துரோகம் வென்றதாக சரித்திரம் இல்லை: டிடிவி தினகரன்

துரோகம் வென்றதாக சரித்திரம் இல்லை: டிடிவி தினகரன்

மிக சரி, அதுதான் நடந்திருக்கின்றது, துரோகம் வெல்லவில்லை நீதிதான் வென்றிருக்கின்றது என்பது ஆர்.எம் வீரப்பன், பண்ருட்டி ராமசந்திரன், சாத்தூர் ராம்சந்திரன் போன்றோர்களுக்கு தெரியாதா?

அவர்கள் சொல்லவேண்டிய டயலாக்கினை எல்லாம் இவர் சொல்லிகொண்டிருக்கின்றார்

ஆர்.எம் வீரப்பன் இப்பொழுது என்ன சொல்வார் என தெரியாது, ஆனால் கிட்டதட்ட 30 வருடங்களுக்கு முன் நடந்த சம்பவங்களை எல்லாம் நினைத்து , தாங்கள் ஓட அடிபட்டத்தை எல்லாம் நினைத்து, இன்று நடப்பதை நினைத்து மனதை ஆறுதல்படுத்திகொண்டிருப்பார் பண்ருட்டி ராமசந்திரன்

அந்த மனிதர் வாய்திறந்தால் டிடிவி தினகரன் , சீமான் உள்பட (ஐ.நாவில் ஈழதமிழர் பிரச்சினையினை இந்திய பிரதிநிதியாய் பேசியவரும் அவர்தான், ராஜிவ் பிரபாகரன் சந்திப்பில் உடன் இருந்தவரும் அவர்தான்) பலர் வாயினை அடைக்க முடியும்

ஆனால் பேசவேமாட்டேன் என்கின்றார், இனியாவது பேசுவாரா பார்க்கலாம்


உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் முன்னோடி, எங்கள் ஆட்சியின் சாதனை இது : பன்னீர் செல்வம்

மனிதர் நடராஜனை எப்படி எல்லாம் கலாய்க்கின்றார் பார்த்தீர்களா?

பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது கருடா சவுக்கியமா? என்பது இதேதான்


 

Advertisements

தங்க தலைவிக்கு இன்னொரு மணிமகுடம்

Image may contain: 2 people, people sitting, table and indoor

இதோ எங்கள் தங்க தலைவிக்கு இன்னொரு மணிமகுடம்

உலகின் மிக சக்திவாய்ந்த நபர்களில் ஒருவராக கருதபடும் குவைத் அரசர் எம் தலைவியினை சந்தித்திருக்கின்றார்.

உலக விஷயங்களில் எல்லாம் கவனம் செலுத்தும் குவைத் அரசருக்கு இந்தியாவின் குஷ்பு எனும் தலைவியும் அவரின் அதிரடி செயல்பாடுகளும் வருங்காலத்தில் அவர் அடையபோகும் உயரமும் தெரியாதது அல்ல‌

குவைத் அரசருக்கு எங்கள் தங்க தலைவியின் பெருமை தெரிந்ததிருகின்றது, வாழ்த்துக்கள்

அடுத்து டிரம்ப், இங்கிலாந்து ராணி , புட்டீன் சீனாவின் ஜின் பெங் , இந்தியா வரும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு எல்லாம் எம் தலைவியினை சந்திக்க தவறமாட்டார்கள்

டிரம்பின் மகள் இவாங்கா உலக சுற்றுபயணம் செல்லும் நேரத்தில் எம் தலைவியின் மேற்காசிய பயணமும் உலக கவனம் பெறுகின்றது

அடுத்த காங்கிரஸ் ஆட்சியில் தலைவி வெளியுறவு துறைக்கு மிக பொருத்தமானவர் என்பதை பலருக்கு தலையில் அடித்து சொல்லும் விஷயம் இது

உலக கவனத்தை பெற்றுவிட்ட தலைவிக்கு சங்கம் வாழ்த்துக்களை 
தெரிவித்துகொள்கின்றது, மகிழ்ச்சி பெருக்கெடுக்கும் நேரமிது

வாழ்த்துக்கள் தங்க தாரகையே

“உன்னை பெற்றதில் பெருமை கொள்கின்றது இந்நாடு..”

(செய்தியினை உடனே தெரிவித்த நண்பர்களுக்கு சங்கத்து சார்பில் கோட்டான கோடி நன்றிகள்)


தென்னகம் திராவிட பூமி என்பது அட்டகாசமாய் தெரியும் நேரம்

அந்த சர்சையினை ஓரளவு எல்லோரும் அறிந்திருக்கலாம், அதாகபட்டது கேரள இந்துமாணவி ஒருவர் இஸ்லாம் ஒருவரை திருமணம் செய்து இஸ்லாமாக மாறினார், அகிலா எனும் பெயரை ஹிதாயா என மாற்றியும் கொண்டார்

விடுவார்களா மதவாதிகள்? கேரளா பற்றி எரிந்தது. இது லவ் ஜிகாத் என்றும், அப்பெண்ணை தீவிரவாதியாக மாற்றபோகின்றார்கள் என்றெல்லாம் பிரச்சினைகள் வலுத்தன, கேரள மதராசா அடித்து நொறுக்கபடும் அளவு சென்றது

அப்பெண்ணிற்கு பலத்த அச்சுறுத்தலும் இருந்தது, எனினும் அப்பெண் சேலத்த்திற்கு வந்தபின் சற்று ஆறுதல் என்றாலும் சர்ச்சை குறையவில்லை

இந்த திருமணம் செல்லாது என அறிவிக்க போரி உச்சநீதிமன்றம் வரை சென்றுவிட்டார்கள், இந்தியாவின் முதல் லவ் ஜிகாத் வழக்கு இதுதான்

உச்சநீதிமன்றத்திற்கு அப்பெண் செல்லவேண்டும், அங்குதான் சிக்கல் முளைத்தது

புதிய இந்தியா பிறந்திருக்கின்றது அல்லவா?, பத்மாவதி படத்திற்கே அந்த நிலை என்றால் இந்த ஹாதியா அவர்கள் கையில் கிடைத்தால் என்னாகும்?

டெல்லி செல்லுமுன் ரயிலோடு கொளுத்திவிடுவார்களா இல்லையா?

எல்லோருக்கும் பெரு அச்சம் ஏற்பட்ட நேரமிது

இங்குதான் திமுக மகளிரணியின் பிரமுகரான Rajathi Salma அனைத்து பெண்கள் சார்பாக கேரள முதல்வருக்கு பிரச்சினையின் வீரியம் குறித்து கடிதம் எழுதினார், அதனை ஏற்றுகொண்ட கேரள அரசு ஹதியாவிற்கு தகுந்த பாதுகாப்பும், விமான போக்குவரத்தும் அளிக்க முன்வந்தது

இதுதான் திமுகவின் முத்திரை, மதங்களை தாண்டி மதவெறியினை தாண்டி மனிதநேயத்திற்காக அந்த பெண்ணுக்கு, அவள் உரிமைக்கு குரல்கொடுக்க அங்கும் தைரியமிக்க பெண்கள் இருக்கின்றார்கள்

பெரியாரின் வழிவந்த திராவிட முன்னேற்ற கழகம் பெண்ணுரிமை காப்பது என்பதும், அந்த கலைஞர் உருவாக்கியவர்களும், அவர் கண்டெடுத்த உறுப்பினர்களும் என்றும் கொள்கை திடம் கொண்டவர்கள் என்பதும் மறுபடியும் நிரூபணம் ஆகியிருக்கின்றது

தமிழ்பெண் ஒருவர் அனைத்து பெண்கள் சார்பாக மனுகொடுத்தவுடன் ஏற்றுகொண்டு நடவடிக்கை எடுத்து மதவாத சக்திகள் மீது கரிபூசிய பிரணாய் விஜயன் வாழ்த்துகுரியவர்

தென்னகம் திராவிட பூமி என்பது அட்டகாசமாய் தெரியும் நேரம்

கலைஞர் நலமாக இருந்திருந்தால் சல்மாவின் செயலுக்கு பெரும் பாராட்டு தெரிவித்திருப்பார் என்பது நிச்சயம்.

திராவிட கொள்கைகள் வழி நின்று, கழகத்திற்கு பெருமை சேர்த்த சகோதரி Rajathi Salma அவர்களுக்கு வாழ்த்துக்கள்

(ஏம்மா Devi Somasundaram இதெல்லாம் உனக்கு தெரியுமா? தெரியாதா?, தெரிந்தால் சும்மா இருக்கும் ரகம் அல்ல நீ..)

வாமணன் : நெப்போலியன் வரலாறு : 12

Image may contain: one or more people

1812 ஜூன் 24ல் நெப்போலியனியனின் பெரும்படை ரஷ்யா நோக்கி கிளம்பியது

7 லட்சம் வீரர்கள், 70 ஆயிரம் குதிரைகள் 2 ஆயிரம் பீரங்கிகள் , உணவு பொருள் விநியோகத்திற்கு 2000 வேகன்கள் அதில் முழுக்க உணவுகள் என ஐரோப்பாவின் மிகபெரும் படையாக அது இருந்தது

அந்த படையோடும் கூட ஒட்டோமன் சுல்தான்களோடு நெப்போலியன் மோதவில்லை என்பதுதான் வரலாற்றின் மறைக்கபட்ட பக்கம். ஓட்டோமேன் துருக்கியரை அடித்திருந்தால் பட்டுசாலை உட்பட பல சாலைகள் நெப்போலியன் வசமாயிருக்கும், பிரிட்டனின் முதுகெலும்பு முறிந்திருக்கும்

இது நெப்போலியனுக்கும் தெரியாதது அல்ல, ஆனால் துருக்கியர் அவ்வளவு வலுவாக இருந்திருக்கின்றனர், அவர்களை நெருங்கவே நெப்போலியன் யோசித்திருக்கின்றான் என்பது புலனாகின்றது

Image may contain: 1 person

மாவீரன் நெப்போலியனை ரஷ்யாவில் மிக தந்திரமாக ஆடி, குளிரின் துணையோடு விரட்டிய குருச்சேவ் 

இப்படி பல இடங்களில் வரலாற்றில் துருக்கிய ஓட்டோமன் பேரரசு மறைக்கபட்டிருக்கின்றது, அது இருக்கட்டும் ரஷ்ய பக்கம் போகலாம்

நெப்போலியன் வருகின்றான் என்றதுமே ரஷ்யா அதிர்ந்தது. அவன் படைக்குமுன் ரஷ்ய படைகள் 5 நாள் தாக்குபிடித்தாலே மகா அதிசயம்

ஜார் மன்னர் கலங்கியிருந்தார், அவ்வாறே ரஷ்யாவும் கலங்கி இருந்தது. அவர்கள் தளபதியுடன் ஆலோசனை நடத்த்தினார்கள்

அந்த தளபதி கிழட்டு நரி, வயது 67 ஆகியிருந்தது ஒரு கண் கிடையாது, அட்ராசிஸ் போரில் நெப்போலியனிடம் தோற்று ஓடியவர் அந்த அவமானம் அவர் நெஞ்சில் இருந்தது, எரிந்து கொண்டிருந்தது.

அவர் பெயர் மிக்கைல் குட்சோவ்

நெப்போலியனை நேருக்கு நேர் சந்த்தித்தவர் என்பதால் அவனை போரில் வெல்ல முடியாது என்பது அவருக்கு புரிந்தது

ஒருவழியாக ஆலோசித்து அந்த குட்சோவ் சொல்படி கேட்பதாக ஜார் மன்னர் சொன்னார், அவரை தொடர்ந்து ரஷ்ய மக்களும் சொன்னார்கள்

குட்சோவ் சொன்னார், “இந்நிலையில் ஒரு பெரும் சக்தி துணையின்றி நெப்போலியனை வெல்ல முடியாது, போரிட்டால் நிச்சயம் தோல்வி

அதனால் நமக்கு உதவும் அந்த பெரும் சக்தி வரும்வரை பின்வாங்குவோம், அந்த உதவி கிடைத்தவுடன் திருப்பி அடிக்கலாம்

பின் வாங்குவது என்றால் சும்மா அல்ல, நெப்போலியனுக்கு யாரும் கொடுக்காத விநோதமான தண்டனையினை நாம் கொடுப்போம், ஆம் இந்த ஊரை விட்டு பரந்த ரஷ்யாவின் வடக்கு பக்கம் நோக்கி சென்றுகொண்டே இருப்போம்

பாலங்களை எல்லாம் தகர்த்துவிடுவோம், பின் தொடர்ந்து அவன் வரமுடியாது

ஒரு பருக்கை கோதுமை விடாமல், ஒரு கால்நடை இல்லாமல், ஒரு குண்டுமணி தங்கம் விடாமல் எடுத்துகொண்டு கிளம்புவோம், இந்த வெறும் கட்டங்களை வைத்துகொண்டு நெப்போலியன் என்ன கிழித்துவிடுவான்”

சொல்லிவிட்டு அவர்கள் போக்கில் கிளம்பினார்கள், சில இடங்களுக்கு தீவைத்துவிட்டும் சென்றார்கள்

ரஷ்ய எல்லைக்கு வந்த நெப்போலியன் 2 லட்சம் வீரர்களை அங்கே நிறுத்திவிட்டு 5 லட்சம் வீரர்களோடு ரஷ்யாவிற்குள் புகுந்தான்

அவன் கணக்குபடி 15 நாளில் யுத்தம் முடியும், அப்படியே ஜார் மன்னரை இழுத்துபோட்டு அடித்து தூக்கி எறிந்துவிட்டு ரஷ்யாவினை பிரான்சோடு இணைத்துவிடலாம்

ஆனால் அவனுக்கு அங்கு வினோத சோதனை இருந்தது, எதிரிகள் போருக்கு வந்தால் சண்டையிடலாம், எதிரிகள் பின்வாங்கி கொண்டே சென்றால் அதுவும் இருக்கும் வளங்களை எல்லாம் எரித்துவிட்டு பின்னோக்கி சென்றால்..

நெப்போலியனுக்கு மகா குழப்பம், என்ன இது சண்டைக்கு வருவார்கள் என நினைத்தால் எல்லாவற்றையும் கொழுத்திவிட்டு பின்னோக்கி நகர்ந்தால் எப்படி?

லித்வேனியாவிலிருந்து மாஸ்கோ செல்லும் வழியிலே சிக்கியது பிரெஞ்ச் படை, வழிகள் சரியில்லை குருட்சோவின் படைகள் அப்படி தடைகளை ஏற்படுத்திவிட்டு சென்றன, பாலம் கிடையாது எங்கும் இடிபாடுகள்

இந்த பாதையற்ற பயணத்திலே நெப்போலியனின் படைகளில் 20 ஆயிரம் பேர் காலி

ஒரு வழியாக மாஸ்கோ செல்லும் வழியில் இருந்த லெமொன்ஸ்க் கோட்டையில் சண்டையிட்டார் நெப்போலியன்

1 லட்சம் ரஷ்ய வீரர்கள் மோதினர், மிக பெரும் சண்டையாக உருவெடுக்கும் என நெப்போலியன் நம்பியபொழுது, திடீரென எல்லாவற்றையும் எரித்துவிட்டு ஓடியது ரஷ்யபடை

இப்பொழுது கோட்டை நெப்போலியன் வசம், ஆனால் இடிபாடுகளும் எரிந்த பாகமும் கொண்ட வெற்று கோட்டை, அதனை வைத்து என்ன செய்ய?

நெப்போலியன் தான் மிக பெரும் வலையில் சிக்கிவிட்டதை உணர்ந்தான், ரஷ்ய படைகளோ இருப்பதை எரித்துவிட்டு பின் வாங்கும் வகையில் சென்றுகொண்டே இருந்தது

எங்கு செல்கின்றார்கள் என தெரியாமலே சென்றான் நெப்போலியன்

மாஸ்கோவிற்கு முன்பு அவன் போராடினோ என்ற இடத்தினை நெருங்கியபொழுது பெரும் யுத்தம் வெடித்தது

குருட்சேவ் செய்த தந்திர காரியம் அது, நெப்போலியனுக்கு அழகாய் விளையாட்டு காட்டினான் குருட்சேவ் எப்படி?

இதற்கு அடுத்த இடம் மாஸ்கோ, ரஷ்ய தலைநகர். ஜார் மன்னன் அங்குதான் இருந்தார். இங்கு ஒரு யுத்தம் நடத்தினால் அங்கு ஜார் மன்னர் மாஸ்கோவினை காலி செய்து செயின்ட் பீட்டர்ஸ்பர்க் செல்ல வசதியாயிருக்கும்

அவர் அந்த திட்டத்தில் போங்கு போர் நடத்த நெப்போலியனோ வெறிகொண்ட யுத்தம் நடத்தினான்

அன்றைய போர் மிக கொடூரமானது ஒரே நாளில் 80 ஆயிரம் பேர் இறந்தனர். நெப்போலியனுக்கு வெற்றி ஆனால் சேதம் அதிகம்

வழக்கம் போல பின் வாங்கி சென்றது ரஷ்யபடை

எதிரிக்கு சேதம் விளைவித்துவிட்டு தன் பக்கம் சேதத்தை குறைத்து கொண்டு, இருப்பதை அழித்துவிட்டு பின்வாங்கி எதிரியினை தவிக்கவிடும் யுத்தியில் கைதேர்ந்திருந்தார் குருசேவ்

இதனை எதிர்பாரா நெப்போலியன் தடுமாறினான், 15 நாளில் முடியவேண்டிய யுத்தத்தை 3 மாதம் இழுத்தார் குருட்சேவ்

களைத்துவிட்ட நெப்போலிய படைகள் கொஞ்சம் தேறி மாஸ்கோ பக்கம் வந்தன‌

ரஷ்யாவின் தலைநகரை பிடித்துவிட்டால் ரஷ்யா நமது என்ற உற்சாகத்தில் தன் சக்தி எல்லாம் திரட்டி மீதி இருந்த படையுடன் மாஸ்கோவில் நுழைந்தான்

40 ஆயிரம் மக்கள் வசித்த மாஸ்கோ நகரம் துடைத்து காயவைத்தது போலிருந்தது, போதா குறைக்கு வீடுகளுக்கு தீவைத்துவிட்டு சென்றிருந்தார்கள்

ரஷ்ய வீடுகள் மரத்தால் ஆனவை என்பதால் அவை கொழுந்துவிட்டு எரிந்தன, நெப்போலியனை வரவேற்றது இவைகள்தான்

ஜார் மன்னரின் கிரெம்லின் மாளிகைக்கு விரைந்தான் நெப்போலியன் அங்கு அரசனின் செருப்பு கூட இல்லை

மாஸ்கோ நகர் எரிய, அங்கேயே வெறுத்துபோய் அமர்ந்தான் நெப்போலியன், அவனுக்கு நிச்சயமாக வெற்றி ரஷ்யாவினை பிடித்தாயிற்று ஆனால் மக்கள் இல்லாத மாஸ்கோவினை வைத்து என்ன செய்வது

வீரர்கள் சீதோஷ்ண நிலையில் சிக்கி இறந்தனர், உணவு குறைந்தது, இனி ஜார்மன்னரை தேடி சமாதானம் செய்துவிட்டு கிளம்பலாம் என திட்டமிட்டான் நெப்போலியன்

மன்னரோ செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் இருந்தார், ஆனால் தந்திர குருட்சேவ் சொன்னான், மன்னா சமாதானம் எல்லாம் வேண்டாம், சற்று பொருங்கள் . நமக்கு உதவி செய்ய பெரும் படை ஒன்றுவரும் , நெப்போலியனை ஓட அடிக்கலாம்”

ஜார் மன்னர் சமாதான ஒப்பந்தத்தை இழுத்தடித்தார், செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகருக்கு செல்ல்ல நெப்போலியன் தீர்மானிக்கும்பொழுதுதான் அவனுக்கு எதிராக காலநிலை மாறியது

ரஷ்ய குளிர்காலம் தொடங்கியது குளிரென்றால் பிரான்சிலும், ஜெர்மனிலும் உள்ள குளிர் அல்ல, இது பேய்குளிர்

அசால்டாக ‍மைனஸ் 20 டிகிரிக்கு குறைவாக செல்லும் குளிர், அந்த காலம் தொடங்கியதும் குருட்சேவ் சொன்னார், நமக்கு உதவியாக இயற்கை போராட வந்துவிட்டது இனி அடிக்கலாம்

அந்த பேய்குளிர் ரஷ்யர்களுக்கு நமது பங்குனி வெயில் போல பழக்கபட்ட விஷயம், ஆனால் நெப்போலியனுக்கு புதிது

அந்த குளிரில் அவனும் சிக்கி அவன் படைகளும் சிக்கி, உணவு தட்டுபாடும் இருந்தபொழுதுதான் குருட்சேவ் தாக்க ஆரம்பித்தார்

உண்மையான சண்டையினை குருட்சேவ் அப்பொழுதுதான் தொடங்கினார், நெப்போலியனோ சண்டையிட்டு களைத்து குளிரில் நடுங்கியபடி இருந்தான்

மாவீரன் நெப்போலியன் நிச்சயம் பெரும் வித்தகன், குருட்சேவினை அவன் சமாளித்தான், ஆனால் கடுங்குளிர் அவனை தோற்கடிக்க தொடங்கியது

வெல்லமுடியா ஒரு மாவீரன் இயற்கையிடம் தோற்க தொடங்கினான், இயற்கை உதவியுடன் குருட்சேவ் உற்சாகமாக முன்னேறினான்

நெப்போலியன் ரஷ்யாவில் சிக்க பிரிட்டன் தன் அரசியல் விளையாட்டை பிரான்சில் நடத்தியது, இனி நாடு என்னது என ஒருவன் புரட்சி செய்ய தொடங்கினான்

தகவல் நெப்போலியனுக்கு சென்றது

வாமணன் வருவான்..

 

நமீதாவிற்க்கு வாழ்த்துக்கள்….

Image may contain: 2 people, people smiling, people standing

தமிழ்நாட்டிற்காக மிக பெரும் தியாகம் செய்திருக்கும் இந்த தியாகிக்கு வாழ்த்துக்கள்

நமீதாவும் ஜெயா முன்னிலையில் திருச்சியில் அதிமுகவில் சேர்ந்திருந்தார், பிரச்சாரம் எல்லாம் செய்திருந்தார்

கட்சியே ஏக குழப்பத்தில் சிக்கியிருப்பதால் கட்சிசார்பாக வாழ்த்த யாரும் வரவில்லை

 

ஆர்.கே நகர் இடைதேர்தல் டிசம்பர் 21ல்

Image may contain: 1 person, smiling

இரட்டை இலையினை குடுத்திட்டேள்.. இந்த ஸ்பெக்ட்ரம் தீர்ப்பு எப்போ கொடுப்பேள்….

அதுக்கும் ஏதும் டீல் பேசிண்டு இருக்கேளா…”


ஆர்.கே நகர் இடைதேர்தல் டிசம்பர் 21ல் நடைபெறும்

இது மிக மிக தாமதமான செய்தி, இரட்டை இலை கொடுத்தவுடன் அறிவித்திருக்க வேண்டாமா?

டிசம்பர் 22 உள்ளாட்சி தேர்தலா?

இரட்டை இலை விவகாரம் முடிந்தவுடன் தமிழக தேர்தல்களில் எவ்வளவு வேகம்??


இன்று அதிமுக காணும் சிக்கல்களை இன்னொரு நாள் திமுகவும் சந்தித்தே தீரும்.

அதிமுக ஒருமாதிரி ஆகிகொண்டிருக்கின்றது என திமுகவினர் குதுகலிக்க ஏதுமில்லை

நாளை திமுக ஆட்சிக்கு வரும் நேரத்தில் இதே சம்பவங்கள் அங்கும் நடக்கலாம், ஜெயா இல்லாத அதிமுக படும் பாட்டினை கலைஞர் இல்லா திமுகவும் சந்திக்கலாம்

சசிகலாவின் இரும்பு பிடியினை மீறி அதிமுகவினை போட்டு நொறுக்குபவர்களுக்கு, ஸ்டாலின் எனும் பச்சை குழந்தை கையிலிருந்து திமுகவினை விடுவிப்பது கஷ்டமாய் இராது

இதனை சொன்னால் நாம் திமுக எதிர் என்பார்கள், சொல்லட்டும்

ஆனால் யதார்த்தம் அதுதான், திமுக முன் மிகபெரும் சவால் காத்திருக்கின்றது

இன்று அதிமுக காணும் சிக்கல்களை இன்னொரு நாள் திமுகவும் சந்தித்தே தீரும்.