டிசம்பர் 6 பாபர் மசூதி இடிப்பு சம்பவம் தீரா களங்கம்

இந்த தேசத்தில் காந்தி, இந்திரா, ராஜிவ் கொலைகளுக்கு ஈடானது அந்த கொடூர நிகழ்வு. இந்த‌ சுதந்திரநாட்டின் கருப்பு புள்ளி அது. ஒருநாளும் தீரா களங்கம் அது

டிசம்பர் 6 பாபர் மசூதி இடிப்பு சம்பவம் அது

நிச்சயமாக அதன் வரலாறு அமைதியாக தொடங்கியிருக்கின்றது, எத்தனையோ இஸ்லாமிய மன்னர்கள் வந்து ஆண்டாலும் அங்கு சிக்கல் இல்லை. பாபர் என்பவரும் அப்படி வந்திருக்கின்றார்

பாபர் ஆப்கானிய மன்னர்களில் வித்தியாசமானவர், இந்த மக்களை எதிரியாக பாராமல் அவர்களோடு கலந்து இங்கே வசிக்க நினைத்தவர். அதனால் இங்குள்ள கலாச்சாரத்தோடு இணைந்துவாழ, இம்மக்களோடு கலந்து வாழ எண்ணினார்

அந்த அஸ்திவாரத்தில்தான் அக்பர் போன்றோர் அவர் வழியில் வந்து மிக பெரும் முகலாய சாம்ராஜத்தை கட்டி காத்தனர். அவர்கள் இந்நாட்டை ஆள அவர்களின் அந்த மத நல்லிணக்கமும் மிக முக்கியமான விஷயம்

ஓளரங்கசீப் காலம் வரை நன்றாக இருந்தது, அவர் கடும்போக்கான விஷயங்களில் இறங்கவும் , சிவாஜி போன்றவர்கள் எதிர்த்து வாள்பிடிக்கவும் எல்லாம் நாசமாயிற்று

சிவாஜி இஸ்லாமினை எதிர்க்கவில்லை மாறாக ஓளரங்கசீப்பின் அடாவடியினையே எதிர்த்தார்

அப்படிபட்ட முகலாய வம்சத்தின் பிதாமகன் பாபர் நிச்சயம் அடாவடியாக அந்த மசூதியினை கட்டியிருக்க முடியாது, கட்டியிருந்தால் அன்றே ஓட அடித்திருப்பார்கள்

பொதுவாக முன்னோர்கள் தொழுத இடம், மகான்கள் அவதரித்த இடங்களை இஸ்லாமியர் மகா விருப்பமாக தேடுவார்கள். இந்திய அபிமானத்தை பெற விரும்பிய பாபர் அந்த ராமர்பிறந்த இடம் என சொல்லபட்ட இடத்தின் ஒரு மூலையில் தொழுதிருக்கலாம் அது மசூதி ஆயிருக்கலாம்

இந்துக்கள் விட்டு கொடுத்துவிட்டு மறுபக்கம் ராமர் வழிபாட்டை தொடர்ந்திருக்கலாம்

இந்த அனுமானங்கள் உண்மையாக இருக்க ஒரே ஆதாரம் வெள்ளையர் வருமளவு அங்கு சிக்கல் இல்லை. அவர்கள் வந்தும் பெரும் சிக்கல் இல்லை

400 ஆண்டுகளாக சிக்கல் இல்லை

இந்துக்கள் ஒரு புறமும் சிறிய ராமர் ஆலயத்திலும், இஸ்லாமியர் மறுபுறமும் மசூதியில் அந்த் இடத்தில் பிரார்தித்துகொண்டுதான் இருந்தார்கள்

திப்பு சுல்தானை வீழ்த்த இந்து முஸ்லீம் பிரிவினை கையில் எடுத்த வெள்ளையனுக்கு அது அனுகூலமாயிற்று, பின் காந்திவழி தொடங்கிய அந்த புனிதமான போராட்டத்தை கூட இந்து முஸ்லீம் என கீறி, இந்த தேசத்தை இரண்டாக்கினான் வெள்ளையன்

அப்பொழுது விதைக்கபட்டதுதான் இந்த ராம் ஜென்ம பூமி பிரச்சினை

பிரிவினைக்கு பின் அது பூதாகரமாக எழும்பும்பொழுதுதான் காந்தி கொலையும் அதன் பின் இந்த மதவாத அழிச்சாட்டி கும்பலின் அமைதியும் ஏற்பட அப்பிரச்சினை அடங்கியது, ஆர்.எஸ்.எஸ் தடை செய்யபட்ட காலங்கள் அவை

அதன் பின் ஜனசங்கம் (பாஜகவின் முப்பாட்டன்) இப்பிரச்சினையினை தோண்டினாலும் சாஸ்திரி, இந்திரா போன்ற பெரும் ஜாம்பவான்கள் இருந்ததாலும் எதிர்கட்சியில் மதவாதிகள் இல்லாததாலும் அப்பிரச்சினை எழமுடியவில்லை

இந்திரா கொல்லபட்டு அனுபமில்லா ராஜிவ் இருந்த காலங்களில் மதவாத சக்திகளுக்கு உற்சாகம் பீறிட்டன, இதனை பெரும் விவாதமாக்கின‌

உண்மையில் பாஜக இந்திய நாட்டுபற்றுள்ள கட்சி என்றால் இந்த பிரச்சினையினை கையில் எடுத்திருக்க கூடாது, ஆனால் அவர்களுக்கு அதை தவிர அரசியல் செய்ய ஏதுமில்லை

விபி சிங் இருந்தகாலத்தில் இந்த விஷயங்களை எல்லாம் அடக்கியே வைத்திருந்தார், ஆனால் ராஜிவ்காந்தியினால் அவர் வீழ்த்தபட அத்வாணியின் குரல் ஓங்கி ஒலித்தது

ராஜிவும் கொல்லபட மதவாத கும்பல்கள் அரசியலில் தங்களுக்கொரு இடம் வேண்டும் என காட்ட இந்த பாதக செயலை செய்தன‌

அது உணர்ச்சி கொந்தளிப்பில் நடைபெற்ற விஷயம் அல்ல, பாஜகவும் அதன் பங்காளிகளும் சேர்ந்து நன்கு திட்டமிட்டு, வெடி எல்லாம் வைத்து அதில் மசூதி இடியாமல் பின் கடப்பாரை சகிதம் திட்டமிட்டு இடித்தார்கள்

கல்யாண் சிங் எனும் உபியின் முதல்வர் அதனை தடுக்க நினைக்கமாட்டார் என்பதில் ஆச்சரியமில்லை, ஆனால் நரசிம்மராவ் அரசும் அமைதியாக இருந்ததுதான் ஆச்சரியம்

அவர்கள் ஏன் அப்படி இருந்தார்கள் என்பதற்கு இன்றுவரை விடை இல்லை

அந்த மசூதி இடிப்பினால் ஏற்பட்ட சேதங்கள் கொஞ்சமல்ல, நாடு முழுக்க அது கலவரமானது மும்பையில் மட்டும் சில ஆயிரம்பேர் கொல்லபட்டார்கள், சொத்து சேதகணக்கு வேறு

நாடு முழுக்க கொல்லபட்டவர் எண்ணிக்கை கணக்கே இல்லை

பின் அது மும்பை குண்டுவெடிப்பு, கோத்ரா ரயில் எரிப்பு, குஜராத் கலவரம் வரை தொடர்ந்தது

ஒருவிஷயம் உறுத்தலான உண்மை. பிரிவினையின் பொழுது எரிந்த இந்தியா பின் அமைதியாகியிருந்தது, மறுபடி அதனை பற்றி எரிய செய்து இன்றுவரை நீருபூத்த நெருப்பாக ஆக்கி வைத்தது இந்த மசூதி இடிப்புதான்

வழக்கு நடக்கின்றது இன்னும் முடிந்தபாடில்லை, முடியவும் முடியாது.

இத்தேசம் மறக்க முடியா கொடூர நாள் இது.

இந்த வலிகளை கடந்து இத்தேசம் அமைதியாக சில விஷயங்களை செய்தே ஆகவேண்டும்

மசூதி இருந்த இடத்தில் மசூதியும், ராமர் கோவில் சிறிதாக இருந்த அந்த மரத்தடியில் ராமர்கோவிலும் அமைக்கபட்டு மத நல்லிணக்கம் காணபடவேண்டும்

உண்மையில் இத்தேசத்தின் பெரும்பான்மை இந்துக்களும், பெரும்பான்மை இஸ்லாமியரும் அமைதி விரும்பிகள், சகோதரர்களாக பழகிகொண்டிருப்பவர்கள்

ஆனால் ஒரு குடம் பாலை ஒரு துளி நஞ்சு கெடுத்துவிடுவது போல ஒரு சில அயோக்கியர்களின் செயல்கள் மொத்த மக்களின் அமைதியினை கெடுத்துவிடுகின்றது

இந்த பாஜக நாட்டுபற்றுள்ள கட்சி என்றால் அந்த மசூதியினை இடித்திருக்க கூடாது, இன்னும் நாடுபற்றுள்ள கட்சி என்று சொல்வதாக இருந்தால் உடனே அதற்கான பரிகாரங்களை செய்ய வேண்டும்

மதவெறுப்பில் அது பெற்ற வெற்றியினை விட, மத நல்லிணக்கத்தில் இறங்கினால் அது அசைக்கமுடியா இடத்தினை பெறும் சந்தேகமே இல்லை

கெட்டது நடந்த இடத்தில் சில நல்லது நடக்காமல் அமைதி திரும்பாது, திரும்பினாலும் நிலைக்காது

மகா ஆச்சரியமாக பெரும்பான்மை மக்கள் இத்தேசத்தில் மத நல்லிணக்கத்தை கடைபிடிப்பதால் இத்தேசம் அதனை கடந்தும் வெற்றிநடையினை அமைதியாக போட்டுவருகின்றது

இந்நாள் வலிதான், நல்ல இந்தியனுக்கு இரத்தம் வர வைக்கும் ரணம்தான். ஆனால் கடந்து வரவேண்டும்

மதகலவரத்தில் இடிக்கபட்ட முதல் மற்றும் கடைசி மசூதி அதுவே என்று வரலாறு எழுதட்டும்.

பாபர் மசூதி சிக்கலுக்கு வயது வெறும் 50 ஆண்டுகளே, ஆனால் அதற்கு முன்பு 450 வருடம் இத்தேசம் அமைதியாக இருந்திருக்கின்றது. மகா ஒற்றுமையாக இந்துக்களும் இஸ்லாமியரும் அந்த வளாகத்தில் வலம் வந்திருக்கின்றார்கள்

நாம் அந்த 50 கசப்பான‌ வருடங்களை கடந்து அந்த ஒற்றுமையான 450 ஆண்டு காலகட்டத்திற்கு செல்ல முடியாதா? அந்த நீண்ட பொற்காலத்தை மீட்க முடியாதா?

நிச்சயம் முடியும்.

கசப்பான நாட்களை கடக்கும்பொழுது இனி இவ்வாறு நடக்கவே கூடாது எனும் வைராக்கியம் மகா முக்கியம்

அந்த வைராக்கியத்தோடு இத்தேசம் இந்நாளை வலியோடு கடந்து செல்லட்டும்

ஜெயாடிவிக்கு அட்டகாசமாக சீண்டல் வருகின்றது

 

ஜெயாடிவிக்கு அட்டகாசமாக சீண்டல் வருகின்றது.

பழனிச்சாமி கோஷ்டி ஜெயா நினைவுநாள் என கருப்புசட்டை போட்டு அழிச்சாட்டியம் செய்யும்பொழுது எப்படி கன்னியாகுமரி கடற்கரையினை மீணவர்கள் காணாமல் போன விவகாரங்களை அதனை பழனிச்சாமி கண்டுகொள்ளாமல் இருப்பது பற்றியெல்லாம் மக்களுக்கு எப்படி நினைவுபடுத்துவது என யோசித்திருக்கின்றார்கள்

மண்டைக்குள் மணியடித்திருக்கின்றது, அதுவும் மாதா கோயில் மணி

உடனே கடலோர கவிதைகள் எனும் கன்னியாகுமரி முட்டம் பகுதியில் படமாக்கபட்ட படத்தினை ஒளிபரப்பியாயிற்று

அந்த படம் முழுக்க அந்த கடல் வரும், அந்த கடலை பார்க்கும்பொழுதெல்லாம் அந்த புயலும் மீணவர் நினைவும் வரும்

பலருக்கு வந்துவிட்டது, உடனே இங்கு வராமல் பழனிச்சாமி அங்கு என்ன கலர் கலராக சட்டைபோட்டுகொண்டிருக்கின்றார் என முணுமுணுக்க தொடங்கியாயிற்று

எப்படி திட்டம் பார்த்தீர்க்களா? ஜெயா டிவி அசத்துகின்றது

படம் நன்றாகத்தான் இருக்கின்றது, ஆனாலும் அந்த ஜெனிபர் டீச்சர் வேடத்தில் குஷ்பு நடித்திருந்தால் படம் கூட‌ 1 வருடம் ஓடியிருக்கும்

விஷாலுக்கு வாழ்த்து கூறிய குஷ்பு ..

விஷாலுக்கு வாழ்த்து கூறிய குஷ்பு மீது காங்கிரஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும் : கராத்தே தியாகராஜன்

முதலில் அடிக்கடி அதிமுக பற்றி கவலைபடும் திருநாவுக்கரசர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், அதுதான் முதல் விஷயம்

குஷ்பு விஷாலுக்கு வாழ்த்து தெரிவித்தது தனிபட்ட விஷயம், அதற்கும் காங்கிரசுக்கும் என்ன தொடர்பு வந்துவிட்டது?

டெல்லியில் மன்மோகன் சிங்கும் மோடியுமே சந்திக்கின்றார்கள், மோடியும் சோனியாவும் சந்திக்கின்றார்கள்

அதெல்லாம் என்ன? அப்படியானால் மன்மோகன் சிங்கினை நீக்கிவிட முடியுமா?

தமிழக காங்கிரசின் ஒரே முகம் குஷ்பு, அவர் இல்லாவிட்டால் தமிழக காங்கிரஸின் நிலை அதோகதி

காங்கிரசால் தலைவியா இல்லை தலைவியால் காங்கிரசா என்றால் நிச்சயம் தலைவிதான் தமிழகத்தில் காங்கிரசை தாங்கி பிடிகின்றார்

இதனை நன்கு தெரிந்த எதிர்கட்சிகளின் ஸ்லீப்பர் செல்லாக இந்த தியாகராஜன் என்பவர் இருக்கின்றார் என்பது தெரிகின்றது

அநேகமாக இந்த தமிழிசையின் ஸ்லீப்பர் செல்லாக அவர் இருக்கலாம்..

தியாகராஜனுக்கு சங்கத்தின் சார்பாக கடும் கண்டனங்கள், இவரை முதலில் தமிழக காங்கிரசை விட்டு வெளியேற்ற வேண்டும் என சங்கம் கோரிக்கை வைக்கின்றது


விஷாலுக்கு தமிழகத்தில் போட்டியிட உரிமை இல்லை என கத்திகொண்டிருப்பவன் யாரென பார்த்தால் முக்கால்வாசி பயல் ஈழதமிழராய் இருக்கின்றான்

தமிழகத்தில் அவனுகளுக்கு வோட்டு கிடையாது, இங்கு உள்ளே வரவே முடியாது. ஒரு உரிமையும் இல்லை

அவர்கள்தான் எங்கோ இருந்துகொண்டு விஷால் நிற்க கூடாது என ஒப்பாரி வைக்கின்றார்களாம்


அக்கா என்னை இன்னொரு அம்மான்னு சொல்லிச்சி

Image may contain: one or more people

“அக்கா என்னை இன்னொரு அம்மான்னு சொல்லிச்சி, சசி இல்லாம போயஸ்கார்டனே இல்லன்னுல்லாம் சொல்லிச்சி

அக்காவுக்கு இட்லி, தோசைன்னு சுட்டு கொடுத்து கிட்டே இருந்து பார்த்துகிட்ட என்ன உள்ளே தள்ளிட்டு அவனுக பேரணி போரானுகளாம்

முதலாமாண்டு நினைவுநாளுமா ஒரு வார்த்தை கூட சொல்லமுடியாத நிலமையில என்ன வச்சிட்டானுகளே….

நான் மட்டும் வாய்திறந்தா இவனுக அப்படியே கடல்ல போய் விழவேண்டிய நிலமை வரும்..”

 

இன்றைக்கு எல்லாம் கருப்பு சட்டையுடன் கிளம்பியாயிற்று

Image may contain: 10 people, people standing and text

இன்றைக்கு எல்லாம் கருப்பு சட்டையுடன் கிளம்பியாயிற்று,

“கருப்புத்தான் எனக்கு பிடிச்ச கலரு..” என பாடல் பாடினார்களா என தெரியவில்லை

சந்தடி சாக்கில் கி.வீரமணி வந்து கலந்துகொண்டால் கூட தெரியாது, சொல்லமுடியாது அவரும் நடுவில் கலந்திருக்கலாம்

பெரியார் நினைவுநாளில் கூட அணியாத அந்த கருப்பு சட்டை அடையாளத்தை ஜெயா நினைவுநாளில் அணிந்திருகின்றார்கள்.

ஒருபக்கம் வீரமணி கருப்பு சட்டையோடு அலைகின்றார், இன்னொரு பக்கம் இவர்கள். இதுதான் பெரியார் கண்ட கருப்பு சட்டை புரட்சி போலிருக்கின்றது.

எதற்கு கருப்பு சட்டை? துக்க நாளாம்

இனி கழற்றவே கழற்றாதீர்கள், இனி சந்தோஷமான நாட்கள் உங்களுக்கு வரவே வராது. எல்லா நாளும் துக்கமாகவே இருக்கும் போல‌..


இப்படி ஜிலேபியும் லட்டுமா விழுங்கித்தான் அந்த அம்மா அப்படி ஆகி , நோயில் வீழ்ந்தது

அதனை படையல் வேறு போட்டு அந்த ஆத்மாவினை சீண்டுகின்றீர்களா?

ஏய் கிழவிகளே, ஜெயா ஆன்மா சும்மா விடாது

Image may contain: 1 person, smiling, sitting

 

சசிகபூர் மறைவால் இதயம் நொறுங்கி விட்டது: நடிகை குஷ்பு இரங்கல்

download.jpg

சசிகபூர் மறைவால் இதயம் நொறுங்கி விட்டது: நடிகை குஷ்பு இரங்கல்

குஷ்பு இந்தி சினிமாக்களில் குழந்தை நட்சத்திரமாக (இன்றும் குழந்தைதான் என்பது வேறுவிஷயம்) நடித்த படங்களில் ஹீரோவாக நடித்தவர் சசிகபூர் என்பதால் தலைவியின் துயரம் அதிகரிக்கின்றது.

தலைவியிடம் மிக உயர்ந்த குணம் இப்படி நன்றி மறக்காத குணம்

தலைவியின் துயரில் சங்கமும் பங்கெடுக்கின்றது. அந்த சசிகபூருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.

நெப்போலியன் என்றொரு நடிகர் இருந்தார்

நெப்போலியன் என்றொரு நடிகர் இருந்தார், முன்பு திமுகவில் மத்திய அமைச்சராக எல்லாம் இருந்தார்

திமுக ஆட்சிகட்டிலில் இருந்து இறங்கியபின் அவர் ஓடோடி சென்று பிஜேபியில் இணைந்தார், எத்தனையோ பெரும் பிரிவுகளை கண்ட திமுக அவரை கண்டுகொள்ளவுமில்லை

ஆனால் ஆச்சரியமாக பாஜகவும் கண்டுகொள்ளவில்லை

இப்பொழுது என்ன செய்கின்றார் என்றே தெரியவில்லை. தெலுங்கு பேசும் மக்கள் நிறைந்த தொகுதி என விஷாலை எல்லாம் நிறுத்துகின்றார்கள்

ஆனால் பாஜகவிற்கு நெப்போலியனை நிறுத்தும் வித்தை கூட தெரியவில்லை, அவரும் தெலுங்கு பேசும் வம்சம் என்கின்றார்கள்.

இந்த “பச்சை மண்ணு” கட்சியினை நினைத்தாலே பாவமாக இருக்கின்றது