ரப்ரி தேவி லல்லு ஆவேசம்

மோடியின் கழுத்தை அறுத்து, கையை வெட்ட பீகார் மக்கள் காத்திருக்கின்றனர்: ரப்ரி தேவி ஆவேசம்

இதென்ன புது சவால்?

ஒரு கும்பல் தீபிகா படுகோனேவினை வெட்டுவோம் என்கின்றது, இன்னொரு கும்பல் மோடியினை பற்றி பேசினால் வெட்டுவோம் என்கின்றது

லல்லுவின் பத்தினியோ மோடியினையே பீகாரியர் கழுத்தை அறுப்பார்கள் என சவால் விடுகின்றார்

அரசியலில் ஏமாற்றி வஞ்சகமாக கழுத்தறுப்புகள் நடக்கும், ஆனால் இப்படி பகிரங்கமாக எல்லாம் இதுவரை வெட்டுவதாக சொல்லவில்லை

வடக்கே பல தலைவெட்டிகள் இருப்பார்கள் போல..

இப்படி வடக்கே சீரியசாக ஆளாளுக்கு தலைவெட்டுவோம் என சவால் விட்டுகொண்டிருக்கின்றார்கள். என்ன நடக்குமோ தெரியவில்லை, கொஞ்சம் அச்சமாகத்தான் இருக்கின்றது

இப்படி பல மிரட்டல்கள் வடக்கே ஒலிக்க, இங்கு தமிழகத்தில் தமிழிசை எனக்கும் மிரட்டல்கள் வருகின்றன என சொல்லும்பொழுது அவரின் காமெடியினை ரசிக்க முடியவில்லை

Advertisements

ராகவேந்திரா மடத்துக்கு ரூ.10 கோடி நன்கொடை வழங்கினார் ரஜினி

ராகவேந்திரா மடத்துக்கு ரூ.10 கோடி நன்கொடை வழங்கினார் ரஜினி

ஆனால் லதா வைத்திருக்கும் வாடகை பாக்கி பற்றி மட்டும் மனிதர் பேசமாட்டார், அது வேறு வகை

இப்படி மடத்திற்கு கோடிகளை அள்ளிகொடுக்கும் ரஜினி முன்பு லிங்கா போன்ற படங்கள் மிகுந்த நஷ்டமளித்த போது விநியோகிஸ்தர்களுக்கு ஒன்றுமே கொடுக்க முன்வரவில்லை

இச்சம்பவம் சொல்வது ஒன்றுதான்

இனி மடங்களே ரஜினியின் படங்களை விநியோகித்தால் நல்லது, லாபத்திலும் பங்குகொடுப்பார் ரஜினி

நடிகர் ஆர்யாவிற்கு பெண் கிடைக்கவில்லையாம்..

நாட்டில் இருக்கும் சிக்கல் நாட்டில் போதாது என்றால், ஊடகங்கள் சொல்படி பார்த்தால் புதிய சிக்கல் ஒன்று முளைத்துள்ளது

சிக்கல் என்னவென்றால்,ஆர்யாவிற்கு பெண் கிடைக்கவில்லையாம், “என்னை திருமணம் செய்து யாராவது எனக்கு வாழ்வுகொடுங்கள்..” என கெஞ்சிகொண்டிருக்கின்றார் நடிகர் ஆர்யா

என்னாச்சி மனிதருக்கு? அந்த அளவு கிராக்கி இருந்திருந்தால் சினிமா நடிகைகளே தூக்கியிருப்பார்கள், ஆக மனிதரை திருமணம் செய்துகொள்ள நடிகைகள் ஒருவர் கூட தயாரில்லை

இப்பொழுது ஊரெல்லாம் நம்பர் கொடுத்து என்னை கட்டிகொள்ளுங்கள் என சொல்வதாக செய்திகள்

அப்படியும் ஒன்றும் சிக்கவில்லையாம்

எப்படி இருந்த ஆர்யா இப்படி ஆகிவிட்டார்??

மனிதருக்கு தமிழக பெண்களை பற்றியோ, யதார்த்தம் பற்றியோ தெரியவில்லை. ஏதேனும் போன் வந்தால் ஆர்யா எதிர்கொள்ள போகும் முதல் கேள்வி எது?

“உங்களுக்கு ஏன் இன்னும் பெண் கிடைக்கவில்லை, ஆக உங்களிடம் ஏதோ சிக்கல் உள்ளது அப்படித்தானே?”

இந்த ஆர்யாவின் யோசனையற்ற செயலால் அவருக்கு தமிழக‌ யதார்த்தபடி இங்கே பெண்ணே கிடைக்காது என்பது மட்டும் உறுதி

அவர் தன் நம்பரை பிலிப்பைன்ஸ் , பிரேசில் போன்ற நாடுகளில் வீசி பார்க்கலாம், உடனே சிக்கும் என்கின்றார்கள்

90 வயது பெண்மணியான தியாகி சரஸ்வதி ராஜாமணி

Image may contain: one or more people, people standing and outdoor

கென்னடி சம்பந்தமான பைல்கள் வெளியிடபடும்பொழுது, நேதாஜி தொடர்பான பைல்களும் வெளியிடபடவேண்டும் என டெல்லியில் பேரணி நடந்தது

அதில் கலந்துகொண்ட 90 வயது பெண்மணியான சரஸ்வதி ராஜாமணி என்பவரை பற்றி யாரும் பேசவில்லை.

இத்தேசத்தின் மிகபெரும் தியாகி அவர், எந்த போராளிக்கும் குறையாத தியாகம் அவர் செய்தது. வரலாற்றில் வாழும்பொழுது மறைக்கபட்ட பெரும் தியாகி, இத்தேசம் இன்னும் அவரை அங்கீகரிக்கவில்லை

Image may contain: 1 person, standing and textஅவர் பர்மாவின் மிக செழிப்பான குடும்பத்தில் பிறந்தார் அப்பொழுது அவருக்கு 15 வயதுதான் ஆகியிருந்தது. பர்மாவில் நேதாஜி நிதி திரட்டியபொழுது நகை, வைரம் என தன் வீட்டில் இருந்த அனைத்து செல்வங்களையும் கொட்டி கொடுத்தவர் அவர்

அஞ்சிய நேதாஜி அவர் வீட்டுக்கே சென்று, உங்கள் மகள் சிறுமி விவரம் தெரியாமல் அள்ளிகொடுத்துவிட்டாள், இதனை ஏற்றுகொள்ளுங்கள் என சொன்னார், ஆனால் ராஜாமணி தீர்க்கமாக மறுத்தார், வீட்டில் உள்ளோரும் அதனை ஆதரித்தனர்

இவ்வளவிற்கும் பர்மாவிலே பிறந்து வளர்ந்தவர் ராஜாமணி இந்தியாவின் விடுதலை அவருக்கு அவசியமே இல்லாதது, ஆனாலும் இந்திய ரத்தம் அவரை போராட அழைத்தது

அவர் கொட்டி கொடுத்த வைரம் அன்றே பல லட்சம் பெறுமானம் உள்ளவை

அதன்பின் ராஜாமணி நேதாஜியினை விட்டு அகலவில்லை, நேதாஜிபடையில் இணைந்தார், உளவுபடையில் பணியாற்றினார், ஆண் வேடமிட்டு பிரிட்டிசாரை உளவுபார்த்து அவர் கொட்டிய தகவல்கள் ஆச்சரியமான ரகம்

அந்த அளவு மிக சிறந்த உளவாளியாக இருந்தார்

பின் ஒரு கட்டத்தில் அவர் சிக்கிகொள்ள வெள்ளையர் சுற்றினர், காலில் துப்பாக்கி குண்டுபாய அட்டகாசமாய் தப்பி வந்தவர்

நேதாஜியுடன் இறுதிவரை போராடிய மிக சிலரில் அவரும் ஒருவர், ஜான்சி ராணி படை எனும் பெண்கள் படையில் இருந்தார்

இரண்டாம் உலகபோரில் ஜப்பான் தோற்றதும், நேதாஜி மர்மமானபின் ராஜாமணியின் குடும்ப சொத்துக்கள் எல்லாம் பிடுங்கபட்டு அகதியாய் சென்னை வந்தார் ராஜாமணி

ஆம் சுதந்திர இந்தியாவில் அவர் அகதியாகத்தான் வந்தார், எந்த இந்தியா சுதந்திரத்திற்காக போராடினாரோ அந்த இந்தியா அவரை தொடக்கதில் ஆதரிக்கவில்லை

இங்கேயே ஏக குழப்பத்தில் இருந்தது தேசம், பின்பு அவருக்கான பென்சன் வந்தது

மிக ஏழ்மையில் வசித்த அவரைபற்றி பின்பு செய்திகள் வந்தபொழுது ஜெயலலிதா அவருக்கு நிதி உதவி செய்தார், அதுவும் எப்படி?

சுனாமி நிதிக்கு தன் சேமிப்பினை எல்லாம் இவர் கொடுத்தபொழுது பலரின் கண்கள் கலங்கின. இத்தேசத்த்ற்காக நீர் கொடுத்தது போதாதா? 80 வயதிலுமா கொடுக்க வேண்டும்? அப்படி இத்தேசம் உங்களுக்கு என்ன செய்தது? ஏன் இப்படி ஒரு அக்கறை? என கேட்டபொழுது அது நேதாஜி எமக்கு கற்றுகொடுத்த பாடம் என அவர் சொன்ன பொழுது, ஜெயாவின் இதயமே கலங்கிற்று

அதன்பின் ராஜாமணி பற்றிய செய்திகள் இல்லை

இப்பொழுது நேதாஜி மர்மம் பற்றிய போராட்டத்தில் 90 வயதில் முதல் ஆளாக நிற்கும்பொழுது கண்கள் கலங்கின‌

காந்திக்கு தில்லையாடி வள்ளியம்மை மன உறுதி கொடுத்தார் என்றால், நேதாஜிக்கு வலிமை கொடுத்தது இந்த சரஸ்வதி ராஜாமணி எனும் பர்மா தமிழச்சி

தன் சொந்த வைரத்தை நாட்டிற்க்காக அள்ளிகொடுத்துவிட்டு அவர் அகதியாய் வந்த சென்னையில்தான் இன்று வருமானவரிதுறையினர் தங்கம் பதுக்கல், வைரம் பதுக்கல் என தேடுகின்றார்களாம்

எவ்வளவு பெரும் கொடுமை இது? நமக்கே கோபம் வருகின்றது அந்த அம்மணி இதனை எல்லாம் எப்படி தாங்கிகொள்கின்றார்.

இந்த வயதிலும் சிரித்தமுகம், தனிமை வெறுப்பு முதுமை எதுவும் அவரை சோரவிடவில்லை. மிக உறுதியான மனம் அவருக்கு ஆனாலும் நேதாஜி என சொல்லிவிட்டால் அழுகின்றார் என்கின்றார்கள்

அந்த அழுகையினை கண்டவுடன் நமக்கும் அழுகை வந்தால் அதுதான் நேதாஜியின் வெற்றி, அவரின் தியாகத்தின் வெற்றி

இந்த நாட்டிற்காக தன் இளமையினை தொலைத்த, வாழ்வினை செல்வத்தை எல்லாம் தொலைத்த அந்த மூதாட்டி டெல்லி தெருவில் நடக்கும்பொழுது இத்தேசம் புது இந்திய அழகியினை காட்டி மகிழ்கின்றது

எப்படிபட்ட நன்றிமிக்க தேசம் இது? நன்றிமிக்க ஊடகங்கள் இவை

உலக அழகி எவளாகவும் இருக்கட்டும், எம்மை பொருத்தவரைக்கும் இந்த தேசத்து வீர அழகி இந்த சரஸ்வதி ராஜாமணிதான்

( இப்படி இன்னும் ஏராளமான தியாகிகள் உள்ள நாட்டில்தான் “தியாக தலைவி” சின்னம்மா என்றொரு கோஷ்டியும் கிளம்புகின்றது, இது இந்தியாவில் மட்டுமே சாத்தியம்

தன் நகைகளை நாட்டிற்காக கொடுத்தது தியாகமா? இல்லை முதல்வர் வீட்டில் சாம்பார் வைத்த வேலைக்காக மொத்தமாக சுருட்டி நகைபோட்டு சுத்தியது தியாகமா என்பதை தமிழகம் முடிவு செய்யட்டும்..)

 

பத்மாவதி என்பது நடந்த கதை

பத்மாவதி என்பது நடந்த கதை, ஒரு வரலாற்று சம்பவம். அதனை அடிப்படையாக கொண்டு ஏகபட்ட திரைபடங்களும், புத்தகங்களும் வந்தாயிற்று

இப்பொழுது குதியோ குதி என குதிக்கின்றார்கள், எப்படியும் குதிக்கட்டும் நடந்த வரலாற்றை மறக்கடிக்கவா முடியும்?

இதற்காக தீபிகா படுகோனேவினை கொல்வோம் என்பதும், தலைவெட்டுவோம் என்பதும் என்ன மாதிரி தேசம்?

அந்த தீபிகாவின் அழகினை கூட ரசிக்க தெரியாத காட்டுமிராண்டி தேசம் ஆகிவிட்டதா? கொல்லவேண்டிய நபரா அவர்? அட பதர்களா?

ஒருவன் நாக்கை வெட்டுவேன் என்கின்றான், ஒருவன் தலையினை வெட்டுவேன் என்கின்றான், அவனவன் வாய்க்கு வந்தபடி எல்லாம் பேசிகொண்டிருக்கின்றான்

அரசாங்கமும் கவனித்துகொண்டே இருக்கின்றது, ஆனால் சத்தமே இல்லை

படம் வெளிவந்து அதில் ஆட்சேபகரமான கருத்து இருந்தால் கண்டிக்கலாம், படமே வரகூடாது என்றால் எப்படி?

மிக மிக மோசமான நிலமைக்கு நாடு சென்றுகொண்டிருக்கின்றது, இம்மாதிரி நபர்களை விட்டுவைப்பது நாட்டுக்கு நல்லதல்ல‌

பெரியார் அன்றே சொன்னார்

“இந்த நாட்டை இந்தியா பாகிஸ்தான் என பிரிக்காதீர்கள், வட இந்தியா தென் இந்தியா என கலாச்சார அடிப்படையில் பிரியுங்கள்

அவர்கள் வேறுமாதிரி, தென்னகம் வேறுமாதிரி, இணைந்து வாழ்வதில் ஏராளமான சிக்கல் வரும், கடப்பது சிரமம்”

குஷ்பு அளவிற்கு இல்லாவிட்டாலும் திபிகா பரவாயில்லை,

அந்த தீபிகா படுகோனேவினை கூட ரசிக்கமுடியாத இந்த கும்பல், ரசனை கெட்ட காட்டுமிராண்டி கும்பல் இத்தேசத்தை சுடுகாடு ஆக்கும் ஆபத்து நிரம்ப உண்டு

மோடி என்பவருக்கு நிச்சயமாக நேரம் சரியில்லை

Image may contain: 1 person, sitting

மோடி என்பவருக்கு நிச்சயமாக நேரம் சரியில்லை. அதிர்ஷ்டவசமாக அவருக்கு தேர்தலில் அசுரபலம் வாய்த்தது, ஆனால் அமைச்சர்கள் அமரும் கட்டம் எல்லாம் சனிபகவான் அமர்ந்துகொண்டார்

அருண் ஜெட்லியினை தவிர சொல்லிகொள்ள கூடிய அமைச்சர்கள் அங்கு எவருமில்லை, சுஷ்மா சுவராஜூம் எதிர்பார்த்த அளவில்லை. அதிரடியாக பேசிகொண்டிருந்த ஸ்ருமதி ராணியும் டம்மியாக்கபட்டார்

மீதி இருக்கும் அமைச்சர்கள் வாயினை கஷ்டபட்டு பொத்திகொண்டிருக்கின்றார் மோடி, திறந்துவிட்டால் ஏய் இஸ்லாமியரே பாகிஸ்தான் போங்கள், அந்த மசூதியினை இடியுங்கள், பள்ளிகூடம் எல்லாம் பசுமாடு கட்டுங்கள் என்ற ரீதியில் பேச்சுவரும்

இந்நிலையில்தான் தமிழகத்தின் நிர்மலா சீத்தாராமனை அமர்த்தினார்கள், பெண் பிரதிநிதி, தமிழக வோட்டு கணக்கு எல்லாம் போட்டு அமர்த்தினார்கள்

அம்மணியும் தொடக்கத்தில் நன்றாக இருந்தார், இப்பொழுது அதளபாதாளத்தில் மோடியினை இழுத்துபோட்டு விழுந்துவிட்டார்

அந்த ராமேஸ்வர மீணவர் மீது இந்திய காவல்படை துப்பாக்கியால் சுட்டதாக வந்த சர்ச்சை அது

தொடக்கத்தில் இந்திய கடற்படை சுட்டது என்றார்கள், பயிற்சி என்றார்கள், பின் கடற்படை தடுத்தும் நிற்காமல் சென்றதால் சுட்டார்கள் என்றார்கள் ஏக குழப்பம்

இஸ்ரேல் இம்மாதிரி குழப்பும் நாடு, அதாவது தங்கள் அடையாளம் இல்லாமலோ அல்லது எதிரிநாட்டு அடையாளத்துடனோ எதிரி நாட்டுக்க்குள் புகுந்து சுட்டுவிட்டு அல்லது 4 குண்டு வீசிவிட்டு வருவார்கள்

ஆனால் இஸ்ரேலிய விமானம், கப்பல் என நிரூபிக்க முடியாமல் எதிர்நாடு திணறும்

இலங்கையும் அம்மாதிரி நடவடிக்கையில் இறங்கிவிட்டதோ என எல்லோரும் குழம்பிகொண்டிருந்தார்கள்

அப்பொழுது நிர்மலா சீத்தாராமன் அறிக்கை வெளியிட்டார், சுட்டது இந்திய படை அல்ல என்றும், அந்த தோட்டா இந்திய படை பயன்படுத்துவது அல்ல என்றும் அறிவித்தார்

குழப்பம் கூடிற்று

இந்நிலையில் இந்திய கமாண்டர் அது இந்தியா தோட்டாதான் என சொல்லிவிட்டார்

நிலமை பற்றி எரிகின்றது, ஒரு மிகபொறுப்பான பதவியில் இருக்கும் அமைச்சர் இப்படி பொய் சொல்லி இருக்கின்றார் என்பதைவிட, தமிழக மீணவர் தாக்கபட்ட விவகாரத்தில் தமிழ்பெண்ணே பொய் சொல்லியிருக்கின்றார் என கேள்விகள் சீறுகின்றன‌

இந்திய பாதுகாப்புதுறை அமைச்சராக நிர்மலா சீத்தாராமன் சொல்லியிருப்பது கடும் விளைவுகளை ஏற்படுத்தும்

நாளை எல்லை தகறாறு விஷயங்களில் இவர் சொல்வதை யாரும் நம்பமாட்டார்கள், இந்த அம்மணி சொந்த மக்களை சுட்டதையே இல்லை என்றவரல்லாவா என சொல்லி சிரித்தால் அவ்வளவுதான்

தன் நம்பகதன்மையினை தொலைத்துவிட்ட நிர்மலா சீத்தாராமன் இனி அதனை மீட்டெடுப்பது மிக கடினம்.

அவர் அப்பதவியில் நீடிப்பதும் சிக்கலே

(ஒருவேளை அது இந்திய தோட்டாதான், ஆனால் இந்திய துப்பாக்கியினை திருடி யாரோ சுட்டிருக்கின்றார்கள் என்றெல்லாம் சொன்னால் நிலமை இன்னும் மோசமாகும்)

ஆக மிக இக்கட்டான நிலையில் சிக்கிவிட்டார் நிர்மலா சீத்தாராமன், எப்படி தப்பிப்பாரோ தெரியவில்லை

அமைச்சர் பொறுப்பு என்பது கவனமாக பதிலளிக்க வேண்டியது, இஷ்டத்திற்கு அவசரபட்டு பேச அது ஒன்றும் பாஜக வட்ட செயலாளர் பதவி அல்ல

மகா மோசமாக தமிழக பாஜகவிற்கு தமிழகத்தில் பெரும் சிக்கலை உருவாக்கிவிட்டார்

ஏன் இப்படி சிக்கினார் நிர்மலா? பதவியே போகும் அளவிற்கு சிக்கிவிட்டார்?

பின்னே, கட்சிக்காக காகத்திற்கு நிகராக கத்தும் தமிழிசையினை விட்டுவிட்டு நிர்மலாவிற்கு பதவி கொடுத்தால் அந்த சாபம் சும்மா விடுமா என்ன?

 

பாரதியார் வேடத்தில் கமல்ஹாசன்

Image may contain: one or more people

பாரதியார் வேடத்தில் கமல்ஹாசன், படம் வெளியீடு

வேடம் போடுவது அவருக்கு கஷ்டமா என்ன?

அவர் போடாத வேடங்களா?

அது இருக்கட்டும்,

“தாடிகள் எல்லாம் தாகூரா, 
மீசைகள் எல்லாம் பாரதியா, 
வேடத்தில் ஏமாறாதே தோழா”

என அமைச்சர் 
ஜெயக்குமார் பதிலுக்கு பாடுவாரா?

 ·