இந்தியாவில் கிறிஸ்தவம் எப்படி வந்தது?

Image may contain: sky and outdoor

இந்தியாவில் கிறிஸ்தவம் எப்படி வந்ததென்ற ஆராய்ச்சிக்கு பல கோணங்கள், ஆனால் ஏற்றுகொள்ள கூடிய வாதம் இதுதான்

செங்கடல் பகுதிக்கும் கேரளாவிற்கும் சாலமோன் காலத்தில் இருந்தே போக்குவரத்து உண்டு, அப்படி கிறிஸ்தவம் பரவ தொடங்கிய காலத்தில் அது கேரளாவிற்கும் வந்தது.

யூதர்கள் கொச்சின் வந்ததும், இஸ்லாம் கேரளா வந்ததும் அப்படித்தான்

ஆனால் அது கேரளாவினை தாண்டி பரவவில்லை. கேரளாவின் சேரமன்னன் இஸ்லாமாக மாறி மெக்காவில் மரித்தும் கூட கேரளா தாண்டி இஸ்லாம் பரவவில்லை பின் அது வடக்கே இருந்துதான் வந்தது

கிறிஸ்தவமும் அப்படி கேரளாவின் மிகசிறு பகுதியில் முடக்கபட்டபொழுது , போர்த்துகீசியர் வந்தபின்பே எழும்பிற்று

இந்த தோமா வந்தார், திருக்குறள் எழுதினார் இந்தியா முழு தோமா வழி கிறிஸ்தவ நாடு என்பதெல்லாம் இந்த நூற்றாண்டின் பெரும் பொய்கள், அவை பொய் எனவும் நிரூபிக்கபட்டாயிற்று

ஆனால் திருகுறளில் சைவ, பௌத்த, சமண மத தாக்கம் உண்டு அதனை மறூக முடியாது

இப்படிபட்ட வரலாற்றில் முதன் முதலில் இந்தியாவிற்கு கிறிஸ்துவத்தை தாங்கி வந்த முதல் நபர் பிரான்சிஸ் சேவியர் என்பவர்தான். அவர்தான் முதல் கிறிஸ்தவ போதகர்

பெரும் பேராசிரியர், பாரீஸில் பணிபுரிந்தவர் கிட்டதட்ட 30 வயதில் அவருக்கு இக்னேசியஸ் என்பவரால் ஞானம் பிறந்து, உடனே சந்நியாசி கோலம் ஏற்று அன்று யாரும் வரதயங்கிய இந்தியா பக்கம் தயக்கமின்றி ஒடிவந்தார்

கோவா வந்திருக்கின்றார், பின் தென்னகம் வந்திருக்கின்றார் குமரி தூத்துகுடி பகுதிகள் எல்லாம் அவர் கால்பட்ட இடங்கள்

மணப்பாட்டிலும், நாகர்கோவில் கோட்டாரிலும் அவர் கையால் கட்டிய ஆலயங்கள் இன்றும் உண்டு.

விவேகானந்தர் பாறை கூட முன்பு சேவியர் பாறை என்றுதான் அழைக்கபட்டது, அதில் அவர் அமர்ந்து ஜெபித்தார் என்ற வரலாறும் உண்டு, ஒரு சிலுவையும் அதில் இருந்தது

கன்னியாகுமரி மக்கள் அதனை சேவியர் பாறை என்றே அழைத்தார்கள், பின் விவேகானந்தர் மண்டபம் கட்டபட்டபொழுது இந்த சர்ச்சை வந்தது, ஆனால் பின் விவேகானந்தருக்கே மண்டபம் அமைக்கபட்டு அது நிலைத்தும் விட்டது

அதன் பின் மலேயா, ஜப்பான், மலாக்கா, தைவான், ஜப்பான் என்றெல்லாம் சுற்றிவிட்டு இன்றைய மக்காவ் பக்கம் உயிர்விட்டிருக்கின்றார்

அவரின் எலும்பை ஐரோப்பா எடுத்து செல்ல வசதியாக சுண்ணாம்பு போட்டு புதைத்தார்கள், ஆனால் தோண்டிபார்த்தால் உடல் அழியவே இல்லை

அந்த உடல் இன்றும் கோவா ஆலயத்தில் உண்டு, அழியாமல் உண்டு.

பின் அவர்சார்ந்த இயேசுசபை குருக்கள் தென்னகம் வந்து சென்னை லயோலா , திருச்சி செயிட் ஜோசப், பாளை செயின்ட் சேவியர்ஸ் என புகழ்மிக்க கல்லூரிகளை தொடங்கினார்கள், அது இன்றுவரை நடக்கின்றது

அவைகளுக்கு எல்லாம், அந்த கல்வி பணிக்கு எல்லாம் மூலம் இந்த பிரான்சிஸ் சேவியர் என்பவரே

அவர் பெயர் பிரான்சிஸ், சேவியர் எனும் கோட்டை குடும்பத்தின் பெயரில் பிரான்சிஸ் சேவியர் ஆனார், அது தமிழில் சவேரியார் என மாறிற்று

இந்தியாவிற்கு கிறிஸ்துவத்தையும், சேவைகளையும் கொண்டுவந்த முதல் நபர் அவர்தான், அவரே தான். அவர் எழுதிய கடிதங்கள்தான் ஐரோப்பியர் இந்தியாவில் பல காரியங்கள் செய்ய ஓடிவர காரணம்

அந்த சவேரியாருக்கு இன்று நினைவுநாள்

உலகமே இன்று அவரின் திருவிழாவினை கொண்டாடுகின்றது, தமிழகத்தில் அவர் காலடி பட்ட இடங்களில் நன்றிகுரிய பிரார்த்தனைகள் நடக்கின்றன‌

கடற்கரை மக்களுக்கு அவர் செய்த தொண்டுகளுக்கு நெகிழ்ந்து பெருமதிப்பு கொண்டு நாகர்கோவில் கோட்டாரில் ஆலயம் கட்ட இடம் வழங்கினார் திருவிதாங்கூர் மன்னன், அங்கு தன் கையால் அவர் ஒரு பீடம் அமைத்தார், அதுதான் இன்று இருக்கும் ஆலயத்தின் உட்பீடம்

பெரு விமரிசைகாக அங்கு இந்த டிசம்பர் 3ல் திருவிழா கொண்டாடபடும், தென்னகத்தில் நடக்கும் மிகபெரும் விழாக்களில் அதுவும் ஒன்று

அங்கு அதன் பெயரே கார்த்திகை திருவிழா

இம்முறை அவர்களை மழையும் புயலும் புரட்டி போட்டிருக்கின்றது, நிலமை மோசமாகத்தான் இருக்கின்றது

கோட்டாறு என்பது ஒரு ஆற்றின்பெயர், அன்று அதன் வழியாக நீர்வழி போக்குவரத்து எல்லாம் நடந்திருக்கின்றது, பின் அது சந்தையும் ஆயிற்று, இன்றும் நாகர்கோவிலின் மொத்த கொள்முதல் சந்தை அதுதான்

அங்கு கடும் வெள்ளம் என்கின்றார்கள், கோட்டார் காட்டாறாக மூழ்கி கிடக்கின்றது என்கின்றனர் சிலர்

சாலைகள் எல்லாம் வெள்ளமாகவும், வாழ்வே பாதிக்கபட்டும் இருப்பதால் இம்முறை கூட்டம் மகா குறைவு என்கின்றார்கள்

நண்பன் ஒருவனை அழைத்தால் அவன் இப்படித்தான் சொன்னான்

“லேய் மக்கா, இங்க நிலம சரியில்ல கேட்டியா, ஷெரியான அழிவுலேய். இன்னும் ஒரு நிலவரமும் ஒழுங்கா தெரியல. ஒரு சுக்கு கூட‌ கிடைக்கல , எங்க பாத்தாலும் வெள்ளம், சோறு பொங்கயே கஷ்டமா இருக்குலேய்

காணிக்கை எல்லாம் மெதுவா போயி போடாலம்லேய் , இப்போ போணும்ம்ணா போட்லதான் போணும்ல மக்கா

மலேசியாவுல மழை பெய்தால லேய்.. மக்கா லேய்..”

 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s