அ.தி.மு.க. அணி இணைப்பில் ஏமாந்து போனவர் ஓ.பி.எஸ். இன்னும் சில ….

கடை வாடகையை சென்னை மாநகராட்சி உயர்த்தியதை ரத்து செய்யக்கோரும் லதா ரஜினிகாந்தின் டிராவல் எக்சேஞ்ச் ஏஜென்சி மனுவை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்.

இந்த அம்மணிக்கு பிடிக்காத ஒரே வார்த்தை வாடகை போல, எங்கு சென்றாலும் வாடகை கொடுக்கமாட்டேன் என அடம் பிடிக்கின்றது

இப்பொழுது கோர்ட்டுக்கே சென்று முகத்தில் கருப்பு மை வாங்கி இருக்கின்றது.

ரஜினி மட்டும் சம்பளத்தை கூட்டி கொண்டே செல்லலாம், ஆனால் வாடகை மட்டும் கூடவே கூடாது என்பது அம்மணியின் கொள்கைகயில் ஒன்று

ரஜினி ஏன் மெலிந்தே இருக்கின்றார் என்பது இப்பொழுதுதான் விளங்குகின்றது, சாப்பாடு கிடைப்பது சந்தேகம்தான்

இப்படி ஒரு மனைவி வாய்த்தபின் யார்தான் சாமியார் ஆகமாட்டார்கள்??

இமயமலைக்கு தலை தெறிக்க ஓடமாட்டார்கள்?

அநேகமாக வாடகை பாக்கி பற்றி பேசியே ரஜினியினை இந்தம்மா இமயமலைக்கு ஓடவிட்டிருக்கலாம்


அ.தி.மு.க. அணி இணைப்பில் ஏமாந்து போனவர் ஓ.பி.எஸ்.: துரைமுருகன்

அது இருக்கட்டும் துரைமுருகன், இந்த வைகோ கட்சியிலிருந்து, அதிமுகவில் இருந்து சிலர் திமுகவிற்கு வந்தார்களே? அவர்களை எல்லாம் எங்கே?

இருக்கின்றார்களா? இல்லையா?


சத்துணவில் முட்டை நிறுத்தம்

அவர்களும் என்ன செய்வார்கள்? அவர்கள் ஆட்சி வாங்கும் எல்லா மதிப்பெண்ணும் முட்டையாகவே இருக்கின்றது, எல்லா திட்டத்தின் முடிவும் முட்டை

பின் முட்டை என்றால் வெறுப்பு வராதா? நிறுத்திவிட்டார்கள்

இனி எங்கள் ஆட்சி முட்டை இல்லா ஆட்சி என அவர்களாக சொல்லிகொள்வார்கள்.


 

Advertisements

இன்று உலக மீணவர் தினம்

Image may contain: 9 people, people smiling, people standing

இன்று உலக மீணவர் தினம், உலகெல்லாம் கொண்டாடுகின்றார்கள்

தமிழகத்தில் தமிழிசை தலமையில் ஆரம்பித்துவிட்டார்கள். சமீப காலமாக அக்கா அமைதியாகிவிட்டார் என நினைத்தால் அக்கா மீணவர் நாளை எப்படி கொண்டாடுவது என்ற திட்டத்தில் இருந்திருக்கின்றார் என்பது இப்பொழுதுதான் புரிகின்றது

அக்கா இன்று காலை தன் அடிப்பொடிகளுடன் மெரினா சென்றுவிட்டார், ஒரு திருக்கை மீனை அவர் எடுத்துகொள்ள அவரின் அடிப்பொடிகள் ஆளாளுக்கு ஒன்றை எடுத்து போஸ் கொடுத்தார்கள்

தன் திரு கையில் திருக்கை மீனோடு நின்றார் தாமரை இருக்கை தலைவி.

(பாஜகவில் இணைந்த நயினார் நாகேந்திரனுக்கு துணை தலைவர் பதவி கொடுப்பதாக செய்தி, ஆனால் அன்னார் மீன் பிடிக்க எல்லாம் வரவில்லை, சைவம் போல)

பின் அக்கா தலமையில் எல்லா மீன்களும் வகையாக சமைக்கபட்டு அங்கு வந்த எல்லோருக்கும் இலவசமாக வழங்கபட்டதாம்

ஜெயா சமாதி, எம்ஜிஆர் சமாதிக்கு ஊட்டினார்களா என்பது பற்றி தகவல் இல்லை

இப்படியாக வங்க கடலே அதிரும் வண்ணம் மீணவர் திருவிழாவினை கொண்டாடியிருக்கின்றது தமிழக பாஜக‌

(இனி பொங்கல் என்றால் வயலோரம் பொங்கல் தருவார்கள், நெசவுவாளிகள் நாள் என்றால் புடவை தருவார்கள் என எதிர்பார்த்துகொள்வோம்)

மீன் உணவா? அதுவும் இலவசமாகவா? ச்ச்சே இப்பொழுது பார்த்து அங்கு இல்லாமல் போய்விட்டோமே என்ற பெரு வருத்தம் வருகின்றது

வரட்டும்

ஆனாலும் தமிழிசை அக்கா, இது மீணவர் நாள் அல்லவா? சென்னையில் சீன படகு போராட்டம், ராமேஸ்வர கடல் சிக்கல்கள், கூடன்குள அணுவுலை பகுதி என தமிழக மீணவர்கள் படாதபாடு பட, அவர்களுக்கு என்ன செய்துவிட்டீர்கள்? அதை செய்துவிட்டு அல்லவா இப்படி கொண்டாட வரவேண்டும் என் கேட்கலாம்

ஆனால் அக்கா மிக எச்சரிக்கையாகத்தான் திருக்கை மீனோடு நிற்கின்றார்

ஆம், திருக்கை வாலினால் கொடுக்கபடும் அடி வலி மிகுந்தது. அடிக்க மிக தோதுவான சாட்டை அதுதான்

மீணவர் சிக்கல் தொடர்பாக‌ யாராவது கேட்பார்கள் என தமிழிசைக்கு தெரியாதா? கேட்டால் என் கையில் திருக்கை வால் இருக்கின்றது என சிம்பாலிக்காக சொல்கின்றார் அக்கா

இனி யாராவது மீணவர் பிரச்சினை பற்றி கேட்பார்கள்???

 

என்னய்யா பத்மாவதி சிக்கல்?

என்னய்யா பத்மாவதி சிக்கல்?

அதே கதையினை சித்தூர் ராணி பத்மினி என என்றோ படமாக எடுத்துவிட்ட தமிழகம் இது

வட இந்தியரால் இப்பொழுது கூட‌ முடியவில்லை

திராவிட பூமி என்றால் சாதாரணம் அல்ல. இங்கு ஏற்பட்டிருக்கும் புரட்சி அப்படி.


கோவை என்றால் விஞ்ஞானி ஜி.டி நாயுடு போன்றவர்கள், பெரும் தொழிலதிபர்கள் எல்லாம் இனி நினைவுக்கு வர கூடாதாம்

ஜக்கி சாமி என்பவர்தான் நினைவுக்கு வரவேண்டுமாம்

இந்தியா பக்கம் வந்துவிட்டு திரும்பிய அலெக்ஸாண்டர் இது சாமியார் தேசம் என எழுதி வைத்தானாம்

அந்த பாரம்பரிய பெயரினை மிக கஷ்டபட்டு திரும்ப உருவாக்குகின்றார்கள்

ஆனாலும் கோயம்புத்தூருக்கு இப்படி ஒரு அவமானம் வந்திருக்க கூடாது

கோவை வாசிகளே கொஞ்சம் உஷாராக இருங்கள், இல்லாவிட்டால் ஒரு நள்ளிரவில் அது ஜக்கிபுதூராக பெயர்மாற்றம் பெற்றுவிடலாம்


மோடியை நோக்கி விரல் நீட்டினால் வெட்டப்படும் : பீகார் பா.ஜ.க. தலைவர்

இடித்தல், கொல்லுதல், கொளுத்துதல், வெட்டுதல் தவிர ஏதும் தெரியாத கட்சி போலிருக்கின்றது

ஆனாலும் பீகார் தலைவருக்கு, தமிழக பாஜக தலைவர் எவ்வளவு பரவாயில்லை?, இப்படி எல்லாம் பேசவா செய்கின்றார்?

இனியாவது தமிழகம் அக்கா தமிழிசையின் பெருமையினை புரிந்துகொள்ளட்டும்.


புலிகள் கொடி அறிமுகபடுத்தியபொழுது சீமான் எங்கிருந்தார்?

அமைதிபடை வெளியேறிய பின் ஈழத்தின் ஏகபோக சக்தியான புலிகளின் கொடி எங்கும் பறந்தது

யாழ்பாண அரசராக முடிசூடிகொண்டார் பிரபாகரன், அரசன் ஆனால் போதுமா கொடிவேண்டாமா?

ஏற்கனவே இருந்த புலிகளின் கொடியில், விடுதலை புலிகள் என்ற பெயரை எடுத்துவிட்டு இதுதான் இனி ஈழத்திற்கே கொடி என அறிவித்தனர்

இதே நவம்பர் 21ல் அறிவித்தனர்

அங்கிளுக்கும் அவர் பின்னால் உள்ள மங்கிகளுக்கும் இது தெரியாது என்பதில் ஆச்சரியமில்லை, அவர்களுக்கு எதுதான் தெரிந்தது?

(சொல்லிவிட்டோம் அல்லவா?

இன்னும் கொஞ்ச நேரத்தில் குதிப்பார்கள், தமிழன் எழுச்சிநாள், தமிழன் மானம் பட்டொளி வீசி பறந்த நாள் (அப்படியேதான்) என கதறுவார்கள்)

அங்கிள் சைமனின் கொடிக்கே வழிகாட்டிய கொடி அது

மிஸ்டர் சைமன், கொஞ்சமாவது நன்றி விசுவாசம் இருந்தால் இன்றைக்கு ஏதாவது சொல்ல வேண்டாமா?

எப்படி சொல்லவேண்டும்?

“இதே கொடியினை என்னிடம் ஒப்படைத்து, இதனை வருடா வருடம் நவம்பர் 21ல் ஏற்றடா தம்பி..” என சொன்னான் என் அண்ணன்

புலிகள் கொடி அறிமுகபடுத்தியபொழுது சீமான் எங்கிருந்தார்? வன்னி காட்டுக்குள்ளா? இல்லை

பாரதிராஜாவிடம் அசிஸ்டெண்டாக சேர கோடம்பாக்கத்தில் அலைந்துகொண்டிருந்தார்


நான் முதல்வரானால் ஆங்கிலத்தில் கையெழுத்து போடும் காசோலைகள் செல்லாதுன்னு உத்தரவிடுவேன் : சீமான்

எங்கே? ஆங்கில நாடுகளின் பெயர்களை தாங்கும் டாலரும், யூரோவும் தேவையில்லை, ரிசர்வ் வங்கி கவர்ணர் ஆங்கிலத்தில் கையெழுத்திட்ட இந்திய பணத்தை தொடமாட்டான் இந்த சீமான் என சொல்லுங்கள் பார்க்கலாம்


வைரமுத்து கவிதை சொல்லிவிட்டாராம்

Image may contain: 1 person, smiling, close-up

வைரமுத்து கவிதை சொல்லிவிட்டாராம் தமிழக குழப்பம், இருக்கும் சிக்கல் போதாதென்று மோடியும் கவிதை படித்துவிட்டாராம்

எங்கெங்கு நோக்கினாலும் கவிதை சிக்கலாகிவிட்டது, ஒரே குழப்பம்

அதனால் சிலப்பதிகார கவிதை வரிகளுக்கு சென்று வாசித்தாகிவிட்டது, ஆனால் ஆச்சரியம்

அந்த அளவு குஷ்புவிற்கு பொருந்தும் வரிகளை எழுதியிருக்கின்றார்

“மாசறு பொன்னே வலம்புரி முத்தே!
காசறு விரையே கரும்பே தேனே! 
அரும்பெறல் பாவாய் ஆருயிர் மருந்தே
மலையிடைப் பிறவா மணியே
அலையிடைப் பிறவா அமிழ்தே”

குஷ்புவின் முகத்தைபற்றி அன்றே எழுதியிருக்கின்றார் இளங்கோவடிகள்,

குஷ்பு போல ஒரு பெண்னை எதிர்பார்த்துதான் அவள் கிடைக்காமல் துறவி ஆகியிருக்கின்றார் என்பது புரிகின்றது, பாவம்.


Image may contain: food
 

சிப்பி இருக்குது, பசி இருக்குது திறந்து பார்க்க நேரம் வந்தது இப்போது….


ஒவையாரின் சில வரிகள் குழப்பமாகின்றன‌

ஒவையாரின் சில வரிகள் குழப்பமாகின்றன‌

அவர் பெண்தான் என்றாலும், பெண்களை பற்றி உயர்வாக ஒன்றும் எழுதவில்லை,மாறாக சண்டாளி, சூர்ப்பநகை என்றெல்லாம் எழுதி நல்ல பெண் இல்லா வீடு புலியின் குகை என்றெல்லாம் எழுதிவிட்டார்

இப்பொழுது ஒருத்தி அப்படி எழுதினால் உடனே பெண் பெயரில் இருக்கும் ஆண் என சீறிவிடுவார்கள்.

ஆக ஒவையார் என்பவர் அக்காலத்திலே பெண் பெயரில் இருந்த ஆணாக இருக்குமோ, அன்றே பேக் ஐடி கலாச்சாராம் இருந்திருகலாமோ என்ற சந்தேகம் எழுகின்றது

அல்லது பெண் அடிமை சொன்ன பார்பான் கும்பலாக அவ்வையார் இருந்திருக்க வேண்டும்

பெண் உரிமை விஷயங்களை எல்லாம் கையில் எழுத்திருக்கும் Devi Somasundaram என்பவரிடம் கேட்டால் சந்தேகம் தீர்ந்துவிடும்.

அம்மையாரே, எம் மனகுழப்பம் தீர்ப்பீரோ?. இந்த ஓளவையார் என்பவர் அன்றே பெண் பெயரில் இருந்த ஆண் கவிஞர்தானே?

ஜோதி நிர்மலா என்றொரு கலெக்டர்

Image may contain: 1 person, sitting and outdoor

கன்னியாகுமரி மாவட்டத்தில் முன்பு ஜோதி நிர்மலா என்றொரு கலெக்டர் இருந்தார், 2003ம் ஆண்டுகள் வாக்கில் இருந்தார்

வைகுண்டராஜனின் முறைகேடான மணல் கொள்ளையினை முடக்கி அவர் ஆலைக்கே சீல் வைத்த முதல் நபர் அவர்தான்

கன்னியாகுமரியில் அவர் இருக்கும் வரை ஒரு ஸ்பூன் மண் அள்ளமுடியாமல் மணல் கும்பல் தவித்தது

தென்னகை கடற்கரை எல்லாம் வைகுண்டராஜனின் அரசாங்கம், அவரின்றி அலையும் அடிக்காது என மிகுந்த இறுக்கமான காலங்களில் மிகதுணிச்சலான அதிரடிகாட்டியவர் அந்த ஜோதி நிர்மலா

அதன் பின் சில சர்ச்சைகள் வர, ஜெயாடிவியின் பங்குதாரர் என பகிரங்கமாக வைகுண்டராஜனை சொன்ன ஜெயா சும்மா இருப்பாரா? கலெக்டர் தூக்கி எறியபட்டார்

இன்று எங்கிருக்கின்றார் என்றே தெரியவில்லை.

அந்த ஜோதி நிர்மலா எனும் கலெக்டரின் பாத்திரம்தான், அறம் படத்து நயன் தாரா.

ஆனால் இதனை பற்றி எல்லாம் யாராவது பேசுவார்களா என்றால் இல்லை , பேசவே மாட்டார்கள்

காரணம் எதனை பேசவேண்டும், எதனை பேசகூடாது என ஊடகங்களுக்குள்ளே ஒரு ரகசிய இழை ஓடுகின்றது, அதற்கு கட்டளைகள் எங்கிருந்தோ பிறப்பிக்கபடுகின்றன‌

அறம் படம் முழுக்க தென்னக மக்களுக்கு கண்களுக்குள் வருவது அந்த கலெக்டர் ஜோதி நிர்மலாவே.

அதனை ஊடகங்களால் மறைக்க முடியுமா?

(அவரது மிக நேர்மையான பணியினை விருது கொடுத்து கவுரவித்தவர் கலைஞர்..)