கலைஞர் என்றால் களத்தில் இறங்குவார்…

கலைஞர் என்றால் களத்தில் இறங்குவார், அந்த ஜெயா இருந்திருந்தால் ஹெலிகாப்டரிலாவது ஒரு சுற்று சுற்றிவரும்

இப்போதிருக்கும் முதலமைச்சர் என்ன திட்டம் வைத்திருக்கின்றாரோ தெரியவில்லை, நானே கட்சி புயலில் அடிபட்டு கிடக்கின்றேன் என்னை மீட்க யார் உண்டு? என அழாதவரை சிக்கல் இல்லை

இந்த ராமசந்திரன் நூற்றாண்டு விழா, தினகரன் நடத்தும் கிறிஸ்மஸ் விழா என யாராவது அப்பக்க்கம் செல்லட்டும், அப்பொழுது இருக்கின்றது அடி என கன்னியாகுமரி பக்கம் சொல்லிகொண்டிருக்கின்றார்கள்

இன்று சவேரியாரின் நினைவு நாள்

Image may contain: 1 person, beardவிவசாயியும் மீணவனும்

இந்தியாவில் சில தொழிலாள இனங்களுக்கு கால காலமும் சிக்கல், பண்டைய காலமுதல் அப்படித்தான் இருந்திருக்கின்றது. சில தொழிலாள இனங்கள் அடக்கபட்டு, புறக்கணிக்கபட்டு இருந்தன, அதிலொரு இனம் ஆடுமாடு மேய்ப்பவர்கள். அவர்கள் மிக ஒடுக்கபட்டகாலத்தில் பகவான் கிருஷ்ணனே அவதரித்து அவர்களை காப்பாற்றி இருக்கின்றார்.

இன்று விவசாயமும் அந்த புறக்கணிக்கபட்ட‌ படியலில் இணைந்தாயிற்று ஆனால் காப்பாற்ற இன்னும் அவதாரம் வரவில்லை. ஆனால் இந்தியதொழிலாள இனங்களில் குறிப்பாக தென் தமிழகத்தில் அன்றிலிருந்து இன்றுவரை ஒரு தொழிலாள இனத்தின் சிக்கல் சரிவர புரிந்துகொள்ளமுடியவில்லை என்றால் நிச்சயமாக மீணவர் இனம், அவர்களின் நிலை இன்றுவரை அப்படித்தான்

“மச்சம் பிடிப்பவர் வாழ்வில் மிச்சம் இல்லை” என்பது பழமொழி

கடல் தொழில் ஒரு தனி உலகம், அவசரத்திற்கு படகில் இருந்து இளைப்பாற இறங்ககூட முடியாத தொழில் அது, மகா விழிப்பு, உழைப்பு, நொடிப்பொழுதும் அயராத எச்சரிக்கை, உயிரை பணயம் வைக்கும் சவால் இவை எல்லாம் இல்லாமல் மீணவதொழில் இல்லை.

அக்காலத்தில் இன்று உள்ளதுபோல போக்குவரத்து இல்லை, பிடிக்கும் மீன்களை விற்பனை செய்ய அவர்களின் சவால் மிக பெரிது. அதனால் முத்துகுளித்தல், கடல்பொருள் சேகரித்தல் என கடல்சார் தொழில் செய்துவந்தனர்.

Image may contain: 1 personஇடி,மழை,புயல்,கடல் சீற்றம் என இயற்கை எதிர்ப்புகளை தாங்கினர், ஆற்றுப்ப்பாசன பகுதியில் மட்டும் கவனம் செலுத்திம் வரி விதித்து, இன்றைய அரசினை போலவே அன்றும் புறந்தள்ளிய அரசுகளையும் மீறி வாழ்ந்தனர், 15ம் நூற்றாண்டில் இன்னொரு பெரும் சவால் அவர்களுக்கு வந்தது.

அது கடற்கொள்ளை, இன்றைய ஏடன் வளைகுடா கொள்ளையர்களை போல அவர்களின் அட்டகாசம் சொல்லி மாளாது, சமயங்களில் ஊருக்குள் புகுந்து கொள்ளை அடிப்பது வரை நீண்டது. தமிழக நாயக்க அரசுக்கு தரையுத்தம் தெரியும், கடற்கரைக்கு சென்றால் ஏதோ மீன் சுட்டு சாப்பிட தெரியும் கடல்யுத்தம் அறவே தெரியாது.

அதாவது மிக மிக பாமர மக்களாய், மிக மிக இக்கட்டான சூழலில் அவர்கள் இருந்த நேரம். அதாவது சிங்கள கடற்படையும் ராமேஸ்வர மீணவர்களையும் நினைத்துகொள்ளலாம்.

இந்த காலகட்டத்தில்தான் ஒரு கிறிஸ்தவ துறவி இந்தியா வருகிறார். கோவாவில் வந்து இறங்குகிறார். அது போர்த்துகீசிய கட்டுப்பாடு பகுதி, அவர்களின் தலமை அலுவலகம். அங்கிருந்து தென் தமிழ்நாட்டிற்கு வருகிறார். அங்கிருந்து கடல்பகுதிகளை சுற்றி பார்க்கிறார்.

ஒரு விஷயம் சொல்ல வேண்டும், அதாவது இயேசுவின் சீடர் தாமஸ் இந்தியா வந்தார் என்பது இன்னும் உறுதிபடுத்தபடா விஷயம், அவர் வந்திருக்க வாய்ப்பே இல்லை

முதன் முதலில் கிறிஸ்துவத்தை சுமந்து வந்தவர் புனித பிரான்ஸிஸ் செவியர்தான், வரலாறு அதனைத்தான் பதிந்திருக்கின்றது

செல்வவளம் உள்ள நாடு இந்தியா, அதனால்தான் ஐரோப்பியர் இந்திய கனவில் மிதக்கின்றனர், மிளகும்,சந்தணமும்,அரிசியும் ஓடும் என்ற நினைப்பில் வந்தவருக்கு மகா அதிர்ச்சி காத்திருந்தது.

தென் தமிழக மீணவர் நிலையும், அவர்கள் சந்திக்கும் சிக்கலும், உயிர்வாழ தினம் நடத்தும் போராட்டமும் அவரை கலங்க செய்கிறது. மதுரையோ திருவிதாங்கூரோ யாருக்கும் கடல்சண்டை பழக்கமில்லை. அம்மன்னர்களின் அனுமதியோடு போர்த்துகீசிய உதவி பெற்று, கடல்கொள்ளையர்களை விரட்ட வைக்கின்றார். போர்த்துகீசியரும் கடற்கொள்ளையரை விரட்டிவிட்டு கோவா சென்றனர், இங்கு ஆள எல்லாம் விரும்பவில்லை.

அதோடு விடவில்லை அந்த துறவி, மீணவர்களோடு தங்கி கிட்டதட்ட 3 ஆண்டுகள் பணியாற்றி, கிறிஸ்துவத்தையும் போதிக்கின்றார். அவருக்காகவே அம்மக்கள் கிறிஸ்தவராக மாறினர், அதாவது தங்களை வாழவைக்க வந்த மகானாகவே அவரை கண்டனர், அதுவரை மிக மிக தூரமாக ஒதுக்கிவைக்கபட்டிருந்த சமூகம் அது.

அன்றிலிருந்து தென்னக கடற்கரை மக்களின் பிரதான தெய்வநிலைக்கு அவர் உயர்த்தபட்டார், அவர் தான் புனித பிரான்ஸிஸ் ஆப் சவேரி. தமிழில் சவேரியார். அக்காலத்திலே கல்லூரி பேராசிரியர்.

தமிழகத்தில் அவரின் பணி அதோடு நிற்கவில்லை, தென்னக மக்களின் துயரம் தீர்க்க கல்வியே மாபெரும் ஆயுதம் என்பது அவரின் கொள்கை. தனது சபைக்கு அவர் எழுதிய கடிதங்களில் எல்லாம் தென்னக மக்களுக்கு கல்வி எவ்வளவு முக்கியம் என எழுதுகிறார், அதன்படியே தமிழகத்தில் பல புகழ்மிக்க கல்வி நிலையங்கள் அவர் சார்ந்த சபையால் நடத்தபடுகின்றது.

தமிழக மீணவர்களின் உண்மையான துயரை உணர்ந்துகொண்டவர் அவர், அதற்கான துயர்துடைப்பு முயற்சியில் ஈடுபட்டார், எங்கோ இருந்து வந்து தங்களுக்காக உழைத்த அவரை இன்றுவரை அச்சமூகம் நன்றியோடு நினைக்கின்றது.

500 ஆண்டுகாலம் கடந்த பின்னும் என்ன நடக்கின்றது? இன்னும் மீணவ சமூகம் அதே புறக்கணிப்பில்தான் இருக்கின்றது, அது கல்பாக்கம்,மெரீனா,ராமேஸ்வரம்,மண்டபம், வேதாரண்யம்,இடிந்தகரை, கூடுதாழை, குளச்சல், என அந்த கடற்கரையில் மிக நிம்மதியாக சந்தோஷமாக கடல்தொழில் செய்யும் கிராமங்கள் உண்டா? பாதுகாப்பாக இருப்பதாக நினைக்கும் மீணவ குடும்பம் உண்டா?

அல்லது அவர்களின் கோரிக்கைக்கோ அல்லது நியமான உணர்விற்கோ ஒரு ஆதராவது உண்டா? இடிந்தகரை அல்ல தினம் தினம் இடிந்துகொண்டிருக்கும் ராமேஸ்வர மீணவர்களுக்கு என்ன ஆறுதல் கிடைத்துவிட்டது?

காரணம் அவர்களின் துன்பத்தை, துயரத்தை ஒரு ஐரோப்பிய துறவி உணர்ந்த அளவிற்கு இன்னும் யாரும் உணரவில்லை.

அவரை போலவே தேனி, மதுரை, ராமநாதபுர விவசாயிகளின் கஷ்டத்தை உணர்ந்து கண்ணீர் விட்டவர் பெருமகன் பென்னிகுயிக். பிரிட்டிஷ அரசாங்கமே பின்வாங்கிய நிலையில், தனது சொத்துக்களை எல்லாம் விற்று இங்கு வந்து பெரியார் அணையை கட்டினார், ஏராளமான விவசாயிகளை வாழவைத்தார்.

இன்று விவசாயியும், மீணவனும் இந்திய அரசிற்கு மகிழ்ச்சியானவர் அல்ல, இரு இனமும் தனது சொந்த உழைப்பிற்கு விலைவைக்கமுடியாத பரிதாப ஜீவன்கள், யாரோ எங்கிருந்தோ வந்து விலை வைப்பார்கள். கட்டுபடுவதை தவிர இவர்கள் என்ன செய்ய முடியும்??

பல விவசாயிகளின் தற்கொலை அல்லது ராமேஸ்வர மீணவர்களின் துயரம், எங்கள் வாழ்விடத்தில் எங்களை அச்சமில்லாமல் வாழவிடுங்கள் என கைஎடுத்து கும்பிட்டு கதறும் இடிந்தகரை மக்கள். இவர்களை நினைக்கும் பொழுதெல்லாம் பென்னிகுயிக்கும் சவேரியாரும் கண்ணுக்குள் வந்து வந்து செல்கின்றார்கள்.

இன்னும் இவர்களை போன்ற பெரும் மனிதநேயமிக்க மனிததெய்வங்கள் பிறந்து வந்து காப்பாற்றும் வரை விவசாயி மற்றும் மீணவர்களின் துயரம் நீங்கபோவதே இல்லை.

பெரியார் அணைக்கு கேரளமும், தமிழ்நாடும் சண்டையிட்டு கொண்டிருக்க் தமிழகத்தின் பெரும் வியாதியான‌ சினிமாவில், விரைவில் வெளிவரும் சினிமாவின் கதைக்கு இருவர் சண்டையிடுகின்றார்களாம், ஆனால் கதை பென்னிகுயிக் அணைகட்டிய கதையோடு சம்பந்தபட்டதாம், கோடிகளில் சமரசம் நடக்கும்.

அந்தோ பரிதாபம். ஐரோப்பிய பென்னிகுயிக் தனது சொந்த சொத்துக்களை விற்று தமிழக அணைகட்டியவர்

சவேரியாருக்கு இறுதிவரை இருந்த சொத்து 3 செட் ஆடையும் கையில் ஒரு சிலுவையும் மட்டுமே, அவரும் பேராசிரியர்தான், ஆனால் கடினபட்டு தமிழ்படித்து அரைகுறை தமிழில் பேசினார். ஆனால்இன்றுள்ள கிறிஸ்தவ போதகர்களின் உடை அலங்காரமும், உல்லாச வாழ்வும்,சொத்துமதிப்பும் விரைவில் பில்கேட்ஸ்கே சவால் விட கூடியவை.

இன்று சவேரியாரின் நினைவு நாள், தமிழக மீணவர்களுக்காக அவர் செய்த சேவையும்,உழைப்பும் பின்னர் அவர் மூலமாக வந்த கல்வி நிலையங்களும் அதன் சேவையும் மதம் கடந்து நிச்சயம் பாராட்டதக்கது, தென்னிந்திய வரலாற்றில் அவருக்கு தனி இடம் உண்டு, அது அவரது உடலை போலவே அழியாதது

அவர் எந்த மக்களுக்கு போதித்தாரோ அந்த தென்னக கடற்கரையோர மக்கள், மீணவ மக்கள் கதிகலங்கி நிற்கின்றனர்

காணாமல் போன 250 மீணவர்களை காணவில்லையாம், அந்த கடற்கரையே கலங்கி நிற்கின்றது

அம்மக்களை முன்பு எத்தனையோ முறை காத்த அந்த புனிதர் இம்முறையும் தன் வல்லமையான ஜெபத்தால் கொண்டுவரட்டும்

தன்னலமற்றவர்களின் ஜெபத்தை எந்த கடவுளும் மறுப்பதில்லை

போட்டியிடுகின்றா விஷால் ?

ஆர்.கே நகர் இடைதேர்தலில் போட்டியிடுகின்றா விஷால் : செய்தி

இந்த மனிதருக்கு என்னாயிற்று? தேர்தல் என அறிவித்தால் இவருக்குள் ஏதோ ஒரு சாமி இறங்குகின்றது.

நடிகர் சங்க தேர்தல் என்றால் இறங்குகின்றார், தயாரிப்பாளர் சங்க தேர்தல் என்றாலும் இறங்குகின்றார், இப்பொழுது சட்டமன்ற தேர்தலுக்கும் வந்துவிட்டார்

இனி ஐ.நா சபை தேர்தலுக்கு செல்வார் போல

இவர் வாக்கை பிரிக்க இறங்குகின்றார் என்பது சொல்லி தெரியவேண்டியதில்லை, சரி விஷால் இறங்கிவிட்டால் இனி சரத்குமார் இறங்காமலா இருப்பார்

அவர் வந்தால்தானே இனி விறுவிறுப்பு

ஆனால் சரத்குமாரும் ராதிகாவும் களத்திற்கு வந்தால் பின்னால் சிம்புவும் ஓடிவருவாரே??

தேர்தலில் வோட்டுக்கு பணம் கொடுத்தால்தானே சிக்கல்? ஒரே ஒருவருக்கு மொத்தமாக கொடுத்து அழைத்துவிட்டால் என்ன சிக்கல் எனும் இந்த திட்டம் மகா தந்திரமானது

ஆனானபட்ட பால் சர்காரியாவினையே ஓட வைத்த தமிழகத்திற்கு இந்த எலெக்சன் கமிஷன் எல்லாம் எம்மாத்திரம்

விஷால் வந்துவிட்டார் அல்லவா? டேய் தமிழன் நாட்டில் வடுகனுக்கு தேர்தலில் நிற்கும் அளவுக்கு தைரியம் வந்துவிட்டதா? என சீமான் கத்துவது யாருக்காவது கேட்கின்றதா

அன்னார் வீட்டில் இருந்து அப்படி கத்திகொண்டு ஓடிவந்து கொண்டிருக்கின்றார், இனி மைக் அருகில் வரும்பொழுது நமக்கெல்லாம் கேட்கும்

இன்னும் என்னென்ன கூத்துக்கள் எல்லாம் நடக்க போகுதோ தெரியவில்லை

கண்ணெதிரே தோன்றினார் குண்டு கல்யாணம்…

சற்றுமுன் ஒரு கடைக்குள் நுழையும் பொழுது அவர் நின்றுகொண்டிருந்தார், அதே உருவம் அந்த உருவத்திற்கு ஏற்ற வட்ட முகம், எங்கோ பார்த்தது போல இருக்கின்றது என உற்றுபார்த்தால் தில்லு முல்லு ரஜினியுடனும், அதிமுக மேடையிலும் பார்த்தே அதே முகம். அந்த குண்டு கல்யாணம்

திரையில் பார்ப்பது போலவே இருந்தார், ஜெயலலிதா கட்சியில் ஏன் அவர் இணைந்தார் என்பதற்கு பல காரணங்களில் சில காரணம் உடனே விளங்கியது அதாவது அவ்வளவு கெத்தாக நின்றுகொண்டிருந்தார், பார்வை உட்பட‌

“அண்ணே.. அம்மா நம்மள இப்படி விட்டுட்டு போயிருச்சே அண்ணேன்ன். இனி தமிழ்நாட்டுக்கு யார் இருக்கா அண்ணே.. ” என கட்டிபிடித்து அழ ஆசைதான், ஆனால் பொதுஇடம் என்பதால் உணர்ச்சியினை கட்டுபடுத்த வேண்டியதாயிற்று..

மனிதர் வெகு பிசியாக போனை பார்ப்பதும், நூடுல்ஸ் பாக்கெட்டை புரட்டுவதுமாக இருந்தார், பார்த்து புன்னகைத்தால் புன்னகைத்துவிட்டு மறுபடியும் நூடுல்ஸ் பாக்கெட்டுக்குள் தலையினை விட்டு தேடினார்

அய்யா இப்பொழுது அரசியல் கூட்டங்களில் உங்களை காண முடியவில்லையே ஏன் என்றவுடன் சிலிர்ந்துவிட்டார், “இப்பொழுதும் பேசிகொண்டிருக்கின்றேன்..” என சொல்லிவிட்டு மறுபடியும் போனிலும் நூடுல்ஸிலும் புகுந்துகொண்டார்

அய்யா எந்த அணி தினகரனா பழனிச்சாமியா? அக்கட்சியின் எதிர்காலம் என்னாகும் என கேட்க வாய் வரை வார்த்தை வந்தது, கேட்டிருக்கலாம் இடம், பொருள், ஏவல் என்பதெல்லாம் பிரச்சினை இல்லை

ஆனால் இம்மூன்றையும் தாண்டி உருவம் என்றொரு விஷயம் உண்டல்லவா? ஏதும் கேட்டு, “என்னடா சொன்னாய். ஓங்கி அடித்தால்..” என கிளம்பிவிட்டால் என்ன செய்வது? அதனால் கேட்கவில்லை

கொஞ்சம் பேசியிருந்தால் போனவருடம் மோடி வந்து திறந்த விவேகானந்தர் சிலை பக்கத்தில்தான் இருக்கின்றது என சொல்லியிருப்பேன் , , அதன் பின் என்னை அள்ளிகொண்டுதான் சென்றிருப்பார்கள் என்பது தெரிந்ததால் நாவை மிக கஷ்டபட்டு கட்டுபடுத்திவிட்டு நகர்ந்துவிட்டேன்

அத்தோடு நகர்ந்தால் அவரோ போனில் மனைவியிடம் “அம்மா.. அம்மா சொல்லு அம்மா” என அதி தீவிரமாக ஒவ்வொரு நூடுல்ஸ் பாக்கெட்டாக வாட்சப்பில் காட்டிகொட்டிருந்தார், “அம்மா இதாம்மா என அவர் கத்திகொண்டிருந்தது கடை முழுக்க எதிரொலித்துகொண்டிருந்தது

ஆக எப்பொழுதும் “அம்மா.. அம்மா” என கத்தவேண்டும் என்றொரு கட்டம் அவர் ஜாதகத்தில் நிரந்தரமாக அமைந்துவிட்டது …

விஞ்ஞானம் இருந்தா போதுமுங்க…

“என்னங்க பெரிய பார்பான் அதிகாரம்? அறிவு எல்லாம் , விஞ்ஞானம் இருந்தா போதுமுங்க,

தாழ்த்தபட்டவன் படிச்சி பாலம் கட்டுனா அது நிக்காதா? தாழ்த்தபட்டவன் ஊசி போட்டா நோயாளி பொழைக்கமாட்டானா? இதெல்லாம் நீங்க யோசிக்கணுமுங்க…” என சொன்னவர் பெரியார்

இதோ வெள்ளத்தில் எத்தனையோ புது பாலங்கள் அடித்து செல்லபடுகின்றன, யார் கட்டியது என்றால் சாட்சாத் திராவிட ஆட்சிதான், திராவிட புரட்சியில் விளைந்த ஆட்சிதான்

இதை சொன்னால் இப்பொழுது ஓடிவந்து நீ ஆர்எஸ்எஸ் என்பார்கள், அது காசு கொடுத்து எழுதவைக்கும் நாய் நீ என்பார்கள்.

அந்த ஆர்ஸ்எஸ் அமைப்பை விட மகா ஆபத்தானவர்கள் இந்த போலி திராவிட கும்பல்

(எப்படியோ அவ்வப்போது நாமும் ஒரு ஆர் எஸ் எஸ் என நிரூபிக்க வாய்ப்பு கிடைத்துவிடுகின்றது, வாய்ப்பு கிடைக்கும் பொழுது நிரூபித்துவிட்டு ஓடி விட வேண்டும் இல்லாவிட்டால் சங்க்பரிவார் அமைப்புகள் சம்பளம் தராது)

ஒக்கி புயல் ஓங்கி அடிக்குது…..

ஒக்கி புயல் பற்றி முன்கூட்டியே மத்திய அரசு எச்சரிக்கவில்லை: பினராயி விஜயன் குற்றச்சாட்டு

குமரி போலவே தென் கேரளாவிலும் ஓக்கி புயல் அகதளம் செய்திருக்கின்றது, மழை கேரளாவிற்கு புதிது அல்ல‌ வெறும் கனமழை வரும் என எதிர்பார்த்த கேரளம் புயலை எதிர்கொள்ளமுடியாமல் திகைத்து நிற்கின்றது

உண்மையில் மத்திய அரசு புயல் பற்றி எச்சரிக்கவில்லை, இதனை பிரணாய் விஜயன் அழுத்தி சொல்கின்றார். வானிலை இலாக்காவினை கட்டுபாட்டில் வைத்திருக்கும் அரசு மிக துல்லிய தகவல்களை கொடுத்திருக்க வேண்டும் என்கின்றார்

அவர் தைரியம் அப்படி

தமிழகத்திலும் ஒரு முதல்வர் இருக்கின்றார், வாய் திறக்கட்டும் பார்க்கலாம்???


“அண்ணே இப்போ என்ன நடந்துட்டு, ஒரு பாலம் இடிஞ்சிட்டு அவ்வளவுதானே? இதுக்கு ஏண்ணே குதிக்கிறீங்க‌

டேய் மக்களோட வரிபணம்டா

பின்ன இது தெரியாதா? ஆனா வெள்ளத்தில் இடிஞ்சதுகு யார் என்ன செய்யண்ணே? புரியாம பேசாதீங்க‌

டேய் பாலம் கட்டுறதே வெள்ளம் வரும் காலத்தில் கடந்து போகத்தாண்டா, அப்பொழுது இடிந்தால் எப்படி?

ம்ம் அண்ணே, இப்போ இன்னொரு பாலம் கட்டினா முடிஞ்சி போற விஷயம் இதுக்கு ஏண்ணே

அப்படியா,, எப்படி கட்டுவீங்க‌

அதுக்கு டெண்டர் விட்டு கட்டுவோம்

ஓஹோ அதாவது இன்னொரு பாலம் கட்டி, அதுல கமிஷன் அடிக்க‌

ஹிஹிஹிஹ்

இதானடா உங்க திட்டம்

அப்படி இல்லண்ணே, உடைஞ்ச பாலத்த உடனே கட்டி மக்கள் சேவை செய்வோம்ணே

அடேய் கட்டும்போதே ஒழுங்கா கட்டினா என்னடா?

இப்படி உடைஞ்சாத்தாணே நாம திரும்ப கொடுத்து மக்கள் நம்பிக்கைய பெற முடியும்

அட நாயே நீ எல்லாம் ஏண்டா அந்த பாலத்துக்கு அடியில நிற்காமல் போயிட்ட..”


வேலூரில் சீதாராமைய்யர் என்றொருவர் இருந்தாராம், பஞ்சாங்கம் எல்லாம் எழுதியிருக்கின்றாராம்

அவர் எழுதிய பஞ்சாங்கபடி கன்னியாகுமரியில் இந்த கார்த்திகையில் வெள்ளைம் வரும் என எழுதபட்டிருந்ததாம், அது அச்சு பிசகாமல் நிறைவேறிவிட்டது என பஞ்சாங்க விசுவாசிகள் கொண்டாடிகொண்டிருக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் மேல் எல்லாம் நம்பிக்கை இல்லை. குஷ்பு முதல்வர் ஆவார், மத்திய அமைச்சர் ஆவார் என்ற குறிப்புகளோடு பஞ்சாங்கம் எழுதபட்டிருந்தால் ஒழிய சங்கம் எந்த பஞ்சாங்கத்தையும் நம்பாது.

 

கன்னியாகுமரி மாவட்ட பேரழிவினை தேசிய பேரிடராக மாற்றுவதில் அடங்கியிருக்ன்றது பொன்னார், தமிழிசையின் வெற்றி

ஆனால் அவர்களோ மோடியிடம் பேசினோம், அவர் செயலருடன் விவாதித்தோம் என்றளவில் இருக்கின்றார்கள்

இந்த புயல் அவர்களின் டெல்லி செல்வாக்கு எப்படி இருக்கின்றது என சோதிக்க நல்ல சவால்

ஆனால் இவர்களோ விவேகானத்தர் பாறையில் முட்டி முட்டி அழுவார்கள் போலிருக்கின்றது, அவ்வளவுதான் இவர்களுக்கு டெல்லியில் இடம்


 

ஜெயாவிற்க்கு மகள் இருக்கிறார்.. அதிர்ச்சி கிளப்பும் அண்ணன்…

முன்பெல்லாம் சசிகலா குடும்பத்தில் இருந்துதான் புதிய புதிய ஆட்களாக அறிமுகம் ஆனார்கள்

திவாகரன், பாஸ்கரன், தினகரன், ராவணன், சிவகுமார், வெங்கடேஷ், மகாதேவன் என வந்து வந்து குதித்தார்கள் மிகபெரிய அந்த வரிசை விவேக் வரை வந்து முற்றுபுள்ளி பெறும் நிலையில் இருக்கின்றது

இது முடிந்ததால் இப்பொழுதுதான் ஜெயா பக்கத்து வரிசை தொடங்குகின்றது

தீபா, மாதவன், தீபா கார் டிரைவர் காமெடிகளை தாண்டி அம்ருதா வந்து, இப்பொழுது ஜெயலலிதாவிற்கு ஒரு சகோதரி இருந்தார், அவர் பெயர் சைலஜா என்ற அளவில் வந்து நிற்கின்றது

இது கொஞ்சம் கவனிக்கதக்கது

சைலஜா என்பவர் இப்பொழுது இல்லை எனினும், முறையான ஆவணங்களை சமர்பித்தால் போயஸ் கார்டன் வீட்டில் அவர் வாரிசுக்கும் பங்கு உண்டு

ஜெயராம் எனும் ஜெயலலிதா தந்தைக்கு சந்தியா இரண்டாம் மனைவி, ஜெயராம் இறந்தபின்னும் சந்தியாவிற்கு சைலஜா பிறந்திருக்கின்றார் என்பதுதான் இப்பொழுது கிளம்பும் செய்தி

முன்பு சந்தியா மகள் இந்தியா ஆள்வார் என ரைமிங்காக சொல்லிகொண்டிருந்தவர்களை காணவில்லை, சந்தியாவின் முதல் மகள் இந்தியா ஆண்டால், இரண்டாம் மகள் என்ன பாகிஸ்தானையா ஆள்வார்? என கேட்டிருக்கலாம்

இன்னும் ஜெயா பக்கம் யாரெல்லாம் கிளம்புவார்களோ தெரியாது, ஆனால் கிளம்புவார்கள் போல தெரிகின்றது

போயஸ் கார்டன் வீடு, தமிழிசை வெட்டிய கேக் போல ஆகி ஆளாளுக்கு ஒரு உருண்டை கிடைகலாம் போல தெரிகின்றது.

இவ்விஷயத்தில் ராமசந்திரன் லக்கிமேன். அவர் செத்து 30 ஆண்டுகள் ஆனபின்பு கூட ஒருவரும் அவர் மகன் என சொல்லிகொண்டு வரவே இல்லை

(நாமாக ஏதும் சொல்லவில்லை, சொல்லவும் முடியாது. சொன்னது ஜெயாவின் சகோதரர், அவரது பேட்டி இணைக்கபட்டிருக்கின்றது..)