுறையில் சந்தித்த கொடுமையும் கொஞ்சமல்ல‌

அந்த மக்களை மூன்றாம்தர மக்களாகவே இரு சாராரும் நடத்தினர், அவர்களில் பலரை திருப்பி அனுப்பியபொழுதும் இங்கு சத்தமில்லை

தேயிலை கூலியினை கூட்டி கொடுங்கள் என அம்மக்கள் போராடும்பொழுதும் இங்கு ஒரு குரல் ஆதரவாக எழும்பவில்லை

இங்கு எழும்பிய குரல் எல்லாம் ஈழம், ஈழவிடுதலை என்றே இருக்குமே ஒழிய மலையகம் எனும் ஒடுக்கபட்ட மக்களை யாரும் நினைத்து பார்க்கவில்லை

புலிகளின் தமிழீழ வரைபடத்தில் இந்த மலையகம் வராது, எப்படியும் போங்கள், நீங்கள் தமிழரே அல்ல என புலிகள் சொன்ன விஷயம் அது

அந்த புலிகளுக்குத்தான் இங்கு தமிழர்கள், தமிழரை வாழ வைக்க வந்தவர்கள் என்ற பிம்பம் இருந்தது

மலையக தமிழரை மனிதர்களாக நினைத்து அரவணைத்த தலைவன் பத்மநபா ஒருவனே, அவனும் கொல்ல்பட அதுவும் காரணம்

அப்படி எல்லா வகையிலும் கைவிடபட்ட இனம் அது , அவர்களை மதித்து சென்ற உலக தலைவர்கள் யார் தெரியுமா? இரண்டே பேர்தான்

விடுதலை வீரன் புரட்சியாளன் சேகுவேரா, ஆம் அவன் அந்த அபலைகளை தேடி சென்றான், அவன் நட்டுவைத்த மரம் அங்கு இன்னும் உண்டு

அவனுக்குபின் அங்கு சென்ற ஒரே அடுத்தநாட்டு தலைவர் மோடி, அம்மக்களுக்கு இந்தியா கட்டிகொடுத்த மருத்துவமனையினை திறக்க சென்றார்

அப்படி கைவிடபட்ட தமிழர்கள் அவர்கள்

ஏன் அவர்கள் குரல் கேட்காது?, அவர்கள் வக்கற்றவர்கள் வாழ வழியற்றவர்கள் அவர்களை பற்றி பேசினால் லண்டனில் இருந்தும் கனடாவில் இருந்தும் காசு வராது

சினிமா எடுத்தாலும் மலேசிய தோட்ட தொழில் பற்றி எடுத்து சம்பாதிப்பார்களே தவிர இவர்கள் துயரம் எல்லாம் யாருக்கும் தெரியாது

இன்று ஏதோ கண்டுவிட்டதை போல கத்துகின்றார்களாம், மலையக தமிழர் தலைவர் பெயரை காக்க வேண்டுமாம்

இங்கே கத்தியது எல்லாம் பிரபாகரனுக்காக, ஆனால் இப்போது கேட்பது மலையக மக்களுக்காகவாம்

இலங்கை எதிர்கட்சி தலைவர் ஒரு தமிழர், அவரே இந்த மலையக மக்களின் உரிமை குறித்து பேசமுடியாது, பேசினால் யாழ்பாணத்தில் வோட்டு விழாது, அங்குள்ள யதார்த்தம் அப்படி

தமிழக அல்ட்ராசிட்டி அரசியல் இப்படி போகின்றது

அவர்களுக்கு செய்வதாக இருந்தால், கூலி உயர்வு கேட்டு கிடைக்காமல் நொந்து வெந்து செத்துகொண்டிருக்கும் அம்மக்களுக்கு உரிய கூலி கிடைக்க போராடலாம்

அவர்களுக்கு கல்வியில் வேலை வாய்ப்பில் முன்னுரிமை கிடைக்க போராடலாம் (விடுவானா யாழ்பாணத்தான்?)

அதனை விட்டுவிட்டு சும்மா சிங்கள அரசின் கொடுமை என்றெல்லாம் பேசிகொண்டிருப்பது நிச்சயம் உளறல் அரசியல்

அவர்கள் அவர்களின் சூப்பர் ஹீரோ ஜெயவர்த்தனேவினை கூட மறந்துவிட்ட காலத்தில் மலையக தமிழர் தலைவர் பெயரை ஏன் நினைவில் வைப்பார்கள்?

இதில் திமுக வேறு குதிக்கின்றது

அங்கே மலையக தமிழர் பெயர் சர்ச்சையினை விடுங்கள், இங்கு எல்லா அடையாளங்களையும் அழித்து அண்ணா, கலைஞர் இன்னபிற அடையாளங்களை எல்லாம் புகுத்தினீர்களே அதனை நீக்க நீங்கள் தயாரா?

அதனை செய்துவிட்டு சிங்களன் பக்கம் வாருங்கள்

ஒரு பிஜேபியின் ரகசிய அடியாள்

கணினி படிச்சவனுக்கு மாடு எத்தனை லிட்டர் கறக்குது, எவ்ளோ பால்கோவா க்கு போகுது, எவ்ளோ வெண்ணைக்கு போகுது, எவ்ளோ ஏற்றுமதிக்கு போகுது ன்னு கணக்கீடு, நான் வேலை கொடுக்கிறேன் – சீமான்

(மிஸ்டர் சைமன் அதனை செய்ய கால்குலேட்டர் போதாதா? கம்பியூட்டர் எல்லாம் வேற லெவல், உமக்கு அறிவே இல்லை என இப்படியா பிதற்றுவீர்)

என்ன நாடுடா இது?

ஒரு தேசிய கட்சி இப்படி மாடு,சாணம் , ஹோமியம் என சொல்லி சொல்லி பல உயிர்களை வாங்கியது

இங்கே ஒருவன் எதற்கெடுத்தாலும் மாடு, பால் சாணி என பேசிகொண்டே இருக்கின்றான்

சரியான மாட்டு புத்திகார நாடாக இருக்கும் போலும்,

ஏம்பா பிஜேபி மெம்பர்ஸ்

ஒரு விவரமானவனை பார்த்து உங்கள் தமிழக ரகசிய ஏஜெண்டாக நியமிக்க கூடாதா?

பயவுள்ளை “நான் ஒரு பிஜேபியின் ரகசிய அடியாள்” என மாடு, பால் என எப்படி நிரூபிக்கின்றது பாருங்கள்

மறுபடியும் சென்னையில் ஒருதலைகாதல் கொலை

மறுபடியும் சென்னையில் ஒருதலைகாதல் கொலை

என்ன யழவோ தெரியவில்லை இப்பொழுதெல்லாம் எரிந்து சாகும் கொடூர செய்திகளே தொடர்ந்து வருகின்றன‌

இந்த சைக்கோ பயலும் அந்த பெண்ணை குடும்பத்தோடு கொளுத்தியிருக்கின்றான், இதுவரை நடந்த கொலைகளில் மிக கொடூரமானது இது

அவள் ஒரு பெண் , அவளுக்கும் மனம் உண்டு, உரிமை உண்டு. இவனை காதலிக்கவில்லை என சொல்ல அவளுக்கு பூரண உரிமை உண்டு

இவன் என்னமோ சென்னை நாட்டு மன்னன் போலவும், அந்த பெண் இவனின் அடிமை கூட்டத்தில் ஒருத்திபோலவும் கருதிய இந்த கொடியவன் எரித்தே விட்டான்

அப்பெண் இறந்துவிட்டாள் , குடும்பத்தார் உயிருக்கு போராடிகொண்டிருக்கின்றனர்

எந்த நாட்டிலும் இல்லா விசித்திர வெறியாட்டங்கள் இங்கு நடக்கின்றன, இது மிக மிக மட்டமான கொடூரமான சமூகமாக இது மாறிகொண்டிருக்கின்றது

இந்த குற்றங்கள் களையபட தனி துறையும், தனி சட்ட பிரிவும் ஏற்படுத்துதல் வேண்டும்

கொஞ்சம் யோசித்தால் ஒரு விஷயத்தை கவனிக்கலாம்

ஒரு சில மிரட்டல்களுக்கு பின்பே இந்த கொடுமைகள் அரங்கேறியிருக்கும், முதலிலே நடக்க வாய்ப்பில்லை

அந்த மிரட்டல் காலங்களிலே இந்த சைக்கோக்களை அடையாளம் கண்டு, காவல்துறை உதவியோடோ இல்லை வேறு வழியிலோ இதனை தடுக்க வேண்டும்

இச்சம்பத்தை செய்தவனை மதுரை வீரன் போல ஆக்கி சமூகத்தில் உலவவிட்டால் கொஞ்சம் வருங்கால சைக்கோக்கள் அடங்க வாய்ப்பிருக்கின்றது

மத்தியில் சுயாட்சி மாநிலத்தில் கூட்டாட்சி

“ஆட்டுக்கு தாடியும் நாட்டுக்கு கவர்ணரும்” தேவையா தம்பி என கேட்ட தமிழகம் இப்பொழுது சத்தமில்லாமல் அடங்கி கிடக்கின்றது

இது உரிமை மீறல் எனும் வகையில் திமுகவும் இன்னும் குரல் கொடுக்கவில்லை

“மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி” என்ற தத்துவம் ஓங்கி ஒலித்து மற்ற மாநிலங்களுக்கே வழிகாட்டிய தமிழகத்தில் இப்பொழுது சத்தமே இல்லை

“மத்தியில் சுயாட்சி மாநிலத்தில் கூட்டாட்சி” என்ற புது தத்துவம் எழுத கிளம்பிவிட்டார்கள்

கொஞ்சம் கொஞ்சமாக தமிழகம் 50 வருடமாக இறுக்கி வைத்திருந்த கோட்டை கதவுகள் திறக்கபடுகின்றன‌

அந்த மனிதர் எழுந்தார், தமிழகம் பல உரிமைகளை பெற்றது, கோட்டையில் கொடியேற்றும் உரிமை வரை ஆளுநர் கையிலிருந்து தமிழக முதல்வர் கைக்கு வந்தது

அந்த மனிதர் சரிந்தார், எல்லாமும் சரிகின்றது

மாநில அரசு கலைக்கபட்டு ஜனாதிபதியின் ஆட்சி வந்தால் ஒழிய ஆளுநர் தலையிட வாய்ப்பே இல்லா மாநிலம் அது

ஆக இச்சம்பவம் காட்டுவது ஒன்றே ஒன்றுதான்

அறிவிக்கபடாமல் இம்மாநில அரசு கலைக்கபட்டிருக்கின்றது , வெறும் அதிகாரமற்ற அரசு பொம்மைக்கு வைக்கபட்டிருக்கின்றது.

இம்மாதிரி அவமானம் எந்த ஆட்சிக்கும் இதுவரை வந்ததில்லை என்பதுதான் விஷயம்.

கவர்னர் நேரே அதிகாரிகளை சந்தித்து….

Image may contain: 2 people, people smiling, people sitting and indoor

அண்ணே இங்க ஒரு முதலமைச்சர் இருக்காரு, ஏகபட்ட அமைச்சர் இருங்காங்க, அப்படி இருக்கும் போது ஒரு கவர்னர் நேரே அதிகாரிகளை சந்திச்சி ஆலோசனை செய்தா எண்ணண்ணே அர்த்தம்

இவர்கள‌ மனுஷனாகவே மதிக்கலண்ணு அர்த்தம், இவர்கள் ஆள தகுதியே இல்லாதவர்கள்னு அவர்களுக்கு தெரிஞ்சிருக்குண்ணு அர்த்தம் தர்பூசனி தலையா


ஆளுநர் தலையீடு – தமிழகத்துக்கும் நோய் பரவியது: நாராயணசாமி

ஏற்கனவே கிரண்பேடி புதுவையில் சதிராட்டம் ஆடுவதில் மனிதர் குழம்பியிருந்தார், இப்பொழுது தமிழகத்தையும் பார்த்து கதற தொடங்கிவிட்டார்

எவ்வளவு பொய் சொல்லி, எவ்வளவு பணம் செலவழித்து, எப்படி எல்லாம் சீட் வாங்கி, பின் எம்.எல்.ஏக்களை வாங்கி கிட்டதட்ட செத்து முதல்வராகின்றார்கள்.

அவர்களுக்கு மேல் ஒன்றுமே செலவழிக்காமல் ஒருவர் ஆளுநர் என எங்கிருந்தோ வந்தால் கோபம் வராதா?


 எல்லா மாவட்டத்திலும் ஆய்வு செய்வேன் : கவர்ணர்

எங்கே சில மண்குவாரி, கல் குவாரி, கிரானைட் குவாரி, தாது மணல் ஏரியா, சில எஸ்டேட்டுகள் எல்லாம் சென்று வந்துவிடுங்கள் பார்க்கலாம்.


அரசை பாராட்ட ஆய்வு வேண்டும், ஆய்வு செய்யத்தான் களத்திற்கு வந்தேன் : கவர்ணர் புரோகித்

கவர்ணர் அவர்களே, இந்த அரசை பற்றி தெரிந்து கொள்ள ஆய்வு வேறு வேண்டுமா?

பழைய கவர்ணருக்கு போன் போட்டு பேசியிருந்தாலே தெரிந்திருக்குமே, எதற்கு ஆய்வு? ஆக நீங்கள் ஏதோ முடிவோடு களமிறங்கிவிட்டது புரிகின்றது

கவர்ணர் ஆட்சிக்கு ஒத்திகையா அய்யா?


அந்த கும்பலில் எவனாவது ஒருவன், தமிழனுக்கு தமிழ் ஆளுநர்தான் வேண்டும், வடக்கத்திய ஹிந்தியனே போ, தமிழனை ஆளுநராக அனுப்பு என கத்துவான் எனபார்த்தால் சத்தமே இல்லை.

எதை பேசினால் வாயிலே அடிவிழும் என நன்றாக தெரிந்து வைத்திருக்கும் கும்பல் இது,

எளிய தமிழ் பிள்ளைகள் சும்மா களமாடவில்லை, மிக நுட்பமான பயிற்சியுடனே களத்தில் இருக்கின்றார்கள்


மவுனாலா அபுல் கலாம் ஆசாத்

Image may contain: 1 person, glasses and hat

இந்த தேசத்தின் பெரும் அடையாளம் அப்துல் கலாம், அப்படியே இன்னொரு கலாமும் இங்கு உண்டு. இருவருமே கல்வியின் அடையாளங்கள். இருவருமே நாட்டுபற்று மிக்க இந்தியர்கள்

அந்த பெரிய கலாமின் பெயர் அபுல் கலாம். சுதந்திர போராளி, வெள்ளையனுக்கு நான் அடிமை இல்லை என சொல்லி ஆசாத் அதாவது சுதந்திரமானவன் என்ற பெயரை தன்னோடு சேர்த்து அபுல் கலாம் ஆசாத் ஆனார். மவுனாலா ஆசாத் என்றும் அறியபடுவார்.

மவுலானா என்றால் மதபெரியவர் என பொருள்.

மிக சிறுவயதிலே போராட வந்தவர். அவர் களத்தில் இருக்கும்பொழுது நேரு கூட போராட வரவில்லை. நேருவுக்கு இவர்தான் சீனியர். 35 வயதிலே காந்தி இவரை காங்கிரஸ் தலைவராக்கினார்

அபுல் கலாமிடம் நாட்டுபற்று ஓங்கி இருந்தது, பெரும் போராட்டங்களை எல்லாம் நடத்தினார், பத்திரிகை நடத்தினார், சிறை சென்றார் தியாகம் பல புரிந்தார். எல்லாம் கூடிவரும் வேளையில் ஜின்னாவின் பாகிஸ்தான் குரல் எழும்பியது

அபுல் கலாம் என்ன செய்யபோகின்றார் என தேசமே எதிர்பார்த்தது. அவரோ இந்தியாவோடு இருப்போம் பிரிவினை ஆபத்து என சொல்லி இந்தியனாய் இருந்தார்

பிரிவினைக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்தார். இந்நாட்டை பிரிப்பது இருவர் ஒருவர் ஜின்னா இன்னொருவர் பட்டேல் இருவரும் இறங்கிவரவேண்டும் என பேசிய ஒரே தேசாபிமானி இந்த அபுல் கலாம் ஒருவரே

பிரிவினை நடக்கும்பொழுது கலவரங்களை கண்ட காந்தி உண்ணாவிரம் இருந்தபொழுது அபுல் கலாமும் உண்ணாவிரதம் இருந்தார், ஆனால் அவை எல்லாம் ஏனோ மறைக்கபட்டன‌

இப்படி அவர் போராடினாலும், ஒரு இஸ்லாமியன் பாகிஸ்தான் வேண்டாம் என போராடினாலும் பாகிஸ்தான் பிரிந்தது, பலுஸ்சிதான் சிங்கம் கான் அப்துல் கபார்கான் எங்களை பாகிஸ்தானுடன் விடாதீர்கள், நாங்கள் இந்தியாவோடுதான் இருப்போம் என கெஞ்சியபொழுது கண்ணீர் விட்டார் அபுல் கலாம்

கிழக்கு வங்கத்தை பாகிஸ்தானுக்கு கொடுத்தது போல பலுசிஸ்தானை இந்தியாவிடம் கொடுங்கள் என அபுல் கலாமும் இன்னும் சில நாட்டுபற்றுமிக்க இஸ்லாமியரும் கேட்டது வெள்ளையன் காதிலும் விழவில்லை பட்டேல் காதிலும் விழவில்லை

அபுல்கலாமின் இதயத்தை பாதித்த சம்பவம் இவை, அனாலும் தாங்கிகொண்டார்

பிரிந்து போகும் பாகிஸ்தான் உருப்படாது, அங்கு அடக்குமுறையே ஆளும் ஜனநாயகம் வாழாது என சொல்லி வழியனுப்பினார். அது இன்றளவும் நடக்கின்றது

சுதந்திர இந்தியாவின் கல்வி அமைச்சர் அவர்தான். நேரு போலவே அவருக்கு உலக நடப்பும், கல்வியின் அவசியமும் தெரிந்திருந்தது, பெரும் விஞ்ஞான கூடங்கள் இங்கு அமைய வேண்டுமென விரும்பினார்

இன்று இந்தியாவின் அறிவு கூடமாக கருதபடும் ஐஐடி அவர் கனவுபடி உருவானது அவர்தான் அமைத்தார்

சாதி,மதம்,இனம் கடந்த அறிவார்ந்த மாணவ சமூகம் வேண்டுமென்பது அவரின் விருப்பம்

அந்த ஐஐடி இன்றளவும் இந்தியாவின் நம்பர்1 இடத்தில் இருக்கின்றது

நாடெல்லாம் பல்கலைகழகம் அமைய பாடுபட்டார். இன்று காணும் பல்கலை கழக மானிய குழு அவரால்தான் அமைக்கபட்டது.

மருத்து கல்லூரிகள் அமைக்கவும், அதற்கு பல்கலை கழகம் அமைக்கவும் அவர் எடுத்த முயற்சிகள் ஏராளம். இந்நாட்டில் காணும் மருத்துவ புரட்சிக்கும் அடித்தளம் அவரே

11 ஆண்டு காலம் அற்புதமான பணிகளை கல்விக்காக செய்தார், அந்த அடித்தளத்தில்தான் அப்துல் கலாம் போன்றவர்கள் பின்னாளில் வந்தனர்

அபுல்கலாம் ஆசாத் எனும் மாமனிதன் அமைத்த பாதையில் பின்பு வந்தவர்தான் அப்துல் கலாம்

இந்த இரு கலாம்களும் மறக்க முடியாதவர்கள், இத்தேச தியாகிகள்

காங்கிரஸ் கட்சி ஒரு தவறு செய்கின்றது, நேரு சாஸ்திரி காமராஜர் என தங்கள் கட்சியின் பிம்பங்களை காட்டும் அது அபுல் கலாம் ஆசாத் போன்ற மாமனிதர்களை நினைவு கொள்ள தவறுகின்றது

அதனை சரிபடுத்துதல் வேண்டும்

அவர் செய்த சாதனைகளுக்காக அன்றே பாரத ரத்னா வழங்கபட இருந்தது , ஆனால் நான் அக்குழுவில் உறுப்பினராக இருப்பதால் எனக்கு நானே விருது கொடுத்தது போல் ஆகிவிடும் என மறுத்தார் அப்பெருமகன்

அவருக்கு பாரத ரத்னா அவர் மறைவுக்கு பின்பே கொடுக்கபட்டது, 1992ல் அதுவும் ராமசந்திரனுக்கு பிறகு

காங்கிரஸ் செய்த பல தவறுகளில் பெரும் தவறு இது.

அவருக்கு மதபற்று இருந்திருந்தால் ஜின்னா எல்லாம் எழும்பியிருக்கவே முடியாது. இந்தியனாக அபுல் கலாம் நின்றிருந்ததால் ஜின்னா பாகிஸ்தான் தந்தையாக உருவானார்

இவ்வளவிற்கு மிக சிறந்த இஸ்லாமிய அறிஞர் அபுல் கலாம், மார்க்க அறிவும் ஞானமும் அவரிடம் குவிந்திருந்தது, அன்றைய நாளில் இஸ்லாமிய தலைவரும் அவரே

சில புத்தகங்கள் கூட எழுதியிருந்தார்.

ஆனால் நாடு வேறு மதம் வேறு. நான் இந்திய குடிமகன் மதத்தால் இஸ்லாமியன் என்பதில் உறுதியாக நின்றார்.

ஒரு விஷயம் உறுதியாக சொல்லலாம், நேரு போலவே கொண்டாடபட வேண்டிய பெருமையும் புகழும் அபுல் கலாமிற்கு உண்டு , நேருவுக்கு சமமான சாதனையினை, தியாகத்தை அவரும் செய்திருக்கின்றார். இந்நாட்டிற்காக வாழ்ந்திருக்கின்றார்

தன் மிகசிறந்த தொலைதூர திட்டங்களால் இத்தேசத்திற்கு மகத்தான அடித்தளத்தினை அமைத்திருக்கின்றார்.

நவம்பர் 11 அவரின் பிறந்த நாள், அது தேசிய கல்வி நாள்.

ஆனால் அப்படி ஒரு நாள் இருப்பதையோ இத்தேசம் கொண்டாடுவதையோ யாராவது கண்டோமா?

ஏன் ஐஐடி மாணவர்கள் கூட அவரை நினைப்பதில்லை

நவம்பர் 14 குழந்தைகள் நாள் என கொண்டாடும் தேசம் , நவம்பர் 11ஐ மறந்துவிடுகின்றது, இது நிச்சயம் வருந்ததக்கது.

பாஜக அபுல் கலாமினை கொண்டாடாடது ஆச்சரியம் அல்ல, ஆனால் காங்கிரஸ் ஏன் புறக்கணிக்க வேண்டும்?

நேருவினை நினைவு கூறுபவர்கள் இம்மாமனிதனை ஏன் புறக்கணிக்க வேண்டும்? அவரையும் கொண்டாடினால் என்ன? நிச்சயம் செய்ய வேண்டும்

இனியாவது அப்பெருமகனின் புகழை மறைக்காமல் இத்தேசம் நினைவு கூறட்டும்

இல்லாவிட்டால் பெரும் நன்றிகொன்ற பாவத்திற்கு ஆளாகிவிடுவோம்