அமெரிக்கா விமான நிலையத்தில் திடீர் மின் தடை….

அமெரிக்காவில் ஜார்ஜியா மாநிலத்தில் மிக பிசியான விமான நிலையம் உண்டு, தினமும் 2.500 விமானங்களும் 2 லட்சம் பயணிகளும் வந்துபோகும் விமான நிலையம் அது

சென்னை கொயம்பேடு பஸ் நிலையத்தில் வந்து போகும் பேருந்துபோல நொடிக்கொரு விமானம் வந்து போகும் இடம் அது.

அங்கு திடீரென மின் தடை காரணமாக குழப்பம் ஏற்பட்டுள்ளது. மின் தடை என்றால் விளக்கு மட்டும் எரியாது என்பதல்ல, கணிணி முதல் எஸ்கலேட்டர் வரை எதுவும் இயங்காது, ராடாரும் இயங்காது

என்னதான் உலகம் முன்னேறினாலும் இன்னும் மின்சாரத்திற்கு அணைகட்டி சேமிக்கும் முன்னேற்றம் வரவே இல்லை, சில நொடிகள் தாங்கலாம் அவ்வளவுதான்

இப்படியான சிக்கலில் அந்த விமான நிலையம் ஒருநாள் முழுக்க மூடபட்டு விமானங்கள் திருப்பிவிடபட்டன, பயணிகள் கடும் குழப்பத்திற்கும் கோபத்திற்கும் ஆளாயினர்

இப்பொழுது நிலமை சரியாகி வந்தாலும், குழப்பம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பினையும் , ஏராளமான அதிருப்தியினையும் உண்டாக்கிவிட்டது

இந்த செய்தி தமிழக அமைச்சர்களை எட்டியதா என தெரியவில்லை, தெரிந்தால் என்னாகும்?

அமெரிக்காவினை விட மிக சிறந்த போக்குவரத்து சேவை தமிழகத்தில் தங்கள் ஆட்சியில் இருப்பதாக சொல்லி மிக்க ஆனந்தபடுவார்கள்

பேராசிரியர் க. அன்பழகன் 96வது பிறந்த நாள்

Image may contain: 2 people, people smiling, sunglasses and close-up

திமுக மூத்த உறுப்பினரான க.அன்பழகனுக்கு இன்று பிறந்தநாளாம், 96ம் பிறந்தநாளாம்

கலைஞரை விட மூத்தவர் அவர். இன்றைய தமிழகத்தின் மிக மூத்த அரசியல்வாதி அவர்தான். கல்லூரி பேராசிரியராக இருந்தவர். சமஸ்கிருதமில்லா தமிழை கொடுக்கின்றோம் என அண்ணா தலமையில் நடந்த தமிழ் சீர்திருத்தங்கள் எல்லாவற்றிலும் அருகிருந்தவன் அன்பழகன்

அவர் பெயர் ராமையா, சுயமரியாதை மிக்க திராவிட உறுப்பினர் ராமன் எனும் பெயரோடு அலைவதா? என அதனை மாற்றி அன்பழகன் எனும் அழகான தமிழ்பெயராக்கினார்

(ஆனால் பெரியார் ராமசாமி எனும் பெயரோடுதான் சாகும் வரை இருந்தார்)

ஆச்சரியமான விஷயம் அல்லது இன்னொரு வகையில் பரிதாபத்திற்குரிய விஷயம் என்னவென்றால் கலைஞருக்கு வெகு சீனியர் அன்பழகன், பேராசிரியரும் கூட‌

கலைஞர் 7ம் வகுப்பு தாண்டவில்லை

சுருக்கமாக சொன்னால் அன்பழகன் பேசிய கூட்டங்களுக்கு போஸ்டர் ஒட்டிய வேலையினை செய்தவர் கலைஞர் கருணாநிதி

ஆனால் காலவோட்டத்தில் கலைஞருக்கு கீழ் அமர்ந்துவிட்டார் அன்பழகன், இன்றுவரை அப்படியே இருந்துவிட்டார்

உறுதியாக சொல்லலாம் திமுகவிற்கு பெரும் உழைப்பினை கொடுத்தவர் அன்பழகன், அது அண்ணா , கலைஞரின் உழைப்பிற்கு கொஞ்சமும் குறைந்தது அல்ல‌

அண்ணா, நெடுஞ்செழியன் , அன்பழகன், மதியழகன் என்றுதான் முதல் வரிசை இருந்தது. ஆனால் அண்ணாவிற்கு பின் கலைஞர் ஆடிய சித்துவிளையாட்டில் நெடுஞ்செழியன் தலை தெரிக்க ஓடினார், மதியழகனை காணவில்லை, இந்த களபேரங்களை கண்ட அன்பழகன் அப்படியே திமுகவில் அமர்ந்துகொண்டார்

ஒரு திமுக உறுப்பினராக இருந்தாரே அன்றி, பெரும் உயரங்களை எல்லாம் அவர் எட்ட ஆசைபடவில்லை. நினைத்திருந்தால் டெல்லி எம்பி ஆகியிருக்கலாம், மத்திய அமைச்சர் ஆகியிருக்கலாம்

ஒருவேளை ஆசைபட்டாலும் நடக்காது என நினைத்துவிட்டாரோ என்னமோ

மனிதர் ஏன் இப்படி இருந்தார், அதுவும் எத்தனையோ குழப்பங்கள் வந்தபொழுதெல்லாம் தன் சொத்துபத்திரம் கலைஞரிடம் இருந்தது போல அமைதியாக இருந்தார் என்பதெல்லாம் அன்பழகன் சொல்லவேண்டிய பதில்கள்

ஆனால் கலைஞரும் அவரை மரியாதையாக நடத்தினார், முக்கிய ஆலோசனைகளில் அவர் உடன் இருக்குமாறு பார்த்துகொண்டார். அது கலைஞர் நலமாக இருக்கும் வரை தொடர்ந்தது

கலைஞருக்கு பின் அன்பழகனே செயல்தலைவர் ஆகியிருக்க வேண்டும் , ஆனால் அண்ணாவிற்கு பின் அமைதி அரசியல் செய்த அன்பழகன் அமைதியாகவே தொடர்கின்றார்.

கொள்கை யாருக்கும் இருக்கலாம், ஆனால் அரசியல் செய்ய தனி ஆற்றல் வேண்டும் அது கலைஞருக்கு இருக்கின்றது என சொல்லி ஏற்றுகொண்டவர் அன்பழகன். அந்த பெருந்தன்மை பாராட்டுகுரியது.

இன்று அவர் பிறந்தநாளில் எல்லோரும் வாழ்த்துகின்றார்கள், திமுகவில் புதிதாக அறிவிப்பில்லாமல் இணைந்திருக்கும் வைகோவும் வாழ்த்துகின்றார்

நாங்கள் இருக்கும்வரை தமிழகத்தில் “பாஜக எனும் மதவாத சக்தி வளராது..” என உறுமிகொண்டே அன்பழகனுக்கு சால்வை அணிவிக்கின்றார் வைகோ

ஆம் மோடிக்கு முன்பு பாரளுமன்ற தேர்தலில் வைகோ கூட்டணி தலைவராக சால்வை போர்த்தினார் அல்லவா, அதே சால்வை

அதாவது மோடியினை தமிழகத்தில் அறிமுகபடுத்தி பேசியவர்தான் வைகோ, அன்று மதவாதமாக தெரியவில்லையாம், இன்று தெரிகின்றதாம் அக்கட்சி வளர இவர் விடமாட்டாராம்

அக்கட்சி தமிழகத்தில் வளர்ந்திருந்தால் வைகோ திமுக பக்கம் போயிருப்பாரா? நிச்சயம் இல்லை. வளராத வருத்தத்தில் சென்று விட்டார்

அது போகட்டும்

மிகபெரும் பேராசிரியராய், நல்ல பேச்சாளராய் அண்ணாவின் அடுத்த தலைவராய் விளங்கிய அன்பழகனை தனக்கு அடுத்து அமர்த்தி கிட்டதட்ட 50 ஆண்டுகாலம் அவரை பகைக்காமலும் அதே நேரம் வளரவும் விடாமலும் அரசியல் செய்துவிட்டார் அல்லவா?

இதுதான் கலைஞரின் சாமர்த்தியம்

அண்ணாவினை கலைஞர் முதலில் கண்ட காட்சி வரலாற்றில் இருக்கின்றது, ஆனால் அன்பழகனை எங்கு முதலில் கண்டார் எனபது பற்றி தகவல் இல்லை

ஆனால் முதல் சந்திப்பில் இந்த கருணாநிதி ஒருநாள் தனக்கு தலைவராக வருவான் என அன்பழகன் கொஞ்சமும் நினைத்துபார்த்திருக்க முடியாது,

காலம் எப்படியெல்லாமோ யாரை வைத்தெல்லாமோ விளையாடும், அது அன்பழகன் வாழ்விலும் நடந்திருக்கின்றது.

 

ராகுல் குமரி வந்ததால்தான் மோடியும் வருகின்றார் : திருநாவுக்கரசர் பேட்டி

ராகுல் குமரி வந்ததால்தான் மோடியும் வருகின்றார் : திருநாவுக்கரசர் பேட்டி

என்ன இது?

முதலில் பிரதமர் பாதுகாப்புதுறை அமைச்சர் உட்பட பலரை அனுப்பினார், இன்னும் பல நிவாரண பணிகளை பிறப்பித்தார், இன்று வருகின்றார்

இதில் ராகுல் வந்ததால் மோடியும் வந்தார் என சொல்ல என்ன இருக்கின்றது, பரபரப்பான பணிகள் முடிந்ததும் மோடி வருகின்றார்

இதில் ராகுல் முதலில் வந்தாரா? மோடி முதலில் வந்தாரா? எனபார்த்தால் முந்தி வந்தது ஓக்கி புயல்தான்.

விட்டால் அந்த புயலை திருநாவுக்கரசர் வரவேற்றுவிடுவார் போல…

வம்பிழுக்கும் ஒரு சீன நண்பர்….

ஒரு சீனன் வம்பிழுத்துகொண்டே இருக்கின்றான். அடிப்படையில் அவன் நல்லவன் ஆனால் படுபயங்கர ஸ்ட்டிரிட் பேர்வழி, வேலை தவிர ஏதும் தெரியாது . அதுதான் அவனுக்கும் எனக்கும் சிக்கல்

நாம் ஒன்று கேட்டால் அவன் ஒன்று சொல்வான் இருவரும் பேசினால் செவிடர்கள் பேசியது போலவே இருக்கும் , இருக்கும் டென்சனில் பல இடங்களில் உரசிகொண்டே இருக்க்கின்றது

மனிதனை எங்கு அடிக்கலாம் என்றால் ஒரு வழியும் இல்லை. அந்த அளவு வேலையிலும் மற்ற பழக்க வழக்கங்களிலும் சுத்தம்

எந்த பலம் என்றாலும் ஒரு பலவீனம் இருக்குமல்லவா? ஆம், அவனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை

ஏன் என்றால் இங்கு அப்படித்தான். அவனை போல ஏராளமானோர் 30 மற்றும் 40 வயதை கடந்து அவர்கள் போக்கில் இருக்கின்றனர்

காரணம் மிக எளிது, அவர்கள் சொல்வது ஒன்றே ஒன்றுதான். எனக்கு ஏற்ற துணையினை இன்னும் கண்டுபிடிக்கவில்லை , கிடைத்தால் குடும்ப வாழ்க்கை இல்லாவிட்டால் சந்நியாசி கோலம்

அவரவர் வாழ்க்கையின் முடிவு அவர்கள் கையில் என்பதில் மிக தீவிரமாக இருக்கின்றார்கள். பெற்றோர்களிடம் கேட்டால் அவர்கள் வாழ்க்கை அவர்களே முடிவு செய்யட்டும் என வழிவிடுகின்றார்கள்

இவர்களோ படிக்குமிடம் அல்லது பணியிடம் என பழகி பார்க்கின்றார்கள், பிடித்தால் தொடர்கின்றார்கள், நன்கு பழகிய பின் இது நமக்கு சரிவரும் என்றால் திருமணம் செய்கின்றார்கள்

வேலை பளு எல்லோருக்கும் நிரம்ப இருப்பதால் வெட்டியாக குட்டி சுவரில் அமர்ந்து சைட் அடிப்பது, பஸ்டாண்டில் நின்று சிகரெட் குடிப்பது , பேருந்து கரையோரம் யார் அமர்ந்திருக்கின்றார் என பார்ப்பது எல்லாம் முடியாத விஷயம்

காரணம் அவர்கள் பணத்தின் பின்னால் ஓடவேண்டி இருக்கின்றது, பெற்றோர் உடன்பிறந்தோர் துணையின்றி சொந்த சம்பாத்தியத்தில் வீடு, கார் என வாங்கி நானும் இச்சமூகத்தில் குடும்பமாய் வாழ தகுதியுள்ளவன் என காட்டும் அவசியம் இருக்கின்றது, அதனால் ஓடிகொண்டே இருக்கின்றார்கள்

யாரும் யார் தோள்மீதும் இல்லை, வாடகை காலிலும் நிற்கவில்லை

அந்த பரபரப்பான வாழ்க்கையில் பழகுவதற்கு ஒரு துணை கிடைக்கும் பட்சத்தில் பழகுகின்றார்கள், பொருந்தினால் கல்யாணம் (இல்லாவிட்டால் ராகுல்காந்தி கோலம்..)

அதற்கு கவுசல்யாவின் தந்தை போல யாரும் அருவா தூக்குவதுமில்லை, வாழ்த்திவிட்டு சென்றுவிடுகின்றார்கள்

யாரையும் நம்பி யாரும் இல்லாமல் இருப்பதும், அதீத பாசம் வைத்து ஒரு பந்த சங்கிலியில் மாட்டிகொள்ளாமலும் இருப்பது நிம்மதியான வாழ்விற்கு வழிவகுக்கத்தான் செய்கின்றது

இவனிடம் கேட்ட பொழுதும் இதனையே சொன்னான், “திருமணம் என்பது வாழ்க்கை. எனக்கான துணையினை இன்னும் கண்டுபிடிக்கவில்லை. அப்படி யாரும் கிடைத்தால் பழகி பார்க்கலாம். சரிவந்தால் திருமணம் செய்யலாம்..”

நமக்கு சட்டென மண்டைக்குள் மின்னல் வெட்டியது, திட்டம் தயாரானது,” படுபாவி பயலே உன்னை எப்படி பழிவாங்குகின்றேன் பார்..” என மனதிற்குள் மெதுவாக சொல்லிவிட்டு “இந்திய பெண் ஓகேயா” என்றேன்

“வெரிகுட், அவர்கள் மிக நம்பகத்தன்மை வாய்ந்தவர்கள், கணவனை தெய்வமாக மதிப்பவர்கள் என கேள்விபட்டிருக்கின்றேன் ஆனால் எனக்கு யாரும் தெரியாதே..” என்றான்

“எனக்கு தெரியுமே, மிக அழகான அறிவான பெண் ஒருவர் இந்தியாவில் இருக்கின்றார், உனக்கு கிடைத்தால் வரம்..” என்றேன், மனிதர் உற்சாகமாகிவிட்டார்

“நடக்குமா?” என்றார் ஏக்கத்துடன்

“நடக்கும் பார்க்கலாம்..” என்றேன், மனிதர் முகம் பிரகாசமானது

சிக்கிவிட்டான், இனி இவனை மொத்தமாக ஓங்கி ஒன்னரை டன் வெயிட்டில் அடித்தாக வேண்டும், அவனால் ஏற்பட்ட‌ மொத்த கோபத்தையும் இவனுக்கு திருமணம் செய்து வைத்து தீர்க்க வேண்டும்

அதனால் Devi Somasundaram என்பவரை இவனுக்கு எப்படியாவது கட்டி வைத்துவிட்டால் வாழ்வின் மிக பெரிய பழிவாங்கலை முடித்த திருப்தி ஏற்படும் ,

அதனை விட இவனுக்கு பெரும் தண்டனை ஏது?

அவள் அடிக்கும் அடியில் இவன் மூதாதையர் வாழ்ந்த சீனாவிற்கே ஓடிவிடமாட்டானா?

நாளை மறுநாள் ஸ்பெட்ரம் வழக்கில் தீர்ப்பு : செய்தி

Image may contain: 1 person, close-up

நாளை மறுநாள் ஸ்பெட்ரம் வழக்கில் தீர்ப்பு : செய்தி

“உள்ளத்தில் நல்ல உள்ளம்

உறங்காதென்பது

வல்லவன் வகுத்தடா ..

வருவதை எதிர்கொள்ளடா

செஞ்சோற்று கடன் தீர்க்க…”


வோட்டு எந்திரத்தில் தில்லு முல்லு என்றால்….

வோட்டு எந்திரத்தில் தில்லு முல்லு செய்ய முடியும் என சொல்பவன் எல்லாம் அதிமுக வெற்றிபெறும் பொழுது எங்கு இருந்தார்கள் என்றே தெரியாது

சந்தேகம் வருவதாக இருந்தால் அதில்தான் வந்திருக்க வேண்டும், 1996க்குபின் அதிமுக வெற்றி என்பது சாத்தியமே இல்லாத ஒன்று.

ஆக அதிமுக வென்றால் அது மக்களின் தீர்ப்பு எனவும், பாஜக வென்றால் அது வோட்டுமெஷின் தில்லுமுல்லு என்பதெல்லாம் சரியான வாதம் அல்ல‌

வோட்டு மெஷினில் திருட்டுதனம் செய்யமுடியும் என்ற சந்தேகம் எமக்கு வருமானால் அது அங்கிள் சைமன் பெற்ற 1% வோட்டாகவே இருக்கும்

அந்த 1% எப்படி வந்தது? வோட்டு மெஷினில் ஏதோ நடந்திருக்காமல் அது வந்திருக்க வாய்ப்பே இல்லை

செய்ய முடியும் என சொல்பவன் எல்லாம் அதிமுக வெற்றிபெறும் பொழுது எங்கு இருந்தார்கள் என்றே தெரியாது

சந்தேகம் வருவதாக இருந்தால் அதில்தான் வந்திருக்க வேண்டும், 1996க்குபின் அதிமுக வெற்றி என்பது சாத்தியமே இல்லாத ஒன்று.

ஆக அதிமுக வென்றால் அது மக்களின் தீர்ப்பு எனவும், பாஜக வென்றால் அது வோட்டுமெஷின் தில்லுமுல்லு என்பதெல்லாம் சரியான வாதம் அல்ல‌

வோட்டு மெஷினில் திருட்டுதனம் செய்யமுடியும் என்ற சந்தேகம் எமக்கு வருமானால் அது அங்கிள் சைமன் பெற்ற 1% வோட்டாகவே இருக்கும்

அந்த 1% எப்படி வந்தது? வோட்டு மெஷினில் ஏதோ நடந்திருக்காமல் அது வந்திருக்க வாய்ப்பே இல்லை

வோட்டு மெஷினில் தில்லுமுல்லு நடந்திருக்கலாம் : ஹிர்திக் பட்டேல்

வோட்டு மெஷினில் தில்லுமுல்லு நடந்திருக்கலாம் : ஹிர்திக் பட்டேல்

அப்படி நடந்திருந்தால் காங்கிரஸ் இத்தனை தொகுதிகளை பெற்றிருக்க முடியுமா? நிச்சயமாக இல்லை

பாஜக ஆட்சிக்கு வந்திருப்பதற்கு நிச்சயம் வோட்டு மெசின் காரணம் அல்ல, அவை எல்லாம் அபத்தமான குற்றசாட்டு

மக்கள் பெரும் அதிருப்தி அடையவில்லை அதனால் பாஜக அரசினை தொடர அனுமதித்திருக்கின்றார்கள் என்பதே உண்மை.

சொந்த சாதிக்காரன் 4 பேரை கூட்டி ஆர்ப்பாட்டம் நடத்திவிட்டால் இவர் என்ன தியாகி ஆகிவிடுவாரா? இவர் சொல்வதெல்லாம் வேதம் ஆகுமா?

இந்த காங்கிரஸிடம் பிடிக்காத விஷயங்கள் இதுதான், இப்படித்தான் பாஞ்சாபில் பிந்த்ரன் வாலேயினை உருவாக்கி நாசமாய் ஆக்கினார்கள்

தமிழகத்தில் ராமசந்திரனை உருவாக்கி மாநிலத்தை நாசமாக்கினார்கள்

கொசுவென நசுக்கி இருக்க வேண்டிய பிரபாகரனை பெரும் பிம்பமாக்கி பின் அதற்கான விலையினை கொடுத்தார்கள்.

இந்த ஹிர்திக் பட்டேலை வைத்து குஜராத்தினை நாசமாக்க முனைந்தார்கள், நல்ல வேளையாக குஜராத் மக்கள் அதனை அனுமதிக்கவில்லை

இதோ பிஜேபியும் அடிமைகளை 
உருவாக்குகின்றது, யாரை உருவாக்குகின்றது?

பன்னீரையும் பழனிச்சாமியினையும் உருவாக்கிகின்றது

இவர்களால் யாருக்காவது சிக்கல் வருமா? அடுத்த தேர்தலில் எங்கிருப்பார்கள் என தெரியுமா?

அதனால் உறுதியாக சொல்லலாம், பினாமிகளை உருவாக்குவதில் பாஜக பாணியே சிறந்தது அல்லது பாவம் அவர்களுக்கு தெரிந்தது அவ்வளவுதான்.


மூச்சுத் திணறித்தான் பா.ஜ.க. வெற்றி! தி.க. தலைவர் கி.வீரமணி கருத்து

அவர்கள் எப்படி வென்றால் என்ன? 1 வோட்டு வித்தியாசம் என்றாலும் வெற்றி வெற்றிதான் ஒரு மில்லி செக்கெண்ட் தாமதமாக‌ வந்தாலும் ஓட்டபந்தயத்தில் வெற்றி போனது போனதுதான்.

அவர்கள் மூச்சு திணறித்தான் வென்றார்கள் என மூச்சிறைக்க சொல்லும் வீரமணி, ஆர்.கே நகரில் வெல்லபோவது யார் என சொல்லட்டும் பார்க்கலாம்