பிரம்மா எனும் குஷ்பு படம்

இப்பொழுதெல்லாம் நமது மரியாதைகுரிய டிவி ஜெயா டிவி தான். ஆம் அடிக்கடி குஷ்பு படமாக ஓளிபரப்பி நம் மகிழ்சி குறையாமல் பார்த்துகொள்கின்றார்கள். இதனால் டிஆர்பி ரேட்டிங்கிலும் இனி ஜெயா டிவி முதலிடத்தில் வர வாய்பிருக்கின்றது

இன்று பிரம்மா எனும் குஷ்பு படம் ஓடிகொண்டிருக்கின்றது, சத்யராஜ் என்பவர் சைடு ஆட்டிர்ஸ்ட்டாக நடித்திருக்கின்றார்

இந்த உலகிலே இதுவரை பிறந்த அழகிகளில் தலைசிறந்தவராக படத்தில் தெரிகின்றார் குஷ்பு, அதுவும் டென்னிஸ் விளையாடும் ஸ்டைலே தனி

கொஞ்சம் உயரமாக இல்லாமல் போயிவிட்டார் தலைவி, இறைவன் செய்த அந்த சதியால் இத்தேசம் ஒரு ஸ்டெபிகிராபினை இழந்துவிட்டது

படம் எப்படி என்றால், குஷ்பு வரும் காட்சிகள் எல்லாமே அள்ளுகின்றது

படம் பார்த்தவுடன் வரும் எண்ணம் ஒன்றுதான் உடனடியாக அந்த படம் சூட்டிங் நடந்த இடத்தை கண்டறிந்து தலைவி விளையாடிய அந்த டென்னிஸ் மட்டையினை கைபற்றி வரவேண்டும்

பின்னாளில் அமைக்கபோகும் மியூசிய‌த்தில் அதனை மிக முக்கிய இடத்தில் வைக்க வேண்டும்

அதனை பார்க்கவே கூட்டம் வருங்காலத்தில் அலைமோதும் என்பது சொல்லி தெரியவேண்டியதில்லை, மோனாலிசா ஓவியத்தை பார்க்க வரும் கூட்டத்தை விட அது அமோகமாயிருக்கும்

பல்லாண்டுகள் கழித்து ஏலம் என விட்டால் கூட, நெப்போலியன் மோதிரத்தினை விட அதிக விலைக்கு ஏலம் போகும் அந்த டென்னிஸ் மட்டை

அதனால் எப்படியாவது அந்த டென்னிஸ் பேட்டை தேடி பிடிக்கும் விறுவிறுப்பான பணியில் சங்கத்து உறுப்பினர்கள் இறங்கிவிட்டனர்

தலைவி கோயில்

Image may contain: 1 person, smiling, close-up

ராமர் கோவிலை அவர்கள் எப்பொழுதும் கட்டட்டும், கட்டாமலும் போகட்டும்

சங்கத்திற்கு மிக அத்திவாசியாமான விஷயம் காணாமல் செய்யபட்ட குஷ்பு கோவிலை கண்டுபிடித்து அதனை உலகம் வியக்கும் பெருங்கோயிலாக கட்டி கும்பாபிஷேகமும் செய்தாக வேண்டும்

சங்கம் அதற்கான முயற்சிகளில் மிக தீவிரமாக இறங்கியிருக்கின்றது, தலைவி கோயில் இருந்த இடத்தினை கண்டறிந்து அதில் விமான நிலையம் இருந்தால் கூட தூக்கி எறிந்துவிட்டு உடனே கோவில் விரைவில் கட்டபடும்

 

கேரள முதல்வரைச் சந்தித்த தூத்துக்குடி மீனவர் குடும்பங்கள்

கேரள முதல்வரைச் சந்தித்த தூத்துக்குடி மீனவர் குடும்பங்கள், தமிழக அரசு நடவடிக்கை எடுக்காததால் அங்கு சென்றனர் : செய்தி

ஏற்கனவே குமரி மாவட்டம் கடும் அதிருப்தியில் இருக்கின்றது, இப்பொழுது தூத்துகுடியும் சேர்ந்தாயிற்று

இது தமிழக அரசுக்கு மிகபெரும் தலைகுனிவு என்பதில் சந்தேகமில்லை, பாரதிராஜா பாணியில் சொல்வதென்றால் “தகப்பன் இருக்கும்பொழுது அடுத்தவீட்டுகாரனிடம் உதவிக்கு செல்வது அந்த தகப்பன் செத்ததற்கு சமானம்”

தலைகுனிவு, அவமானம் பற்றியெல்லாம் இந்த அரசு மிகவும் பழகியிருக்கும் போல

முன்பு கன்னியாகுமரி தமிழகத்தோடு இணைய பெரும் போராட்டம் நடந்தது, இனி மறுபடியும் கேரளாவோடு இணைய பெரும் போராட்டம் தொடங்கலாம் போல‌

ஆனால் போவது குமரியாக மட்டும் இருக்காது ஏகபட்ட மாவட்டங்கள் தயாராக இருக்கும்போல தெரிகின்றது

விஜய் மல்லையா கிறிஸ்மஸ் கொண்டாட உற்சாகமாக காத்திருக்கின்றார்

இந்த இங்கிலாந்துகாரர்களை புரிந்துகொள்வதே சிரமம். மற்ற ஐரோப்பிய மக்கள் லண்டனுக்கு வருகின்றார்க்ள் என சொல்லி ஐரோப்பிய யூனியலிருந்தே பிரிந்தார்கள்

அகதிகள் செல்லவும் கட்டுப்பாடு, இப்பொழுது விசாக்களிலும் மிக கடுமையான கெடுபிடி. சந்தேகத்தின் பேரில் பலரை திருப்பி அனுப்புகின்றார்கள்

ஆனால் இந்தியா போன்ற நாடுகளின் பிரிவினைவாதிகள், மல்லையா போன்ற மோசடிபேர்வழிகளை சம்பந்தபட்ட நாடு கதறி கேட்டாலும் கொடுப்பதில்லை

ஒரு குற்றமும் இல்லா அப்பாவிகளை கழுத்தை பிடித்து வெளியே தள்வதும் ஒரு நாடு நாடு தேடும் குற்றவாளிக்கு சீவிமுடிந்து சிங்காரித்து அழகு பார்ப்பதும் அவர்கள் குணம்

விஜய் மல்லையா கிறிஸ்மஸ் கொண்டாட உற்சாகமாக காத்திருக்கின்றார்

ஆக மல்லையா போன்ற பணக்காரர்களுக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு போலிருக்கின்றது

சோ ராமசாமி அழுத இடம் இது ஒன்றுதான்

Image may contain: 1 person, glasses and close-up

சோவின் நாடகம் தடைசெய்யபடுகின்றது, கோர்ட்டுக்கு செல்கின்றார் சோ

ஆட்சேபகரமான காட்சிகள் என சில காட்சிகளை சொல்லி தடை செய்ய சொல்கின்றார் நீதிபதி

சட்டம் இதுவானால் அதை நீக்கி நாடகம் நடத்துவேன் ஆனால் நீதிமன்றம் தடை செய்த காட்சிகள் எது என எழுதிகொண்டே இருப்பேன் அப்பொழுது நீங்கள் தடை செய்ய நினைத்த விஷயம் உலகெல்லாம் தெரியும்

அதற்கு மேல் நீதிபதி ஒன்றும் செல்லவில்லை, நாடகம் நடந்தது

காமராஜர் வந்திருந்தார்

நீதிமன்றம் செல்லும் நிலைவரை வந்தாயிற்று என்றார் சோ

நீ சட்டத்தை மீறி ஏதும் எழுதியிருப்ப, அதான் சிக்கலாயிருக்கும் என்றார் காமராஜர்

இப்போ லைசன்ஸ் கிடைச்சிட்டே என்றார் சோ

லைசென்ஸ் கிடைச்சிட்டா உன் இஷ்டத்துக்கு கார் ஓட்டுவியா? அக்கம் பக்கம் பாக்க மாட்டியா என்கின்றார் காமராஜர்

லைசென்ஸ் கொடுக்கிறதே கார் ஓட்டத்தானே, நான் யாருக்கும் ஆபத்தில்லாமல் ஓட்டும்வரை என்ன சிக்கல்

என்னமும் பண்ணு, நாடகத்தை தொடங்கு என்றார் காமராஜர்

இப்படியாக காமராஜருக்கும் அவருக்கும் நட்பு இருந்திருக்கின்றது

எல்லா இடங்களிலும் சிரித்து கொண்டிருக்கும் சோ அழுத காட்சி வரலாற்றில் ஒன்றே ஒன்றுதான்

அது காமராஜர் பணக்காரர் கை கூலி, டெல்லியில் இருந்து வரும் அரசியல்வாதி எல்லாம் காங்கிரஸ் பணக்காரர் வீடுகளில்தான் காமராஜரால் தங்க வைக்கபடுகின்றனர் என எதிர்கட்சிகள் சர்ச்சை கிளப்பிய நேரம்

காமராஜரை காண சென்ற சோவிடம் இதனை குறித்து சொல்லிகொண்டே சட்டென்று கேட்டார் காமராஜர்

நீ இவ்வளவு நாளும் இங்க வந்து போற, என்னைக்காவது உன்னை என்கூட சாப்பிட சொல்லியிருக்கேனா?

இல்லை என தலையாட்டுகின்றார் சோ

ஒரு காபியாது கொடுத்திருக்கேனா?

நெற்றியினை சுருக்கி இல்லை என்கின்றார் சோ

இங்கு அவ்வளவுதான் வசதிண்ணே, நானும் என் சமையல்காரனும் சாப்பிடுற அளவுதான் வசதிண்ணேன், இது வாடகை வீடுண்ணே

டெல்லியில் இருந்து திடீர்னு வாரவங்களுக்கு இங்க கொடுக்க ஒண்ணுமில்லை அதான் வசதி உள்ளவங்க வீட்டுக்கு அனுப்புறேன், இது குத்தமா

ஒரு ஒண்டிகட்டை வீட்டுல என்ன இருக்கும்ணு தெரியாம அவனுக இஷ்டத்துக்கு எழுதுறானுக” சொல்லிவிட்டு கலங்குகின்றார் காமராஜர்.

சோ ராமசாமி அழுத இடம் இதுதான், இது ஒன்றுதான்

 

ஸ்பெக்ட்ரம் விஷயத்தில அப்படி இல்லண்ணே…

Image may contain: 2 people, people smiling, outdoor and nature

அண்ணே நீங்க நினைக்கிற மாதிரி ஸ்பெக்ரம் வழக்கில் உள்நோக்கம் எல்லாம் இல்லை, சட்டம் புரியாமல் பேசாதீர்கள். நீதிதுறையில் அரசு தலையிட முடியாதுண்ணே

அப்படியா?

ஆமாண்ணே அது ரொம்ப ஸ்ட்ரிக்ட்

அப்போ ஜெயா சாகும்வரை தீர்ப்பே வரலியே ஏன்?

நீதிபதி அவ்வளவு கவனமா படிச்சாருண்ணே

சசிகலாவுக்கு உடனே தீர்ப்பு வந்துச்சே எப்படி?

அவங்க குற்றவாளிண்ணே, குன்ஹாவே சொல்லிட்டாரு

அதாண்டா சொல்லிட்டாருல்ல, உடனே பிடிச்சு உள்ளே ஜெயா கூட போட்டிருக்கலாமே?

சட்டம் எல்லோருக்கும் அவகாசம் கொடுக்கும்ணே

அதே சட்டம் சசிகலா முதல்வராகி 5 வருஷம் ஆள அவகாசம் கொடுத்திருக்கலாமே, ஏன் அவர் முதல்வர் பதவிக்கு வரும்பொழுது தீர்ப்பு வரணும்

அது எப்படியோ நடந்துபோச்சிண்ணே

டேய் எப்படியோ இல்லடா, இப்படித்தான் நடக்கணும்னு திட்டம் போட்டு நடந்திருக்கு இது புரியலியா?

ஸ்பெக்ட்ரம் விஷயத்தில அப்படி இல்லண்ணே, நியாத்தைத்தான் கோர்ட் சொல்லும்

சொல்லட்டும் அப்புறம் பார்க்கலாம்

 

சோ நினைவு நாள் அஞ்சலி…

Image may contain: 1 person, glasses

5 October 1934 – 7 December 2016

நகைச்சுவை நடிகர், நடிகர்களில் முதன் முதலாக அரசியலை சினிமா காட்சிகளில் போட்டு வறுத்தெடுக்கும் பாணியினை எம்.ஆர் ராதா தொடங்கி வைத்தாலும், பின்னாளில் அதனை உச்சமாக்கினவர் சோ ராமசாமி அவர்தான் தொடங்கி வைத்தார்

கட்டுகடங்காத பொய்களும், இன்னும் பலவிதமான ஏமாற்றுவேலைகளும் பெருகிய காலத்தில் அவர் குரல் உண்மையினை ஓங்கி ஒலித்தது

காங்கிரஸ் அவருக்கு பிடிக்காது எனினும், காமராஜருக்கு அவர் பக்கபலமாக நின்றதை மறுக்கமுடியாது. இவ்வளவிற்கும் காமராஜர் சோவின் நாடகங்களை தடை செய்த காலமும், அதை எதிர்த்து சோ வெற்றிபெற்று பின் காமராஜரையே அழைத்து வைத்து நாடகம் நடத்திய காட்சிகளும் உண்டு.

காமராஜரை முழுக்க புரிந்தவர் சோ, அதனால்தான் அவர் இறந்த அன்று, இந்திராவும் கலைஞரும் காமராஜர் உடல் அருகே நின்றபொழுது ஆத்திரத்தின் உச்சியில் எழுதினார் சோ

“யார் காமராஜரை கொன்றார்களோ அவர்களே அஞ்சலியும் செலுத்துகின்றார்கள்…. என அவர் எழுதிய வரிகள் சாகா வரம் பெற்றவை.

நல்ல அறிவாளியும், சிந்தனையாளரும், தொலைநோக்கு பார்வையும் எல்லாவற்றிற்கும் மேல் மிகுந்த தைரியமும் கொண்ட எழுத்தாளர் அவர்

திமுக புரட்சி காலம், மிசா காலம், புலிகள் கொலைக்கார காலம் என எல்லாவற்றிலும் அவரின் பேனா சீறிகொண்டே இருந்தது

எல்லாவற்றையும் விட மேலாக வணங்க வேண்டியது அவரின் நாட்டுபற்று

திராவிட போலிகள் பிரிவினை வாதம் அது இது என பேசும்பொழுது, பகுத்தறிவு பேசும்பொழுது அவர் மத நம்பிக்கை பேசினார்

அவர் கொடுத்த துணிச்சலின் பேரிலே கண்ணதாசன் போன்றவர்கள் பின் அர்த்தமுள்ள இந்துமதம் போன்ற காவியங்களை எழுத முடிந்தது, ஜெயகாந்தன் போன்றோர் தேசியம் பேச முடிந்தது.

அவரிடம் மத நெறி உண்டே தவிர மதவெறி என்பது கிஞ்சித்தும் கிடையாது, இந்துமதத்தை சாடியே வளர்த்த போலிகளை அவர் கண்டித்து, கிண்டலடித்து உண்மையினை எழுதினார்

இன்றுவரை அவர் எழுப்பிய நியாயமான கேள்விகளுக்கு பதில் எந்த பகுத்தறிவாளனிடமும் இல்லை

பிராமணன் எங்கே ஆண்டான், ஒரு பிராமண அரசனை காட்டுங்கள் என அவர் கேட்டதற்கும், ராமன் சத்திரியன் கண்ணன் வேறு சாதி ஆனாலும் இந்துமதம் அவர்களை கடவுளாக காட்டவில்லையா என கேட்டதற்கும் யாரிடமும் பதில் இல்லை

புலிகளை தமிழகம் கொண்டாடிய போது 1986லே எச்சரித்தது அவர்தான், பெரும் தைரியமாக அவர்களை எதிர்த்து எழுதினார்

அவர் வீட்டுக்கு மிக அருகில்தான் பத்மநாபா கொலை நடந்தது, அப்பொழுதும் அவர் புலிகளை கண்டித்து எழுதினார்

பின்னாளில் அவர் கணித்து எழுதியதுதான் நடந்தது, புலிகள் அழிந்தும் போயினர்

பத்மநாபா அஞ்சலியின் பொழுது இன்னமும் பொறுங்கள் பல அஞ்சலிகளை செய்யவேண்டி இருக்கின்றது என அவர் எச்சரித்த பின்புதான் ராஜிவ் கொலை எல்லாம் நடந்தது.

ராஜாஜிக்கு பின் மிக சிறந்த தமிழக அறிவாளி சோ என்பதில் மாற்று கருத்தே இல்லை..

கலைஞரை அரசியல் சாணக்கியன் என்பார்கள், சாணக்கியன் இன்ன்னொருவனை திறம்பட உருவாக்குவானே தவிர தான் சென்று சிம்மாசனத்தில் அமரமாட்டான்

அப்படி சாணக்கியன் சோவினால் உருவாக்கபட்டவர் தான் மறைந்த ஜெயலலிதா, இந்திரா ஜெயலலிதாவினை கொண்டாட முதல் காரணமாக இருந்தது சோ எழுதிகொடுத்த எழுத்துக்கள்

ஜெயலலிதா பிரகாசிக்க அவரும் காரணம், பின்பு தமாகா அமையவும் அவரே காரணம், பின்பு விஜயகாந்தினை எதிர்கட்சி தலைவர் என அமர வைத்ததிலும் சோ பங்கு உண்டு

வயது இருந்திருந்தால் நிச்சயம் இன்னொரு அரசன் அல்லது அரசியினை அவர் உருவாக்கி கொடுத்திருப்பார்

எத்தனை அரசியல் பத்திரிகைகள் வந்தாலும் துக்ளக் இடமே தனி, இன்னொரு பத்திரிகையாளன் இவ்வளவு துணிச்சலாக வரமாட்டான், வந்தாலும் சோ சொல்லும் விதத்தின் நக்கலும் அழகும் ஆழமும் இன்னொருவருக்கு வராது.

கலைஞரை அவர் காய்ச்சி எடுத்தது போல இன்னொருவன் எழுத முடியாது, ஆனால் இருவரும் அவ்வப்போது சந்திப்பார்கள்.

சோவின் ஏராளமான நகைச்சுவை தெறிப்புகள் வந்து போகின்றன,

தமிழுணர்வை இப்போது வெளிப்படுத்த ஒரே வழி புலிகளை ஆதரிப்பது என அவர் சொன்னபொழுது சிரிக்காதோர் யாருமில்லை

இன்னும் ஏராளமான பேட்டிகள், கவிஞர் கனிமொழி பற்றி என கேட்ட்பொழுது “நானும் மனோரமாவுடன் சேர்ந்து ஆடிய நடனங்களுக்கு நானே பாடெழுதியிருக்கேன் ஸ்ஸ்க்கு ஸ்ஸ்கு இஸ்கானா என , என்னையும் கவிஞர் என அழையுங்கள்” என அவர் சொன்னபொழுது புன்னகைக்காதோர் யார்?

“சீனா பாகிஸ்தானுக்கு ஆயுதம் கொடுப்பது கவலையே இல்லை, காரணம் சீன தயாரிப்பு பற்றி எல்லோருக்கும் தெரியும், ஆனால் அமெரிக்கா கொடுத்தால் நாம் கவனமாக இருக்க வேண்டும்..” என சொன்ன இடமாகட்டும்

கம்யூனிஸ்டுகள் மாஸ்கோவில் மழை பெய்தால் சென்னையில் குடை பிடித்த காலத்தில், “கருப்பு பணம் போல சிகப்பு பணமும் இருக்கும் போல..” என சொன்னதாகட்டும் , தனித்து நின்றார் சோ.

ஏராளமான எழுத்துக்கள், அர்த்தமுள்ள வாதங்கள், குறும்பான பதில்கள்

இறுதி பேட்டிகளில் அவரிடம் கேட்டார்கள், காங்கிரசினை கண்டிப்பவர் நீங்கள், தற்போதைய காங்கிரசின் பின்னடைவினை எப்படி காண்கின்றீர்கள்?

சோ சொன்னார்

“காங்கிரஸ் பின்னடைவது நாட்டிற்கு நல்லதல்ல, தேசிய ஆளும் கட்சிக்கு ஒரு தேசிய கட்சி எதிர்கட்சியாக இருப்பதே இந்தியாவிற்கு நல்லது”

இதுதான் சோ

தமிழகத்தில் இது ஒரு வகையான உதிர் காலம், பெரும் மரங்கள் எல்லாம் சாய்ந்து பெரும் வெற்றிடம் உருவாகிகொண்டிருக்கின்றது

அம்மரங்களில் இளைபாறிகொண்டிருந்த பறவைகள் எல்லாம் கதறிகொண்டு எதிர்காலம் தெரியாமல் கலங்கி திரிகின்றன‌

நம் மனங்களின் கலக்கம் போல‌

கலைஞர், சோ ராமசாமி இல்லாத அரசியல் பக்கங்களை படிக்கவே மனம் ஒப்பவில்லை, இதில் பழனிச்சாமியின் எழுச்சியுரை என்றொரு பக்கம் வருகின்றது அத்தோடு அந்த திசைக்கே ஒரு கும்பிடு போட்டு ஓடிவிடலாம் போலிருக்கின்றது

நிறைவாழ்வு வாழ்ந்துவிட்டு , நிறைவாக எழுதிவிட்டு நாட்டுபற்றும் அதற்குரிய எழுத்தும் எப்படி இருக்கவேண்டும் என்பதனை சொல்லி சென்றதற்காக சோவிற்கு நன்றிகள்

போலி பகுத்தறிவாளர்களை நார் நாராக கிழித்து காட்டியதற்காய் நன்றிகள்

புலிகளின் போக்கு எதில் முடியும் என அன்றே சொன்னதற்காக நன்றிகள், நீங்கள் சொன்னதை படித்ததால் இந்த முள்ளிவாய்க்கால் எல்லாம் நடக்கும்பொழுது பெரும் கலக்கம் எல்லாம் வரவே இல்லை. இப்படித்தான் நடக்கும் என அன்றே எச்சரித்தது நீங்கள்.

அடிக்கடி சித்திர குப்தன் வேடத்தில் சினிமாவில் எமனை கலாய்த்தீர்கள், நன்றாக கலாய்த்தீர்கள்

எமலோகம் இப்பொழுது விழுந்து விழுந்து சிரித்துகொண்டிருக்கும்

நாமெல்லாம் அவரை நினைத்து நினைத்து சிரித்து கொண்டிருக்கின்றோம், அழுகை வருகின்றது அதை துடைத்துவிட்டு சிரித்து சிரித்து அழுதுகொண்டிருக்கின்றோம்

“முகமது பின் துக்ளக்” நாடகம் இன்று உண்மை 
அரசாங்கமாகவே நடக்கின்றது, அதை நினைத்து சிரிக்கின்றோம் பின் அழுகின்றோம்

“காதலா காதாலா” படத்தில் உடல்நிறைய நகை அணிந்துகொண்டு பார்வதி வேடத்தில் ரம்பா வந்து நான் பார்வதி என்கின்றார்

“பார்வதிமாதிரி இல்லையே, உடன்பிறவா சகோதரிமாதிரில்ல இருக்கு..” என சொன்ன அந்த காட்சி மறக்க முடியுமா?

தங்க பதக்கத்து வைகை வளவனை மறக்க முடியுமா?

தன் பணக்கார திமிர்பிடித்த தகப்பன் வேலைகாரர்களை படுத்தும் பாட்டை கண்டு, காரில் செல்லும்பொழுது டிரைவரை பிடித்து “டேய் எங்கப்பா முன்னால சரிக்கு சமம் அமர்ந்து வண்டியோட்ட எவ்வளவு தைரியம் ராஸ்கல், எழுந்து நின்று காரோட்டு” என மிரட்டிய காட்சி

எதைத்தான் மறக்க முடியும்?

துக்ளக்கின் எழுத்துக்கள் யாருக்கு மறக்கும்? இந்திய அரசியல் வரலாற்றை வெகு எளிதாக பதிந்து வைத்திருக்கும் பொக்கிஷம் அது. ஆணித்தரமான உண்மைகளை அப்படி பதிந்திருப்பார்

கலைஞர் இல்லா முரசொலியும், சோ இல்லா துக்ளக்கும் தெய்வமில்லா தேர், உப்பில்லா சோறு

அப்படி ஒரு அசாத்திய அரசியல், காமெடி ஞானி இனி வரமாட்டான். அவர் காலத்தில் வாழ்ந்ததற்காக சந்தோஷபடலாம் அவ்வளவுதான்

அந்த சினிமா காட்சி கண்ணுக்குள்ளே நிற்கின்றது

சோ ராமசாமியினை பொலீஸ் கைது செய்து இழுத்து செல்கிறது, சோ கெஞ்சுகின்றார்

“சார் சார் என்ன பாளையங்கோட்டை ஜெயில்ல போடுங்க சார், பிளீஸ் போடுங்க சார்”

“ஏன்யா?” என காவலர் கேட்கின்றார்

சோ சொல்கிறார் “அப்படியே 4 கரப்பான் பூச்சி, விஷமில்லா 2 பாம்பும் போடுங்க சார் எவ்வளவு லஞ்சமும் தாரேன்”

குழம்பி போய் காவலர் கேட்கின்றார் “ஏன்யா அங்க, அதுவும் கரப்பான் பூச்சி எல்லாம்?”

சோ முட்டைகண்ணை உருட்டி சொல்கின்றார்

“சார் நானும் பாளையங்கோட்டை சிறையினிலே, பாம்புகள் பல்லிகள் நடுவினிலே அப்படி பாட்டு எல்லாம் பாட ஆசையா இருக்கு சார்”

இதயம் கனத்த அஞ்சலிகளுடன் வழியும் கண்ணீரை துடைத்து கொண்டே அந்த தேசியவாதிக்கு ஆழ்ந்த அஞ்சலி.