பாரதிராஜா எப்படிபட்ட கலைஞன்

Image may contain: 1 person, sitting

இந்த டிவிகள் எல்லாம் ஒழியட்டும் , ஒரு டிவியும் குஷ்பு படம் ஒளிபரப்பவில்லை நந்தினி சீரியல் மட்டும் ஓடிகொண்டிருந்தது

அட அட அட‌

விவேகானந்தரின் சீடர் நிவேதிதா இப்படித்தான் இருந்திருப்பார் என சொல்ல வைக்கும் அளவிற்கு தங்க தலைவி ஆன்மீக வேடத்தில் பின்னி எடுத்திருந்தார், அதுவும் அரைமணி நேரத்தில் முடிந்துவிட்டது

காரைக்கால் அம்மையார் இப்படித்தான் இருந்திருப்பார் என சொல்ல வைக்கும் நடிபபு அது. ஆனால் சதிகாரர்கள் அரைமணி நேரத்திலே நிறுத்திவிட்டார்கள்

ஏதும் படம் பார்க்கலாம் என்றால் குரங்கு பொம்மை எனும் படம் சிக்கியது

அய்யா, பாரதிராஜா எப்படிபட்ட கலைஞன் அய்யா நீர்?

நான் சினிமாவில் நடிக்கத்தான் வந்தேன், சென்னை வந்து கண்ணாடியில் முகத்தை பார்த்ததும் இது நடிப்புக்கு லாயக்கில்லா முகம் என உணர்ந்து இயக்குநர் ஆனேன் என நடிகர் திலகம் முன்னால் நீர் சொன்னது நினைவுக்கு வந்தது

ஏம்பா உங்க ஊர்ல கண்ணாடி இல்லியோ என சிவாஜி பதிலுக்கு கலாய்த்ததும் நினைவுக்கு வந்தது

நீர் மிகசிறந்த இயக்குநர் என்பதை எத்தனையோ முறை நிரூபித்துவிட்டீர், ஆனால் மிக சிறந்த நடிகர் என்பதை இந்தபடத்தில் அட்டகாசமாக நிரூபித்திருக்கின்றீர்

எதற்கு அய்யா அந்த கண்ணாடியினை பார்த்து தொலைத்தீர் எப்படிபட்ட நடிகனை தமிழகம் இழந்திருக்கின்றது தெரியுமா?

அய்யா, அந்த கள்ளிகாட்டு இதிகாசத்தை படமாக எடும், அதில் நீரே அந்த மாயத்தேவர் வேடத்தில் நடியும்

இன்னொரு முதல் மரியாதையாக அப்படம் காலத்தில் அழியாமல் நிலைபெறும் என்பதில் சந்தேகமே இல்லை

இந்த அரசியல் பேச்சுக்களை விட்டுவிட்டு அப்படி ஒரு படத்தை கொடுங்கள் பாரதிராஜா

நிச்சயம் நீர் மகா கலைஞன், கிராமத்து கலைஞன், அந்த மாயத்தேவர் வேடத்தில் உம்மை பார்ர்க்க இந்த தமிழகம் காத்து கிடக்கின்றது

உங்கள் இனிய தமிழ் மக்களுக்காக அதனை செய்யுங்கள்

 

டிரம்ப் ஏன் இப்படி ஜெருசலேம் விவகாரத்தை இழுக்கின்றார்?

Image may contain: 1 person, smiling, beard, hat and glasses

கிட்டதட்ட 40 ஆண்டுகளாக அமெரிக்கா இஸ்ரேலை அலறவிட்டுகொண்டிருக்கும் ஹசன் நஸ்ருல்லா. மொசாத்தும் சி.ஐ.ஏ வும் இந்த மனிதரிடம் இன்னும் தோற்றுகொண்டே இருக்கின்றன

இந்த டிரம்ப் ஏன் இப்படி ஜெருசலேம் விவகாரத்தை இழுக்கின்றார் என்றால் விவகாரம் எங்கெல்லாமோ சுற்றுகின்றது

இப்போதைய அரேபியாவில் வலுவான அரசுகள் இரண்டேதான் ஒன்று சவுதி இன்னொன்று ஈரான் வேறு எல்லாம் அரண்டு கிடக்கின்றன, ஜோர்டானும் லெபனானும் ஓரளவு அமைதி

இதில் லெபனானில் இருக்கின்றது சிக்கல், என்ன சிக்கல்?

1978ல் இருந்தே லெபனான் இஸ்ரேலுக்கும் இன்னும் சில நாடுகளுக்க்கும் அச்சமூட்டும் விஷயம். காரணம் லெபனான் அல்ல, மாறாக அங்கிருக்கும் ஹிஸ்புல்லா இயக்கம்

1978ல் ஆரம்பிக்கபட்ட அவ்வியக்கம் மற்ற இயக்கங்களை விட மகா வித்தியாசமானது. 1983ல் அங்கி இருந்த அமெரிக்க, பிரான்ஸ் அமைதிபடையினையே விரட்டிய இயக்கம் அது, அதுவும் ஒரு தற்கொலைபடை தாக்குதலில் 250 அமெரிக்க வீரர்களை கொன்றது எல்லாம் மகா பெரும் தாக்குதல்

அமெரிக்க படைமுகாமிற்கு தண்ணீர் கொண்டு செல்லும் லாரியில் வெடிகுண்டை மறைத்து, தண்ணீர் லாரி போல் சென்று அடித்த அடி அது. அன்றே அமெரிக்காவும் பிரான்சும் பெட்டி கட்டின‌

அதன் பின் இஸ்ரேல் அப்பகுதியில் படை நிறுத்தியது, ஆனானபட்ட இஸ்ரேலே ஹிஸ்புல்லாவிடம் தாக்குபிடிக்க முடியாமல் 2000ம் ஆண்டில் வெளியேறியது

2006ல் விமான தாக்குதல் எல்லாம் இஸ்ரேல் நடத்தினாலும் கொஞ்சமும் ஹிஸ்புல்லா அசரவில்லை

இன்றுவரை அமெரிக்கா, இஸ்ரேல் எல்லாம் கண்டு அஞ்சும் இயக்கம் அது, ஈரானின் ஆசி அவர்களுக்கு உண்டு. இன்றுள்ள தீவிரவாத இயக்கத்திலே பலம் வாய்ந்ததும் வல்லரசுகள் கண்ணில் விரல்விட்டு ஆட்டுவதும் அதுதான்

உலகம் ஐ.எஸ், அல் கய்தா என அமெரிக்க தயாரிப்பு தீவிரவாதங்களைத்தான் காணும் காரணம் விளம்பரம், ஹிஸ்புல்லாவிற்கு அப்படியான விளம்பரம் இல்லை எனினும் சிங்கம் சிங்கமே

கடந்த ஆண்டு விரைவில் இஸ்ரேல் மீது தாக்குதல் என சொல்லியிருந்தது

இப்பொழுது சவுதிக்கும் ஈரானுக்கும் மறைமுகம் யுத்தம் நடத்தும் நிலையில் இரானின் ஹிஸ்புல்லாவினை அழிக்க சவுதி தயாராகின்றது, உபயம் அமெரிக்கா

பிண்ணணி இசை, இயக்கம் இஸ்ரேல்

கடந்த மாதம் அமெரிக்கா லெபானிய அரசுக்கு நவீன விமானம் கொடுத்ததும், சவுதி தன் குடிமக்களை லெபனானில் இருந்து வெளியேற சொன்ன காட்சிகளும் நடந்தன, அதாவது யுத்ததிற்கு தயாராகும் காட்சிகள் இவை

இப்பொழுது யுத்தம் மூளவேண்டும், சந்தடி சாக்கில் எல்லோரும் ஹிஸ்புல்லாவினை அழித்து ஈரான் மேற்குபக்கம் வராமல் செய்யவேண்டும்

இந்த நகர்வில் நகர்கின்றார்கள்

ஜெருசலேம் பிரச்சினையினை இழுத்தால் பாலஸ்தீனம் பொங்கும், அதற்கு துணையாக‌ ஹிஸ்புல்லா வரும் சந்தடி சாக்கில் பெரும் யுத்தம் தொடுக்கலாம் எனும் வியூகம் இருகின்றது என்கின்றார்கள்

அவர்கள் எதிர்பார்த்தபடியே ஹமாஸ் தாக்குகின்றது, இஸ்ரேல் விமானங்கள் பதிலுக்கு குண்டு வீசுகின்றன‌

ஹிஸ்புல்லா இந்த வலையில் சிக்குமா என்பது அவர்களின் மாவீரன் நஸ்ருல்லா கையில் இருக்கின்றது

அவர் இன்னமும் வாய்திறக்கவில்லை

ஹிஸ்புல்லா இந்த வலையில் சிக்காது, அதனை பொறுத்தவரை ஜெருசலேம் எங்கு இருந்தால் என்ன? நாளை இஸ்ரேல் என்றொரு நாடே இருக்காது, பின் ஜெருசலேம் பாலஸ்தீனுக்குத்தான் சொந்தம் எனபது போல் அது சிந்திக்கின்றது

எப்படியோ ஹமாஸ் ராக்கெட் வீச்சும், பதிலுக்கு இஸ்ரேல் தாக்குதலும் அதற்கு எதிராக உலக கண்டனங்களும் குவிந்துகொண்டிருக்கின்றன‌

ஹிஸ்புல்லாவும் ஈரானும் சவுதி இருக்கும் வரை , அதற்கும் இஸ்ரேலுக்கும் கள்ள உறவு இருக்கும் வரை பாலஸ்தீனத்திற்கு விடிவு இல்லை என்ற ரீதியில் பேசிகொண்டிருக்கின்றன‌

இப்போதைக்கு ஹமாஸுக்கும் இஸ்ரேலுக்கும் இந்நொடியில் மோதல்

இது இனி எப்படி எல்லாம் வெடிக்குமோ என்பது விரைவில் தெரியலாம்

என்ன சொன்னாலும் ஈரானியர்களின் தைரியமும், ஹிஸ்புல்லாவின் சாகசமும் அப்பகுதியில் கொஞ்சம் ஆச்சரியமான விஷயங்கள்தான்,

இன்னும் என்னென்ன ஆச்சரியங்களை கொடுக்குமோ தெரியவில்லை

ஆனால் கொடுக்கலாம் போலத்தான் தெரிகின்றது.

 

இது அரசியல் பதிவு அல்லவே அல்ல

முன்பு உலகை மிரட்டிய நோய்களில் ஒன்று பெரியம்மை, சின்னம்மை இரண்டுமே அக்காலத்தில் மனித சமூகத்தை அச்சுறுட்த்தியவை. இரண்டாலும் மனித குலம் சந்தித்த சவால்கள் ஏராளம்

ஏகபட்ட இழப்புகள், வந்துவிட்டால் மொத்தமாக வாரி சுருட்டாமல் அந்த நோய்கள் ஒழிந்ததில்லை

அவற்றுடன் போராடி போராடி இன்று இரண்டையுமே மனுகுலம் வென்றுவிட்டது, இந்த டிசம்பர் 9ம்நாள் பெரியம்மை ஒழிக்கபட்ட தினமாக உலகம் அனுசரிக்கின்றது

உலகெல்லாம் ஒழிந்தது போலவே தமிழகத்திலிருந்தும் பெரியம்மை, சின்னம்மை இரண்டும் ஒழிக்கபட்டு விட்டது என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்

இது அரசியல் பதிவு அல்லவே அல்ல.


மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வழிமுதலாய் எண்ணிய மூன்று

இந்த குறள் எந்த மூன்றை சொல்கின்றது என ஆழ யோசித்தால் நாக்குக்கு அடிமையான மூளை சொல்வது இந்த மூன்றையுமே

ஆடு, கோழி , மீன்


ஜெருசலேம் விவகாரத்தால் உலகமே அதிர்ந்திருக்கின்றது

இந்த ஜெருசலேம் விவகாரத்தால் உலகமே அதிர்ந்திருக்கின்றது, பாலஸ்தீனத்தில் வன்முறை தொடங்கி இரண்டுபேர் கொல்லபட்டாயிற்று

துருக்கி இஸ்தான்புல்லில் லட்சகணக்கான மக்கள் திரண்டு ஆர்ப்பாட்டம் நடட்துகின்றனர், இஸ்லாமிய கவுன்சில் நாடுகள் இன்னும் பல இயக்கங்கள் பாலஸ்தீனருக்கு நீதிவேண்டும் என கிளம்புகின்றன‌

ஆச்சரியமாக இந்திய முஸ்லீம்கள் மகா அமைதி, ஏன் என்று தெரியவில்லை. அமெரிக்க தூதரகம் முன் முன்பெல்லாம் கத்துவார்கள், இப்பொழுது ஏனோ மகா அமைதி

இது மேற்காசியாவில் நடக்க, கிழக்கே வடகொரியா ஏதோ ஓலைவெடி வெடிக்கபோவது போல அணுகுண்டு யுத்தம் வெடிக்கலாம் தென்கொரியா அழியலாம், அமெரிக்கா நாசமாகலாம் என சொல்லிகொண்டே இருக்கின்றது

இம்மாதிரி செய்திகள் வர தொடங்கினால் இந்த அல்லேலூயா கிறிஸ்தவர்கள் அட்டகாசமும் தொடங்கிவிடும்

கடைசி காலம் வந்துவிட்டது, நேபாளத்தில் பூகம்பம் , இந்தோனேஷியாவில் எரிமலை வெடிப்பு, அணுயுத்தம் , புதிய ஜெருசலேம், ஆம் சந்தேகமே இல்லை இது எல்லாம் பைபிளில் சொல்லபட்டது, உலகம் அழியபோகின்றது, இயேசு வருகின்றார் அல்லேலூயா… என வழக்கமான ஒப்பாரியினை தொடங்கிவிட்டார்கள்

இந்த அழகான உலகம் அழிந்து போவதில் அவர்களுக்கு ஏன் அவ்வளவு ஆசை, அவ்வளவு ஆனந்தம் ,என்பதுதான் புரியவே இல்லை

நான் சொன்னதை திரித்துவிட்டார்கள் : திருமாவளவன் வேதனை

கோயிலை இடிக்க சொல்லவில்லை, நான் சொன்னதை திரித்துவிட்டார்கள் : திருமாவளவன் வேதனை

மிஸ்டர் திருமா, அன்று எங்கள் தலைவி குஷ்பு கற்பு பற்றி என்ன சொன்னார்? அவரின் கருத்துக்கள் திரிக்கபட்டன‌

அதற்கு எப்படி எல்லாம் பொங்கி குட்டிகரணம் அடித்து தலைவியினை நீர் வேதனைபடுத்தினீர் என்பது மறக்க கூடியதா? என் கருத்துக்கள் திரிக்கபட்டன என தலைவி கதறியதை காதில் வாங்கினீரா?

முற்பகல் செய்யின் பிற்பகல் இடியும், ச்சே விளையும் திருமா

“மறக்க மாட்டோம் மன்னிக்க மாட்டோம் , திருப்பி அடிப்போம்”

# குஷ்பு பாசறை

ஆதலால் சங்கத்தாரே பணிந்து தொழுவீர்

Image may contain: 1 person

குனித்த புருவமும், 
கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பும்,
பனித்த சடையும், 
பவளம் போல் மேனியில் பால் வண்ணமும், 
இனித்தம் உடைய எடுத்த பொன்பாதமும் 
காணப் பெற்றால்
மனி(த்)தப் பிறவியும் வேண்டுவதே,
இந்த மா நிலத்தே

ஆதலால் சங்கத்தாரே பணிந்து தொழுவீர்

 

இன்று சோனியாவிற்கு பிறந்த நாள்

Image may contain: 1 person, close-up and outdoor

இன்று சோனியாவிற்கு பிறந்த நாளாம்

எல்லோருக்கும் ஒரு விதி என்றால் அவருக்கு வேறு மாதிரியான விதி

இத்தாலி பிறப்பு, லண்டனில் வேலை செய்ய சென்றபொழுது ராஜிவினை சந்திக்கின்றார், விதிப்படியே அது காதல், திருமணம் என மாறிவிட்டது.தன் அரசியல் வாரிசு ராஜிவ் அல்ல என்ற எண்ணத்தில் இருந்த இந்திராவிற்கு அந்த திருமணத்தில் தயக்கம் ஏதும் இருக்கவில்லை.

பெரும் பாரம்பரியமிக்க நேரு குடும்பத்தில் வந்தபின் முழுக்க முழுக்க இந்தியபெண்ணாகவே மாறினார் சோனியா. மொழி, உடை என இந்திய அடையாளங்களிலே மாறிகொண்டார்.

இந்திராவிற்கும் அவர் மீது ஒரு நல்ல அபிப்ராயம் இருந்தது.

பெரிய வாழ்க்கை வாழ இந்தியாவிற்கு வந்தவர்தான் சோனியா, ஆனால் அழைத்து வந்த விதி, அவரை நிம்மதியாக இருக்கவிட்டதா என்றால் இல்லை

இந்திராவின் வாரிசு என கருதபட்ட சஞ்சயின் மரணம் அக்குடும்பத்தில் முதல் அடி.

கொஞ்சநாளில் இந்திராவும் கொலை செய்யபட்டுவிட்டார், ராஜிவ் களமிறக்கபடுகின்றார்

எப்படி இருக்கும் சோனியாவிற்கு?

சுற்றிலும் பகைகள், சொந்த மெய்காப்பளனே இந்திராவினை சொந்த வீட்டில் கொன்றபின் எங்கே பாதுகாப்பு? பிஞ்சு குழந்தைளுடன் அவர் நடுங்க, இந்திரா குடும்பத்தை வேரறுப்போம் என கேட்ட கோஷங்கள் அவரை என்ன பாடு படுத்தியிருக்கும்?

ஈழசிக்கலில் விதி தள்ள ராஜிவ் தடுமாறுகின்றார், கூடவே போபர்ஸ் பேர ஊழலும் வந்து அடிக்கின்றது, இரண்டையும் சமாளித்துகொண்டிருக்கும் வேளையில்தான் ராஜிவ் கொலை நடந்தது.

கொழுந்தனும், மாமியாரும், கணவனும் கொடூரமாக கொல்லபட பிஞ்சு குழந்தைகளுடன் ஒரு பெண், அதுவும் வெளிநாட்டுபெண் என்ன செய்திருப்பாள். இந்தியா பாதுகாப்பான தேசம் அல்ல என அலறி அடித்து ஓடியிருப்பாள்

ஆனால் சோனியா துணிந்தார், என்னவோ தெரியவில்லை பெண்களுக்கு அழுத்தமும் சில வைராக்கியங்களும் சில நேரங்களில் வந்துவிடுகின்றன, இந்தியாவிலே அமர்ந்தார்.

கட்சியில் இருந்தும் ஒதுங்கினார், ராஜிவ் அலையில் அனுபவசாலி நரசிம்ம ராவ் தான் பிரதமர் ஆனார்.

இந்த நேரத்தில்தான் அதாவது இனி காங்கிரஸினை நடத்த யாருமில்லை என்ற நேரத்தில்தான் கொடுமையான பாபர் மசூதி இடிப்பும் கலவரங்களும் அதிகரித்தன, மத ரீதியான கோஷங்கள் வலிமை பெற்றன‌

காங்கிரஸ் தன் பலத்தினை இழந்திருந்தது, சீதாராம் கேசரி போன்றவர்கள் தடுமாறினர். கிட்டதட்ட அது அழிந்துகொண்டிருந்தது, இந்த நேரத்தில்தான் களம் இறங்கினார் சோனியா

என்னவோ தெரியவில்லை, மக்களிடம் அவருக்கு வரவேற்பு இருந்தது, நேரு குடும்பத்தின் வாரிசுகளில் ஒன்றாகவே அவரை கண்டார்கள். ஆதரவளித்தனர்

காங்கிரஸ் கட்சியினை தூக்கி நிறுத்தினார் சோனியா, உண்மை. இனி காங்கிரஸ் இல்லை அங்கு யாரும் இல்லை என்றவர்களுக்கு சோனியா பெரும் சவால், காங்கிரசை மீட்டார்.

வெளிநாட்டில் பிறந்தவர் ஆள அனுமதிக்கமாட்டோம் என போர்கொடி தூக்கினார் அத்வானி, கட்சிக்குள்ளும் சங்மா, சரத்பவார் என எதிர்ப்புகள் எழுந்தன , சில பிரிவுகளும் நடந்தன‌

மன்மோகன் சிங்கினை அமர்த்திவிட்டு லகானை கையில் பிடித்தார் சோனியா, நன்றாக தெரிந்தது ஆட்சி சோனியாவுடையது ஆனால் மன்மோகன்சிங்கின் நியாமனான செயல்பாடுகளை அவர் தடுக்கவில்லை

ஓரளவு நல்ல ஆட்சியினைத்தான் சோனியா கொடுத்தார். கூட்டணி சிக்கலில் சில பிரச்சினைகள் வந்திருக்கலாம், கூட்டணிக்காக சில காரியங்களை அவர் பொறுத்திருக்கலாம், காரணம் நிச்சயம் அவர் அல்ல‌

சோனியா வெளிநாட்டு உளவாளி, சோனியா ராஜிவ் கொலையில் அக்கறை காட்டவில்லை என பலர் புகார் பட்டியல் வாசிப்பார்கள், நிச்சயமாக அப்படி இருக்க முடியாது

அரசியல் அவர் மீது திணிக்கபட்டதே தவிர, அவராக ஏற்கவில்லை. குடும்பம் காலம் காலமாக செய்து வந்த சேவைகளை ஒரு இந்திய மருமகளாக தொடர்ந்தாரே அன்றி வேறல்ல‌

ராஜிவ் கொலையில் குற்றவாளிகளின் மரண தண்டனையினை அவர் ஆயுளாக மாற்றினார், ராஜிவ் கொலையின் உண்மை குற்றவாளிகள் பெரும் கைகள், எதிர்க்க முடியாத கைகள்

மூன்று படுகொலைகளை நேரில் அண்ணியாக, மருமகளாக, மனைவியாக பார்த்தவரின் தாய்மனம் சில் எச்சரிக்ககளில் ஒதுங்கியது

புலிகளை அவர் அழிக்க நினைத்திருந்தால் 1995ல் சந்திரிகாவுடன் கை கோர்த்தால் முடிந்தது விஷயம், யாழ்பாணத்தை சந்திரிகா மீட்டபொழுதே பிரபாகரன் கதையினை முடிக்க சில நாழிகை ஆகியிருக்காது, சோனியா செய்யவில்லை, காரணம் உண்மை குற்றவாளி யாரென அவருக்கும் தெரிந்திருந்தது

2009 இறுதியுத்தத்தில் சோனியாவினை சாடுபவர்கள், பிரபாகரனின் மவுனத்தை புலிகளின் அமைதியினை சொல்லமாட்டார்கள், இந்தியா எதிர்பார்த்தது அதுதான், பிரபாகரன் வாய்விட்டு சில விஷயங்களை பேசவேண்டும் என எதிர்பார்த்தது, பிரபாகரன் வாய்விட்டு சொன்னது என்ன?

“வைகோவும், நெடுமாறனும் எங்களுக்காக இந்தியாவில் போராடுவார்கள்”, இது உருப்படுமா?

இறுதி யுத்தம் யாராலோ நடத்தி, யாரெல்லாமோ செத்தார்கள், பிரபாகரனிடம்தான் யுத்தம் நிறுத்தும் சக்தியும் வார்த்தையும் இருந்தது, மனிதர் மகா மவுனம், செத்தும் போனார்

சோனியாவினை நினைத்துபார்த்தால் சில விஷயங்கள் புரியும்

இந்தியா வந்தபின் இந்திய மகளாகவே மாறினார், இந்திய பாரம்பரியத்திற்கு வந்தார்

கிட்டதட்ட 45 ஆண்டுகால இந்திய வாழ்வில் ஒரு சர்ச்சையிலும் அவர் சிக்கியதில்லை, அதுவும் இன்றுவரை அவரின் தனிபட்ட முறையில் கூட எதிரிகளால் ஒரு குற்றச்சாட்டையும் வைக்க முடியாது.

அப்படி தூய இந்திய விதவையாகவே வாழ்ந்தார்.

மதரீதியான போக்குகளை உடையவர்களே அவரை சாடுவார்கள், காரணம் சோனியா அழிந்த காங்கிரசை மீட்டார், அந்த காங்கிரஸ் ஒரு நாளும் மதவாதத்தை ஆதரிக்காது

இன்று மோடி வந்துவிட்டதாகவும், காங்கிரஸ் அழிந்துவிட்டதாகவும் பலர் சொல்லிகொண்டிருக்கலாம்

10 ஆண்டு காலம் தொடர்ந்து ஆண்டுவிட்டு இப்போது பாஜ ஆட்சி நடக்கின்றது, இவர்கள் செய்யும் அழிச்சாட்டியங்களை கண்டால் அடுத்த ஆட்சி கண்டிப்பாக காங்கிரசுக்கே

இருக்கட்டும்

இன்று பிறந்தநாள் காணும் அவரை வாழ்த்துவோம், அவர் பல்லாண்டு வாழட்டும்

இன்றைய இந்தியா மதவாதமில்லாத இந்தியாவாக இருக்க ஒரு வலுவான எதிர்கட்சி அவசியம், தேசிய அளவில் அவசியம்

பாஜக் எனும் தேசிய கட்சியினை எதிர்க்க தேசிய அளவில் காங்கிரஸ் அவசியம்

அதே நேரம் பாஜக எனும் தேசிய கட்சியும் நாட்டுபற்றளவில் இருக்கட்டும், மதவாதமே ஆபத்தானது.

அப்படி காங்கிரஸ் எனும் தேசிய கட்சி எந்நாளும் இந்நாட்டில் தேவையே

அதனை காத்து மீட்டெடுத்து இன்று நிறுத்தியிருக்கின்றார் சோனியா, மறக்க முடியாதவர்

1967ல் தமிழகத்தில் காலிசெய்யபட்டது காங்கிரஸ், 1989ல் சோனியா ராஜிவோடு சூறாவளி சுற்றுபயணம் செய்தும் 25 இடங்கள்தான் கிடைத்தன. அதன் பின் அது தனியே நிற்கவே இல்லை

இப்பொழுது தமிழக சூழல் மாறுகின்றது, பெரும் ஆலமரங்கள் சரிகின்றன, பெரும் மாற்றங்கள் இனி சாத்தியம்

தேசிய அளவில் காங்கிரசில் கேசரி கோஷ்டி, நரசிம்ம ராவ் கோஷ்டி என பல கோஷ்டிகளை ஒழித்த சோனியா, தமிழக கோஷ்டிகளையும் ஒழித்துகட்டி வலுவாக்கட்டும்

தமிழகத்தில் பாஜக வளர்வது சாத்தியமா, காங்கிரஸ் வளர்வது சாத்தியமா? என்றால் நிச்சயம் காங்கிரசுக்கே வாய்ப்பு மகா அதிகம்

இவைகளை காலம் காட்டும்

எங்கோ பிறந்து, இங்கு வந்து ரத்த காட்சிகளை கடந்து இந்த தேசத்தின் மாபெரும் கட்சியினை வலுவாக்கி வைத்திருக்கும் அந்த பெண்மணிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

சோனியாவிடம் கற்றுகொள்ள நிறைய உண்டு எனினும் தற்போதைய தேவை சசிகலாவிற்கு இருந்தது

வெளிநாட்டுக்காரி சோனியா என பெரும் எதிர்ப்பினை எப்படி மன்மோகன் சிங்கினை கொண்டு ஆட்சி செய்து கட்சியினையும் ஆட்சியினையும் சோனியா காப்பாற்றினாரோ

அப்படியே ஒரு நல்ல நிர்வாகியினை கொண்டு ஆட்சியினையும் கட்சியினையும் சசிகலா மிக அழகாக கொண்டு சென்றிருக்கலாம் தான்

ஆனால் மகா அவசரபட்டு குழிக்குள் விழிந்துவிட்டார், சரி இது சசிகலா பிரச்சினை

ஒரு விதவை கோலத்துடன், பெரும் பாதுகாப்பு பிரச்சினைகளுடன் அவர்களையும், கட்சியினையும், அதன் மூலம் இந்த நாட்டினையும் காத்து நிற்கும் சோனியாவின் வாழ்வு ஒரு தவ வாழ்வே, சந்தேகமே இல்லை

(தியாக தலைவி எனும் வார்த்தை சோனியாவிற்குத்தான் பொருந்தும், ஆனால் யாரெல்லாமோ சூட்டிகொண்டபின் அப்பெயரே களங்கபட்டு நாசமாயிற்று, மரியாதையே போயிற்று..)

இந்த தேசம் தத்தெடுத்த முத்தான தலைவிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

இப்பொழுது ராகுலை தலைவராக்கிவிட்டு கிட்டதட்ட தன் கடமைகளை எல்லாம் முடித்துவிட்டு ஏதோ சொல்ல வரும் அவரை நினைக்கையில் கண்கள் கலங்குகின்றன‌

எங்கிருந்தோ வந்து இத்தேசத்தின் மிகபெரும் கட்சியினை காத்துவிட்டு , அதற்கோர் தலைவனையும் கொடுத்துவிட்டு கை அசைக்கும் அவரை கண்டால் ஏதோ ஒரு உணர்வு மனதில் அழுத்தத்தான் செய்கின்றது

அவர் பல்லாண்டு வாழட்டும்,

இந்திராவும், ராஜிவும் வாழாத அந்த ஆயுள்நாளெல்லாம் சேர்த்து அவர் பல்லாண்டு வாழட்டும், அவர் சேவை தொடரட்டும்.

அன்றே கலைஞர் சொன்னது முக்கால உண்மை “சொக்க தங்கம்” சோனியா

பிறந்த நாள் வாழ்த்துக்கள் தாயே…