தோல்வி வந்துவிடுமோ என கலங்கும் மோடி…

பல விஷயங்களில் தோல்வியும், மேற்கொண்டு தோல்வி வந்துவிடுமோ எனும் கலக்கமும் ஒரு மனிதனை பெரும் விரக்திக்கும் அலறலுக்கும் உள்ளாக்கிவிடும் என்பதற்கு பாரத பிரதமரே பெரும் சாட்சி

இல்லாவிட்டால் அகமது பட்டேலை குஜராத் முதல்வராக்க பாகிஸ்தானும் மணிசங்கர அய்யரும் மன்மோகன் சிங்கும் சதி செய்கின்றனர் என புலம்புவாரா?

அப்படி சதிசெய்ய வேண்டுமென்றால் பதவியில் இருந்தபொழுது மன்மோகன்சிங்கால் செய்திருக்க முடியாதா? இப்பொழுதுதான் செய்ய வேண்டுமா? என்ன பைத்தியகாரதனம் இது, அபாண்டமான பொய்.

இதனை அக்கட்சியின் அடிப்பொடிகளோ இல்லை வழக்கமான உளறல்காரர்களோ சொல்லியிருந்தால் விட்டுவிடலாம், பாரத பிரதமர் எனும் பெரும் பொறுப்பில் இருப்பவர் சொன்னால் எப்படி?

ஆதாரமில்லா செய்திகளை ஒரு பிரதமர் சொல்வது ஏற்றுகொள்ள முடியாதது,

இனி அவர் சொல்வதை எல்லாம் இத்தேசம் எப்படி நம்பும்?

அமெரிக்க தேர்தலில் ரஷ்ய தலையீடு என சர்ச்சை வந்தபொழுது பெரும் ஆதாரங்களை சேகரித்தபின்புதான் இப்பொழுது விசாரணை நடக்கின்றது

அப்படி அல்லாமல், கொஞ்சமும் அடிப்படை ஆதாரமின்றி பெரும் பொறுப்பில் இருக்கும் பிரதமர் பேசுவது பெரும் கண்டனத்திற்கும் , பெரும் கலக்கத்திற்கும் உரியது

மனிதர் பதற்றத்தின், வெறுப்பின் உச்சத்தில் உள்ளார் என்பது புரிகின்றது

இனி ஆர்.கே நகர் தேர்தலை பற்றி என்ன சொல்வார் மோடி?

சிங்கள உளவுதுறையுடன் சேர்ந்து பாஜகவிற்கு எதிராக தமிழகத்தில் பெரும் சதி நடக்கின்றது, சிங்கள அதிகாரியுடன் ஸ்டாலின் போன்றோர் சந்தித்தார் என கிளம்பினாலும் கிளம்பலாம்

அத்தோடு நிறுத்திகொண்டாலும் பரவாயில்லை, அதற்கு மேல் தமிழிசையினை கடத்த சி.ஐ.ஏ , மொசாத் எல்லாம் சதி செய்கிறது என சொல்லாமல் இருக்க வேண்டும்

ஒருவேளை அப்படி சொல்லிவிட்டால் உடனே சி.ஐ.ஏ கலைக்கபடாதா? மொசாத் உடனே தற்கொலை செய்துகொள்ளாதா?

மீன்களை போலவே மீணவரின் அழுகையும்

கன்னியாகுமரிக்கும் எங்கள் ஊருக்கும் வெறும் 30 கிமீட்டர்தான் தூரம், ஆனால் இன்னும் பல குளங்கள் அப்பகுதியில் நிரம்பவில்லை என்றால் அப்பகுதி எப்படி என நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்

அப்படியும் சில பகுதிகள் இருக்கின்றன, இயற்கை சதி, பராமரிப்பு இல்லா கால்வாய்கள், அணை கட்டுகின்றேன் என கிளம்பிய அரசுகள் என இதற்கு பல காரணங்கள்

குளங்களை நிரப்பி விவசாயத்திற்கு எத்தனை பேர் தயார் என்றால் அது யோசிக்க வேண்டிய விஷயம், தெரிந்தே தற்கொலை செய்ய பலர் தயாராக இல்லை என்பதால் பல ஊர்களில் குளத்திற்கு நீர் கொண்டுவர யாரும் தயாராக இல்லை

காசுகொடுத்தால் குடிநீர் கிடைக்கின்றது போதாதா எனும் நிலைக்கு வந்தாயிற்று, ஊர் குளம்பெருகினால் நிலத்தடி நீராவது பெருகும் என்ற சிந்தனை எல்லாம் இருப்பதாக தெரியவில்லை

அப்பகுதியில் முன்பு ஆடுமாடு தொழில், பனை தொழில் என ஏகபட்ட தொழில்கள் இருந்தன , எல்லாம் அழிந்தாயிற்று

விவசாயமும் அந்த பட்டியலில் வந்துவிட்டது தெரிகின்றது.

ஆயினும் எமது ஊர் குளத்திற்கு இன்னொரு புயல் வந்தால்தான் வழிபிறக்கும் போல என சொன்னால் கன்னியாகுமரிக்காரர்கள் அடித்தே கொன்றுவிடுவார்கள்

உண்மையில் கன்னியாகுமரியில் நடந்திருப்பது பெரும் அழிவுதான், மீணவர்கள் எனும் ஒரு புள்ளியிலே விவகாரம் பார்க்கபடுகின்றது

கடல் தொழில் என்பது மீணவர் கடலுக்கு சென்று மீன்பிடித்துவருவது மட்டும் அல்ல, அதனை சார்ந்த ஏராள தொழில் உண்டு

ஐஸ் கட்டி தயாரிப்பு முதல் மீணவர்களின் மீன்களை வாங்கி விற்கும் வியாபாரிகள், போக்குவரத்து நிறுவணம், சிறுவியாபாரிகள் என ஏராளமானோர் இணைந்திருக்கும் சங்கிலி இது

ஒரு மீணவ குடும்பம் அழும்பொழுது ஓராயிரம் குடும்பம் கண்ணுக்கு தெரியாமல் அழும், அழுகின்றது ஆனால் மீணவர்களையே கண்டுகொள்ளா அரசு அவர்களை கண்டுகொள்ளுமா?

மீணவர் சிக்கலை தாண்டி கன்னியாகுமரியின் பெரும் விளைச்சலான வாழை, ரப்பர் மரங்கள் அழிந்து கிடக்கின்றன‌

மீணவ சங்கிலி போலவே வாழையினை நம்பும் குடும்பங்கள் பாதிக்ககட்டிருக்கின்றன, ஒரு வருட உழைப்பு நாசமாயிற்று

தென்னையும், ரப்பரும் அழிந்ததில் பலவருட உழைப்பு போயிற்று இனி மறுபடி பல வருடங்கள் பின்னோக்கி செல்ல வேண்டும்

இதனை எல்லாம் விட கொடுமை மிளகு போன்ற கொடிகள் எல்லாம் அழிந்துகிடக்கின்றன, நிச்சயம் இவை கொஞ்சநாளில் பெரும் தட்டுபாட்டினை கொண்டுவரலாம், மிளகு விலைகள் எகிறலாம்

ஆக வெறும் மீணவன் என்பதை தாண்டி எத்தனை ஆயிரம் குடும்பங்கள் கதறிகொண்டிருகின்றன, விவசாயி என்பதையும் தாண்டி எத்தனையோ குடும்பங்கள் எதிர்காலம் தெரியாமல் தடுமாறுகின்றன‌

இதனை பற்றி எல்லாம் அரசுக்கு கொஞ்சமும் கவலை இல்லை, அரசு என்ன? யாருக்கும் கவலை இருப்பதாக தெரியவில்லை. அப்படித்தான் ஆகிவிட்டது நிலை.

தண்ணீரில் மீன் அழுதால் யாருக்கு தெரியும் என்பார்கள், மீன்களை போலவே மீணவரின் அழுகையும் அந்த தொழிலினை நம்பி இருக்கும் மற்ற தொழிலாளிகளின் அழுகையும் யாருக்கும் தெரிவதில்லை

ரஜினி அங்கிள்தான் கியூட்

இந்த ரஜினிகாந்த் என்பவர் மீது நமக்குத்தான் அவரின் அரசியல் மோசடி காரணமாக அபிமானம் இல்லையே தவிர உலகெல்லாம் அவருக்கு ரசிகர்கள் இருக்கின்றார்கள், குறிப்பாக குழந்தைகள்

அதில் தமிழ், தெலுங்கு, இந்தி, மலாய், சீன , ஜப்பான் குழந்தைகள் என்றல்ல. எல்லா குழந்தைகளுக்கும் அவரை பிடிக்கின்றது

அதில் என் அருமை மகளும் சேர்ந்துவிட்டாள், நானும் அண்ணாமலை, பாண்டியன் என எத்தனையோ படங்களை காட்டி பார் அந்த ஆண்டிதான் அழகு என்றாலும் “இல்லப்பா ரஜினி அங்கிள்தான் கியூட்” எனும் அளவிற்கு நிலமை சென்றுவிட்டது

அவரை மீட் பண்ண முடியாதாப்பா எனும் அளவிற்கு நிலமை சென்றாயிற்று, அவருக்கு மிக பெரும் ரசிகராகிவிட்டார் மகள்

நல்ல வேளையாக குழந்தைகளுக்கு வோட்டுரிமை இல்லை, இருந்திருந்தால் முதல் வோட்டு மகள் வோட்டாகத்தான் இருக்கும்

ஒரே தாஜ்மஹால்.. ஒரே குஷ்பு

Image may contain: 1 person, smiling, close-up

ஆசியாவின் அழகான பெண்கள் பட்டியலில் பிரியங்கா சோப்ரா முதலிடம் பிடித்ததாக ஈஸ்டர்ன் ஐ எனும் பத்திரிகை தெரிவித்துள்ளது

அது ஈஸ்டர்ன் ஐ அல்ல ஈஸ்டர்ன் பிளைண்ட் எனும் குருட்டு பத்திரிகையாக இருக்க வேண்டும்

உலகின் அழகான ஒரே பெண் என குஷ்புவினை இவ்வுலகம் என்றோ அங்கீகரித்தபின்னும் பிரியங்கா எனும் பூனைகண்ணும், பசுமாட்டு உதடும் கொண்ட பெண் அழகி என்றால் எப்படி

இந்த ஈஸ்டர்ன் ஐ பத்திரிகையினை சங்கம் வன்மையாக கண்டிக்கின்றது, சங்கத்தின் சட்ட நிபுணர்கள் அதன் மேல் வழக்கு தொடுக்க தயாராகின்றார்கள்

ஆதாரம் நூறு என அப்பத்திரிகை சொன்னாலும் அவ்வளவும் பொய் என சங்கம் சொல்லும்

ஒரே தாஜ்மஹால்.. ஒரே குஷ்பு

 

விஷாலுக்கு அரசியல் என்றால் என்ன என விளங்கிகொண்டிருகின்றது

ஒருவழியாக விஷாலுக்கு அரசியல் என்றால் என்ன என விளங்கிகொண்டிருகின்றது

ஆர்.கே நகரில் விரட்டபட்ட கொஞ்ச நேரம் கூட தாமதிக்காமல் தயாரிப்பாளர் சங்கத்தில் வரிந்து கட்டி நிற்கின்றார்கள்

சேரன், டி.ஆர் என இம்சை தாளவில்லை இவ்வளவு நாளும் எங்கிருந்தார்கள் என தெரியவேஇல்லை, இப்பொழுது ஏன் வந்தார்கள் எனவும் தெரியவில்லை

தயாரிப்பாளர்களை கதற வைக்கும் அன்புசெழியன் பற்றி கேட்டால் அவரை போலீஸ் தேடும், எங்களுக்கு விஷால்தான் குறி என ஒரே அழிச்சாட்டியம்

மைக்கேல் ராயப்பன் போன்ற தயாரிப்பாளரை காணவில்லை சிம்பு அவரை நடுதெருவில் நிறுத்தியிருப்பதால் அங்கேயே நிற்ககலாம்

பெரும் களபேரம் நிகழ்ந்திருக்கின்றது

வழக்கமாக தெருமுனை டீக்கடையில் இருவர் சண்டையிட்டால் வந்து பின்னாலே மிதிக்கும் காவல்துறையினை இந்த சண்டையில் காணவே இல்லை

ஏன்?

அவர்கள் தயாரித்த கொடூர படங்கள் நம்மை போலவே அவர்களையும் பாதித்துவிட்டதோ என்னமோ? எந்த சனியன் செய்த்தாலும் பரவாயில்லை என இருந்துவிட்டார்கள் போல‌

விஜயகாந்த் சிங்கப்பூரில் இருந்து சிரிப்பதும், ரஜினி பிறந்த நாளுக்காக பாபா கோவில் வாசலில் இருந்து சிரிப்பதும் விஷாலுக்கு மட்டும் கேட்கும்

விஷால் படும் அடியில் “மகனே ஓடிரு..” என எஸ்.ஏ சந்திரசேகர் மனதிற்குள் கத்துவது மட்டும் எல்லோருக்கும் கேட்கின்றது

பாரதி பிறந்தநாள் இன்று

Image may contain: 1 person, smiling, hat and close-upமகாகவி சுப்பிரமணிய பாரதி ஒரு பிறவி ஞானி, பாட்டுகொரு தலைமகன் என பட்டம் பெறமட்டுமே பிறந்தவர், தென் தமிழகத்தின் பெருமையான‌ அடையாளம், நிச்சயமாக சொல்லலாம் அறிவுசூரியன்.

அவன் எங்கள் நெல்லை மண்ணின் அறிவின் அடையாளம், பொதிகை மலை பெற்ற‌ தமிழ்த்தாயின் தலைமகன்

ஆனால் வாழும்பொழுது ஒருவனை ஓடஓட விரட்டி, செத்த பின்னால் சிலைவைத்து வணங்கும் உயர்ந்த அறிவுகொண்ட தமிழ்சமூகத்தில் பிறந்ததுதான் அவன் தவறு, அதில் அவன் தவறு என்ன இருக்கிறது? விதி.

6 வயதில் கவிதை எழுதினார், நெல்லையில்தான் தமிழை கற்றார், பின்னர் காசியில் கல்வியோடு மொத்த உலகத்தையும் படித்தார், ஆங்கிலம், பிரென்ஞ்,சமஸ்கிருதம்,வங்கம் என பலமொழிகளை படித்ததனால் தான் திமிராக சொன்னார்

“யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிமையானதை காணோம்”, உண்மைதான் பல ஊர்களில் தண்ணீர் குடித்தால்தான் சுவையான நீர் எது என்று தெரியும், அவருக்கு தெரிந்தது.

தமிழை கற்றார் தமிழ்கவிதைக்கு தலைகீழ் திருப்பம் கொடுத்தார், அருட்சகோதரி நிவேதிதாவை கல்கத்தாவில் கண்டார் உண்மை உணர்ந்து பெண்விடுதலைக்கு தமிழகத்தில் முதல் குரல் கொடுத்தார், சமூக அவலங்களை கண்டார் சமூகவாதியானார், பிரிட்டிசாரின் கொடுமையை கண்டார் போராளியானார்.

எந்த வம்புதும்புக்கும் போகாமல் எழுதிமட்டும் கொண்டிருந்தால் தாகூரை விட பெரும் கவிஞனாக கொண்டாடபடிருப்பார் ஆங்கிலேயனை ஆதரித்திருந்தால் இன்று பெரும் பணக்கார கவிஞனாக வரலாற்றில் இருந்திருப்பான் இங்கல்ல லண்டனில், அவரது ஆங்கிலபுலமை அப்படி.

ஏன் எட்டயபுர மன்னரை புகழ்ந்து ஒரு நாளைக்கு 2 பாடல் எழுதியிருந்தால் இன்று பாரதியின் வம்சம் 4 மில்களோடு நெல்லையை அல்லது தூத்துகுடியினை ஆண்டுகொண்டிருக்கும், அவ்வளவு ஏன் ஆசிரியபணியினை ஒழுங்காக செய்தால் கூட ராதாகிருஷ்ணன் அளவிற்கு உயர்ந்திருப்பான்,அந்த பத்திரிகையாவது ஒழுங்காக நடத்தினால் இன்று அது தொலைகாட்சி நடத்தும் அளவிற்கு பெரும் ஊடகமாக வளர்ந்திருக்கும்.

அப்பாவி சுப்பிரமணிய பாரதி இவற்றை எல்லாம் எப்படி தவறவிட்டார் என்றால் இரண்டே காரணம்தான் ஒன்று இந்த நாட்டை தீவிரமாக நேசித்தது, இன்னொன்று சமூக கொடுமைகளை கண்டித்து உண்மையை உரக்க சொன்னது, முதலாவது ஆட்சியாளர்களின் கோபத்தை கிளறியது, இன்னொன்று சொந்த மக்கள் பாரதியை விரட்ட வைத்தது.

வளைந்தும், நெளிந்தும்,கெஞ்சியும்,கொஞ்சியும்,மிரட்டியும்,விரட்டியும் வாழவேண்டிய சமூகத்தில் அவர் மட்டும் மனிதனாக வாழ்ந்தார், மனித நேயத்தோடு வாழ்ந்தார்.

உண்மையில் பராசக்தி வசனம் அவருக்குதான் பொருந்தும், பிரிட்டிசார் விரட்டினர் ஓடினார், வறுமை விரட்டியது ஓடினார், சமூக கொடுமைகள் விரட்டியது ஓடினார்,ஓடினார் முடிந்தவரை ஓடினார், முடியவில்லை இறந்தார்.

ஒரு மனிதனுக்கு தாங்கமுடியாத அவமானம் என்பது அவனது திறமையை பரிகாசிப்பது, அதற்கு அங்கீகாரம் தர மறுப்பது, ஒரு வகையில் அது ஒரு உளவியல் கொலை, அதைத்தான் அந்த சமூகம் பாரதிக்கு செயதது,

பாவம் அவன் “நல்லதோர் வீணை செய்தே” என அவனால் தெய்வத்திடம் புலம்பத்தான் முடிந்தது, “சக்திகொடு” என கெஞ்சத்தான் முடிந்தது,

அவனுக்கிருந்த அறிவிற்கு அவனோடு சமமாக பேசகூட யாருமில்லை, ஒதுக்கினார்கள்,விரட்டினார்கள் அவன் கவிதையோடும், கடவுளோடும், பறவையோடும், கழுதையோடும் பேசிக்கொண்டிருந்தான் அந்தோ பரிதாபம்.

அங்குமிங்கும் ஓடினான், இந்த சமூகத்தில் தனக்கான இடத்தை பிடிக்கலாம் என நம்பினான், முடியவில்லை. உலகிலே மிக கொடுமையான ஒரு விஷயம் உண்டென்றால் ஒரு அறிவாளியினை 10 முட்டாள்களோடு வாழவிடுவது அதுதான் பாரதிக்கும் நடந்தது.

குடும்பமும் வறுமையும் அவனை பணம் சம்பாதிக்க கட்டாயபடுத்தின, கண்ணனை நினைத்து பாடி மகிழ்ந்து கொண்டிருந்த காலமது, அப்பொழுதும் பாரதபோரையும் இந்திய சுதந்திரத்தினையும் தொடர்புபடுத்தி பாஞ்சாலி சபதம்தான் எழுத துணிந்தான். கொடும் துன்பங்கள் அவருக்கு உண்மையை உணர்த்திற்று,

கனவு வேறு,கடமை வேறு, வாழ்க்கைவேறு, இதனை உணர்த்தியது அவரது தோழரான‌வ.உ.சியின் சிறைகொடுமையும், சுப்பிரமணிய சிவாவின் கொடுமையான இறுதிகாலமும்

விளைவு ஒரு பெரும் கவிஞன், பன்மொழி ஆசிரியன், பெரும் காவியங்களை படைக்கும் ஆற்றல் உள்ளவன் ஒரு சாதாரண பத்திரிகையாளன் ஆனார், விறகு பொறுக்க யானை, எலி வேட்டைக்கு சிங்கம், புல் புடுங்க புல்டோசர் போல ஆனது நிலை.

இறுதிகாலத்தில் பித்துபிடித்தவர் என்றும், வாழதெரியாதவர் என்றும் புறக்கணிக்கபட்டவர், அப்போதும் ஏதோ எழுதிகொண்டிருந்தார், அப்பொழுது எழுதியவைதான் சாகாவரம் பெற்ற தேசபக்தி பாடல்களும், இன்னும் பல அழியா பாடல்களும்.

ஒன்று நிச்சயமாக சொல்லலாம், இந்தியாவின் தேசியகீதமாக்குவதற்கு அவரது பாடல்களை தவிர நிச்சயமாக எக்காலத்திலும் வேறுபாடல்களில்லை,ஆனால் இந்திய இலக்கிய உலகம் வங்காளிகள் கையில் இருந்தது, எளிதாக தாகூரின் பாடலை தேசிய கீதம் ஆக்கினார்கள், எ எந்த பாடல் 1911ல் ஜார்ஜ் மன்னருக்காக‌ தாகூர் எழுதியதாக சர்சையில் சிக்கிய‌ அதே பாடல், “ஜண கண மன” எனும் அந்த பெரிய பாடல்

அன்று தாகூர் எழுதியது மிக பெரும் பாடல், அதை பாடி அரைமணி நேரம் கச்சேரி செய்யலாம், அதனை 52 நிமிடமாக சுருக்கி “இந்திய தேசிய கீதம்” என அறிவித்துவிட்டார்கள், என்ன செய்வது, பாடித்தான் ஆகவேண்டும். பாடுகின்றோம் இந்தியாவில் இல்லாத சிந்து, (பிரிந்த) பஞ்சாபையும் சேர்த்து,

ஆனால் “தாயின் மணிக்கொடிபாரீர்” அல்லது “வந்தே மாதரம் என்போம்” போன்ற பாடல்களில் சிறிது மாற்றம் செய்துபாருங்கள், அற்புதமான தேசிய பாடல்கள் கிடைக்கும்,

ஒன்றும் சொல்வதற்கில்லை ,”ஏழை சொல் அம்பலம் ஏறாது, தமிழன் சொல் டெல்லிக்கு கேளாது”.

தாகூருக்கு வெள்ளையர் கொடுத்த பெரும் வெகுமதி பின்னாளைய “நோபல் பரிசு”, பாரதியோ வெள்ளையர் விரோதியாய் பாண்டிச்சேரியில் “ஆடுவோமே பள்ளு பாடுவோமே” என பாடிகொண்டிருந்தார், அவருக்கு வெள்ளையன் கொடுத்தது “தேச துரோகி” பட்டமும் சிறைதண்டனையும்.

பாரதி இந்தியாவினை எவ்வளவு நேசித்தார் அல்லது இந்தியா பற்றி அவரின் கனவு என்ன? என்பதற்கு அவரின் பாடல்களே சாட்சி, தாகூர் சிறந்த கவிஞர்தான் ஆனால் பாரதியின் “கணல்” அல்லது “உணர்ச்சி” அவர் பாடலில் இல்லை.

இந்தியா தேசிய கீதமாக நிச்சயம் பாரதியின் பாடலே இடம் பெற்றிருக்கவேண்டும், இந்தியாவில் எதுதான் ஒழுங்காக நடந்தது? ஆனால் பாரதியின் ஒரே ஒரு வரியினை மட்டும் டெல்லி மிக ஒழுங்காக பின்பற்றி அவரது கனவினை நிச்சயம் நனவாக்கும் என தோன்றுகிறது அது

“சிங்கள தீவினுக்கோர் பாலமைப்போம்
சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்”,

இதில் மட்டும் டெல்லி பின்வாங்காது.

அவரது கனவுபடியே இந்தியா சுதந்திரம் பெற்றது, ஆனால் அவர் மிகவும் நேசித்த சிந்து நதி கூட இன்று இந்தியாவிற்கு இல்லை, பாரதி முன்னமே இறந்தார் இல்லை 1947ல் இறந்திருப்பார். எப்படியோ பெண்விடுதலைக்கும், தீண்டாமை கொடுமைக்கும், சாதி கொடுமைக்கும் எதிராக தீ வைக்க துணிந்தவர் பாரதி. அவர் பாஷையில் சொல்வதென்றால் “அக்கினிக் குஞ்சொன்று கண்டேன், அதை அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன் வெந்து தணிந்தது காடு”.

அவர் வைத்த அந்த‌ தீ தான், பின்னாளில் எழுந்து பல தமிழக சமூக மாற்றங்களுக்கு வழிவிட்டது.

பாரதியின் வாழ்க்கையே கொடுமையானது, அவராவ‌து அறிவாளி இந்த சமூகத்தோடு ஒட்டமுடியாமல் அவதிபட்டார் விதி, ஆனால் அவரை நம்பி வந்த மனைவியின் வாழ்வே மகா கொடுமை, வறுமையும் புலமையும் அந்நாளைய தமிழக அறிஞர்களின் சாபம்தான், ஆனால் பாரதியாரின் சில செயல்கள் எந்த மனைவியையும் அம்மிகுளவி தூக்கவைக்கும்.

வருமானம் இல்லை, கடன் வாங்கி அரிசி வாங்க பணம் கொடுத்தால் புத்தகம் வாங்குவது, பக்கத்து வீட்டில் கடனுக்கு அரிசியாக‌ வாங்கி வைத்தால் காக்கா குருவிக்கு வீசி கவிதைபாடுவது, உச்சகட்டமாக குடும்பமே பசியில் வாடினால் அவர் விழித்திருந்து அழுது கவிதை எழுதுவார், பிள்ளைகளுக்காய் அல்ல பிஜி தீவில் கரும்புகாட்டில் அவதிபடும் இந்தியருக்காக‌

உலகின் கஷ்டத்த்தினை எல்லாம் உணர்ந்த பாரதிக்கு மனைவியின் கஷ்டம் புரியவில்லை,புரியவும் புரியாது காரணம் அவர் மனநிலை அப்படி. இறுதியாக சென்னை திருவல்லிகேணியில் ஒரு வாடகை வீட்டில் ஒண்டுகுடித்தனம் நடத்தும்பொழுதும் பாரதி அப்படியே இருந்தார், சொந்த பந்தம் யாருமில்லாத அபலையாக செல்லம்மாள் அந்த கோயிலிலே அழுவார்.

கோயிலின் தெய்வம் கோபபடவில்லை, ஆனால் கோயில் யானை கோபபட்டது, வழக்கம்போல பழம்கொடுக்க “அப்பனே கணேசா..” என அருகில் சென்ற பாரதியை தூக்கிவீசிற்று. அன்று நோயில் விழுந்தவர் விரைவாக உடல்நலம் கெட்டு செப்டம்பர் 11ல் காலமானார்.

அவர் பெரும் கவிஞர், இனி எந்த கவிஞனும் பிடிக்க முடியாத இடத்திற்கு சொந்தகாரர், கம்பனுக்கு பின் தமிழகம் கண்ட பெரும் கவிஞன், எந்த உண்ர்ச்சியில் பாட்டெழுதுகின்றானோ அதே உணர்ச்சியை அந்த‌ பாடலை கேட்பவருக்குள்ளும் கொண்டுவரும் அனாசய வித்தைக்கு சொந்தகாரன். 60 வருடம் 100 வருடம் கழித்து போடபடும் இசைக்கும் கட்டுபடும் வரிகளை மிக அழகாக எழுதியிருப்பது தான் பாரதியின் பெரும் சிறப்பு.

ஆனால் வாழும் பொழுது அவருக்கு ஒரு செம்பு தண்ணீர் கொடுக்கவும் ஆளில்லை, பேச கூட விரும்பவில்லை, ஒரு அகதியாய், ஒரு அனாதயாய் விரட்டி விரட்டி கொத்தபட்ட ஒரு பரிதாபத்திற்குரிய அறிஞன்.

அதுவும் சொந்த சாதியாலே குதறபட்ட ஒரு மாபெரும் அறிவாளி,

ஆனால் 38 ஆண்டுகள் வாழ்வதற்குள்ளாகவே வரலாற்றில் இடம்பெற்ற அறிஞன் அவர், தமிழ் இலக்கியம் உள்ள காலமட்டும் பாரதியார் வாழ்வார், அப்படி ஒரு சூரியனை கொடுத்தது என்பதற்காக நெல்லையின் மக்களான நாமும் பெருமை அடையலாம்.

தனது ஏதாவது ஒரு வரியில் பாரதி நிச்சயம் ஒவ்வொருவரின் உள்ளத்தையும் தொட்டிருப்பார், அந்த மகா கவிஞனுக்கு ஒரு தமிழனாய் அஞ்சலி செலுத்துவோம்.


பாரதி பிறந்தநாள் இன்று

இந்த தமிழகத்து மாபெரும் கவிஞன் பாரதி பற்றி அவர்களிடம் கேட்டவிடாதீர்கள்

அவன் எழுதிய கம்பராமாயணம் அருமை என்பார், பாஞ்சாலி சபதம் பற்றி கேட்டுவிட்டால் அதனை எழுதிய மாணிக்க வாசகர் வாழ்க என்பார்

அவர்களிடம் தயவு செய்து பாரதிபற்றி அவர்களிடம் கேட்டுவிடாதீர்கள்


இந்த லட்சுமி படக்குழு எங்காவது பாரதிக்கு அஞ்சலி செலுத்தும் காட்சி கண்ணில் பட்டதா?

கும்மியடி கும்மியடி என நிச்சயம் செல்வார்கள், அவர்களை எல்லாம் பாரதி கையில் இருக்கும் கம்பால் அடித்து விரட்ட வேண்டும்

அதுதான் தமிழன் பாரதிக்கு செய்யும் மகத்தான அஞ்சலி


நோபல் பரிசு வழங்கும் நிகழ்வை புறக்கணித்த இந்தியா : செய்தி

அமைதிக்கான நோபல் பரிசு வழங்கும் நிகழ்வை புறக்கணித்த இந்தியா : செய்தி

அதாவது அணுசக்தி ஒழிப்பு தொடர்பான விவகாரங்களில் இந்தியா அக்கறைகாட்டவில்லை என அணுவுலை எதிர்ப்பாளர்கள் பொங்குகின்றார்கள், அப்படி சென்றால் நம்மை ஏதும் ஒப்பந்ததிற்கு இழுத்துவிடுவார்கள் என இந்தியா யோசிக்கின்றது

சரி இது வேறு விஷயம்

இப்போதைக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கும் நிகழ்ச்சியினை இந்தியா ஏன் புறக்கணித்தது என செய்தி அதிமுகவினரை எட்டினால் என்னாகும்?

“எங்கள் இதய தெய்வம் அம்மாவிற்கு அமைதிக்கான நோபல் பரிசை வழங்காததை கண்டித்து அதை புறக்கணித்த மோடி வாழ்க, எங்கள் கோரிக்கையினை புறக்கணித்த நோபல் கமிட்டி
ஒழிக‌

ஜெயாவிற்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்காதது அநியாயம் என தெரிந்துகொண்ட இந்திய அரசுக்கு நன்றி..” என கிளம்பமாட்டார்களா?

செல்லூர் ராஜூ எல்லாம் சும்மா விடுவார்களா?

அதனால் இச்செய்தி அதிமுகவினரை எட்டாமல் இருப்பது தமிழகத்திற்கு நல்லது