திருமுருகன் காந்தியின் இயக்கத்தை…

இந்த திருமுருகன் காந்தியின் இயக்கத்தை யாரோ சதிசெய்து உடைத்து உமர் நைன் என்பவரை உருவாக்கிவிட்டார்களாம்

இப்படியும் சில செய்திகள் வருகின்றன‌

குழப்பம் விளைவிக்கும், பிரிவினை வாதம் பேசும் எல்லா அமைப்பு எங்கிருந்து வரும்? இவர்கள் ஐ.நா வரைக்கும் சென்று பேச செலவழிப்பது யார்? இன்னபிற செலவுகளை கவனித்துகொள்வது யார் என இறங்கினால் தெரியும்

ஆக இதெல்லாம் யாராலோ உருவாக்கபடுபவை.

நோக்கம் தெரிந்த சிலர் வெளியேறலாம், 
அவர்களுக்கு துரோகிபட்டம் கொடுத்து அடித்து பெயரை கெடுப்பதெல்லாம் அந்த இயக்கத்து பாணி

என்னவோ அது சேகுவேரா இயக்கம் போலவும் அதில் பிடல் காஸ்ரோ என்பவரை விட்டு சே பிரிந்தது போலவும் பேசிகொண்டிருக்கின்றார்கள்

குழப்பம் விளைவிக்க தொடங்கபட்ட இயக்கத்தில் குழப்பம் வரத்தான் செய்யும்

லாட்டரி சீட்டு மார்ட்டினின் மகன் உப தலைவரான இயக்கத்தில் இப்படி நடக்காவிட்டால்தான் ஆச்சரியம்

இன்னும் அந்த உமர்நைன் கேள்விகளுக்கு திருமுருகன் பதிலளிக்கவில்லை ஆனால் அவரின் அடிப்பொடிகள் என்னவெல்லாமோ சொல்லிகொண்டிருக்கின்றன‌

Advertisements

ஜெயலலிதா பெயருக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் சோதனை : தீபா

ஜெயலலிதா பெயருக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் விதமாகவே சோதனை நடைபெறுகிறது: தீபா பேட்டி

இதுதான் அரசியல் கத்துகுட்டிதனம் என்பது

அம்மா தீபா, உங்கள் அத்தை இவ்வளவு சொத்துக்களை சசிகலா குவிக்க உதவினார் எனும் அவப்பெயர் உள்ளது. இல்லை அது சசிகலா சொத்து ஜெயா அப்பாவி எனும் பிம்பத்தை ஏற்படுத்தும் காரியத்தை பாஜக அரசு செய்கின்றது

இது கூட புரியாத நீங்கள் என்ன அரசியல் கிழித்துவிட போகின்றீர்கள்??


 இரவோடு இரவாக ஜெயா சமாதியினையும் தோண்டி பார்த்துவிடும் ஆக்ரோஷத்தில் இருக்கின்றது மத்திய அரசு

ஐதரபாத் பங்களா, சிறுதாவூர் பங்களா போன்ற இடங்களில் இன்னும் சோதனை நடத்தாது ஆச்சரியம்.


ஏராளமான திமுகவினரும், இன்னும் பெரியார் சீடர்களும் நான் ஆர்.எஸ்.எஸ் ஏஜெண்ட் என்று சொல்லிகொண்டே இருக்கின்றனர்

அதோ திமுகவில் ஒரு பெரும்புள்ளி பாஜகவுடன் கூட்டணி ஏற்படலாம் என சைகை காட்டியிருக்கின்றார்

எவனோ ஒருவன் சொல்லிகொண்டிருந்தான் திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் ரத்து, இன்னும் என்னவெல்லாமோ ரத்து என முழங்கிகொண்டிருந்தான்

அவனை அவசரமாக தேடிகொண்டிருக்கின்றேன்,

என்னை விடுங்கள், ஆர்.எஸ்.எஸின் உண்மையான ஸ்லீப்பர் செல் எங்கிருக்க்கின்றது என இனியாவது புரிந்துகொள்ளுங்கள்.