திக் திக் நிமிடங்களுடன் புத்தாண்டு வருகின்றது

புத்தாண்டுக்கு நள்ளிரவில் கோவிலுக்கு செல்லவேண்டும் என்பது கிறிஸ்தவ விதி. இந்துக்களுக்கு இந்த சாங்கியம் எங்கிருந்து வந்தது என தெரியவில்லை. தமிழக கலாச்சாரபடி இந்த புத்தாண்டே கணக்கில் வராது, தை மாதமோ சித்திரை மாதமோதான் அந்த கணக்கு

பிறகு ஏன் இந்த இந்து ஆலயங்கள் நள்ளிரவு திறப்பு சர்ச்சை என தெரியவில்லை

அது இருக்கட்டும், நமது கடமைக்கு செல்ல கிளம்பியாயிற்று. இந்நாளில் திருமணமான பெண்கள் திருமண ஆடையினை அணிவார்களாம். என்றோ கேள்விபட்ட விஷயம்தான் ஆனால் தலையில் அடிபடாமல் நினைவுக்கு வராது என்பதுதான் சோகம்

அப்படி பாகம்பிரியாளும் பட்டுபுடவையில் வந்தார், நானோ கண்டு கொள்ளவில்லை மறுநாள் கிடைக்கும் கிடாகறியே கண்ணுக்குள் வந்தது, அந்த முகத்தில் ஒரு மாறுதல் வந்ததை கவனித்தாலும் காரணம் புரியவில்லை

அவள் விடுவதாக இல்லை, தன் தாயிடம் நீங்கள் திருமண சேலை கட்டவில்லையா என கேட்டதும் உள்ளூர அலாரம் அடித்தது. கண்ணி எங்கே விழுகின்றது என தெரிந்ததும் , கல்யாணத்து அன்று இந்த பட்டில் அழகாய் இருந்தாய் தெரியுமா? அதெல்லாம் பொன்னான காலம் என சொல்லிவிட்டு மறுபடியும் ஆட்டுகனவில் மூழ்கியாயிற்று

அங்குதான் இருந்திருக்கின்றது விதி, அது திருமண பட்டே இல்லையாம், அதன் பின் என்றோ அவள் அம்மா கொடுத்த பட்டாம்

போதாதா, புத்தாண்டு எப்படி விடியும் என்பது இப்பொழுதே தெரிந்துவிட்டது. “ஏண்டா டேய் உலக விஷயத்தை எல்லாம் தேதிமறக்காமல் எழுத தெரிந்த உனக்கு இது எப்படி மறந்தது? எப்படி மறக்கலாம்..” எனும் மவுன மொழி அந்த முகத்தில் சந்திரமுகி கோலத்தில் தெரியதொடங்கி இருக்கின்றது.

திக் திக் நிமிடங்களுடன் புத்தாண்டு வருகின்றது

இந்நிலையிலும் உங்கள் எல்லோருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தாயிற்று. இந்த புத்தாண்டில் என்ன தீர்மானம் என்றால் கிட்டதட்ட 25 ஆண்டுகளாக தொடரும் அதே தீர்மானம்தான்

ஆம், இந்த வருடத்திலாவது தங்க தலைவியினை சந்தித்து சங்கத்தின் கொள்கை, கஷ்டம், அதன் கடமைகளை எல்லாம் எடுத்துசொல்லி தலைவிக்கு உற்சாகம் ஊட்டிவிட வேண்டும்

அதனை தவிர என்ன தீர்மானம் இருக்கின்றது

முதலில் பிரார்த்திவிட்டு வரவேண்டும். தலைவிக்கும் உங்களுக்கும் சேர்த்து இந்த 2018 எல்லா வளமும் கொண்டுவரும் ஆண்டாக அமைய பிரார்த்தனைகளும் வாழ்த்துக்களும்

ரஜினி வாயாலும் ஆன்மீக அரசியல் என வந்துவிட்டது

நல்ல பக்திமான் மனதில் இருக்கும் வரிகளே வார்த்தையில் வரும், அது ரஜினி வாயாலும் ஆன்மீக அரசியல் என வந்துவிட்டது

அவரின் மீது ஆயிரம் சர்ச்சை இருக்கலாம், ஆனால் நல்ல ஆன்மீகவாதி என்பதை அவர் எதிரியும் மறுக்க முடியாது. அந்த வகையில்தான் தன் ஆன்மீக வாழ்க்கை எவ்வளவு சுத்தமாக இருக்கின்றதோ, ஆன்மீக வாழ்வு நல்ல ஆன்மீகவாதிகளால் எப்படி பரிசுத்தமாக பின்பற்றபடுகின்றதோ

அப்படி தன் அரசியலும் தன் தெய்வீக வழிபாடு போல இருக்கும், இருக்கவேண்டும் என ஆசைபடுகின்றார் ரஜினி

ஒரு சில போலிகளை கண்டு எல்லோரின் ஆன்மீகமும் இப்படித்தான் என முடிவு செய்ய முடியுமா? முடியாது

தான் வணங்கும் கடவுள் போலவே மனதிற்கு பயந்து அரசியலிலும் பாடுபடுவேன் என அவர் சொல்லியிருப்பதுதான் பொருள்

இது ஒழுங்காக கோயிலுக்கு செல்பவன், கடவுளுக்கும் மனசாட்சிக்கும் அஞ்சுபவனுக்கு புரியும்

இது புரியாதவன் எல்லாம் எதற்கு அஞ்சாத , எந்த பாவத்திற்கும் பழிக்கும் அஞ்சாதவன் என்பதே பொருள், அவனே ஆன்மீக அரசியல் என ரஜினி சொன்னதன் அர்த்தம் புரியாமல் புலம்பிகொண்டிருக்கின்றான்

 
 
 

ரஜினி வாயாலும் ஆன்மீக அரசியல் என வந்துவிட்டது

நல்ல பக்திமான் மனதில் இருக்கும் வரிகளே வார்த்தையில் வரும், அது ரஜினி வாயாலும் ஆன்மீக அரசியல் என வந்துவிட்டது

அவரின் மீது ஆயிரம் சர்ச்சை இருக்கலாம், ஆனால் நல்ல ஆன்மீகவாதி என்பதை அவர் எதிரியும் மறுக்க முடியாது. அந்த வகையில்தான் தன் ஆன்மீக வாழ்க்கை எவ்வளவு சுத்தமாக இருக்கின்றதோ, ஆன்மீக வாழ்வு நல்ல ஆன்மீகவாதிகளால் எப்படி பரிசுத்தமாக பின்பற்றபடுகின்றதோ

அப்படி தன் அரசியலும் தன் தெய்வீக வழிபாடு போல இருக்கும், இருக்கவேண்டும் என ஆசைபடுகின்றார் ரஜினி

ஒரு சில போலிகளை கண்டு எல்லோரின் ஆன்மீகமும் இப்படித்தான் என முடிவு செய்ய முடியுமா? முடியாது

தான் வணங்கும் கடவுள் போலவே மனதிற்கு பயந்து அரசியலிலும் பாடுபடுவேன் என அவர் சொல்லியிருப்பதுதான் பொருள்

இது ஒழுங்காக கோயிலுக்கு செல்பவன், கடவுளுக்கும் மனசாட்சிக்கும் அஞ்சுபவனுக்கு புரியும்

இது புரியாதவன் எல்லாம் எதற்கு அஞ்சாத , எந்த பாவத்திற்கும் பழிக்கும் அஞ்சாதவன் என்பதே பொருள், அவனே ஆன்மீக அரசியல் என ரஜினி சொன்னதன் அர்த்தம் புரியாமல் புலம்பிகொண்டிருக்கின்றான்

 
 
 

ஞான பீட விருது சர்ச்சை பெரிதாகின்றது….

Image may contain: 1 person, outdoor

இந்த ஞான பீட விருது சர்ச்சை பெரிதாகின்றது, எதிலிருந்து ஆகின்றது என்றால் மோடியினை புகழ்ந்து வைரமுத்து ஏதோ சொல்லபோக, அதிலிருந்து அய்யோ இவன் ஞானபீட விருதுக்கு அடிபோடுகின்றான் என கிளம்பிவிட்டார்கள்

இவர்களை நன்றாக கவனித்துபார்த்தால் ஒப்பாரி எப்படி வருகின்றது தெரியுமா?

அசோக மித்திரன், ஜாணகிராமன், சுந்தர ராசமாசி, லாசரா போன்றோருக்கு கொடுக்காத ஞானபீடம் எப்படி வைரமுத்துவிற்கு செல்லலாம் என கிளம்புவார்கள்

தமிழில் இதுவரை இருவர்தான் ஞானபீட விருது பெற்றிருக்கின்றார்கள் ஒருவர் அகிலாண்டம் எனும் அகிலன், இன்னொருவர் ஜெயகாந்தன்

இந்த இருவரை தவிர இன்னொரு தமிழன் இன்னும் பெறவில்லை, வைரமுத்துவின் எழுத்துக்கள் ஒன்றும் தரம் தாழ்ந்தவை அல்ல‌

ஜெயகாந்தனின் எழுத்து, இளையராஜாவின் இசை போல வைரமுத்துவின் எழுத்துக்கள் எளியமக்களின், அடித்தட்டு மக்களின் வாழ்வில் கலந்து வருவது.

அவரின் கிராமத்து காவியமான கள்ளிகாட்டு இதிகாசம் எல்லாம் தனித்து நிற்கும் ரகம்

பின்னர் ஏன் இவர்கள் குதிக்கின்றார்கள்? அதை சொல்ல இங்கு ஒருவருமில்லை, ஏன் வழக்கமாக குதிக்கும் அல்ட்ராசிட்டிகளும் இதில் இல்லை

கலைஞர் இருந்திருந்தால் ஒரே போடாக தன் வழக்கமான ஸ்டைலில் போட்டு அடித்திருப்பார், இதெல்லாம் அவருக்கான ஏரியா

எப்படி சொல்லியிருப்பார்?

“அன்புதம்பி வைரமுத்து மீது பெரும் சர்ச்சைகள் வருவதை கேள்விபட்டேன், இது இன்றல்ல நேற்றல்ல என்றுமே எழுத்தும் இலக்கியமும் பாடலும் ஒரு சாதிக்கு மட்டும் உரித்தான சொத்து என சொல்லும் வர்க்கம் அது

அதனை உடைத்து எழும்பிய அண்ணா போன்றவர்கள், என்போன்றவர்களை இங்கு ஒரு மாதிரித்தான் ஒதுக்குவார்கள்,

என்னைபோலவே சிவாஜிகணேசனை நீங்களும் நேசிப்பீர்கள், ஆனால் அவருக்கு ஏன் தேசிய விருது கிடைக்கவிலை? ஏன் என்றால் அவர் பராசக்தியில் பகுத்தறிவு பேசியவர் என்பதற்காக‌

அதில் வைத்த வஞ்சமே அவரை எகிப்தியன், பிரான்ஸ்காரன் எல்லாம் கொண்டாட வைத்தபின் இங்கு அதிர்வு ஆயிற்று

எளிய மக்களின் இசையினை உலகறிய வைத்த இளையராஜாவிற்கு ஒரு அங்கீகாரம் உண்டா? தமிழன் தம்பி ரகுமானுக்கு அங்கீகாரம் உண்டா?

ஆனால் வடநாட்டவருக்கு கிடைக்கும் அங்கீகாரமே வேறு, இங்கு தமிழ் உயர்சாதி கலைஞர்களை அவர்கள் அங்கீகரிப்பதே வேறு

என்றோ செத்த தியாகராஜருக்கு திருவாரூரில் விழுந்து விழுந்து விழா எடுப்பவர்கள், தம்பி இளையராஜாவினை கண்டுகொள்வார்களா என்றால் இல்லை

எதிர்முகாம் என்றாலும், என்னை வயிறெறிய திட்டியவர் என்றாலும் , சாபம் பல இட்டவர் என்றாலும் ,சேறு பூசினாலும், அந்த சேற்றிலே மலர்ந்த செந்தாமரையின் தமிழை ரசிப்பவன் நான்,

அந்த பெண் கவிஞரின் பாடல்களை நிரம்ப பாராட்டுபவன் நான், ஆம் அந்த கவியரசி தாமரை என்பவருக்கு ஏதாவது தேசிய விருது கொடுத்தார்களா? மாட்டார்கள்

அருமை அண்ணாவினை விட ஒரு எழுத்தாளன் உண்டா? அவருக்கு விருது என ஒரு குப்பி கொடுத்திருப்பார்களா?

அதேதான் இங்கு தம்பி வைரமுத்துவிற்கும் நடக்கின்றது, அவன் எழுதிய காவியங்களில் என்ன குறை கண்டார்கள்? எளிய மக்களின் கிராம வாழ்வினை அவனை விட தெளிவாக பதித்தது யார்?

ஆனால் விருது என்றவுடன் அசோகமித்திரன், ஜாணகிராமன், சுந்தர ராமசாமி என கிளம்புவது ஏன்?

ஏன் என்றால் அவர்கள் எல்லாம் பிராமணர்கள், உயர் சாதியினர், அவர்கள் படைத்ததுதான் இலக்கியமாம், தாழ்த்தபட்டவன் படைத்தது இலக்கியமே இல்லையாம்

இளையராஜா இசையினையே இன்னும் ஒப்புகொள்ளா வர்க்கம், இந்த வைரமுத்துவின் எழுத்தை மட்டும் அங்கீகரிக்குமா?

சூத்திரன் ஒருவன் பிராமணனுக்கு மேல் கலைவடிவங்களை படைப்பாதா? எனும் ஆற்றாமையும், வேதனையும், எரிச்சலுமே இந்த சர்ச்சைகளுக்கு காரணம்

தம்பி வைரமுத்து சூத்திரன் என்பதாலும், பெரியார் வழியில் என் கைபிடித்து நடந்ததாலும், பெரியார் படத்திற்கு பகுத்தறிவு பாடல் எழுதியதாலும் இந்த ஆரியர்களால் குதறபடுகின்றானே அன்றி வேறல்ல தமிழகமே

தாழ்த்தபட்ட மாணவி மருத்துவ கல்விபடிக்கவே விடாதவர்கள், தாழ்த்தபட்டவனுக்கு விருது அதுவும் உயர்விருது தர எப்படி ஒப்புகொள்வார்கள்?, செய்யவே மாட்டார்கள்

அவர்களிடம் நியாயம் கேட்பது, கடலுக்குள் நன்னீர் தேடுவதற்கு சமம்

இவர்கள் ஒப்புகொள்ளாவிட்டால் வைரமுத்து படைப்பாளி ஆகமாட்டாரா?, “மந்தையிலே நின்னாலும் நீ வீரபாண்டி தேரு..” என்ற அவரின் வரிகள் போல, எங்கிருந்தாலும் தனி கம்பீரமும் தமிழ் அழகு கொண்ட தனித்துவமாக வைரமுத்து மிளிர்வார் என்பதில் சந்தேகமில்லை”

 

பண்டைத் தமிழ் இலக்கிய தழுவல் திரைப்படங்கள்…

காதல் கோட்டை என்றொரு படம் ஓடிகொண்டிருக்கின்றது, அந்த நேரத்தில் டைரக்டர் அகத்தியன் கொண்டாடபட்டார் அதன் பின் ஆளையே காணவில்லை அவர் மகள் விஜயலட்சுமிதான் வந்து இளித்துகொண்டிருக்கின்றார்

நிச்சயம் காதல் கோட்டை எனும் படம் கோப்பெருஞ்சோழன் பிசிராந்தையார் கதையின் காதல் தழுவல். அதன் பின் பண்டைய இலக்கியங்களை அகத்தியன் காப்பியடிக்க தடையாய் இருந்தது சாட்சாத் மணிரத்னம்

ஆம், சத்யவான் சாவித்திரி கதையினை ரோஜா என்றும், சீதை கதையினை ராவணன் என்றும், துரியோதனன் கர்னன் நட்பினை தளபதி என எடுத்தபின் மனிதர் என்ன செய்வார்

இந்த துவாசர் கதை, துஷ்யந்த மகாராஜா கதையினை வேறு மூன்றாம் பிறை என எடுத்டு தொலைத்தாயிற்று

நளன் உருமாறி பரதேசியாய் அலைந்த கதையினை இந்த ஷங்கர் என்பவர் வேற் ஐ படம் என எடுத்து தொலைத்துவிட்டார்

பின் அகத்தியன் என்னதான் செய்வார் பாவம்

ஆனால் இலக்கியத்திலும் புராணத்திலும் இன்னும் ஏகபட்ட கதைகள் இருக்கின்றன, நல்ல திறமைசாலி கண்டுகொண்டால் இன்னும் ஆயிரம் கதைகள் எடுக்கலாம்

ஆனால் முறையாக படித்து எடுக்கத்தான் ஆளில்லை

ரஜினி அரசியலுக்கு வந்தாயிற்று….

ராதாபுரம் தொகுதியில் 500 வோட்டு கூட வாங்கமுடியாத உதயகுமார் ரஜினி எங்களுக்கு தேவையில்லை என புலம்புவது பெரும் கொடுமை

இப்படி தனிமைபட்டுத்தான் கூடங்குளம் போராட்டம் வீணாய் போனது, இன்னும் நாசமாய் போகும் திட்டம் எல்லாம் அன்னார் கையில் இருக்கும் போல‌

ரஜினி யாருக்கு தேவையில்லை என்பதை தமிழகம் முடிவு செய்யவேண்டுமே தவிர உதயகுமார் அல்ல‌ராதாபுரம் தொகுதியில் 500 வோட்டு கூட வாங்கமுடியாத உதயகுமார் ரஜினி எங்களுக்கு தேவையில்லை என புலம்புவது பெரும் கொடுமை

இப்படி தனிமைபட்டுத்தான் கூடங்குளம் போராட்டம் வீணாய் போனது, இன்னும் நாசமாய் போகும் திட்டம் எல்லாம் அன்னார் கையில் இருக்கும் போல‌

ரஜினி யாருக்கு தேவையில்லை என்பதை தமிழகம் முடிவு செய்யவேண்டுமே தவிர உதயகுமார் அல்ல‌


“ரத்தத்தின் ரத்தமே..” என ஒருவர் சொல்லும்பொழுது , அது எப்படி என் உடலிலும் உன் உடலிலும் ஒரே ரத்தம் ஓடமுடியும்? என பகுத்தறிவு கேள்வி கேட்காதவன் எல்லாம் ,

ஈழத்தில் இருப்பது என் அக்கா தங்கச்சி, முருகன் என் முப்பாட்டன் என ஒருவன் அளந்துவிடும்பொழுது “அது எப்படிடா சாத்தியம்”” என கேட்காதவன் எல்லாம்

ரஜினி ஆன்மீக அரசியல் என்றவுடன் ஓடிவந்து விளக்கம் கேட்கின்றானாம்


ரஜினி அரசியலை கடுமையாக எதிர்ப்போம் : சீமான்

இந்தியாவிலே, ஏன் உலகிலே ஒரு ஜனநாயக நாட்டில் “அவனை கட்சி தொடங்க சொல்லாதீர்கள், நான் செத்துவிடுவேன்..”” என ஒருவன் கதறும் பரிதாபம் இங்குதான் நடக்கின்றது.

இப்படி ஒரு அழிச்சாட்டியம் எங்காவது உண்டா?

அங்கிள் சைமன் இதெல்லாம் உங்கள் மேல் காமெடியும் , எரிச்சலும்தான் கொண்டுவருமே தவிர 4 வோட்டு கூட கொண்டுவராது


நீ ரஜினி ரசிகனா, கலைஞர் ரசிகனா என ஆளாளுக்கு கேட்டுகொண்டிருக்கின்றார்கள்

அப்படி அல்ல விஷயம், பொதுவான உண்மைகளை யாரும் சொல்லலாம், அபப்டித்தான் இங்கும் சொன்னோம்

மற்றபடி எம்மையும், எம்மை ஆட்கொண்ட ஒரே தலைவி குஷ்பு ஒருவரே, அது எந்நிலையிலும் மாறா

ரஜினி கட்சி உருப்படவேண்டுமென்றால் அதன் முக்கிய தேவை தலைவிக்கு “செயல் தலைவர்” பதவி கொடுத்து அமர்த்த வேண்டியது, அதை செய்தால் ரஜினி கட்சி நிச்சயம் மாபெரும் வெற்றி பெறும்

 

ரஜினி தேசநலனுக்காக‌ எம்மோடு கரம்கோர்த்து செயல்பட வேண்டும் : தமிழிசை

அதானே, சொந்த உழைப்பில் கட்சியினை வளர்த்துவிடவே கூடாது, யார் முதுகிலாவது ஏறி சென்றுகொண்டே இருக்கவேண்டும் அப்படித்தானே அக்கா?


ரஜினி அரசியலுக்கு வந்தாயிற்று, ஆனால் இன்னும் பிரதான கட்சிகள் வாய்திறக்கவில்லை

ஆனால் அன்று ராமசந்திரன் கட்சி கண்டபொழுது, நீதி அநீதி நியாயம் அநியாயம் என இருப்பது போல, திமுக அதிமுக என்றொரு நிலை வரும் என சொல்லி நகர்ந்தவர் கலைஞர்

இன்று அவர் நலமாக இருந்தால் முதல் வாழ்த்து ரஜினிக்கு அவரிடம் இருந்துதான் வந்திருக்கும்

அந்த கலைஞரின் இடத்தில் தகுந்த ஆட்கள் இன்றி தடுமாறுகின்றது திமுக‌


 

காலம் நிச்சயம் கைகொடுக்கும், வாழ்த்துக்கள் ரஜினி சார் …

Image may contain: 1 person, standing

எதற்கும் கால நேரம் முக்கியம் என்பார்கள், நேரம் பார்த்துத்தான் சில காரியங்களை செய்யமுடியும், ரஜினி அப்படி நேரம் பார்த்து வந்திருக்கின்றார்

“அடுத்து முயன்றாலும் ஆகும்நாள் அன்றி
எடுத்த கருமங்கள் ஆகா – தொடுத்த
உருவத்தால் நீண்ட உயர்மரங்கள் எல்லாம்”
பருவத்தால் அன்றிப் பழா”

என்றார் அவ்வையார் அதில் அர்த்தமில்லாமல் இல்லை, வள்ளுவனும் பல இடங்களில் சொல்லியிருக்கின்றான்

இன்று ரஜினிக்கு வயது 67 ஆயிற்று என்பவர்கள் ராமசந்திரன் எப்பொழுது கட்சி தொடங்கினார் என்பதை மறைகின்றார்கள், அவர் கட்சி தொடங்கிய பொழுதும் வயது 60க்கு மேல் ஆகியிருந்தது

ஜெயாவின் வோட்டு வங்கியும் சில பலமும் உலகறிந்தது , அதனை முறியடிக்கும் விதமாக 1996லே ரஜினி குரல்கொடுத்ததும் அடுத்து வந்த திமுக மூப்பனார் உரசல்களும், மூப்பனார் ஜெயலலிதா பக்கமே திரும்ப ஓடியதும் பார்ப்பவருக்கே பெரும் எரிச்சல் என்றால் ரஜினிக்கு எப்படி இருந்திருக்கும்?

இந்த சாக்கடை அரசியல் வேண்டாம் என அவர் அன்று ஓடியதிலும் அர்த்தம் இல்லாமல் இல்லை

இன்று மாறிவிட்ட காலங்கள், ஜெயா இல்லை கலைஞரும் அரசியலில் இல்லை, மிகபெரும் குழப்பமும் வெற்றிடமும் ஏற்பட்டிருக்கும் நிலை இன்று

தன் தவத்தை கலைத்து அந்த நேரத்தில் களமிறங்குகின்றார் ரஜினி

இந்த இடத்தில் ஒரு விஷயம் கவனிக்கவேண்டும், தேர்தல் என்பது பெரும் செலவுபிடிக்கும் விஷயம். பல்லாயிரம் கோடிகள் வேண்டும், அதையும் மீறி மறைமுக சவால் வரும், விஜயகாந்தின் திருமண மண்டபம் அப்படித்தான் இடிக்கபட்டது

இதை எல்லாம் தாண்டித்தான் தேர்தல் பக்கம் வரவேண்டும்

ரஜினி உண்மையினை சொல்கின்றார், இங்கு எல்லாமே கெட்டுத்தான் கிடக்கின்றது, சொல்லவேண்டிய நேரத்தில் சரியாக சொல்கின்றார் ரஜினி

அவர் தன் கருத்தை சொல்லிவிட்டார், இதோ அரசியலுக்கு வருகின்றேன் என அறிவித்தும் விட்டார், அவர் இனி என்ன செய்ய முடியும்? நிச்சயம் தன் சொத்துக்களை எல்லாம் தேர்தல் செலவுக்கு என கொடுக்க முடியாது, அது நியாயமும் அல்ல‌

அவரை அவரசியலுக்கு அழைத்தவர்கள், நீ வா தலைவா என பகீரத தவம் செய்தவர்களும் , இன்னும் ஏதாவது மாற்றம் வேண்டும் என எதிர்பார்ப்பவர்களும் என்ன செய்ய போகின்றார்கள் என்பதுதான் எதிர்பார்ப்பு

ரஜினிக்கு மட்டும்தான் பொறுப்பு உண்டா? மற்றவர்களுக்கு இல்லையா?

ரஜினியின் மிகபெரும் பலம் அவரின் ரசிகர்கள், அவர்களால்தான் ரஜினி எனும் தேர் அரசியல் தெருவில் ஊர்வலம் வரபோகின்றது, அவர்களுக்கு இன்றுமுதல் பொறுப்பு அதிகம்

ரஜினி தன் ரசிகர்களை நம்புகின்றார், ரசிகர்கள் அதற்கேற்ற உழைப்பை கொடுத்தாலன்றி உண்மையான ரசிகர்களாக இருக்க முடியாது

ரஜினி வந்துவிட்டார் என்பதால் இனி விமர்சிக்க பலர் கிளம்புவார்கள், பலர் அதிரடியாக கேள்வி எல்லாம் கேட்பார்கள் எல்லாவற்றில் இருந்தும் ரஜினி சார்பாக கருத்தாக பேசி பதிலளிக்கும் கடப்பாடு அவர் ரசிகர்களுக்கே இருக்கின்றது

நிச்சயம் பாருங்கள் பெரும் ஆதரவு ரஜினிக்கு திரை உலகில் இருந்து கிடைக்காது, அது அப்படித்தான். ஆனால் அரசியலால் பாதிக்கபட்ட விஜயகாந்த் போன்றோர் ஆதரித்தால் நல்லது

என்னை அரசியலுக்கு அழைத்தொரே, இதோ வந்துட்டேன் என்னால் முடிந்த உதவிகளை செய்வேன், அதனை வைத்து இங்கு மாற்றம் கொண்டுவரவேண்டியது உங்கள் பொறுப்பு என வந்திருக்கின்றார் ரஜினி

இனி என்னாகும் என்பது காலத்தின் கையில் இருக்கின்றது

ஒரு விஷயத்தில் ரஜினியின் அரசியல் வருகையினை இப்படி வரவேற்க வேண்டி இருக்கின்றது

இன வெறுப்பு, மொழி வெறுப்பு, அண்டை நாட்டு தீவிரவாத ஆதரவு, மத வெறுப்பு, மத்திய அரசு எதிர்ப்பு, பிரிவினைவாதம், சாதி வெறி இவற்றை எல்லாம் கடந்து ஒரு கட்சி உருவாகிவருவதில் இந்தியனாக, தமிழனாக வரவேற்கத்தான் வேண்டியது இருக்கின்றது

ரஜினியின் அறிவிப்பு பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியிருப்பது உண்மை

அந்த அதிர்வு என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்பது ரஜினி ரசிகர்களின் கையிலும் அதனை அடுத்து காலத்தின் கையிலும் இருக்கின்றது.

இந்நாட்டில் யாரும் வரலாம் கட்சி தொடங்கலாம், மக்கள் ஆதரிப்பதை பொறுத்து இருக்கின்றது விஷயம். ரஜினி அப்படி வந்திருக்கின்றார், வரவேற்கலாம்

ரஜினி நிச்சயம் குழப்பவாதி அல்ல, அவர் காலத்திற்காக காத்திருக்கின்றார். தெளிவான திட்டத்தோடு இருந்திருக்கின்றார் , இதோ வந்துவிட்டார்

காலத்தை கணித்த‌ அவருக்கு காலம் நிச்சயம் கைகொடுக்கும், வாழ்த்துக்கள் ரஜினி சார்.

 

பெரும் தொண்டு செய்தவள் ராணி மங்கம்மா

Image may contain: house and outdoor

தென் தமிழ்நாட்டுக்கு பெரும் தொண்டு செய்தவள் ராணி மங்கம்மா, புதிது புதிதான சாலைகள், குளங்கள் என உருவாக்கி தென் தமிழகத்தை மாற்றியவர்

அந்த சாலைகளின் வழிதான் சாத்தூர், சிவகாசி, விருதுநகர் எல்லாம் வியாபார தொழில் மையங்களாக மாறின, ஆனால் அவளுக்கொர் நினைவு இல்லம் இல்லை

திருச்சியில் இருந்த அவள் மாளிகை அரசு அலுவலகமாயிற்று, மதுரையில் இருந்த அவள் மாளிகை காந்தி மியூசியம் ஆயிற்று

இப்படி தமிழ்நாட்டுக்கு உழைத்த எத்தனையோ அரசர்கள், அரசிகள் அடையாளம் அற்று போயினர்

ஆங்கிலேயர்களிலும் தமிழருக்கு உழைத்தவர் இருந்தனர், மருத நாயகம் போல பொல்லா ஆங்கிலேயரை எதிர்த்த வீரர்களும் இருந்தனர்

அவர்கள் யாருக்குமே ஒரு செங்கல் இருப்பதாகவும் தெரியவில்லை, அவர்கள் எல்லாம் இங்குதான் வாழ்ந்தார்கள்

ஆனால் குற்றவாளி என கோர்ட் சொல்லி, எந்த போயஸ் இல்லம் குற்றவாளிகளின் முகாமாக செயல்பட்டது என சொன்னதோ அது நினைவாலயம் ஆக போகின்றதாம்

இது கண்டிக்கதக்கது

அந்த போயஸ்கார்டன் வீடு ஒரு சிறைச்சாலை, “ஜெயா நினைவு சிறைச்சாலை” அல்லது “ஜெயா நினைவு பைத்தியக்கார மருத்துவமனை” என மாற்றினால் மிக்க பொருந்த கூடியது,

அதுவும் இல்லாவிட்டால் திருடர்களிடமிருந்தும், சந்தன வீரப்பன் , ஆட்டோ சங்கர் போன்றோரிடமிருந்து பறிக்கபட்ட ஆயுதங்கள், கொள்ளை பொருட்களின் மியூசியமாக மாற்றலாம்

அதற்கான தகுதி அதுதான்.

 

கடல் அது போக்கில் இயங்கிகொண்டிருக்கின்றது

அந்த கடலில் சில திமிங்கலங்கள் இருந்தன, சில சுறாக்களும் இருந்தன, எல்லா வகை மீன்களும் நண்டுகளும் இன்னும் பொடி நெத்திலி கூட்டமும் இருந்தது

அந்த கடல் தாங்களால் மட்டுமே காப்பாற்றபடுவதாக அவை நம்பிகொண்டிருந்தன‌

அந்த கடலுக்கு புதிதாக ஒரு சுறா வரலாமா? என தள்ளியிருந்து யோசித்துகொண்டே இருந்தது, அதை சுற்றி இருந்த மீன்கள் அதனை உள்ளே தள்ள நேரம் பார்த்துகொண்டே இருந்தார்கள்

அவ்வப்போது வேகம் காட்டுவதும், திடீரென ஆழ்கடலில் தியானத்தில் இருப்பது போலவும் அந்த சுறா போக்கு காட்டிகொண்டே இருந்தது

இப்பொழுது அந்த சுறா களமிறங்க நாள் குறித்ததாக சொல்லிவிட்டது

அந்த கடலில் ஒரே சலசலப்பு. பெரும் திமிங்கலங்கள் அமைதியாக கண்காணிக்கின்றன, அவை சத்தமில்லை

ஆனால் நெத்திலி , சென்னா துணி போன்றவை ஓலமிடுங்கின்றன, ஏ சுறாவே இது உன் கடல் அல்ல, எமது கடல் எங்கள் உரிமை, நீ உன் கடலுக்கே போ என கதறுகின்றன‌

ஒரே கடல்தானே, நீங்கள் எந்த கடலுக்கும் செல்லலாமே, ஏன் இந்த கடலிலே வசிக்கின்றீகள், முடிந்தால் செல்லுங்கள் இந்த சுறாவை தடுக்க உங்களுக்கு என்ன உரிமை என சுறாவின் சுற்றங்களும் சீறுகின்றன‌

நெத்திலி கூட்டமோ விடுவதாக இல்லை, எதிர்ப்பு என்ற பெயரில் அவை அழுவது தெரிகின்றது, கடல் என்பதால் கண்ணீர் தெரிவதில்லை

கடல்தேவன் அந்த சலசலப்பினை கூர்ந்துபார்த்தான், திமிங்கலங்களிடம் கேட்டான், அந்த புலிச்சுறா பற்றி நீங்கள் ஏன் அலட்டவில்லை?

இந்த கடலின் ராஜா நாங்கள், இத்தனை காலம் அசைக்கமுடியா சக்தி நாங்கள். புலிச்சுறா வரட்டும் பார்க்கலாம்

அங்கே சகல கடலிலும் சுற்றிவரும் சில நீல திமிங்கலங்களை கேட்டான் கடல்தேவன், அவைகளோ எல்லா கடலும் எங்களுக்கு சொந்தம் எனினும் இக்கடலில் எங்கள் ஆதிக்கமில்லை, இவைகள் தின்று தீர்த்த எச்சத்தினை எமக்கு தருகின்றன, அதனால் அப்புலிச்சுறா எங்கள் அணியில் சேர்ந்தால் நல்லது என சொல்லிகொண்டிருந்தன‌

கடல்தேவன் ஒப்பாரி வைத்து அழுத அந்த சென்னாதுணி, நெத்திலி பொடிகளிடமும் கேட்டான், அந்த புலிச்சுறாவினை நினைத்து நீ ஏன் அழுகின்றாய், அவை சொன்னது

அய்யா இந்த கடலில் நாங்களும் வாழவேண்டாமா? மிக பொடிதாய் இருப்பதால் எங்களை யாரும் கண்டுகொள்ளவுமில்லை, நாங்கள் காட்டும் வித்தையினை அவைகள் ரசிக்க தயங்குவதுமில்லை

ஏதோ அந்த திமிங்கலங்கள் வேட்டையாட எஞ்சியதை உண்டு வாழ்ந்து வருகின்றோம், அந்த நீல திமிலங்கள் இக்கடலை விழுங்கிவிடும், இக்கடல் நமக்கு மட்டுமே சொந்தம் என சொல்லி ஏதோ வாழ்ந்துகொண்டிருக்கின்றோம்

அந்த சுறா வந்தால் தனியாகவா வரும், அதுவும் ஒரு கூட்டத்தோடு வரும், அவைகள் எங்களை விழுங்கிவிடும் அய்யா, நாங்கள் வாழமுடியுமா? அந்த திமிங்கலங்க்ள் எப்படியும் வாழும் எங்கல் நிலமை அப்படியா? இந்த புலிச்சுறா வந்தால் இவ்வழியில் நிறைய சுறா வரும் இக்கடல் கெட்டுவிடும்

அதனால்தான் அந்த சுறாவினை எதிர்க்கின்றோம் என கண்ணீர் வடித்தது நெத்திலி பொடிகள்

கடல்தேவன் கேட்டான், என்னது கடல் இப்பொழுதுதான் கெட்டதா? மக்களை கரைசேர்த்த எத்தனை பெரிய கப்பல்களை அதோ அந்த திமிங்கலங்கள் எப்பொழுது கவிழ்த்துபோட்டதோ அன்றே இக்கடல் கெட்டது, கெட்டுவிட்ட கடலில் உருவாகியவர்கள்தான் நீங்கள்

இல்லை இல்லை நாங்கள் கடலடியில் இருக்கும் கப்பலை தூக்கி மிதக்க விடுவோம் எங்களை நம்புங்கள் என்றன நெத்திலிகள்

சிரித்தான் கடல்தேவன், அவ்வா சிரிக்காதீர் அச்சுறாவினை இங்கு அனுமதியாதீர் என கெஞ்சின நெத்திலிகள்

என்னால் அந்த சுறாவினை விரட்ட முடியாது, இக்கடல் எல்லோருக்கும் சொந்தம் என்றான் கடல்தேவன்

நெத்திலிகள் அழுதுகொண்டே சொன்னது, அப்படியா ஆனால் நாங்கள்தான் இக்கடலின் பூர்வகுடி என சொல்லி அந்த புலிச்சுறாவினை எங்கள் அணியில் சேர சொல்வீரா? இந்த நெத்திலி தலைவராக இருக்கட்டும்,

கடல்தேவன் வாய்விட்டு சிரித்தான், நெத்திலியினை தலைவனாக‌ புலிச்சுறா ஏற்காது, இது மடத்தனம். அச்சுறா வந்தால் வரட்டும், காலதேவன் நிர்ணயித்ததே நடக்கும் என சொல்லிவிட்டு சென்றுவிட்டான் கடல்தேவன்

அந்த நெத்திலி பொடிகள் அலறல் கடல் அலையினையும் தாண்டி கேட்டுகொண்டே இருக்கின்றது, அந்த புலிச்சுறாவோ , திமிங்கலங்களோ கொஞ்சமும் கண்டுகொள்ளவே இல்லை

கடல் அது போக்கில் இயங்கிகொண்டிருக்கின்றது.

ஆண்டு 2017 எப்படி இருந்தது?

இந்த 2017 உலகளவில் எப்படி இருந்தது என்றால், பல போர்களை தவிர்த்த ஆண்டாகவே இருந்தது. அவ்வகையில் உலகிற்கு நல்ல ஆண்டு

அமெரிக்க வடகொரிய யுத்தம், இந்திய சீன யுத்தம் என உலகையே அச்சுறுத்திய விஷயங்கள் வெறும் பரபரப்போடு நின்றதுவிட்ட நல்ல விஷயம்

அரேபியாவினை அச்சுறுத்திய ஹிட்லருக்கு பின் அகோர கொலைகாரர்களான ஐஎஸ் இயக்கம் ஒடுக்கபட்டதும் இந்த வருடம்தான்

இந்த வருடத்தின் மிக கொடூர துயரங்களை அனுபவங்களை பெற்றவர்கள் சிரியர், ஏமானியர் மற்றும் ரொகைன்யா மக்கள்

யூதர்களுக்கு அவர்களின் 2000 ஆண்டு நோக்கம் கிட்டதட்ட 70% நிறைவேறியாயிற்று அவர்களுக்கு என்ன? எல்லா ஆண்டும் நல்ல ஆண்டே

தமிழர்களுக்கு இந்த ஆண்டு எப்படி இருந்ததென்றால் பன்னீர், பழனிச்சாமி இருபெரும் அரசியல்வாதிகள் இந்த ஆண்டு கிடைத்தார்கள், அடுத்த ஆண்டு என்ன ஆக போகின்றார்கள் என்பதை காலம் காட்டும்

சசிகலா குடும்பத்திற்கு இந்த ஆண்டு மகா சோதனையான காலம், ஆனால் அக்குடும்பம் அசைந்ததாக தெரியவில்லை, கடும் வெள்ளத்திற்கும் அசையாத குன்றுபோல் நிற்கின்றது

மாலிக்காபூர் காலத்திற்கு பின் டெல்லியிலிருந்து பெரும் படைகள் வந்தது சசி குடும்பத்து ரெய்டுக்காகத்தான் இருக்கும், ஆனாலும் துரும்பும் சிக்கவில்லை

திமுகவிற்கு ஸ்பெக்ட்ரம் தீர்ப்பு ஒன்றே ஆறுதல் மற்றபடி இவ்வருடம் செயல்தலைவர் ஆன ஸ்டாலினால் அக்கட்சி பெறும் சீற்றம் எல்லாம் சீறவில்லை. ஆற்றங்கரையில் கட்டிபோடபட்டிருக்கும் படகு மிதப்பது போல் அக்கட்சி ஆடிகொண்டிருக்கின்றது

இந்திய அளவில் பாஜகவிற்கு சோதனைகள் அதிகம் என்றாலும் தங்கள் மக்கள் அபிமானத்தை இழக்கவில்லை மாறாக குஜராத் போன்ற தேர்தல்களில் அபார வெற்றிபெற்றார்கள்

தமிழ்க பாஜகவினர் வழக்கம்போல லட்டு கொடுத்தே மகிழ்ந்தனர், அவர்கள் செய்ய முடிந்தது அவ்வளவுதான்

காங்கிரஸுக்கு இந்த ஆண்டுதான் ராகுல் தலமை ஏற்றார், இனி காங்கிரஸின் நிலை எப்படி இருக்கின்றது என இனிதான் தெரியும்

மொத்தத்தில் பார்க்கபோனால் உலகிலே மகிழ்ச்சியாக இருந்த அரசியல்வாதியோ தலைவரோ யாருமில்லை ஒரே ஒரு தலைவரை தவிர‌

ஆம், தமிழிசை மட்டுமே ஆண்டு முழுக்க உற்சாகமாக இருந்த, 2018லும் உற்சாகமாக‌ இருக்க போகும் ஒரே அரசியல்வாதி