சேகர் ரெட்டி எழுதிய நோட்டில்…

சேகர் ரெட்டி எழுதிய நோட்டில் பத்திரிகையாளரையும் தாண்டி சமூக ஊடகங்களில் பதிவிடுபவர்களுக்கும் பணம் கொடுத்த விஷயம் இருக்கின்றதாம்

நமது பெயர் இதில் எல்லாம் வராது

ஆனால் சில கட்சிகள், சில நபர்கள் பணம் கொடுத்தோர் பட்டியல் வரும்பொழுது நிச்சயம் நமது பெயரும் வரலாம்

அதில் வரவில்லை என்றால் ஆர்.எஸ்.எஸ் பணம் கொடுத்தோர் பட்டியலில் கண்டிப்பாக வந்தே தீரும்

 

சீமான் மைண்ட் வாய்ஸ்

Image may contain: 1 person

“கன்னியாகுமரி பக்கம் போகணும், ஆனா தம்பிங்க ஆர்.கே நகர்ல தெலுங்கில் வோட்டு கேட்டது பெரிய அவமானம் ஆயிட்டு, எங்க பாத்தாலும் உறவுகள் காரி துப்பும். பைத்தியக்கார பயலுகள வச்சிகிட்டு என்ன செய்றது?

சரி போகட்டும் அதை கூட சிங்களன் நம்பொது எதிரி, தெலுங்கர்கள் சகோதரர்கள்னு சமாளிக்கலாம், ஆனால் காங்கிரஸ்னா போயே தீரணும் , பாஜக ஆட்சியினை போய் ஹிஹீஹிஹி, திமுக வேற ஆட்சியில் இல்லை

அதனால இப்போதைக்கு இன சொந்தம் அன்புசெழியனுக்கும் சசிகுமாருக்கும் உறவு பாலம் கட்டணும். அத கட்டிட்டு பேசாம இருந்திர வேண்டியதுதான்.

இந்த சேகர் ரெட்டி வேற ஏதோ எழுதி வச்சிருக்கானாம், இப்படி எத்தனை பேர் நம்ம பெயரை எழுதி வச்சிருக்கானுகளோ , அதை நினைச்சாலே வயிறு கலங்குது ஒறவே..”

 

அனைவரும் ஆதார் கார்டு வாங்கியாக வேண்டும்…

அனைவரும் ஆதார் கார்டு வாங்கியாக வேண்டும், அதனை கையில் இருக்கும் எல்லா ஆவணத்தோடும் இணைத்தாக வேண்டும் என ஒரே அறிவிப்புகள்

சரி வெளிநாட்டில் இருப்பவன் என்ன செய்ய என தூதரகத்தில் விசாரித்தால் அதெல்லாம் இங்கு முடியாது என்றொரு பதில் மட்டும் வருகின்றது.

என்ன செய்யலாம் என கேட்டால், தெரியாது உன் ஊருக்கு போ என்ற ரீதியில் பதில்வருகின்றது, விமான டிக்கெட் தருவீர்களா என்றால் சத்தமே இல்லை

ஆக வெளிநாட்டுவாசி எல்லாம் இந்தியனே அல்ல என்றொரு முடிவுக்கு இந்த அரசு வந்துவிட்டது போல‌

இனி வெளிநாட்டுவாழ் இந்தியர்கள் நாடுகடந்த அரசை அமைத்து, அதற்கொரு பிரதமரையும் நியமிக்கவேண்டும் போலிருக்கின்றது.

யாராவது இதனை அந்த சுஷ்மா சுவராஜுக்கு தெரியபடுத்துங்கள், இல்லாவிட்டால் கடலில் காணாமல் போன குமரி மீணவர் கணக்கில் வெளிநாட்டுவாழ் இந்தியனையும் சேர்த்துவிடுவார்கள்


வாமணன் : நெப்போலியன் வரலாறு : 13

Image may contain: one or more people, people standing, sky, ocean, cloud, outdoor, water and nature

நெப்போலியன் ரஷ்யாவில் இருந்து பின்வாங்க பல காரணங்கள் இருந்தன, கடும் குளிர் , ரஷ்யர்களின் பின்வாங்கி தாக்கும் தந்திரம் என ஏராளம், முக்கியமாக உணவு தட்டுப்பாடு

நெப்போலியன் ஐரோப்பா முழுக்க தனக்கு எதிரியார் என தேடி திரிந்தாலும் தன் காலடியில் இருந்த எதிரிகளை கண்டுபிடிக்காமல் விட்டுவிட்டான்,

அவர்கள் பிரான்ஸ் நிலபிரபுக்கள் அந்நாளைய தொழிலதிபர்கள்

நெப்போலினின் சீர்திருத்த நடவடிக்கையில் அவர்கள் பெரிதாக பாதிக்கபட்டிருந்தனர் அவர்கள்தான் நெப்போலியன் இல்லாத நேரத்தில் புதிதாக ஒருவனை பதவியில் வைத்து புரட்சி செய்தனர்

இப்படி பல சிக்கல்களால் நெப்போலியன் ரஷ்யாவினை விட்டு பிரான்சுக்கு திரும்பவேண்டியதாயிற்று, அவன் திரும்பியபின் அவன் படைகளும் திரும்பின‌

7 லட்சம்பேரோடு சென்ற நெப்போலியன் 30 ஆயிரம்பேரோடுதான் திரும்பினான், ரஷ்யபோர் அவ்வளவு அழிவினை கொடுத்தது

ஆனால் ரஷ்யாவிலும் பெரும் அழிவு , குருச்சேவ் சொல்கேட்டு பின்வாங்கும் உத்திக்காக வீட்டை விட்டு சென்றவர்கள் வரவே இல்லை, அரசும் அவர்களை பற்றி கவலைபடவில்லை, நமது அரசு போல் இருந்திருக்கின்றது.

ரஷ்யாவிற்கும் ஏகபட்ட அழிவு

நாடு திரும்பிய நெப்போலியனை கண்டு பிரான்ஸ் அடங்கியது, டூப்ளிகேட் அரசனை தள்ளிவிட்டு தானே அரசன் என அமர்ந்துகொண்டான்

அவனுக்கொரு மகா அவசியம் வந்தது, அது நெருக்கடியும் கூட அவனது ஆதிக்கத்தில் இருந்த பல நாடுகள் அவன் தோல்விமுகம் காட்டியதும் எகிறின‌

ஒருவன் வெல்வது வரை அடங்கி இருக்கும் எதிரிகள், அவன் தோற்க ஆரம்பித்தபின் அடிக்க முயற்சிப்பர்கள். யுத்தத்தில் வெல்பவன் வென்றுகொண்டே இருக்கவேண்டும் , எதிரிகளை மிச்சம் வைத்துவிட்டு எங்கோ தோற்றால் அது எதிரிகளுக்கு பலம் கொடுத்துவிடும்

இதனை ஆழயோசித்தான் நெப்போலியன், நாம் தோற்றுவிட்டோம் படையினை இழந்துவிட்டோம் அப்படியே இருந்துவிட்டால் பிரிட்டன் வந்துவிடும், ஏதாவது செய்து தன் பலத்தை காட்டிவிட்டால்தான் சரி

மறுபடியும் படை திரட்டினான், பிரிந்த நாடுகளை மிரட்டி தன்னோடு சேர்த்துகொண்டான், ஸ்பெயின், பிரிட்டன், பிரஷ்யா, ஆஸ்திரியா நாட்டு கூட்டுபடைகளை 1813ல் அசால்ட்டாக வென்றான்

ரஷ்ய தோல்விக்கு பின்னும் எழுந்து நின்றான் அவன், அத்தோல்வி அவனை பாதிக்கவில்லை

ரஷ்ய படுதோல்விக்கு பின் அவனை எளிதாக அடித்துவிடலாம் என வந்தவர்களுக்கு பெரும் ஏமாற்றம் ஏற்பட்டது, தான் புலி என்பதை நிரூபித்து பெரு வெற்றி பெற்றான் நெப்போலியன்

எதிரிகள் வியூகம் வகுத்தனர், அவர்களோடு பிரான்ஸின் உள்நாட்டு எதிரிகளும் கைகோர்த்தனர்

நெப்போலியனின் பலம் அவனின் படையும் அவனின் வியூகமும், அதில் வெற்றிகொள்ளமுடியாவிட்டால் அவன் பலவீனம் என்ன என யோசித்தனர்

நெப்போலியனின் அப்போதைய பலவீனமாக அவனின் ஆஸ்திரேய மனைவி இருந்தாள், அவளை அப்படி நம்பினான் அவன்

அவளோ நெப்போலியனின் படை முதல் ராணுவ ரகசியம் வரை எல்லாம் ஒற்றறிந்து ஆஸ்திரியாவிற்கு அனுப்பிவிட்டாள்

இது நெப்போலியன் எதிர்பாராதது, அவனுக்கு அது தெரியவே தெரியாது

கூடவே பிரான்ஸ் பிரபுக்களும் புதிதாக இணைந்த ராணுவத்தினருக்கும் அவன் தளபதிகளுக்கும் கையூட்டு கொடுத்து அவன் ராணுவத்தில் ஊடுருவியிருந்தனர்

ஒரு நல்ல அரசன் பணக்காரர்களை மீறி அரசு நடத்தமுடியாது என்பதற்கு நெப்போலியனே எடுத்துகாட்டு

இப்படியாக அவனுக்கே தெரியாமல் பெரும் சதிவலை பின்னபட்ட நிலையில் அவன் போருக்கு அழைக்கபட்டான்

அன்றைய பிரஷ்யாவின் லெப்சிக் என்ற இடத்தில் நெப்போலியன் படைகளும் எதிர் கூட்டணி படைகளும் மோதின, அதற்கு அலெக்ஸாண்டர் என்பவன் தளபதி

வழக்கம் போல யுத்தத்தில் தூள்கிளப்ப தொடங்கிய நெப்போலியனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது, ஆம் அவன்படை அவன் சொல்லியபடி இயங்கவில்லை

எதிரிகளோ எது நெப்போலியன் படையின் பலகீனமோ அதை துல்லியமாக தாக்கின‌

நெப்போலியன் உத்தரவிட்டாலும் அவன் படைகள் ஏறுக்குமாறாக செயல்பட்டன, நிலபிரபுக்களின் உத்தி அது

ஆயுதம் உற்ற நேரத்தில் கைவிட்டால் எப்படி இருக்கும்? அப்படி நின்றான் நெப்போலியன்

ஒரு கட்டத்தில் அவன் போர் செய்வதை மறந்து அதிர்ச்சியில் நின்றுவிட்டான், அப்பொழுதுதான் சுற்றி வளைத்தார்கள்

யாராலும் வெல்லமுடியா அவனை குளிர் வென்றது அதன் பின் சூது வஞ்சகமாக வென்றது

அவன் காத்து நின்ற பிரான்சில் அந்நிய படைகள் நுழைந்தன, நெப்போலியன் குற்றவாளி கூண்டில் நிறுத்தபட்டான்

ஐரோப்பாவினை அலறவைத்த மாவீரனை கண்டு உண்மையில் அவர்கள் அதிசயத்தார்கள், அவனை கொல்ல யாருக்கும் மனம் வரவில்லை மாறாக பதவி நீக்கம் செய்து பிரான்சில் இருக்க கூடாது என சொல்லி ஒரு தீவுக்கு அனுப்பினார்கள்

அது பிரான்ஸ்பக்கம் இருந்த எல்பா தீவு

தோற்றபின்பே தனக்கு எப்படி எல்லாம் வலை விரிக்கபட்டிருந்தது, யாரெல்லாம் தன்னை முதுகில் குத்தினார்கள் என உணர்ந்தான் நெப்போலியன் ஆனாலும் அப்பொழுதும் ஆஸ்திரிய மனைவி மீது சந்தேகம் வரவில்லை

பிரான்ஸை உயரிய இடத்திற்கு கொண்டு செல்ல போராடிய அந்த மாவீரன் எல்பா தீவுக்கு சென்றான்

அங்கு மக்கள் இருந்தனர், சிறிய நகரம்போல் அது இயங்கியது

ஐரோப்பாவினை ஆட்டிபடைத்த சூறாவளி அங்கு ஓய்வில் இருந்தது , ஆனால் உள்ளம் எரிந்துகொண்டிருந்தது

வாமணன் வருவான்…

 

திருமாவளவன் என்பவர் புது புரட்சி பேசுகின்றாராம்

இந்த திருமாவளவன் என்பவர் புது புரட்சி பேசுகின்றாராம், அதாவது புத்த ஆலயங்கள் எல்லாம் இந்து ஆலயமாக மாறிற்றாம் அதனால் அவர் அதனை எல்லாம் இடிப்பாராம்

ஈழத்தின் அனுராதாபுர புத்த விகாரையிலும் , நாகபட்டினத்தில் இருந்த விகாரையிலும் இருந்த தங்கத்தை கொள்ளையடித்துத்தான் ராஜராஜ சோழன் பெரிய கோவிலை கட்டினான் என்கின்றது வரலாறு

மிஸ்டர் திருமா? அதனையும் உடைத்துவிடலாமா?

ஏதோ ஒரு பொறுப்பற்ற கூட்டம் வட இந்தியாவில் தகாத செயலை செய்தால், அதனையும் இங்கே செய்வேன் என கிளம்புவதா புரட்சி?

தலைவன் என சொல்லிகொள்பவருக்கு ஒரு பொறுப்பு வேண்டாமா?

வரவர திருமா ஒருமாதிரி பேசிகொண்டிருக்கின்றார்

அதானே, அந்த பிரபாகரனை சந்தித்து வந்த எவன் உருப்படியாக இருக்கின்றான்? எல்லா பயலும் லூசாகவே ஆகிவிட்டான்.

இதில் திருமா மட்டும் தப்புவாரா?

முன்பு திருமலை நாயக்கர் மஹாலை இடிப்பேன் என்றவர் சீமான், இப்பொழுது கோயிலை இடிப்பேன் என்கின்றார் திருமா

அவர்கள் அண்ணன் கொடுத்த பயிற்சி அப்படி, எதுவுமே இருக்க கூடாது கண்ணில் காணும் எல்லாவற்றையும் அழிக்க வேண்டும், அழித்துகொண்டே இருக்க வேண்டும்

பிரதமருக்கு பழனிசாமி கடிதம்

கன்னியாகுமரியை தேசிய பேரிடர் பாதிப்பு மாவட்டமாக அறிவிக்க வேண்டும்: பிரதமருக்கு பழனிசாமி கடிதம்

முன்பெல்லாம் அடிக்கடி மாதம் இருமுறை ஓடி சென்று மோடிக்கு வணக்கம் சொன்ன பழனிச்சாமிதான் இப்பொழுது கடிதம் எழுதுகின்றாராம்

எப்படி எல்லாம் இவரும் பன்னீரும் ஓடினார்கள்?, டெல்லி செல்லும் விமானங்கள் எல்லாவற்றிலும் இருவரில் ஒருவர் அல்லது இருவருமே இருந்தார்கள் என்பது உலகறிந்த விஷயம்

ஆனால் மிக முக்கிய பிரச்சினையில் இவர் கடிதம் மட்டும் எழுதுவாராம், ஏன் என்றால் ஜெருசலேம் பிரச்சினை தொடர்பாக டிரம்பை சந்தித்து பெரும் ஆலோசனையில் இருக்கின்றார் பழனிச்சாமி

கடித்தத்தில் “அய்யா வல்லவராயரே, நான் ஆளவேண்டுமய்யா..” என்ற வரி நிச்சயம் இருக்கும்


ம‌ருத்துவ மாணவர்கள் நோயாளிகளின் நலனை கருத்தில் கொண்டும் தங்கள் பணியின் பொறுப்பை உணர்ந்தும் போராட்டத்தை கைவிட வேண்டும் : அமைச்சர் விஜயபாஸ்கர்

நல்லது, அப்படியே அமைச்சரவையின் முக்கியத்துவம் உணர்ந்தும், இந்த மாநில மக்களின் நலனை கருத்தில் கொண்டும் இந்த அரசு பதவியினை விட்டு இறங்க தயாரா?


அழிவில் இருக்கும்பொழுதெல்லாம் சாதி தெரியாது

காமராஜர் கன்னியாகுமரியினை தமிழகத்துடன் சேர்த்தபொழுது இது நாடாருக்கான செயல். நாடார்களை ஒரு நாடார் சேர்க்கின்றார் என பொங்கிவர்களையும்

நாடார்கள் மிகுந்த கன்னியாகுமரி தமிழகத்தோடு இருப்பதே சரி என சொன்ன நாடார் சங்கங்களையும்

இப்பொழுது பழனிச்சாமி அரசு கன்னியாகுமரியினை ஒதுக்கி வைக்கும்பொழுது காணவில்லை

அட அவர்களை விடுங்கள், நாடார் சங்கங்களையும் காணவே இல்லை

எவனாவது ஒருத்தன் கன்னியாகுமரி நாடார்கள் நிரம்பியது என்பதால் பழனிச்சாமி அரசு கண்டுகொள்ளவில்லை என கிளம்புகின்றானா என்றால் இல்லை

அவனுக்கு தெரியுமா என்றால் தெரியும் , ஆனால் ஏன் சொல்லமாட்டான் என்றால் அதுதான் விஷயம்,

காரணம் என்ன? நாடார் சங்கங்கள் எல்லாம் ஏன் அமைதி?

விஷயம் இருக்கின்றது

ஆர்.கே நகரில் நாடார்கள் வோட்டு அதிகம் என்கின்றார்கள், ஆமாம் என்பது போல எர்னாவுர் நாராயணன் எல்லாம் முன்னால் நிற்கின்றார்

இப்பொழுது கன்னியாகுமரி விவகாரத்தை இழுத்தால் அது எங்கே சிக்கலாகும் என்பது தெரியாதா?

அதனால் இப்பொழுது கன்னியாகுமரி மக்கள் அத்துகொண்டு போகின்றோம் என்ற விபரீத நிலைக்கு வந்தபின்னும் “நாடார் வெறுப்பு” என்ற வார்த்தை வரவே இல்லை

ஆனால் நிலமை அமைதியாக‌ இருக்கும்பொழுது நாடார்கள் என்பதால் அவர்கள் இங்கு இணைந்தார்கள் என கிளப்பிவிடவேண்டியது

ஆக நாடார் சங்கமும் அதன் முழங்கங்களும் ஏன் காமராஜர் நாடார் என்பதால் கன்னியாகுமரியினை இணைத்தார் என சொல்லும் எதிர்கட்சி முழக்கங்கள் எல்லாமே வோட்டு நாடகம், வேறு ஒன்றுமே இல்லை

இனி தேர்தல் வரட்டும், கன்னியாகுமரியில் நாடார்களும் அவர்களின் சங்கங்களும் எப்படி எல்லாம் பொங்குவார்கள் என தெரியும்

மற்றபடி அழிவில் இருக்கும்பொழுதெல்லாம் சாதி தெரியாது, தெரியவே தெரியாது.

எவனாவது இது அரசின் “நாடார் வெறுப்பு” என சொல்லட்டும் பார்க்கலாம், இப்பொழுதெல்லாம் சொல்லவே மாட்டார்கள்

இதற்கு ஒரு பயலும் வரமாட்டான், ஆனால் ராக்கெட் ராஜா எனும் ரவுடியினை பாதுகாக்க பெரும் போராட்டம் எல்லாம் நடத்துவார்கள், அவ்வளவுஅறிவார்ந்த சமூகம் நாடார் சமூகம்