பட்டம் கொடுப்பதில் அதிமுக பாணியே தனி

என்ன சொல்லுங்கள், பட்டம் கொடுப்பதில் அதிமுக பாணியே தனி. அட்டகாசமான அடைமொழியினை புகுத்துவார்கள்

புரட்சி தலைவன், புரட்சி தலைவி, தியாக தலைவி, மக்கட் செல்வன் என அவர்களின் அடைமொழிகள் தூள் கிளப்புகின்றது

அவர்களுக்கு அவ்வளவு விவரம் எல்லாம் கிடையாதே? எங்கிருந்து பெயரினை சூட்டுகின்றார்கள் என்றால் எல்லாம் கலைஞர் காட்டிய வழி

அவர்தான் அன்றே இப்படிபட்ட அழிச்சாட்டியங்களை எல்லாம் தொடங்கியிருக்கின்றார், புரட்சி நடிகன், நடிக வேள், இலட்சிய நடிகர், நாவலர், சொல்லின் செல்வர், கவியரசர், கவிக்கோ என அவர்தான் தொடங்கியிருக்கின்றார்

அதுமட்டுமல்ல பின்னாளில் வருபவர்களுக்கான பெயர்களை ஒரு டைரிமுழுக்க எழுதியிருக்கலாம், அது ராமசந்திரன் தப்பி ஓடும்பொழுது எடுத்து கொண்டு ஓடியிருக்கலாம்

இல்லாவிட்டால் இப்படிபட்ட பட்டங்கள் அமையாது, அதிமுகவின இந்த அளவு யோசிக்கமாட்டார்கள்

இன்னும் என்னென்ன பட்டங்கள் எல்லாம் கைவசம் வைத்திருகின்றார்களோ தெரியாது, ஆனால் நிரம்ப வைத்திருப்பார்கள்.

இப்பொழுது மக்கள் செல்வன் வரை வந்திருக்கின்றது, இன்னும் வரும்

ஆனால் பாவம் பன்னீரும், பழனிச்சாமியும் அன்று ஜாணகியும் ஆர்.எம் வீரப்பனும் பட்டம் வைக்க பெயர் கிடைக்காமல் தடுமாறியதை போல தடுமாறுகின்றார்கள்

கலைஞர் மட்டும் நலமாக இருந்திருந்தால் இன்று பன்னீர் ஓடிசென்று தகுந்த அடைமொழி கேட்டிருப்பார், ஆனால் பன்னீர் கொடுத்து வைத்தது அவ்வளவுதான்

Advertisements

இன்றைய செய்திகளில் இரு செய்திகள் மனதை பாதித்த ரகம்

இன்றைய செய்திகளில் இரு செய்திகள் மனதை பாதித்த ரகம், முதலாவது சத்யபாமா பல்கலைகழக மாணவி தற்கொலை செய்தி. ஏதோ ஆசிரியரால் அவமானமாம் அதனால் செத்துவிட்டாராம்

இன்றுள்ள தலைமுறைக்கு ஏற்பட்டிருக்கும் சிக்கல் இது, ஏதோ ஒரு அவமானம் நடந்துவிட்டால் உடனே வாழ்வினை முடித்துவிடுகின்றார்கள்

யார் அவமானபடவில்லை, நாமெல்லாம் ஒன்றாம் வகுப்பு முதல் கல்லூரி முடிந்து பணிக்கு வந்து இன்றுவரை ஒவ்வொரு நாளும் நடகும் சம்பவத்திற்கு ஆயிரம் முறை தொங்கவேண்டும்

இன்றுள்ள தலைமுறைக்கு வழிகாட்ட ஆளில்லை அல்லது அவமானங்களை தாண்டி வந்த கலைஞர் போன்றோரின் வெற்றி செய்திகளை படிப்பதில்லை

கலைஞரின் வாழ்வு சொல்கின்றது, பள்ளியிலே அவருக்கு படிப்பு ஏறவில்லை என அவமானபடுத்தி வெளியேற்றுகின்றார்கள், அவர் இன்று தொடா உயரமா?

கலைஞர், எடிசன் போன்றோர் எல்லாம் படித்து சாதித்தார்களா?

தமிழக முதல்வர்களில் இன்றுவரை அண்ணா தவிர யாரும் பள்ளிகூடம் தாண்டியவர்கள் இல்லை,

இன்றுள்ள தலைமுறைக்கு மகா அவசியம் அவமானபட்டு வென்றோர் வரலாறுகளை படிப்பது, மன்ம் பாதித்து நொந்து இருக்கும் போது சில பெரியவர்களின் அனுபவமான வார்த்தைகள்

ஒரு அனுபவஸ்தர் எடுத்து சொல்லியிருந்தால் அவர் மனம் மாறியிருக்கலாம், இப்படி விபரீத முடிவு எடுத்திருக்கமாட்டார்

படிப்பு மட்டுமல்ல, மனப்பயிற்சியும் மகா முக்கியம்

இரண்டாம் விஷயம் ஒரு சினிமா தயாரிப்பாளரை பற்றியது, ராமசந்திரன் என்பது அவரின் பெயர். அப்படி சொன்னால் தெரியாது ஆனால் இப்படி சொன்னால் புரியும்

அவர்தான் நாம் அனுதினமும் பார்த்து ரசிக்கும் வின்னர் படத்து தயாரிப்பாளர்

அந்த படம் இன்றுவரை எல்லோரையும் சிரிக்க வைக்கின்றது, ஆனால் தயாரிப்பாளர் நிலை என்ன?

அந்தபடம் பட்ஜெட்டை விட 3 மடங்கு அதிகரித்தால் வட்டி கொடுமைக்கு ஆளாகி எல்லா ஒப்பந்தங்களிலும் கையெழுத்திட்டிருக்கின்றார்

அது படத்தின் லாபத்தையும் விழுங்கி அவரின் சொத்தையும் விழுங்கி அவரை தெருவில் நிறுத்தியிருக்கின்றது

மனிதர் சர்வர் வேலை எல்லாம் செய்து வாழ்ந்திருக்கின்றார், இப்பொழுது நிலமை பிள்ளைகளால் பரவாயில்லையாம்

கந்துவட்டியினால் ஒவ்வொருவரு தயாரிப்பாளராக வந்து சொல்ல சொல்ல மனம் கலங்குகின்றது

ஆனால் கோடிகணக்கில் சம்பளம் வாங்கும் நடிகரும், இயக்குநரும் கொஞ்சமும் அவர்கலை கண்டுகொள்ளாமல் கடந்திருக்கின்றார்கள் எனும்பொழுது சினிமா உலகின் இன்னொரு பக்கமும் புரிகின்றது

உலகிலே மிக மிக நன்றிகெட்ட துறை, அரசியலுக்கு பின் அதுவாகத்தான் இருக்கும் போல‌

இப்படி எல்லாம் சிந்தனை செல்லும்பொழுது டிவியினை அழுத்தினால் குஷ்பு படம் ஓடுகின்றது

அந்த படத்தில் குஷ்பு அழுகின்றார், உடனே நமக்கு ரத்தம் எல்லாம் கொதிக்கின்றது, அதுவும் குஷ்புவின் கண்ணீரை கண்டால் சங்கத்தார் கண்களில் ரத்தம் வழிகின்றது

நடிப்பு என்றாலும் அந்த மகாலட்சுமியினை அழவைப்பதை எப்படி பொறுக்க முடியும்? பின் அந்த தயாரிப்பாளர் என்ன ஆனால் என்ன?

அதுவும் இப்போதைய படங்களில் குஷ்புவினை இந்த திரையுலகம் அனுமதிப்பதிமில்லை, பின் எப்படி அந்த திரையுலகம் உருப்படும்?

இப்படி அன்புசெழியன் போன்றோரின் கைகளில் சிக்கி படாதபாடுதான்படும், சங்கத்து சாபம் சும்மா விடாது.

 

இரட்டை இலைய பிடுங்கிட்டானுக..

Image may contain: 11 people, people standing

“சின்னம்மா சின்னம்மா என சொல்லி என்னை கடைசியில் சின்னமே இல்லாத அம்மாவாக ஆக்கிவிட்டானுக படுபாவிங்க‌

அக்கா எழும்புக்கா, இரட்டை இலைய பிடுங்கிட்டானுக.. அக்கா எழும்பி வா அக்கா…”


தினகரன் மக்கட் செல்வன் என கிளம்பியிருக்கும் கூட்டத்திற்கும், அன்புசெழியன் உத்தமன் என கிளம்பியிருக்கும் புது கூட்டத்திற்கும் ஏதும் வித்தியாசம் இருப்பதாக தெரியவில்லை

கண்ணதாசன் அன்றே எழுதினார்

“காச எடுத்து வீசு
கழுத பாடும் பாட்டு…”

அப்படியாக ஏராளமானவை கத்திகொண்டிருக்கின்றன, நல்ல வேளையாக தமிழகம் தனிநாடாக இல்லை, இருந்திருந்தால் ஜிம்பாப்வே போல பெரும் நெருக்கடிக்கு தமிழ்நாடு ஆகியிருக்கும்

சிரிய ரொகிங்கிய அகதிகள் போல இங்கிருந்தும் மக்கள் அகதிகளாய் கிளம்பியிருப்பார்கள்

ஓபிஎஸ் – ஈபிஎஸ் அணிக்கு இரட்டை இலை கிடைத்தது : செய்தி

Image may contain: 2 people, people standing

“இரட்டை இலையினை ஏன் தந்திருக்கோம்ணு உங்களுக்கு தெரியும் பழனிச்சாமி, ஏதும் ஆட்டம் காட்ட நினைச்சீங்க அவ்வளவுதான், கவர்ணர பற்றி தெரியும்ல‌

அட எசமான், நீங்க கண்ணால சொல்றத தலையால் செய்வோமுங்க, அடிமை விசுவாசத்திற்கு உதாரணம் எங்கள விட்டா உலகத்தில யார் இருக்கா? இப்போ என்ன, தாமரை தமிழகத்தில மலரணும் அவ்வளவுதான? சிறப்பா மலர வச்சிரலாம்”


ஓபிஎஸ் – ஈபிஎஸ் அணிக்கு இரட்டை இலை கிடைத்தது : செய்தி

இரட்டையர்களுக்கு இரட்டை இலை கொடுத்துவிட்டதன் அர்த்தம் விரைவில் ஆர்.கே நகர் முதல் உள்ளாட்சி தேர்தல் வரை நடைபெறும்

அதனை விட எழுதபடா ஒப்பந்தம் 50% தொகுதிகளில் பாஜகவினை இந்த இரட்டையர் குழு வெற்றிபெற வைக்க வேண்டும்

நிச்சயம் சசிகலா கும்பலுக்கு பெரும் அதிர்ச்சி. ஜெயாவும் சென்றார், இரட்டை இலையும் அவர்களை விட்டு சென்றது என்பது பேரதிர்ச்சி

அந்த சின்னத்தை அப்படியே முடக்கியிருந்தால் நல்லது, தமிழகம் உருப்பட வாய்ப்பு உண்டு, அனால் தமிழகம் உருப்படவே கூடாது என்பதில் டெல்லிக்கு எந்நாளும் அக்கறை உண்டல்லவா? அதுதான் நடந்திருக்கின்றது.

இனி தமிழ்நாட்டு புது புரட்சிதலைவி யார்?

தமிழிசைதான் 

மேக் இன் இந்தியா என்பதுதான் என்ன ?

Image may contain: sky, aeroplane and outdoor

மேக் இன் இந்தியா என்பதே வெளிநாட்டு தொழில்களை உள்நாட்டுக்கு கொண்டுவரும் விஷயம் என்றார்கள்

அப்படி ராணுவ தளவாட தயாரிப்பும் இங்கே செய்யவேண்டும் என்றார்கள், அதுதான் விஷயம்

ராணுவ தளவாடங்கள் எல்லாம் பலநூறுகோடி டாலர் வியாபாரங்கள். அப்படி பழைய மிராஜ் விமானங்களை மேம்படுத்தி ரபேல் விமானங்கள் ஆக்கும் விஷயமும் சில ஆயிரம் கோடி வியாரம்

இந்த பல்லாயிரம் கோடி தொழிலை மத்திய அரசுக்கு சொந்தமான நிறுவணங்கள் செய்யலாம், ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் போன்ற நிறுவணங்கள் செய்யலாம். அது ரகசிய பாதுகாப்பும் கூட‌

ஆனால் மகா முக்கியமான விஷயங்களை, ஏராளமான பணம் புரளும் விஷயத்தை தனியாருக்கு கொடுப்பேன் என மத்திய அரசு அடம்பிடிக்கும் விஷயம்தான் விவகாரம் ஆகின்றது

காங்கிரசுக்கு போபர்ஸ் விவகாரத்தை கிளப்பியவர்கள், இப்பொழுது ரபேல் விமானத்தில் சிக்கி கிடக்கின்றார்கள்

ஏன் இப்படி சர்ச்சையாகின்றது? எப்படி செய்திகள் கசிகின்றன‌

இதுதான் சர்வதேச அரசியல் பிரான்சின் ரபேல் போலவே ரஷ்யா, இஸ்ரேல் உட்பட பல நாடுகளுக்கு இந்திய சந்தையில் கண் இருக்கின்றது. எப்படியாவது விவகாரமாக்கிவிட்டால் தாங்கள் நுழையமுடியாதா, அல்லது தங்களுக்கு கிடைக்காத ஒப்பந்தம் எப்படியும் போகட்டும் என்ற அரசியல் எல்லாம் உண்டு

பொறுத்து பாருங்கள், ரபேல் ஒப்பந்த நகலே எல்லா எதிர்கட்சிகளிடமும் கிடைக்கும், எப்படி? ஏன்? எதற்கு என்றெல்லாம் கேட்க கூடாது ஆனால் கிடைக்கும்

முன்பு போபர்ஸ் எப்படி ஆட்டியதோ அப்படி ரபேல் விவகாரம் இந்தியாவினை ஆட்டலாம்

வல்லவன் ஆட்டுவித்த்தால் எல்லோரும் ஆடித்தான் ஆகவேண்டும்

ரபேல் என்பது ஒரு தேவ தூதனின் பெயர்

இப்போது மோடி சிக்கியிருக்கும் வகையினை கண்டால் அவரை காக்க எந்த தூதனும் வரப்போவதில்லை என்பது புரிகின்றது

 

அந்த செய்தி ஒன்றும் வியப்பல்ல‌

 தீபிகா படுகோனேவினை கொல்வோம், மோடியினை எதிர்த்தால் கொல்வோம் என பல மிரட்டல் குரல்கள் கேட்ட நிலையில் ஒரு விசாரணை கமிஷன் நீதிபதி உயிரை விட்டிருக்கின்றார்இன்னும் யார் யார் எல்லாம் சாகபோகின்றார்களோ தெரியாது

ஆக புதிய இந்தியா பல பேரின் ரத்தத்தில் , இன்னும் பெரு ரத்தம் குடிக்க‌ பிறந்துகொண்டிருக்கின்றது.


அந்த செய்தி ஒன்றும் வியப்பல்ல‌

முன்பு திருப்பூரில் ஒரு கூட்டம் நடந்தது, அதில் கலைஞரும் முக.ஸ்டாலினும் பங்குபெற்றார்கள். ஸ்டாலின் பேசும்பொழுது “திருப்பூரில் பிறந்த குமரன்” என முழங்கினார்

கலைஞர் பக்கத்தில் இருந்தவரிடம் கிசுகிசுக்க, அவர் அலறியடித்து பேசிகொண்டிருந்த ஸ்டாலினிடம் செய்தி சுமந்து ஓடினார்

கலைஞர் சொல்லி அனுப்பிய செய்தி என்ன?

“யோவ், குமரன் திருப்பூரில் பிறக்கலய்யா, அவன் பிறந்தது சென்னிமலையில்”

அந்த அளவு பேச்சிலும் , எழுத்திலும் மிக கவனமாக இருந்தார் கலைஞர்.

ஸ்டாலின் அப்பொழுது இருந்தே அப்படித்தான்


 

அண்ணே தனி தமிழ்நாடுதான் தீர்வுண்ணே….

Image may contain: 2 people, people standing

அண்ணே தனி தமிழ்நாடுதான் தீர்வுண்ணே, அதுதான் இனி தமிழன் வாழ வழி

அப்படியா, ஆமாண்ணே

சரி தனியா பிரிஞ்சா என்ன செய்வீங்க?

முதல்ல சிங்களன அடிப்போம்ணே, தனியா ஈழம் வாங்குவோம்

அப்புறம்?

கன்னடனுக்கு அடிக்கிற அடியில தானே காவேரி வரும்ணே

அதுதான் இப்பொழுதே வருதே

நாங்க சொல்றது வருஷம் பூராவும்ணே

அப்புறம்?

ஒலிம்பிக்ல எல்லா பதக்கமும் தமிழ்நாட்டுக்குண்ணே, அப்படி பயிற்சி அளிப்போம், ஒலிம்பிக் இங்கேயே நடத்த வைப்போம்ணே

அப்புறம்?

எல்லாமே தமிழ்ணே, அமெரிக்க டாலருக்கு பதிலா வள்ளுவர் படம் போட்ட நோட்டுண்ணே

ஏண்டா பிரபாகரன் படம் இல்லியா?

ஹிஹிஹி அது நாங்க நிறைய நோட்டு அடிப்போம்ணே 50, 100, 1000ம்னு அதில எதிலியாவது போடுவோம்ணே

அப்புறம்?

விவசாயம் தேசிய தொழில், ஆடு மாடு தேசிய தொழில் எல்லாமே தேசியம்ணே

ஏண்டா இங்கேயே வடமாநிலத்தவன் தான் எல்லா வேலையும் செய்றான், நீங்க எல்லாம் தேசிய தொழில்ன்னா வேலை செய்றதுக்கு அவனுகளுக்கு விசா கொடுக்கணுமே

அட ஆமால்ல, இந்தியனுக்கு தமிழ்நாட்டுல வேலைவாய்ப்புண்ணு சொல்லிக்குவோம், தமிழ்நாடு சிங்கப்பூர் ஆக்குவோம்ணே

அப்புறம்?

இஸ்ரேல் மாதிரி தமிழ்நாடு உலகத்த ஆட்டும்ணே, அதனால நம்ம மொழிக்காக்க, இனம் காக்க தனிநாடு அவசியம்ணே

ஒஹோ, சரி தனிதமிழ்நாட்டுக்கு மொத்த வருமானம் எவ்வளவு வரும்?

அதெல்லாம் யாருக்குண்ணே தெரியும் எங்களுக்கு தேவை தனி தமிழ்நாடு

அதாண்டா, தனி தேசம்ணா ராணுவம் வேணும், வெளியுறவுதுறைண்ணு எல்லா நாட்டுக்கும் தூதரகம் திறக்கணும், இப்படி எவ்வளவு செலவு இருக்கு, நீங்க வேற ஊரெல்லாம் சண்டை போடனும்னு சொல்றீங்க‌

ம்ம் ஆமாண்ணே கண்டிப்பா

சொல்லு தமிழ்நாட்டு வருமானம் என்ன?

தெரியலண்ணே

ராணுவம் அமைச்சா அதுக்கு எவ்வளவு செலவு செய்யணும், ஒரு போர்விமான செலவு என்ன?

தெரியலண்ணே..

ஒலிம்பிக் தமிழ்நாட்டுல நடக்குமா? அதுக்கு எவ்வளவு செலவாகும்ணு தெரியுமா? கன்னடன அடிப்பியா? அது இந்தியாவில் இருந்தா மொத்த இந்தியாகூட யுத்தம் நடத்தணும்

அப்படியாண்ணே

பின்ன? இந்தபக்கம் இந்தியா, அந்தபக்கம் சிங்களம் சுத்தி அடிக்கணும், பெரிய ராணுவம் , பெரிய ஆயுதம் எல்லாம் வேண்டும்

ம்ம் இதெல்லாம் யாரும் சொல்லலண்ணே, இனி யோசிக்கனும்

அட அப்புறம் யோசி, முதல்ல தமிழ்நாட்டு மொத்த வருமானம் என்ன சொல்லு?

ம்ம் தெரியலண்ணே

இதுல உனக்கு தனிநாடு வெற ராஸ்கல்

ஹிஹிஹி

டேய் தமிழ்நாட்டு வருமானம் வங்கதேசத்தவிட குறைவு. தனி தமிழ்நாடு கிடைச்சாலும் 8 கோடி தமிழர்கள பராமரிக்கணும். இங்கேயே டாஸ்மாக்லதான் அரசு வாழுது இதுல எப்படி நீங்க மக்கள நடத்துவீங்க,

ம்ம் கஷ்டம்தாண்ணே

இருடா, கடல்கடந்து படையெடுக்கணுமில்ல அதுக்கு எங்க போவ‌

ம்ம் வரி போடுவோம்ணே

உண்டான வரிய கட்டுண்ணாலே கட்டமாடடிங்க, ஜிஎஸ்டி போட்டாலே அலறுவீங்க இதுல நீங்க கட்டுவீங்க‌

ம்ம் இப்படி எல்லாம் சிக்கல் வருமாண்ணே

பின்ன நாடுண்ணா என்ன நினைச்ச? உன் இஷ்டத்து ஆளலாம்ணா

அண்ணே விவசாயத்த தேசிய தொழில் ஆக்கணும்னே இப்படித்தான் நார்வே, டென்மார்க், சுவிஸ் எல்லாம் பணக்கார நாடா இருக்கு

ஏண்டா தாய்லாந்து, லாவோஸ், வியட்நாம் எல்லாம் விவசாய நாடுதான் ஆனா ஐரோப்பா அளவுக்கா இருக்கு

இல்லியாண்ணே

அடேய் நார்வே எல்லாம் ஐரோப்பிய யூனியன்ல இருக்காங்க டா

அதுக்கென்ன தமிழ்நாட்டையும் ஐரோப்பிய யூனியன்ல‌ சேத்திருவோம்

அட கிரகம் பிடிச்சவன உன்ன வச்சி என்னடா செய்ய, உன்னெல்லாம் யாருடா பேச சொன்னது

எங்க அண்ணன் சீமான், செந்தமிழன்னே, அப்போ தமிழ்நாடு பிரிஞ்சா வல்லரசு ஆகாதாண்ணே

ம்ம், இந்த வங்கதேசம், மியன்மார், சில ஆப்ரிக்கநாடு மாதிரி நாசமா போகுமே தவிர வேற ஒண்ணும் நடக்காது, அப்படி ஆக்கிருவோமா?

கட்சில கலந்து பேசிட்டு வாரேண்ணே..”