புனித தோமா பற்றி தெரியாமல் எழுதிவிட்டாய் என பலர் சீறுகின்றார்கள்…

Image may contain: 1 person

புனித தோமா பற்றி தெரியாமல் எழுதிவிட்டாய் என பலர் சீறுகின்றார்கள். உலக வரலாற்றை எல்லாம் தேடியவன் தோமாவின் வரலாற்றை தேடாமல் இருப்ப்போமா?

இயேசுவின் 12 சீடர்களில் தாமஸ் எனும் தோமையாரும் ஒருவர், எங்கோ பாமரராய் சுற்றி திரிந்த அவரை இயேசு சீடராக்குகின்றார்

ஆனால் இயேசு உயிர்த்ததை நம்பமாட்டேன் என அடம்பிடித்தபொழுது இயேசு வந்து இதோ என் காயம் என காட்டி அவரை நம்பவைத்து முழுமையாக ஆட்கொண்டார்

இத்தோடு பைபிள் புனித தாமஸ் என்பவரை பற்றி முடித்துகொள்கின்றது, அதன்பின் பைபிள் ஒன்றும் சொல்லாது

என்னதான் ஆனார் தோமா?

அவரும் போதித்திருக்கின்றார், ஒரு நற்செய்தியும் எழுதியிருக்கின்றார். உண்மையில் மத்தேயு, மார்க்,லூக்கஸ், ஜாண் என்பவரை போல பலர் நற்செய்தி எழுதியிருக்கின்றார்கள்

ஜேம்ஸ் எனும் யாகப்பர் எழுதியிருக்கின்றா, புனித தோமாவும் எழுதியிருக்கின்றார்

ஆனால் பைபிளில் சேர்க்கவில்லை ஏன்? ஏன் என்றால் அதில் சில முரண்பாடுகள் உண்டு

“கேளுங்கள் தரப்படும்..” என இயேசு சொன்னதாக மற்ற நற்செய்தி சொன்னால், “தரப்படும் வரை கேளுங்கள்..” என தோமாவின் நற்செய்தி சொன்னது, இப்படிபட்ட முரண்பாடு காரணமாக நீக்கிவிட்டார்கள்.

இயேசு 5 அப்பத்தை பலுகிபெருக பண்ணினார் என மற்ற நற்செய்தி சொன்னால், அல்ல‌ மக்களிடம் இருந்த உணவினை மொத்தமாக சேர்த்து பின் பங்கிட்டு கொடுத்தார் என்ற அளவில் தோமாவின் நற்செய்தி இருந்தது.

தோமா இயேசுவினை முழுக்க முழுக்க தத்துவாதியாக பார்த்தவர், அதனால்தான் இயேசு உயிர்த்துவிட்டார் என்பதை அவர் நம்பவே இல்லை, முதலில் நம்பவே இல்லை. அவர் காயத்தை தொட்டுபார்க்காமல் நம்ப மாட்டேன் என அவர் சவால்விட்டது எல்லாம் இந்த அடிப்படையில்தான்

சீடர்களுக்கும் தோமாவிற்கும் ஒரு இடைவெளி இருந்துகொண்டே இருந்திருக்கின்றது

தோமா இந்தியா வந்தார் என சொல்பவர்கள், பவுல் என்பவர் கண்ட தரிசனத்தை மறக்கின்றார்கள், அது பைபிளில் தெளிவாக இருக்கின்றது

அதாவது பவுல் என்பவர் ஆசியா மைனர் வழியாக கிழக்கு நோக்கி வந்து கிறிஸ்துவினை பரப்பத்தான் திட்டமிட்டார். ரோமர் கொன்ற யேசுவினை ஐரோப்பிய பேரரசின் தலைநகரான ரோம் பக்கம் போதிக்க அவருக்கு தயக்கம் இருந்தது

அப்பொழுது அவர் தரிசனத்தில் மாசின்டோனியாவின் ஒருவன் வந்து தங்கள் பக்கம் அழைக்க, இறைவன் கிழக்கே செல்வதை அனுமதிக்கவில்லை என உணர்ந்து மேற்கு நோக்கி சென்றார்

பின் ரோமில்தான் பவுலும், பீட்டரும் அவர்கள் தொடக்கத்தில் அஞ்சியது போலவே கொல்லவும் பட்டார்கள்.

ஆம் இயேசுவின் நற்செய்தி கிழக்கு பக்கம் அறிவிக்கபட கடவுள் உத்தரவு கொடுக்கவில்லை என சொல்வது பைபிள்தான்

அந்த காலகட்டத்தில் எல்லோரும் பீட்டர், பவுல், பிலிப்பு என எல்லோரும் ஐரோப்பா நோக்கி செல்ல தோமா மட்டும் இந்தியா வருவாரா?

நிச்சயம் இல்லை, வாய்ப்பே இல்லை

ஆனால் என்ன நடந்தது? தோமா என்ன ஆனார் என்பது யாருக்கும் தெரியாது. ஆனால் அவருக்கு சீடர்கள் இருந்தார்கள்

தோமா வழி கிறிஸ்தவன் என்றொரு பிரிவே இருந்தது, இன்றுள்ள சிரியன் ஆர்தடாக்ஸ் எனும் சபையின் மூலம் அது

அதாவது அன்று போப் இல்லை, திருச்சபை தொடங்கபடவில்லை, பவுல் என்பவர் கொரிந்து, தெசலோனிக்கா, பிலிப்பு என எல்லா ஊர்களிலும் சபை தொடங்கிகொண்டிருந்தார்

சிரியபக்கம், அந்தியோக் பக்கம் தோமா தனி சபை நடத்தினார்கள் என்கின்றார்கள்,

அந்த தோமாவின் சீடர்கள், அந்த சபையினர் கேரளா பக்கம் வந்ததாகவும் அவர்கள் அந்த சிரியன் மலபார் சபையினை தொடங்கி வைத்ததாகவுமே வரலாறு சொல்கின்றது

அதுவும் கிபி 70க்கு பின்னால் ரோமையர் எருசலேம் ஆலயத்தை அழித்து யூதமோ, கிறிஸ்தவமோ தொலைத்துவிடுவோம் என எச்சரிக்கை செய்த பின்பு

ரோமருக்கு அஞ்சி யூதர்கள் கொச்சி வந்தார்கள் அல்லவா? அந்த காலகட்டத்தில் தோமா சபையாரும் மலபார் பக்கம் வந்திருக்க வாய்ப்பு உண்டு என்கின்றது வரலாறு

அப்படி கேரளாவில் இருந்து கிறிஸ்தவர் சென்னை மயிலாப்பூர் பக்கம் வந்திருக்கலாம், கொல்ல்பட்டிருக்கலாம்

அது தோமா சபையின் ஒருவராக இருக்கலாமே அன்றி தோமா என்பது எங்கும் உறுதிபடுத்தபடவில்லை

ஆக தோமா வழிவந்த சபையில் யாரோ நடமாடியிருக்கலாமே தவிர, தோமாதான் வந்தார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை

இதுவரை இல்லை

போர்த்துகீசியரிடம் தகவல் சென்றபொழுது, அப்படியா ?? அவர் கல்லறையா? அப்படியே இருக்கட்டும் என்றார்கள், உண்மையில் சாந்தோம் என்பது செயின்ட் தாமஸ் என்பதன் திரிபு சாந்தா தோமஸ் என்று போர்த்துகீசிய மொழியில் தோமாவினை அழைக்கும் சொல்

இது சாந்தா தோமஸாக இருக்கலாம் என்று சொன்னார்களே தவிர, முழு ஆதாரம் அவர்களிடமும் இல்லை

ஆனால் வெள்ளையர் ஆட்சியில் அது நிலைபெற்றது

முழு ஆராய்ச்சிகள் ஒருநாளும் நடக்கவே இல்லை, எல்லாம் நம்பிக்கையின் அடிப்படையில் சொல்லபட்டவை

இதனிடையே ஆப்கனில் தோண்டபட்டு கொண்டு செல்லபட்ட எலும்புகளை தோமாவின் சீடர்கள், இது தோமாவின் எலும்பு அவர் ஆப்கானுக்கு சென்றிருந்தார், (அன்றெல்லாம் அது கிரேக்கர் ஆப்கன் செல்வது எளிது) என ரோமிற்கு கொண்டு சென்ற தகவலும் உண்டு

ஒரு விஷயம் உண்மை

கத்தோலிக்க திருச்சபையிலும் மறைக்கபட்ட பக்கங்கள் ஏராளம் உண்டு, பல விஷயங்களை அது முழுக்க ஆராய்வதே இல்லை

அப்படியா, ஒஹோ அப்படியே இருக்கட்டுமே என விட்டுவிட்டார்கள், அதில் ஒன்றுதான் தோமா சர்ச்சை

எல்லா இயேசுவின் சீடர்களும் ஐரோப்பாவில் முண்டிய காலத்தில் தோமா மட்டும் கிழக்கே வந்தார் என்பதெல்லாம் கடைந்தெடுத்த பொய்கள்

அப்படி வருவது சுலபம் என்றால் மீதி 10 சீடர்களும் ஏன் வரவில்லை என கேட்டால் பதில் இவர்களிடம் இருக்காது

அதனால் அடித்து சொல்லலாம், ஒரு விஷயம் சரியான வாதம்

சிலுவை என்பது எந்தமொழி சொல்? இலத்தீனிலும் ஆங்கிலத்திலும் அது குரூஸ் அல்லது கிராஸ்

சிலுபே என்பது சிலுவையினை குறிக்கும் சீரிய மொழி சொல்

சீரியன் மலபார் சபை தொடங்கபட்டபொழுது சிலுவை எனும் சொல் இங்கு வந்தது, நிலைபெற்றும் விட்டது.

இன்றுவரை அச்சபை தனி சபையே, உலகெல்லாம் கிறிஸ்மஸ் கொண்டாடும்பொழுது கொண்டாடமாட்டார்கள், ஈஸ்டரும் அப்படியே

தனியாக ஒருநாளில் கொண்டாடி, சின்னதம்பி கவுண்டமணி போல் கைதட்டிகொண்டிருப்பார்கள்

ஆக தோமா சிரியா பக்கம் ஒரு சபை நடத்தியிருக்கின்றார், பின்னாளில் அவர் சீடர்கள் அதனை மலையாள மலபார் பக்கம் பரப்பினர் என்பதே ஏற்றுகொள்ள கூடிய வாதம்

அதெல்லாம் இருக்கட்டும்

அண்ணே கிறிஸ்மஸ் பைபிளில் இல்லை, அண்ணே ஈஸ்டர் கொண்டாட பைபிள் சொல்லவில்லை, புனிதர்களை வணங்க பைபிள் சொல்லவில்லை என மல்லுகட்டும் அதிதீவிர கிறிஸ்தவர்கள் எல்லாம்…

தோமா இந்தியா வந்தார் என்பதை மட்டும் நம்புவார்களாம், பைபிளின் எந்த பக்கத்தில் அப்படி சொல்லியிருக்கின்றது?

இதில் மட்டும் பைபிள் தாண்டி நம்புவார்களாம்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s