குஜராத் முடிவுகள்

குஜராத்தில் காங்கிரஸ் வெற்றியினை தவற விட்டதற்கு இரு முக்கிய காரணங்கள் உண்டு

ஒன்று ராகுல் தாமதமாக தலைவராக அறிவிக்கபட்டது. அவரை தலைவராக்கிவிட்டே தேர்தல் களத்திற்கு அனுப்பியிருக்க வேண்டும்

இரண்டாவது காரணமே மகா முக்கியமானது, அதாவது தங்க தலைவி குஷ்பு அங்கு பிரச்சாரத்திற்கு செல்லவில்லை. அதனால் ஏற்பட்ட இழப்பு இது

இனியாவது தலைவியினை தமிழக காங்கிரஸ் தலைவராக்கி காங்கிரஸ் வெற்றிபாதையில் செல்லட்டும்


குஜராத்தில் வென்றால் சென்னையில் பாஜகவினர் லட்டு கொடுக்கின்றார்கள், தமிழகத்தில் அவர்கள் வெற்றி சாத்தியமே இல்லை என்பதால் இப்படி மகிழ்கின்றார்கள்

தேசிய கட்சி இப்படி சென்னையில் லட்டு கொடுக்கும் கட்சியாகிவிட்டது

இப்பொழுது எதற்கு லட்டு கொடுக்க வேண்டும்?

இந்த அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் கூட தேசிய கட்சிதான் என பெயரிடபட்டிருக்கின்றது, என்றாவது சென்னையில் வென்றதற்கு டெல்லி, மும்பை, கல்கத்தா என லட்டு கொடுத்து மகிழ்ந்திருக்கின்றார்களா?

இல்லவே இல்லை

அவ்வளவிற்கு மிக மிக தன்னடக்கமான தேசிய கட்சி அ.இ.அதிமுக‌


 

சவுதி அரேபியா மீது அமெரிக்காவிற்கு எப்பொழுதும் ஒரு கண்

இந்த சவுதி அரேபியா மீது அமெரிக்காவிற்கு எப்பொழுதும் ஒரு கண் உண்டு. எண்ணெய், அமெரிக்க ராணுவதளம் என ஏகபட்ட விஷயங்கள்

கூடுதலாக ஈரான் எதிர்ப்பு, ஏமனில் ஈரான் அதிகாரம் செலுத்தாமல் தடுப்படு என சவுதிக்கு பல அசைன்மென்டுகளை கொடுக்கின்றது அமெரிக்கா

இப்பொழுது உள்ள இளவரசர்களில் சிலர் அமெரிக்க ஆதரவாளர்கள், அவர்கள்தான் சில சிக்கல்களை சந்திக்கின்றார்கள், யார் மூலமாக சந்திக்கின்றார்கள் என்றால் சவுதியில் சில சீர்திருத்தம் செய்யும் தற்போதைய இளவரசர் மூலமாக சந்திக்கின்றனர். அவர்களின் அளவுக்கு மீறிய சொத்தை எல்லாம் பிடுங்கினார் இந்த இளவரசர்

அதாவது சவுதி அரச குடும்பத்தில் ஏதோ நடக்கின்றது என்பது மட்டும் புகைகின்றது. ஏதோ பெரும் அரசியல் சர்ச்சை சத்தமின்றி நடக்கின்றது

மக்களின் அதிருப்தியினை போக்க இப்போதைய அதிகாரமுள்ள சவுதி அரசர் மடமடவென சில கட்டுபாடுகளை தளர்த்துகின்றார்

திரையரங்கம் திறப்பு, பெண்களுக்கான வாகன உரிமை என பெரும் கட்டுபாடுகளை எல்லாம் தளர்த்துகின்றது சவுதி

இது மக்களிடம் கொஞ்சம் வரவேற்பினை பெற, அமெரிக்க ஆதரவு சவுதி இளவரசர்கள் முகம் கோணிவிட்டது, தாங்குமா அமெரிக்கா?

தற்போதைய சவுதி இளவரசரின் சொத்துமதிப்பினை பகிரங்கமாக அறிவிக்கின்றது, அவர் 2000 கோடியில் பிரான்ஸ் மன்னன் லூயி மாளிகையினை வாங்கினார், சில ஆயிரம் கோடி கொடுத்து மோனாலிசா ஓவியத்தை வாங்கினார் என பரபரப்பு செய்திகளை வெளியிடுகின்றது

இப்படி சொத்துகுவிக்கும் அரசர்தான் மக்கள் கோபம் பெருகாமல் இருக்க சில கட்டுபாடுகளை தளர்த்துகின்றார் என கொழுத்தி வேறு போட்டுவிட்டது

ஏன் சவுதி இளவரசர் சொத்து வாங்கும்பொழுது தெரியாதா?

தெரியும், ஆனால் மிக சரியான இடத்த்தில் கசியவிடுகின்றார்கள்.

ஆக சவுதி அரசகுடும்பத்து சலசலப்புகளில் குளிர்காய அமெரிக்கா கிளம்பிவிட்டது நன்றாக தெரிகின்றது, இனி என்ன நடக்க போகின்றதோ??

ஜெருசலேம் விவகாரம் விஸ்வரூபமாகின்றது

இந்த ஜெருசலேம் நகர் சர்ச்சை பெரும் விவகாரமாகின்றது. இஸ்லாமிய நாடுகள் எல்லாம் ஓரணியில் திரள்கின்றன, துருக்கி ,மலேசியா போன்ற இஸ்லாமிய நாடுகள் பெரும் எதிர்ப்பு குரலை எழுப்புகின்றன‌

அதிலும் துருக்கி கிழக்கு ஜெருசலேமில் எங்கள் தூதரகத்தை அமைப்போம் என பகிரங்கமாக மிரட்டுகின்றது

ஆனால் இஸ்ரேல் கள்ளசிரிப்பு சிரிக்கின்றது

அதாவது அமெரிக்கா மேற்கு ஜெருசலேமில் தூதரகத்தை திறந்து அதனை இஸ்ரேலிய தலைநகர் ஆக்கினால், கிழக்கு ஜெருசலேமில் துருக்கி தூதரகத்தை அமைத்து அதனை பாலஸ்தீன தலைநகராக்குவோம் என்கின்ற ரீதியில் பேசுகின்றது துருக்கி

பாலஸ்தீனே எங்கள் சுயாட்சி பகுதி, அந்த ஜெருசலேமில் நீங்கள் தூதரகம் திறந்தால் எங்கள் தலைநகரை அங்கீகரித்ததாகவே அர்த்தம் என நமுட்டு சிரிப்பு சிரிக்கின்றது இஸ்ரேல்

இது இனி வேறுமாதிரி போகலாம்

அதாவது ஜெருசல்மிற்குள் உலகநாடுகளின் தூதரக தகறாறாக மாறி பின் நாடுகளுக்கு இடையேயான யுத்தமாக வெடிக்கலாம்

இஸ்ரேலோ எந்த எல்லைக்கும் செல்ல தயாராக இருக்கின்றது, டிரம்பும் அசைந்து கொடுப்பதாக தெரியவில்லை. இஸ்லாமிய நாடுகளும் விடுவதாக தெரியவில்லை

நிச்சயம் இஸ்ரேலும் அமெரிக்காவும் செய்வது அடாவடி. பாகபிரிவினையின் பொழுது ஜெருசலேம் இஸ்ரேலுக்கு கிடைக்கவே இல்லை, ஜெருசலேமில் வழிபாடு செய்யமட்டும் அனுமதிக்கபட்டார்கள்

6 நாள் யுத்தத்தின் பொழுது மோசே தயான், மிக தந்திரமாக அதனை வளைத்துகொண்டு இஸ்ரேலை அதில் நிறுத்தினார்

அன்றிலிருந்து தொடங்கியது சிக்கல், அராபத் முடிந்தமட்டும் போராடிவிட்டு என் கல்லறை கிழக்கு ஜெருசலேமில்தான் அமைய வேண்டும் என சொல்லி தற்காலிக கல்லறையினை ரமலாவில் அமைக்க சொன்னார்

நிலமை மோசமாகிகொண்டே செல்கின்றது.

ஒரு சிலர் சொல்வது போல எங்கள் கண்டுபிடிப்பினை எல்லாம் , முகநூலை எல்லாம் புறக்கணித்துவிட்டு ஜெருசலேமினை கேளுங்கள் என வருவதெல்லாம் வதந்திகள். எல்லாம் இந்த பிரிவினை கிறிஸ்தவர்கள் கட்டிவிடும் வதந்தி

நாளையே ஜெருசலேம் இஸ்ரேலிய தலைநகரானால், கிறிஸ்துவின் புனித தலங்களை விட்டுவைக்கவா போகின்றார்கள்? இஸ்லாமின் அடுத்த எதிரி யூதனுக்கு கிறிஸ்தவம்

ஆனால் இந்த பிரிவினைகள் பைபிளை படித்துவிட்டு சொன்னதே சொல்லிகொண்டிருக்கும், சரி அப்படியானால் அயோத்தியில் ராமர் கோவிலை கட்டிவிடலாமா என்றால் அப்பாலே போ சாத்தானே என சபிப்பார்கள், அவர்கள் அப்படித்தான்

விஞ்ஞான கண்டுபிடிப்பு எல்லாம் எங்களுக்கு சொந்தம் என எல்லாம் இஸ்ரேல் சொல்லமுடியாது என்பது இஸ்ரேலுக்கு தெரியும்

காரணம் இஸ்ரேலிய யூதர்கள் கண்டுபிடிப்புகளை குவிக்கவில்லை, மேல் நாட்டு கல்வியில் படித்த யூதர்கள் அந்த நாட்டின் சார்பில் செய்த விஷயங்கள் அவை

ஆதலால் இஸ்ரேலுக்கு சொந்தம் என எப்படி கிளம்பமுடியும்? விஞ்ஞான விஷயங்களை கற்றுவிட்டால் யார் வேண்டுமானாலும் செய்யலாம்

நாங்கள் கண்டுபிடித்த அணுகுண்டு என அமெரிக்கா சொல்லமுடியுமா? அணுகுண்டு யார் வெடித்தாலும் வெடிக்கும், துப்பாக்கி யார் சுட்டாலும் சுடும்

ஜெருசலேம் விவகாரம் விஸ்வரூபமாகின்றது , இப்போதைக்கு இஸ்ரேலிய கோபம் துருக்கி மேல் வந்திருக்கின்றது. இனி துருக்கிக்கு எதிராக என்னவெல்லமோ நடக்கும் வாய்ப்பு உண்டு

திமுகவிற்கு திக் திக் நிமிடங்கள் ஆரம்பம்…

எதிர்பார்பினை ஏற்படுத்திய தேர்தல் முடிவுகள் வந்தாயிற்று. மக்கள் பாஜகவிற்கு ஆதரவு வழங்கியிருக்கின்றார்கள். பெரும் அதிருப்தி என அவர்கள் எதனையும் உணரவில்லை போலிருகின்றது. பாஜக அரசு தொடரலாம் என அனுமதித்துவிட்டார்கள்

பாஜக அதன் அசுர பலத்துடன் தொடர்கின்றது என்பதற்கு எடுத்துகாட்டான விஷயங்கள் இவை. இந்த வெற்றி இனி அவர்களை உற்சாகத்துடன் பாராளுமன்ற தேர்தலை நடத்த சொல்லும்

காங்கிரஸின் நிலை படுமோசமில்லை. அக்கட்சிக்கும் குறிப்பிட்ட வாக்கு வங்கி இருக்கின்றது. அந்த ஜாதி வெறியன் ஹிர்திக் பட்டேலை கூட்டு சேர்த்ததுதான் சிக்கலோ என்னமோ? பின்பு தெரியும்

அந்த ஹிர்த்திக் பட்டேல் என்பவன் விரட்டபட்டதில் மகிழ்ச்சி, இல்லையேல் அந்த தவறான முன்னுராதரணம் எல்லா மாநிலங்களிலும் எதிரொலித்து பெரும் கலவரங்களை உண்டாக்கி இருக்கலாம்

இனி பாஜகவின் முழு பார்வையினையும் பாஜக தமிழகம் மீது திருப்பலாம்

இன்னும் இரு நாளில் ஆர்.கே நகர் தேர்தலும், ஸ்பெக்ட்ரம் தீர்ப்பும் வர இருக்கின்றன, என்ன நடக்கபோகின்றதோ என தமிழகம் பரபரப்பாக எதிர்பார்த்துகொண்டிருக்கின்றது

குறிப்பாக திமுகவிற்கு திக் திக் நிமிடங்கள் ஆரம்பம்.

குஜராத் தேர்தல் முடிவுகள் வரதொடங்கிவிட்டன

Image may contain: 2 people, people standing“அய்யோ பரமா சாவு பயத்தை காட்டிட்டாங்க பரமா…

ஏதாவது செய்யணும் பரமா..”


Image may contain: 3 people, outdoorஆத்தா S Prema உங்க பார்ட்டி ஜெயிச்சிட்டு, அதுக்காக ரொம்ப சிரிக்காதீங்க‌

இந்த குழந்தை பையன் பயந்துபோயிட்டேன் ,

அந்த லட்டு கொடுத்திங்கண்ணா வாங்கிட்டு ஓடிபோயிருவோம், அப்புறமா சிரிச்சிக்கோங்க‌


குஜராத் தேர்தல் முடிவுகள் வரதொடங்கிவிட்டன, இனி அக்கும்பல் கொண்டாடி தீர்க்கும் போல‌

வோட்டுமெஷின் எல்லாம் குறை சொல்லமுடியாது. அதில் தில்லுமுல்லு என்பது சச்சினின் மட்டையில் ஸ்பிரிங் உண்டு என்பது போல் அபத்தமானது, வேறு காரணங்களை வேண்டுமானால் தேடலாம்

யார் செய்யும் அழிச்சாட்டியத்தை கூட தாங்கலாம். இந்த தமிழிசையின் வெற்றி சிரிப்பை கூட பொறுத்துகொண்டு லட்டு வாங்கலாம்

ஆனால் Jebamani Mohanraj , S Prema போன்றோரின் அழிச்சாட்டியங்களை இன்று தாங்க முடியாது, என்ன செய்யலாம்?

பலர் இன்று ஆடுவெட்டும் சுடலை சாமியின் கோலத்தில் ஆடுவார்கள்.

எங்காவது ஓடிவிட வேண்டியதுதான், நிச்சயம் விரட்டி வந்து கலாய்பார்கள், சகித்துகொள்ள வேண்டிய தருணம் இது

ஆனானபட்ட இயேசுநாதரே சிலுவையில் கடவுளால் கைவிடபட்டிருக்கின்றார், நாமெல்லாம் எம்மாத்திரம்

காங்கிரஸ் காங்கிரஸ் ஏன் எம்மை கைவிட்டாய்..


அந்த கவியரசிக்கு வாழ்த்துக்கள்

Image may contain: 1 person, close-up

அந்த பெண் கவிஞர் நிச்சயம் வாழ்த்துகுரியவர், தமிழகத்தில் அவ்வையாருக்கு பின் பெண் கவிஞர்கள் குறைவு, அதுவும் தமிழக திரையிசைபாடல்களில் பானுமதி என்பவர் ஏதோ எழுதினார் என்பார்கள் உறுதியான செய்தியில்லை. ஆனால் பெரும் போராட்டத்திற்கு பின் தனக்கென ஒரு இடம் பிடித்திருப்பவர் அவர், எளிதில் பிடித்துவிட்ட இடம் அல்ல அது.

Kavignar Thamarai , அவர் பாடல் எழுத வந்து 20 வருடங்கள் ஆகிவிட்டதாம்

கவிஞர்களில் அவர் கொஞ்சம் வித்தியாசமானவர், ஆச்சரியமானவர் .

சுத்த தமிழ்வார்த்தைகளில்தான் பாடல் எழுதுவேன் என சொல்லி இன்றுவரை நிலைத்தும் இருப்பவர்.

அந்த உறுதி பாராட்டதக்கது. இது ஹாலிவுட் படமா என டிக்கெட்டை அடிக்கடி பார்த்துகொண்டே இருக்க வைக்கும் கவுதம் மேனன் போன்ற ஆங்கிலம் அதிகம் வரும் படங்களிலும் தமிழில் மட்டும்தான் எழுதுவேன் என நிற்பது பெரும் விஷயம்

பாரதியே ஆங்கிலத்தில் கட்டுரை எழுதினான், அவன் தொழில் அது , தொழில் தர்மம் அது.

திரையுலகில் அது முடியாத காரியம் ஆனானபட்ட கண்ணதாசனே “ஜாலியோ ஜிம்கானா” என மெட்டுக்கு வரிகளை போட்ட திரையுலகம் இது, எந்த தமிழ் திரை கவிஞனும் தப்பவில்லை

அப்படிபட்ட திரையுலகில் மிக தேர்ந்த தமிழ் வரிகளை கொண்டு மிக நுண்ணிய உணர்வுகளை மிக அழகான பாடலாக கோர்க்கும் கவிஞர் அவர்

அந்த பாடல்கள் நிச்சயம் மனதை உருக்குபவை. பெண்களின் ஏக்கம், ஆசை, ஏமாற்றன் மனதை அப்படியே படம்பிடித்து காட்டும் வரிகள் அவை. அதற்கு மேல் இன்னொருவர் எழுத முடியாது

உறுதியாக சொல்லலாம், உணர்வுகளை பாடல் வரிகளாக எழுதுவது என்பது கலை. கண்ணதாசனுக்கு இருந்தது. வைரமுத்துவிற்கு முன்பு இருந்தது, நா.முத்துகுமாருக்கு இறுதிவரை இருந்தது

இந்த கவியரசிக்கும் அது அற்புதமாக வாய்த்திருக்கின்றது

நிச்சயம் அவரின் சில பாடல்களுக்கு தேசிய விருது கிடைத்திருக்க வேண்டும். அப்படியான சிறந்த பாடல்கள் அவை. விருது கிடைத்த பாடல்களுக்கு சற்றும் குறைந்தவை அல்ல‌

ஆனால் பல்வேறு அரசியல் காரணமாக கிடைக்கவில்லை. ஆனானபட்ட சிவாஜிகணேசனையே விருதுகொடுக்காமல் இழுத்தடித்த கமிட்டிக்கு இதெல்லாம் சாதாரணம்

அதனால் என்ன? விருதுகொடுத்து பாராடினால்தான் அது சூரியனா? அதோ தெரிகின்றதே அதுதான் நட்சத்திரம், இந்த மணம் கொடுப்பது சந்தணம் என யார் சொல்லவேண்டும்

Kavignar Thamarai பாடல்களும் அந்த ரகமே, விருதுகளை தாண்டிய தரத்திற்கு அது சென்றுவிட்டது

தமிழ் யாருக்கும் சோறுபோடாது கலைஞரை தவிர. அதனால் அதில் முழுக்க நின்று போராட தமிழை முழுக்க நேசிக்க வேண்டும், சுவாசிக்க வேண்டும், தமிழாய் வாழவேண்டும்

அந்த வேள்வியினைத்தான் செய்கின்றார், பொறியாளர் என்கின்றார்கள், ஆனால் இப்பொழுது முழுக்க தமிழ் கவிஞராய் ஆகிவிட்டார்

ஒரு விஷயம் உறுதியாக சொல்லமுடியும், தமிழுக்காய் தமிழ் வரிகளுக்காய் அவர் பெற்றதை விட இழந்தது ஏராளம். பல்வகை சிக்கல்களால் பாதிக்கபட்ட அந்த கவிகுயிலின் வலிகளை கடந்த சில மெட்டுக்கள்தான் நாம் காண்பது

அந்த வலிகளும், சுமையும் இல்லாவிட்டால் இந்நேரம் எங்கோ சென்றிருப்பார்

அவரை அறிமுகபடுத்தியது அங்கிள் சைமன் என அவரே சொல்கின்றார். சைமன் செய்த ஒரே ஒரு உருப்படியான விஷயம் இவரை அறிமுகபடுத்தியதுதான்

இன்றல்ல, என்றும் அது ஒன்றுதான்

Kavignar Thamarai அவர்களுக்கும் 
நமக்கும் பொருந்தாது. அவர் தீவிர தமிழ்தேசியவாதி, இன்னும் பல விஷயங்களில் தீவிரமான தமிழ், தமிழர் எனும் மனப்பான்மை கொண்டவர்.

அவரின் பலமும் அது, பலவீனமும் அதுவே.

நாமோ தேசியவாதி அவரோ சுத்த தமிழ்தேசியவாதி, நமக்கோ புலிகள் மீது அபிமானமில்லை அவருக்கோ அவ்வையார் கண்ட அதியமான் அந்த புலிகள்

நட்பாக இருக்க கூட முடியாத இடைவெளி அது

ஆனால் அவரின் பாடல் வரிகளை எந்த முகாமில் இருந்தாலும் ரசிக்கலாம், உருகலாம், சில இடங்களில் அழுதோ அல்லது ஆர்பரித்தோ ரசிக்கலாம்

அந்த கவியரசிக்கு வாழ்த்துக்கள்

ஓரளவு அவர் பல சிக்கல்களிலிருந்து மீண்டுவிட்டார், பொதுவாக கவிஞர்கள் இம்மாதிரி சிக்கலில் எளிதாக விழுவார்கள். காரணம் கவிஞர்கள் மனம் மிக மென்மையானது, உணர்ச்சிமிக்கது

பாரதி அப்படித்தான் தேசிய தீயில் விழுந்து வாழ்வை தொலைத்தான், கண்ணதாசன் திராவிட கழகத்தில் இருந்து தன் திறமையினை முதலில் வீணாக்கினார்

பின் எல்லாமே அரசியல் என கண்டபின் வெளிவந்தார். அதன்பின் அவரின் பாடல்கள் எங்கோ சென்றன, அசாத்திய வரிகளை எழுதி பெரும் வரலாராய் ஆனார்

இந்த கவியரசியும் தன் சிக்கல்களிலிருந்து மீண்டு பெரும் காவியங்களை, அழியா பாடல்களை தன் பொன்விழா காலத்திற்குள் எழுதி குவிக்கட்டும்

அவரின் பொற்காலமாய் அது காலமெல்லாம் நிற்கட்டும்.

வல்ல தெய்வம் அவர் மனதில் நிம்மதியும், கொட்டும் ஞானமும் கொடுத்து அந்த தமிழ்தேவதையினை கைபிடித்து நடத்தட்டும்

காலம் அந்த கவியரசியினை தன் கவிமகளாக அடையாளம் காட்டட்டும்

 

குஜராத் ஓட்டு எண்ணிக்கை இன்று துவக்கம் : செய்தி

Image may contain: 2 peopleImage may contain: 2 peopleகுஜராத் ஓட்டு எண்ணிக்கை இன்று துவக்கம் : செய்தி

“மிஸ்டர் மோடி, ஜெயிச்சிருவோமா?

ஜெயிச்சாலும் சந்தோஷம், ஜெயிக்கா விட்டாலும் சந்தோஷம்ணா

அதானே, தோற்றால் உமக்கு என்ன நஷ்டம்? எனக்குத்தான் நஷ்டம். என் கைகாசு தானே செலவாயிருக்கு”


ஆர்.கே.நகர் தொகுதியை வளர்ப்புப் பிள்ளையாக கருதி பேணிப் பாதுகாப்போம்: பிரச்சாரத்தில் ஸ்டாலின் உறுதி

மு.க முத்துவினை கலைஞர் குடும்பத்தில் பேணி பாதுகாத்தது போலவா?