முன்னோர்களை நினைத்து பெருமை கொள்வோம்: பிரதமர் மோடி

இந்தியா உருவாக காரணமாக இருந்த முன்னோர்களை நினைத்து பெருமை கொள்வோம்: பிரதமர் மோடி

இன்று அரசியலமைப்பு தினமாம், அதனால் மோடி அதற்காக உழைத்த பெரியவர்களை பற்றி பெருமிதபட்டுகொண்டார், அம்பேத்கர் பெயரினை சொன்ன மோடி, காந்தி நேருவின் பெயர்களை சொல்லவில்லை

ஏன் இந்தியா உருவாக காரணமான முன்னோர்களை நினைக்கின்றார் மோடி?

அவர் நினைத்த புது இந்தியா பிறக்கவே இல்லை, பிறந்தாலும் உடனே செத்துவிடுகின்றது

ஆக இந்தியாவில் பல மாறுதல்களை கொண்டுவந்தவர்கள் எவ்வளவு பொறுப்பும் அர்பணிப்பும் கொண்டவர்களாக இருந்திருகின்றார்கள் என்பது இப்பொழுதுதான் மோடிக்கு புரிகின்றது

இன்னும் பல விஷயங்கள் அவருக்கு போக போக புரியும்

Advertisements

காரோட்டும் கலை பழக ஆரம்பித்தாயிற்று

இங்கெல்லாம் வாகனம் செலுத்த தெரியாவிட்டால் அவன் மாற்று திறணாளி அல்லது உடற்பேறு குறைந்தவன்.

எங்கு சென்றாலும் அவனுக்கு சிலரின் உதவிகள் தேவை

இவ்வளவு காலமும் அப்படியே இருந்தாயிற்று, எல்லாவற்றிற்கும் ஒரு எல்லை உண்டல்லவா? இனி தாக்குபிடிக்க முடியாது என்றவுடன் காரோட்டும் கலை பழக ஆரம்பித்தாயிற்று

சென்றவுடன் இது கிளச், இது பிரேக் என சொல்லிதருவார்கள் என சென்றால் ஜெயமோகன் எழுதிய புத்தகத்தின் அளவுக்கு ஒன்றை தூக்கி கொடுத்து இதை படி, இவை எல்லாம் சாலை வழிமுறைகளும், வழிகாட்டிகளும் இதில் ஒரு தேர்வு உண்டு இதில் வென்றால் அடுத்த கட்டம் செல்லலாம், இல்லாவிட்டால் காரில் கை வைக்க முடியாது என விரட்டிவிட்டார்கள்

எவ்வளவோ விஷயங்கள் இருக்கின்றன, அவ்வளவு தயாரிப்புகளும், கற்க வேண்டிய விஷயங்களும் இருக்கின்றன‌ ஒழுங்காக ஒட்டுநர் உரிமம் பெறுவது எப்படி என்பது இன்றுதான் விளங்கிற்று.

பக்கத்து வீட்டுக்காரன் காரோ, பைக்கோ வைத்திருந்தால் அவனிடம் ஒட்டிகொண்டு, உலகிலே மகாத்மாவிற்கு பிறகு மனிதன் நீதான் என சொல்லி அதில் ஒட்ட பழகி கொள்வது எல்லாம் டிரைவிங் அல்ல‌

மாறாக தனக்கும் பிறருக்கும் ஆபத்தில்லாமல் பயணிப்பது என படிக்க பெரும் விஷயங்கள் இருக்கின்றன, ஹார்ன் அடிப்பதற்கு கூட இடம் பொருள் ஏவல் எல்லாம் இருக்கின்றது, இஷ்டத்திற்கு அடித்தால் பிடித்து உள்ளே போடும் அளவு சட்டங்களும் இருக்கின்றன.

இங்கு பள்ளிவிடுமுறை என்பதால் 17 வயது மாணவர்கள் நிரம்ப‌ வந்திருந்தார்கள், நான் உள்ளே நுழைந்ததும் டிரைனர் என நினைத்து வரவேற்றார்கள், நானும் உங்கள மாதிரி ஸ்டூடன்ட் தான் என வசூல்ராஜா கமலஹாசன் போல சொல்லிவிட்டு சென்று அமர்ந்துகொண்டேன்

எப்படியோ கண்ணனை வணங்கிவிட்டு படிக்க ஆரம்பித்தாயிற்று

ஆம் உலகில் முதல் வெற்றிகரமான ஓட்டுநர் அவர்தான், அர்ச்சுணனுக்கு அவர் மகா வெற்றிகரமான தேரோட்டியாக இல்லாவிட்டால் கதை மாறியிருக்கும்

ஆக அவரை மனதில் கொண்டு காரோட்டும் கலை பழக ஆரம்பித்தாயிற்று

கொஞ்சம் அச்சமாகவும் இருக்கின்றது, ஆனால் என் தற்போதைய டிரைவரான பாகம்பிரியாள் அன்று கர்ப்பிணியாக இருக்கும்பொழுதே அசால்டாக படித்து வந்தவர். இன்றுதான் அவரிடம் எப்படி படித்துவிட்டாய்? என ஆச்சரியமாக கேட்டேன், ” அதற்கு தைரியம் வேண்டும் , அவ்வளவு தைரியம் இல்லாவிட்டால் உன்னை கட்டியிருப்பேனா?” என்பது போல பார்த்துவிட்டு சென்றுவிட்டார்.

வெளிநாட்டு பணிக்கு தயாராகுபவர்கள் சமையல், வாகனம் செலுத்துதல் ஆகிய இரண்டையும் கற்றுகொண்டு செல்வது சால சிறந்தது, வாய்ப்பு இருந்தால் படித்துவிடுங்கள்

ஆக‌ மிக விரைவில் உரிமம் பெற வேண்டும், இங்கு உரிமம் பெற்றால் காமன்வெல்த் நாடுகள் எல்லாவற்றிலும் கார் செலுத்த‌ அனுமதி இருக்கின்றது

பின் என்ன?

உரிமம் கிடைத்தவுடன் குஷ்புவின் கார் டிரைவரை விரட்டிவிட்டு அந்த வேலைக்கு சேர்ந்துவிட வேண்டியதுதான்.