இலங்கையின் ஹம்பாந்தோட்டா துறைமுகத்தை சீனா வளைத்தாயிற்று

ஒரு வழியாக இலங்கையின் ஹம்பாந்தோட்டா துறைமுகத்தை சீனா வளைத்தாயிற்று. பெரும் பணம் கொடுத்து அதனை அவர்கள்தான் நிர்மாணம் செய்தார்கள்

இப்பொழுது 99 வருட குத்தகைக்கு எடுத்தாயிற்று, இது இந்தியாவிற்கு நிச்சயம் அச்சுறுத்தல், எவ்வளவோ முயன்றும் இந்தியாவால் அதனை தடுக்க முடியவில்லை

திரிகோணமலை அங்கு மிகமுக்கியமான இடம், இன்னும் இந்திய கட்டுப்பாட்டிலே இருக்கின்றது என்பது ஆறுதலான விஷயம் என்றாலும் அதற்கு மிக அருகில் ஹம்பாந்தோட்டாவில் சீனா கால்வைத்திருப்பது நல்ல அறிகுறி அல்ல‌

இது எங்கள் கடல்வணிகத்திற்கான பாதையில் ஓய்வெடுக்கும் இடம் என சீனாவும், இலங்கை மண்ணில் இருந்து இந்தியாவிற்கு எதிராக யாரையும் செயல்பட விடமாட்டோம் என இலங்கை சொன்னாலும் அதனை நம்ப முடியாது

இலங்கை என்பது சிறிய நாடுதான், ஆனால் தந்திரமானது இந்தியாவோடு நெருங்காது, நெருங்கினால் பூட்டான் போல் ஆக்கிவிடுவார்கள் என தெரியும், விலகவும் செய்யாது முற்றிலும் விலகினால் தொலைத்துவிடுவார்கள் என்பதும் தெரியும்

அதனால் ஒரு மாதிரி ஆட்டம் ஆடும்

1971ல் வங்க போரில் பாகிஸ்தானை வலிய இழுத்து ஆதரவளித்த நாடு அது, பின் அணுகுண்டு சோதனைக்காக இந்திரா கச்சதீவினை எல்லாம் கொடுத்து நாடகாமாடினார். உள்ளூர இருவருக்குமே பகைதான்

1980களில் அமெரிக்கா திரிகோணமலையில் கால் வைத்தபொழுது பல விஷயங்களை கணக்கிட்டுத்தான் போராளிகளை இந்தியா வளர்த்தது

அதன் திட்டபடியே திரிகோணமலையில் தன் பிடியினை இறுக்கியது, ஆனால் அதன் நிறைவேறா திட்டம் இந்தியாவில் தன் ராணுவ முகாமினை அமைப்பது

அப்படி இந்திய முகாம் அமைக்கபட்டிருக்குமாயின் இந்த ஹம்மாந்தோட்டா எல்லாம் சீனா பக்கம் சென்றிருக்காது, ஆனால் அப்படி சென்ற அமைதிபடையினை புலிகள் விரட்டியது எல்லாம் பன்னாட்டு சதி

சரி இந்தியா எப்படி சறுக்கியது?

இலங்கையினை மிரட்ட போராளி குழு இல்லாத காலத்தில் சேது கடலை தோண்டுவதாக சொல்லியது. சேது சமுத்திரம் பற்றி பெரிதாக எழுதவேண்டும் , ஆனால் இந்தியா அப்படி சொன்னதின் அர்த்தம் இந்தியா அப்படி செய்தால் கொழும்பின் வருமானம் பாதிக்கும், ஹம்மந்தோட்டா அம்பேல்

இந்த மிரட்டலின்பொழுது எப்படியோ தாஜா செய்த இலங்கை பின் தன் சுயரூபத்தை காட்டிவிட்டது. இந்தியா இன்னும் சேது சமுத்திர திட்டத்தை கைவிடவில்லை, அவ்வப்பொழுது ஆய்வுகள் நடக்கின்றன‌

கொழும்பின் முதுகெலும்பினை முறிக்க கன்னியாகுமரி பக்கம் இணையம் எனும் மாபெரும் துறைமுகத்தை நிர்மானிக்க இந்தியா முடிவு செய்தது, விரைவில் அது தொடங்கலாம் என்கின்றார்கள்

அது செயல்பாட்டுக்கு வரும்பொழுது கொழும்பின் வருமானம் பாதிக்கபடும் ஹம்மாந்தோட்டையில் சீன கப்பல் மட்டும் வரலாம்

சீனா ஏன் இவ்வளவு ஆர்ப்பாட்டத்துடன் இன்று ஹம்பாந்தோட்டையில் விழா நடத்துகின்றது என்றால் காரணம் இல்லாமல் இல்லை

பாகிஸ்தானின் குவெட்டா துறைமுகத்தை சீனா நிர்மானிக்க அதன் அருகில் ஈரானின் சபஹர் துறைமுகத்தை இந்தியா நிர்மானித்தது, அது சமீபத்தில் செயல்பாட்டுக்கு வந்தது

அந்த வெறுப்பில் இப்படி இலங்கையில் ஆர்ப்பாட்டம் செய்து மகிழ்கின்றது சீனா

இது ஒரு வகையில் இருக்கட்டும், யாராவது இரு அல்லக்கைகள் சண்டையிட்டாலே அங்கு என்னடா சத்தம்? என வருவது அமெரிக்கா பாணி இல்லாவிட்டால் என்ன உலக தாதா?

அவர் ஏன் அமைதியாக இருக்கின்றார்?

அவருக்கு இலங்கை அருகில் டீகோ கார்சியா தீவு முகாம் இருப்பதால் இப்போதைக்கு சிக்கல் இல்லை, ஆனால் தீவு ஓணர் பிரிட்டன் அமெரிக்காவினை காலி செய்ய சொல்கின்றார்

இந்துமா கடலில் தனக்கு தளமில்லை என்றால் தலைவெடித்துவிடும் நாடு அமெரிக்கா, அதன் உலக வல்லரசு பட்டம் நிலைக்காது

இதனால் இலங்கையில் கால் ஊன்ற அமெரிக்கா கடும் முயற்சியில் இருக்கின்றது

இரு வல்லரசுகள் இந்திய காலடியில் வலுபெறுவது நல்ல விஷயம் அல்ல‌

இந்திரா முன்பு அட்டகாசமாக சமாளித்தார், இலங்கையினை எப்படி அடிக்க வேண்டுமோ அப்படி அடித்தார்

இந்த அரசுக்கு எப்படி திட்டம் இருக்கின்றதோ தெரியாது, அணுவுலை உட்பட்ட பல மகா முக்கிய கேந்திரங்கள் இருக்கும் தென்னக பாதுகாப்பு மகா முக்கியம்

இந்தியா எப்படி பதிலடி கொடுக்கும் என தெரியவில்லை, பல பரபரப்பு காட்சிகள் இனி வர வாய்ப்பு உள்ளது

 
 

மண்டல் கமிஷன் சட்டமாக்கபட்டு 27 ஆண்டுகள்

மண்டல் கமிஷன் சட்டமாக்கபட்டு 27 ஆண்டுகள் ஆனபின்பும் மத்திய அரசின் துறைகளில் பிறபடுத்தபட்டோருக்கான இட ஒதுக்கீடு நடைமுறைபடுத்தவில்லை , இது நெஞ்சில் ஈட்டி பாச்சும் விஷயம் : மு.க ஸ்டாலின்

அதாவது இது சம்பந்தமாக இந்து பத்திரிகை செய்தி வெளியிட்டதாம், இதனால் விழித்துகொண்ட ஸ்டாலின் இன்னும் மத்திய அரசு துறைகளில் மண்டல் கமிஷன்படி இட ஒதுக்கீடு செய்யபடவில்லை என ஸ்டாலின் உணர அவர் நெஞ்சில் ஈட்டி பாய்ந்துவிட்டது

ஸ்டாலின் நெஞ்சில் இரண்டு ஈட்டி பாயும் செய்தி ஒன்று உண்டு

அதாவது இந்த 27 ஆண்டுகளில் 15 ஆண்டுகள் மத்திய அரசில் திமுக பங்குபெற்றிருக்கின்றது

இவர் ஏதோ 27 வருடம் பாஜக ஆண்டது போல குற்றச்சாட்டை வீசினால் , 17 ஆண்டுகள் நீங்கள் இருக்கும்பொழுது என்ன கிழித்தீர்கள் என அவர்கள் கேட்டால் என்னாகும்

எல்லாம் தமிழிசை அடிகளார் அப்படி எல்லாம் கேட்க மாட்டார் எனும் தைரியம்

பாஜகவிற்கு தோல்வி பயம் : ஆர்.கே நகரில் டிடிவி தினகரன் ஆவேசம்

பாஜகவிற்கு தோல்வி பயம் : ஆர்.கே நகரில் டிடிவி தினகரன் ஆவேசம்

என்னது பாஜகவினருக்கு பயமா? ஒருவேளை குஜராத் தேர்தல் பற்றி சொல்லியிருப்பாரோ?

பின்னே தமிழக பாஜகவினர் என்று வெற்றியினை எதிர்பார்த்தார்கள்? அது கிடைக்காது என என்று பயந்தார்கள்??

அவர்களே நமக்கு 4ம் இடமா , 5ம் இடமா என பெட் கட்டி விளையாடி கொண்டிருக்கின்றார்கள், அவர்களுக்கு தோல்வி பயம் என தினகரன் காமெடி செய்துகொண்டிருகின்றார்

மறக்க முடியா அந்த மாமேதைக்கு பிறந்தநாளில் உள்ளம் கனத்த அஞ்சலி.

Image may contain: 1 person, glasses and close-up

பிராமணர்களாக பிறந்துவிட்டால் தமிழகத்தில் அதோகதி, அவர்கள் எவ்வளவு அறிவாற்றல் உடையவர்களாக இருந்தாலும் ஆரியன் என விரட்டிவிடுவார்கள். அவர்களை பயன்படுத்தி பார்க்கலாம், அவர்கள் சொல்வதில் உண்மை இருக்குமா? என்றெல்லாம் சிந்திப்பதில்லை. பிராமணன் பேசகூடாது மூச்ச் அவ்வளவுதான்.

காரணம் தமிழ்நாட்டு பார்ப்பண எதிர்ப்பு என்பது முதலில் சீர்திருத்தம், தாழ்த்பட்டோர் உரிமை இயக்கம் என ஆரம்பம் நன்றாகத்தான் இருந்தது, அந்நாளில் பிராமணரை பெரிதும் யாரும் விரட்டவுமில்லை, நீங்களும் வாழுங்கள், நாங்களும் வாழ்கின்றோம் அவ்வளவுதான். நீதிகட்சி, சுயமரியாதை இயக்கம், பெரியார் காலம் வரை அது அப்படித்தான் இருந்தது.

ஆனால் அண்ணா காலமுதல் அது அரசியலாகி, பிராமணர்கள் என்றாலே விரட்டபடவேண்டியவர்கள் என ஒரு நிலைக்கு தமிழகத்தை ஆக்கிவிட்டார்கள், இதிலும் சிலர் ஒருபடி மேலே போய் பிராமணர் ஈழத்திற்கு எதிரி, தமிழக விரோதி என்றெல்லாம் முழங்குவார்கள், உண்மை என்ன?

படிப்பில் முண்ணணியில் நின்ற ஈழதமிழர்களை குறிவைத்து சிங்கள அரசு இயற்றியதுதான் தரபடுத்துதல் சட்டம் 1972. அதாவது சிங்களன் 40 மதிப்பெண் எடுக்கும் இடத்தில் ஈழதமிழன் 85 மதிப்பெண் எடுக்கவேண்டும், இதில் கல்வியில் ஈழதமிழர் பாதிக்கபட்டு அது மாணவர்கள் போராட்டமாகி பின் ஆயுதபோராட்டமாகி, பின் அடாவடி கும்பல்களின் கையில் சிக்கி, பின் மேதகுக்களின் கையில் சிக்கு இன்று ஒரு முடிவும் தெரியாமல் இன்று ஈழம் சுடுகாடானது.

அப்படித்தான் இட ஒதுக்கீடு, உயர்சாதி என தமிழகமும் பிராமணர்களை கல்வி மற்றும் பல விஷயங்களில் அடக்கி வைத்திருப்பது ஒன்றும் ரகசியமல்ல, ஈழ மாணவர்கள் துப்பாக்கி தூக்கினார்கள், இவர்கள் தூக்கவில்லை அவ்வளவுதான் விஷயம். அதாவது சிங்களன் செயதால் தவறு, இன வெறுப்பு.

தமிழகம் செய்தால் அது சீர்திருத்தம்.

அப்படிபட்ட தமிழகத்தில் சில பிராமணர்களின் அடையாளம் மறைக்கபட்டது, அவர்களின் புகழும் அவர்களின் தேசபற்றும் அறிவு கூர்மையும் மக்களிடம் இருந்து அப்பட்டமாக வெளியேற்றபட்டது அவர்களில் ஒருவர்தான் ராஜாஜி.

ஆளுநர், மத்திய அமைச்சர், என பல பதவிகளை வகித்த தமிழர் அவர், பெரும் ஆளுமையாக டெல்லியில் வலம் வந்தார்.

மொத்த இந்தியாவிற்கு ஒரு இந்தியன் கவர்னர் ஜெனரலாக இருந்தான் என்றால் அது அந்த தமிழன் தான். சக்கரவர்த்தி ராஜகோலாச்சாரியார் சுருக்கமாக ராஜாஜி. பெரும் உச்சம் அது. சக்கரவர்த்தி என்பதால் அவர் தந்தை பெரும் அரசர் என நினைக்கவேண்டாம், அவர் தந்தை பெயர் சக்கரவர்த்தி.

சேலத்துக்காரர் பெரும் வழ்க்கறிஞர், அக்காலத்திலே இந்தியா முழுக்க பிரபலமான பெரும் பிரபலம் அவர்.

சுதந்திர போராட்ட வீரர், காந்தியுடன் போராடியவர் சிறைக்கு செல்லும் அளவு தண்டிக்கபட்டவர். பின்னாளில் காந்தி மகனுக்கு தன் மகளை மணமுடித்து சம்பந்தி ஆனவர். அதாவது காந்தியின் மருமகள் ஒரு தமிழச்சி.

பின்னாளில் நேருவுடன் கொண்ட கருத்து வேறுபாட்டால் கட்சியினை விட்டு பிரிந்தவர், சுதந்திரா கட்சி என ஒன்றை நடத்தினார்.

பிரிக்கபடாத சென்னை மாகாணத்தின் முதல்வராக பணியாற்றியவர், முடிந்த வரை நல்லாட்சிதான் நடத்தினார். அவரின் பெரும் சாதனை மதுவிலக்கினை கொண்டுவந்தது, அரசு வருமானம் குறையத்தான் செய்தது, சாதுர்யமாக வரிகளை அதாவது விற்பனை வரிகளை சீரமைத்து அரசினை திடப்படுத்தினார், பின்னாளைய காமராஜரின் முறையான நிர்வாகத்திற்கு இதுதான் அடிப்படை.

கட்சிக்குள் எங்கு அவருக்கும் காங்கிரசாருக்கும் மோதிற்று என்றால்? சுதந்திரம் வாங்கியவுடன் சுதந்திரபோராட்ட தியாகிகளுக்கு எல்லாம் பல சலுகைகள் வழங்கபட்டன.

நாடு பணமின்றி தவிக்கின்றது, ஏழ்மையில் இருக்கின்றது அதனால் காங்கிரசார் இந்த சலுககைகளை எல்லாம் அரசிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும். நாட்டுபற்றில்தானே போராடினோம், அதற்கு ஏன் சன்மானம்? என சொன்னார் ராஜாஜி

சுதந்திரபோராட்ட தியாகி சலுகைகளில் காங்கிரசாரே அனுபவத்து வந்தனர், விடுவார்களா? நீ வழக்கறிஞன் சம்பாதித்துவிட்டீர், நாங்கள் எங்கே போவது? என்ற ரீதியில் எதிர்க்க தொடங்கினார்கள்

காங்கிரசில் ராஜாஜி அதிருப்தி கோஷ்டி உருவாகியது இப்படித்தான். ராஜாஜி சொன்னதில் தவறொன்றும் இருக்க முடியாது.

கொஞ்சம் உலகநடைமுறைகளை அறிந்தவர், பெரும் தொலைநோக்கு பார்வை கொண்டவர். 2020ல் வரும் மாற்றத்தை அவர் 1950களில் கொண்டுவர நினைத்ததுதான் அவருக்கு சிக்கலை ஏற்படுத்தியது.

அதாவது பள்ளிகூடங்கள் இன்றளவும் வெளிநாடுகளில் காலைமுதல் மதியம் வரைதான் செயல்படும், அதன்பின் அம்மாணவர்கள் பகுதிநேரபணிகளில் ஈடுபடுவார்கள், முன்னேறிய நாடுகளில் எல்லாம் அதுதான் நிலை, அவை அழிந்துவிடவில்லை, மாறாக உச்சம் பெற்றன.

அதனை தமிழகத்திலும் கொண்டுவர நினைத்தார், அறிவித்தார். யாரடா சிக்குவார்? என அலைந்த கழகங்களுக்கு அல்வா போல மாட்டினார். அப்படியானால் மதியத்தின் பின் மாணவர்கள் என்ன செய்வார்கள்? என கேட்டனர், பெற்றோருக்கு உதவியாக இருக்கலாம், கைதொழில்கள் அல்லது வேறுதொழில்கள் படிக்கலாம், கல்வி மட்டும் வாழ்வாகாது என்றார்.

விடுவார்களா? கழகத்தார். துண்டை தலையில் கட்டிகொண்டு களமிறங்கினர், அவர்களாக ராஜாஜியின் திட்டத்திற்கு பெயர் வைத்தனர். இது குலகல்வி திட்டம், பார்பணியத்தின் விஷம், விவசாயி மகன் விவசாயி, மாடு மேய்ப்பவன் மகன் மாடு மேய்ப்பான், செருப்பு தைப்பவன் மகன் செருப்பு தைப்பான், அய்யகோ விட மாட்டோம், திராவிடரே எழுவீர் இந்த ஆச்சாரியாரை விரட்டுவீர் என பொங்கினார்கள்.

பெரும் கலவரத்தில் ராஜாஜியின் சமாதானம் எடுபடவில்லை, அவர் சொன்னதற்கெல்லாம் கடும் திரிபுகள் காட்டபட்டன, அமைதியாக சொன்னார், ஒரு காலத்தில் நான் சொன்னதை உணர்வீர்கள், அதோடு அவர் தீவிர அரசியலை விட்டு வெளியேறினார்.

நிச்சயமாக அவர் பீஷ்மர் தான், ஆச்சாரியர் எனும் பட்டத்திற்கு தகுதி கொண்டவர்தான், அவரின் அறிவாற்றல் பெரிது. புத்தி கூர்மை மிக பெரிது. ஆனால் அவர் வாழ்வில் செய்த பெரும் தவறு ஒன்று உண்டு.

அது ஒரு வகையில் வேறுமாதிரியானது, அதாவது பள்ளிகள் தட்டுபாடான காலம் அது, எத்தனையோ வழக்குகளில் லண்டன் நீதிபதிகளையே மடக்கிய ராஜாஜி, குலகல்விதிட்டத்தில் திராவிட கழங்களிடம் தோற்றார், ஆனால் அவர் தோற்ற இடத்தில் படிக்காத காமராஜர் தூள் பறத்தினார். ஒரு குற்றமும் சொல்லமுடியா கல்விபணியாக அது வரலாறானது. அதை ஏனோ ராஜாஜியால் ரசிக முடியவில்லை.

விளைவு இந்த பீஷ்மர் காமராஜரின் எதிரிகளோடு கரம் கோர்த்தார், கூட்டணிகளை கிருஷ்ண பராமாத்மா ஸ்டைலில் ஆடினார். காமராஜர் கர்ணன் தான், அவர் அப்படித்தான் ஆண்டுகொண்டிருந்தார், ஆனால் அவரின் தேசபற்றை தமிழர் விரோதமாக காட்டிய கலைஞர் கும்பலுடன் கரம் கோர்த்தார் ராஜாஜி. அதாவது தன் எதிரிகளோடே கரம் கோர்த்தார்.

விளைவு கர்ணனான காமராஜரை அந்த கும்பல் வீழ்த்திகாட்டிற்று, விளைவு அண்ணாவும் விழ ஆட்சி கலைஞர் வசமாயிற்று.

பின் மதுகடைகள் திறக்கபட்டபொழுது கொட்டும் மழையில் 90 வயதில் கலைஞரிடம் மன்றாடினார், யாரை எங்கு எப்படி பயன்படுத்தவேண்டும் எப்போது கழற்றிவிட வேண்டும் என அவர் நம்பாத கடவுளிடமே கருவறையிலே பாடம் படித்தவர் கருணாநிதி, கேட்பாரா?

நொந்துபோனார் ராஜாஜி, நாடு சீரழியும் பாதை அவர் கண்ணுக்கு தெரிந்தது, காமராஜரை வீழ்த்தியதை எண்ணி மனம் வருந்தத்தான் செய்தார், பின்னாளில் பசும்பொன் சிங்கத்தோடு இணக்கமாக இருந்தார், அதாவது நாட்டுபற்றுகொண்ட தேவரோடு சேர்ந்து இந்த நாட்டை நேசித்துகொண்டே இறந்தார்.

புரிந்துகொள்ள கொஞ்சம் சிரமானவர் ராஜாஜி, ஆனால் அவரின் திட்டங்கள் எல்லாம் மிகுந்த தொலைநோக்கும் , ஆழ்ந்த அர்த்தமும் கொண்டவை. மிகபெரும் புத்திசாலி அவர்

இதனால்தான் பெரியார் கடைசிவரை அவரை தன் ஆலோசகராக வைத்திருந்தார்.

அமெரிக்கா சென்று கென்னடியின் கரங்களை பிடித்து ரஷ்யாவுடன் அணு ஆயுத பெருக்கத்தில் சண்டையிடாதீர்கள், மனுகுலத்திற்காக இருவருமே அணுகுண்டுகளை கடலில் எறியுங்கள் என சொன்னவர் ராஜாஜி

அவர் சுதந்திர போராட்டக்காரர்தான், ஆனால் சில இடங்களில் தன் தொலைநோக்குபார்வையினை அழுத்தமாக வைத்தார், அதில்தான் ராஜாஜியின் திறன் அடங்கி இருக்கின்றது, அது என்ன?

“சுதந்திரம் வாங்குவது பெரிதல்ல, நாம் இந்த நாட்டை நாம் ஆளும்பொழுது கடுமையான சட்டமும், பெரும் கட்டுப்பாட்டுக்குள் ஆட்சிநடத்தும் ஆட்சியாளர்களும் நமக்கு தேவை. இல்லை என்றால் கொஞ்சநாளில் இந்த சுதந்திர போராட்ட கஷ்டம் எல்லாம் நம் மக்களுக்கு மறக்கும், அரசியல் அயோக்கியர்கள் கையில் சிக்கும், எங்கும் பிரிவினைவாதமும், லஞ்சமும், ஊழலும், மக்கள் நலம் காக்கா அரசுகளின் சுயநலமும் பெருக்கெடுக்கும்.

அப்பொழுது வெள்ளையன் ஆட்சி எவ்வளவு பரவாயில்லை என மக்கள் வாய்விட்டுசொல்லும் காலம் வரும், அதனால்தான் சொல்கின்றேன் சுதந்திர இந்தியா பற்றியும், அதன் ஆட்சிமுறை பற்றியும் பெரும் திட்டமில்லாமல் சுதந்திரம் வாங்குவது மகா ஆபத்தானது, காலம் காலமாக மன்னராட்சியிலும் பின் பிரிட்டனிடனும் அடிமையாக வாழும் இந்நாட்டு மக்களுக்கு மக்களாட்சியின் மகத்துவம் புரியாது, இவர்கள் நிச்சயம் அரசியல் அடிமைகளாக மாற வாய்ப்புக்கள் அதிகம்”

எவ்வளவு தீர்க்கதரிசனமான உண்மை, இப்பொழுது அதனைத்தானே பாரதம் கண்டுகொண்டிருக்கின்றது? வெள்ளையன் ஆட்சி பரவாயில்லை என சொல்லாதோர் யார்? அரசியல் அடிமைகள் உருவாவார்கள் என கணித்து சொன்ன ராஜாஜி பிறந்த தமிழகத்தின் இன்று ஸ்டிகரோடு திரியும் அடிமைகள் எண்ணிக்கை என்ன?

இதில்தான் இந்த முத்திரையில்தான் ராஜாஜி தனித்து நிற்கின்றார், அதுவும் தமிழனாக, வாழ்த்த வேண்டிய தலைவர்தான், மறக்க கூடாதவர்.

இலக்கிய பணிகளிலும் அவர் ஆற்றிய பங்கு மகத்தானது, பல நூல்களை எழுதினார். “குறை ஒன்றும் இல்லை..மறை மூர்த்தி கண்ணா” என்ற பாடல் அவரின் கவி முகத்தையும் காட்டும்.

வியாசர் விருந்து என மகாபாரத்தை சுருக்கி கொடுத்த ராஜாஜியின் பணி மகத்தானது, மிக அற்புதமான தமிழும் ஆழ்ந்த கருத்தும் கொண்ட அட்டகாசமான படைப்பு அது

அறிவார்ந்த எழுத்து எப்படி இருக்கும் என்பதை அதில்தான் காணமுடியும்

ஆனால் காமராஜருக்கு மட்டும் அவர் துணை நின்றிருந்தால், அந்த ஆட்சிக்கு இந்தபாடல் எவ்வளவு பொருந்தமாய் இருந்திருக்கும்? தமிழக அழிவு கொஞ்சமாவது தள்ளிபோடபட்டிருக்கும்? , ஆனால் விதி அது அல்ல.

ராஜாஜி போன்றவர்களை பார்ப்பான் என்றும், காமராஜர் போன்றவர்களை மக்கள் நலன் அறியா எருமை என்றும் விரட்டிவிட்டு, பொற்கால ஆட்சியினை திராவிடர் கழக ஏடுகளிலும், சினிமா உலகிலும் காட்டிவிட்டு, அதனை ஆட்சிக்கும் கொடுத்துவிட்டு, தமிழனை கண்ணீர் கடலில் எறிவதுதான், தமிழன் பிச்சைக்காரனாய் வாழ்வதுதான் விதி என்றால்? என்ன செய்வது?

காமராஜரும், ராஜாஜியும் என்ன செய்யமுடியும்? இனியாவது திருந்துவார்களா என்றால் சந்தணகாட்டு வீரப்பனும், அந்நிய வன்னிகாட்டு வேலப்பனும்தான் வழிகாட்ட போகின்றார்களாம்.

அதை நினைத்தால் இன்னும் பகீரென்கின்றது, கழகங்களாவது கோவணத்தோடு நிறுத்தினார்கள், அவர்கள் கோவணமின்றி புதைத்தே விடுவார்கள்.

இன்று ராஜாஜியின் பிறந்த நாள். இப்படியும் ஒரு தலைவர் இருந்திருக்கின்றார் என்பதை நினைத்துகொள்ளலாம்.

எந்த குலகல்வி என கூறபட்ட திட்டத்தால் அவர் வீழ்த்தபட்டாரோ? அந்த முறை அதாவது மதியம் வரை மட்டும் பள்ளிதிறக்கும் காலம் தொலைவில் இல்லை. பல கல்லூரிகளில் அது நடந்துகொண்டெ இருக்கின்றது, இதனை எல்லாம் 65 ஆண்டுகளுக்கு முன்பே கணித்து சொன்னதுதான் தவறா?

காலம் பதில் சொல்லிகொண்டிருக்கின்றது, பல அரசியல் சாயம் வெளுத்துகொண்டிருக்கின்றது.

ராஜாஜி பெரும் அறிஞன், மாமேதை. அவரைபோன்றவர்களை ஏ பார்ப்பன வெறியனே என விரட்டிய தமிழகத்தில் பின் யார் வருவார்கள்

பன்னீரும் பழனிச்சாமியுமே வருவார்கள்

மறக்க முடியா அந்த மாமேதைக்கு பிறந்தநாளில் உள்ளம் கனத்த அஞ்சலி.

 
 

அதற்கு அரசும், நாடும் இந்த தியாகத்தை செய்தே தீரவேண்டும்

No automatic alt text available.

தமிழகத்தில் பெரும் புள்ளிகள், பெரும் அந்தஸ்தில் உள்ளவர்களை அடையாளம் காண்பது எளிது, ஊரெல்லாம் படம் பத்திரிகையில் வந்திருக்கும், பத்திரிகைகள் எழுதியிருக்கும் அதற்கு மேல் அவர் வந்தால் பெரும் கூட்டமும், பேனர்களும் “அய்யா வாராக..” என்ற சத்தமும் “வாழ்க… வாழ்க ” என்ற கோஷங்களும் கேட்டுகொண்டே இருக்கும்

இதெல்லாம் இல்லாமல் எந்த பிரபலமும் வெளிவருவதில்லை, நடிகை கடை திறக்க வந்தாலும் இதே இம்சைதான்

இங்கெல்லாம் அப்படி அல்ல, எவ்வளவு பெரிய ஆள் ஆனாலும் தங்க செயின் கூட இல்லை, மிக சாதாரணமாக வருகின்றார்கள், காரும் வீடும்தான் அவர்கள் அந்தஸ்தினை நிர்ணயிக்கின்றன, அதுவும் மார்கெட்டுக்கு செல்ல பழைய கார், அந்தஸ்தை காட்ட பென்ஸ் என வலம் வருகின்றார்கள்.

மிக பழைய காரில் வந்து இறங்கி, சாதாரண உடையில் 
நமக்கு அடுத்து டீ குடித்துகொண்டிருப்பவனிடம் பேச்சு கொடுத்தால் எனக்கு கப்பல் இருக்கின்றது என அசால்ட்டாக சொல்கின்றார், யார் எந்த அந்தஸ்து என புரியவே இல்லை

ஒரு மனிதரை அடிக்கடி பார்க்க முடியும் திடீரென காணாமல் போய்விடுவார், சர்ச்சில் மிக சாதாரண தோற்றத்தில் அமர்ந்திருப்பார், அய்யோ பாவம் கர்த்தாரகிய தேவனின் நற்செய்தியினை இவருக்கு சொல்லி நம்பிக்கை ஊட்டலாம் என பேசதொடங்கினால் அதிர்ச்சி காத்திருந்தது

அவர் பேச பேச “எனக்கு இன்னொரு பேர் இருக்க்கு…” என பாஷா ரஜினி சொல்லும்பொழுது எதிரில் இருப்பவருக்கு வியர்த்துகொட்டும் அல்லவா? அப்படி வியர்த்தது

ஆம், அவர் யுத்த விமானங்கள் கட்டும் ரஷ்ய கம்பெனியின் மிக பெரிய பதவியில் இருக்கின்றாராம். உலகின் அத்தனை விதமான யுத்த விமானங்களின் ஸ்குரு முதல் வேகம் வரை புட்டு புட்டு வைத்தார்

பேச்சு இந்தியாவில் சர்ச்சையாகும் ரபேல் விமானம் பக்கம் திரும்பியது

அவர் சொன்னார், “அது எங்களுக்கும் தெரியும், நாங்களும் கவனித்துகொண்டுதான் இருக்கின்றோம். அதன் அத்தனை விஷயங்களும் எங்கள் மேஜையில் உண்டெனினும் ரகசியங்களை சொல்ல முடியாது

ரபேல் விமானம் ஒன்றும் மிக பெரும் சக்திவாய்ந்தவை அல்ல, உங்கள் நாட்டில் ஏற்கனவே ரஷ்ய சுகோய் 30 வகைகள் உண்டு அவற்றின் பக்கம் இந்த ரபேல் வர முடியாது

இவ்வளவு பணம் கொடுத்து பிரான்ஸின் ரபேலை வாங்குவதை விட, இந்த பணத்திற்கு பிரிட்டனின் டைபூன் வைகளை வாங்கலாம், மிக பெரும் மிரட்டல் ரகம் அந்த விமான வகை

எவ்வளவோ வழிகள் இருக்க, எத்தனையோ நவீன விமானங்கள் இருக்க இந்தியா அவ்வளவு பிரயோசனமில்லா மித விமான வகை ரபேலை பிடித்து தொங்கும் விஷயம் தெரியுமா?

உலகின் மிக மிக பணம் கொட்டும் தொழில் ஆயுதம் செய்வது, அதுவும் யுத்த விமானம் கச்சா எண்ணெயினை விட அதிக பணம் கொட்டும் விஷயம்

அமெரிக்காவில், ரஷ்யாவில் ஐரோப்பாவில் தனியார் ஆயுத தொழிற்சாலை உண்டு, உங்கள் நாட்டில் உண்டா?

இல்லை, ஆனால் மேக் இன் இந்தியா என சொல்லி இவ்வகை விமானங்களை, ஆயுதங்களை இந்திய தனியார் நிறுவணங்களிடம் ஒப்படைக்கும் காரியம் அங்கு நடக்கின்றது, அப்படி ரபேல் விமானங்களை உங்கள் நாட்டில் தனியார் தயாரிப்பார்கள்

உங்களுக்கு கீழ் சில நாடுகள் உண்டல்லவா? இலங்கை, சில ஆப்ரிக்க நாடுகள் , வங்கதேசம் போன்றவை, அவற்றிற்கு விற்பார்கள்

பணம் கொட்டோ கொட்டு என இனி அவர்களுக்கு கொட்டும்

அமெரிகாவிம் ஸ்டைரிஸ், பிரிட்டனின் டைபூன்களை எல்லாம் விட்டுவிட்டு ரபேல்தான் வேண்டும் என இந்தியா அடம் பிடிப்பது இதனால்தான்” என்றார்

ஓஓஹோ அம்பானி கச்சா எண்ணெயிலும், பாலிஸ்டரிலும் சம்பாதித்திவிட்டு இப்பொழுது யுத்த விமானத்திலும் சம்பாதிக்க போகின்றாரா? குரு அவருக்கு உச்சம் போல என நினைத்துகொண்டேன்

அவர் தொடர்ந்தார்

உங்கள் நாட்டில் எத்தனையோ செயற்கை கோள்களை செய்கின்றீர்கள், எத்தனய்வோ ஏவுகனைகளை செய்கின்றீர்கள்

ஆனால் ஏன் சொந்தமாக யுத்த விமானம் கட்டமாட்டேன் என்கின்றீர்கள்?

எச்.ஏ.ல் நிறுவணம் ஒன்றும் மோசமானது அல்ல, பெரும் வித்தகர்கள் எல்லாம் இருக்கின்றார்கள். அரசு முயற்சித்தால் பிரிட்டனின் டைபூனை விட அமெரிக்காவின் எஃப் 117 விட அட்டகாசமான விமானம் தயாரிக்க முடியும்

ஆனால் அதனை செய்யாமல் என்னவெல்லாமோ செய்கின்றார்கள் ஏன்?”

அது அவருக்கு புரிந்ததோ இல்லையோ நமக்கு புரிந்தது, மிக துல்லிய ஏவுகனைகளை , கிரையோஜெனிக் எஞ்சின்களை செய்ய்யும் நாடு ஒரு யுத்த விமானம் கட்ட முடியாதா?

கட்டலாம், நிச்சயம் கட்டலாம்

ஆனால் அப்படி செய்தால் அம்பானி எப்படி மிகபெரும் பணக்காரர் ஆவது? கச்சா எண்ணெய் நாடுகளின் சுல்தானை விட பெரும் பணக்காரர் அவர் ஆகவேண்டும் என்றால் அவர் யுத்தவிமானம் தயாரித்தே தீரவேண்டும்

அதற்கு அரசும், நாடும் இந்த தியாகத்தை செய்தே தீரவேண்டும்