என்னையும் ஒரு எழுத்தாளனாக மதித்து….

Image may contain: text

சங்கம் வைத்து குஷ்பு புகழ் வளர்த்தும் அவர் வீட்டு வாட்ச்மேன் கூட , அட அவன் கால் ஷூ கூட‌ கண்டுகொள்ளா உலகில், என்னையும் ஒரு எழுத்தாளனாக மதித்து , வோட்டு கேட்கும் அளவிற்கு சென்றுவிட்ட பிள்ளாய், நீர் யாரென தெரியவில்லை

உன் நல்ல மனசுக்கு ஒரு குறையும் வராது சாமி….நீ ரொம்ப நல்லா இருப்பப்பா.. நல்லா இருப்ப‌

என் கல்லீரல் கிட்னி எல்லாம் உனக்குத்தாம்பா, எது வேணுமோ எடுத்துக்க‌

 
 

ஜெயா டிவியில் ஆஸ்பத்திரி வீடியோ வரவே இல்லை….

உலகிற்கு எல்லாம் ஒரு செய்தி என்றால் இந்த ஜெயாடிவிக்கு தனி செய்தி, அந்த டிவி நிருபர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருப்பார்கள் போலிருக்கின்றது

ஊரெல்லாம் ஜெயா வீடியோவினை பற்றி விவாதித்து கொண்டிருந்தால் அந்த டிவி அப்படி ஒரு சம்பவம் நடந்ததாகவோ அதனை பலர் விவாதிப்பாதகாவோ கண்டு கொள்ளவே இல்லை, தீபாவளி பண்டிகையின் பொழுது செவிடன் அசால்டாக நடப்பது போல நடக்கின்றது

அந்த டிவி 24ம் தேதி எம்ஜிஆர் நினைவு நாளை கொண்டாட தயாராகின்றதாம், ஆர்.கே நகர் தேர்தல் பற்றி நேற்றுவரை தினகரன் வெல்வார், அட இன்று காலைவரை தினகரன் வெல்வார் என சொல்லிகொண்டிருந்த ஜெயா டிவி இன்று தினகரன் என்றொருவர் அந்த தொகுதியில் நிற்கின்றார் என்பதை கூட சொல்லவில்லை

இப்போதைக்கு ஜெயாவின் புகழுக்கு களங்கள் விளைவிப்பவர்களை விடமாட்டோம் என சொல்லிகொண்டே இருக்கின்றார்கள்

ஜெயாவிற்கு மிகபெரும் களங்கள் விளைவித்தர் என அவர்கள் கண்ணுக்கு தெரிய வேண்டியது நீதிபதி குன்ஹாவும் அந்த டெல்லி நீதிபதியும்

ஒருவேளை அவர்களைத்தான் மிரட்டுகின்றார்களோ என்னமோ?

ஆக ஜெயலலிதா தொடங்கிவைத்த அவரின் சொந்த டிவியில் கூட‌ அவரது ஆஸ்பத்திரி வீடியோ வரவே இல்லை, பாவம் அந்த ஜெயலலிதா

தன் பாதுகாப்பில் இருந்த வீடியோ வெளியானது எப்படி? : விவேக் ஜெயராமன்

தன் பாதுகாப்பில் இருந்த வீடியோ வெளியானது எப்படி? அதிர்ச்சியில் இருக்கின்றார் விவேக் ஜெயராமன் : செய்தி

பின் எதற்கு 200 இடங்களில் ரெய்டு நடத்தினார்கள்? வெறுங்கையோடு செல்ல அவர்கள் என்ன விஜயகாந்தா?

எத்தனை கில்லாடிகள், எத்தனை உளவுதுறைகள், எவ்வளவு தொழில்நுட்பம் கொண்டவர்கள் எல்லாம் உலாவும் இடம் அரசு துறை. கண்ணை காட்டிவிட்டால் தகவலை கொட்டிவிட மாட்டார்களா?

ஆக எப்படியோ ஏதோ ஒரு சக்தி ஊடுருவி விவேக் ஜெயராமனின் வீடியோவினை கைபற்றி நினைத்ததை சாதித்துவிட்டது, தினகரனுக்கும் விவேக்கிற்கும் போர் வெடித்துவிட்டது என்கின்றார்கள். போர் ஆமாம் போர்.

இம்மாதிரி காரியங்களில் மொசாத் எப்பொழுதும் கில்லாடி, ஒருவனின் போனையோ அல்லது லேட்பாப்பினையோ அடுத்த டேபிளில் காப்பி குடித்து கொண்டே ஊடுருவி தகவலை திருடிவிடுவார்கள்.

அதாவது விஞ்ஞான உலகில் எதுவுமே பாதுகாப்பில்லை, அதுவும் விவேக் போன்ற குறிவைக்கபட்டவர்களை விடுவார்களா என்ன?

விவேக் என்பவர் மிகுந்த அப்செட்டில் இருப்பதாக செய்திகள் வருகின்றன, அதனால் இனி கொஞ்ச நாளைக்கு நல்ல நிகழ்ச்சிகள் ஜெயா டிவியில் வராது, அதாவது குஷ்பு படங்கள் ஜெயா டிவியில் வராது

வேறு டிவிபக்கம் குஷ்பு படம் வருமா என தேடவேண்டியதுதான், நம் கவலை நமக்கு

கிறிஸ்மஸ் அன்று புத்தாண்டு தினத்தன்று தாக்குதல் நடத்த ஐ.எஸ் திட்டம்

உலகமெல்லாம் பெரும் அச்சுறுத்தலான செய்திகள் வருகின்றன, கிறிஸ்மஸ் அன்று புத்தாண்டு தினத்தன்று தாக்குதல் நடத்த ஐ.எஸ் போன்ற இயக்கங்கள் வெறிபிடித்து அலைகின்றது

ரஷ்யாவினை தொடர்ந்து பிரிட்டனிலும் தாக்குதல் முறியடிக்கபட்டுள்ளது எனினும் இது திசை திருப்பும் முயற்சியா? வேறு திட்டமா? என ஒவ்வொரு நாடும் பதற்றத்தில் இருக்கின்றது

ஜெருசலேம் விவகாரம் முதல் பல விவகாரங்களுக்காக உலகெங்கும் அமெரிக்க, இஸ்ரேலிய தொழில் நிலையங்கள் , ஹோட்டல்கள், தூதரங்கள் தாக்கபடலாம் எனும் எச்சரிக்கை ஒலிக்கின்றது

ஒவ்வொரு நாட்டு உளவுதுறையும் தூக்கம் மறந்து நிற்கின்றன, காவல்துறை கடும் பரபரப்பாக இருக்கின்றது ஈ காக்காவினை கூட விடாமல் சோதிக்கின்றது

இந்தியா ஒன்றும் தீவிரவாதிகள் இல்லக்கில் இல்லாத நாடு அல்ல, மிக பெரும் அடிகளை வாங்கியிருக்கின்றோம்

ஆனால் உலகமே பதற்றபடும்பொழுது இந்தியா மகா சந்தோஷமாக குஜராத் வெற்றியினை கொண்டாடுகின்றது, தமிழக காவல்துறை ஆர்.கே நகரில் குவிந்து நிற்கின்றது

இவை எல்லாம் நல்ல அறிகுறிகள் அல்ல. தீவிரவாதிகளுக்கு அழிக்க மட்டுமே தெரியும் , அந்த வெறியுடன் சின்ன இடைவெளி கிடைத்தாலும் தவற விடமாட்டார்கள்

எல்லோரும் விழிப்பாய் இருப்பது நல்லது.

காசு போட்டா வோட்டு போடுற மெஷின்

Image may contain: 4 people, people sitting and indoor

“இதுவரைக்கும் நாம கார்டு போட்டா காசு கொடுக்கும் மெஷின் வரைக்கும்தான் கண்டுபிடிச்சிருக்கோம்

இந்தியாவில தமிழ்நாட்ல காசு போட்டா வோட்டு போடுற மெஷின் இருக்காம், தமிழர்கள்னு பெயராம். நாளைக்கு அந்த மெஷின் ஒழுங்கா வேலை செய்தாண்ணு டெஸ்ட் பண்ண போறாங்களாம்

சோ ஜென்டில்மேன், இந்த கண்டுபிடிப்பில் நாம இந்தியாவிட பின்னால் போயிட்டோம், வெரி சேட்”

 

அப்பல்லோ பக்கம் மோடிஜி ஏன் போகவில்லை?

Image may contain: 1 person
 

“என்ன சொல்லுங்க எசமான், அப்பல்லோ பக்கம் நீங்க ஏன் போகவில்லை என இப்பொழுதுதான் புரிந்தது. ரொம்ப கில்லாடி சார் நீங்க..

அது மட்டுமா? அந்த வித்யாசாகர் ராவினை மாற்றிவிட்டு, வெங்கய்ய நாயுடுவினையும் ஜனாதிபதிமாளிகையில் அடைத்துவிட்டல்வா அமர்ந்திருக்கின்றேன், ஒரு பயல் அவர்களிடம் ஜெயா பற்றி கேட்டுவிட முடியும்?, எல்லாம் ராஜ தந்திரம் அமித்ஷா”


தேர்தலை மனதில் வைத்தே ஜெயலலிதா வீடியோ வெளியீடு: சீமான்

அந்த பிரபாகரன் உயிரோடு இருக்கின்றான் என சொல்லி திரிவது நீர்தானே அய்யா? அந்த வீடியோவினை வெளியிடும் பார்க்கலாம்.

ஏன் அதை மறைக்கின்றீர்? என்ன உள்நோக்கம் கொண்டிருக்கின்றீர் அங்கிள்?

இப்பொழுது அந்த ஜெயா வீடியோதான் ஆர்.கே நகரில் நீர் பெறபோகும் வெற்றிக்கு தடையா? இது உமக்கே ஓவராக இல்லையா?

அது எப்படி சிரிக்காமல் பேசிவிடுகின்றீர்?


சிகிசை பெறும் வீடியோவும் படங்களும் : அன்றும் இன்றும்…

Image may contain: 5 peopleஅந்த தேர்தல் விசித்திரமாக இருந்தது ராமசந்திரன் அமெரிக்காவில் சிகிச்சையில் இருந்தார், கட்சியில் ஜெயாவிற்கும் ஆர்.எம் வீரப்பனுக்கும் பனிப்போர் நடந்தது. கட்சி கடும் குழப்பத்தில் இருந்தது

வாய்பினை அட்டகாசமாக பயன்படுத்தினார் கலைஞர் , ஏற்கனவே மதுகடைகளால் பாதிக்கபட்டிருந்த ராமசந்திரன் இமேஜ் சரிந்தது, திமுக வெற்றிபெரும் நிலை உருவானது

அன்று அதிமுகவில் பேச்சாளர்கள் இல்லை (என்றுதான் இருந்தார்கள்?) இந்த பண்ருட்டி ராமசந்திரன் போன்றோர் எம்ஜிஆர் வருவார் என முணங்கிகொண்டிருந்தபொழுது கலைஞர் அசால்டாக சொன்னார்

“வருவார், மூட்டையாக வருவார்..”

Image may contain: 2 people, people sitting, living room and indoorமக்கள் அபிமானம் பெற்ற ராமசந்திரனை அசால்ட்டாக சொல்லிவிட்டார் கலைஞர், அந்த அளவு அவருக்கு ஆதரவு வந்தது, ராமசந்திரன் கட்சி அத்தோடு முடியும் நிலைக்கு வந்தது.

வீரப்பன் கும்பல் அதிர்ந்தது, உடனடியாக ராமசந்திரன் சிகிசை பெறும் வீடியோவும் படங்களும் வந்தன. பல்செட் இல்லாமல் தொப்பி இல்லாமல் ராமசந்திரனுக்கு தாத்தா போல இருந்த படங்கள் தமிழகத்தை வலம் வந்தன‌

உங்கள் பொனமன செம்மலை பாருங்கள் என மக்கள் மனதை கரைக்க ஆரம்பித்தன ரத்தத்தின் கிருமிகள். ராமசந்திரன் உடல்நிலைக்கு யார் காரணம்? அவரேதான் காரணம்

இப்படி நோயில் படுத்துவிட்ட மகராசனுக்கு ஏன் வோட்டு? அவர் வந்தும் என்ன செய்யபோகின்றார் என திமுகவினர் சொல்லிகொண்டிருந்தபொழுது எதிர்பாரா விதமாக இந்திரா படுகொலை நிகழ்ந்தது

காங்கிரசுடன் கூட்டணி வைத்திருந்ததால் அந்த அனுதாப அலையில் வென்றார் ராமசந்திரன்

இந்திரா சுடபடும் முன் அவர்களுக்கு கை கொடுத்தது ராமசந்திரனின் ஆஸ்பத்திரி வீடியோ

இன்று ஆர்.கே நகரில் வந்து நிற்பது ஜெயா மருத்துவமனை வீடியோ

கட்சி ராசி அப்படி போல.

இது எங்கள் சாதனை என்றோ, இது எங்கள் மக்கட் பணி என்றோ ஒரு நாளும் அவர்கள் சொல்லி வோட்டு கேட்டதே இல்லை, ஏதும் செய்திருந்தால் தான் கேட்பதற்கு?

மாறாக இப்படி சினிமா காட்டி, வயதான காலத்தில் வீடியோ காட்டியே அனுதாப அரசியல் செய்வது அவர்களின் கலை

இவர்களை ஆளவிட்டால் என்னாகும் தமிழகமே மருத்துவமனையில் படுக்கும் நிலைக்கு செல்லாதா?

அப்படித்தான் ஐ.சி.யூவில் வைக்கும் நிலைக்கு தமிழகம் சென்றுகொண்டிருக்கின்றது


Image may contain: one or more people and close-up

அந்தம்மா ஜூஸ் குடிச்ச வீடியோ மாதிரி, 1500 கோடிக்கும் ஏதும் வீடியோ இருந்தால் என்ன செய்வது??