மதுரை மாட்டுதாவணி பேருந்து நிலையத்தை ….

மதுரை மாட்டுதாவணி பேருந்து நிலையத்தை , எம்ஜிஆர் பேருந்து நிலையமாக பழனிச்சாமி அரசு மாற்றிவிட்டதாம், சில சர்ச்சைகள் வருகின்றன‌

மாட்டு தாவணி என்பது மாட்டுக்கு தாவணி, சேலை எல்லாம் அணிவித்த இடம் அல்ல, அது தமிழரின் தொன்மையான பெயர்

அக்காலத்தில் மாட்டுவண்டிகளே பிராதனம், கால்நடை என்றால் அதற்கு புல், நீர் ஓய்வு எல்லாம் வழங்க வேண்டும் அல்லவா? அப்படி குறிப்பிட்ட இடைவெளியில் தாவாணிகள் இருந்தன‌

அங்கு ஓய்வெடுத்து மாட்டுக்கு தீனி போட்டு இளைப்பாற்றுவார்கள். மாட்டின் தாகத்திற்கு நீரும் தீனியும் கிடைக்கும் இடம் மாட்டு தாவாணி ஆயிற்று

காலம் கடந்தபின்னும் மதுரையில் அப்பெயர் அப்படியே இருந்தது, கலைஞர் கூட பழம்பெருமை மாறாமல் அது மாட்டுதாவணி பேருந்து நிலையம் என பெயரிட்டார்

இப்பொழுது பழனிச்சாமி அரசு அதற்கு எம்ஜிஆர் பேருந்து நிலையம் என பெயரிட்டுவிட்டதாம்

மாட்டு பெயரில் அழைக்கபட்ட பஸ்நிலையத்திற்கு ராமசந்திரன் பெயரினை என்ன அர்த்தத்தில் சூட்டினார்கள் என தெரியவில்லை, சில அர்த்தம் இருந்தாலும் இருக்கலாம்

இப்பொழுது திமுக இதற்கு கண்டனம் தெரிவிக்கின்றது, எப்படி கலைஞர் சூட்டிய பெயரை மாற்றலாம் என்கின்றார்கள்

கலைஞர் மாற்றா பெயர்களா?

மவுண்ட் ரோடு எனும் பாரம்பரிய சாலை “அண்ணா சாலை” ஆனது உட்பட ஏகபட்ட ஞானஸ்நானத்தை செய்தவர் கலைஞர்

அவர் காட்டிய வழியில்தான் இதுவும் நடக்கின்றது,

சர்சிவி ராமன் பெயரிலோ, சீனிவாச ராமானுஜன் பெயரிலோ அமைந்திருக்க வேண்டிய பல்கலைழகத்தை அண்ணா பல்கலைகழகம் என மாற்றியதே ராமசந்திரன்

பின் அவரின் அடிப்பொடிகள் எப்படி இருக்கும்?

Advertisements

உருகுவே நாட்டில் ஒரு வித்தியாசமான சம்பவம்

உருகுவே நாட்டில் வித்தியாசமான சம்பவம் நடந்திருக்கின்றது, அதாவது ஒரு பெண் தன் படத்தினை பதிவேற்றியிருக்கின்றார், லைக்குகள் குவிந்திருக்கின்றன‌

(எந்த நாட்டிலும் இப்படித்தான் இருக்கும் போல..)

இதனால் ஆத்திரபட்ட கணவன் அந்த முகத்திலே குத்தி அவளை காயபடுத்தியிருக்கின்றான், அவள் இப்போது சிகிச்சையில் இருக்கின்றார்

கணவனை காவல்துறை கைதுசெய்து விசாரித்தபொழுது உண்மை தெரிந்திருக்கின்றது, அதுவும் “இப்போ படத்தை போடு, இந்த மூஞ்சியினை போடு..” என சொல்லி சொல்லி அடித்திருக்கின்றான்

ஆச்சரியமாக அடிபட்ட முகம்தான் உலகெல்லாம் பரவியிருக்கின்றது, உருகுவே நாட்டு முகநூல்காரன் பார்த்த முகத்தை இப்பொழுது உலகமே பார்த்துகொண்டிருப்பதை பார்த்து அந்த கணவன் பல்லை கடித்துகொண்டிருக்கின்றான்

இங்கு சும்மாவே பெண்கள் தங்கள் படத்தினை வைக்க நூறுமுறை யோசிப்பார்கள், இனி சுத்தம்

ஆனால் Devi Somasundaram போன்றவர்களின் வருங்கால கணவர்கள் கிழிந்த முகத்துடன் பின்னாளில் வர வாய்ப்பிருக்கின்றது.

அதற்கு முன்பு திருமண நிச்சயம் செய்தபின்னும் நயன் பதிவுகளை போட்டுகொண்டிருக்கும் Babu Rao என்பவர் படம் முகம் வீங்கிய நிலையில் வந்தாலும் வரலாம்.

வடமாவட்டங்களை பற்றி எறிய செய்யும் செய்தி ஒன்று கிளம்புகின்றது

வடமாவட்டங்களை பற்றி எறிய செய்யும் செய்தி ஒன்று கிளம்புகின்றது இது எதில் முடியுமோ தெரியவில்லை, அவசர நடவடிக்கையில் அரசு இறங்கினால் நல்லது

அதாவது ஒரு இளைஞன் கொல்லபட்டிருக்கின்றான் அதுவும் எரித்து கொல்லபட்டிருக்கின்றான், மிக கொடூரமாக கொல்லபட்டிருக்கின்றான்

இது விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் செய்த கொலை என ராமதாஸ் வரிந்து கட்டுகின்றார். விடுதலை சிறுத்தை கட்சியினர் தூண்டுதல் பேரில் அடாவடியில் ஈடுபட்டவர்களை அந்த இளைஞர் கண்டித்தார் அதனால் கொன்றிருக்கின்றார்கள், இதனை சும்மா விட போவதில்லை என சீறுகின்றார் ராமதாஸ்

அவருக்கு மிக அட்டகாசமான வேளை வந்து வேலை கிடைத்துவிட்டது

திருமாவளவனோ அவசரபட்டோ இல்லை தன் கட்சியினர் சொல்லிகொடுத்த தவறான தகவலில் சறுக்கிவிட்டார்

அந்த இளைஞர் கொல்லபடவில்லை மாறாக தன்னை தானே கொளுத்தி செத்தான் என திருமா அறிக்கைவிட்டிருக்கின்றார், போதாதா? கொல்வதையும் கொன்றுவிட்டு அவனே செத்தான் என்பதா? என பாமக கொதிக்கின்றது

நிலமை சிக்கலாகின்றது, வடமாவட்டங்கள் மீது மிக அவசிய நடவடிக்கை எடுப்பது நல்லது, அதற்காக அங்கு எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடத்தி நிலமையினை சரி செய்வோமா? என்ற அளவில் அமைச்சர்கள் யோசிக்காமல் இருக்க வேண்டும்

கொல்லபட்டவர் தலித் இல்லை என்பது மட்டும் புரிகின்றது, இதுவே தலித் கொல்லபட்டிருந்தால் மோடி ஆட்சி, உயர்சாதிவெறி என கிளம்பியிருப்பார்கள், யாரெல்லாமோ குதிப்பார்கள்,

இப்பொழுது கொலைகுற்றம் சாட்டபட்டோர் தலித் என்பதால் எல்லோரும் மகா அமைதி

விடுதலை சிறுத்தைகளும் பாமகாவினரும் ஒரு மாதிரி எதிர் எதிர் திரளும் நேரத்தில் தலித்துக்களின் புது காவலரான ரஞ்சித் என்பவரை காணவில்லை,

இதே தலித் கொல்லபட்டிருந்தால் போர்பரணி பாடி கிளம்பிருப்பார்.

அங்கிள் சைமன் எல்லாம் இதில் வரமாட்டார், “ஒரு தமிழ்பிள்ளை இன்னொரு தமிழ்பிள்ளையினை கொன்றிருக்கின்றது, இதனை குடும்ப சண்டையாகத்தான் பார்க்க வேண்டும், இதே கொலையினை
தெலுங்கன் சிங்களன் போன்ற அந்நியன் கொன்றிருந்தால் நான் விடமாட்டேன்” என சொல்லிவிடுவது அவர் பாணி.

அன்புசெழியன் தலைமறைவானதில் பலருக்கு கொண்டாட்டம்

அன்புசெழியன் தலைமறைவானதில் பலருக்கு கொண்டாட்டம், முதல் படத்தில் அன்புவிடம் சிக்கிவிட்டு இரண்டாம் படத்தை அன்புசெழியனால் ரிலீஸ் செய்ய முடியாமல் தவித்தவர்கள் படமெல்லாம் வரபோகின்றதாம்

அதாவது என் கடனை கொடுத்துவிட்டு படத்தை வெளியிடு, இல்லாவிட்டால் மதுரை பாஷையில் சாகும் வரை திட்டுவேன், திட்டியே கொல்வேன் என மிரட்டி தடுக்கபட்ட படங்கள் அவை ..

(மனிதர் அப்படித்தான் செய்திருக்கின்றார், கொலை எல்லாம், அடித்து சித்திரவதை எல்லாம் செய்யவே இல்லை மாறாக அவ்வளவு அவமானமாக திட்டுவாராம், உடனே சிலர் செத்துவிடுவார்களாம்)

இப்போதிருக்கும் நிலையில் அவற்றை தடுத்தால் அன்புசெழியன் மீது என்கவுண்டர் வரை நடக்கும் என்பதால் அவர் தரப்பு ” எப்படியும் நாசமாய் போங்கள், எங்கள் பணத்தை கொடுக்காமல் வெளியிடபடும் படம் ஓடவே ஓடாது.” என சொல்லிவிட்டு அழுதுகொண்டே அனுமதிக்கின்றதாம்.

சில படங்கள் வாடிவாசலில் விடபடும் காளை போல துள்ளிகுதித்து வரலாம் என்கின்றார்கள், வரும் எண்ணிக்கையினை பொறுத்து அன்புசெழியனின் பராகிரமம் தெரியலாம்

அது இருக்கட்டும், பேசியே கொல்லும் அன்புசெழியன் அப்படி என்ன பேசுவார்? அதை கேட்டு சாகெல்லாம் செய்கின்றார்களாம்

அன்புசெழியனை பிடித்தால் தண்டிக்க எல்லாம் வேண்டாம் கலைஞர் முன்போ (அவர் நலம்பெற்ற உடன்) அல்லது தமிழிசை முன் பெர்மானன்ஸ் செய்ய வைக்க வேண்டும்

அன்பு செழியனால் முடிந்தமட்டும் திட்ட வைக்க வேண்டும்

இருவரும் அசருவார்களா? கொஞ்சமும் கலங்குவார்களா? என்னதான் அன்புசெழியன் பேசினாலும் கொஞ்சமும் அசைவார்களா? நெவர், மாறாக புன்னகைத்து விட்டு அவ்வளவுதானா, சோடா குடித்துவிட்டு தொடருகின்றீர்களா? என்பார்கள்.

அதன்பின் என்ன, அன்புசெழியனே தூக்கு கயிறு தேடி ஓடுவாரா மட்டாரா?

மீன்கள் இதை கேட்டால் உயிரோடு வந்து சிரித்துவிட்டு செத்துபோகும்

அடையாற்றில் மட்டுமல்ல, தென்கிழக்கு ஆசியா எங்கும் கடலோரங்களில் திமிங்கலம் ஒதுங்குவதும், டால்பின்கள் ஒதுங்குவதுமாகவே இருக்கின்றது

பாலி தீவில் எரிமலை வெடித்து முடித்து அடுத்த எரிமலை வெடிப்பதற்காக தயாராகின்றது, மக்கள் எல்லாம் பாதுகாப்பான இடத்திற்கு கொண்டுசெல்ல படுகின்றார்கள்

எரிமலைகள் தரைமேல் இருக்கும் மலையில் மட்டும்தான் வெடிக்க வேண்டிய அவசியமில்லை, கடலுக்குள்ளும் சீறும் எரிமலைகள் உண்டு

ஆக என்னவோ தென்கிழக்கு ஆசிய பக்கம் நடக்கின்றது , சிலருக்கு தெரியும் சொல்லமாட்டார்கள்

ஆனால் அதிகாரபூர்வ அறிவிப்புகள் வரும்வரை தேவையின்றி அஞ்சுவதில் அர்த்தமில்லை, மீன்கள் சாக ஏராளமான காரணங்கள் உண்டு எனினும் நல்ல நீரும், கடல் நீரும் கலந்ததால் மீன்கள் செத்தன என அமைச்சர சொல்வது காமெடி ரகம்

அந்த மீன்கள் இதை கேட்டால் உயிரோடு வந்து சிரித்துவிட்டு செத்துபோகும்.

ஐன்ஸ்டீன், நியூட்டன், டார்வின் உட்பட எந்த விஞ்ஞானியும் சாகவில்லை, தமிழக அமைச்சர்கள் உருவில் வாழ்ந்துகொண்டே இருக்கின்றார்கள், இந்த உலகம் பொறாமை காரணமாக அவர்களை கண்டு கொள்ள மறுக்கின்றது.

எழுத தொடங்காதே …

எழுத தொடங்காதே, எழுத்து என்பது சொரி , சிரங்கு போன்றது , அது ஒட்டினால் விடாது. எழுதி இச்சமூகம் திருந்தபோவதுமில்லை எழுதி நீ உருப்பபடபோவதுமில்லை என்றார் ஒரு அறிஞன்

அது உண்மைதான் போலிருக்கின்றது, அதை எழுது, இதை எழுது என ஏதோ ஒன்று கழுத்தை பிடித்து குனிய வைக்கின்றது,

இது சரிவராது அதனால் இந்த முகநூலை விட்டு ஓடிவிடலாம் என்ற எண்ணம் வரத்தான் செய்கின்றது

அப்படி ஓடிவிட்டால் சங்கத்தை யார் காப்பாறுவது எனும் கடமை உணர்ச்சியில் தடுமாறிகொண்டிருக்கின்றேன்.

 

கலைஞரின் சூட்சும முடிச்சுகள் மகா அபாரமானவை

Image may contain: 5 people, people standing

கலைஞரை பற்றி ஒரு விஷயம் நீ மறுக்கவே முடியாது, அது அவரின் கபடநாடகம், ஆம் அந்த வைரவேல் கொலைக்காக நடைபயணம் நடந்தவர், விசாரணை கமிஷன் அறிக்கையினையே ராமசந்திரனுக்கு முன்பே அசாத்தியமாக கைபற்றி படித்தவர் என்றேல்லாம் போராடிய கலைஞர், பின் முதல்வராகும்பொழுது ஏன் அமைதியானார்?

அவர் சுயநலவாதி, அவர் காரியகாரர் நீ இதனை ஒப்புகொண்டே ஆகவேண்டும் என சிலர் கேட்கின்றார்கள்

கலைஞரின் சூட்சும முடிச்சுகள் மகா அபாரமானவை. வைரவேல் விஷயத்தில் என்ன நடந்தது என்பது தெரியாதது அல்ல, உலகமே அறிந்தது

ஆனால் அன்று பெயர் அடிபட்டவர்களில் ஆர்.எம் வீரப்பனும் ஒருவர்

Image may contain: 1 personஅன்று ஆர்.எம் வீரப்பன் ராமசந்திரனை இயக்கி கொண்டிருந்தார், ராமசந்திரன் உடல்நிலை மோசமாகிகொண்டே இருந்தது

அடுத்த தலைவர் ஆர்.எம் வீரப்பன் என்றொரு நிலை பரவாலாக ஏற்பட்டுவிட்டது, கிட்டதட்ட செயல்தலைவர் பதவியினை எட்டியிருந்தார்

கட்சி அவருக்கு கட்டுபட்டே இருந்தது, அடுத்தது நாமே என ஆர்.எம் வீரப்பனும் திடமான நம்பிக்கையில் இருந்தார்

திருச்செந்தூர் விவகாரத்தில் அவர் பெயர் சிக்கியதும் கலைஞர் துடித்தெழுந்து பெரும் பரபரப்பினை ஏன் ஏற்படுத்தினார், எதற்காக அடுத்த தலைவராக உருவாகிகொண்டிருந்த ஆர்.எம் வீரப்பனை அடக்குவதற்காக‌

அட்டகாசமாக அத்திட்டம் வேலை செய்தது, கொஞ்சம் கொஞ்சமாக அடங்கினார் ஆர்.எம் வீரப்பன், பெரும் அரசியலை அவர் செய்யவில்லை. கைகளை கட்டி போட்டது பல பம்மினார்

அச்சிக்கல் மட்டும் இல்லாவிட்டால் மிக அனாசயமாக அதிமுகவினை கைபற்றியிருப்பார் ஆர்.எம் வீரப்பன்

வீரப்பன் திணறி கட்சிக்குள் பிரிவு வந்தபொழுதுதான் தேர்தல் வந்து கலைஞர் ஆட்சிக்கும் வந்தார்

ஆனால் கலைஞர் அரியணை ஏறவிரும்பாத டெல்லி காங்கிரஸ் ஜெயலலிதாவினை வளர்த்து ஆர்.எம் வீரப்பனை வெளியேற்றி என்னவெல்லாமோ செய்து இறுதியில் ராஜிவ் கொலையால் ஜெயா ஆட்சிக்கும் வந்தார்

கலைஞரின் குறி தப்பவில்லை, பெரும் எதிர்ப்பார்ப்பில் இருந்த ஆர்.எம் வீரப்பன் அரசியலை விட்டு விலகினார், ஆனால் டெல்லி சூழ்ச்சியால் ஜெயா என்ற பிம்பம் உருவானது இது கலைஞர் எதிர்பாராதது

பின் 1997ல் கலைஞர் தொடுத்த வழக்குகளுக்கு ஜெயா சாகும்வரை தீர்ப்புவராமல் டெல்லி பார்த்துகொண்டது

இப்பொழுது அதே திமுகவில் 1987ல் நடந்த அதே குழப்பங்கள் நடக்கின்றன, அன்று ஆர்.எம் வீரப்பன் ஒதுக்கபட்டது போல இன்று சசிகலா குடும்பமும் ஒதுக்கபடுகின்றது

இரண்டிற்கும் விதை போட்டது யாரென்றால் அதுதான் கலைஞர், அவரை ஏன் அரசியல் சாணக்கியன் என்கின்றார்கள் என்றால் இதற்காகத்தான்

இதே ஆர்.எம் வீரப்பன் பாட்ஷா படவிழாவில் ரஜினியினை பேச வைத்து அவரை அரசியலுக்கு இழுத்து விட கணக்கு போட கொஞ்ச நாளிலே மூப்பனார் மூலம் ரஜினியின் வாய்ஸ் கிடைக்க வைத்து ஆர்.எம் வீரப்பன் மறுபடியும் வராமல் பார்த்துகொண்டவர் கலைஞர்

இப்படி எல்லாம் எதிர்கட்சிகளில் அடுத்த தலைவர் யார்? யாரை குறிவைத்தால் யாரை வீழ்த்தலாம் என்ற மிகுந்த ராஜதந்திரத்தோடு இருந்த கலைஞருக்கு தன் கட்சியினை தனக்கு பின் நடத்த தகுதியான நபர் யார் என தெரியாமல் போனதுதான் ஆச்சரியம்

அது இருக்கட்டும், வைரவேல் தொடர்பாக அமைக்கபட்ட‌ கமிஷன் என்ன கண்டுபிடித்தது அதன் முடிவு என்னவென்று கேட்டால், ராமசந்திரன் செய்த மதுக்கடை ஊழல் தொடர்பாக அமைக்கபட்ட ரே கமிஷன் என்ன முடிவுக்கு வந்ததோ அதே முடிவுதான்