ஜெயலலிதாவின் மகள் என உரிமை கோரிய மனு தள்ளுபடி

Image may contain: 2 people, close-up

ஜெயலலிதாவின் மகள் என உரிமை கோரிய மனு தள்ளுபடி: கர்நாடக ஐகோர்ட்டில் வழக்கு தொடர அனுமதி

அதாவது இது ஒப்புகொள்ளும் விஷயமும் அல்ல, தள்ளிவிடும் விஷயமும் அல்ல என குழம்பிவிட்டது பெங்களூர் நீதிமன்றம்

அம்ருதா என்பவரும் ஜெயலலிதா குடும்பத்து சாயலில்தான் இருக்கின்றார், ஜெயாவின் மகளாக இருக்க முடியாவிட்டாலும் வேறு வகை தொடர்புகள் இருந்தாலும் இருக்கலாம்,,

அதனை தோண்டாதவரை நல்லது ,தோண்டினால் குடும்பம் தாங்காது

எப்படியோ தீபா என்பவருக்கு குடுமிபிடி சண்டை போட ஒரு கொண்டை கிடைத்தாயிற்று.

 

வி.பி சிங் : மறக்க முடியா மகத்தான மனிதருக்கு நினைவஞ்சலிகள்

Image may contain: 1 person, glasses

மிக குறுகிய காலம் இருந்தாலும் வி.பி சிங்கின் சாதனைகளை மறக்க முடியாது

பெரும் சர்ச்சையினை மேல்சாதி கட்சிகள் கொண்டுவந்த போதும், மண்டல் கமிஷன் அறிக்கையினை அமுல்படுத்தியது அவர் ஆட்சியில்தான், நீண்டகால கோரிக்கையான அம்பேத்கருக்கு “பாரத் ரத்னா” வழங்கபட்டதும் அவர் ஆட்சியில்தான்

இன்னும் ஏராளம் உண்டு

Image may contain: 2 people, people smiling, sunglassesதாழ்த்தபட்ட மக்களுக்காக ஏதேனும் செய்தாக வேண்டும் என்ற அவரின் செயல்பாடுகள் பாராட்டதக்கவை

அதன் விளைவே அவர் அரசு கவிழ்க்கபட்டு சந்திரசேகர் பிரதமர் ஆனார்

இன்று பிரபாகரன் என குதிப்போர் ஒரு விஷயத்தை மறக்கின்றார்கள், ஆம் கலைஞர் வற்புறுத்தியதில் அமைதிபடையினை இலங்கையில் இருந்து திரும்ப பெற்றார் வி.பி சிங்

அப்பொழுது மணலாற்று பகுதியில் பிரபாகரனின் முகமான ஏ1 முகாமினை இந்தியபடை வளைத்திருந்தது, ஒரு நாள் அவகாசம் கொடுங்கள் சனியனை தூக்கி வந்து விடுவோம் என இந்திய ராணுவம் வைத்த கோரிக்கையினை ஏற்காமல் அதனை திரும்ப பெற்றார்

விபி சிங் மட்டும் கொஞ்சம் இறுக்கமாக இருந்திருந்தால் அன்றே பிரபாகரன் கதை முடிந்திருக்கும், அவனை காப்பாற்றியதில் விபி சிங்கின் பங்கு முக்கியமானது

இதனை எல்லாம் யாரும் பேசமாட்டார்கள், காரணம் இதனை சொன்னால் கலைஞர் உதவினார் என சொல்லவேண்டி இருக்கும் அல்லவா? அந்த அரசியல் மோசடி

விபி சிங் அரசு நீடித்திருந்தால் கலைஞர் அரசு கவிழ்க்கபட்டிருக்காது, ஜெயா அரசியலில் உச்சம் பெற்றிருக்க மாட்டார், தினகரன் இம்சை எல்லாம் வந்திருக்காது

நிச்சயம் அந்த அரசு கலைந்திருக்க கூடாது, பின்னர் அதற்கான விலையினை கலைத்த ராஜிவ் கொடுத்தார்

கலைஞருக்கு மிக பிடிதமானவர் அந்த விபி சிங். காரணம் சில நியாயமான காரியங்களை செய்த ஒரே பிரதமர் அவர்

புறக்கணிக்கபட்ட பலரின் வலியினை உணரும் மனம் அவரிடம் இருந்தது, கூட்டாட்சி தத்துவத்தை ஏற்றுகொண்ட மிக சில வடநாட்டு அரசியல்வாதிகளில் விபிசிங் முதன்மையானவர்

பாபர் மசூதி பிரச்சினையில் அவர் காட்டிய உறுதி வாழ்த்ததக்கது.

இன்று அவரின் பிறந்த நாள், பிரபாகரனின் உயிரை காத்தவரின் பிறந்த நாள், ஆனால் யாருக்கும் நினைவில் இல்லை

அந்த நல்ல மனிதரான விபி சிங்கிற்கு அஞ்சலிகள்…

அதுவும் அம்பேத்கருக்கு பாரத ரத்னா கொடுத்து அவர் படத்தை நாடாளுமன்றத்தில் திறந்த ஒரே பிரதமர் என்ற வகையில் விபி சிங் மிக உயர்ந்து நிற்கின்றார்.

அம்பேத்கரை நாடாளுமன்றத்திற்கு கொண்டு சென்றது விபி சிங் என்ற ஒரு விஷயத்தில் அடங்கி இருக்கின்றது டெல்லியின் மகா சர்ச்சைகுரிய சாதி அரசியல்

மறக்க முடியா மகத்தான மனிதருக்கு நினைவஞ்சலிகள்

ஜெயலலிதாவின் மகள் என இளம்பெண் உரிமை கோரி வழக்கு : செய்தி

ஜெயலலிதாவின் மகள் என இளம்பெண் உரிமை கோரி வழக்கு : செய்தி

ஜெயா செத்தபின் சிலர் இப்படி கிளம்பினார்கள், இம்முறை இந்த அம்ருதா வந்திருக்கின்றார், டி.என்.ஏ டெஸ்ட்டுக்கு எல்லாம் தயாராக இருக்கின்றாராம்

சரி ஒரு வாதத்திற்கு ஜெயா மகள் என வைத்து டி.என்.ஏ டெஸ்ட் செய்தாலும் தந்தை யார்? என்பதற்கு எந்த கல்லறையினை சென்று தோண்டுவது?

தாய் ஜெயலலிதா என சொல்லும் நபர், தந்தை யாரென சொல்லவே இல்லை, புராணங்களில் வரும் பிறவி போலிருக்கின்றது, ஆனால் சட்டத்தில் தந்தை யாரென நிரூபித்தாக வேண்டும்

இதற்கெல்லாம் என்ன தீர்வு கொடுக்கலாம்? இனி அவரின் மகள் என வருபவர்களை இப்படித்தான் அடிக்க வேண்டும்

ஜெயா ஒரு ஊழல் குற்றவாளி, அவள் ரத்த உறவு என சொல்லிகொண்டு வருபவர்களுக்கு எல்லாம் 5 கோடி அபராதமும், சம்பளம் வாங்காமல் 50 ஆண்டுகள் அரசு வேலை செய்யவேண்டும் என்றும் உடனே தீர்ப்பு சொல்லிவிட வேண்டும்

ஒருத்தி நீதிமன்ற படி ஏறுவாள்?

பெங்களூரில் வழக்காம், அநேகமாக சசிகலா எனக்கு குழந்தைகளே இல்லை, வருங்காலத்தில் யார் வந்தாலும் ஏற்றுகொள்ள கூடாது, இது என் முன் இருக்கும் வக்கீல் மீது சத்தியம், சத்தியம், சத்தியம் என மும்முறை ஓங்கி அடித்து உயில் எழுதிகொண்டிருக்கலாம்.

புரூஸ்லீ போல சாதிக்க யாருமில்லை..

Image may contain: 1 person

அந்த தற்காப்பு கலை தமிழகத்தில் இருந்திருக்கின்றது, மன்னர்களுக்கு மட்டும் தெரிந்த கலையாய் இருந்திருக்கின்றது, பின் புத்தமத காலத்தில் புத்த குருக்கள் எல்லாம் படித்திருக்கின்றார்கள்பு

தமிழக புத்த குருவான போதிதர்மன் அதில் தேர்ந்திருக்கின்றார், சீனா சென்ற அவர் அம்மக்களுக்கு அதனை எல்லாம் கற்றுகொடுத்திருக்கின்றார்

அந்த கலை அங்கு அழியாமல் காலம் காலமாக தொடரபட்டது, அப்படி கசடற‌ கற்ற கலைஞன் தான் புரூஸ்லி

அவன் அமெரிக்காவில்தான் பிறந்தான், ஆனால் சீன தந்தை அவனை ஹாங்காங்கிற்கு கொண்டுசென்று வளர்த்தார். அவனோ பள்ளிக்கு செல்லும் பொழுதெல்லாம் நாலுவார்த்தை கற்றானோ இல்லையோ 4 பேரை அடிக்க மறக்காமல் கற்றுகொண்டான்

அவ்வப்போது குழந்தை நட்சத்திரமாக ஹாங்காங் படத்திலும் வந்தான், ஆனால் முழுநேர தொழில் மற்றும் பொழுதுபோக்கு எங்காவது தெருவில் சண்டையிடுவது, போதாகுறைக்கு குங்பூ வேறு கற்றுவிட்டான், அட்டகாசம் தாளவில்லை

அவன் தாதாவாக வேறு மாறிவிட்டான், அவனுக்கு கீழ் 10 அடியாள்.

பொறுத்துபார்த்த தந்தை அவன் கையில் 100 டாலரை கொடுத்து அமெரிக்காவிற்கு விரட்டினார், காரணம் பொழுதுதோறும் பஞ்சாயத்து என்றால் எப்படி?

அமெரிக்கா சென்றவனுக்கு சும்மா இருக்க முடியவில்லை, சரி இங்கு அடிக்கமுடியாது எல்லோரும் இடிமாடு போல இருக்கின்றார்கள், சண்டை சொல்லிகொடுக்கலாம்

குங்பூ கராத்தே டேக்வாண்டோ எல்லாம் கலந்து ஜீட்குண்டோ என அவனே ஒரு சண்டை கலை தொடங்கினான்

நல்ல மாஸ்டர்தான், ஆனால் அவனின் ஆசை சினிமாவில் நடிக்க தூண்டியது, ஹாலிவுட்டில் நடிக்க சில உடலமைப்பு அவசியம், முதலில் உயரமாக நிறமாக கட்டுடலோடு நல்ல முகவெட்டில் இருக்கவேண்டும், ஐரோப்பியர் அல்லது அமெரிக்கராக இருக்கவேண்டும் என பல சட்டங்கள்

ஒடுங்கிய தேகமும், இடுங்கிய கண்ணும் கொண்ட அந்த சீன இளைஞனை பரிகாசம் செய்தே விரட்டினார்கள், அவன் சீறியபடி சொன்னான் உங்களுக்கெல்லாம் நான் தான் போட்டி

யார் நம்புவார்கள்? அந்த லீயினை விரட்டியே விட்டார்கள்

ஹாங்காங் திரும்பிய லீ, புரூஸ் லீயானான். தி பிக் பாஸ், ஸ்பிட் ஆஃப் பியூரி ஆகிய இரு படங்களில் நடித்தார், பெயர் சொன்ன படங்கள்தான், ஆனால் ஹாலிவுட் கண்டுகொள்ளவில்லை

ஓஓ அப்படியா இதோ பார் என “ரிட்டன் ஆப் தி டிராகன்” படத்தினை அவரே எடுத்தார், அது உலகெமெல்லாம் மக்களை கவர்ந்தது, குறிப்பாக இளைஞர்களை

கேமரா வித்தைகள் இல்லாமல் அதிவேகமாக அதேநேரத்தில் தத்ரூபமாக சண்டைப் போடக்கூடிய திறமைசாலி என்பதை அந்தப்படம் அமெரிக்கர்களுக்கு உணர்த்தியது.

“யாராய்யா இவன் உடலை அப்படி வைத்திருக்கின்றான், எல்லா ஆயுதமும் அவன் கையில் அப்படி சுழல்கின்றது, ஆயுதம் இல்லாமலே எல்லா ஆயுதமும் சமாளிக்கின்றான் என அதிசயத்தது” உலகம்

ஆம் அழகாலும், நடிப்பாலும் , கேமரா கோணத்தாலும் இயங்கிய மேற்கு சினிமாவினை தன் சண்டைகாட்சி ஒன்றால் உடைத்து அதன் போக்கினை மாற்றினார் புருஸ் லீ

அமெரிக்காவில் அவர் படங்கள் பிய்த்துகொண்டு ஓடின, எங்கு பார்த்தாலும் புருஸ் லீ

அமெரிக்க முதலாளிகள் அவர்முன் குனிந்து நின்றார்கள், ஹாலிவுட் படத்தில் நடிக்க அழைத்தார்கள், எந்த ஹாலிவுட் அவரை விரட்டியதோ அதே ஹாலிவுட் காலில் விழுந்து அழைத்தது

எண்டர் தி டிராகன் என சொல்லி ஹாலிவுட்டில் இரு மாதத்தில் தயாரானது, வேலை முடிந்தது இன்னும் இரு வாரத்தில் படம் ரீலிஸ் என்றார்கள்

புரூஸ்லி தன் இன்னொரு படமான கேம் ஆப் டெத் என்பதை தொடங்கியிருந்தார், அந்த வேலை விஷயமாக அவர் வெளியே சென்றபொழுதுதான் அவரின் மரணம் நிகழ்ந்தது

எந்த மனிதனுக்கும் வாய்க்க கூடாத சாபம் அவருக்கு வாய்த்த்திருந்தது, ஆம் அவர் இறந்த பின்புதான் “எண்டர் தி டிராகன்” படம் வெளிவந்தது, வெற்றி என்றால் பெரும் வெற்றி

ஆனால் அதனை காணவோ, அதனை கொண்டாடவோ புருஸ்லி இல்லை

அவன் ஹாலிவுட்டில் நடித்தது அந்த ஒரு படம் தான், ஆனால் சாகா புகழை அவனுக்கு கொடுத்தது, அதன் பின் உலகெங்கும் அவனால் கராத்தே, குங்பூ பள்ளிகள் தொடங்கபட்டன, எல்லா பள்ளிகளிலும் புருஸ் லீ படம் இருந்தது, இன்றும் இருக்கின்றது

உலகெல்லாம் அந்த தற்காப்பு கலைகளுக்கு பெரும் அடையாளம் கொடுத்த அவன் கொஞ்ச நாள் இருந்திருப்பானானால் இன்னும் பெரும் உயரம் சென்றிருப்பான்

அவன் சாகும் பொழுது வயது வெறும் 32.

இன்றுவரை அவன் சாவு மர்மமே, அவன் புகழை தாங்கமுடியாத சில எதிரிகள் அவன் காதலியின் மூலம் விஷம் கொடுத்தனர், சண்டையில் தலையில் அடிபட்டு இறந்தான் என பல மர்ம கதைகள் வந்தாலும் அப்பல்லோ மர்மம் போல புரூஸ் லீ மர்மமும் தொடர்கின்றது

ஹாங்காங் அரசு பெரும் முயற்சி எடுத்தும் அந்த மர்மம் தீரவில்லை

ஹாலிவுட்டில் ஒரே ஒரு படம் நடித்து, அது வெளிவருவதற்குள் தன் ஆயுளை புரூஸ் லீ முடித்து கொண்டாலும் , தன் ஆயுள் முழுவதும் அடையவேண்டிய புகழை அந்த ஒரு படத்திலே அடைந்துவிட்டார்.

இன்றும் ஹாங்காங்கில் அவர் சிறுவயதில் தெரு சண்டையிட்ட இடத்தில் அவருக்கு சிலை உண்டு, அதனை கடந்து போகும் யாரும் கண்ணீர் விட தவறுவதில்லை

தெருச்சண்டையில் பெரும் கில்லாடிகளில் இப்படிபட்டவர்களும் இருக்கலாம், நமது ஊர் தெருசண்டைக்காரர் எல்லாம் சாதிக்காக சண்டையிட்டு செத்துபோவதோடு சரி

புரூஸ்லீ போல சாதிக்க அவர்களுக்கு சிந்தனையுமில்லை, ஆர்வமுமில்லை

இன்று அந்த அற்புத சண்டை கலைஞனின் பிறந்த நாள், பெரும் புகழை அடைந்துவிட்ட அந்த மகா கலைஞன் உலகிற்கு சொன்னது இதுதான்

“பலம் என்றோ, அழகு என்றோ மனிதனிடம் ஒன்றும் இல்லை. மனமும் உடல் உறுதியும் நம்பிக்கையுமே மகா முக்கியம், அது இருந்தால் போதும் எதனையும் சாதிக்கலாம்”

 

நீங்கள் காங்கிரஸ்காரரோ என்கின்றார் ஒருவர்

அய்யா இலங்கையில் சம உரிமை கொடுத்திருந்தால் ஏன் சண்டை வரபோகின்றது, அதனை நீங்கள் தந்திரமாக மறைக்கின்றீர்கள் , நீங்கள் காங்கிரஸ்காரரோ என்கின்றார் ஒருவர்

சிங்கள மக்கள் தொகையில் ஈழதமிழர் 15% முதல் 20% வரை வருவார்கள், வெள்ளையன் ஆண்ட காலத்தில் சிக்கல் இல்லை யாழ்பாணத்தார் படித்தார்கள் நல்ல பதவிக்கு சென்றார்கள்

வெள்ளையன் கிளம்பியதும் வோட்டரசியல் அங்கு ஆரம்பமானது, தாழ கிடந்த பெரும்பானை சிங்கள இனத்தை முன்னிறுத்தும் திட்டம் தொடங்கிற்று

அது இட ஒதுக்கீடு அது இது என வந்து கல்விக்கும் வந்தது, யாழ்பாண மாணவன் பெரும் மதிப்பெண் குவிக்க வேண்டிய இடத்தில் சிங்களன் குறைவாக எடுத்தால் போதும்

இது அநீதி என்றால் இந்தியாவில் பிராமண இனத்திற்கு இழைக்கபட்டதும் அநீதியே

சிங்களனை இவ்விஷயத்திற்கு குற்றம் சாட்டினால் இந்திய அமைப்பையும் சாடி தீர்க்க வேண்டும்?

ஆனால் யாராவது சொல்வார்களா?

இந்தியாவில் இட ஒதுக்கீடு உரிமையாம், செய்தே தீரவேண்டுமாம், ஆனால் சிங்களன் செய்தால் அது தமிழின அழிப்பாம் , கொடுமையாம்

அங்கு போராட வந்த மாணவர்கள் திசை திரும்ப, அவர்களுக்கு ஆதரவாக கடத்தல், கொள்ளை கும்பல்கள் களமிறங்க, அந்த போராட்டம் அப்படியே குண்டர் கும்பலிடம் சென்றது

இந்த கும்பல்களை தங்கள் சுயலாபத்திற்காக வரவேற்று பயன்படுத்தி வாங்கிகட்டிகொண்டனர் ஈழதமிழ் அரசியல்வாதிகள்

அங்கும் ஏராளமான குண்டர் கும்பல்கள் இருந்தன, அக்கும்பல் ஒன்றில் சிறுவயதிலிருந்தே வளர்ந்தவர் பிரபாகரன்

பின் அவரின் போராட்டமும் குண்டர் கும்பலுக்கும் சிங்கள ராணுவத்திற்கும் இடையில் நடந்த “கேங்க் வார்” போலவே நடந்து முடிந்தும் விட்டது

ஈழபோராட்டம் தொடங்கிய விதமும், முடிந்த விதமும் இதுதான்

சிங்களன் கொடுமை என சொல்லவரும் முன் அங்கிருந்த நிலையினை பாருங்கள்

இங்கு பிராமணர் இடத்தில் ஈழதமிழரும், சிங்கள இடத்தில் மற்ற சாதியினரும் இருந்தார்கள். கல்வியால் வாழ்ந்த யாழ்பாணம் பொங்கி எழ போராட்டம் வெடித்தது

இங்கு பிராமணாள் ஒரு சத்தமுமில்லை, அவர்கள் கத்தவும் மாட்டார்கள் அதனால் இங்கு அமைதி

இலங்கையில் எல்லோருக்கும் சமவாய்ப்பும், சம உரிமையும் கிடைக்க்க வெண்டுமாம், ஆனால் இந்தியாவில் மட்டும் பட்டியல் போட்டு அடிப்பார்களாம், அது புரட்சியாம்

இட ஒதுக்கீட்டை சிங்களன் செய்தால் கொடுமை எனவும், இங்கு நடந்தால் புரட்சி எனவும் சொல்லிகொள்வதெல்லாம் கடைந்தெடுத்த அயோக்கியதனம்

இதெல்லாம் தேர்தலுக்கான மோசடி

Image may contain: 1 person, text

வடக்கத்தியர்கள் தமிழரின் பெருமையினை மறைப்பார்கள், அவர்களுக்கு தமிழனை பிடிக்காது , தமிழக பெருமை பிடிக்காது என சொல்லிகொண்டிருந்தவன் எல்லாம் மோடி சோழ அரசை புகழ்ந்ததும் , பாட்டை மாற்றி பாட ஆரம்பித்துவிட்டான் இப்படி.

“இதெல்லாம் தேர்தலுக்கான மோசடி”

சீமான் முதல்வராகட்டும் அப்புறம் உங்களுக்கு இருக்குண்ணே…

Image may contain: 2 people, people smiling

“அண்ணே பிரபாகரனை விமர்சிங்க, ஆனால் அவர் ஏன் துப்பாக்கி தூக்கினார் தெரியுமா? சிங்களன் அட்டகாசம், அதனை நீங்கள் சொல்லவே இல்லை

பிரபாகரன் மட்டும்தான் துப்பாக்கி தூக்கினாரா? வேறு எல்லோரும் வேறு எதனை தூக்கினார்கள்?

சும்மா சொல்லாதீங்கண்ணே, பிரபாகரன் மட்டும்தான் துப்பாக்கி எடுத்தார், அவருக்கு மட்டும்தான் தைரியம் இருந்தது, வேற ஒருத்தனும் எடுக்கவே இல்லை

இந்த குட்டி மணி, தங்கதுரை?

யார்ணே அது வீரப்பன் கூட இருந்தாங்களா?

சிவகுமரன்?

அவர் யார்ணே சினிமா நடிகரா?

இந்த சபாரத்னம், உமா மகேஸ்வரன், பத்மநாபா?

அப்படி யாருமே இல்லண்ணே, தைரியமாக துப்பாக்கி தூக்கிய ஒரே தமிழன் பிரபாகரன் தான்

சரி போராளிகள்தான் தெரியவில்லை, இந்த சிந்தனையாளர்கான ராஜனி, நீலன் திருச்செல்வம், அமிர்தலிங்கம் போன்றோராவது தெரியுமா?

தெரியாது

அவங்கெல்லாம் எப்படி செத்தாங்கண்ணு தெரியுமா?

போர்ல அதெல்லாம் சஜம்ணே

அடேய் அவங்க சிங்கணால் கொல்லபட்டால் நியாயம், புலிகளே கொன்றால் என்னடா நியாயம்?

அண்ணே எப்படியும் சாக போறாங்க, யார் கொன்னா என்னண்ணே விடுங்க‌ , அண்ணே நேதாஜி துப்பாக்கி தூக்கல அப்படித்தான்

அடேய் நேதாஜி நாட்டுக்கு வெளிய இருந்து போராடுனார், காந்திக்கு குண்டு அனுப்பினாரா? இல்ல ஜெர்மன் ஜப்பான் காரன்கிட்ட பகைச்சாரா? அந்த மனுஷன உங்க கூட சேர்த்து பேசினால் குரலவளைய கடிச்சிருவேன் ஓடிரு

ஹிஹிஹிஹி நான் சொல்ல வந்தது என்னண்ணா?

என்னதாண்டா சொல்ல போறே?

இருந்த ஒரே ஒருத்தர் பிரபாகரன், அவரை கைதூக்கிவிட்டது புரட்சி தலைவர்

ஓஹோ அப்புறம்?

ஈழதமிழர் நாடு அடைந்து பிரபாகரன் எனும் தமிழர் ஆண்டுவிடுவார்னு இந்தியா ஓடிபோய் தடுத்தது, இந்தியா தலையிடலண்ணா எப்பவோ நாடு கிடைச்சிருக்கும்

சரி இந்தியா எப்போ தலையிட்டது?

சரியா தெரிலண்ணே, ஆனா முழு இலங்கையும் புலிகள் பிடிச்சிருவாங்கண்ணு பயந்து ஓடி போய் தடுத்துட்டு

ஓஓ அப்படியே புலிகள் இந்தியாவினை பிடிச்சி, அப்புறம் பாகிஸ்தானை, சீனாவை எல்லாம் பிடிச்சிருவாங்கண்ணு பயந்து, அப்படித்தானே

ஆமாண்ணே அதே தான்

அடேய், ஒண்ணும் தெரியலண்ணா ஓடிப்போயிரு, வடமாராட்சில பிரபாகரனை சிங்களபடை சுற்றி முள்ளிவாய்க்கால் போல சங்கு ஊதும்போதுதாண்டா இந்தியா உள்ள போச்சுது

அதுசரிண்ணே, போய்ட்டு வந்திரவேண்டிதான, எதுக்கு அங்க அமைதிபடை போகணும்?

பின்ன, சிங்களன் போட்டு அடிக்கிறான், புலிகளால சமாளிக்க முடியல இங்க அகதிகளா மக்கள் ஓடிவாரங்க, அதனால சண்டை நிறுத்தம் செய்ய அமைதிபடை போனது

இல்லண்ணே, அது ஆக்கிரமிப்பு படை, கற்பழிப்பு படை, சாத்தானின் படை

ஏண்டா அங்க சண்டை யாருக்க்கும் ? யாருக்கும்?

சிங்களன் தமிழனை அடிச்சான், தமிழன் திருப்பி அடிச்சான் சமரசம் செய்ய இந்திய படை போனது

அப்படியானால் புலிகள் யாருக்கு துணை செய்திருக்க வேண்டும்?

இந்தியபடைக்கு

பின் ஏன் சண்டையிட்டார்கள்? அப்படி செய்திருந்தால் இந்த சர்சை எல்லாம் வந்திருக்குமா? புலிகள் இந்திய சண்டை நடந்தபின்புதான் இம்மாதிரி செய்திகள் வந்தன

ம்ம் ம்ம் இந்தியபடை அங்கேயே இருந்தா
பின் எப்படிண்ணே தனியா நாடு வாங்குறது, அதான் அடிச்சோம், மானமுள்ள இனம்ணே

ஏது இந்தியா எதிரிநாடு அதனால் உறவே கிடையாது, இந்திய ராணுவத்தோடு சண்டையிடுவோம் ஆனால் இந்தியாவின் தமிழகத்தில் ரகசியமாக வந்து போவோம், தங்கி இருப்போம் என்பதா? இதா மானம்? மானம்ணா என்னணு தெரியுமாடா? சரி, அடிச்சீங்க நாங்க வந்துட்டோம், பின் நீங்களே சிங்களன அடிச்சி நாடு பிடிச்சிருக்க வேண்டியதான, நாங்கதான் அதன்பின் அந்த பக்கமே வரலியே

அடிச்சோம்ணே, எங்க வீரவரலாறு படிங்க‌

என்னடா கிழிச்சீங்க, சந்திரிகா அடிச்ச அடியில யாழ்பாணத்த போட்டு ஓடிட்டீங்க, அதன் பின் என்றாவது அதை மீட்க முடிந்ததா?

ம்ம்ம் அது தந்திரம்ணே

மண்ணாங்கட்டி, தோற்றால் தந்திரமா? ஏதோ முழு இலங்கையும் நீங்க பிடிச்சு வைத்திருந்தது போலவும் இந்தியா வந்து கெடுத்தது போலவும் பேசிகிட்டிருக்க?

அப்படி இல்லண்ணே இந்தியா கெடுத்துட்டு, சிங்களனுக்கு ஆயுதம் எல்லாம் கொடுத்துட்டு

ஏன் நீங்களும் உலக நாடுகள்கிட்ட கேட்கலாமே, ஒரு நண்பனும் இல்லையா? சிங்களனுக்கு உலகமே கொடுக்க உங்களுக்கு ஏன் ஒரு பயலும் இல்ல?

உலகத்துக்கே எங்கள பார்த்து பொறாமைண்ணே

அட மண்டையா, சரி என்னடா செய்திருக்கணும்?

நாடு கொடுத்து பிரபாகரன அதிபர் ஆக்கிருக்கணும்

ஏன்?

அவர் துப்பாக்கி தூக்கி போராடுனார்ணே, குறிதவறாம சுட்டாரு

அவர் பாண்டிபஜார்ல குறிதவறாம சுட்டது ஊருக்கே தெரியும், ஏண்டா துப்பாக்கி தூக்கினவனுக்கு எல்லாம் நாடுண்ணா, உலகத்துல எத்தனை ஆயிரம் நாடு இருக்கும் தெரியுமா? ஆணானபட்ட அராபத்தே சுயாட்சிக்கு வந்தார், நீங்கெல்லாம் அவரை விட பெருசாடா?

அட போங்கண்ணே, எங்க வீரம் வேற அதுக்கு நாடு கொடுத்தே தீரணும்

எது பொட்டபுள்ள மேல குண்டு கட்டி அனுப்புறதா?

அது தந்திரம்ணே

ஓஹோ, அப்போ இந்தியா என்ன செய்திருக்கணும்?

அப்படி கேளுங்கண்ணே, புலிகள் இலங்கை ராணுவத்தை ஜெயிச்சா கண்டுக்காம இருக்கணும், புலிகள் தோற்றா ஓடி வந்து காப்பத்தணும்

ஆனா காப்பாத்திட்டு இந்தியா சொன்னத ஏத்துக்க மாட்டீங்க?

நாங்க ஏன் ஏத்துக்கணும், தேசிய இனம்ணே. அதனால நாங்க இந்தியா சொன்னத எல்லாம் கேட்கவே மாட்டோம், ஏன் இந்தியாவில் கொலை எல்லாம் செய்வோம், மீறி இந்திய ராணுவம் வந்தா அடிப்போம், யாரையும் கொல்வோம் அதெல்லாம் போராட்டம்ணே

ஓஹோ, பின் எப்படி இந்தியா வரும்?

வரணும்னே, எங்களுக்கு ஆபத்துண்ண வரணும் காப்பாத்தி விட்டு போய்ட்டே இருக்கணும், நாங்க என்ன செய்தாலும் கண்டுக்க கூடாது

ஒரு பெரிய நாடு ஒரு சுண்டையாய் நாட்டுல கடுகு மாதிரி இருந்த குரூப் பின்னால இப்படி போகுமாடா? போன இந்தியா எங்கயாவது தலைகாட்ட முடியுமா? பாகிஸ்தான் டெரரிஸ்ட் எல்லாம் டீ குடிக்க கூப்பிடமாட்டானா?

அண்ணே நீங்க தமிழின துரோகி, உங்கள குறிச்சி வச்சிருக்கோம், சீமான் முதல்வராகட்டும் அப்புறம் உங்களுக்கு இருக்குண்ணே”