சசிகலா சொத்து பூராவும் கையகடுபத்தபட்டால்…

இந்த ரெய்டுகளில் சசிகலா சொத்து பூராவும் கையகடுபத்தபட்டாலும், வெறும் கையோடு அவர் சிறையில் இருந்து வந்தாலும் , ஒரே ஒரு அறிவிப்பில் அவரால் கோடி கோடியாக குவிக்க இயலும்

“நான் பார்த்த அரசியலும் அதன் இன்னொரு பக்கமும்” என்றொரு நூல் எழுதபோகின்றேன் என மட்டும் அறிவிக்கட்டும், எத்தனை பிரமுகர்கள்? எத்தனை தொழிலபதிகள்? எத்தனை அரசியல்வாதிகள் அவர் காலடியில் கோடிகளை கொட்டி விழுந்து கிடப்பார்கள் தெரியுமா?

அவர் வாய்திறக்க கூடாது என்பதற்காக பல்லாயிரம் கோடிகளை கொட்டி கொடுக்க ஏராளமானோர் தயார்.

அத்தனை கோடீஸ்வரர்கள் ஜாதகமும் அவரிடம் இருக்கின்றது.

30 வருடமாக அவருக்கு தெரியா அரசியல் நகர்வுகள் இல்லை. அவர் பார்வைக்கு வராத விஷயங்கள் இல்லை

அவர் அறியாத ரகசியம் இல்லை

அத்தனை மர்மங்களுக்கும் , விடை தெரியா பல கேள்விகளுக்கும் விடை அந்த சசிகலா

அவர் மட்டும் ஒரு சுயசரிதை எழுதினால் நன்றாகத்தான் இருக்கும், ஆனால் எழுதுவாரா என்பது இனி நடக்கபோகும் நடவடிக்கைகளை பொறுத்தது.

அவர் அப்படி ஒரு அறிவிப்பினை வெளியிட்டாலே போதும், பெரும் பரபரப்பு தொற்றிகொள்ளும்

Advertisements

நடராஜனுக்கு சிறை தண்டனையினை உறுதி செய்தது ஐகோர்ட்

நடராஜனுக்கு சிறை தண்டனையினை உறுதி செய்தது ஐகோர்ட்

அவ்வளவு எளிதில் சிறைக்கு செல்லமாட்டார், இனி உச்சநீதிமன்றம் செல்லலாமா? அங்கு குமாரசாமி போல யாரும் இருந்துவிடமாட்டானா? என்றெல்லாம் திட்டமிடுவார்கள்

அவரின் உடல்நிலை கூட அவருக்கு சாதகம்

ஆனால் குறிவைத்துவிட்ட மேலிடம் இந்த வாய்ப்பினை தவறவிடுமா என்றால் விடாது, இடம்பார்த்து அடிக்கும்

எதற்கும் இப்பொழுதே ஜெயா சமாதியில் அடித்து சத்தியம் செய்துவிட்டு நடராஜன் தயாராக இருக்க‌ திட்டமிடலாம்

இந்த தீர்ப்ப்பால் தினகரன் பெரும் அதிர்ச்சியில் இருக்கலாம், இனி அடுத்து அவர் வழக்கு என்னாகும் என்பது சொல்லி தெரியவேண்டியதில்லை.

ஆக மன்னார்குடி கும்பலே தனி சிறைச்சாலையில் இருக்கும் போல..

ஜிம்பாப்வேவில் நடப்பதுதான் என்ன?

வெள்ளையன் சில தெற்கு ஆப்ரிக்க நாடுகளை வளமாக மாற்றி வைத்திருந்தான் அதில் ஒன்று ஜிம்பாப்வே

நீண்ட காலத்திற்கு பின் 1980ல் அது சுதந்திரம் பெற்றது. அது சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்தே நாசமானது. நாசம் என்றால் மகா நாசம்

பணமதிப்பு எல்லாம் வீழ்ந்து படுபாதாளத்திற்கு சென்றது

ஒரு மில்லியன் கரன்சிக்கு நோட்டு என்றளவு சீரழிந்தது

அதற்கு ஒரே காரணம் அதன் இரண்டாம் அதிபர். இன்றுவரை அவர்தான் அதிபர் அவர் பெயர் முகாபே

சுதந்திரம் கிடைத்த நாடுகள், நல்ல தலைவன் கிடைக்காவிட்டால் நாசமாகிவிடும், ஜிம்பாபே அதற்கு சாட்சி

அந்த முகாபேக்கு வயது 93, நாடு நாசமான நிலையிலும் தன் மனைவியினை அடுத்த அதிபராக நியமிக்கும் முயற்சியில் இறங்கினார்

பொறுத்து பார்த்த ராணுவம் பொங்கிற்று, மனிதர் இப்போது வீட்டு சிறையில் இருக்கின்றார்

93 வயதிலும் தன் அதிகாரத்தை விட்டுவிட கூடாது என போராடிகொண்டிருக்கும் மனிதருக்கு ஆதரவாக பாழாகிவிட்ட நாட்டில் ஒருவரும் இல்லை

துபாய் பாலா உலகின் சக்திமிக்க டான்

தாவுத் இப்ராகிம் என்பவர் சத்தியமாக துபாயில்தான் இருக்கின்றார், 100% உறுதியாயிற்று. ஆனால் பாலா எனும் பெயரில் முகமறைவாக இருக்கின்றார். பிளாஸ்டிக் சர்ஜரி செய்து முகத்தை மாற்றியிருப்பார் போலிருக்கின்றது

இல்லாவிட்டால் இவ்வளவு போன்களும், செய்திகளும் சர்வதேச காவலர்களிடம் இருந்து வராது

“நான் யார் தெரியுமா? பாலா யார் தெரியுமா? அவர் தொடர்பு தெரியுமா? நான் உளவுதுறையில் எப்படிபட்டவன் தெரியுமா? உன் தெருவுக்கு அடுத்த தெருதான் எனக்கு சேவ் ஹவுஸ். எத்தனைபேரை மலேசியாவில் தூக்கியிருக்கின்றோம் தெரியுமா?” என ஏகபட்ட மிரட்டல்கள்

துபாய் பாலா உலகின் சக்திமிக்க டான் என்பது அவர்கள் சொல்லவரும் விஷயம்

“அண்ணே நினைச்சா வள்ளியூரையே அழிச்சிருவாரு, ஊரும் இருக்காது பொத்தையும் இருக்காது பாக்குர்ர்ர்ரியா …” என சொல்கின்றது ஒரு உளறல் குரல்

அய்யா அங்கே இப்பொழுதுதான் தெப்பகுளம் எல்லாம் அழகுபடுத்தியிருக்கின்றார்கள், தெப்ப திருவிழா வேறு வரும் வேண்டாம் என்றால் அது உன் கையில்தான் இருக்கின்றது, அண்ணனை பற்றி பேசினால் வள்ளியூர் அழியும் , காப்பாத்திக்க என்கின்றது

வள்ளியூரை இனி நான் மட்டும்தான் காப்பாற்ற முடியுமாம்

நானே இனி பாலாவினை அழைத்து, துபாயா என் பிரதர் மார்க் வா இருக்காரா? என பேசி மன்னிப்பு கேட்டுவிட்டு ஓடிவிட வேண்டுமாம், இல்லாவிட்டால் வள்ளியூர் பகுதியே சாம்பலாகிவிடுமாம்

ஏலேய் லூசு,

சும்மா சர்வதேச போலிஸ், உளவுதுறை என அருகில் 2 கிளாஸ் சரக்கிற்காக பேசுபவனிடம் போனை கொடுக்காதே

சும்மா நீ மருந்தை குடித்துவிடுவேன் என மிரட்ட அது வள்ளியூர் காவல் நிலையம் கிடையாது, அது துபாய்

பிய்த்து எறிந்துவிடுவாகள், கொஞ்சம் கவனமாக இரு.

வள்ளியூர் பக்கம் மட்டும் வந்துவிடாதே, குளத்து மடையில் சிக்கலாம், உன்னை வைத்து அடைத்துவிட கூடும்.

 
 
 

என்ன வெட்டு? என்ன குத்து?

No automatic alt text available.

இவருக்கு நான் ஜென்மவிரோதியென்றால் என்னை கீழ்பாக்கம் வரிசையில் உலகம் சேர்க்காதா?

என்னை எப்போது அய்யா வெள்ளை ஆக்கினாய்? நான் இன்னும் கருப்பாகத்தானே இருக்கின்றேன்?

என்ன வெட்டு? என்ன குத்து? அதற்கு பாபுராவு ஏன் பருப்பு விற்க வேண்டும்?

வெள்ளிகிழமை காலையிலே துபாய் பாலாவிற்கு உச்சி மண்டையில் நரம்பு சுளுக்கிகொண்டது


ஒரு அதிர்ச்சிகரமான தகவல் கிடைத்தது

மோடி மீது சசிகலா கும்பல் கொண்டிருப்பது போல எம்மீது கொலைவெறியில் திரியும் துபாய் பாலா எம்மை அடிக்க நாம் தமிழர் தும்பிகளை தூண்டி விட்டிருக்கின்றான்

“அவன் தமிழினதுரோகி, அண்ணனையும் தேசிய தலைவரையும் இழிவுபடுத்துவது போல பதிவிடுகின்றான், உண்மையான தமிழன் என்றால் அடியுங்கள்” என்றேல்லாம் பேசியிருக்கின்றான்

தும்பிகள் சொல்லியிருக்கின்றார்கள்

“அவரை அடிக்கலாமா வேண்டாமா என்பது வேறு விஷயம், ஆனால் நீ சொல்லி நாங்கள் சென்றால் எங்கள் இமேஜ் என்னாவது?”

அட பன்னாடை பாலா

தும்பிகளே உன்னை துப்பிவிட்ட பின் வேறு என்ன இருக்கின்றது?


 

மத்திய அரசு தரும் நிதி ஒழுங்காக பயன்படுத்தபடுகின்றதா….

மத்திய அரசு தரும் நிதி ஒழுங்காக பயன்படுத்தபடுகின்றதா என்பதற்காக ஆய்வினை ஆளுநர் நடத்துகின்றார் என சொல்ல தொடங்கிவிட்டார்கள்

இதனை சொன்னபின் ஆளுநர் எதிப்பு பின் முழு அயோக்கியதனமாக கருதபடும்

இம்மாநில நலதிட்டங்களில் மத்திய நிதியும் உண்டு, இதுகாலமும் அது வெளிவராமல் மாநில அரசியல்கட்சிகள் பார்த்துகொண்டன‌

காங்கிரசின் இளங்கோவன் இதுகுறித்து அடிக்கடி வலியுறுத்துவார், ஆனால் மேலிடம் கேட்காது

என்னமோ மாநில அரசின் முழுநிதியிலே இம்மாநிலம் இயங்குவது போல காட்சிகள் காட்டபடும்

அதனை காங்கிரஸ் அரசு தடுத்து, மத்திய அரசின் உதவியினையும் காட்டியிருக்க வேண்டும், செய்யவில்லை, காரணம் அரசியல்

இப்பொழுது பாஜகவிற்கு நேரம் உச்சம், தமிழகத்தில் அவர்கள் வென்று ஆகபோவதுமில்லை, அந்த வோட்டுக்களை அவர்கள் விரும்புவதுமில்லை

விரும்பியிருந்தால் தமிழிசை தலைவராக இருக்கமாட்டார்

அதனால் ரன்கள் பற்றி, விக்கெட் பற்றி கவலை இல்லாத பேட்ஸ்மேன் போல இறங்கி அடிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

அவர்கள் அடிக்க ஆரம்பித்தபின்புதான் தெரிகின்றது, இங்கு பவுலரும் சரியில்லை, பீல்டிங் சுத்தமாக இல்லை

புரிந்து கொண்டார்கள், போதாதா?

இனி எல்லா வகை ஷாட்டுகளும் அடித்து நொறுக்குவார்கள் என்பது மட்டும் தெரிகின்றது.


மோடியின் 4 ஆண்டுகால சாதனை எதுவென சொல்ல முடியுமா? என்றொருவர் கேட்டிருந்தார்

இவ்வளவு பெரும்பான்மையிலும், அதுவும் உபியில் பாஜக மிருக பலத்தோடு அமர்ந்தபின்னும் ராமர்கோவில் கட்டாமல் இழுத்துகொண்டு செல்வது பெரும் சாதனைதான்.


யோகி ஆதித்யநாத்தை சந்தித்தார் பில்கேட்ஸ்

ஐரோப்பியர் தாக்குதல் சம்பவத்தால் தன் பெயரை கெடுத்துகொண்டிருந யோகி, மகா அவசரமாய் அதனை சரிசெய்கின்றாராம்

மிகபெரும் அரசியல்வாதியாக மாறுகின்றார் மனிதர்.


 

இவரை ஏன் விமர்சிக்கின்றார்கள் என்றால் இதற்காகத்தான் ?

Image may contain: 1 person, text

இவரை ஏன் விமர்சிக்கின்றார்கள் என்றால் இதற்காகத்தான்

ஆளுநர் நடவடிக்கையினை விமர்சிக்கின்றேன் என சொல்லிவிட்டு, தமிழகத்தில் சீரான நிர்வாகம் இருப்பதை ஒப்புகொள்கின்றாராம்

உருப்படுமா? இப்படி சொல்லிவிட்டு எங்கிருந்து அரசியல் செய்வது?

பழனிச்சாமியும் சரியில்லை, இதனை கவனித்திருந்தால் எங்கள் ஆட்சியினை ஸ்டாலின் பாராட்டிவிட்டார் , வெற்றி வெற்றி என கிளம்பியிருக்கமாட்டாரா?


அதிமுக ஆதரவு எம்எல்ஏக்கள் தமிமுன் அன்சாரி, கருணாஸ், தனியரசு ஆகியோர் திமுக தலைவர் கலைஞரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.

சசிகலா தரப்பு சிக்கலில் சிக்கியிருக்கும்பொழுது அவர்கள் யாரை, எங்கே அனுப்பி டெல்லிக்கு சில சிக்னல்களை கொடுக்கின்றார்கள் பார்த்தீர்களா?

இதன் அர்த்தம் அரசியல் புரிந்தோருக்கு புரியும்.

இவர்கள் மூவரும் இவ்வளவு நாளும் செவ்வாய்கிரகம் சென்றிருந்தார்களா?


 அதிமுக அரசு தெளிந்த நீரோடை போன்றது : அமைச்சர்

அந்த நீரோடை முன்பு எங்கெல்லாம் பாய்ந்தது என்பதை சில இடங்களில் காணும் விளைச்சலை பார்த்து உலகமே அறிந்தது, இப்பொழுது எங்கெல்லாம் பாய்கின்றது என்பதும் தெரியும்

அதில்தான் அணை கட்டி மக்கள் பக்கம் திருப்ப பார்க்கின்றார் ஆளுநர் அமைச்சரே..