ஆர்.கே நகர் இடைத்தேர்தல் களைகட்ட தொடங்கியாயிற்று….

இந்த ஆர்.கே நகர் இடைத்தேர்தல் களைகட்ட தொடங்கியாயிற்று, இன்னும் வெறும் 20 நாள் சூட்டிங் என விஷால் மேக் அப்புடன் வந்துவிட்டார்

வைகோ நடுவுல கொஞ்சம் பக்கம் காணோம் விஜய் சேதுபதி போல ஆகி, “பாஜகவா அய்யய்யோ அது மதவாத கட்சி, ஸ்டாலின் அண்ணே நல்லாஇருக்கியா அண்ணே..” என சென்று சேர்ந்துவிட்டார்

அவர் தலையில் அடிபட்டிருக்க்கின்றது என அறியாத ஸ்டாலினும் வரவேற்றிருக்கின்றார்

ஆக இப்போதைக்கு திமுக, தினகரன், மதுசூதனன், விஷால், பாஜக‌ என ஐம்முனை போட்டி நடக்கின்றது.

இது போக சீமான் கோஷ்டியும் களமிறங்கலாம் , சீமானை பற்றி ஒன்றும் சொல்வதற்கிலை, யார் பாக்கெட்டில் பணம் இருக்கின்றதோ அதை பொறுத்து அன்னாரின் நகர்வு இருக்கும், அவர் வழக்கம் போல் கட்சியினை கலைப்பேன் என்றேல்லாம் மிரட்டுவார்

அவர் கலைத்த கலைப்பெல்லாம் கடந்த தேர்தலிலே பார்த்தாயிற்று

இந்த தேர்தலில் விஜயகாந்த் என்பவர் கட்சிதான் பாவம், தமிழகத்தின் பிரதான எதிர்கட்சியாக இருந்த, மிக பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய அக்கட்சி களத்திலே இல்லை

ஆனால் அவரை தவறாக வழிநடத்திய மதிமுக திமுகவோடு ஓட்டிகொண்டிருக்கின்றது

கடந்த பொதுதேர்தலிலே இப்படி வழிவிட்டிருந்தால் விஜயகாந்த் கலைஞரோடு ஒட்டியிருப்பார், அதிமுக ஆட்சிக்கு வந்திருக்காது இன்னும் என்னவெல்லாமோ நடந்திருக்கும்

என்ன செய்ய, தமிழகத்தின் தலைவிதி அப்படி இருந்திருக்கின்றது

இந்த கொடுமைகளை காணமுடியாமல்தான் விஜயகாந்த் சிங்கப்பூர் சென்றுவிட்டாரோ என்னமோ??

இதில் சுத்த வெவஸ்தை கெட்ட கட்சி சாட்சாத் காங்கிரஸ்தான்

குஷ்புவினை மட்டும் நிறுத்தினால் அசால்ட்டாக வெற்றியினை அள்ளி கொண்டு வருவார், ஆனால் தமிழகத்தில் மறந்தும் காங்கிரஸ் வளர்ந்துவிட கூடாது என நினைக்கும் காங்கிரசார் எப்படி விடுவார்கள்?

காங்கிரசுக்கு எதிரிகள் வேறு எங்கும் அல்ல, அங்கேதான் நிறைய இருக்கின்றார்கள்

நீங்கள் வருத்தபட வேண்டாம் தலைவி, இப்படியே நீடித்தால் நீங்கள் தனிகட்சி காணுங்கள், நொடிப்பொழுதில் முதல்வராகலாம்

எல்லா கட்சியிலும் குஷ்புவிற்கு ரசிகர்கள் இருக்கின்றார்கள், அவரை தலைவராக மனதிற்குள் கொண்டாடுகின்றார்கள். தலைவி மட்டும் களமிறங்கிவிட்டால் எல்லா கட்சியும் காலி என்பது மட்டும் உண்மை

ஏன் இந்த விஷாலே தன் வோட்டை தலைவிக்குத்தான் செலுத்துவார்

அண்ணே நீங்க வசமா மாட்டிகிட்டீங்க….

அண்ணே நீங்க வசமா மாட்டிகிட்டீங்க, பிரபாகரன் ஒரு மாவீரன், வீரத்திற்கு எடுத்துகாட்டுண்ணு சிங்களனே சொல்லிட்டான்

யார்டா சொன்னா??

சிங்கள புத்த குருண்ணே, அப்படியே சரத் பொன்சேகாங்கிற தளபதி கூட சொல்லிருக்காரு. அந்த சரத் சும்மா இல்லண்ணே பிரபாகரன் வச்ச குண்டுல 27 தையலோட பொழைச்சவரு, அவரே பிரபாகரன பத்தி பெருசா பேசிட்டாரு, இனி நீங்க என்ன எழுதுனாலும் நடக்காது ஹிஹிஹிஹி

டேய் ஏன் சொன்னாங்க‌

அவர் வீரம் அப்படிண்ணே

அடேய் இந்த பிரபாகரன் சக போராளி இயக்கத்தை கொன்றதில் யாருக்கு லாபம்? யார் செய்திருக்க வேண்டும்?

சிங்களன்னே

பிரபாகரனுக்கு பின்னால போராட்டம் நடந்திருந்தா அது எவ்வளவு பெரும் கொழும்பு சிக்கல், அப்படி ஒருத்தனுமே போராட வராம செஞ்சிட்டு போனது யாரு, இதுல யாருக்கு லாபம்?

சிங்களனுக்கு

இனி யார் பிரபாகரன் படம் பிடிச்சி தூக்கினாலும் ஏய் புலின்னு சொல்லி, ஈழகுரல் எழும்பாம அடக்குறதுல யாருக்கு லாபம்?

சிங்கணனுக்கு

அமைதிபடை எங்கே போச்சி

இலங்கைக்குண்ணே

அது கூட சண்டை யார் போட்டிருக்கணும்

சாட்சாத் சிங்களண்ணே

ஆனா போட்டது யாரு

புலிகள்ணே எங்க வீரம் அப்படி

அப்போ யாரு அமைதிபடை கிட்ட இருந்து தப்பிச்சி நிம்மதியா இருந்தது

சிங்களண்ணே

ஆக சிங்களன் செய்ய வேண்டிய வேலை எல்லாம் செஞ்சி , அவன் பண்ண வேண்டிய கொலை எல்லாம் பண்ணி, அமைதிபடையினை விரட்டியது எல்லாம் யார்ட்டா?

ஹிஹிஹி பிரபாகரண்ணே

பின்ன அந்த சிங்களனுக்கு அவன் நல்லவனாதாண்டா தெரிவான்

ம்ம்,, அப்படிய்யாணே

பின்ன, அவ்வளவு நல்ல சிங்களன் எங்கே ஈழமக்களுக்கு சமஷ்டி அல்லது ஒரு தீர்வு கொடுக்கட்டும் பார்க்கலாம்

அதெல்லாம் கொடுக்கமாட்டாங்கண்ணே

அப்போ உண்மையிலே பிரபாகரன் தமிழருக்கு போராடியிருந்தா அவர்களுக்கு எதிரிதானடா? அவங்களுக்கு உதவி செஞ்சிட்டதாலதானடா இப்போ உத்தமன்னு கிளம்புறாங்க..

என்னமோண்ணே, குழப்பி விட்டுட்டீங்க. பொறுங்க ஒழுங்கா விசாரிச்சிட்டு வாரேன்

புனித தோமா பற்றி தெரியாமல் எழுதிவிட்டாய் என பலர் சீறுகின்றார்கள்…

Image may contain: 1 person

புனித தோமா பற்றி தெரியாமல் எழுதிவிட்டாய் என பலர் சீறுகின்றார்கள். உலக வரலாற்றை எல்லாம் தேடியவன் தோமாவின் வரலாற்றை தேடாமல் இருப்ப்போமா?

இயேசுவின் 12 சீடர்களில் தாமஸ் எனும் தோமையாரும் ஒருவர், எங்கோ பாமரராய் சுற்றி திரிந்த அவரை இயேசு சீடராக்குகின்றார்

ஆனால் இயேசு உயிர்த்ததை நம்பமாட்டேன் என அடம்பிடித்தபொழுது இயேசு வந்து இதோ என் காயம் என காட்டி அவரை நம்பவைத்து முழுமையாக ஆட்கொண்டார்

இத்தோடு பைபிள் புனித தாமஸ் என்பவரை பற்றி முடித்துகொள்கின்றது, அதன்பின் பைபிள் ஒன்றும் சொல்லாது

என்னதான் ஆனார் தோமா?

அவரும் போதித்திருக்கின்றார், ஒரு நற்செய்தியும் எழுதியிருக்கின்றார். உண்மையில் மத்தேயு, மார்க்,லூக்கஸ், ஜாண் என்பவரை போல பலர் நற்செய்தி எழுதியிருக்கின்றார்கள்

ஜேம்ஸ் எனும் யாகப்பர் எழுதியிருக்கின்றா, புனித தோமாவும் எழுதியிருக்கின்றார்

ஆனால் பைபிளில் சேர்க்கவில்லை ஏன்? ஏன் என்றால் அதில் சில முரண்பாடுகள் உண்டு

“கேளுங்கள் தரப்படும்..” என இயேசு சொன்னதாக மற்ற நற்செய்தி சொன்னால், “தரப்படும் வரை கேளுங்கள்..” என தோமாவின் நற்செய்தி சொன்னது, இப்படிபட்ட முரண்பாடு காரணமாக நீக்கிவிட்டார்கள்.

இயேசு 5 அப்பத்தை பலுகிபெருக பண்ணினார் என மற்ற நற்செய்தி சொன்னால், அல்ல‌ மக்களிடம் இருந்த உணவினை மொத்தமாக சேர்த்து பின் பங்கிட்டு கொடுத்தார் என்ற அளவில் தோமாவின் நற்செய்தி இருந்தது.

தோமா இயேசுவினை முழுக்க முழுக்க தத்துவாதியாக பார்த்தவர், அதனால்தான் இயேசு உயிர்த்துவிட்டார் என்பதை அவர் நம்பவே இல்லை, முதலில் நம்பவே இல்லை. அவர் காயத்தை தொட்டுபார்க்காமல் நம்ப மாட்டேன் என அவர் சவால்விட்டது எல்லாம் இந்த அடிப்படையில்தான்

சீடர்களுக்கும் தோமாவிற்கும் ஒரு இடைவெளி இருந்துகொண்டே இருந்திருக்கின்றது

தோமா இந்தியா வந்தார் என சொல்பவர்கள், பவுல் என்பவர் கண்ட தரிசனத்தை மறக்கின்றார்கள், அது பைபிளில் தெளிவாக இருக்கின்றது

அதாவது பவுல் என்பவர் ஆசியா மைனர் வழியாக கிழக்கு நோக்கி வந்து கிறிஸ்துவினை பரப்பத்தான் திட்டமிட்டார். ரோமர் கொன்ற யேசுவினை ஐரோப்பிய பேரரசின் தலைநகரான ரோம் பக்கம் போதிக்க அவருக்கு தயக்கம் இருந்தது

அப்பொழுது அவர் தரிசனத்தில் மாசின்டோனியாவின் ஒருவன் வந்து தங்கள் பக்கம் அழைக்க, இறைவன் கிழக்கே செல்வதை அனுமதிக்கவில்லை என உணர்ந்து மேற்கு நோக்கி சென்றார்

பின் ரோமில்தான் பவுலும், பீட்டரும் அவர்கள் தொடக்கத்தில் அஞ்சியது போலவே கொல்லவும் பட்டார்கள்.

ஆம் இயேசுவின் நற்செய்தி கிழக்கு பக்கம் அறிவிக்கபட கடவுள் உத்தரவு கொடுக்கவில்லை என சொல்வது பைபிள்தான்

அந்த காலகட்டத்தில் எல்லோரும் பீட்டர், பவுல், பிலிப்பு என எல்லோரும் ஐரோப்பா நோக்கி செல்ல தோமா மட்டும் இந்தியா வருவாரா?

நிச்சயம் இல்லை, வாய்ப்பே இல்லை

ஆனால் என்ன நடந்தது? தோமா என்ன ஆனார் என்பது யாருக்கும் தெரியாது. ஆனால் அவருக்கு சீடர்கள் இருந்தார்கள்

தோமா வழி கிறிஸ்தவன் என்றொரு பிரிவே இருந்தது, இன்றுள்ள சிரியன் ஆர்தடாக்ஸ் எனும் சபையின் மூலம் அது

அதாவது அன்று போப் இல்லை, திருச்சபை தொடங்கபடவில்லை, பவுல் என்பவர் கொரிந்து, தெசலோனிக்கா, பிலிப்பு என எல்லா ஊர்களிலும் சபை தொடங்கிகொண்டிருந்தார்

சிரியபக்கம், அந்தியோக் பக்கம் தோமா தனி சபை நடத்தினார்கள் என்கின்றார்கள்,

அந்த தோமாவின் சீடர்கள், அந்த சபையினர் கேரளா பக்கம் வந்ததாகவும் அவர்கள் அந்த சிரியன் மலபார் சபையினை தொடங்கி வைத்ததாகவுமே வரலாறு சொல்கின்றது

அதுவும் கிபி 70க்கு பின்னால் ரோமையர் எருசலேம் ஆலயத்தை அழித்து யூதமோ, கிறிஸ்தவமோ தொலைத்துவிடுவோம் என எச்சரிக்கை செய்த பின்பு

ரோமருக்கு அஞ்சி யூதர்கள் கொச்சி வந்தார்கள் அல்லவா? அந்த காலகட்டத்தில் தோமா சபையாரும் மலபார் பக்கம் வந்திருக்க வாய்ப்பு உண்டு என்கின்றது வரலாறு

அப்படி கேரளாவில் இருந்து கிறிஸ்தவர் சென்னை மயிலாப்பூர் பக்கம் வந்திருக்கலாம், கொல்ல்பட்டிருக்கலாம்

அது தோமா சபையின் ஒருவராக இருக்கலாமே அன்றி தோமா என்பது எங்கும் உறுதிபடுத்தபடவில்லை

ஆக தோமா வழிவந்த சபையில் யாரோ நடமாடியிருக்கலாமே தவிர, தோமாதான் வந்தார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை

இதுவரை இல்லை

போர்த்துகீசியரிடம் தகவல் சென்றபொழுது, அப்படியா ?? அவர் கல்லறையா? அப்படியே இருக்கட்டும் என்றார்கள், உண்மையில் சாந்தோம் என்பது செயின்ட் தாமஸ் என்பதன் திரிபு சாந்தா தோமஸ் என்று போர்த்துகீசிய மொழியில் தோமாவினை அழைக்கும் சொல்

இது சாந்தா தோமஸாக இருக்கலாம் என்று சொன்னார்களே தவிர, முழு ஆதாரம் அவர்களிடமும் இல்லை

ஆனால் வெள்ளையர் ஆட்சியில் அது நிலைபெற்றது

முழு ஆராய்ச்சிகள் ஒருநாளும் நடக்கவே இல்லை, எல்லாம் நம்பிக்கையின் அடிப்படையில் சொல்லபட்டவை

இதனிடையே ஆப்கனில் தோண்டபட்டு கொண்டு செல்லபட்ட எலும்புகளை தோமாவின் சீடர்கள், இது தோமாவின் எலும்பு அவர் ஆப்கானுக்கு சென்றிருந்தார், (அன்றெல்லாம் அது கிரேக்கர் ஆப்கன் செல்வது எளிது) என ரோமிற்கு கொண்டு சென்ற தகவலும் உண்டு

ஒரு விஷயம் உண்மை

கத்தோலிக்க திருச்சபையிலும் மறைக்கபட்ட பக்கங்கள் ஏராளம் உண்டு, பல விஷயங்களை அது முழுக்க ஆராய்வதே இல்லை

அப்படியா, ஒஹோ அப்படியே இருக்கட்டுமே என விட்டுவிட்டார்கள், அதில் ஒன்றுதான் தோமா சர்ச்சை

எல்லா இயேசுவின் சீடர்களும் ஐரோப்பாவில் முண்டிய காலத்தில் தோமா மட்டும் கிழக்கே வந்தார் என்பதெல்லாம் கடைந்தெடுத்த பொய்கள்

அப்படி வருவது சுலபம் என்றால் மீதி 10 சீடர்களும் ஏன் வரவில்லை என கேட்டால் பதில் இவர்களிடம் இருக்காது

அதனால் அடித்து சொல்லலாம், ஒரு விஷயம் சரியான வாதம்

சிலுவை என்பது எந்தமொழி சொல்? இலத்தீனிலும் ஆங்கிலத்திலும் அது குரூஸ் அல்லது கிராஸ்

சிலுபே என்பது சிலுவையினை குறிக்கும் சீரிய மொழி சொல்

சீரியன் மலபார் சபை தொடங்கபட்டபொழுது சிலுவை எனும் சொல் இங்கு வந்தது, நிலைபெற்றும் விட்டது.

இன்றுவரை அச்சபை தனி சபையே, உலகெல்லாம் கிறிஸ்மஸ் கொண்டாடும்பொழுது கொண்டாடமாட்டார்கள், ஈஸ்டரும் அப்படியே

தனியாக ஒருநாளில் கொண்டாடி, சின்னதம்பி கவுண்டமணி போல் கைதட்டிகொண்டிருப்பார்கள்

ஆக தோமா சிரியா பக்கம் ஒரு சபை நடத்தியிருக்கின்றார், பின்னாளில் அவர் சீடர்கள் அதனை மலையாள மலபார் பக்கம் பரப்பினர் என்பதே ஏற்றுகொள்ள கூடிய வாதம்

அதெல்லாம் இருக்கட்டும்

அண்ணே கிறிஸ்மஸ் பைபிளில் இல்லை, அண்ணே ஈஸ்டர் கொண்டாட பைபிள் சொல்லவில்லை, புனிதர்களை வணங்க பைபிள் சொல்லவில்லை என மல்லுகட்டும் அதிதீவிர கிறிஸ்தவர்கள் எல்லாம்…

தோமா இந்தியா வந்தார் என்பதை மட்டும் நம்புவார்களாம், பைபிளின் எந்த பக்கத்தில் அப்படி சொல்லியிருக்கின்றது?

இதில் மட்டும் பைபிள் தாண்டி நம்புவார்களாம்

தமிழக டிவிக்கள் பெரும் துரோகம் செய்கின்றன‌

இந்த தமிழக டிவிக்கள் குழந்தைகளுக்கும், மாணவ சமூகத்திற்கு எதிராகவும் பெரும் துரோகம் செய்கின்றன‌

ஒரு சேனலில் சிறு குழந்தைகள் எல்லாம் காதை பொத்திகொண்டு ஒரு கையால் மைக் பிடித்தபடி பாடல் பாடிகொண்டே இருக்கின்றனர், அது என்னவோ உலக சாதனை முயற்சி என்பது போல் பெற்றோர்களும் கண்களில் ஆனந்த கண்ணீர் வழிய பார்த்துகொண்டிருக்கின்றாகள்

இதற்கு நல்ல சம்பளம் வாங்கிகொண்டு ரிட்டையர்டு பாடகர்கள் ஜட்ஜ்களாம்

ஒரு டிவியில் பேய்பிடித்து ஆடும் நபர்கள் போல பிஞ்சுகள் ஆடிகொண்டிருக்கின்றன, இங்கும் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் நாசா நேர்முக தேர்வில் பங்குபெறும் குழந்தைகள் போல கைதட்டி உற்சாக படுத்துகின்றார்களாம்

இங்கும் சில ஆட்டகாரிகள் ஜட்ஜாம், ஆட்டகாரிகள் என்னவோ சர்வதேச பொருளாதார விற்பனர்கள் போல இவர்கள் பணிந்து வணங்கி நிற்கின்றார்கள்

இன்னொரு டிவியில் குழந்தைகள் காமெடி ஷோ, சகிக்க முடியவில்லை

இவை எல்லாம் குழந்தைகளை, மாணவர்களின் திசையினை மாற்றிவிடும் கொடூரங்கள். அவர்களுக்கு வயது 6 முதல் 10 வயதுவரை இருக்கலாம். இப்படியே சென்றால் இன்னும் 8 அல்லது 10 வருடம் கழித்து அவர்களுக்கு ஆடல், பாடலை தவிர என்ன தெரியும்?

இப்படி கூத்துகார தலைமுறையினை உருவாக்குவதிலா தமிழகம் ஆரவம் கொண்டிருக்கின்றது???

ஒரு டிவியிலாவது சமூக பொறுப்போ, அறிவை வளர்க்கும் விஷயங்களோ, பெரும் அறிஞர்களை, விஞ்ஞானிகளை மாணவர்கள் உரையாடும் காட்சிகளோ இருக்கின்றதா என்றால் இல்லை

நல்ல விளையாட்டு வீரர்களை அறிமுகபடுத்தி விளையாட்டு ஆர்வத்தை தூண்டுகின்றன என்றாலும் இல்லை

மிகபெரும் துரோகத்தை இந்த டிவிக்கள் செய்கின்றன, வெறும் குப்பையான தலைமுறையினை உருவாக்கிகொண்டிருக்கின்றோம் இவர்களால் நாளை ஒரு நல்ல விஷயமும் தமிழகத்திற்கு விளையாது

அந்த டிவிக்கள் தொழில் அது, அங்கு வரும் ஜட்ஜ்கள் என வருபவர்கள் பணத்திற்காக வந்து அமர்ந்து பல்லை காட்டுவார்கள்

ஆனால் குழந்தைகள் அப்படி அல்ல, இவ்வாறான அழுத்தங்கள் அவற்றிற்கு பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும்

அது தெரிந்தே அனுப்பும் பெற்றொர்கள்தான் முதலில் தண்டிக்கபடவேண்டியவர்கள். தங்களை அறியாமல் இது அவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு செய்யும் பெரும் துரோகம்

பின்னாளில் அது அவர்களுக்கு புரியும், இக்கால குழந்தைகளை அந்த டிவி பக்கம் பார்க்கவிடாமலும், டிவி நிகழ்ச்சிகளில் பங்கு எடுக்கவிடாமல் செய்தலுமே பெற்றோர் பிள்ளைகளுக்கு ஆற்றும் பேருதவியாக இருக்கும்

இந்தியாவில் கிறிஸ்தவம் எப்படி வந்தது?

Image may contain: sky and outdoor

இந்தியாவில் கிறிஸ்தவம் எப்படி வந்ததென்ற ஆராய்ச்சிக்கு பல கோணங்கள், ஆனால் ஏற்றுகொள்ள கூடிய வாதம் இதுதான்

செங்கடல் பகுதிக்கும் கேரளாவிற்கும் சாலமோன் காலத்தில் இருந்தே போக்குவரத்து உண்டு, அப்படி கிறிஸ்தவம் பரவ தொடங்கிய காலத்தில் அது கேரளாவிற்கும் வந்தது.

யூதர்கள் கொச்சின் வந்ததும், இஸ்லாம் கேரளா வந்ததும் அப்படித்தான்

ஆனால் அது கேரளாவினை தாண்டி பரவவில்லை. கேரளாவின் சேரமன்னன் இஸ்லாமாக மாறி மெக்காவில் மரித்தும் கூட கேரளா தாண்டி இஸ்லாம் பரவவில்லை பின் அது வடக்கே இருந்துதான் வந்தது

கிறிஸ்தவமும் அப்படி கேரளாவின் மிகசிறு பகுதியில் முடக்கபட்டபொழுது , போர்த்துகீசியர் வந்தபின்பே எழும்பிற்று

இந்த தோமா வந்தார், திருக்குறள் எழுதினார் இந்தியா முழு தோமா வழி கிறிஸ்தவ நாடு என்பதெல்லாம் இந்த நூற்றாண்டின் பெரும் பொய்கள், அவை பொய் எனவும் நிரூபிக்கபட்டாயிற்று

ஆனால் திருகுறளில் சைவ, பௌத்த, சமண மத தாக்கம் உண்டு அதனை மறூக முடியாது

இப்படிபட்ட வரலாற்றில் முதன் முதலில் இந்தியாவிற்கு கிறிஸ்துவத்தை தாங்கி வந்த முதல் நபர் பிரான்சிஸ் சேவியர் என்பவர்தான். அவர்தான் முதல் கிறிஸ்தவ போதகர்

பெரும் பேராசிரியர், பாரீஸில் பணிபுரிந்தவர் கிட்டதட்ட 30 வயதில் அவருக்கு இக்னேசியஸ் என்பவரால் ஞானம் பிறந்து, உடனே சந்நியாசி கோலம் ஏற்று அன்று யாரும் வரதயங்கிய இந்தியா பக்கம் தயக்கமின்றி ஒடிவந்தார்

கோவா வந்திருக்கின்றார், பின் தென்னகம் வந்திருக்கின்றார் குமரி தூத்துகுடி பகுதிகள் எல்லாம் அவர் கால்பட்ட இடங்கள்

மணப்பாட்டிலும், நாகர்கோவில் கோட்டாரிலும் அவர் கையால் கட்டிய ஆலயங்கள் இன்றும் உண்டு.

விவேகானந்தர் பாறை கூட முன்பு சேவியர் பாறை என்றுதான் அழைக்கபட்டது, அதில் அவர் அமர்ந்து ஜெபித்தார் என்ற வரலாறும் உண்டு, ஒரு சிலுவையும் அதில் இருந்தது

கன்னியாகுமரி மக்கள் அதனை சேவியர் பாறை என்றே அழைத்தார்கள், பின் விவேகானந்தர் மண்டபம் கட்டபட்டபொழுது இந்த சர்ச்சை வந்தது, ஆனால் பின் விவேகானந்தருக்கே மண்டபம் அமைக்கபட்டு அது நிலைத்தும் விட்டது

அதன் பின் மலேயா, ஜப்பான், மலாக்கா, தைவான், ஜப்பான் என்றெல்லாம் சுற்றிவிட்டு இன்றைய மக்காவ் பக்கம் உயிர்விட்டிருக்கின்றார்

அவரின் எலும்பை ஐரோப்பா எடுத்து செல்ல வசதியாக சுண்ணாம்பு போட்டு புதைத்தார்கள், ஆனால் தோண்டிபார்த்தால் உடல் அழியவே இல்லை

அந்த உடல் இன்றும் கோவா ஆலயத்தில் உண்டு, அழியாமல் உண்டு.

பின் அவர்சார்ந்த இயேசுசபை குருக்கள் தென்னகம் வந்து சென்னை லயோலா , திருச்சி செயிட் ஜோசப், பாளை செயின்ட் சேவியர்ஸ் என புகழ்மிக்க கல்லூரிகளை தொடங்கினார்கள், அது இன்றுவரை நடக்கின்றது

அவைகளுக்கு எல்லாம், அந்த கல்வி பணிக்கு எல்லாம் மூலம் இந்த பிரான்சிஸ் சேவியர் என்பவரே

அவர் பெயர் பிரான்சிஸ், சேவியர் எனும் கோட்டை குடும்பத்தின் பெயரில் பிரான்சிஸ் சேவியர் ஆனார், அது தமிழில் சவேரியார் என மாறிற்று

இந்தியாவிற்கு கிறிஸ்துவத்தையும், சேவைகளையும் கொண்டுவந்த முதல் நபர் அவர்தான், அவரே தான். அவர் எழுதிய கடிதங்கள்தான் ஐரோப்பியர் இந்தியாவில் பல காரியங்கள் செய்ய ஓடிவர காரணம்

அந்த சவேரியாருக்கு இன்று நினைவுநாள்

உலகமே இன்று அவரின் திருவிழாவினை கொண்டாடுகின்றது, தமிழகத்தில் அவர் காலடி பட்ட இடங்களில் நன்றிகுரிய பிரார்த்தனைகள் நடக்கின்றன‌

கடற்கரை மக்களுக்கு அவர் செய்த தொண்டுகளுக்கு நெகிழ்ந்து பெருமதிப்பு கொண்டு நாகர்கோவில் கோட்டாரில் ஆலயம் கட்ட இடம் வழங்கினார் திருவிதாங்கூர் மன்னன், அங்கு தன் கையால் அவர் ஒரு பீடம் அமைத்தார், அதுதான் இன்று இருக்கும் ஆலயத்தின் உட்பீடம்

பெரு விமரிசைகாக அங்கு இந்த டிசம்பர் 3ல் திருவிழா கொண்டாடபடும், தென்னகத்தில் நடக்கும் மிகபெரும் விழாக்களில் அதுவும் ஒன்று

அங்கு அதன் பெயரே கார்த்திகை திருவிழா

இம்முறை அவர்களை மழையும் புயலும் புரட்டி போட்டிருக்கின்றது, நிலமை மோசமாகத்தான் இருக்கின்றது

கோட்டாறு என்பது ஒரு ஆற்றின்பெயர், அன்று அதன் வழியாக நீர்வழி போக்குவரத்து எல்லாம் நடந்திருக்கின்றது, பின் அது சந்தையும் ஆயிற்று, இன்றும் நாகர்கோவிலின் மொத்த கொள்முதல் சந்தை அதுதான்

அங்கு கடும் வெள்ளம் என்கின்றார்கள், கோட்டார் காட்டாறாக மூழ்கி கிடக்கின்றது என்கின்றனர் சிலர்

சாலைகள் எல்லாம் வெள்ளமாகவும், வாழ்வே பாதிக்கபட்டும் இருப்பதால் இம்முறை கூட்டம் மகா குறைவு என்கின்றார்கள்

நண்பன் ஒருவனை அழைத்தால் அவன் இப்படித்தான் சொன்னான்

“லேய் மக்கா, இங்க நிலம சரியில்ல கேட்டியா, ஷெரியான அழிவுலேய். இன்னும் ஒரு நிலவரமும் ஒழுங்கா தெரியல. ஒரு சுக்கு கூட‌ கிடைக்கல , எங்க பாத்தாலும் வெள்ளம், சோறு பொங்கயே கஷ்டமா இருக்குலேய்

காணிக்கை எல்லாம் மெதுவா போயி போடாலம்லேய் , இப்போ போணும்ம்ணா போட்லதான் போணும்ல மக்கா

மலேசியாவுல மழை பெய்தால லேய்.. மக்கா லேய்..”

 

சமீபத்தில் இந்தியா வந்திருந்தார் ஒபாமா…

மிக சமீபத்தில் இந்தியா வந்திருந்தார் ஒபாமா, பதவி போன பின்பு யார் வந்தாலும் கண்டு கொள்ளமாட்டார்கள் அல்லவா? கடவுளில் ஒருவரே நான் முன்னாள் கடவுள் என வந்தாலும் இங்கு மதிப்பில்லை

அப்படி வந்த ஒபமா சும்மா இருக்கவில்லை மோடியினை சந்தித்து எல்லா மத மக்களையும் சமமாக மதிக்க வேண்டும், எந்த மக்களுக்கும் அவர்கள் விரும்பும் மதத்தை பின்பற்ற உரிமை உண்டு என பேசியிருக்கின்றார்

இந்த ஹாதியா விவகாரம் அவர் காதுக்கு எட்டியிருக்குமோ என்னமோ?

பதிலுக்கு மோடி என்ன சொல்லியிருக்கலாம்

“ஆமாங்க எசமான், இங்கு பெரும் சிக்கலுமில்லை. 7 நாட்டு இஸ்லாமியர் இங்கு வரகூடாது என்றோ, அந்நிய நாட்டு மக்களுக்கு பாரபட்சம் என்றோ இங்கு ஏதுவுமில்லை

உலகின் பெரும்பான்மையான இஸ்லாமியர் இங்குதான் வாழ்கின்றனர், எத்தனையோ நாட்டு அகதிகளுக்கு இந்நாடு மதவேறுபாடுகளை கடந்து தன்னால் முடிந்த உதவிகளை செய்கின்றது

முடிந்தால் பக்கத்தில் பாகிஸ்தான் என்றொரு நாடு இருக்கின்றது, அங்கு சென்று இப்படி இருவரும் சொல்வோமா? வருகின்றீர்களா??” என கேட்டிருந்தால் ஒபாமா ஓடியிருக்க மாட்டாரா?