தினகரன் வென்றால் நிச்சயம் அது சாதாரண விஷயம் அல்ல‌

தினகரன் மீது ஆயிரம் சர்ச்சைகள் இருக்கட்டும் ஆனால் ஆர்.கே நகரில் தன்னால் முடிந்தமட்டும் போராடுகின்றார். கடுமையான போராட்டம்

ஆனால் திமுக என்ன செய்கின்றது என்றால் சத்தமே இல்லை, மு.க ஸ்டாலின் புதிதாக ஒரு போராட்டத்தில் இறங்குகின்றாராம் அதாவது ஆளுநர் மாவட்டம் ரீதியாக ஆய்வு செய்வதை எதிர்ப்பாராம், மாநில சுயாட்சிக்கு குறுக்கே ஆளுநர் வந்தால் விடமாட்டாராம்

ஆட்சியே இல்லை, இதில் என்ன மாநில சுயாட்சி கோஷம் இப்பொழுது வேண்டியிருக்கின்றது? இது தினகரனோ பழனிச்சாமியோ செய்ய வேண்டிய போராட்டம், இவர் எதற்கு?

அப்படியும் அய்யா ஆளுநரே நன்றாக ஆய்வுசெய்து தேவையற்ற இந்த ஆட்சியினை கலையுங்கள் என தந்திரமாக சொல்லவும் தெரியவில்லை

ஒரு விஷயம் உறுதி

தினகரன் ஆர்.கே நகரில் தோற்றால் ஆவது ஒன்றுமில்லை ஆனால் வென்றால் நிச்சயம் அது சாதாரண விஷயம் அல்ல‌

திமுக தரப்பு வழக்கம் போல இது ஆளும்கட்சி நடத்தும் தேர்தல் அதனால் இப்படித்தான் நடக்கும் என சொல்லமுடியாது, காரணம் ஆளும் கட்சியே “ஆலம்பனா நான் உங்கள் அடிமை..” என க‌ண் சிமிட்டிகொண்டிருக்கின்றது

ஆக இந்த தேர்தலில் வெல்லாவிட்டால் திமுகவிற்கு அது பெரும் பின்னடைவு, திமுக தொண்டர்களுக்கே அது உளச்சோர்வினை கொடுக்கும்

எதிர்கட்சி பிரிந்து கிடக்கின்றது, தினகரன் மீது சர்ச்சை ஏராளம், பழனிச்சாமி மீது காமெடி ஏராளம்

இதில் ஜெயிக்காத திமுக எதில் ஜெயிக்க போகின்றதோ? ஆனால் ஜெயிப்பதற்குரிய எந்த வழியிலும் அது உழைத்ததாக தெரியவில்லை

படுத்துகொண்டே ஜெயிப்பேன் என சொன்ன காமராஜரை தன் அசாத்திய உழைப்பால் வென்ற திமுக இப்பொழுது படுத்து கொண்டே ஜெயிப்போம் என்றால் அது நகைப்புகுரியது

தமிழிசை கூட தினகரனின் செயல்பாட்டினை தடுக்க ஏதாவது செய்ய ஏதோ பேசிகொண்டிருக்கும் போது, திமுக தரப்பில் சத்தமே இல்லை

எப்படியும் போகட்டும் இது எல்லாம் உடன்பிறப்புக்கள் உள்ளுறுப்புகள் கவலைபட வேண்டிய விஷயம் நமக்கென்ன‌?

நாம் நந்தினி சீரியல் பார்க்கலாம், அதில்தான் கவலைபடும் விஷயம் இருக்கின்றது

அந்த சீரியலின் கேமராமேன் சரியில்லை, தலைவியின் முக அழகை அவர் சரியான கோணத்தில் காட்டவில்லை என்பதால் தலைவியின் அழகு பூரணமாக தெரியவில்லை

நிலா கூட சரியான கோணத்தில் எடுக்கபட்டால்தான் அழகு என்பதால் அந்த ஓளிபதிவாளரை சங்கம் வன்மையாக கண்டிக்கின்றது

ஜார்ஜ் வாஷிங்டன், அமெரிக்கர்களின் மிக பெரும் கவுரவம்

Image may contain: 1 person, close-up

அவர் ஒரு சாதாரண விவசாயி, அமெரிக்க தீவில் பிரிட்டிசாரும் பிரான்சும் மோதிகொண்ட காலத்தில் பிரிட்டன்பக்கமாக நின்று போரிட்டவர்

ஓரளவு அறிவாளி அதனால் களத்தில் பிரிட்டன் பிரான்ஸும் செவ்விந்தியர்களும் இணைந்த படையினை வெல்வது கடினம் என சொன்னவர், பிரிட்டானியருக்கும் அவருக்கும் சரிவரவில்லை, ஆயினும் ராணுவவீரனாக தொடர்ந்தார். பெரும் தோல்வியில் தெய்வாதீனமாக உயிர்தப்பியபின் ராணுவம் எல்லாம் வேண்டாம் என முடிவெடுத்து மறுபடி விவசாயி ஆனார்

அன்று அவரின் விவசாய பண்ணை கிட்டதட்ட 8 ஆயிரம் ஏக்கர் என்கின்றது வரலாறு. அதாவது சசிகலா பாணியில் வளைத்தவர் அல்ல. அமெரிக்கா மிகபெரும் தேசம் என்பதால் நிலம் சிக்கலே இல்லை. மக்கள் தொகை குறைவு என்பதால் உழைப்பதுதான் சிக்கல்

அக்காலத்திலே 8 ஆயிரம் ஏக்கரை பராமரித்திருகின்றார் என்றால் பெரிய விஷயம், முன்னாள் ராணுவத்தார் என்பதால் நல்ல மதிப்பும் இருந்திருக்கின்றது

பின்பு பிரிட்டிசார் வரிவசூல் தொடர்பாக கறாராக நடக்க, அவருக்கும் பிரிட்டிசாருக்கும் மோதிற்று, மோதல் யுத்தமானது உள்நாட்டு போர் வெடித்தது

முன்பே பிரிட்டன் ஆர்மியில் இருந்ததால் அவர்களின் பலகீனத்தை நுனியில் வைத்திருந்தவருக்கு வெற்றி குவிந்தது, உச்சமாக பாஸ்டனில் அமெரிக்க பொருட்கள் எல்லாம் அடித்து நொறுக்கபட்டு புரட்சி வெடித்தது, இதற்கு பிரான்ஸ் ஆசியும் உண்டு

அமெரிக்க மக்களை ஓரணியில் திரட்டி போராட்டத்தை மிக வெற்றிகரமாக முன்னெடுத்த சாதனையினை வாஷிங்டன் செய்தார். அவராக படை திரட்டினார் பயிற்சி அளித்தார், பிரான்சின் உதவினையும் பயன்படுத்திகொண்டார்.

அமெரிக்க எழுச்சி அவர் கொடுத்தது.

ஒரே மொழியாக இருந்தால் ஒற்றுமையாக இருக்கலாம், ஒரே இனமாக இருந்தால் வாழ்வாங்கு வாழலாம் என்பதெலலம் சரிவராது

அமெரிக்கர்கள் பிரிட்டன் எனும் தேசிய இனத்து பிள்ளைகள்தான், ஆங்கிலம் பேசியவர்கள்தான், பின் பிரிவும் போரும் எங்கிருந்து வந்தது? மக்கள் அதிருப்தி அடைந்த பின் தேசிய இனமாவது, மொழியாவது?

அமெரிக்க விடுதலைப்போர் அதனைத்தான் சொன்னது, ஒரே மொழி ஒரே இனம் ஆயினும் ஒற்றுமையாய் வாழ்வது கடினம்.

இனி அமெரிக்காவினை ஆளமுடியாது முடிந்தால் வியாபாரம் செய்யலாம் என அமெரிக்காவிற்கு சுதந்திரம் கொடுத்துவிட்டு கப்பல் எறியது பிரிட்டன்

அதன் பின் புதிய அமெரிக்காவினை உருவாக்கினார் அவர், இன்றைய அமெரிக்காவின் அடித்தளம் அவர் இட்டது

ஜார்ஜ் வாஷிங்டன், அமெரிக்கர்களின் மிக பெரும் கவுரவம்

தேர்தலில் அவரே வென்றார், சர்வாதிகாரியாக வாழும் வாய்ப்புத்தான் ஆனால் ஒருவர் இருமுறைக்கு மேல் ஜனாதிபதியாக இருக்க கூடாது எனும் சட்டத்தை அவர்தான் எழுதினார், இன்றளவும் அது பின்பற்றபடுகின்றது

உலகம் மன்னர் ஆட்சியில் இருந்தபொழுது ஜனநாயக ஆட்சி எப்படி இருக்கவேண்டும் என உருவாக்கி காட்டியவர் அந்த வாஷிங்டன், அவரின் அந்த உருவாக்கமே பின்னர் உலகம் மாறியதற்கு முதல் காரணம்

மனிதர் நல்ல கைராசிக்காரர்

அவர் தொட்டதெல்லாம் துலங்கியிருக்கின்றது. அவர் உருவாக்கிய அமெரிக்கா இன்று மாபெரும் வல்லரசு. அவர் படம் சுமக்கும் டாலர் உலகின் பொருளாதார ரத்தம்

மேலாக அவர் உருவாக்கிய நகரான வாஷிங்டன் இன்று உலக நாடுகளின் தலையெழுத்தை நிர்மானிக்கும் நகரம். ஏறகுறைய ஒவ்வொரு மனிதனின் நிலையினையும் அந்த நகர் நேரடியாக அல்லது மறைமுகமாக தீர்மானிக்கின்றது

அந்த மனிதருக்கு ஜாதகம் அப்படி. அதே நேரம் அவரின் மிக உன்னதமான தியாக உழைப்பும், அவரிடம் இருந்த ஜனநாயகமும் வாழ்த்தபட வேண்டியது

இன்று அவரின் நினைவுநாள் அத்தேசம் அவரை நன்றியோடு நினைத்து வணங்குகின்றது அது வாழும்

இங்கோ ராமசந்திரன் சிலையினை சுற்றி சுற்றி வணங்கி கொண்டிருக்கின்றார்கள், இங்கு எது உருப்படும்?

 

மனிதருக்கு ஆசை எங்கு வந்துவிட்டது பார்த்தீர்களா?

Image may contain: 2 people, people smiling, people standing

மனிதருக்கு ஆசை எங்கு வந்துவிட்டது பார்த்தீர்களா?

ராமசந்திரன் போலவே போஸ் கொடுக்கின்றாராம், அந்த தொப்பி கண்ணாடி பல்செட் மிஸ்ஸிங்

பழனிச்சாமி இப்படி போஸ் கொடுப்பதோடு நிறுத்துவது நல்லது, மீறி அவரை போல் நடிக்க போகின்றேன், கிழவியினை தூக்கி ஆட போகின்றேன் , ராமசந்திரன் போல‌ உதட்டை கடிக்க போகின்றேன் என கிளம்பினால் என்னாகும்?

தமிழகம் இன்னொரு பவர் ஸ்டாரை பார்க்கும் துர்பாக்கிய நிலை வரும்.

( இவர் இப்படி ராமசந்திரன் சிலைகளையே சுற்றிகொண்டிருக்க, ஆர்.கே நகரில் இந்த கோஷ்டியினை குக்கரில் போட்டு வேக வைத்துகொண்டிருக்கின்றார் தினகரன் )


தூக்கத்தில் பைக் ஓட்டும் வியாதி கொண்ட பெண் , லண்டனில் பரபரப்பு : செய்தி

இது என்ன பரபரப்பு? இந்தியாவில் அவனவன் தூக்கத்தில் ஆட்சியே செய்கின்றான் அதுதான் ஆச்சரியம்.


திருச்செந்தூர் கோயில் பிரகார மண்டபம் இடிந்து விபத்து: பெண் ஒருவர் பலி

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் பிரகார மண்டபம் இடிந்து விபத்து: பெண் ஒருவர் பலி

இன்னும் கொஞ்ச நேரத்தில், பக்தி முற்றினால் இப்படித்தான் கூட்டம் சேரும். அதனை காசாக்க தரம் கெட்ட கட்டங்களை கட்டுவார்கள், அது உயிர்பலி வாங்கும். தெய்வம் இருந்தால் காத்திருக்க வேண்டும், கோயில் என்பது மோசடி. இதனால்தான் கடவுள் இல்லை என நாங்கள் சொல்கின்றோம் என வீரமணி உள்ளிட்ட பகுத்தறிவுவாதிகள் கிளம்பி வருவார்கள்

அவர்களிடம் திராவிட ஆட்சியில் பஸ் நிலையம் இடிந்து 5 பேர் செத்தது, கட்டிய புது பாலம் இடிந்தது பற்றி எல்லாம் கேட்டால் பதிலே வராது, அது இன்னொரு வகை பகுத்தறிவு

தமிழன் சோற்றால் அடித்த பிண்டம், குக்கருக்குள் சென்ற முண்டம்

Image may contain: 23 people, people smiling, crowd

30 வருடமாக எது தமிழக தேர்தல் வெற்றியினை நிர்ணயிக்கும் விஷயம் எது என தெரிந்து அதில் பழம் தின்று, கொட்டையினை உடைத்து பாயாசம் வைத்த குடும்பம் சசிகலா குடும்பம்

அவர்களுக்கு ஜெயா போனால் என்ன?, இரட்டை இலை போனால் என்ன? எது கொடுத்தால் இந்த தமிழக மக்களை வளைக்கலாம் என்ற வித்தை தெரிந்திருக்கின்றது, போதாதா

ஆர்.கே நகரில் தினகரன் வெற்றிபெறலாம் என சொல்லபடுவதன் காரணம் இந்த படம் தான்

இது நீங்கள் கொடுத்த குக்கரா என தினகரனை தேர்தல் ஆணையம் மிரட்டவும் முடியாது, கேட்டால் எங்களை ஆதரிக்க அவர்கள் வீட்டில் இருந்த குக்கர்களை எடுத்து வந்து பழனிச்சாமியின் துரோகத்திற்கு நியாயம் கேட்கின்றார்கள் என சிரிக்காமல் சொல்வார் தினகரன்

இந்த மக்களை வைத்துகொண்டு என்ன மாற்றம் செய்ய முடியும்? ஒரு மண்ணாங்கட்டியும் செய்ய முடியாது

கலைஞர் பாணியில் சொல்வதென்றால் “தமிழன் சோற்றால் அடித்த பிண்டம், குக்கருக்குள் சென்ற முண்டம்”


ஓகி புயலை விட குக்கர் விற்பனை மகா வேகம் என்கின்றது சென்னை செய்தி

போகிற போக்கை பார்த்தால் தினகரனுக்கு குக்கர் சின்னம் கொடுக்க சொன்னது பிரபல குக்கர் கம்பெனி என சர்ச்சை வந்தாலும் வரலாம், ஆக பிரபல குக்கர் கம்பெனிகள் எல்லாம் தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்க லஞ்சம் கொடுத்த வழக்கில் சிக்கினாலும் சிக்கலாம்


 

காதலால் மட்டுமே புரட்சியை உண்டாக்க முடியும் : பா.ரஞ்சித்

காதலால் மட்டுமே புரட்சியை உண்டாக்க முடியும் – பா.ரஞ்சித்

இங்கே காதலால் விளைந்த புரட்சி போதும்ப்பா ராசா,

அப்படி புரட்சி வேண்டுமென்றால் வேணும்னா மறவர்,வன்னியர், கவுண்டர் பெண்களில் ஒரு பெண்ணை காதலிக்க வைத்து நீர் புரட்சி செய்யும் பார்க்கலாம்.

எவனாவது வெட்டுபட்டு சாக வேண்டும், இவர் தள்ளியிருந்து புரட்சி பேச வேண்டும். எப்படிபட்ட கொள்கை??

முதலில் புரட்சி என்றால் என்ன என அன்னாருக்கு தெரியுமா? லெனினும் ஸ்டாலினும் மாவோவும், பெரியாரும் காதலித்தா உலகை புரட்டினார்கள்???????

குஜராத்தில் பாஜக வென்றுவிட்டால் லட்டு கொடுப்பார்கள்

Image may contain: outdoor

அடுத்த வாரம் இங்குதான் குஜராத்தில் பாஜக வென்றுவிட்டால் லட்டு கொடுப்பார்கள், இந்தியாவில் எங்கு பாஜக் வென்றாலும் இங்கு லட்டு கிடைக்கும்

ஆனால் தமிழகத்தில் மட்டும் அவர்கள் அய்யோ பாவம், ஆனாலும் அதனை மகிழ்ச்சியுடன் ஏற்றுகொள்கின்றார்கள் அல்லவா, அங்கு வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் சிரித்துகொண்ட தோற்பதையும் மிஞ்சிவிடுகின்றார்கள் பாஜகவினர்.

அங்கே ஜெயித்தோம், இங்கே ஜெயித்தோம் என்று லட்டு கொடுக்க அவர்களுக்கு ஒரு அலுவலகம், இதற்கு திருப்பதி லட்டை கொடுத்தால் கூட புண்ணியத்தில் சேரும்.